Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வேத ஆராய்ச்சியின் முக்கியத்துவம்

    தேவனுடைய வார்த்தையை அனுதினமும் அப்பியாசிப்பதின் சாரத்தன்மை இல்லாமல், எந்த ஒரு மனமாற்றமடைந்த இருதயமும் இனிமையான ஒரு நிலையில் வைக்கப்பட இயலாது. தெய்வீக கிருபை அனுதினமும் கட்டாயமாக கிடைக்கப்பெற வேண்டும். இல்லையென்றால், ஒரு மனிதனும் மனமாற்றமடைந்ததில் நிலைத்திருக்கமாட்டான். - OHC 215 (1897).கச 47.1

    உங்களது விசுவாசம் தேவனுடைய வார்த்தையினால் நிலைநிறுத்தப்படட்டும். சத்தியத்தின் உயிருள்ள சாட்சியை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். சொந்த இரட்சகரான கிறிஸ்துவில் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். அவர் நமது கன்மலையாக இருந்து வருகின்றார், நித்திய கன்மலையாக இனியும் இருப்பார். - Ev 362 (1905).கச 47.2

    தவிர்க்க இயலாத ஒரு அதிர்ச்சியைப் போன்ற அழிவிற்கு - இந்த உலகத்தின்மீது விரைவில் உண்டாக்கப்போகும் காரியத்திற்கு, கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தையை கருத்தோடு படிப்பதின் மூலமாகவும், அதனுடைய வார்த்தைகளுக்கேற்றபடி தங்களது வாழ்க்கையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு போராடுவதின் மூலமாகவும், அவர்கள் இந்த ஆயத்தத்தைச் செய்யவேண்டும். - PK 626 (c.1914).கச 47.3

    வேதத்தின் சத்தியங்களால் எவர்கள் தங்கள் மனதை கோட்டை போல் வலுவாக காத்துக்கொள்கின்றார்களோ, அவர்கள் மாத்திரமே இறுதியான மாபெரும் போராட்டத்தின் வழியாகக் கடந்த சென்று நிற்பார்களே அல்லாமல், வேறு எவரும் நிற்கமாட்டார்கள். - GC 593, 594 (1911).கச 47.4

    வேத வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு அதன்படி செய்கின்ற மாணவர்களாக இருப்பவர்களும், சத்தியத்தில் வாஞ்சையைப் பெற்றிருக்கிறவர்களும் மத்திரமே, உலகத்தைச் சிறைப்படுத்தக்கூடிய வல்லமையான வஞ்சகத்திலிருந்து பதுகாக்கப்படுவார்கள். - GC 625 (1911).கச 47.5

    வேத வாக்கியங்களை நமது மக்கள் அவசியம் புரிந்திருக்கவேண்டும். பூமியின்மீது வந்தகொண்டிருக்கும் காரியத்திற்கு தகுதிப்படுத்தக்கூடியதும், தவறான உபதேசத்தின் ஒவ்வொரு காற்றினாலும் கொண்டு செல்லப்படக்கூடிய காரியத்திலிருந்து பாதுகாக்கக்கூடியதுமான, வெளிப்படுத்தப்பட்ட சத்தியக் கொள்கைகளின் ஒரு ஒழுங்கு முறையான அறிவை அவர்கள் பெற்றிருக்கவேண்டும். - 5T 273 (1885).கச 47.6