Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பட்டணங்களிலிருந்து தொலைவில்

    எவ்வளவு துரிதமாய் பட்டணங்களைவிட்டு வெளியேற முடியுமோ அவ்வளவு துரிதமாக வெளியேறி, எந்த இடத்தில் ஒரு தோட்டம் இருப்பதற்கு ஏதுவாகவும், உங்கள் குழைந்தைகள் அங்கு மலரும் பூக்களைக் கவனித்து எளிமை மற்றும் சுத்தமான வாழ்க்கையின் பாடங்களை அவைகளிலிருந்து கற்றுகொள்வதற்கு ஏதுவாகவும் உள்ளதோ, அந்த இடத்தில் ஒரு சிறு பகுதி நிலத்தை வாங்குங்கள். — 2SM 356 (1903).கச 69.3

    இக்காலத்திலே என்னுடைய செய்தி, பட்டணங்களை விட்டு வெளியேறுங்கள் என்பதாகும். மிகப்பெரிய பட்டணங்களிலிருந்து பல மைல் தூரத்திற்கு அப்பால் குடியிருப்பை அமைக்க வேண்டுமென்ற அழைப்பு, நமது மக்களுக்கு வந்திருக்கின்றது என்பதை நிச்சயித்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு இருக்கிறபடியே சான்பிரான்சிஸ்கோவை ஒரு பார்வை பார்த்தாலே, பட்டணங்களைவிட்டு வெளியேறுதலின் அவசியத்தை அது உங்களுக்குக் காட்டி, உங்கள் அறிவுத்திறனுள்ள மனங்களில் பேசும்.கச 70.1

    பட்டணங்களை விட்டு வெகுதொலைவில் தங்கள் குடியிருப்பை அமைக்க வேண்டும் என்று கர்த்தர் தமது ஜனங்களை அழைக்கின்றார். ஏனெனில், நீங்கள் நினையாத அப்படிப்பட்ட ஒரு மணி வேலையிலே, வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் இந்த பட்டணங்கள் மீது பொழியப்படும். மக்களுடைய பாவங்களின் சரிசம விகிதத்திற்கேற்ற அளவின்படி அவர்களது தண்டனையும் இருக்கும். ஒரு பட்டணம் அழிக்கப்படும்போது, நமது ஜனங்கள் அதை ஒரு சாதாரண காரியமாக எடுத்துக்கொண்டு, சாதகமான ஒரு சந்தர்ப்பம் தங்களுக்கு அளிக்கப் பட்டால், அழிக்கப்பட்ட அதே பட்டணங்களிலே தங்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொள்ளலாம் என்று எண்ண வேண்டாம்…கச 70.2

    இவைகளின் அர்த்தங்களைப் புரிந்துகொள்கின்ற அனைவரும் வெளி. 11- ம் அதிகாரத்தைப் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தையும் படித்து, பட்டணங்களில் இனிமேலும் நடக்க இருக்கின்ற காரியங்களை உணர்ந்துகொள்ளுங்கள். அதே புத்தகத்தின் 18- ம் அதிகாரத்தில், விளக்கப்பட்டுள்ள காட்சியையும் படியுங்கள். — MR 1518 (May 10, 1906).கச 70.3

    ஒரு சிறு பகுதி நிலத்தையும் ஒரு செளகரியமான இல்லத்தையும் சொந்தமாகப் பெற்றிருக்கும் தாய் தகப்பன்மார்கள், இராஜாக்கள் மற்றும் இராணிகள் ஆவர். AH 141 (1894).கச 70.4