Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    32 - மனாசேயும் யோசியாவும்

    எசேக்கியாவின் காலம் முழுவதிலும் செழித்தோங்கிய யூதா ராஜ்யம் மனாசேயின் நீண்டகால துன்மார்க்க ஆட்சியில் மீண்டு மாக தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. அஞ்ஞான மார்க் கம் மீண்டும் தலைதூக்கியது; சிலைவழிபாட்டிற்குள் அநேக மக் கள் இழுத்துச் செல்லப்பட்டனர். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப் பண்ணினான். ‘’2நாளாகமம் 33:9. முந்தைய காலங்களிலிருந்த மகிமையான வெளிச்சம் போய், மூடநம்பிக்கை, அக்கிரமம் எனும் இருள் சூழ்ந்தது. நன்மையான யாவுக்கும் எதி ராக பகை, கொடுமை, அநீதி போன்ற கொடும் பாவங்கள் வளர்ந்து, பெருகியிருந்தன.தீஇவ 381.1

    அத்தகைய தீமையான காலங்களிலும் தேவனுக்காகவும் நீதிக் காகவும் நின்ற சாட்சிகள் இல்லாமலில்லை. எசேக்கியாவின் ஆட் சிக்காலத்தில் நன்மைக்கேதுவாக நடந்து முடிந்திருந்த சோதனை யான அனுபவங்கள், உறுதியான குணவலிமையை அநேகரின் இருதயங்களில் ஏற்படுத்தியிருந்தன. இப்போதும், அங்கு நிலவி வந்த அக்கிரமத்திற்கு எதிராக ஓர் அரணாக அவை திகழ்ந்தன. சத் தியத்திற்கும் நீதிக்கும் ஆதரவான அவர்களுடைய சாட்சி மனோசே மற்றும் அவருடைய அதிகாரிகளின் கோபத்தைத் தூண்டிவிட்டது. தங்களுக்கு எதிராகக் குரலெழுப்பின் ஒவ்வொருவரையும் அடக்கி, பாவச் செய்கையில் தங்களை நிலைநிறுத்த அவர்கள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர். ‘’மனாசே எருசலேமை நாலுமூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தை யும் மிகுதியாகச் சிந்தினான். ‘’2 இராஜாக்கள் 21:16.தீஇவ 381.2

    அவர்களால் முதன்முதலில் பலியானவர் ஏசாயாதான். யேகோவாவின் ஊழியனாக ஐம்பது வருடங்களுக்கு மேல் அவர் யூதாவில் இருந்து வந்தார். வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளை யும் கட்டுகளையும் காவலையும் அனுபவித்தார்கள். கல்லெறியுண் டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சை பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத்தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுப் வித்தார்கள். உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலே யும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.’‘ எபிரெயர் 11:36-38.தீஇவ 382.1

    மனாசேயின் ஆட்சிக்காலத்தில் உபத்திரவமடைந்தவர்களில் சிலர், நீதியையும் கண்டிப்பையும் குறித்த ஒரு விசேஷித்த செய்தி யைக் கொண்டிருந்தவர்களாயிருந்தனர். யூதாவின் ராஜா தனக்கு முன்னிருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் அருவருப்புகளைச் செய் தான்” என்கின்றனர் தீர்க்கதரிசிகள். இந்த அருவருப்புகளின் நிமித் தம், அவருடைய ராஜ்யம் ஓர் இக்கட்டான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது; அந்தத் தேசத்தின் குடிகள் சீக்கிரத்தில் பாபிலோ னுக்குச் சிறைப்பட்டுப்போக இருந்தனர். அங்கு அவர்கள் தங்கள் ‘’பகைஞருக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாய்ப் போக விருந்தார்கள். 2 இராஜாக்கள் 21:11,15. ஆனால் ஓர் அந்நிய தேசத் திலும் போய்த் தம்மைத் தங்களுடைய ராஜாவாகத் தெரிந்துகொள் கிறவர்களை முற்றிலும் கைவிடாதிருக்கச் சித்தங்கொண்டார் ஆண்டவர். அவர்கள் பெரும் வியாகுலமடைந்தாலும், தாம் முன் குறித்த காலத்திலும் விதத்திலும் அவர்களை விடுவிக்க இருந்தார் தேவன். அவரில் முழு நம்பிக்கை கொள்கிறவர்கள் ஓர் உறுதியான அடைக்கலத்தைக் கண்டடைவார்கள்.தீஇவ 382.2

    தீர்க்கதரிசிகள் நம்பிக்கை தரும் செய்திகளோடு எச்சரிப்புகளை யும் அறிவுரைகளையும் சொல்லிவந்தனர்; அவர்கள் பயமின்றி மனாசேயையும் அவனுடைய மக்களையும் அறிவுறுத்தினார்கள்; ஆனால், அந்தச் செய்திகள் அவமதிக்கப்பட்டன; சீர்கெட்ட யூதா செவிசாய்க்க விரும்பவில்லை. மனந்திருந்தாத நிலையிலேயே மக்கள் தொடர்ந்து நீடித்தால், அவர்களுக்கு என்ன நேரிடும் என் பதற்கு அறிகுறியாக, அசீரிய வீரர்களின் படை அவர்களுடைய ராஜாவைக் கைது செய்ய ஆண்டவர் அனுமதித்தார். அவர்கள் அவனை ‘முட்செடிகளில் பிடித்து தங்கள் தற்காலிகத் தலைநகர மான பாபிலோனுக்குக் கொண்டு சென்றார்கள். இத்தகைய வேத னையால் உணர்வடைந்தான் ராஜா. அவன் தன் தேவனாகிய கர்த் தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிக வும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப் பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமி லுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். ‘’நாளாகமம் 33:11-13. ஆனால், இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், பல வருடச் சிலைவழிபாட்டால் உண்டான மோசமான செல்வாக்கிலி ருந்து ராஜ்யத்தைக் காப்பாற்ற காலம் தவறிப்போய்விட்டது. மீண் டும் எழும்பவே முடியாத அளவிற்கு அநேகர் நிலைதடுமாறி, விழுந்துகிடந்தனர்.தீஇவ 383.1

    மனாசேயின் கொடிய அவபக்தியால், மீண்டும் எழமுடியாத அளவிற்கு வாழ்க்கையில் விழுந்து போனவர்களில் அவருடைய சொந்த மகனும் உண்டு. ஆமோன் தன் இருபத்திரெண்டாவது வய தில் சிங்காசனம் ஏறினார். அந்த ராஜாவைப்பற்றி இப்படியாக எழு தப்பட்டுள்ளது. ‘தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவை களைப் பணிந்துகொண்டு, கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான்’. 2 இராஜாக் கள் 21:21, 22. ‘’தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக் கொண்டது போல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பா கத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந் தான். ‘’அந்தத் துன்மார்க்க மன்னனின் ஆட்சி அதிக காலம் நீடிக்க வில்லை . அவன் சிங்காசனம் ஏறி இரண்டு வருடங்கள்தாம் ஆகி யிருந்தன. தன் துணிகரமான அவபக்தியின் மத்தியில், தன் வேலைக் காரர்களாலேயே அரண்மனையில் வைத்துக் கொலை செய்யப்பட் டார். ‘’தேசத்து ஜனங்கள் அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.’‘ 2நாளாகம் 33:23, 25.தீஇவ 383.2

    சிங்காசனம் ஏறினார் யோசியா ராஜா. அவருடைய ஆட்சி முப்பத்தோரு வருடங்கள் நீடிக்க இருந்தது. அவர் ஆட்சிக்கு வந் ததும், ராஜ்யத்தின் கீழான போக்கு தடுத்து நிறுத்தப்பட்டதாகவே தங்கள் விசுவாசத்தைப் பரிசுத்தத்தோடு காத்துக்கொண்டு வந்த வர்கள் நம்பினார்கள். ஏனெனில், அந்த ராஜாவுக்கு எட்டு வயதே ஆன போதிலும், அவர் தேவனுக்குப் பயந்தார். அவர் ஆரம்பம் முதலே, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் வில காமல் நடந்தான். ‘’2 இராஜாக்கள் 22:2. ஒரு துன்மார்க்கராஜாவுக்கு மகனாகப் பிறந்ததால் தன் தகப்பனுடைய அடிச்சுவடுகளைப் பின் பற்றும்படி பாவத்தூண்டல்களால் அவர் நெருக்கப்பட்டிருக்கலாம், சரியான பாதையில் அவரை ஊக்கப்படுத்தும் ஆலோசகர்கள் சில ரும் இருந்திருக்கக் கூடும். எப்படியாயினும், இஸ்ரவேலின் தேவ னுக்கு உண்மையாயிருந்தார் யோசியா. கடந்தகாலச் சந்ததியாரின் தவறுகளால் எச்சரிக்கப்பட்டு, தன்னுடைய தகப்பனும் தாத்தாவும் விழுந்துகிடந்த மிகவும் மட்டமான பாவத்திலும் சீர்கேட்டிலும் விழு வதைவிட நீதி செய்வதைத் தெரிந்துகொண்டார். அவர், ‘’வலது இடதுபுறம் விலகாமல் நடந்தார்.’’நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு பதவியை வகிக்க இருந்தவராக, இஸ்ரவேலின் அரசர்களுக் குப் போதனையாகக் கொடுக்கப்பட்டிருந்த அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியத் தீர்மானித்தார். கனத்திற்கு ஏற்ற பாத்திரமாக தேவன் அவரைப் பயன்படுத்த அவருடைய கீழ்ப்படிதல் ஏதுவாயிற்று.தீஇவ 384.1

    யோசியா அரசாள ஆரம்பித்ததும், அதற்கு அநேக வருடங்க ளுக்கு முன்னரும், யூதாவிலிருந்த உத்தம் இருதயத்தார் முற்கால இஸ்ரவேலருக்கான தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறை வேறுமா?’‘ என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். தெரிந்து கொள்ளப்பட்ட தேசத்திற்கான தேவநோக்கமானது மனித கண் ணோட்டத்தின்படி, நிறைவேற இயலாததாகவே தோன்றியது. முந்தைய காலங்களின் அவபக்தியானது, நாட்கள் செல்லச் செல்ல பெலம் பெற்று வந்திருந்தது; பத்துக் கோத்திரத்தாரோ அஞ்ஞானி கள் மத்தியில் சிதறுண்டு போயிருந்தனர்; யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தார் மட்டுமே மீதியிருந்தார்கள்; இப்பொழுது இவர்களு டைய தேசத்திலும், தேசத்தின் ஒழுக்க நிலையிலும் சீர்கேடு ஏற் பட்டது போல் தோன்றியது. அவர்களுடைய அழகான நகரம் அழிந்துபோகுமென்று தீர்க்கதரிசிகள் முன்னுரைக்க ஆரம்பித்தனர்; சாலொமோன் கட்டின தேவாலயம் அங்குதான் இருந்தது; தேசத் தின் மேன்மை குறித்த அவர்களுடைய சகல நம்பிக்கைகளும் அங்குதான் இருந்தன. தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு விடு தலைதரும் தம் முடைய உறுதியான நோக்கத்தைவிட்டு தேவன் திரும்ப இருந்தாரோ? நீதிமான்கள் நீண்டகாலம் உபத்திரவம் அடைந்திருக்க, பாவிகள் செழித்ததுபோல் தோன்றின நிலையில், தேவனுக்கு உண்மையாக இருந்தவர்கள் நல்ல காலம் பிறருக்கு மென நம்பிக்கை கொண்டிருந்திருக்கக்கூடுமோ?தீஇவ 384.2

    அதிக கவலை தந்த இத்தகைய கேள்விகளை எழுப்பினார் ஆபகூக் தீர்க்கதரிசி. தன்னுடைய நாட்களிலிருந்த நீதிமான்களின் நிலையைப் பார்த்ததும், தன்னுடைய இருதயப் பாரத்தை இப்படி யாக அவர் வெளிப்படுத்தினார். ‘’கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடு மையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடு வேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கை யும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. ஆகையால், நியாயப் பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற் போகிறது ; துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது. ‘’ஆபகூக் 1:2-4.தீஇவ 385.1

    தமது உண்மைப் பிள்ளைகளின் கூக்குரலுக்குத் தேவன் பதில் கொடுத்தார். அஞ்ஞானிகளின் தெய்வங்களைச் சேவிக்க தம்மை விட்டுத் திரும்பின தேசத்தைச் சிட்சிப்பதில் தாம் உறுதியாயிருந்த தைத் தம் பிரதிநிதிகள் மூலம் வெளிப்படுத்தினார். அக்காலத்தில் எதிர்காலம் பற்றி விசாரித்துக்கொண்டிருந்த சிலரின் வாழ்நாட்களுக் குள்ளாகவே, உலக வல்லரசாகத் திகழ்ந்த தேசங்களின் காரியங் களை மாற்றியமைக்கவும், பாபிலோனி யரை உச்சத்திற்குக் கொண்டுவரவும் தேவன் சித்தங்கொண்டார். ‘’கெடியும் பயங்கர முமான” இந்தக் கல்தேயர்கள், தேவனால் ஏற்படுத்தப்பட்ட சாட் டையாக யூதா தேசத்தின்மேல் சடிதியில் விழ இருந்தனர். வசனம் 7. யூதாவின் பிரபுக்களும் ஜனங்களில் செளந்தரியமானவர்களும் பாபிலோனுக்குச் சிறைப்பட்டு போக இருந்தனர்; யூதேயாவின் பட் டணங்களும் கிராமங்களும் பயிரிடப்பட்ட வயல்களும் பாழாக்கி விடப்பட இருந்தன; ஒன்றும் தப்பக்கூடாதிருந்தது.தீஇவ 385.2

    இந்தக் கொடிய நியாயத்தீர்ப்பின் மத்தியிலும் தேவமக்களுக் கான தேவநோக்கம் ஏதாவது வகையில் நிறைவேறும் என நம்பின வராய் யேகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு அடி பணிந்தார் ஆபகூக்.’’கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவ னும், என் பரிசுத்தருமானவர் அல்லவா?’‘ என்றார். பிறகு, அவ ருடைய விசுவாசம் சமீபித்திருந்த ஆபத்தான சூழ்நிலையையும் விஞ்சி நின்றது; தேவனை நம்பும் பிள்ளைகளுக்கு அவருடைய அன்பை வெளிப்படுத்தும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்ததங் களை உறுதியாகப் பற்றிக்கொண்டவராய், ‘’நாங்கள் சாவதில்லை’‘ என்றார் தீர்க்கதரிசி. வசனம் 12. இத்தகைய விசுவாச அறிக்கை யோடு, தன் கதியையும் இஸ்ரவேலிலிருந்த ஒவ்வொரு விசுவாசி யின் கதியையும் மனதுருக்கமுள்ள தேவனுடைய கரங்களில் அவர் ஒப்படைத்தார்.தீஇவ 386.1

    ஆபகூக்கின் அதிக விசுவாசத்தைச் சோதிக்கும் வகையில் இந்த ஓர் அனுபவம் மாத்திரம் அவருக்கு ஏற்பட்டிருக்கவில்லை . ஒரு சமயம், எதிர்காலம் குறித்து அவர் தியானித்துக்கொண்டிருந்த போது, ‘நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண் டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்வரென்று ... கவனித்துப் பார்ப் பேன்” என்றார். கர்த்தர் கிருபையுடன் அவருக்குப் பதிலளித்தார்; அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக, நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளில் தீர்க்கமாக வரை. குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப் பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல் லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய்வரும், அது தாமதிப்பதில்லை. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவ னுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவா சத்தினாலே நீதிமான் பிழைப்பான்’ என்றார். ஆபகூக் 2:1-4தீஇவ 386.2

    அதிக சோதனையான அந்நாட்களில், சகல நீதிமான்களையும் பரிசுத்தவான்களையும் ஆபகூக்கையும் பெலப்படுத்திய அதே விசுவாசம்தான் இன்றைய தேவ மக்களையும் தாங்கி நடத்தவேண் டும். ஒரு கிறிஸ்தவன், கடும் இருளான நேரங்களிலும் கொடிய ஆபத்தான சூழ்நிலைகளிலும், சகல வெளிச்சத்திற்கும் வல்லமைக் கும் ஆதாரமானவர்மேல் தன் ஆத்துமாவைத் தங்கச் செய்யலாம். தேவனிலுள்ள விசுவாசத்தால் அவனுடைய நம்பிக்கையும் தைரிய மும் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படலாம். தன்னுடைய விசு வாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.’‘ தேவனுடைய சேவையில் எவ்வித பயமோ, தடுமாற்றமோ, சோர்வோ இருக்கத் தேவை யில்லை. அவரில் நம்பிக்கை கொள்வோரின் அதிகபட்ச எதிர்பார்ப்பு களுக்கும் மேலாக தேவன் அவர்களுக்குச் செய்வார். அவர்களு டைய பல்வேறு தேவைகளின்படி, அவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார்.தீஇவ 386.3

    சோதிக்கப்படும் ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் ஆயத்தப்படுத் தப் பட்டுள்ள அபரிதமான முன்னேற்பாடு குறித்துச் சாமர்த்திய மாகச் சாட்சி பகருகிறார் பவுல் அப்போஸ்தலன்: ‘’என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங் கும்.” சோதிக்கப்பட்டுத் தேர்ந்தவரான தேவ ஊழியர் நம்பிக்கை யோடும் நன்றியோடும் இப்படிச் சொல்கிறார்: ‘’அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளனாயிருக்கிறேன்; ஆகை யால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந் தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களி லும் நான் பிரியப்படுகிறேன். ‘’2கொரிந்தியர் 12:9, 10.தீஇவ 387.1

    தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் சாட்சியாக அறிவித்த விசுவாசத்தை நாம் பேணி வளர்க்கவேண்டும். தேவனுடைய வாக் குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டு, அவர் முன் குறித்த காலத்தில், அவர் முன் குறித்த விதத்தில் கிடைக்கும் விடுதலைக் காக காத்திருப்பதே அந்த விசுவாசம். நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து , இராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாக வரும்போதுதான், தீர்க்கதரிசனத்தின் நிச்சயவார்த் தைகள் இறுதியாக நிறைவேறும். அதிக காலம் காத்திருப்பதுபோல் தோன்றலாம். அதைரியமான சூழ்நிலைகளால் ஆத்துமா துன்புற லாம்; நம்பிக்கைக்குப் பாத்திரமான அநேகர் வழியிலே விழுந்து போக நேரிடலாம்; ஆனால், சொல்லமுடியா அவபக்திமிக்க ஒரு காலத்தில் யூதாவை வெகுபிரயாசத்துடன் ஊக்கப்படுத்தின தீர்க்க தரிசியோடு சேர்ந்து, ‘’கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத் தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமா யிருக்கக்கடவது’‘ என்று நாமும் நம்பிக்கையோட சொல்லலாம். ஆபகூக் 2:20. ‘’குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப் பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல் லாது; அதுதாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப் பான்” எனும் சந்தோஷமான செய்தியை நாம் எப்பொழுதும் நினை வில் வைத்திருக்கவேண்டும். வசனங்கள் 3,4.தீஇவ 387.2

    ’கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்
    , வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்;
    கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.

    “தேவன் தேமானிலிருந்தும்,
    பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்,
    அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது;
    அவர் துதியினால் பூமி நிறைந்தது.
    அவருடைய பிரகாசம் சூரியனைப் போலிருந்தது;
    அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின;
    அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.
    அவருக்கு முன்பாகக் கொள்ளை நோய் சென்றது;
    அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
    அவர் நின்று பூமியை அளந்தார்;
    அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்,
    பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது,
    என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது;
    அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.

    “உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும்
    நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்”

    “அத்திமரம் துளிர் விடாமற்போனாலும்,
    திராட்சச் செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும்,
    ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும்,
    வயல்கள் தானியத்தை விளைவியாமற் போனாலும்,
    கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப் போனாலும்,
    தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும்,
    நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்,

    என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
    ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்.”
    தீஇவ 388.1

    ஆபகூக் 3:2-6, 13, 17-19.

    அப்போது அவர்கள்மேல் சம்பவித்திருந்த, நியாயத்தீர்ப்பு குறித்தும், எதிர்கால வெற்றி மற்றும் மகிமையான நம்பிக்கை குறித் தும் ஆபகூக் மாத்திரம் அறிவிக்கவில்லை . வரவிருந்த மகிமையான நம்பிக்கையை எதிர்நோக்குமாறு மெய்யான சபைக்கு அழைப்பு விடுக்கும் படி , யோசியாவின் ஆட்சிக்காலத்தில் செப்பனியாவுக் கும் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. தொடர்ந்து நிலவிவந்த அவபக்தியின் விளைவுகளை அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டி னார். யூதாவின் மேல் சம்பவிக்க இருந்த நியாயத்தீர்ப்புப் பற்றிய அவருடைய தீர்க்கதரிசனங்கள், மனந்திருந்தாத பாவிகள் மேல் இயேசுவின் இரண்டாம் வருகையின்போது சம்பவிக்க இருக்கும் நியாயத்தீர்ப்புகளுக்குச் சரிநிகராயிருந்தன:தீஇவ 389.1

    “கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது;
    அது கிட்டிச் சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது;
    கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப்
    பராக்கிரமசாலி முதலாய்
    அங்கே மனங்கசந்து அலறுவான்.

    “அந்த நாள் உக்கிரத்தின் நாள்,
    அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்,
    அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்,
    அது இருளும் அந்தகாரமுமான நாள்,

    “அது மப்பும் மந்தாரமுமான நாள்.
    அது அரணிப்பான நகரங்களுக்கும்,
    உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக
    எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்’
    தீஇவ 390.1

    செப்பனியா 1:14-16. ‘

    ’மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத் தப்படுத்துவேன்; கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்க மாட் டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம் பண் ணுவார்’. வசனங்கள் 17,18.தீஇவ 390.2

    “விரும்பப்படாத ஜாதியே,
    கட்டளை பிறக்குமுன்னும்,
    பதரைப் போல நாள் பறந்துபோகுமுன்னும்,
    கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்கு முன்னும்,
    கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,
    நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.

    “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே,
    கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே,
    அவரைத் தேடுங்கள்;
    நீதியைத் தேடுங்கள்;
    மனத்தாழ்மையைத் தேடுங்கள்;
    அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே
    மறைக்கப்படுவீர்கள்“.
    தீஇவ 390.3

    செப்பனியா 2:1-3.

    ’’இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின் யாவ ரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்ட வனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண் டாகச் செய்வேன். அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன் ; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்வேன்; உங் கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமி யிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘’செப்ப னியா 3:19, 20.தீஇவ 391.1

    “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்;
    எருசலேம் குமாரத்தியே,
    நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
    கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி,
    உன் சத்துருக்களை விலக்கினார்,
    இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர்
    உன் நடுவிலே இருக்கிறார்;
    இனித்தீங்கைக்காணாதிருப்பாய்

    ’’அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும்,
    சீயோனைப்பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
    உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்
    , அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்;
    அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து,
    தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்;
    அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.”
    தீஇவ 391.2

    வசனங்க ள் 14-7.