Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தக்கோமா பார்க், வாஷிங்கடன், டி.சி. (Takoma Park, Washington, D.C.)

    நமது பள்ளிக்கும் சுகாதார மையத்திற்குமாக தெரிந்தெடுத்திருக்கின்ற இடம் அனைவரும் விரும்பப்படக்கூடியதாக இருக்கிறது. கர்த்தரால் எனக்குக் காண்பிக்கப்பட்ட இடத்தைப் போலவே அது இருக்கின்றது. எதற்காக பயன்படுத்தப்படவேண்டுமோ, அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்த ஏற்றவிதத்தில், மிகவும் பொருத்தமான இடமாக அது இருக்கின்றது. அந்த இடத்திற்கு மேலே, ஒரு பள்ளியும் சுகாதார மையமுமாகிய இரு ஸ்தாபனங்களும் நெருக்கடியின்றி கட்டப்படுவதற்கு ஏற்ப, போதுமான இடம் அங்கே இருக்கின்றது. அங்கே, சுற்றுச்சூழல் சுத்தமாகவும், தண்ணிர் சுத்தமாகவும் இருக்கின்றது. வடக்கிலிருந்து தெற்கிற்கு நமது இடத்தின் வழியாக மிக அழகான ஓடை ஒன்று ஓடுகின்றது. இந்த ஓடை மதிப்புமிக்க பொன் அல்லது வெள்ளியைக்காட்டிலும் மிகுந்த ஒரு பொக்கிஷமாக விளங்குகின்றது. கட்டடம் கட்டும் இடங்களும் நல்ல உயரமான இடத்தில், மிகச்சிறந்த கழிவுநீர்போக்கு வசதியுடன் அமைந்திருக்கின்றன.கச 76.2

    ஒரு நாள், நாங்கள் தக்கோமா பார்க்கில் உள்ள பல்வேறு பகுதிகள் வழியாக நீண்ட பிரயாணம் மேற்கொண்டோம். இங்குள்ள அநேக நகரப்பகுதிகள், ஒரு இயற்கையான காடுகளாக இருக்கின்றன. இங்குள்ள வீடூகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவோ சிறியதாகவோ இல்லை. ஆனால் பெரியதாகவும் இடவசதியுடன் பெரிய அறைகளை உடையதாகவும் இருக்கின்றன. அவைகள் பைன், ஓக், மேப்பிள் போன்ற சிக்கனமான இரண்டாம் சிறப்பு இன மரங்களாலும் மற்றும் வேறு சில அழகிய மரங்களாலும் சூழப்பட்டிருந்தன. இந்த வீடுகளின் உரிமையாளர்களில் அநேகர் வியாபாரிகளாக இருக்கின்றனர். அவர்களில் அநேகர் வாஷிங்டனில் உள்ள அரசு அலுவலகத்தில் குமாஸ்தாக்களாகப் பணிபுரிகின்றனர். அவர்கள் தினமும் நகரத்திற்கு சென்று வேலை செய்துவிட்டு, மாலையில் தங்களது அமைதலான வீடுகளுக்குத் திரும்பிவிடுகின்றனர்.கச 76.3

    அஞ்சலகத்திற்கு மிக அருகிலே அச்சகத்திற்கு ஏற்ற ஒரு நல்ல இடம் தெரிந்தெடுக்கப்பட்டது. அதோடு, சபை கூடுவதற்கான ஒரு இடமும் தெரிந்தெடுக்கப்பட்டது. தக்கோமா பார்க், விசேஷமாக நமக்காகவே ஆயத்தம் பண்ணப்பட்டிருப்பதுபோலவும், நமது ஸ்தாபனங்களாலும் அவைகளின் ஊழியர்களாலும் ஆட்கொள்ளப்படும்படியாக அது காத்துக்கொண்டிருப்பது போலவும் தோன்றுகின்றது. — ST June 15, 1904.கச 77.1

    கர்த்தர் எனக்கு இந்தக் காரியத்தைக்குறித்துத் தீர்மானமாய் வெளிப்படுத்திக் காண்பித்திருக்கின்றார். பேட்டில கிரீக்கில் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்ற புத்தக வெளியீட்டுப் பணி, தற்போது வாஷிங்டனுக்கு அருகில் கொண்டுசெல்லப்பட வேண்டும். சிறிது காலம் கழித்து வாஷிங்டனிலிருந்து வெளியேறு என்றும், வேறு இடத்திற்குப் போ என்றும் கர்த்தர் கூறினால் நாம் போகத்தான் வேண்டும். — RH Aug. 11, 1903.கச 77.2