Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    10. குறுகிய இக்கட்டுக்காலம்

    கிருபையின் காலம் முடியும் முன்பாக ஒரு இக்கட்டுக்காலம்

    “பரம தரிசனங்கள்” — என்ற புத்தகத்தின் (ஆங்கிலப் பதிப்பில்) 33-ம் பக்கத்தில்: “இக்கட்டுக்காலம் துவங்கியபோது, நாங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு புறப்பட்டுச் சென்று, ஓய்வுநாள் சத்தியத்தை முற்றிலுமாகக் கூறியறிவித்தோம்” என்று கூறப்பட்டிருக்கின்றது.கச 105.1

    இந்தத் தரிசனம், 1847 —ம் வருடத்தில் கொடுக்கப்பட்டபோது, வெகு சில அட்வெந்து சகோதரர்களே ஓய்வுநாளை ஆசரித்து வந்தார்கள். அவர்களிலும் வெகு சிலர் மாத்திரமே, இந்த ஓய்வுநாள் ஆசரிப்பு தேவனுடைய மக்களையும் அவிசுவாசிகளையும் பிரித்துக் காட்டும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நம்பினார்கள். இப்போது அந்தக் கருத்தின் நிறைவேறுதல் காணப்பட ஆரம்பித்திருக்கின்றது. “இக்கட்டுக்காலம் துவங்கியபோது” என்று இங்கே கூறப்படுவது, வாதைகள் ஊற்றப்படுவதற்குத் துவங்கும் ஒரு காலத்தைக் குறிப்பதல்ல; கிறிஸ்து ஆசரிப்புக்கூடாரத்திற்குள் இருக்கும்போது வாதைகள் ஊற்றப்படுவதற்கு சற்று முன்பாக உள்ள குறுகிய ஒரு காலத்தைக் குறிப்பாதாகும். இரட்சிப்பின் வேலை முடிவடையக்கூடிய அந்த நேரத்தில், இக்கட்டு பூமியின்மீது வந்துகொண்டிருக்கும், ஜாதிகள் கோபமடைவார்கள். எனினும், மூன்றாம் தூதனின் வேலை தடைபடாதபடிக்கு அவைகள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும். — EW 85, 86 (1854).கச 105.2