Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    20 - நாகமான்

    ‘ சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ள வனுமாயிருந்தான்; அவனைக்கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட் சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான். 2இராஜாக்கள் 5:1.தீஇவ 244.1

    சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் இஸ்ரவேலின் சேனை களைத் தோற்கடித்திருந்த அந்த யுத்தத்தில் தான் ஆகாப் மரிக்க நேரிட்டது. அது முதல் சீரியர்கள் இஸ்ரவேலின் எல்லைகளில் தொடர்ந்து யுத்தங்களை நடத்தி வந்தனர். அவ்வாறாக நடைபெற்ற ஒரு திடீர்த்தாக்குதலில் ஒரு சிறு பெண்ணை அவர்கள் சிறைப்பிடித் தனர். சிறைப்பட்டுப்போன அந்தத் தேசத்திலே அவள், ‘நாகமா னின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். தன்னு டைய வீட்டிலிருந்து தூர இடத்திற்கு அடிமையாகக் கொண்டுசெல் லப்பட்ட போதும், தேவனுடைய ஒரு சாட்சியாக, இஸ்ரவேலரை தேவன் தம்முடைய மக்களாகத் தெரிந்துகொண்ட நோக்கத்தைத் தன்னையறியாமலேயே நிறைவேற்றினாள் அச்சிறுபெண். அந்த அஞ்ஞான வீட்டில் பணிவிடை செய்துகொண்டிருந்த சமயத்தில், தன்னுடைய எஜமான்மீது அவளுக்கு இரக்கம் உண்டானது எனவே, எலிசா செய்துவந்த குணமாக்குதலை நினைவுகூர்ந்து, தன் எஜமானியிடம், ‘என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்க தரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவரு டைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்” என்றாள். பரலோக வல் லமை எலிசாவோடிருந்ததை அறிந்திருந்தாள்; அதனால் நாகமா னைக் குணமாக்க முடியுமென்று நம்பினாள்.தீஇவ 244.2

    சிறைப்பட்டிருந்த அப்பெண் பிள்ளையின் நடத்தையும், அந்த அஞ்ஞான வீட்டில் அவள் சாட்சி பகர்ந்தவிதமும், சிறுவயது வீட்டுப் பயிற்சியின் வல்லமைக்குப் பலமான ஓர் எடுத்துக்காட்டாகும். தங்கள் பிள்ளைகளைப் பராமரித்துப் பயற்சியளிப்பதைவிட தந்தைமார்களிடமும் தாய்மார்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள பெரிய பொறுப்பு வேறு எதுவுமில்லை. குணத்தையும் பழக்கத்தை யும் அஸ்திபாரமிடுவதில் பெற்றோர் கவனம் செலுத்தவேண்டும். அவர்களுடைய மாதிரியாலும் போதனையாலும்தான் அவர்களு டைய பிள்ளைகளின் எதிர்காலம் அதிகமாகத் தீர்மானிக்கப்படு கிறது.தீஇவ 245.1

    தேவதன்மையைத் தங்கள் வாழ்வில் பிரதிபலிக்கும் பெற் றோர் சந்தோஷவான்கள். தேவ வாக்குத்தத்தங்களும் கட்டளை களும் குழந்தையினுள் நன்றியுணர்வையும் பய பக்தியையும் உண்டாக்கும்படி அது செய்யும்; பெற்றோரிடம் காணப்படும் கனி வும் நீதியும் நீடிய சாந்தமும் தேவ அன்பையும் நீதியையும் நீடிய சாந் தத்தையும் குழந்தைக்கு விளங்கப்பண்ணும். எனவே, தங்களுக்குக் கீழ்ப்படியுமாறும் தங்களை நம்புமாறும் தங்களிடம் அன்பு காட்டு மாறும் அவர்கள் குழந்தைக்குப் போதிக்கும்போது, பரலோகப் பிதாவை நம்புமாறும் அவர்மேல் அன்பு காட்டுமாறும் அவருக்குக் கீழ்ப்படியுமாறும் போதிக்கிறார்கள். அத்தகைய ஈவைத் தங்கள் குழந்தைக்குக் கொடுக்கும் பெற்றோர் சகலயுகங்களின் சொத் தைக்காட்டிலும் விலையுயர்ந்த பொக்கிஷத்தை அருளுகிறார்கள். அது நித்திய, நிலையான பொக்கிஷமாகும்.தீஇவ 245.2

    நம் பிள்ளைகள் எத்தகைய சேவை செய்ய அழைக்கப்படுவார் கள் என்பது நமக்குத் தெரியாது. குடும்ப வட்டத்தைச் சுற்றியே அவர்கள் தங்கள் வாழ்வைக் கழிக்கலாம்; சாதாரண தொழில்களில் அவர்கள் ஈடுபடலாம்; அஞ்ஞான தேசங்களில் சுவிசேஷத்தைப் போதிக்கலாம்; எதுவானாலும், நற்செய்தியாளர்களாக, உலகிற் கான கிருபையின் ஊழியர்களாகப் பணிபுரிய வேண்டும். அதற் காக, கிறிஸ்துவின் பக்கம் நின்று சுயநலமற்ற சேவை செய்ய உதவும் வகையில் அவர்கள் கல்வி பெறவேண்டும்.தீஇவ 245.3

    அந்த எபிரெயப் பெண்ணின் பெற்றோர், தேவனைப்பற்றி அவளுக்குப் போதித்தபோது, அவளுக்கு அமையவிருந்த எதிர் காலம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் தங்கள் பொறுப்பில் அவர்கள் உண்மையோடிருந்தனர். எந்த தேவனைக் கனம் பண்ண வேண்டுமென்று கற்றிருந்தாளோ, அந்தத் தேவனைப்பற்றி, சீரியப் படைத் தலைவனுடைய வீட்டில் அவள் சாட்சி பகர்ந்தாள்.தீஇவ 246.1

    அந்த வேலைக்காரப் பெண் தன் எஜமானியிடம் சொன்ன வார்த்தைகளை நாகமான் கேள்விப்பட்டான். ராஜாவிடம் அனுமதி பெற்று, ‘பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறை பொன்னையும் பத்து மாற்றுவஸ்திரங்களையும் தன்னோடு எடுத்துக் கொண்டு, தன் வியாதியிலிருந்து குணம் பெறுவதற்காகச் சென்றான். சீரியாவின் ராஜாவிடமிருந்து இஸ்ரவேலின் ராஜாவுக்கு ஒரு நிருபத்தையும் அவன் கொண்டு சென்றான். அதில் பின்வரும் செய்தி எழுதப்பட்டிருந்தது. என் ஊழியக்காரனாகிய நாகமானின் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கி றேன்.” இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, ‘’தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு : ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிட வேண்டும் என்று, அவன் என் னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனோ? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்’‘ என்றான்.தீஇவ 246.2

    இந்தச் செய்தியை அறிந்தான் எலிசா. ‘’நீர் உம்முடைய வஸ் திரங்களைக் கிழித்துக் கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள் எட்டும்” என்று ராஜாவினிடத்திற்குச் சொல்லியனுப்பினான்.தீஇவ 246.3

    அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோ டும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். தீர்க்கதரிசியோ, அவனிடத்தில் ஓர் ஆளை அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழு தரம் ஸ்நானம் பண்ணு. அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமா வாய்” என்று சொல்லச் சொன்னான்.தீஇவ 246.4

    வானத்திலிருந்து தனக்காகச் சிலவல்லமையான அற்புதங்கள் வெளிப்படக்கூடும் என எதிர்பார்த்திருந்தான் நாகமான். ‘’அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்தீஇவ 246.5

    என் தேவனாகிய கர்த்தாவே, உம்மைநோக்கிக் கூப்பிட்டேன்,
    என்னை நீர் குணமாக்கினீர். கர்த்தருடைய பரிசுத்தவான்களே,
    அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின்
    நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
    அவருடைய கோபம் ஒரு நிமிஷம்,
    அவருடைய தயவோ நீடிய வாழ்வு.
    தீஇவ 248.1

    சங்கீதம் 30:1, 4, 5. குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந் தேன்’ என்றான். யோர்தானில் ஸ்நானம் பண்ணுமாறு சொன்னது, அவனுடைய அந்தஸ்துக்குச் சவால்விடக் கூடியதாய் இருந்தது. எனவேதான், ஏமாற்றத்தால் குறுகினவராய் ‘நான்ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப் பார்க் கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல் லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.’

    நாகமானின் அகங்கார ஆவியானது, எலிசாவால் குறிக்கப் பட்ட மார்க்கத்தைப் பின்பற்ற மறுத்து, கலகம் செய்தது. சீரிய படைத்தலைவனால் குறிப்பிடப் பட்ட ஆறுகள், மரத்தோப்புச் சூழப் பொலிவுடன் காணப்பட்டவை. அநேகர் தங்கள் சிலைத் தெய்வங்களை வழிபடுவதற்காக இந்த ஆறுகளின் கரைகளுக்குக் கூட்டங்கூட்டமாகச் செல்வதுண்டு. அந்த ஆறுகளில் ஒன்றில் ஸ்நானம் பண்ணச் சொல்லியிருந்தால், தான் சிறுமைப்படுத்தப் பட்டதாக உணர்ந்திருக்க மாட்டான் நாகமான். ஆனால், தீர்க்கதரிசி சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றுவதுமாத்திரமே அவன் குண மடைகிற வழியாயிருந்தது. விருப்பத்தோடு கீழ்ப்படிவது மாத் திரமே எதிர்பார்த்த விளைவைக் கொண்டு வருகிறதாயிருந்தது.தீஇவ 249.1

    எலிசா சொன்னபடி செய்யுமாறு நாகமானின் ஊழியக்காரர் அவனிடம் வேண்டிக்கொண்டனர். ‘’அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ‘ஸ்நானம்பண்ணும் அப்பொழுது சுத்தமாவீர்’ என்று அவர் உம்மோடே சொல்லும்போது அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம்?’‘ என்று வேண்டினர். அகங்காரமானது ஆதிக் கம் செலுத்தப் போராடிய வேளையில், நாகமானின் விசுவாசம் சோதிக்கப்பட்டது. ஆனால், விசுவாசமே வென்றது. இறுமாப்புடன் இருந்த அந்தச் சீரியன் தன்னுடைய இருதயத்தின் அகந்தையை விட்டுவிட்டு, யேகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு அடிபணிந்து வணங்கினான். ‘தேவனுடைய மனுஷன் வார்த்தை யின்படியே அவன் ஏழுதரம் யோர்தானில் முழுகினான். அவனும் டைய விசுவாசம் கனப்படுத்தப்பட்டது. ‘அவன் மாம்சம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி, அவன் சுத்தமானான்.’தீஇவ 249.2

    நன்றியுணர்வோடு, அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவ னுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து இஸ்ரவேலிலிருக்கிற வனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை ஒப்புக்கொண்டான்.தீஇவ 249.3

    அக்கால வழக்கத்தின்படி, விலையுயர்ந்த வெகுமதியை எலி சாவிடம் கொடுத்து, அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண் டான் நாகமான். ஆனால் தீர்க்கதரிசி மறுத்துவிட்டான். தேவன் தம் இரக்கத்தால் அருளிய ஆசீர்வாதத்திற்குக் கிரயம் பெற அவர் விரும்பவில்லை. ‘’நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்” என் றான். அந்தச் சீரியன், ‘வாங்கவேண்டும் என்று அவனை வருந்தி னாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.’தீஇவ 250.1

    ’அப்பொழுது நாகமான், ஆனாலும் இரண்டு கோவேறு கழு தைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல் லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியை யும் செலுத்துவதில்லை . ஒரு காரியத்தைக் கர்த்தர் உமது அடியே னுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம் மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்துரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரி யத்தை கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக” என்றான்.’தீஇவ 250.2

    ’அதற்கு அவன், ‘’சமாதானத்தோடே போ” என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்ச தூரம் போனான்.’தீஇவ 250.3

    தன் எஜமானின் வாழ்க்கைப் பணியில் காணப்பட்ட சுயமறுப் பின் ஆவியை வளர்த்துக்கொள்வதற்குப் போதுமான தருணத்தைப் பெற்றிருந்தான் எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி. கர்த்த ருடைய சேனையில் உண்மையுள்ளவனாகக் கொடி பிடிக்கும் சிலாக்கியம் அவனுக்குக் கிடைத்திருந்தது. பரலோகத்தின் மிகச் சிறந்த ஈவுகள் வெகுகாலமாக அவனுக்கு அருகாமையிலேயே இருந்தன. அதனை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாகக் கீழ்த்தரமான உலகச் சம் பத்தை இச்சித்தான். இப்பொழுதும், அவனுக்குள்ளாக மறைந்திருந்த பேராசை ஆவியானது கட்டுக்கடங்காபாவத்தூண்டு தலுக்கு அவனை வழிநடத்தியது: ‘அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகி லும் வாங்குவேன்’ என்று தனக்குள்ளாகக் காரணம் கற்பித்துக் கொண்டான். எனவே இரகசியமாக, ‘நாகமானைப் பின்தொடர்ந் தான்’ கேயாசி.தீஇவ 250.4

    ’அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து, ‘’சுக செய்தியா?’‘ என்று கேட்டான்’ அப்பொழுது, துணிகரமான பொய் சொன்னான் கேயாசி. தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியை யும் இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார்” என்றான். நாகமான் அந்த வேண்டுகோளைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான்; ஒரு தாலந் திற்குப் பதிலாக இரண்டு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்று வஸ்திரங்களையும் வாங்கிக்கொள்ளுமாறு கேயாசியைவற்புறுத்தி, அந்தப் பொக்கிஷத்தைச் சுமந்து செல்லுமாறு தன் வேலைக்காரர் களுக்குக் கட்டளையிட்டான்.தீஇவ 251.1

    எலிசாவின் வீட்டை நெருங்கியதும், வேலைக்காரர்களை அனுப்பிவிட்டு, வெள்ளியையும் வஸ்திரங்களையும் ஒளித்துவைத் தான் கேயாசி. இதனைச் செய்து முடித்து, அவன் உள்ளே போய் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான். மேலும், அந்தக் குற்றத்தி லிருந்து தன்னை மறைப்பதற்காக, இரண்டாவதாக ஒரு பொய்யைச் சொன்னான். ‘’எங்கேயிருந்து வந்தாய்?’‘ என்று தீர்க்கதரிசி கேட்ட தற்கு, ‘’உமது அடியான் எங்கும் போகவில்லை ‘‘ என்றான் கேயாசி.தீஇவ 251.2

    எலிசா சகலத்தையும் அறிந்திருந்தார் என்பதை அதன் பிறகு பிறந்த கடுமையான கண்டனம் சுட்டிக்காட்டியது. அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்பு கிறபோது என் மனம் உன்னுடன் கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத் தோப்பு களையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடு மாடுகளையும், வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும்’‘ என்றார் எலிசா . பாவம் செய்த அந்நேரத்திலேயே அவனுக்குத் தண்டனை கிடைத்தது. அவன் ‘உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி’ எலிசாவின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.தீஇவ 251.3

    உன்னதமும் பரிசுத்தமுமான சிலாக்கியங்களைப் பெற்றிருந்த ஒருவரின் இந்த அனுபவம் மேன்மையான பாடங்களைப் போதிக் கிறது. கேயாசியின் நடவடிக்கை நாகமானின் பாதையில் வைக்கப் பட்ட இடறுதலின் கல்போலக் காணப்படுகிறது. ஏனெனில், அவ ருடைய மனதில் ஓர் அற்புத ஒளி பிரகாசித்திருந்தது; ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பதற்கு ஏதுவாக அவன் மாறியிருந்தான். எனவே தான், கேயாசியின் வஞ்சகச் செயலுக்கு அவன் எவ்விதச் சாக்குப் போக்கும் சொல்ல இடமில்லாதிருந்தது. அவன் தேவனால் சபிக் கப்பட்டவனாக, தன் சகமனிதரால் ஒதுக்கப்பட்டவனாக, தான் சாகுமட்டும் ஒரு குஷ்டரோகியாகவே இருந்தான்.தீஇவ 252.1

    ’பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத்தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை . ‘நீதி 19:5. மனித கண்களுக்கு மறை வாகத் தீய செயல்கள் புரிய மனிதர் எண்ணலாம். ஆனால், அவர் களால் தேவனை ஏமாற்ற முடியாது. ‘சகலமும் அவருடைய கண் களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். ‘எபிரெயர் 4:13. எலிசாவை ஏமாற்ற நினைத்தான் கேயாசி. ஆனால், நாகமானோடு கேயாசி பேசின் வார்த்தைகளையும் இருவருக்குமிடையே நடை பெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தேவன் தமது தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தினார்.தீஇவ 252.2

