Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ரோம் தனது இழந்துபோன வல்லமையை மீண்டும் பெறும்

    நாம் கடைசி இக்கட்டை நெருங்கும்போது, கர்த்தருடைய கருவிகளாகிய அவரது மக்கள் மத்தியில், ஒடுமைப்பாடும் ஐக்கியமும் இருக்கவேண்டிய அந்த நேரம் மிக முக்கியமான நேரமாகும். உலகம் புயலாலும் யுத்தத்தாலும் வேற்றுமை உணர்வுகளாலும் நிறைந்திருக்கின்றது. இருப்பினும் போப்பு வல்லமை என்னும் ஒரு தலைமையின் கீழாக, தேவனுடைய சாட்சிகளாகிய அவரது பிள்ளைகளுக்கு எதிர்த்து நிற்பதன் மூலம், அவரையே எதிர்த்து நிற்க மனிதர்கள் ஒன்றுபடுவார்கள். இந்த ஐக்கியம் மாபெரும் மருள விழுகைக்காரனால் உறுதியாக்கப்பட்டிருக்கும். — 7T 182 (1902).கச 96.4

    குடியரசுக் கொள்கைகளின்மீது (அமெரிக்கா) அரசாங்கத்தின் அஸ்திபாரம் போடப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக ஆசரிக்கக் கட்டாயப்படுத்தும் சட்டங்கள் அக்கொள்கைகளிலிருந்து தேசிய அளவில் மருளவிழும் நிலையைக் கொண்டுவரும். போப்பு மார்க்கத்தின் மதம் ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். தேவனுடைய பிரமாணம் பயனற்றதாக ஆக்கப்படும். — 7MR 192 (1906).கச 96.5

    போப்புமார்க்த்தின் வெற்றிக்குப் பெரும் அறிவின் அடர்த்தியான இருண்ட நாள் மிகச் சாதகமானது என்று கட்டிக்காட்டப்பட்டிருந்தது. அப்படியிருந்தபோதிலும், பெரும் அறிவின் ஒளிமிக்க நாளும் அதற்குசமமாக, அதன் வெற்றிக்குச் சாதகமாக உள்ளது என்பதற்கான நடைமுறை விளக்கம் தரப்பட்டுள்ளது. — 4SP 390 (1884).கச 96.6

    ரோமன் கத்தோலுக்க சபைக்கும் அதன் பயனைப் பெறும் அமைப்புகளுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு தேவை என்று கோரும் இயக்கங்கள் இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாட்டில் முன்னேறி வருகின்றன. இக்காரியங்களில் புராட்டஸ்டண்டுகள், போப்புமார்க்க வாதிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்ல, பழைய உலகத்தில் போப்புமாக்கம் இழந்துவிட்ட மேலாதிக்கத்தை புராட்டஸ்டண்ட் அமெரிக்காவில் மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி புராட்டஸ்டண்டுகள் போப்பு மார்க்கத்துக்கென்று கதவைத் திறந்து கொண்டிருக்கின்றனர். — GC 573 (1911).கச 96.7