Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மரணச்சட்டம் பிறப்பித்த பிறகு நீதிமான்கள் துன்மார்க்கரால் துரத்தப்படுதல்

    இக்கட்டுக்காலத்திலே நாங்கள் அனைவரும் பட்டணங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் உயிர் தப்ப ஓடினோம். துன்மார்க்ரோ உருகியவாளோடு எங்களது வீடுகளில் நுழைந்து எங்களைப் பின்தொடர்ந்தார்கள். — EW34 (1851).கச 88.5

    பரிசுத்தவான்கள் பட்டணங்களையும் கிராமங்களையும் விட்டுப்போனபோது, அவர்களைக் கொலை செய்யத்தக்கதாக தேடிவந்த துன்மார்க்கரால் தொடரப்பட்டார்கள். ஆனால், தேவனுடைய மக்களை கொல்லத்தக்கதாக உயர்த்தப்பட்ட பட்டயங்கள் ஒரு வைக்கோலைப்போல வல்லமையின்றி உடைந்து விழுந்தன. தேவனுடைய தூதர்கள் பரிசுத்தவான்களைச் சூழக் காத்துக்கொண்டனர். — EW 284, 285 (1858).கச 88.6

    கற்பனைகளைக் கைக்கொள்பவர்கள் எப்போது கொல்லப்படலாம் என்ற நேரத்தை பொதுவான ஒரு சட்டம் நிர்ணயித்திருந்தாலும், சில வேளைகளில் அச்சட்டத்தை எதிர்பார்த்திருந்த அவர்களது எதிரிகள், குறிப்பிட்ட நேரம் வருவதற்கு முன்பாகவே அவர்களது உயிர்களைப் பறிக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஒவ்வொரு உண்மையான ஆத்துமாவைச் சுற்றிலும், நியமிக்கப்பட்டிருந்த வல்லமையான பாது காவலர்களான துதர்களைக் கடந்து ஒருவராலும் செல்ல இயலாது. கிராமங்களிலிருந்தும் பட்டணங்களிலிருந்தும் ஓடிப்போகும்போது, ஒரு சிலர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆயினும், அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தப்பட்ட பட்டயங்கள் ஒரு வைக்கோலைப்போல உடைந்து விழுந்தன. மற்றவர்கள், யுத்த மனிதரைப் போல காணப்பட்ட தேவதூதர்களால் காக்கப்பட்டனர். — GC 631 (1911).கச 89.1

    *****