Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஜனங்களுக்கு முன்பாக வைக்கப்பட வேண்டிய தலைப்பு

    இந்தக் கடைசிநாட்களுடன் சம்பந்தப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ளாத அநேகர் இருக்கின்றனர். அவர்கள், இதைக்குறித்து கண்டிப்பாக அறிவுறுத்தப்படவேண்டும். காவற்காரர்களும் விசுவாசிகளும், எக்காளத்தின் ஒரு நிச்சயமான தொனியைக் கொடுக்க வேண்டியது அவர்களது கடமையாக இருக்கின்றது, - Ev 194, 195 (1875).கச 9.9

    காவற்காரர்கள், இப்பொழுது தங்களது குரலை உயர்த்தி, இந்தக் காலத்திற்குரிய நிகழ்கால சத்தியம் என்னும் தூதைக் கொடுப்பார்களாக. தீர்க்கதரிசன வரலாற்றிலே நாம் எவ்விடத்தில் இருக்கின்றோம் என்பதை ஜனங்களுக்குக் காட்டுவோமாக. - 5T 716 (1889).கச 10.1

    இந்த உலகத்தின் வரலாற்றை முடிப்பதற்காக, தேவன் நியமித்திருக்கின்ற நாள் ஒன்று இருக்கின்றது: ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோக மெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். தீர்க்கதரிசனமானது, வேகமாக நிறைவேறிவருகின்றது. மிகப் பெரிதான முக்கியமானதான இந்த ஆய்வுப்பொருள் பற்றி அதிகமாக வெகு அதிகமாக சொல்லப்பட வேண்டும். ஆத்துமாக்களின் நித்தியத்திற்கான முடிவை, நிலையாக நிர்ணயிக்கின்ற நாள் வெகு சமீபத்தில் இருக்கின்றது…கச 10.2

    ஜனங்களுக்கு முன்பாக இந்த ஆய்வுப்பொருளை வைப்பதற்கு, மாபெரும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். கர்த்தருடைய நாள் சடுதியாய் எதிர்பாராத விதமாக வரும் என்ற பக்தி விநயமான உண்மை, உலக மக்களுக்கு முன்பாக மாத்திரமல்ல, நமது சொந்த சபைகளுக்கு முன்பாகவும் வைக்கப்பட வேண்டியதிருக்கின்றது. தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள அச்சமூட்டுகின்ற எச்சரிப்பு ஒவ்வொரு ஆத்துமாவுக்காகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்போது, வியப்பில் ஆழ்த்தப்படும் ஆபத்திலிருந்து தான் பாதுகாப்பாயிருப்பதாக ஒருவனும் எண்ணாதிருக்கக்கடவன். இந்த மாபெரும் சம்பவம் மிகவும் அருகாமையில் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தக்கூடிய சம்பவங்களின் அறிவைக் குறித்தான உங்களது திட நம்பிக்கையை, எந்தவொரு நபரது தீர்க்கதரிசன வியாக்கியானமும் பறித்துவிடாதிருக்கட்டும். - FE 335, 336 (1895).கச 10.3