Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்து அங்கீகரிக்கிற பொழுதுபோக்கு

    தங்களது சரீரம் மற்றும் மனிதன் வல்லமைகளை தேவனுடைய மகிமைக்காக உபயோகப்படுத்தும் நோக்கத்துடன் தூய்மைகளை பொழுது போக்குகளினால், தங்களது சரீரங்களை ஊக்கமூட்டவும், தங்களது சிந்தையைப் புத்துணர்ச்சியூட்டவும் நாட வேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் கடமையும் சிறப்புரிமையுமாக இருக்கின்றது. — MYP 364 (1871).கச 61.5

    தங்களது ஆதிக்கத்தின் கீழுள்ள மகிழ்சிக்கான அநேக ஊற்றுகளை கிறிஸ்துவர்கள் பெற்றிருக்கின்றனர். நல்லொழுக்கமான மற்றும் வரையறைக்குட்பட்ட இன்பங்கள் எவை என்று அவர்களால் தவறிழைக்காத சரிநுட்பத்துடன் கூறமுடியும். மனதைக் கெடுக்காத, அல்லது ஆத்துமாவின் தரத்தைக் குறைக்காத அப்படிப்பட்ட பொழுதுபோக்குகளை அவர்கள் அனுபவிக்கலாம். சுய மரியாதையை அழித்து, அல்லது தங்களை உபயோகமுள்ளவர்களாக வைத்துக்கொள்ளுகின்ற வழியைக் கெடுத்து, பின்னாளில் வருத்தப்படுவதற்கு ஏதுவான ஒரு செல்வாக்கை விட்டுச்சென்று ஏமாற்றமடையச் செய்யாத அப்படிப்பட்ட பொழுது போக்குகளை அவர்கள் அனுபவிக்கலாம். அவர்கள் கிறிஸ்துவைத் தங்களுடன் அழைத்து சென்று, ஜெபம் நிறைந்த ஒரு சிந்தையை தொடர்ந்து செயலாற்றினால் முழுமையான பாதுகாப்போடு இருப்பார்கள். — MYP 38 (1884).கச 61.6

    நம்முடைய கூட்டங்கள் மிகவும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும். நம்முடைய நடத்தைகளும் அப்படியாகவே இருக்க வேண்டும். அப்பொழுது கூட்டங்கள் முடிந்து, நாம் நமது இல்லங்களுக்குச் சென்ற பின்பு, தேவனுக்கும் மனிதனுக்கும் நேராக குற்றமற்ற மனசாட்சி உடையவர்களாகவும், யாரோடு தொடர்பு கொண்டிருந்தோமோ அவர்களை எந்தவிதத்திலும் புண்படுத்தவில்லை அல்லது காயப்படுத்தவில்லை என்ற ஒரு மன உணர்வு உடையவர்களாகவும் அல்லது அவர்கள்மீது எந்தவிதத்திலும் பாதிப்பேற்படுத்தும் செல்வாக்கை உண்டுபண்ணாத ஒரு மனசாட்சியை உடையவர்களாகவும் நாம் இருக்கலாம். கச 62.1

    விசுவாசத்துடன், தேவனுடைய ஆசிர்வாதம் இருக்கும்படி கேட்டு, ஈடுபடக்கூடிய எந்த ஒரு பொழுதுபோக்கும் ஆபத்தானதாக இருக்காது. ஆனால், அந்தரங்க ஜெபத்திற்கோ, ஜெபபீடத்தண்டனையில் செய்யப்படும் தியானத்திற்கோ அல்லது ஜெபக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கோ, உங்களைத் தகுதியற்றவர்களாக்கக்கூடிய எந்த ஒரு பொழுதுபோக்கும் பாதுகாப்பானதல்ல, அவை ஆபத்தானதாகும். — MYP 386 (1913).கச 62.2