Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    35 - அழிவு நெருங்கிவருதல்

    சீக்கிரத்தில் சம்பவிக்க இருந்த அழிவுகுறித்த எச்சரிப்புகள் யோயாக்கீமுடைய ஆளுகையின் முதலாம் வருடம் முழுவதிலும், கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. தீர்க்கதரிசிகளால் பேசப் பட்ட கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேற இருந்தன. வடதிசை யில் தேசங்கள்மேல் வெகுகாலம் ஆதிக்கம் செலுத்திவந்த அசீரிய ராஜ்யம் தன் ஆளுகையை இழந்து போகவிருந்தது. தென் திசையி லிருந்த எகிப்தின் படை பெலத்தைத்தான் யூதாவின் ராஜா வீணாக நம்பிக்கொண்டிருந்தார். அதன் அதிகாரமும் சீக்கிரத்திலேயே ஒரு முடிவுக்கு வரவிருந்தது. முற்றிலும் எதிர்பாராதவிதத்தில், ஒரு புதிய வல்லரசாக பாபிலோன் சாம்ராஜ்யம் மேற்கே எழும்பி, சகல தேசங்களையும் சீக்கிரத்திலே மேற்கொள்ளவிருந்தது.தீஇவ 422.1

    மனந்திருந்தாத யூதாவின் மேல் ஒரு சில வருடங்களிலேயே, தேவகருவியாகப் பயன்பட இருந்தான் பாபிலோனின் ராஜா. எரு சலேம் மீண்டும் மீண்டும் நேபுகாத்நேச்சாரின் படைகளால் முற்றுகை யிடப்பட்டு, மேற்கொள்ளப்படவிருந்தது. முதலில் ஒரு சிலர், பின் னர் ஆயிரம் பேர், அதன்பிறகு பதினாயிரம் பேர் எனக்கூட்டம் கூட்ட மாக சிநேயார் தேசத்திற்குச் சிறைப்பட்டு போக இருந்தனர்; வலுக் கட்டாயமாக நாடுகடத்தப்பட இருந்தனர். யோயாக்கீம், யோயாக்கீன், சிதேக்கியா போன்ற யூதாவின் ராஜாக்கள் பாபிலோன் மன்னனுக்கு அடிமைப்பட்டு, பின்னர் கலகம் செய்ய இருந்தனர். தேசம் முழு வதுமே பாழாக்கப்பட இருந்தது; எருசலேம் பாழ்நிலமாகி, அக்கினி யால் எரிக்கப்பட இருந்தது; சாலொமோன் கட்டின ஆலயம் அழிக்கப் பட இருந்தது; பூமியின் தேசங்கள் மத்தியில் முன்பு தனக்கிருந்த நிலையை மீண்டும் ஒருபோதும் பெறமுடியாதபடி யூதா ராஜ்யம் விழ இருந்தது. அதுவரைக்கும் கொடியதும், மிகக் கொடியதுமான தண்ட னைகள் அந்தக் கலக தேசத்திற்குக் கொடுக்கப்பட இருந்தன.தீஇவ 422.2

    இஸ்ரவேல் தேசத்திற்கு அழிவு நிறைந்த அக்காலக்கட்டத்தில், எரேமியா மூலம் அநேக செய்திகள் பரலோகத்திலிருந்து கொடுக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். அப்படியாக யூதாவின் புத்திரர் எகிப்தோடிருந்த சிக்கலான கூட்டணியிலிருந்து தங்களை விடு வித்துக் கொள்ளவும் பாபிலோனின் மன்னர்களோடிருந்த சர்ச்சை யைத் தவிர்க்கவும் அருமையானதொரு தருணத்தைத் தேவன் கொடுத்தார். அச்சுறுத்திக்கொண்டிருந்த ஆபத்து நெருங்கியபோது, உவமைகளை நடித்துக்காட்டி, மக்களுக்குப் போதித்துவந்தான் எரேமியா. அதன்மூலம், தேவனுக்கான தங்கள் கடமையை உணர அவர்களைத் தட்டியெழுப்பவும், பாபிலோனிய அரசாங்கத்தோடு நட்பைக் காத்துக் கொள்ளும்படி அவர்களை வழிநடத்தவும் விரும் பினான்.தீஇவ 423.1

    தேவனுடைய நிபந்தனைகளுக்கு முழு மனதுடன் கீழ்ப்படிய வேண்டியதின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டும் படி, ரேகாபியர் சிலரைக் கூப்பிட்டு, தேவாலயத்தின் ஓர் அறைக் குள் அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, திராட்சரசத்தை அவர் கள் முன்வைத்து, குடிக்கும்படி கேட்டுக்கொண்டான். எதிர்பார்த்தது போல், அவர்கள் அதனை முற்றிலும் மறுத்தார்கள்; எதிர்த்தார்கள். ‘’நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை ; ஏனெனில், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப் , நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமல் இருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்’‘ என்று ரேகாபியர் உறுதியாகக் கூறினார்கள்.தீஇவ 423.2

    ’’அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண் டாகி, அவர்: இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார். திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனா கிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்கள் இந்நாள் மட்டும் அதைக் குடியாமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்’‘ என்றான். எரே 35:12-14.தீஇவ 424.1

    இப்படியாக, ரேகாபியரின் கீழ்ப்படிதலுக்கும், தம்முடைய மக்களின் கீழ்ப்படியாமை மற்றும் கலகத்திற்கும் உள்ள நேர் எதிர் வித்தியாசத்தை அவர்கள் முன் நிறுத்த தேவன் முயன்றார். ரேகாபி யர் தங்கள் தகப்பனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அந்த அக்கிர மத்தைச் செய்ய மறுத்தனர். ஆனால், யூதா மனுஷரோதேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கவில்லை; அதன் விளைவாக அவரு டைய கடுமையான நியாயத்தீர்ப்புகளை அனுபவிக்க இருந்தனர்.தீஇவ 424.2

    ’’நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள். நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களைப் பின்பற்றாமல், அவனவன் தன் பொல் லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங் கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசி களாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும் போனீர்கள். இப்போதும், ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண் டிருக்கும்போது, இந்த ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாமற் போன படியினாலும், இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறு உத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின் மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின் மேலும் நான் அவர்களுக்கு விரோத மாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல் லுகிறார் என்று சொல்” என்றார் தேவன். வச. 14-17.தீஇவ 424.3

    பரிசுத்த ஆவியானவரின் ஊக்கமான ஏவுதலினால் மனிதரின் இருதயங்கள் கீழ்ப்படுத்தப்பட்டு, மென்மையாகி, மிருதுவாகும் போதுதான் தேவனுடைய ஆலோசனைக்கு அவர்கள் செவிகொடுப் பார்கள். ஆனால் தங்கள் இருதயங்கள் கடினப்படுமட்டும் அவர்கள் புத்திமதியைவிட்டு விலகும்போது, வேறு செல்வாக்குகளால் அவர்கள் வழிநடத்தப்பட தேவன் அனுமதிக்கிறார். சத்தியத்தைப் புறக்கணித்து, பொய்மார்க்கத்தை ஏற்றுக்கொள்வது, தங்களைத் தாங்களே அழிக்கும் கண்ணியாகிறது.தீஇவ 425.1

    தமக்குக் கோபமூட்ட வேண்டாமென யூதாவிடம் வேண்டிக் கொண்டார் தேவன். ஆனால், அவர்கள் செவிகொடுக்கவில்லை. இறுதியில் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்புக்கூறப்பட்டது. அவர்கள் சிறைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட இருந்தனர். கீழ்ப்படிதலற்ற தேவபிள்ளைகளைச் சிட்சிப்பதற்கு, அவருடைய கரத்தின் கருவியாக கல்தேயர் பயன்பட இருந்தனர். யூதாவின் மனுஷர் தாங்கள் ஏற்கனவே பெற்றிருந்த வெளிச்சத்திற்கும், தங் களால் அவமதிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட எச்சரிப்புகளுக்கும் ஏற்ற அளவில் உபத்திரவப்பட வேண்டியிருந்தது. தேவன் தம் நியாயத்தீர்ப்பு கொடுப்பதற்கு வெகு நாட்கள் தாமதித்து வந்தார். ஆனால் இப்பொழுதோ, அவர்களுடைய பாவப்போக்கிலிருந்து அவர்களைத் தடுக்கும் கடைசி முயற்சியாக, தம் அதிருப்தியை அவர்கள்மேல் காட்ட இருந்தார்.தீஇவ 425.2

    ரேகாபியரின் குடும்பத்தாருக்கு ஒரு நித்திய ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. ‘நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல் லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனை களின் கர்த்தர் சொல்லுகிறார். ஆதலால், சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதா புக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றான் தீர்க்கதரிசி. வச 18:19. தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால், ரேகாபியர் ஆசீர்வதிக்கப்பட்டது போல, கீழ்ப்படிதலும் விசுவாச மும் யூதாவின் மேல் ஆசீர்வாதமாகப் பிரதிபலிக்குமென தேவன் தம் மக்களுக்குப் போதித்தார்.தீஇவ 425.3

    இது நமக்கும் ஒரு பாடம்தான். தன்னடக்கமற்ற பாவங்களுக்கு எதிராக தன்னுடைய சந்ததியைப் பாதுகாக்க அதிக பயனுள்ளதும் சிறந்ததுமான வழிமுறைகளைக் கையாண்டு, ஞானமுள்ள ஒரு தகப்பன் வகுக்கும் நிபந்தனைகள் கீழ்ப்படிவதற்குத் தகுதிவாய்ந் தவையாக இருக்குமானால், அவற்றைவிட மேலான பய பக்திக்கு உரியதாக தேவ அதிகாரம் இருக்கிறது. ஏனெனில், மனிதனைக் காட்டிலும் அவர் பரிசுத்தர். வல்லமையில் நிகரற்றவர், நியாயந் தீர்ப்பதில் இணையற்றவர் அவர் நம் சிருஷ்டிகரும் அதிகாரியான வர். மனிதர் தங்கள் பாவங்களைவிட்டு, மனந்திரும்பவைப்பதற்கு ஒவ் வொரு வழியிலும் முயல்கிறார்; தம் தாசர்களின் வார்த்தைகள் மூலம் கீழ்ப்படியாமையின் ஆபத்துகளை முன்னுரைக்கிறார். எச்சரிப்பின் செய்தியை அறிவித்து, பாவத்தை உண்மையோடு கடிந்துகொள்கிறார். அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட கருவி களின் ஜாக்கிரதையான கண்காணிப்பாலும், அவருடைய இரக்கத் தாலும் மாத்திரமே அவருடைய ஜனங்கள் செழிப்போடிருக்கின்றனர். தம்முடைய கடிந்துகொள்ளுதலைப் புறக்கணித்து, தம்முடைய ஆலோசனையை மறுதலிக்கும் மக்களை அவரால் தாங்கவோ பாதுகாக்கவோ முடியாது. தண்டனை தரும் நியாயத்தீர்ப்புகளைச் சிலகாலம் அவர் தாமதிக்கப் பண்ணலாம்; ஆனால், எப்போதும் அவர் தம் கரத்தைத் தடுத்து நிறுத்தமாட் டார்.தீஇவ 426.1

    ’நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்’ என்று தேவனால் அங்கீகரிக்கப்பட்டோரோடு யூதா வின் புத்திரரும் சேர்க்கப்பட்டிருந்தனர். யாத் 19:6. வாழ்வின் பல தரப்பட்ட உறவுகளில், அதிலும் முக்கியமாக உன்னதமான தேவனு டைய சேவையில், இருதயத்தைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள வேண்டியதின் முக்கியத்துவத்தைத் தன் ஊழியத்தில் எரேமியா ஒருபோதும் மறக்கவில்லை. ராஜ்யத்தின் விழுகையையும் யூதா வின் குடிகள் ஜாதிகளுக்கு மத்தியில் சிதறப்போவதையும் தெளி வாக அவன் முன்னுணர்ந்தான்; ஆனால், அவை யாவற்றையும் கடந்து, தேசம் மீண்டும் புதுப்பிக்கப்பட போகும் காலத்தை விசு வாசக்கண்ணோடு நோக்கிப் பார்த்தான். ‘நான் என் ஆடுகளில் மீதி யாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங் களுக்குக் கொண்டு வருவேன். இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல் லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும் பப் பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம் பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண் ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என் பதே” எனும் தேவ வாக்குத்தத்தம் அவருடைய காதுகளில் ரீங்கார மிட்டுக்கொண்டே இருந்தது. எரே 23:3-6.தீஇவ 426.2

    வரவிருந்த நியாயத்தீர்ப்பு குறித்த தீர்க்கதரிசனங்களோடுகூட, மகிமையான இறுதி விடுதலை குறித்த தீர்க்கதரிசனங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. நிலவிவந்த அவபக்திக்கு மத்தியிலும், தேவனோடு சமாதானம் பண்ணி, பரிசுத்த வாழ்வு வாழ தெரிந்து கொள்வோர், ஒவ்வொரு சோதனையையும் சந்திக்கத்தக்க பெல னைப் பெறவிருந்தார்கள்; மிகுந்த வல்லமையோடு அவருக்குச் சாட்சி பகரும்படி தகுதிப்படவுமிருந்தார்கள். எகிப்திலிருந்து புறப் பட்ட இஸ்ரவேல் புத்திரருக்குக் கிடைத்த விடுதலையைவிட, வர விருந்த காலங்களில் இவர்களுக்குக் கிடைக்கவிருந்த விடுதலை மகத்தானதாகக் கருதப்படவிருந்தது. இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்த கர்த்தருடைய ஜீவ னைக் கொண்டு சத்தியம் பண்ணாமல், இஸ்ரவேல் வீட்டின் சந்ததி யாரைத் தங்கள் சுயதேசத்தில் குடி யிருக்கும்படிக்கு வடதேசத்தி லும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டு வந்த கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியம் பண்ணும்’ நாட்கள் வருகிறதென்று தம்முடைய தீர்க்கதரிசிமூலம் தேவன் அறிவித்தார். வச.7,8. யூதா ராஜ்யத்தி னுடைய வரலாற்றின் முடிவு நாட்களில் பாபிலோனியர் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்கள். அவர்களுடைய படைகள் எல்லாப் பக்கங்களிலுமிருந்து வந்து, சீயோனின் அலங்கங்களை நெருங் கின். அப்போதுதான் இத்தகைய அற்புதத் தீர்க்கதரிசனங்கள் எரே மியாவால் சொல்லப்பட்டன.தீஇவ 427.1

    விடுதலை குறித்த இத்தகைய வாக்குத்தத்தங்கள், யேகோவா வைத் தொழுவத்தில் உறுதியோடிருந்தவர்களின் காதுகளில் இன் னிசையாகத் தொனித்தன. உயர்ந்தோர்-தாழ்ந்தோரின் வீடுகளில், உடன்படிக்கையைக் காக்கும் தேவனுடைய ஆலோசனைகள் எங் கெல்லாம் ஏறெடுக்கப்பட்டனவோ அங்கெல்லாம் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. பாலகரும் பப் பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம் பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண் ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என் பதே” எனும் தேவ வாக்குத்தத்தம் அவருடைய காதுகளில் ரீங்கார மிட்டுக்கொண்டே இருந்தது. எரே 23:3-6.தீஇவ 427.2

    வரவிருந்த நியாயத்தீர்ப்பு குறித்த தீர்க்கதரிசனங்களோடுகூட, மகிமையான இறுதி விடுதலை குறித்த தீர்க்கதரிசனங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. நிலவிவந்த அவபக்திக்கு மத்தியிலும், தேவனோடு சமாதானம் பண்ணி, பரிசுத்த வாழ்வு வாழ தெரிந்து கொள்வோர், ஒவ்வொரு சோதனையையும் சந்திக்கத்தக்க பெல னைப் பெறவிருந்தார்கள்; மிகுந்த வல்லமையோடு அவருக்குச் சாட்சி பகரும்படி தகுதிப்படவுமிருந்தார்கள். எகிப்திலிருந்து புறப் பட்ட இஸ்ரவேல் புத்திரருக்குக் கிடைத்த விடுதலையைவிட, வர விருந்த காலங்களில் இவர்களுக்குக் கிடைக்கவிருந்த விடுதலை மகத்தானதாகக் கருதப்படவிருந்தது. இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்த கர்த்தருடைய ஜீவ னைக் கொண்டு சத்தியம் பண்ணாமல், இஸ்ரவேல் வீட்டின் சந்ததி யாரைத் தங்கள் சுயதேசத்தில் குடி யிருக்கும்படிக்கு வடதேசத்தி லும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து அழைத்து வழிநடத்திக்கொண்டு வந்த கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியம் பண்ணும்’ நாட்கள் வருகிறதென்று தம்முடைய தீர்க்கதரிசிமூலம் தேவன் அறிவித்தார். வச.7,8. யூதா ராஜ்யத்தி னுடைய வரலாற்றின் முடிவு நாட்களில் பாபிலோனியர் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார்கள். அவர்களுடைய படைகள் எல்லாப் பக்கங்களிலுமிருந்து வந்து, சீயோனின் அலங்கங்களை நெருங் கின். அப்போதுதான் இத்தகைய அற்புதத் தீர்க்கதரிசனங்கள் எரே மியாவால் சொல்லப்பட்டன.தீஇவ 428.1

    விடுதலை குறித்த இத்தகைய வாக்குத்தத்தங்கள், யேகோவா வைத் தொழுவத்தில் உறுதியோடிருந்தவர்களின் காதுகளில் இன் னிசையாகத் தொனித்தன. உயர்ந்தோர்-தாழ்ந்தோரின் வீடுகளில், உடன்படிக்கையைக் காக்கும் தேவனுடைய ஆலோசனைகள் எங் கெல்லாம் ஏறெடுக்கப்பட்டனவோ அங்கெல்லாம் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. பாலகரும் சீனாய் மலையின் மேலே பத்துக்கட்டளைகளைக் கொடுத்த சகல இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்தவரோடு ஓர் உடன்டிக்கை உற வைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதின் முக்கியத்துவத்தை அவன் மீண்டும் வலியுறுத்தினான். எரேமியாவின் எச்சரிப்புகளும் மன்றாட்டுகளும் ராஜ்யத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைந் தன. தேசத்தைக்குறித்த தேவசித்தத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் அருளப்பட்டிருந்தது.தீஇவ 428.2

    ’ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு நம் பரலோக பிதா தம் நியாயத்தீர்ப்புகளை அனுமதிப்பதாக தீர்க்கதரிசி தெளிவு படுத்திக் காட்டுகிறான். சங் 9:20. ‘நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், ஜாதிகளுக் குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந் தரமுமாகும்’ என்று தேவன் தம் மக்களை முன்னெச்சரித்திருந்தார். லேவி 26:21, 28, 33.தீஇவ 429.1

    வரவிருந்த அழிவு பற்றிய செய்திகள் மக்களிடமும் பிரபுக் களிடமும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த அச்சமயத்தில் தானே, பாவ அறிக்கை செய்து, சீர்திருந்தி, அதிக நற்கிரியைகளைச் செய்து, ஞானமுள்ள ஆவிக்குரிய தலைவனாகத் திகழ்ந்திருக்க வேண்டிய அவர்களின் அரசனான யோயாக்கீம், சுயநல இன்பங் களில் நாட்களைச் செலவிட்டுக்கொண்டிருந்தான். ‘’நான் பெரிய தொருமாளிகையையும் காற்றோட்டமான மாடியறைகளையும் கட்டிக் கொள்வேன்” என்றான். எரே 22:14. ‘கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசப்பட்ட அந்த வீடானது, அநீதியும் வஞ்சக முமான முறையில் பெறப்பட்ட பணத்தாலும் உழைப்பாலும் கட்டப்பட்டதாகும். எரேமியா 22:13.தீஇவ 429.2

    தீர்க்கதரிசிக்குக் கோபம் மூண்டது. எனவே உண்மையற்ற அந்த அரசனுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு கூறும்படி அவன் ஏவப் பட்டான். ‘அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலை கொள்ளுகிறவனுக்கு ஐயோ! நீ கேதுரு மரமாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜா வாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாய மும் நீதியுஞ் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லை யோ? அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய் வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகி றார். உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின் மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின் மேலும், இடுக்க மும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன் றின் மேலும் வைக்கப்படவில்லை.தீஇவ 429.3

    ’’ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக் கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து, ‘ஐயோ! என் சகோ தரனே, ஐயோ! சகோதரியே’ என்று அவனுக்காகப் புலம்புவதில் லை; ‘ஐயோ! ஆண்டவனே, ‘ஐயோ! அவருடைய மகத்துவமே’ என்று அவனுக்காகப் புலம்புவதில்லை. ஒரு கழுதை புதைக்கப்படு கிற வண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்” என்றார் அவர். எரே 22:14-19.தீஇவ 430.1

    யோயாக்கீமுக்கு எதிராகச் சொல்லப்பட்ட கடுமையான இந்த நியாயத்தீர்ப்பு சில வருடங்களிலேயே சம்பவிக்க இருந்தது. முத லில், தம்முடைய திட்டவட்டமான நோக்கம் பற்றி மனந்திருந்தாத அத்தேசத்திற்குத் தெரிவித்தார் தேவன். ‘யோசியாவின் பதிமூன் றாம் வருஷம் துவக்கி’ இருபது வருட காலத்திற்கும் மேலாக, அவர்களை இரட்சிக்க தேவன் கொண்டிருந்த விருப்பம் பற்றிதான் சாட்சி பகிர்ந்தும், தன்னுடைய செய்திகள் புறக்கணிக்கப் பட்டதை யோயாக்கீமுடைய ஆளுகையின் நான்காம் வருடத்தில் தீர்க்கதரிசி யாகிய எரேமியா யூதாவின் ஜனம் அனைத்துக்கும், எருசலேமின் குடிகள் எல்லாருக்கும் ‘சுட்டிக்காட்டினான். எரே 25:2, 3. இப்பொ ழுதும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவவார்த்தை இதுவே:தீஇவ 430.2

    ’நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால், இதோ, நான் வடக்கேயிருக்கிற சகலவம்சங்களையும், என் ஊழி யக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங் காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக் குறியாகிய ஈசல் போடுதலாகவும் நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மகிழச்சி யின் சத்தத்தையும் சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்ததையும், ஏந்திரத்தின் சத்தத் தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்’’. வச 8-11.தீஇவ 430.3

    அழிவுகுறித்த நியாயத்தீர்ப்புமிகத்தெளிவாகக் கொடுக்கப்பட் டிருந்தது. ஆனால், அதனைக்கேட்டு வந்த பெருந்திரளானவர்களால் அதன் கொடிய விளைவுகளைக் கொஞ்சங்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை . அவர்களில் ஆழமான தாக்கங்கள் ஏற்படும்படியாக, பேசப்பட்ட வார்த்தைகளின் அர்த்தத்தை விளக்க முயன்றார் தேவன். தேவ உக்கிரமாகிய மதுபானத்தால் நிரம்பி வழிகிற ஒரு பாத்திரத் திற்குத் தேசத்தின் நிலையை ஒப்பிடுமாறு எரேமியாவைக் கேட்டுக் கொண்டார் தேவன். தேவனுடைய நோக்கம் நிறைவேறும்மட்டும், ‘எருசலேமும், யூதாவின் பட்டணங்களும், அதின் ராஜாக்களுமே’ அந்தப் பாத்திரத்தில் முதலில் பருக இருந்தார்கள்; ‘எகிப்தின் ராஜா வாகிய பார்வோனும், அவன் ஊழியக்காரனும், அவன் பிரபுக் களும், அவனுடைய எல்லா ஜனமும் ‘ அதே பாத்திரத்தில் பானம் பண்ணவிருந்தார்கள். எரே 25 ஐப் பார்க்கவும்.தீஇவ 431.1

    சீக்கிரத்தில் சம்பவிக்கவிருந்த நியாயத்தீர்ப்பின் தன்மையை மேலும் விவரிக்கும் வண்ணம், யேகோவாவின் ஊழியக்காரனான தீர்க்கதரிசியிடம், ‘ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரி லும் சிலரைக் கூட்டிக்கொண்டு, இன்னோமுடைய பள்ளத்தாக்கிலே புறப்பட்டு போ’ என்றார். அங்கு யூதாவின் தேசத்துரோகப் போக்கை மீண்டும் விவரிக்கச் சொன்னார். பின்னர் ‘குயவன் வேலையான ஒரு கலசத்தை’ சுக்குநூறாக உடைத்து, திரும்ப செப் பனிடப்படக்கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத் துப்போட்ட வண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத் தையும் உடைத்துப் போடுவேன்’ என்று யேகோவா சொல்வதாக அந்த ஜனங்களிடம் சொல்லும்படிக் கட்டளையிட்டார்.தீஇவ 431.2

    தனக்குக் கட்டளையிட்டப்படியே செய்தான் தீர்க்கதரிசி. அதன்பிறகு, பட்டணத்திற்குத் திரும்பி, ஆலயப் பிராகாரத்தில் நின்றுகொண்டு, சகல ஜனங்களும் கேட்க, ‘’இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத் தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல் லாத் தீங்கையும் இதின் மேலும் இதற்கடுத்த பட்டணங்களின் மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” என்று அறிவித்தான். எரேமியா 19.தீஇவ 431.3

    உயரதிகாரத்தில் இருந்தவர்கள் தீர்க்கதரிசியின் வார்த்தையால் பாவ அறிக்கை செய்யவும் மனந்திரும்பவும் வழிநடத்தப்பட் டிருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாகக் கோபங்கொண் டார்கள். அதன் விளைவாக எரேமியாவின் உரிமைகள் பறிக்கப் பட்டன. சிறையிலடைக்கப்பட்டு, மரத்தடிகளில் விலங்கிடப்பட்ட போதிலும், அங்கு நின்றிருந்தவர்களிடம் பரலோகச் செய்தியைத் தொடர்ந்து பேசினான் தீர்க்கதரிசி. உபத்திரவத்தால் அவனுடைய வாயை மூடிவிட முடியவில்லை. சத்திய வார்த்தை என் எலும்பு களில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற் போயிற்று’ என்றான் அவன். எரே 20:9.தீஇவ 432.1

    அச்சமயத்தில்தான், எவருடைய இரட்சிப்பிற்காக எரேமியா வின் இருதயம் நித்தமும் ஏங்கினதோ, அவர்களுக்கு தாம் சொல்ல விரும்பின செய்திகளை எழுதிவைக்குமாறு அவனுக்குக் கட்டளை யிட்டார் தேவன். ‘நீ ஒரு புஸ்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள் மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக் குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தை களையும் அதிலே எழுது. யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங் கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்பும்படியாகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிக்கும்படியா கவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக் குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள்’ என்று தன் தாசனுக் குக் கட்டளையிட்டார் தேவன். எரே 36:2,3.தீஇவ 432.2

    அந்தக் கட்டளைக்கிணங்க, தன் உண்மைத் தோழனும் வேத பாரகனுமாகிய பாருக்கை உதவிக்கு அழைத்து, தன்னிடம் ‘கர்த்தர் சொல்லி வந்த எல்லா வார்த்தைகளையும்’ தான் சொல்லச் சொல்ல அவற்றை எழுத்துமாறு அவனிடம் சொன்னான் எரேமியா. வச.4. எழுதுவதற்கு அக்காலத்தில் பயன்படுத்தின தோல் சுருளில் இவை கவனமாக எழுதப்பட்டன. பாவத்திற்கான கண்டனமும், தொட ரும் அவபக்தியால் ஏற்படும் நிச்சயவிளைவு பற்றிய எச்சரிப்புகளும், சகல பாவங்களையும் புறக்கணிக்குமாறு மனப்பூர்வமான ஒரு வேண்டுகோளும் அவற்றில் இடம்பெற்றிருந்தன்.தீஇவ 432.3

    ’யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்தில் ‘ தேசம் முழு வதிலும் உபவாச நாளாயிருந்தபடியால், திரளானவர்கள் தேவா லயத்திற்கு வந்துகொண்டிருந்தனர். எரேமியா இன்னமும் சிறையி லிருந்தபடியால், அந்தச் சுருளில் முழுவதுமாக எழுதப்பட்டிருந்த வற்றை மக்களிடம் வாசிக்குமாறு பாருக்கைக் கேட்டுக்கொண்டான். ‘’யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜா வின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்திலே, எருசலேமிருக்கிற எல்லா ஜனத்துக்கும், யூதாவின் பட்டணங்கலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும், கர்த்தருக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது” என்றான் தீர்க்கதரிசி. வச 9, 7.தீஇவ 433.1

    பாருக் அப்படியே செய்தான். யூதாவின் சகல ஜனங்களுக்கும் முன்பாக அந்தச் சுருள் வாசிக்கப்பட்டது. பிறகு, பிரபுக்களுக்கு முன்பாக வந்து அந்த வார்த்தைகளை வாசிக்குமாறு அந்த வேதபார கன் அழைத்தனுப்பப்பட்டான். மிகுந்த ஆர்வத்தோடு அவர்கள் கேட்டார்கள். தாங்கள் கேட்ட அனைத்தையும் ராஜாவிடம் தெரிவிப் பதாகவும் வாக்குரைத்தார்கள். ஆனால், அந்தச் சாட்சியத்தை ராஜா புறக்கணிப்பானென்றும், அந்தச் சுருளை ஆயத்தம் செய்து, அதி லுள்ள வற்றை வாசித்தவனை ராஜா கொல்ல முயற்சிக்கூடும் என்றும் பயந்ததால், போய் ஒளிந்துகொள்ளுமாறு அவனிடம் கேட்டுக்கொண்டனர்.தீஇவ 433.2

    பாருக் வாசித்தவற்றை ராஜாவாகிய யோயாக்கீமிடம் பிரபுக் கள் சொன்னபோது, அந்தச் சுருளைக் கொண்டுவந்து, தன் காது கேட்க வாசிக்குமாறு கட்டளையிட்டான். யெகுதி எனும் பெயரு டைய அரண்மனை ஊழியன் ஒருவன் போய், அந்தச் சுருளை வாங்கிவந்து, கடிந்துகொள்ளுதலையும் எச்சரிப்பையும் கொண்டி ருந்த அந்த வார்த்தைகளை வாசிக்க ஆரம்பித்தான். அது குளிர் காலம். எனவே ராஜாவும், அவனுடைய அரசவைக் கூட்டாளிகளும் தீமூட்டி, சுற்றிலும் உட்கார்ந்திருந்தனர். அதிலிருந்து சிறு பகுதிதான் வாசிக்கப்பட்டிருந்தது. தன்மேலும் தன் மக்கள் மேலும் நெருங்கி யிருந்த ஆபத்தை எண்ணி நடுங்காதவனாய், அதற்குள்ளாக அந்தச் சுருளைப் பிடுங்கி, மிகுந்த கோபத்தோடு, ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, அக்கினியில் எறிந்து போட்டான். ‘ வச. 23.தீஇவ 433.3

    இராஜாவோ அவன் பிரபுக்களோ பயப்படவில்லை; தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொள்ளவுமில்லை. ஆனாலும் அங்கி ருந்த பிரபுக்களில் சிலர், அந்தச் சுருளைச் சுட்டெரிக்கவேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்கள். ஆனாலும் அவர்களுக்கு அவன் செவிகொடுக்கவில்லை அந்த எழுத்துகள் அழிக்கப்பட்டன. எரேமியாவுக்கும் பாருக்குக்கும் எதிராக ராஜா மிகுந்த கோபங்கொண்டு, அவர்களைப் பிடித்து வரும் படி ஆட் களை அனுப்பினான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.’ வச. 24-26.தீஇவ 434.1

    அந்தச் சுருளில் தம்மால் ஏவப்பட்டு, எழுதப்பட்ட புத்திமதி களைத் தேவாலயத்தில் நின்றிருந்தவர்களுக்கும் ராஜாவுக்கும் பிர புக்களுக்கும் அறிவித்து, யூதாவின் மனிதர் நலனடையும் படி அவர்களை எச்சரிக்க தேவன் முயன்றார். ‘’யூதாவின் குடும்பத் தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படி யாகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிக்கும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக் குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள்” என் றார் தேவன். வச. 3. மாறுபாடென்னும் குருட்டுத்தன்மையால் மனி தர் சஞ்சலப்படுவதைக் கண்டு தேவன் இரங்கினார். உயரதிகாரத் தில் இருந்தவர்கள் தங்கள் தவறுகளை எண்ணி வருந்தவும், தங்கள் அறியாமையை உணர்ந்து கொள்ளவும் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு கள் மூலமும் கண்டனங்கள் மூலமும் அந்தகாரப்பட்டிருந்த அவர் களின் அறிவைப் பிரகாசப்படுத்த முயன்றார். தன்னிறைவு கொண் டிருந்த அந்த ஜனங்கள் தங்கள் வீணான முயற்சிகளில் அதிருப்தி கொள்ளவேண்டியிருந்தது. பரலோகத்தோடான நெருங்கிய தொடர் பால் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் தேடவேண்டியிருந்தது. அதற்கு தேவன் பெரிதும் முயன்றார்.தீஇவ 435.1

    பாவிகளை மழுப்பி, திருப்திப்படுத்தும் ஊழியர்களைத் தமக் காக அனுப்ப தேவன் திட்டங்கொள்ளார்; பரிசுத்தமற்ற வாழ்க்கை யைத் தாலாட்டும் வண்ணம் லெளகீக நம்பிக்கை பற்றிய சமாதானச் செய்தி எதையும் அவர் கொடுப்பதில்லை. மாறாக, பாவியின் மனச் சாட்சியில் பாரமான சுமைகளை வைத்து, பாவ உணர்வு எனும் கூரிய அம்புகளால், அவனுடைய ஆத்துமாவை அவர் உணர்த்துகிறார். பாவிகள் தங்கள் தேவையை அதிகமாக உணரவும், ‘இரட்சிக்கப் படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’ என்று வேதனையோடு கேட்கவும் தூண்டப்படும்படி தேவனுடைய பயங்கர நியாயத்தீர்ப்பு கள்பற்றி பணிவிடைத் தூதர்கள் அவர்களுக்குச் சொல்வார்கள். அப் 16:30. பாவத்தைக் கடிந்து கொள்ளுகிறதும் புழுதிக்குத் தாழப் பண்ணுகிறதும் அகந்தையையும் அகங்காரத்தையும் அவமாக்கு கிறதுமான கரமே பாவத்தால் பீடிக்கப்பட்டு, மனம் வருந்துகிற வனைத் தூக்கிவிடும் கரமாயும் இருக்கிறது. நாம் சிட்சிக்கப்பட அனுமதிக்கிற அவர்தாமே ‘நான் உங்களுக்கு என்ன செய்யவேண் டும்?’‘ என்று கேட்கிறவராயுமிருக்கிறார்.தீஇவ 435.2

    பரிசுத்தமும் இரக்கமும் உள்ள தேவனுக்கு எதிராக மனிதன் பாவம் செய்தால், அவன் மனங்கசந்து அழுது, மெய்யாக மனந் திரும்புவதைக் காட்டிலும் மேன்மையான வழி எதுவுமில்லை. இத னையே தேவன் எதிர்பார்க்கிறார்; நொறுங்குண்ட ஓர் இருதயத்தை யும் நறுங்குண்ட ஓர் ஆவியையும் தவிர வேறெதையும் அவர் எதிர் பார்ப்பதில்லை. ஆனால் ராஜாவாகிய யோயாக்கீமும் அவனுடைய பிரபுக்களும் தங்கள் அகந்தையாலும் அராஜகத்தாலும் தேவனு டைய இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். எச்சரிப் புக்குச் செவிகொடுத்து, மனந்திரும்ப அவர்கள் ஆயத்தமாக இல்லை. அந்தப் பரிசுத்த சுருள் எரிக்கப்பட்ட தருணம்தான், கிருபையாக அவர் களுக்கு வழங்கப்பட்ட கடைசித் தருணமாயிருந்தது. அச் சமயத்திலும் அவர்கள் தம்முடைய சத்தத்தைக் கேட்க மறுக்கும் பட்சத்தில், பயங்கர தண்டனையை அவர்களுக்கு வழங்கவிருந் ததை அறிவித்திருந்தார் தேவன். அவர்கள் செவிகொடுக்க மறுத் தார்கள். எனவே, யூதாவின்மேல் இறுதி நியாயத்தீர்ப்பு வழங்கப் பட்டது. சர்வவல்லவருக்கு முன்பாக அகந்தையோடு தன்னை உயர்த் தினவன், அவருடைய மிகுந்த கோபத்திற்கு ஆளானான்.தீஇவ 436.1

    ’ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து: தாவீதின் சிங்காசனத்தின் மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவில் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டு கிடக் கும். நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன் மேலும் எருசலேமின் குடிகள் மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லு கிறார். ‘எரே 36:30, 31.தீஇவ 436.2

    அந்தச் சுருள் எரிக்கப்பட்டதோடுகதை முடிந்து போகவில்லை. எழுதப்பட்ட வார்த்தைகள் தூரே எறியப் பட்டிருக்கலாம். ஆனால், கலகக்கார இஸ்ரவேலர்மேல் சீக்கிரத்தில் சம்பவிக்க இருந்ததாக, தேவன் சொன்ன தண்டனையையும், அதில் சொல்லப்பட்டிருந்த எச்சரிப்பு மற்றும் கடிந்துகொள்ளுதலையும் தள்ளிவிடுவது அப்படி யொன்றும் எளிதாயிருக்கவில்லை. மேலும், அந்தச் சுருள் மீண்டு மாக எழுதப்பட்டது. நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதா வின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது’ என்று தம் தாச னுக்குக் கட்டளையிட்டார் தேவன். யூதா மற்றும் எருசலேமைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அடங்கிய பதிவு சாம்பலாக்கப்பட்ட போதிலும், அதன் வார்த்தைகள் கொளுந்துவிட்டு எரியும் அக்கினி போல, ‘எரேமியாவின் உள்ளத்தில் இன்னும் நீங்காமல் இருந்ததால், மனித கோபம் அழிக்க விளைந்ததை மீண்டும் எழுத அனுமதிக்கப் பட்டான் தீர்க்கதரிசி.தீஇவ 436.3

    எரேமியாவேறொரு சுருளை எடுத்து, அதனைப் பாருக்கிடம் கொடுத்தான். அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கி னி யால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவை களுக்கொத்த அநேக வார்த்தைகளும் அவைகளோடு சேர்க்கப் பட்டது. ‘வச 28, 32. தேவனுடைய தீர்க்கதரிசியின் பிரயாசங்களைத் தடுக்க மனிதகோபம் முயன்றது. ஆனால், யேகோவாவின் தாசனு டைய செல்வாக்கைத் தடுக்க யோயாக்கீம் முயன்ற செயலானது, தேவ நிபந்தனைகளை மேலும் தெளிவுபடுத்த ஒரு தருணத்தைக் கொடுத்தது.தீஇவ 437.1

    எரேமியாவைச் சிறையில் அடைக்கவும் உபத்திரவப்படுத்த வும் வழிநடத்தின் அதே ஆவி, கடிந்துகொள்ளுதலுக்கு எதிரான அதே ஆவி இன்றும் காணப்படுகிறது. அடிக்கடி கொடுக்கப்படும் எச்சரிப்புகளுக்குச் செவிகொடுக்க மறுக்கும் அநேகர், தங்கள் பாவத் தைக் கண்டுகொள்ளாமலும், தங்கள் மாயையைக் கண்டியாமலும் இருக்கும் பொய்ப் போதகர்களுக்குச் செவிகொடுக்கவே தீர்மா னிக்கின்றனர். இப்படிப்பட்டோர், இக்கட்டின் நாளில் பரலோகத்தி லிருந்து எவ்விதமான பாதுகாப்பையும் உதவியையும் பெறமுடி யாது. திரித்துக் கூறப்படுவதாலும் புறக்கணிப்பாலும் அவதூறாலும் தங்களுக்கு நேரிடும் உபத்திரவங் களையும் சோதனைகளையும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்கள் பொறுமையோடும் தைரியத்தோடும் சகிக்கவேண்டும். முற்காலத் தீர்க்கதரிசிகளும், மனித இனத்தின் இரட்சகரும், அவருடைய அப்போஸ்தலர்களும் சத்திய வார்த்தையினிமித்தம் அவதூறையும் உபத்திரவத்தையும் சகித்தார்கள்’ என்பதை எப்போதும் நினைவில் கொண்டு, தேவன் தங்களுக்குக் கொடுத்த பணியை அவர்கள் தொடர்ந்து உண்மை யோடு செய்யவேண்டும்.தீஇவ 437.2

    ’எரேமியாவின் ஆலோசனைகளுக்கு யோயாக்கீம் செவி கொடுக்கவேண்டும்’ என்பதும், அதன் மூலம் நேபுகாத்நேச்சாரின் கண்களில் தயவுபெற்று, அதிக இக்கட்டிலிருந்து தன்னைத் தப்பு வித்துக்கொள்ள வேண்டும்’ என்பதே தேவ நோக்கமாயிருந்தது. பாபிலோனின் மன்னனுக்கு விசுவாசமாயிருப்பதாக யோயாக்கீம் உறுதியளித்தான். தன்னுடைய வாக்கை உண்மையோடு காப்பாற்றி யிருப்பானானால் புறஜாதியாரின் மதிப்பிற்கு ஆளாகியிருப்பான். ஆத்துமாக்கள் குணப்படுவதற்கு அது அருமையான தருணங்களை உண்டுபண்ணியிருக்கும்.தீஇவ 438.1

    தனக்கு அளிக்கப்பட்ட விசேஷித்த தருணங்களை அற்பமாக எண்ணி, தானே தெரிந்து கொண்ட ஒரு பாதையை தன்னிச்சையாகப் பின்பற்றினான் யூதாவின் ராஜா. பாபிலோன் அரசனிடம் தான் கொடுத்த வாக்குறுதியை மீறி, கலகம் செய்தான். அது அவனுக்கும் அவனுடைய ராஜ்யத்திற்கும் ஓர் இக்கட்டான நிலையை ஏற்படுத் தியது. ‘கல்தேயரின் தண்டுகளும், சீரியர்களின் தண்டுகளும் மோவாபியரின் தண்டுகளும், அம்மோன் புத்திரரின் தண்டுகளும்’ அவனுக்கு எதிராக அனுப்பப்பட்டன. அந்தத் திரளான கொள்ளைக் கூட்டத்தாரைத் தன் தேசத்தில் நுழையவிடாதபடி தடுக்குமளவிற்கு அவனிடம் சக்தியில்லை . 2இராஜா 24:2. பாபிலோன் மன்னர் களுக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணினதினிமித்தம் அவர்களால் விரோதிக்கப்பட்டு, தன் மக்களால் வெறுக்கப்பட்டு, பரலோகத் தால் புறக்கணிக்கப்பட்ட அவன், சில வருடங்களிலேயே தன் னுடைய ஆட்சிக்கு ஓர் அற்பமான முடிவைக் கொண்டுவந்தான். தேவ ஊழியன் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய நோக் கத்தைவிட்டு விலகியதில், ராஜா செய்த மகாதவற்றின் நிமித்தமே இப்படியெல்லாம் நடந்தது.தீஇவ 438.2

    யோயாக்கீமின் குமாரனாகிய யோயாக்கின் மூன்று மாதங் களும் பத்து நாட்களும் மட்டுமே சிங்காசனத்தில் வீற்றிருந்தான். அவன் எகொனியா, கோனியா என்ற பெயர்களிலும் அழைக்கப் பட்டான். பிறகு, கல்தேயரின் சேனைகளிடம் அவன் சரணடைந் தான். யூதா அரசனின் கலகத்தினிமித்தம் அந்நகரமானது மீண்டு மொரு முறை அச்சேனையால் முற்றுகையிடப்பட்டது. அப்போது நேபுகாத்நேச்சார் யோயாக்கீனையும் ராஜாவின் தாயையும் ராஜா வின் ஸ்திரீகளையும் அவன் பிரதானிகளையும், பராக்கிரமசாலி களான ஏழாயிரம் பேரையும், தச்சரும் கொல்லருமாகிய ஆயிரம் பேரையும் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துக் கொண்டுபோனான்’. அவர்களோடுங்கூட ‘கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கி ஷங்களையும் ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும்’ பாபிலோன் ராஜா எடுத்துக்கொண்டு போனான். 2இராஜா 24:15, 16, 13.தீஇவ 438.3

    யூதா ராஜ்யத்தின் வல்லமை பிடுங்கப்பட்டு, அதன் பணபல மும் மனித பலமும் சூறையாடப்பட்ட போதிலும் அது ஒரு தனி அரசாங்கமாக இயங்க அனுமதியளிக்கப்பட்டது. யோசியாவின் இளைய குமாரனாகிய மத்தனியாவை அதற்குத் தலைவனாக ஏற் படுத்தி, அவனுக்குச் சிதைக்கியா என்று பெயரிட்டான் நேபுகாத்நேச் சார்.தீஇவ 439.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents