Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மெளன்ட்டன் வியூ, கலிஃபோர்னியா (Mountain View, California)

    பசிபிக் அச்சகம் ஓக்லேண்டிலிருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனையும் அளிக்கப்பட்டது. வருடங்கள் செல்லச் செல்ல, அந்த நகரம் வளர்ந்தது. இந்த அச்சகத்தில் பணிபுரிபவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வண்ணம், இப்போது இந்த அச்சகத்தை இதைவிட இன்னும் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுவுவதென்பது அவசியமாக இருக்கின்றது. நம்முடைய பிரசுர அலுவலகங்களுடன் தொடர்புகொண்டுள்ளவர்கள் நெரிசலான நகரங்களில் குடியிருக்கும்படி கட்டாயப்படுத்தப்படக்கூடாது. நகரங்களுக்குப் புறம்பாக, அதிகப்படியான வாடகை இல்லாத வீடுகளில் குடியிருக்க அவர்களுக்கு வாய்ப்புகள் தரப்படவேண்டும். — FE 492 (1904).கச 77.5

    மெளன்ட்டன் வியூ என்ற இடம் அதிக வசதிகள் கொண்ட சிறுநகரமாகும். அது அழகான பழத்தோட்டங்களால் சூழப்பட்டிருக்கிறது. அங்கு மிதமான சீதோஷ்ண நிலை காணப்படுவதால், எல்லாவிதமான பழங்களும் காய்கறிகளும் விளைவிப்பதற்கு ஏற்ற இடமாக அது இருக்கின்றது. இந்தச் சிறு நகரம் மிகப்பெரியதல்ல என்றாலும், இங்கு மின்விளக்குகள், தபால் வசதிகள் மற்றும் பெரும் நகரங்களில் மாத்திரம் கிடைக்கக்கூடிய இன்னும் பல வசதிகள் இருக்கின்றன. — Letter 141, 1904.கச 78.1

    நமது பிரசுர அலுவலகம், ஓக்லேண்டிலிருந்து ஏன் மெளன்ட்டன் வியூவிற்கு இடம் மாற்றப்பட வேண்டும் என்று சிலர் வியப்படைந்திருக்கின்றனர். பட்டணங்களைவிட்டு வெளியேரும்படி தேவன் தமது ஜனங்களை அழத்துக்கொண்டிருக்கின்றார். நம்முடைய ஸ்தாபனங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் வாலிபர்கள், பெரும் நகரங்களில் காணப்படக்கூடிய சோதனைகளுக்கும், ஒழுக்ககேடுகளுமான இடர்களுக்கும் உள்ளாக்கப்படக்கூடாது. ஆதலால், மெளன்ட்டன் வியூ என்ற இடம் அச்சக அலுவலகத்திற்கு சாதகமான ஒரு இடமாகக் காணப்படுகின்றது. — CL 29 (1905).கச 78.2