Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேசிய மருளவிழுகையைப் பின்தொடரும் தேசிய அழிவு

    மனிதரின் மார்க்க சம்பந்தமான உரிமைகளிலே நமது நாடு (அமெரிக்கா) அவர்களது மனச்சாட்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, தனது சட்டமன்றங்களிலே சட்டங்களை இயற்றி, ஞாயிறு ஆசரிப்பை வலியுறுத்தி, ஏழாம்நாளை ஓய்வுநாளாக ஆசரிப்பவர்களுக்கு எதிராக ஒடுக்கும் வல்லமையைக் கொண்டுவரும்போதும், நமது தேசத்திலே தேவனுடைய பிரமாணம் அனைத்துக் குறிகோள்களிலும் நோக்கங்களிலும் பயனற்றதாக ஆக்கப்படும்போதும் நாடுதழுவிய மருளவிழுகை ஏற்படும் அதைத் தொடர்ந்து நாடுதழுவிய அழிவு வரும். — 7BC 977 (1888).கச 97.6

    நாடுதழுவிய மருளவிழுகையின்பொழுது, நாட்டின் அதிகாரிகள் அனைவரும் பாவ மனுஷனின் பக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு சாத்தானின் திட்டப்படி செயல்படுவார்கள். அப்போது அவர்களது அக்கிரமத்தின் அளவு நிரம்பியிருக்கும். இப்படிப்பட்ட நாடு தழுவிய மருள விழுகை, நாடுதழுவிய அழிவிற்கு அடையாளமாகும். — 2SM 373 (1891).கச 97.7

    ரோமன் கத்தோலிக்கக் கொள்கைகள், நாட்டின் பாதுகப்பு மற்றும் கவனிப்பிற்கு ஏற்ற வகையில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த நாடு தழுவிய மருளவிழுகை, நாடுதழுவிய அழிவினால் வெகு விரைவாகத் தொடரப்படும். — RH June 15, 1897.கச 98.1

    தங்களது முன்னோர்கள் எதற்காக எதிர்த்து, கொடிய உபத்திரவங்களை சகித்து போப்பு மார்க்கத்திலுருந்து வெளியே வந்தார்களோ, அதே கொள்கைகளை புராட்டஸ்டண்ட் சபைகள் விட்டுக் கொடுத்து, ஒரு பொய்யான மார்க்கத்தை நிலைநிறுத்த உலக வல்லமை யோடு ஒன்று சேரும். அப்போது நாடும் சபையும் ஒன்றிணைந்த அதிகாரத்தினால், போப்பு மார்க்கத்தின் ஓய்வுநாள வலியுறுத்தப்படும். அப்போது நாடுதழுவிய அழிவில் மாத்திரமே முடிவடையக்கூடிய, நாடுதழுவிய ஒரு மருளவிழுகை ஏற்படும். — Ev 235 (1899).கச 98.2

    சபையின் நிறுவனங்களை நிலைநிறுத்தவும், சட்டங்களை வலியுறுத்துவும், அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் — அப்போது புராட்டஸ்டண்ட் அமெரிக்கா, போப்பு மார்க்கத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டுபண்ணியிருந்திருக்கும். நாடுதழுவிய ஒரு மருளவிழுகை உண்டாகும்; நாடுதழுவிய அழிவிலேதான் அது முடிவடையும். — 7BC 976 (1910).கச 98.3