Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பேரழிவையும் தாங்கும் கட்டிடங்கள் சாம்பலாகும்

    கட்டிடங்களிலேயே மிகவும் மதிப்புள்ள அமைப்புகளாக எழுப்பப்பட்டு, நெருப்பையும் தாங்கும் என்று கருதப்பட்ட இத்தகைய பகட்டான கட்டிடங்கள் தேவனுடைய கோபாக்கினையின் அக்கினியில் சோதோம் அழிந்ததுபோல, எரிந்தழிந்து சாம்பலாக மாறும் என்பதை நான் கண்டேன்… மனிதனுடைய பெருமைகளைப் பறைசாற்றுகின்ற, போலிப்புகழ்ச்சியான நினைவுச் சின்னங்களெல்லாம் உலகத்தின்மீது வர இருக்கின்ற கடைசி மாபெரும் அழிவுக்கு முன்னதாகவே சுக்குநூறாக உடைந்து நொறுங்கிவிடும். — 3SM 418 (1901).கச 82.2

    ஜலப்பிரளயத்திற்கு முன்னான உலகத்தின் பட்டணங்களப்போலவும், சோதோம்கொமோராவைப் போலவும் மாறியிக்கிறதுன்மார்க்கப் பட்டணங்களிலிருந்து தேவன் தமது ஆவியைப் பின்னிழுத்துக்கொண்டிருக்கிறார். உரிமையாளர்கள் மன்னிப்பின் எல்லைகளைக் கடந்துவிட்டதைக் கர்த்தர் காணும்போது. விலையுயர்ந்த மாளிகைகளும், கட்டிடக் கலைத்துறையின் அதிசயங்களும் ஒரு கணப்பொழுது பார்வைக்குள்ளாகவே அழிக்கப்பட்டுவிடும். நெருப்பையும் தாங்கும் எனக் கருதப்பட்ட மாபெரும் கட்டிடங்கள் அக்கினியால் அழிவது, பூமியின் கட்டிட அமைப்பு யாவும் ஒரு குறுகிய நேரத்தில் எப்படி தரைமட்டமாகப் போகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. — TDG 152 (1902).கச 82.3

    கோடிக்கணக்கான பணத்தைச் செலவுசெய்து, விலையுயர்ந்த கட்டிடங்களை மனிதர்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருப்பார்கள். எவைகளைக்கொண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள என்று, அவர்களது கட்டிடக்கலை அழகிற்கும் உறுதிக்கும் திடத்தன்மைக்கும், விசேஷ கவனம் கொடுக்கப்படும். ஆயினும் இப்படிப்பட்ட கட்டிடங்கள், அசாதாரணமான உறுதியும் விலையுயர்ந்த பகட்டான தோற்றமும் கொண்டிருந்தாலும், எருசலேம் ஆலயத்தின் அழிவில் இவைகளும் பங்கடையும் என்று கர்த்தர் எனக்கு அறிவுறுத்துனார். — 5BC 1098 (1906).கச 82.4