Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஓக்லேண்ட்

    சான்பிரான்சிஸ்கோவும் ஓக்லேண்டும், சோதோம் கொமோராவைப்பபோல மாறிவருகின்றன. அதனால் கர்த்தர் அவற்றைச் சந்திப்பார். தேவனுடைய நியாயத்தீர்ப்புகளின் கீழாக, இந்தப் பட்டணங்கள் துன்புறப்போகும் காரியம் வெகு தொலைவில் இல்லை. — Ms 30, 1903.கச 83.5

    சான்பிரான்சிஸ்கோவைச் சந்தித்த பயங்கரமான பூமியதிர்ச்சி, தேவனுடைய வல்லமையின் மற்ற வெளிப்பாடுகளால் தொடரப்படும். தேவனுடைய பிரமாணம் மீறப்பட்டுள்ளது. பட்டணங்கள் பாவங்களால் கறைப்படுத்தப்பட்டு மாறிவருகின்றன. நினிவேயின் சரித்திரத்தைப் படித்துப்பாருங்கள். தேவன் துன்மார்க்கமான பட்டணத்திற்கு யோனாவின் மூலமாக விசேஷமான தூதினை அனுப்பினார்… அன்றைய நினிவே பட்டணம் மனந்திரும்பியதுபோன்று, இன்றைய துன்மார்க்கமான பட்டணங்களும் மனந்திரும்புமானால், அவர் கொடுத்த அதேபோன்ற அநேக எச்சரிப்பின் தூதுகள் நம்முடைய கால்திலும் கொடுக்கப்படும். — Ms 61a, June 3, 1906.கச 83.6

    அப்படிப்பட்ட மீறுதலின் விளைவாக, தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் இந்தப் பட்டணங்களில் விழுந்தாலும்கூட, அங்கு மனந்திரும்புதலின் அடையாளம் காணப்படவில்லை. மது விற்பனைக்கூடங்கள் இன்னுமும் திறந்தே இருக்கின்றன. அநேக சோதனைகள் மக்கள் முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. — Letter 268, Aug, 20, 1906.கச 84.1