Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கலாகாது

    வரப்போகின்ற ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, நமது வல்லமைக்குட்பட்ட அனைத்தையும் செய்வது நமது கடமையாக இருக்கின்றது… இந்த தீமையின் மேகத்தை தேவன் பின்னுக்குத் தள்ளவும், எஜமானுக்காக வேலை செய்ய இன்னும் சில கிருபையின் ஆண்டுகளைக் கூட்டித்தரவும் வேண்டும் என்று, விண்ணப்பிக்க வேண்டியது உலகெங்கிலுமுள்ள ஜெபிக்கிற ஆண்கள் மற்றும் பெண்கள்மீது விழுந்த ஒரு பெரும் பொறுப்பாக இருக்கிறது. — RH Extra Dec. 11, 1888.கச 92.4

    தேவனுடைய கற்பனைகளை இப்பொழுது கைக்கொள்பவர்கள், தேவன் மாத்திரமே கொடுக்கக்கூடிய விசேஷ உதவியைப் பெற்றுக்கொள்ளத்தக்கத்தாகத் தங்களை ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பயமுறுத்தக்கூடிய பேராபத்தை எவ்வளவுக்கெவ்வளவு தாமதிக்க வைக்க முடிமோ, அவ்வளவு நாட்கள் தாமதிக்க வைக்கத்தக்கதாக அவர்கள் மிகவும் ஊக்கமாக உழைக்க வேண்டும். — RH Extra Dec. 18, 1888.கச 92.5

    பிரமாணத்தைக் மைக்கொள்ளுகின்ற தேவனுடைய ஜனங்கள், இந்த சூழ்நிலையைத் தாங்கள் நற்பாங்குடன் ஏற்றுக்கொண்டதுபோல, இந்த நேரத்திலே அமைதியாக இருக்கவேண்டாம். — 7BC 975 (1889).கச 93.1

    மனச்சாட்சியின் சுதந்திரத்தை காத்துக்கொள்வதற்கு நாம் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தால், நாம் தேவனுடைய சித்தத்தை செய்யாமல் இருக்கின்றோம். இத்தளை நீண்ட காலமாக அலட்சியப்படுத்தப்பட்ட ஊழியத்தை நாம் நிறைவேற்றி முடிக்கும்வரை, இந்த பேராபத்துக்கள் ஒருவேளை தாமதப்படுத்தப்படும்படியாக, ஊக்கமான மற்றும் கருத்துமிக்க ஜெபங்கள் பரலோகத்திற்கு எழும்பிக்கொண்டிருக்கவேண்டும். மிகவும் ஊக்கமான ஜெபங்கள் முதலாவதாக எழும்பட்டும். அதன்பின்பு நம்முடைய ஜெபத்துடன்கூட, நாமும் இணைந்து வேலை செய்வோமாக. - 5T 714 (1889).கச 93.2

    தூங்கிக்கொண்டிருப்பதுபோல் இருக்கும் அநேகர், மிக சாவ தானமாய் இருந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள்: ஞாயிறு ஆசரிப்பு வலியறுத்தப்படும் என்று தீர்க்கதரிசனம் முன்னுரைத்திருந்தால், கண்டிப்பாக அந்த சட்டமானது இயற்றப்படும்” என்று கூறுகின்றார்கள். இந்த முடிவிற்கு வந்தபின்பு, அவர்கள் அந்த நிகழ்ச்சியை அமைதியான ஒரு எதிர்பார்ப்புடன், அப்படிப்பட்ட இக்கட்டு நாளிலே தேவன் தமது மக்களைக் காப்பாற்றுவார் என்ற எண்ணத்துடன், தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொண்டு உட்கார்த்திருக்கின்றார்கள். ஆனால் தேவன் நமது பொறுப்பில் ஒப்படைத்திருக்கின்ற வேலையை செய்வதற்கு, எந்த முயற்சியும் நாம் எடுக்காதிருந்தால் அவர் நம்மைக் காப்பாற்றமாட்டார்…கச 93.3

    உண்மையுள்ள ஜாமக்காரராக, பட்டயம் வருகிறதை நீங்கள் காணவேண்டும்; ஆண்களும், பெண்களும் அறியாமையின்மூலம் ஒரு பாதையைத் தொடராதபடி எச்சரிப்பை அளிக்கவேண்டும். அவர்கள் சத்தியத்தை அறிந்திருந்தார்களானால் அப்பாதையைத் தவிர்த்திருந்திருப்பார்கள். — RH Extra Dec. 24, 1889.கச 93.4