Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பூமிக்குரிய அனைத்து ஆதரவும் துண்டிக்கப்படும்

    சேமித்துவைக்கப்பட்ட விலைமதிப்புமிக்க சொத்துக்களனைத்தும் விரைவில் பயனற்றதாகிவிடும். மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொண்டவர்கள் தவிர, வேறு எவரும் வாங்கவும் விற்கவும் கூடாது என்ற சட்டம் பிறப்பிக்கப்படும்போது, சேர்த்துவைத்த மிருந்த பொருள்களினால் ஒரு பியோஜனமுமிருக்காது. ஆனால், உலகத்திற்கு எச்சிரிப்பைக் கொடுக்கத்தக்கதாக, இப்போது நம் பலத்தால் எல்லாவற்றையும் செய்யும்படியாக தேவன் நம்மை அழைக்கின்றார். — RH March 21, 1878.கச 108.5

    நாம் எந்த ஒரு விலைக்கும், எதையுமே விற்க முடியாத காலம் வந்துககொண்டிருக்கின்றது. மிருகத்தின் முத்திரையைப் பெற்றிருக்கும் மனிதன் தவிர, வேறு ஒருவரும் வாங்கவோ அல்லது விற்கவோ முடியாதபடி தடைசெய்யும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். கலிபோர்னியாவில், ஒரு குறுகிய காலத்திற்கு இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு அருகில் வந்திருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். ஆனால் இது, நான்கு காற்றுகள் அடிப்பதைப் பற்றியதான அச்சுறுத்தலாக மட்டுமே இருந்தது. நாம் தற்போது ஆயத்தப்படாமலிருப்பதால், இன்னமும் அவைகள், நான்கு தூதர்களால் பிடித்து வைக்கப்பட்டிருக்கினறன. இன்னும் செய்யப்படவேண்டிய ஒரு வேலை இருக்கின்றது. அதன்பின்பு, நான்கு காற்றுகளும் பூமியின்மீது வீசும்படியாக அவைகளை விட்டு விடும்படி தூதர்களுக்குக் கட்டளையிடப்படும். — 5T 152 (1882).கச 108.6

    தேவனுக்கு உண்மையாயிருப்பவர்கள், சாத்தானுடன் நடக்கின்ற இந்தப் போராட்டத்தின் கடைசி மாபொரும் யுத்தத்திலே, தங்களது அனைத்துப் பூவுலக ஆதரவுகளும் துண்டிக்கப்படும் என்பதைக் காண்பார்கள். உலக வல்லமைகளுக்குக் கீழ்ப்படியும் காரியத்தில் அவர்கள் தேவனுடைய பிரமாணத்தை மீறுவதற்கு மறுப்பதனாஸ், வாங்கவும் விற்கவும் முடியாதபடி தடை செய்யப்படுவார்கள். — DA121, 122 (1898).கச 109.1

    உணவும் உடையும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தினால், தேவனுடைய பிரமாணத்தை மீறுவதிலே உலகத்தாரோடு அவர்கள் (தேவனுடைய பிள்ளைகள்) சேர்ந்துகொள்வார்கள். மேலும், இந்த உலகம் முழுவதும் என்னுடைய ஆதிக்கத்திலேயே இருக்கும்... என்று சாத்தான் கூறுகின்றான். — PK183, 184 (c.1914).கச 109.2