Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெரியன் ஸ்பிரிங்ஸ், மிச்சிகன் (Berrien Springs, Michigan)

    மிச்சிகனின் தென்மேற்கு பகுதியிலுள்ள பெரியன் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் நிறுவுவது என்பது சிலரது யோசனையாக இருக்கின்றது என்று கேள்விப்படுகின்றேன். இந்த இடத்தைப்பற்றிய விபரங்கள் எனக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது… பெரியன் ஸ்பிரிங்ஸ் போன்ற இடத்திலே நிறுவப்படும் பள்ளி, நமது நோக்கங்களை அறிந்து கொள்ளும் ஒரு பாடமாக அமைக்கப்படலாம், முனேற்றிக் கொண்டு செல்லக்கூடிய இந்த வேளையில், ஒருவரும் குறுக்கிடமாட்டார்கள் என நான் நம்புகின்றேன். — 4MR 407 (July 12, 1901).கச 75.3

    பள்ளிக்கூடத்திற்கான இடத்தை தேர்வு செய்யும்போது, கர்த்தருடைய நன்மை செய்யும் கரமானது தமது மக்களோடு இருக்கின்றது. பள்ளிக்கூடம் எங்கு நிறுவப்பட வேண்டும் என்று தேவனால் எனக்குக் காண்பிக்கப்பட்ட சூழ்நிலையோடு இந்த இடம் ஒத்திருக்கின்றது. இந்த இடம் பட்டணத்தை விட்டு சற்று தொலைவில் இருக்கின்றது. விவசாயத் தொழில் நோக்கங்களுக்கும் ,வீடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாகக்கட்டப்பட அவசியமில்லாமல் தள்ளி கட்டப்படவும் ஏற்றவித்ததில் மிகுதியான நிலப்பரப்பு அங்கே இருக்கிறது. நிலத்தைப் பண்படுத்துகின்ற வேலையை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும்படியாக அங்கு ஏராளமான நிலமும் இருக்கின்றது. — RH Jan. 28, 1902.கச 75.4

    பேட்டில் கிரீக்கிலிருந்த கல்லூரியை பெரியன் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் மாற்றுவதற்கு, சதர்லேண்ட் மற்றும் மேகன் என்ற சகோதரர்கள் தேவன் கொடுத்த வெளிச்சத்திற்கு ஒத்திசைவாக செயல்பட்டிருக்கிறார்கள். அதிகக் கஷ்டங்களுக்கு மத்தியில் அவர்கள் கடினமாய் உழைத்திருக்கிறார்கள்… தேவன் அவர்களோடே இருந்தார்; அவர்களுடைய முயற்சிகளையும் அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார். — 4MR 260, 261 (1904).கச 75.5