    சத்தியம் தேவனுடையது; வஞ்சகமும் அதன் சகலவகைகளும் சாத்தானுடையவை. சத்தியத்தின் நேர்பாதையிலிருந்து எவ்விதத்தி லாவது பின்வாங்குகிற எவனும் துன்மார்க்கனின் வல்லமைக்குத் தன்னை விற்றுப்போடுகிறான். கிறிஸ்துவிடமிருந்து கற்றுக்கொண்ட வர்கள், ‘கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படார்கள்.’ எபேசியர் 5:11. வாயிலே கபடம் காணப்படாத பரிசுத்தவான் களோடு அந்நியோந்யமாக வாழ்வதற்கு அவர்கள் ஆயத்தமாவ தால், தங்கள் சொல்லிலும் வாழ்விலும் எளிமையாகவும் நேர்மை யாகவும் உண்மையாகவும் அவர்கள் இருப்பார்கள். வெளி 14:5.தீஇவ 252.3

    சரீர குணமடைந்து, ஆவியில் மாற்றம் பெற்று தன்னுடைய தேசமான சீரியாவிற்கு நாகமான் திரும்பிச் சென்றான். அதன்பிறகு, பல நூற்றாண்டுகள் கழித்து, அவனுடைய அற்புத விசுவாசத்தைப் பற்றி நம் இரட்சகர் குறிப்பிட்டுப் பேசினார். தேவனைச் சேவிப் பதாகச் சொல்லிக்கொள்ளும் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட் டாக அதைக்குறிப்பிட்டுப் பாராட்டினார் நம் இரட்சகர். ‘’எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப் படவில்லை ‘‘ என்றார் இரட்சகர். லூக்கா 4:27. இஸ்ரவேலிலிருந்த அநேகக் குஷ்டரோகிகளின் அவநம்பிக்கையால் நன்மைக்கேது வான வாசல் அவர்களுக்கு அடைக்கப்பட்டிருந்தது; தேவனால் அவர்களைக் குணமாக்க முடியவில்லை . யூதனல்லாத பிரபு ஒரு வன், நீதியென்று தனக்கு உணர்த்தப்பட்டவைகளில் உண்மையா யிருந்தான்; தனக்கு உதவி தேவை என்பதை உணர்ந்தான். எனவே, தேவனால் அருளப்பட்டிருந்த சிலாக்கியங்களை அவமதித்து, புறக்கணித்த இஸ்ரவேலின் பிணியாளிகளைக் காட்டிலும் அந்தப் பிரபு, தேவனுடைய பார்வையில் அவருடைய ஆசீர்வாதத்திற்கு அதிக தகுதியுள்ளவனாகக் காணப்பட்டான். தேவனுடைய தயவு களைக் கண்டுகொண்டு, பரலோகத்திலிருந்து தங்களுக்கு அருளப் படும் வெளிச்சத்திற்கு இணங்குபவர்களே தேவ கிரியைக்குப் பாத் திரவான்களாவார்கள்.தீஇவ 252.4

    இருதயத்தில் உண்மையுள்ளவர்கள் இன்றும் ஒவ்வொரு தேச த்திலும் இருக்கின்றனர். இவர்கள்மேல் பரலோக ஒளி பிரகாசிக் கிறது. அவர்கள் தங்களுடைய கடமையை அறிந்து, அதனை உண் மையோடு பின்பற்றுவதைத் தொடர்வார்களானால் முற்கால நாக மானைப் போல, ‘சிருஷ்டிகராகிய ஜீவனுள்ள தேவனைத் தவிர ‘பூமியெங்கும் வேறேதேவன் இல்லை’ என்று நிச்சயம் ஒத்துக்கொள் வார்கள்.தீஇவ 253.1

    ’வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிற’ ஒவ்வொரு ஆத்துமாவுக்கும், கர்த்தருடைய நாமத்தை நம்பி, தேவனைச் சார்ந்து கொள்’ எனும் அழைப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. ‘தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரே யல்லாமல் உலகத்தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கேட்டது மில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டது மில்லை. மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர். ஏசாயா 50:10; 64:4, 5.தீஇவ 253.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents