Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தசமபாகத்திலும் காணிக்கையிலும் உண்மையாயிருத்தல்

    தேவன் தமக்கென்று ஒதுக்கிவைத்துள்ள தசமபாகம் பரிசுத்தமானதாகும். அது சுவிசேஷ ஊழியர்களை அவர்களது ஊழியத்தில் தாங்குவதற்குப் பயன்படுத்தப்படத்தக்கதாக, தேவனுடைய பொக்கிஷ சாலைக்குள் கொண்டுவரப்பட வேண்டும்… மல்கியா 3-ம் அதிகாரத்தை கவனமாய் வாசித்துப் பார்த்து, தசமபாகத்தைக்குறித்து தேவன் என்ன சொல்கின்றார் என்று பாருங்கள். — 9T 249 (1909).கச 56.5

    ஒவ்வொரு இடத்திலும் இருக்கின்ற ஏழாம்நாள் அட்வெந்து பிள்ளைகள், தேவனுக்குத் தங்களை அர்ப்பணம் செய்து, தங்களால் முடிந்ததை மிகச் சிறப்பாக செய்வதற்காகவும், தங்களது சூழ்நிலைகளுக்கேற்றவாறு தேவனுடைய ஊழியத்தில் உதவி செய்வதற்காகவும் கர்த்தர் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார். அவர்களது உதாரத்துவமான காணிக்கைகள் மூலமாகவும், அன்பளிப்புகள் மூலமாகவும், தேவன் தங்களுக்கு அளித்திருக்கின்ற ஆசீர்வாதங்களுக்காக அவருக்குத் தங்களது பாராட்டையும், அவரது இரக்கத்திற்காக தங்களது நன்றியையும், அவர்கள் வெளிப்படுத்த வேண்டுமென்று அவர் விரும்புகின்றார். — 9T 132 (1909).கச 56.6

    தணிந்துபோகின்ற அன்பு உயிருள்ள இரக்க சிந்தைக்கு ஒரு தரந்தாழ்ந்த மாற்றாகும். — 5T 155 (1882).கச 57.1

    காலத்தின் முடிவை நெருங்க நெருங்க, தேவைகளுக்கான காரண காரியங்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டேபோகும். — 5T 156 (1882).கச 57.2

    எதிர்கால வாழ்க்கைக்கு நாம் தகுதியுள்ளவர்களா என்பதனைத் தீர்மானிப்பதற்கு, இவ்வுலகத்தின் போராட்டங்களிலே நாம் வைக்கப்பட்டிருக்கின்றோம். சுயநலத்தினுடைய வெறுக்கத்தக்க களங்கத்தின் மூலம் மாசுபடுத்தப்பட்டிருக்கின்ற குணங்களை உடைய எந்த நபரும், பரலோகத்திற்குள் நுழைய முடியாது. ஆதலால், தேவன் நமக்கு தற்காலிக ஆஸ்திகளை அளிப்பதின்மூலம் இங்கு அவர் நம்மை சோதிக்கின்றார். அதாவது, அவைகளை தற்போது நாம் பயன்படுத்தும் நம்முடைய பயன்பாடு, நித்தியமான ஐசுவரியத்தைப் பெற்றுக்கொள்ள நாம் நம்பிர்கைக்குரியவர்களாய் இருப்போமா இல்லையா என்பதைக் காட்டும் படியாக தேவன் இப்போது நம்மை சோதிக்கின்றார். — CS 22 (1893).கச 57.3