Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பொய்யின் ஆவிகள் வேதவாக்கியங்களுக்கு முரண்பாடாகப் பேசும்

    நிகழ்கால சத்தியத்தைக்குறித்த பூரண அறிவைப் பரிசுத்தவான்கள் பெற்றிருக்கவேண்டும். அவர்கள் வேத வாக்கியங்களின்மூலமாக அதை நிலைநிறுத்தும்படி கடமைப்பட்டிருக்கின்றார்கள். பிசாசுகளின் ஆவிகள், மரித்துப்போன அவர்களது அன்பான நண்பர்கள் அல்லது உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்களைப் போலத் தோற்றமளித்து, ஓய்வுநாள் மாற்றப்பட்டுவிட்டது என்ற உபதேசம் உட்பட மற்ற வேத ஆதாரமற்ற உபதேசங்களையும் அவர்களுக்கு அறிவிப்பார்கள் என்பதால், அவர்கள் மரித்தவர்களின் நிலைபற்றி அறிந்திருக்க வேண்டும். — EW 87 (1854).கச 114.2

    இந்த பொய்யின் ஆவிகள் அப்போஸ்தலர்கள் உருவில் தோன்றி, அவர்கள் இவ்வுலகத்திலிருந்தபோது பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதின காரியங்களுக்கு முரண்பாட்டை உண்டாக்கும். அவைகள் வேதாகமத்தின் தெய்வீக ஆரம்பத்தை மறுதலிக்கும். — GC 557 (1911).கச 114.3

    “ஆத்துமா அழியாதது” மற்றும் “ஞாயிற்றுக்கிழமை பரிசுத்தமானது” என்ற இரண்டு பெரும் தவறுகளின்மூலமாக, சாத்தான் மக்களை தன் வஞ்சகத்தின்கீழ் கொண்டுவருவான். முதலாவது காரியம் ஆவிமார்க்கத்திற்கு அடித்தளம் நாட்டுகின்றது; பின்னான காரியம் ரோம மார்க்கத்தோடு ஒரு அனுதாபப் பிணைப்பை உண்டாக்குகின்றது. — GC 588 (1911).கச 114.4

    மனிதர்கள், தங்களைக் கிரிஸ்துவாகவே பாவனை செய்து கொண்டு எழும்புவார்கள். அவர்கள் உலகத்தின் மீட்பருக்கு மட்டுமே உரிய திருப்பெயருக்கும் ஆராதனைக்கும் உரிமை கொண்டாடுவார்கள். அவர்கள் அதிசயமான குணமாக்கும் அற்புதங்களை செய்வார்கள்; வேத வாக்கியங்களின் சாட்சிக்கு, முரண்படுகின்ற காரியங்களைக் கூறி, பரலோகத்திலிருந்து வெளிப்பாடுகளைப் பெற்றிருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள்...கச 114.5

    ஆனால் தேவனுடைய மக்கள் தவறான வழியில் நடத்தப்படமாட்டார்கள். கள்ளக்கிறிஸ்துவின் இந்தப் போதனைகள் வேதவாக்கியங்களுக்கு ஒத்திருக்கவில்லை. மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்குபவர்கள்மீது அவனுடைய ஆசீர்வாதம் கூறப்படுகின்றது. வேதாகமம் கூறுகின்ற அந்தக் கூட்டத்தார் மீதுதான், தேவனுடைய கலப்பில்லாத கோபம் ஊற்றப்படும். — GC 624, 625 (1911).கச 115.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents