Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    25 - ஏசாயாவின் அழைப்பு

    கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு சாலொமோன் மரித்தது முதல் எந்தவொரு ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு உசியாவின் நீண்டகால ஆட்சி அதிக செழிப்புடையதாகக் காணப்பட் டது. இவன் அசரியா என்றும் அழைக்கப்படுகிறான். அநேக வரு டங்களாக விவேகத்தோடு ஆட்சிபுரிந்தான் அசரியா. முந்தைய காலங்களில் தாங்கள் இழந்திருந்த சில பகுதிகளைப் பரலோக ஆசீர்வாதத்தின்கீழ் அவருடைய படைகள் மீண்டுமாகக் கைப்பற் றின. நகரங்கள் மீண்டுமாகக் கட்டப்பட்டு, கோட்டை கொத்தளங் கள் அமைக்கப்பட்டன. சுற்றிலுமிருந்த ஜனங்களுக்குள்ளே மிகவும் பெலப்படுத்தப்பட்ட தேசமாக அது விளங்கியது. மீண்டும் வர்த்தகம் கொடிகட்டிப் பறந்தது. அதனால், எருசலேமில் அதிக பணம் கொழித் தது. உசியாவின் பெயர், ‘வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படு மட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அது அனுகூலமுண்டாயிற்று.’ 2நாளா 26:15.தீஇவ 303.1

    ஆனாலும், இந்த வெளிப்புறச் செழிப்புக்கு இணையாக ஆவிக்குரிய வளர்ச்சியில் எழுச்சி ஏற்படவில்லை. முந்தையக் காலங்களில் இருந்தது போலவே ஆலய ஆராதனைகள் நடந்து வந்தன. ஜீவனுள்ள தேவனைத் தொழுது கொள்ள ஏராளமானோர் ஒன்றுதிரண்டார்கள்; ஆனால், தாழ்மையும் உண்மையும் இருக்க வேண்டிய இடத்தைப் பெருமையும் சம்பிரதாயமும் படிப்படியாகப் பிடித்துக்கொண்டன. உசியாவைப் பற்றி, அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமை யாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய் தான்’ என்று எழுதப்பட்டுள்ளது. வச. 16.தீஇவ 303.2

    உசியாவின் துணிகரம் எனும் பாவம்தான் அவனுக்குப் பேரழிவாக அமைந்தது. ‘ஆரோனின் வம்சத்தாரைத் தவிர வேறெ வரும் ஆசாரியர்களாகப் பணிபுரியக் கூடாது’ என்ற யேகோவா வின் தெளிவான கட்டளையை மீறும் விதத்தில், பலிபீடத்தின்மேல் தூபங்காட்ட ஆலயத்திற்குள் பிரவேசித்தான் மன்னன். அவ்வாறு அவன் செய்ய நினைத்ததை விட்டுவிடுமாறு பிரதான ஆசாரியனா கிய அசரியாவும் அவனுடைய கூட்டாளிகளும் எதிர்த்தார்கள்; அவனிடம் வேண்டிக்கொண்டனர். ‘’மீறுதல் செய்தீர்; இது உமக்கு மேன்மையாக லபியாது’‘ என்று வற்புறுத்தினர். வச 16, 18.தீஇவ 304.1

    இராஜாவாகிய தன்னை அவ்வாறு கண்டித்ததால் உக்கிரங் கொண்டான் உசியா. ஆனால், தேவனுடைய ஆலயப் பொறுப்பி லிருந்தோரின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி, தேவாலயத்தைத் தீட்டுப்படுத்த அவன் அனுமதிக்கப்படவில்லை. கோபமும் கல கமும் கொண்டு அவன் அங்கு நின்றிருந்தபோதே, தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டான்; அந்நேரமே அடிக்கப்பட்டான். அவ னுடைய நெற்றியில் குஷ்டரோகம் தோன்றிற்று. துக்கத்தோடு அங் கிருந்து வெளியேறினான்; அதன்பிறகு அவன் ஆலயப் பிராகாரங் களில் பிரவேசிக்கவே இல்லை. சில வருடங்களுக்குப் பிறகு அவன் மரித்தான். அதுமட்டும் குஷ்டரோகியாகவே வாழ்ந்த உசியா, ‘கர்த்தர் சொல்கிறார்’ எனும் தெளிவான காரியத்திலிருந்து விலகு வதின் மூடத்தனத்திற்கு ஒரு சாட்சியாகத் திகழ்ந்தான். தன்னுடைய ஆட்சியின் இறுதியில் சீர்கெட்டு, துணிகரமாகப் பரலோக நியா யத்தீர்ப்பைத் தன்மேல் வருவித்துக் கொண்டதற்கு தன்னுடைய மேன்மையான நிலையையோ, நீண்ட காலச்சேவையையோ ஒரு சாக்காகக் காட்டக்கூட அவனால் முடியவில்லை.தீஇவ 304.2

    தேவன் ஆளைப்பார்த்து மதிப்பிடுபவர் அல்லர். ‘’அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனா வது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக் கிறான்: அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டு போகவேண்டும்.” எண்ணாகமம் 15:30.தீஇவ 304.3

    உசியாவிற்கு வழங்கப் பட்ட நியாயத்தீர்ப்பு, கட்டுப்பாடு உண்டாக்கக்கூடிய ஒரு தாக்கத்தை அவனுடைய குமாரனில் ஏற் படுத்தியிருக்க வேண்டும். தன் தந்தையினுடைய ஆளுகையின் இறுதிக்கட்டத்தில் அதிக பொறுப்புகளைச் சுமந்த யோதாம் தன் தந்தையாகிய உசியாவின் மரணத்திற்குப் பிறகு ராஜாவானான். யோதாமைக் குறித்து, அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையா னதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான். மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின் மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்’ என்று எழுதப்பட்டுள்ளது. 2இராஜாக்கள் 15:34, 35தீஇவ 305.1

    உசியாவின் ஆட்சி முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. தேசத்தின் பாரமான பொறுப்புகளை ஏற்கனவே சுமக்க ஆரம்பித் திருந்தான் யோதாம். அப்போதுதான், அரசவம்சத்திலிருந்து ஒரு வாலிபனாக தீர்க்கதரிசன ஊழியத்திற்காக அழைக்கப்பட்டான் ஏசாயா. ஏசாயா ஊழியம் செய்யவேண்டியிருந்த காலக்கட்டமானது, தேவமக்களுக்குப் பேரழிவு ஏற்படப்போகிற காலமாக இருந்தது. வடஇஸ்ரவேல் மற்றும் சீரியாவின் கூட்டணிப் படைகள் யூதாவின் மேல் படையெடுப்பதையும், ராஜ்யத்தின் பிரதான நகரங்களை அசீரியச் சேனைகள் முற்றுகையிடுவதையும் தீர்க்கதரிசி காண வேண்டியிருந்தது. அவனுடைய வாழ்நாளில், சமாரியா வீழ்ச்சிய டைய இருந்தது; இஸ்ரவேலின் பத்துக் கோத்திரத்தார் ஜாதிகளின் மத்தியில் சிதறிப்போக இருந்தார்கள். அசீரியச் சேனைகள் மீண் டும் மீண்டும் யூதாவின்மேல் படையெடுக்க இருந்தன. மேலும், தேவன் மாத்திரம் அற்புதமாகத் தலையிட்டிருக்காவிட்டால் எரு சலேமுக்கு அழிவாக அமைந்திருக்கும் ஒரு முற்றுகையை அது சந் திக்க வேண்டியிருந்தது. தென் தேசத்தின் சமாதானத்தைக் கொடிய ஆபத்துகள் ஏற்கனவே அச்சுறுத்திக் கொண்டிருந்தன. தேவனு டைய பாதுகாப்பு விலக்கப்பட்டுக் கொண்டிருந்தது, அசீரியப் படைகள் யூதா தேசமெங்கும் ஊடுருவ இருந்தன.தீஇவ 305.2

    வெளியிலிருந்து வந்த ஆபத்துக்கள் மூழ்கடித்து விடும் போல் தோன்றினாலும், உள்ளிருந்த ஆபத்துக்களைவிட அவை மோசமா னவைகளாக இருக்கவில்லை. கர்த்தருடைய ஜனங்களின் மாறு பாடுதான் அவனுடைய ஊழியக்காரனுக்கு மிகுந்த குழப்பத்தை யும் அதிக சோர்வையும் கொண்டுவந்தது. ஜாதிகளுக்குள்ளே வெளிச்சம் தருகிறவர்களாய் நிற்கவேண்டியவர்கள் தங்கள் அவ பக்தியாலும் கலகத்தாலும் தேவநியாயத்தீர்ப்பை வரவழைத்துக் கொண்டிருந்தனர். வடராஜ்யத்தை வேகமாக அழிவுக்குள்ளாகக் கொண்டு சென்றதும், ஆமோஸ் மற்றும் ஓசியாவால் தெளிவாகக் கடிந்துகொள்ளப்பட்டதுமான அநேக பாவங்கள் யூதராஜ்யத்தை வேகமாகச் சீர்கெடுத்துக் கொண்டிருந்தன.தீஇவ 305.3

    ஜனங்களின் சமுதாய நிலை மிகவும் வருத்தகரமானதாகத் தோன்றியது. மனிதர் ஆதாயத்தை நாடினவர்களாய், வீடுகள் மேல் வீடுகளையும் வயல்கள்மேல்வயல்களையும் சேர்த்துக்கொண்டிருந் தார்கள். பார்க்கவும்: ஏசாயா 5:8. நீதியைப் புரட்டினார்கள்; ஏழை களுக்கு இரக்கம் காட்டவில்லை . அந்தத் தீமைகளைக் குறித்து, ‘’சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடு களில் இருக்கிறது. நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையான வர்களின் முகத்தை நெரிக்கிறீர்கள்” என்றார் தேவன். ஏசா 3:14, 15. திக்கற்றோரைப் பாதுகாக்கவேண்டிய நியாயாஸ்திரிகள்கூட ஏழை எளியோரின் கூப்பிடுதலுக்கும், விதவைகள் மற்றும் திக்கற்ற பிள்ளைகளின் கூப்பிடுதலுக்கும் தங்கள் செவியை அடைத்துக் கொண்டார்கள். பார்க்கவும்: ஏசாயா 10:1,2.தீஇவ 306.1

    அநீதியும் செல்வமும் பெருகினதால் அகந்தையும் பகட்டும் குடிப்பழக்கமும் கலக ஆவியும் பெருகின. பார்க்கவும்: ஏசா2:11,12; 3:16,18-23; 5:22,11,12. ஏசாயாவின் நாட்களில், சிலைவழிபாடு எவ் வித ஆச்சரியத்திற்கும் இடமின்றி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பார்க்க ஏசா 2:8,9. சகல ஜனங்களுக்குள்ளும் அக்கிரமச் செயல் கள் பெருகியிருந்தன. ஆகவே, தேவனுக்கு உண்மையாயிருந்த வெகு சிலரும் தாங்கள் உறுதியிழக்கும் படித்தூண்டப்பட்டார்கள்; அவர்கள் ஏமாற்றமும் அதைரியமும் கொள்ள அது வழிவகுத்தது. இஸ்ரவேலைக் குறித்த தேவதிட்டம் தோற்றுவிடும் போலத் தெரிந் தது; சோதோம் கொமோராவுக்கு ஏற்பட்ட நிலையே அந்தக் கலகக் காரத் தேசத்திற்கும் ஏற்படும் போலவும் தோன்றியது.தீஇவ 306.2

    உசியாவுடைய ஆளுகையின் கடைசி நாட்களில் நிலவிய இத் தகைய சூழ்நிலையில்தான் தேவனுடைய எச்சரிப்பின் செய்தி யையும், கடிந்துகொள்ளுதலின் செய்தியையும் கொண்டு செல்லுமாறு ஏசாயா அழைக்கப்பட்டான். எனவே, அந்தப் பணியிலிருந்து அவன் அஞ்சிப் பின்வாங்கியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. தான் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்கக்கூடும் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அந்தச் சூழ்நிலையைச் சந்திக்கத் தனக்குத் திராணியில்லை என்று உணர்ந்தான். ஜனங்களின் அவநம்பிக்கை யையும் பிடிவாதத்தையும் குறித்துச் சிந்தித்தான். எனவே, தன் பணி யால் பயனேதும் இல்லை என்று உணர்ந்தான். விரக்தியால் தன் கடமையிலிருந்து விலகி, யூதாவை அதன் சிலைவழிபாட்டிலேயே அவர் விட்டுவிடலாமா? பரலோகத்தின் தேவனுக்கு எதிராக நினி வே யின் தெய்வங்கள் பூமியை ஆளவேண்டுமா?தீஇவ 306.3

    தேவாலயத்தாழ்வாரத்தின் கீழ் நின்றிருந்தபோது, இத்தகைய நினைவுகள் ஏசாயாவின் மனதை ஆக்கிரமித்திருந்தன. தேவா லயக் கதவும் உள்ளிருந்த திரையும் திடீரென மறைந்தது போன்றோ விலகினதுபோன்றோ தோன்றியது. தன் பாதங்கள் படக்கூடாத இடத்தில், பரிசுத்தருக்கெல்லாம் பரிசுத்தரை நோக்கிப் பார்க்க அனுமதிக்கப் பட்டான் தீர்க்கதரிசி. உயரமும் உன்னதமுமான சிங் காசனத்தின்மேல் யேகோவா உட்கார்ந்திருப்பதாகவும் அவருடைய மகிமையான வஸ்திரத்தொங்கலால் பூமி நிறைந்திருப்பதாகவும் அவர்முன் ஒரு தரிசனம் எழுந்தது. சிங்காசனத்தின் இருபுறங்களில் லும் மேலே சேராபீன்கள் பறந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பயபக்தியோடு தங்கள் முகங்களை மூடிக்கொண்டு, தங்களைச் சிருஷ்டித்தவருக்கு முன் பணிவிடை செய்தார்கள். தங்களுடைய சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறையுமட்டும் , சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பூமி யனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது’ என்று பயபக்தியோடு அவரைத் துதித்தார்கள். ஏசா 6:3.தீஇவ 307.1

    தன் ஆண்டவரின் மகிமையையும் மாட்சிமையையும் குறித்த இத்தகைய வெளிப்பாட்டை ஏசாயா கண்டபோது, தேவனுடைய பரிசுத்தம் மற்றும் தூய்மை பற்றிய உணர்வு அவனை நிறைத்தது. சிருஷ்டிகரின் ஈடு இணையற்ற பூரணத்திற்கும், ஏசாயா உட்பட யூதா மற்றும் இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் பாவ மார்க்கத்திற்கும் உள்ள வித்தியாசம்தான் எத்தனை பெரியது!தீஇவ 307.2

    ’’ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன் ; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே” என் றான். வச. 5. பரிசுத்த ஸ்தலத்தினுள், தெய்வீக பிரசன்னத்தின் முழு வெளிச்சத்தில் நிற்பது போல நின்று கொண்டிருந்தவர், ‘குறைகளும் பெலவீனமும் உள்ளவனாய், தான் அப்படியே விடப்பட்டால், தான் அழைக்கப்பட்ட பணியைத் தன்னால் கொஞ்சங்கூட நிறைவேற்ற இயலாது’ என்பதை உணர்ந்தான். ஆனால், அவனுடைய இக்கட் டிலிருந்து அவனைத் தேற்றவும் அந்த மாபெரும் பணிக்கு அவனைத் தகுதிப்படுத்தவும் ஒரு சேராபீம் அனுப்பப்பட்டான். பலிபீடத்தி லிருந்து எடுக்கப்பட்ட ஒரு நெருப்புத்தழல் அவனுடைய உதடு களின்மேல்வைக்கப்பட்டு, ‘இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதி னால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது’ என்று சொல்லப்பட்டது. பிறகு, ‘’யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்” என்று உரைக்கிற ஆண்டவருடைய சத் தம் கேட்டது. இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப் பும்” என்றான் ஏசாயா. வச 7,8.தீஇவ 307.3

    பரலோகத்திலிருந்து வந்திருந்தவர் அந்த ஊழியனிடம்,
    ‘’நீ போய், இந்த ஜனங்களை நோக்கி,
    ’நீங்கள் காதாரக்கேட்டும் உணராமலும்,
    கண்ணாரக் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
    இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும்,
    தங்கள் காதுகளினால் கேளாமலும்,
    தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும்,
    நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க,
    நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி,
    அவர்கள் கண்களை மூடிப்போடு’ என்றார்.
    தீஇவ 308.1

    வசனங்க ள் 9, 10,.

    தீர்க்கதரிசியின் வேலை இதுதான்; காணப்பட்ட தீமைகளுக்கு எதிராகத் தன் சத்தத்தை உயர்த்த வேண்டும். ஆனால், நம்பிக்கை யின் நிச்சயத்தைப் பெறாமல் அவன் தன் பணியில் இறங்க அஞ்சி னான். ‘’ஆண்டவரே, எதுவரைக்கும்?’‘ என்றான். வச.11. ‘தெரிந்து கொள்ளப்பட்ட உம் ஜனங்களில் எவருமே அறிவடைந்து, மனந் திரும்பி, குணப்படமாட்டார்களா?’ என்பதுபோல் அவன் கேள்வி இருந்தது.தீஇவ 308.2

    பாவத்தில் கிடந்த யூதாவின் மேல் அவன் வைத்திருந்த ஆத்தும் பாரம் விருதாவாக இருக்கவில்லை . அவனுடைய ஊழியம் முற்றிலும் பலன் தராமல் போகக்கூடியதாகவும் இருக்கவில்லை . ஆனாலும், அநேகந்தலைமுறைகளாகப் பெருகிவந்த தீமைகளை அவனுடைய நாட்களில் விலக்கிவிட முடியாது. தன்னுடைய வாழ் நாள் முழுவதிலும் பொறுமையும் துணிவும் மிக்க ஒரு போதகனா கவும், நம்பிக்கையைப் பற்றி மட்டுமல்ல, அழிவைப் பற்றியும் சொல்லும் ஒரு தீர்க்கதரிசியாக அவன் இருக்க வேண்டியிருந்தது. அவனுடைய முயற்சியாலும் தேவனுடைய உண்மையுள்ள பிற ஊழி யர்களின் பிரயாசத்தாலும் நிகழ வேண்டிய அனைத்தையும் தேவ னுடைய உறுதிப்பாடு நிறைவேற்றியது. மீதமான ஒரு கூட்டம் காப் பாற்றப்பட வேண்டும். இது நிறைவேறும்படியாக, எச்சரிப்பின் செய்திகளும் வேண்டுதலின் செய்திகளும் அந்தக் கலகக்காரத் தேசத்தாருக்கு அறிவிக்கப் படவேண்டும். அதற்காகப் பின் வரும் மாறு சொன்னார் தேவன்:தீஇவ 308.3

    “பட்டணங்கள் குடியில்லாமலும்,
    வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி,
    பூமி அவாந்தரவெளியாகி,
    கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால்,
    தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும்.”
    தீஇவ 309.1

    ஏசாயா 6:11,12.

    போர், நாடுகடத்தல் , அநீதி இழைக்கப்படுதல், தேசங்களுக் குள்ளே அதிகாரத்தையும் அந்தஸ்தையும் இழந்து போகுதல் போன்ற பரலோக நியாயத்தீர்ப்புகள் மனந்திருந்தாதவர்கள் மேல் விழ இருந்தன. புண்பட்ட தேவனின் இரக்கமிக்ககரங்கள் தங்களில் கிரியை செய்ததை உணர்ந்தவர்கள் மனந்திரும்புதலுக்குள் வழிநடத் தப்படும்படியாக இவையாவும் சம்பவிக்க இருந்தன. வட ராஜ்யத் தின் பத்துக் கோத்திரத்தாரும் தேசங்களுக்குள்ளே விரைவில் சிதற டிக்கப்பட இருந்தனர்; அவர்களது பட்டணங்கள் பாழாக்கப்பட இருந்தன; எதிரி நாட்டவரின் போர்ப்படைகள் மீண்டும் மீண்டும் அவர்களுடைய தேசத்தை வாரிக்கொள்ள இருந்தன; இறுதியில் எரு சலேமும் விழ இருந்தது. யூதா சிறைப்பட்டுப்போக இருந்தது. ஆனாலும், வாக்குத்தத்த தேசமோ என்றென்றுமாக முற்றிலும் கை விடப்பட்டுப்போக விடப்படவில்லை. பரலோகத்திலிருந்து வந்த வர் ஏசாயாவுக்குப் பின்வரும் நிச்சயத்தைத் தந்தார்.தீஇவ 309.2

    ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும்,
    அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்;
    கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப் போனபின்பு,
    அவைகளின் அடிமரம் இருப்பதுபோல,
    அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும்’
    தீஇவ 309.3

    ஏசாயா 6:13.

    தேவநோக்கத்தின் இறுதி நிறைவேறுதல் குறித்த இந்த நிச்சய மானது, ஏசாயாவின் இருதயத்தில் தைரியத்தைக் கொண்டுவந்தது. பூலோக வல்லமைகள் யூதாவுக்கு எதிராக அணிவகுத்து நின்றால் தான் என்ன? தேவனுடைய ஊழியர் எதிர்ப்பையும் அவமதிப்பை யும் சந்தித்தால்தான் என்ன? சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைக் கண்டான் ஏசாயா. ‘பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந் திருக்கிறது’ எனும் சேராபீன்களின் பாடலை அவன் கேட்டான்; ‘தடம்புரளும் யூதாவுக்கு யேகோவாவின் செய்தி கொடுக்கப்படு வதோடு, அவர்கள் பாவத்தை உணரும்படி பரிசுத்த ஆவியான வரின் வல்லமையும் வழங்கப்படும்’ எனும் வாக்குத்தத்தம் அவ னுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. வச்3. தனக்கு முன்னிருந்த பணி யைச் செய்ய ஊட்டம் பெற்றான் தீர்க்கதரிசி. தன்னுடைய நீண்ட, கடினமான ஊழியம் முழுவதிலும் இந்தத் தரிசனத்தின் நினை வோடே இருந்தான். நம்பிக்கையின் தீர்க்கதரிசியாக, சபையின் வருங்கால வெற்றி குறித்துத் துணிச்சலோடும், இன்னும் அதிகத் துணிவோடும் முன்னறிவித்தான்; அறுபது வருடங் களுக்கும் மேலாக யூதா புத்திரருக்கு ஊழியம் செய்தான்.தீஇவ 310.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents