Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    41 - அக்கினிச்சூளை

    உலக வரலாற்றில் தனக்கிருந்த பங்கையும், பரலோகராஜ்யத்தை ஆதரிப்பதில் தன்ராஜ்யத்தின் பங்கையும் நேபுகாத்நேச்சார் அறிந்து கொள்ளும்படியாகவே, முடிவு காலமட்டுமுள்ள நிகழ்ச்சிகளை விளக்கும் அந்த மாபெரும் சிலை குறித்த சொப்பனம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்தச் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லப் படுகையில், தேவனுடைய நித்திய ராஜ்யம் நிறுவப்படுவது குறித்து அவனுக்குத் தெளிவாக விளக்கப்பட்டது. ‘’அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அது அந்தராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும். சொப் பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம்’‘ என்றான் தானி யேல். தானி 2:44, 45.தீஇவ 503.1

    ’’தானியேலிடம், ‘மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக் குத்தேவனும், மறைபொருளை வெளிப்படுத்துகிறவருமாய் இருக் கிறார்’ என்று சொன்னதன் மூலம் தேவனுடைய வல்லமையை நேபுகாத்நேச்சார் ஒத்துக்கொண்டான். தானி 2:47. சிலகாலம் தேவ னுக்குப் பயந்து நடந்தான். ஆனால், உலக ஆசையும் சுய உயர்வும் அவனை விட்டுப்போகவில்லை. ஆட்சியில் செழிப்பு இருந்ததால், மனதில் பெருமை நிறைந்தது. ஒருநாள் தேவனைக் கனப்படுத்து வதை நிறுத்திவிட்டான். மிகுந்த ஆர்வத்தோடும் வெறியோடும் சிலைவழிபாட்டை மீண்டும் துவக்கினான். தீஇவ 503.2

    ’பொன்னான அந்தத் தலைநீரே’ எனும் வார்த்தைகள் ராஜாவின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. வசனம் 38. இதனையும், அவன் சிலைவழிபாட்டிற்குத் திரும்பினதையும் அனுகூலமாக்கிக்கொண்ட அவனுடைய ராஜ்யத்தின்ஞானிகள், அவன் சொப்பனத்தில் கண்டது போலவே, ஒரு சிலையைச் செய்யவேண்டுமென்றும், அவனுடைய ராஜ்யத்தை அடையாளப்படுத்தின பொன்னான தலையை அனை வரும் காணக்கூடிய இடத்தில் நிறுத்தவேண்டுமென்றும் ஆலோசனை சொன்னார்கள்.தீஇவ 504.1

    அவர்களுடைய வஞ்சக ஆலோசனையை ஏற்றுக்கொண்ட வன், அதன்படியே செய்யவும், இன்னும் ஒருபடி மேலே செல்ல வும் தீர்மானித்தான். தான் சொப்பனத்தில் கண்டதைவிட, மிகவும் உயர்வாக அந்தச் சிலையைச் செய்ய விரும்பினான். தலை முதல் பாதம் வரையிலும் தன்னுடைய சிலைமதிப்பு குன்றாமலிருக்க, அதாவது, முற்றிலும் பொன்னாகவே இருக்க விரும்பினான். பாபி லோன் தேசமானது, மற்ற ராஜ்யங்களை நொறுக்கி, என்றென்றும் நிற்கக்கூடியதாகவும், நித்தியமும் அழியாமையும் சர்வவல்லமை யும் உடையதாகவும் இருப்பதாக அடையாளம் காட்ட விரும்பி னான்.தீஇவ 504.2

    அவருடைய புயங்களுக்கு முன் பூமியின் தேசங்களால் நிற்கக் கூடாதிருந்தது. என்றென்றும் நிலைநிற்கும் ஒரு ராஜ்யத்தையும் ராஜ வம்சத்தையும் ஏற்படுத்துவது அப்படியொரு வல்லமையான ராஜாவுக்கு மிகவும் ஏற்றதாகப்பட்டது. அதில், எல்லையற்ற பேரா சையும் சுயநலப்பெருமையும் கொண்டதால், அதனை நிறைவேற்றும் விதம் குறித்துத் தன்ஞானிகளிடம் ஆலோசனை கேட்டான். பெரிய சிலைகுறித்த அந்தச் சொப்பனத்தோடு தொடர்புடைய விசேஷித்த தேவசெயல்களை மறந்தான். அந்தச் சிலையின் முக்கியத்துவம் பற்றி தம் தாசனாகிய தானியேல் மூலம் இஸ்ரவேலின் தேவன் வெளிப்படுத்தினதையும், அதற்கு அவன் அர்த்தம் சொன்னதால் ராஜ்யத்தின் ஞானிகள் கொடும் சாவிலிருந்து காக்கப்பட்டதையும் மறந்தான்; இப்படியாக தங்கள் வல்லமையையும் மேன்மையையும் நிலைநாட்டுவதைத் தவிர மற்ற அனைத்தையும் மறந்து, பாபி லோனை மேலானதாகவும் சகலராலும் பணிந்துகொள்வதற்குத் தகுதியானதாகவும் உயர்த்தும் படி, தங்களால் முடிந்த ஒவ்வொரு வகையிலும், ராஜாவும் அவனுடைய அரசவை ஆலோசனைக்கார ரும் பெரிதும் முயன்றார்கள்.தீஇவ 504.3

    அச்சிலையை அடையாளமாக வைத்து, பூமியின் தேசங்களுக் கானதம் நோக்கத்தை ராஜாவுக்கும் மக்களுக்கும் தேவன் வெளிப் படுத்தினார். ஆனால், அது மனிதனின் வல்லமையை உயர்த்திக் காட்டுவதற்கான வழிவகையாக ஆக்கினார்கள். தானியேல் சொன்ன காரியத்தை புறக்கணித்து, மறக்கப் பார்த்தார்கள்; சத்தியத்தைத் திரித்து, தவறாகப் பயன்படுத்தப்பார்த்தார்கள். வருங்கால முக்கிய நிகழ்வுகளை மனிதரின் சிந்தைகளுக்கு வெளிப்படுத்த சிலை எனும் சின்னத்தை பரலோகம் காட்டியது. அதன் மூலம் எத்தகைய அறிவை உலகம் பெறவேண்டுமென்று தேவன் விரும்பினாரோ, அந்த அறிவு பரவுவதற்கு ஒரு தடையாக அந்தச் சின்னம் மாற விருந்தது. பேராசை கொண்ட மனிதரின் திட்டங்களின் மூலம் மனித இனத்திற்கான தேவ நோக்கத்தை அழிக்க முயன்றான் சாத்தான். தீமை கலந்திராத சத்தியம் இரட்சிப்பதற்கு ஏதுவான ஒரு மகா வல்லமை’ என்பதும், சுயத்தை உயர்த்தவும் மனிதரின் திட்டங்களை முன்னேற்றவும் அது பயன்பட்டால், அதுதீமைக்கான வல்லமையாக மாறிவிடும்’ என்பதும் மனித இனத்தின் சத்துருவுக்குத் தெரியும்.தீஇவ 505.1

    தான் மிகுதியாகச் சேர்த்து வைத்திருந்த ஐசுவரியத்திலிருந்து, பொன்னாலான ஒரு பெரிய சிலையைச் செய்யும்படி செய்தான் நேபு காத்நேச்சார். அவன் சொப்பனத்தில் கண்ட சிலையின் அனைத்து காரியங்களும் அதில் காணப்பட்டன. ஆனால், அது ஒரே ஒரு உலோ கத்தால் மாத்திரமே செய்யப்பட்டிருந்ததுதான் அதிலிருந்து வித்தி யாசமானயிருந்தது. தங்கள் அஞ்ஞான தெய்வங்களுக்கு மகத்தான சிலைகளைச் செய்வது அவர்களுக்குப் புதிதல்லவே. ஆனால், வனப்புமிக்க இச்சிலையைப் போன்று, மிகவும் மாட்சியாக, கம்பீர மாக இதுவரையிலும் எதையும் கல்தேயர் செய்ததில்லை . அது அறு பது முழ உயரமும் ஆறுமுழ அகலமும் கொண்டிருந்தது. எங்கும் எவ்விடத்திலும் சிலைவழிபாடு காணப்பட்ட ஒரு தேசத்தில், பாபி லோனின் மகிமையையும் அதன் மாட்சியையும் வல்லமையையும் சுட்டிக்காட்டியவாறு தூரா சமவெளியில் ஈடு இணையற்ற வனப் போடு நின்றிருந்த அச்சிலையை, ஆராதனைப் பொருளாக அவர் கள் பிரதிஷ்டைப்பண்ண நினைத்ததில் ஆச்சரியமேதுமில்லை. இந் தக்காரணத்தை முன்னிட்டு, அந்தச் சிலை பிரதிஷ்டை பண்ணப் படும் நாளன்று அதன் முன்பாக எல்லாரும் பணிந்து பாபிலோனிய வல்ல மைக்குத் தாங்கள் உண்மையாயிருப்பதைக் காட்டவேண்டும்’ என்று ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது.தீஇவ 505.2

    குறிக்கப்பட்ட நாள் வந்தது. ‘சகல ஜனங்கள், ஜாதிகள், பாஷைக்காரரிலிருந்து’ திரளான ஜனங்கள், தூரா சமவெளியில் கூடியிருந்தார்கள். இசை வாத்தியங்கள் முழங்கப்பட்டதும், அனைவருமே ‘தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொண் டார்கள். முக்கிய விளைவுகளைக் கொண்டிருந்த அந்நாளில், அந்தகார வல்லமைகள் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்ததுபோல் தோன்றியது; அத்தேசத்தில் நிலைகொண்டிருந்த சிலைவழிபாட்டு முறைகள் தேசிய மதமாக அங்கீகரிக்கப்படுவதற்கு ஒரு நிரந்தர அறிகுறியாக, அந்தப் பொற்சிலை வழிபாடு அமைந்தது. இஸ்ர வேலர்கள் பாபிலோனில் சிறைப்பட்டிருந்ததை, யூதரல்லாத எல்லா தேசத்தாருக்கும் ஓர் ஆசீர்வாதமாக அமையப்பண்ண தேவன் கொண்டிருந்த நோக்கத்தை அதன் மூலம் தோற்கடிக்க நினைத்தான் சாத் தான்.தீஇவ 506.1

    ஆனால் தேவனுடைய தீர்மானமோ வேறுவிதமாயிருந்தது. மனித வல்லமையின் அடையாளமான சிலைவழிபாட்டிற்கு அனை வருமே தங்கள் முழங்கால்களை முடக்கிவிடவில்லை. திரளான வர்கள் பணிந்து கொண்டபோதிலும், அவ்வாறு செய்து பரலோக தேவனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தக்கூடாதென்ற உறுதியான தீர் மானத்தோடு மூன்று பேர் அவர்கள் மத்தியில் இருந்தனர். இராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமே அவர்களின் தேவனாயிருந்தார்; அவர்கள் வேறு எவரையும் தொழ விரும்பவில்லை.தீஇவ 506.2

    ராஜாவின் கண்டிப்பான கட்டளைக்குக் கீழ்ப்படியாதிருக்க அங்கிருந்த சிலர் தைரியங்கொண்டார்களென்ற செய்தியானது வெற்றி மிதப்பிலிருந்த நேபுகாத்நேச்சாருக்குத் தெரியவந்தது. தானியேலின் நண்பர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிலாக்கியங்கள் ளினிமித்தம் பொறாமை கொண்டஞானிகள் சிலர், ராஜாவின் கட்ட ளைகளை அவர்கள் மீறினது குறித்து அவனிடம் சொன்னார்கள். ‘’ராஜாவே, நீர் என்றும் வாழ்க . பாபிலோன் மாகாணத்தின் காரியங் களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக் ஆபேத் நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர் களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள்’ என்று சொன்னார்கள்.தீஇவ 506.3

    அவர்களைத் தனக்கு முன்பாகக் கொண்டுவருமாறு ராஜாகட் டளையிட்டான். ‘’நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனை செய்யா மலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளாமலும் இருந்தது மெய்தானா?” என்று விசாரித்தான். பெருந்திரளானவர்க ளோடு ஒத்துப்போகுமாறு அவர்களை மிரட்டி இணங்கச் செய்ய முயன்றான். தன்னுடைய கட்டளைக்குத்தொடர்ந்து கீழ்ப்படிய மறுத் தால், அவர்கள் சந்திக்க வேண்டியிருந்த தண்டனையை நினைவு படுத்தும் விதத்தில், அக்கினிச் சூளையைச் சுட்டிக்காட்டினான். ஆனால், பரலோக தேவனிடத்தில் தாங்கள் கொண்டிருந்த மெய்ப் பற்றையும் அவர் விடுதலையளிப் பதில் தங்களுக்கிருந்த விசுவா சத்தையும் அவர்கள் உறுதியாகச் சாட்சியிட்டார்கள். சிலைக்கு முன்பாகப் பணிவது தொழுகை செய்வதின் அடையாளம் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். அத்தகைய தொழுகையைத் தேவ னுக்கு மாத்திரமே செலுத்த அவர்கள் விரும்பினர்.தீஇவ 507.1

    அந்த மூன்று எபிரெயர்களும் ராஜாவுக்கு முன்பாக நின்ற போது, தன்னுடைய ராஜ்யத்தின் மற்ற ஞானிகளிடம் இல்லாத ஒன்றை அவர்கள் பெற்றிருந்ததை அவன் அறிந்திருந்தான். ஒவ் வொரு கடமையைச் செய்வதிலும் அவர்கள் உண்மையோடு இருந்து வந்தனர். எனவே, அவர்களுக்கு இன்னொரு தருணத்தைக் கொடுக்க விரும்பினான். சிலையைத் தொழுதுகொள்வதில் திரளானவர்க ளோடு ஒத்துப்போக, தாங்கள் தயாராக இருந்ததை நிரூபித்துக் காட்டினால் மாத்திரமே அவர்களுக்குச் சகலமும் சுகமாக முடிய இருந்தது. ‘’பணிந்து கொள்ளாதிருந்தீர்களேயாகில் அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்” என் றான் அவன். பிறகு, எவருக்கும் அஞ்சாதோரணையோடு தன் கரத்தை நீட்டி, ‘’உங்களை என் கைக்குத் தப்புவிக்கப் போகிறதேவன் யார்?” என்று கேட்டான்.தீஇவ 507.2

    இராஜாவின் மிரட்டல்கள் வீணாயிருந்தன. சர்வலோகத்தை ஆளுபவரின் மேல் அம்மனிதர் கொண்டிருந்த மெய்ப்பற்றை அவ னால் அசைக்க முடியவில்லை. ‘தேவனுக்குக் கீழ்ப்படியாமை அவமதிப்பையும் அழிவையும் மரணத்தையும் கொண்டுவரும்’ என்பதையும், கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்’ என்பதையும், ‘அதுவே, சகல செழிப்பிற்கும் அடித்தளம்’ என்ப தையும் தங்கள் பிதாக்களின் வரலாற்றிலிருந்து அவர்கள் கற்றிருந் தார்கள். அந்தச் சூளையை அமைதலோடு பார்த்தவர்களாக சாத் ராக், மேஷாக், ஆபேத்நேகோ எனும் அவர்கள் ராஜாவை நோக்கி, ‘’நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங் கள் தேவன் எங்களைத் தப்புவிக்கவல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கனிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” என்றார்கள். தங்களை விடுவிப்பதில் தேவன் மகிமைப்படுவார்’ என்று சொன்னபோது, அவர்களுடைய விசுவாசம் பெலப்பட்டது. தேவனில் கொண்ட முழு நம்பிக்கையால், வெற்றியின் நிச்சயத்தோடு, ‘’விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத் தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜா வாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது’‘ என்றார்கள்.தீஇவ 507.3

    இராஜாவின் கோபம் எல்லையைக் கடந்தது. இழிவாகக் கரு தப்பட்டும், சிறைப்பட்டுமிருந்த இஸ்ரவேலரான சாத்தராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு எதிராக, அவனுக்குக் கடுங்கோப் மூண்டபடியால், அவனுடைய முகநாடிவேறுபட்டது. சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அதிக மாய்ச் சூடாக்கும் படி சொன்னான். பிறகு, அவர்களுக்குத் தண்ட னையை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாக, இஸ்ரவேலின் தேவ னைத் தொழுதுகொள்ளும் அம்மனிதரைக் கட்டுமாறு தன் இராணு வத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.தீஇவ 508.1

    ’அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்க ளோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜா வின் கட்டளைகடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக் கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டு போன புருஷரைக் கொன்று போட்டது’.தீஇவ 508.2

    ஆனால், தமக்குச் சொந்தமானவர்களைத் தேவன் மறக்க வில்லை. தம்முடைய சாட்சியாளர்கள் சூளைக்குள்ளே எறியப்பட்ட டதும், இரட்சகர்தாமே தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். அவர்கள் அனைவரும் அக்கினியின் நடுவிலே நடந்தார்கள். வெப்பத்திற்கும் குளிருக்கும் ஆண்டவரான வரிடத்தில், அக்கினியானது தன் பட்சிக்கிற தன்மையை இழந்து போனது.தீஇவ 509.1

    தன்னை எதிர்த்துப் பேசினவர்கள் முற்றிலும் அழிவதைக் காணும் ஆவலோடு, தன் சிங்காசனத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா. ஆனால் அவனுடைய வெற்றி மிதப்புதிடீ ரென மாறியது. கொழுந்துவிட்டு எரிந்த அக்கினியைச் சிங்காசனத் திலிருந்து உற்றுநோக்கியவனின் முகம் வெளிறிவந்ததைப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பிரபுக்கள் கவனித்தார்கள்.தீஇவ 509.2

    கிலிபிடித்தவனாய் தன் பிரபுக்களிடம், ‘’மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம். இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவு கிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது’‘ என்றான்.தீஇவ 509.3

    தேவகுமாரன் எப்படி இருப்பாரென்பது அஞ்ஞான அரசனுக்கு எப்படித் தெரிந்திருந்தது? எபிரெயர் பலர் அரசாங்கத்தில் பதவிவகித் தார்கள். அவர்கள் தங்கள் வாழ்வாலும் நடத்தையாலும் தேவனைப் பற்றிய உண்மையை அவனுக்கு வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர் களுடைய விசுவாசத்தைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் கள் தயங்காமல் விளக்கம் கூறியிருப்பார்கள். நீதியின் நியதிகளை எளிமையாகவும் தெளிவாகவும் கற்றுக்கொடுத்து, தாங்கள் ஆராதனை செய்த தேவனை அறிமுகப்படுத்தியிருப்பார்கள். வரப் போகிற மீட்பராகிய கிறிஸ்துவைப் பற்றியும் கூறியிருப்பார்கள். அந்த மீட்பராகிய தேவகுமாரனே நான்காம் நபர் என்பதை ராஜா கண்டுகொண்டான்.’தீஇவ 509.4

    இப்பொழுதும், தன்னுடைய மேன்மையையும் தகுதியையும் மறந்து, சிங்காசனத்தைவிட்டு இறங்கி, அக்கினிச் சூளையின் வாச லண்டைக்கு வந்து, ‘’உன்னதமான தேவனுடைய தாசரே, நீங்கள் வெளியே வாருங்கள்’‘ என்றான் நேபுகாத்நேச்சார்.தீஇவ 509.5

    திரளான ஜனங்களுக்கு முன்பாக வெளியே வந்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகா என்பவர்கள் தாங்கள் எவ்வித சேதமுமின்றி காட்சியளித்தார்கள். அவர்களுடைய இரட்சகரின் பிரசன்னம் தீமை யிலிருந்து அவர்களைக் காத்துக்கொண்டது. அவர்களின் கட்டுகள் மாத்திரமே எரிந்து போயின. ‘’தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷரு டைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களு டைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப் படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்த தைக் கண்டார்கள்’.தீஇவ 509.6

    மிக ஆடம்பரமாக அங்கு நிறுவப்பட்டிருந்த பொற்சிலைமறக் கப்பட்டுப்போனது. ஜீவனுள்ள தேவனின் பிரசன்னத்தில் மனிதர் பயந்து, நடுங்கினார்கள். ‘’சாத்ராக், மோஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களு டைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணி யாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங் கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்” என்று தாழ்மையோடு சொல்லவேண்டிய நிலைக்குள்ளானான் ராஜா.தீஇவ 510.1

    ’சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவ னுக்கு விரோதமாகத் தூஷண் வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண் டித்துப் போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும்’ என்ற கட்டளையை நேபுகாத்நேச்சார் பிறப்பிக்கத்தக்கதாக அந்நாளின் அனுபவங்கள் ஏதுவாயின. இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை’‘ என்று அக்கட்டளைக்கான கார ணத்தையும் கூறினான்.தீஇவ 510.2

    எபிரெயர்களின் தேவனுடைய அதிகாரமும் வல்லமையும் மேன்மையான தொழுகைக்குப் பாத்திரமானதென்று தான் கண்டு கொண்டதை இதுபோன்ற வார்த்தைகளால், தூரதேசங்களிலிருந்த பூமியின் சகல ஜனங்களுக்கும் பரவச் செய்ய பெருமுயற்சி எடுத் துக்கொண்டான் பாபிலோனின் ராஜா. தமக்கு மரியாதை செலுத்த ராஜா எடுத்துக்கொண்டமுயற்சியிலும், தன்விசுவாச அறிக்கையைப் பாபிலோனின் ராஜ்யத்தைப் போலவே எங்கும் பரவச் செய்ய அவர் முயன்றதிலும் தேவன் பிரியப்பட்டார்.தீஇவ 510.3

    பொதுமக்கள் அறியும்படி அறிக்கை பண்ணினதும், மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் முன்பாக பரலோக தேவனை மேன் மை படுத்த முயற்சித்ததும் ராஜாவின் பக்கம் நீதியாயிருந்தது; ஆனால், தன் குடிமக்களும் அதேபோன்று விசுவாச அறிக்கை பண்ணவேண்டும், பயபக்திகாட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்த முயற்சித்ததில் தான், ஒரு தற்காலிக அரசனென்ற தன் உரிமையை மீறினான் நேபுகாத்நேச்சார். பொற்சிலையை வணங்க மறுத்தவர் களை அக்கினியில் போடுவதாகச் சட்டமியற்ற அவனுக்கு அதிகா ரம் இல்லாதது போலவே, தேவனைத் தொழாதவர்களைக் கொல்லு வதாக மிரட்டுவதற்கும் சட்டப்படியாகவோ, ஒழுக்கப்படியாகவோ அவனுக்கு எவ்வித உரிமையும் இல்லாதிருந்தது. மனிதர் தமக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று தேவன் ஒருபோதும் கட்டாயப்படுத்து வது கிடையாது. தாங்கள் யாரைச் சேவிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள அனைவருக்கும் சுதந்தரம் கொடுத்துள்ளார்.தீஇவ 511.1

    ஒடுக்கப்பட்டோருக்குத் தாம் ஆதரவாக இருப்பதையும், பர லோக அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்யும் பூலோகவல்லமை கள் யாவையும் தாம் கடிந்துகொள்வதையும், தம் மெய் தாசர்களை விடுவித்ததின் மூலம் தேவன் தெரியப்படுத்தினார். தாங்கள் தொழுது கொண்டவரின்பேரில் தங்களுக்கிருந்த விசுவாசத்தைப் பாபிலோன் தேசம் முழுவதிலும் அந்த மூன்று எபிரெயரும் தெரியப்படுத்தினார்கள்; தேவனையே நம்பிக்கையாகக் கொண்டிருந்தார்கள். சோதனை ஏற் பட்ட வேளையில், ‘ நீ தண்ணீர்களை கடக்கும்போது, நான் உன் னோடு இருப்பேன்; நீ ஆறுகளை கடக்கும்போது அவைகள் உன் மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப் பாய்; அக்கினிஜுவாலைஉன்பேரில் பற்றாது’ எனும் வாக்குத்தத்தை நினைவுகூர்ந்தார்கள். ஏசா 43:2. ஜீவ வார்த்தையின் பேரிலிருந்த அவர்களுடைய விசுவாசமானது, ஓர் அற்புதமான விதத்தில், அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் கனம்பண்ணப்பட்டது. அவர்கள் அற்புதமாக விடுவிக்கப்பட்ட செய்தியானது, பல்வேறு நாடுகளிலிருந்து நேபுகாத்நேச்சாரால் பிரதிஷ்டை விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த பிரதிநிதிகள் மூலம் அநேக நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தம் பிள்ளைகளின் உத்தமத்தின் நிமித்தம் பூமியெங்கிலும் தேவன் மகிமைப்பட்டார்.தீஇவ 512.1

    தூரா சமவெளியில் அந்த எபிரெய வாலிபரின் அனுபவத்தி லிருந்து முக்கியப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். நாம் வாழும் இன்றைய நாட்களிலும், பொறாமையாலும் மதவெறியாலும் நிறைந்து, சாத்தானால் ஊக்கம் பெற்றோரின் கரங்களில் இகழ்ச்சி யும் நிந்தனையும் அடையும்படி, களங்கமற்ற தேவ ஊழியர்கள் பலர் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். விசேஷமாக, நான்காம் கற்பனை யின் ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்கிறவர்களுக்கு எதிராகமனிதர்கடுங்கோபங்கொள்வார்கள்; இவர்கள் மரணத்திற்குப் பாத்திரவான்களெனத் தீர்ப்பளித்து உலகளாவிய சட்டம் ஒன்று இறுதியில் கொண்டுவரப்படும்.தீஇவ 512.2

    தேவமக்களுக்கு நேரிடும் இக்கட்டின் காலமானது, தடுமாற்ற மற்ற விசுவாசத்திற்கு ஓர் அழைப்பாயிருக்கிறது. ‘தேவன் மாத் திரமே தங்கள் தொழுகையின் நாயகன்’ என்பதையும் எவ்வித கார ணத்தாலும், அது தங்கள் ஜீவனேயானாலும், பொய்த் தொழுகைக் குள் கொஞ்சங்கூடதங்களை இழுத்துச் செல்லமுடியாது’ என்பதை யும் அவருடைய பிள்ளைகள் வெளிப்படுத்த வேண்டும். நித்திய தேவனின் வார்த்தையோடு ஒப்பிடும்போது அநித்தியரும் பாவி களுமான மனிதரின் கட்டளைகள், உத்தம் இருதயமுள்ளவர்களின் பார்வையில் ஒன்றுமில்லாததாகிவிடும். சிறையிருப்பானாலும் நாடு கடத்தலானாலும் மரணமானாலும் சத்தியத்திற்கு மட்டுமே கீழ்ப்படி வார்கள்.தீஇவ 512.3

    சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ காலத்தில் நடந்ததைப் போல, பூலோக வரலாற்றின் முடிவுகாலத்திலும், நீதிக்காக உறுதி யோடு நிற்பவர்களின் சார்பில் தேவன் வல்லமையாகக் கிரியை செய்வார். அக்கினிச் சூளையில் எபிரெய ஒழுக்கச்சீலர்களோடு நடந்தவர் தம் பின்னடியார்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் இருப்பார். நிலையான அவருடைய பிரசன்னம் நம்மை ஆற்றி, தேற்றும். எந்தவொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்தைப் போன்ற ஆபத்து நேரிடும் காலத் தின் மத்தியிலும், அவரால் தெரிந்துகொள்ளப்பட்டோர் அசையாது நிற்பார்கள். சாத்தான் தன்னுடைய சகல தீய சேனைகளோடு இருந் தாலும், நீதிமான்களில் பலவீனரைக்கூட அழிக்கமுடியாது. பெலத் தில் வல்லவர்களானதூதர்கள் அவர்களைப் பாதுகாப்பார்கள். தம் மில் நம்பிக்கை வைத்தோரை முற்று முடிய காக்கவல்ல யேகோவா தாமே தேவாதி தேவனாக’ அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்து வார்.தீஇவ 513.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents