Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தேவன்மீது முழு நம்பிக்கை

    உண்மையாய்த் தங்களை அர்ப்பணிக்காத ஊழியர்களால், சில நேரங்களில் காரியங்கள் தவறாகப் போகும். மற்றவர்களது அப்படிப்பட்ட தவறான போக்கின் விளைவைக் கண்டு நீங்கள் அழலாம், ஆனால் வருத்தப்படாதீர்கள். இந்த வேலை, ஆசீர்வாதமான பரலோக அதிபதியினுடைய மேற்பார்வையின்கீழ் இருக்கின்றது. தேவன் நம்மிடம் கேட்பதெல்லாம், ஊழியர்கள் அவரிடம் வந்து தங்களுக்குரிய கட்டளையை பெற்றுக்கொண்டு, அவரது வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே ஆகும். வேலையின் அனைத்துப் பகுதிகளாகிய நம்முடைய சபைகள், ஊழியங்கள், ஓய்வுநாள் பள்ளிகள், நிறுவனங்கள் — ஆகிய அனைத்தும் அவரது இருதயத்தில் சுமந்து செல்லப்படுகின்றன. பிறகு ஏன் வருந்துகிறீர்கள்? சபை ஜீவனுடன் ஊக்குவிக்கப்படுவதைக் காண வேண்டும் என்ற தீவிரமான பேராவல், தேவனில் வைக்கின்ற முழு நம்பிக்கையினாலே மென்மையாக்கப்பட வேண்டும்…கச 60.1

    தேவனுடைய வேலையை மிகவும் துரிதமாய் முன்னேற்ற வேண்டும் என்று தேவனால் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற வல்லமைகளை, ஒருவரும் அளவுக்கு மீறி சுமையேற்றி வீணாக்கிட முயற்சிக்க வேண்டாம். மனிதனின் வல்லமைகள் தேவனுடைய வேலையைத் துரிதப்படுத்த முடியாது. பரலோக அறிவுத்திறன்களின் வல்லமை மனித வல்லமையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்… ஒருவேளை தற்போது ஊழியத்தில் மிகவும் பளுவான பாரங்களைச் சுமதுகொண்டிருக்கின்ற அனைத்து ஊழியர்களும், தங்களது வேலையைக் கைவிட்டால்கூட தேவனுடைய வேலை முன்னேறிச் செல்லும். — 7T 298 (1902).கச 60.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents