Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    43 - காணமுடியா கண்காணி

    தானியேலுடைய வாழ்வின் கடைசிகாலத்தில், தேசத்திலே மாபெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. அறுபது ஆண்டு களுக்கு முன்னர் அவனும் அவனுடைய எபிரெய நண்பர்களும் அங்கு சிறைக்கைதிகளாகக் கொண்டுவரப்பட்டனர். ‘ஜாதிகளில் மகாபலவானாகிய நேபுகாத்நேச்சார் மரித்துப்போனான். எசே 28:7. ‘பூமி முழுவதும் புகழும் புகழ்ச்சியும்’ கொண்டிருந்த பாபி லோன் அவனுக்குப் பின் வந்தவர்களின் ஞானமற்ற ஆட்சியைப் சந்தித்தது. ஆகவே, அதில் சீரான, உறுதியான சீர்குலைவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.தீஇவ 522.1

    நேபுகாத்நேச்சாரின் பேரன் பெல்ஷாத்சாரின் மூடத்தனத்தாலும் பெலவீனத்தாலும் பெருமை வாய்ந்த பாபிலோன் சீக்கிரத்தில் விழ இருந்தது. இராஜாங்க அதிகாரத்தில் பங்குகொள்ள தன் வாலிப வயதிலேயே தெரிந்துகொள்ளப்பட்ட பெல்ஷாத்சார் தன் வல்லமை யில் பெருமை கொண்டான்; பரலோக தேவனுக்கு எதிராக தன் இரு தயத்தை உயர்த்தினான். தேவசித்தத்தைத் தெரிந்து கொள்ளவும், அதற்குக் கீழ்ப்படியவும், தன் கடமையை அறிந்துகொள்ளவும் அநேகதருணங்கள் அவனுக்குக் கிடைத்தன. தேவகட்டளைப்படி, தன்னுடைய தாத்தா மனித சமுதாயத்தைவிட்டு தள்ளுண்டதை அவன் அறிந்திருந்தான். நேபுகாத்நேச்சார் மனமாறியது பற்றியும், அவன் அற்புதமாகக் குணமானது பற்றியும் அவன் நன்கு அறிந் திருந்தான். ஆனால், தான் ஒருபோதும் மறக்கக்கூடாத பாடங்களை மறந்துபோகும்படி, சிற்றின்ப நாட்டத்திற்கும் சுயமகிமைக்கும் இடங்கொடுத்தான். கிருபையாய் தனக்கு அருளப்பட்டிருந்த தரு ணங்களை வீணடித்தான் : சத்தியத்தை நன்கு அறியும்படி தனக்குக் கைகூடியிருந்த வழிவகைகளைப் பயன்படுத்த மறந்தான். சொல்ல முடியா வேதனையையும் இகழ்ச்சியையும் விலை கொடுத்து, நேபு காத்நேச்சார் இறுதியில் பெற்றுக்கொண்ட பாடத்தைக் கண்டு கொள் ளாததுபோல வாழ்ந்து வந்தான் பெல்ஷாத்சார்.தீஇவ 522.2

    அதன்பிறகு வெகுநாட்கள் செல்லவில்லை; காரியங்கள் தலை கீழாய் மாறின. மேதிய மற்றும் பெர்சிய கூட்டுப்படைகளின் பிர தான தளபதியும், மேதியனான தரியுவின் சகோதரனுடைய குமார னுமாகிய கோரேஸால் பாபிலோன் முற்றுகையிடப்பட்டது. பிர மாண்ட மதில்களாலும் வெண்கலக் கதவுகளாலும் ஐப்பிராத்து நதி யின் பாதுகாப்பாலும் ஏராளமான உணவுப்பொருட்களின் சேமிப் பாலும், கைப்பற்ற இயலாததாகத் தோன்றின கோட்டைக்குள் பாது காப்பாக உணர்ந்த சுகபோகி மன்னன், கேளிக்கையிலும் களியாட் டத்திலும் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தான்.தீஇவ 523.1

    விளைவை எண்ணாது, தான் பாதுகாப்புடன் இருப்பதாக எண்ணி, தன் அகந்தையாலும் அராஜகத்தாலும், ‘தன் பிரபுக்களில் ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்து அந்த ஆயிரம் பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான்’ பெல்ஷாத்சார். செல்வத்தாலும் அதிகாரத்தாலும் வரக்கூடிய சகல ஆடம்பரங்களும், அந்த விருந் துக்குப் பொலிவு சேர்த்தன. அரச விருந்தில் கலந்துகொண்டவிருந் தினர்களில், அழகுப் பெண்கள் தங்கள் வசீகரத்தோடு காணப்பட் டனர். கல்வியிலும் அறிவிலும் சிறந்த மனிதர் அங்கிருந்தனர். பிர புக்களும் அரசவைப் பிரமுகர்களும் தண்ணீர் அருந்துவது போல மதுவருந்தி, அது தந்த வெறியால் கூத்தாடினர்.தீஇவ 523.2

    இழிவான போதையால் புத்தி பேதலிக்க, கீழ்த்தரமான உணர்வு களும் ஆசைகளும் உச்சக்கட்டத்தை அடைய, அந்த முறை கெட்ட வெறியாட்டத்திற்கு ராஜாதாமே தலைமை தாங்கி நின்றார். விருந்து மும்முரமாகப் போய்க்கொண்டிருக்க, அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளிப் பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக் களும் தன் மனைவிகளும் தன்வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். ‘ தான் தன் கரங்களில் எடுக்கக்கூடாத அளவிற்கு எதுவுமே பரிசுத்தமானதல்ல வென்று காட்ட விரும்பினார் ராஜா. ‘பொற்பாத்திரங்களைக் கொண்டு வந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளி யும் வெண் கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.தீஇவ 523.3

    சிலைவழிபாட்டுக் கேளிக்கையை நம் கண்ணால் காண முடி யாத கண்காணி ஒருவர் பரலோகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந் ததையும், தெய்வ நிந்தனையான அச்செயலையும் சிலை வழி பாட் டிற்கொத்த அக்காரியத்தை அவன் கண்டதையும், பரிசுத்தமற்ற அக்கேளிக்கையின் சத்தத்தைக் கேட்டதையும் பெல்ஷாத்சார் கொஞ்சங்கூட எண்ணிப்பார்க்கவில்லை. அழைக்கப்படா அவ் விருந்தாளி சீக்கிரத்திலேயே தம் பிரசன்னத்தை அங்கு உணர்த்தி னான். கேளிக்கை உச்சக்கட்டத்தை அடைந்தபோது, ரத்தக்கறை ஏதுமற்ற ஒரு கரம் அங்குத் தோன்றி, அக்கினிபோல் ஜொலித்த வார்த்தைகளை அரண்மனைச் சுவரின் மேல் எழுதியது. அங்குக் கூடியிருந்த பெருந்திரளானவர்கள் அவ்வார்த்தைகளை அறிய வில்லை. ஆனாலும், இப்போது மனச்சாட்சியில் குத்துண்டராஜா வுக்கும் அவனுடைய விருந்தாளிகளுக்கும் அழிவின் அறிகுறியாக அவை இருந்தன.தீஇவ 524.1

    பேரிரைச்சலோடு காணப்பட்ட கேளிக்கையில் இப்போது மெளனம் குடிகொண்டது. அந்தக் கரம் விநோதமான வார்த்தை களை மெல்ல எழுதினதை இனந்தெரியாப் பயத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் தீய வாழ்வின் கிரியைகள், ஒரு பரந்த காட்சியாக அவர்கள் முன் கடந்து சென்றன. நித்திய தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக கூடி நின்ற வர்கள்போல அவர்கள் காணப்பட்டனர். ஆனால், இத்தனை நேர மும் அவருடைய வல்லமைக்கு எதிராகத்தான் அவர்கள் செயல்பட் டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்கு முன்பாக களிப்பும், தூஷணப் பேச்சும் சிரிப்பும் காணப்பட்ட அந்த இடத்தில் இப்போது வெளிறிய முகங்களும் பயத்தின் அழுகுரல்களும் கேட்டன. தேவன் மனிதரைப் பயங்கொள்ளச் செய்யும்போது, தங்கள் பயத்தின் ஆழத்தை அவர்களால் மறைக்கவே முடியாது.தீஇவ 524.2

    கர்த்தர் உன்னை
    உன் சத்துருக்களின் கைக்கு
    நீங்கலாக்கி மீட்பார்.
    தீஇவ 526.1

    மீகா 4:10.

    அவர்கள் அனைவரிலும் அதிகமாகப் பயந்தது பெல்ஷாத்சார் தான். அன்றிரவு பாபிலோனின் அரசவையில் பரலோக தேவனுக்கு எதிரான கலகம் உச்சக்கட்டத்தை அடைந்ததற்கு மற்ற அனைவரை யும் காட்டிலும் அவன்தான் அதிக பொறுப்பாளியாவான். யாருடைய வல்லமைக்கு எதிர்த்து நின்றார்களோ, யாருக்கு எதிராகத்தூஷணம் பேசினார்களோ அவருடைய பிரதிநிதியும் காணமுடியாக் கண் காணியுமானவரின் பிரசன்னத்தில் பயத்தால் செயலற்று நின்றான் ராஜா. அவனுடைய மனச்சாட்சி விழித்துக்கொண்டது. அவனுடைய இடுப்பின் கட்டுகள் தகர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோ டொன்று மோதிக்கொண்டது. அவபக்தியால் பரலோகத்தின் தேவ னுக்கு எதிராகத் தன்னை உயர்த்தி, தன்னுடைய சுய வல்லமையில் நம்பிக்கை கொண்டிருந்தான் பெல்ஷாத்சார். நீ இப்படிச் செய்வ தென்ன?’ என்று தன்னிடம் கேட்கும் துணிவு எவருக்கும் இல்லை யென்று அவன் நினைத்திருந்தான். ஆனால், தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த உக்கிராணத்துவத்திற்குதான் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் மென்றும், தான் வீணடித்த தருணங்களுக்கும் தன்னுடைய திமிரான போக்கிற்கும் தன்னால் சாக்குப்போக்குச் சொல்ல முடியாதென்றும் இப்போது உணர்ந்தான்.தீஇவ 527.1

    ஜொலித்துக்கொண்டிருந்த வார்த்தைகளை வாசிக்க முயன் றும் ராஜாவால் முடியவில்லை . ஆனால், அவனால் அறியமுடியா ரகசியமும், அவனால் பேச முடியாததும், புரிய முடியாததுமான வல் லமையும் அங்குக் காணப்பட்டது. நம்பிக்கையற்ற நிலையில், தன் அரசவையிலிருந்தஞானிகளின் உதவியை நாடினான். அந்த வார்த் தைகளை வாசிக்குமாறு குறிசொல்கிறவர்களையும், கல்தேயரை யும், வான சாஸ்திரிகளையும் உரத்த சத்தத்துடன் அவன் அழைத் தது, அங்குக் கூடியிருந்தவர்கள் மத்தியில் எதிரொலித்தது. இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிற வன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப் பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப் பான்” என்று வாக்குரைத்தான். விலையுயர்ந்த வெகுமதிகள் அறி விக்கப்பட் டிருந்த போதிலும், தன் நம்பிக்கைக்கு உகந்த ஆலோச கர்களிடம் அவன் கொடுத்த வேண்டுகோளால் எவ்விதப் பயனும் இல்லாதிருந்தது. பரலோகஞானத்தை வாங்கவோ விற்கவோ முடி யாது. ‘ராஜாவின் ஞானிகளெல்லாரும் அந்த எழுத்தை வாசிக்கவும் அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.’ முந்தைய தலைமுறையின் ஞானிகளால் நேபுகாத்நேச்சாரின் சொப் பனத்திற்கு அர்த்தம் சொல்ல முடியாதது போலவே, அப்போதிருந்த ஞானிகளாலும் அந்த விநோத வார்த்தைகளை வாசிக்க முடிய வில்லை .தீஇவ 527.2

    பிறகு, அரை நூற்றாண்டுக்கு முன் ராஜாவாகிய நேபுகாத்நேச் சாருக்குக் கொடுக்கப்பட்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தை யும் அவனுக்குத் தெரியப்படுத்தின தானியேலை நினைவு படுத் தினாள் ராஜாவின் தாயார். ‘’ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வேறு படவும் வேண்டியதில்லை. உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக் கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்தஞானமும் அவனிடத்தில் காணப் பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாரென் னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத் தார். ராஜாவினால் பெல் தெஷாத்சாரென்னும் பெயரிடப்பட்ட அந்த தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிற தும், புதைபொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவை களைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவி யும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக் கப்படட்டும். அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள்.’‘ தானி 5:10-12.தீஇவ 528.1

    ’அப்பொழுது தானியேல் ராஜாவின் முன் உள்ளே அழைத்து வந்து விடப்பட்டான். ‘ மிகவும் பிரயாசப்பட்டு பழைய நிலைக்கு வந்த பெல்ஷாத்சார், தீர்க்கதரிசியிடம் இப்படியாகச் சொன்னான்: ‘’நீ என் பிதாவாகிய ராஜா யூதேயாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா? உனக்குள்ளே தேவர் களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற் கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரி களும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக் கொண்டுவரப்பட் டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று. பொருளை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமென்று உன் னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன் னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற் சரப் பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப் பாய் என்றான்’’.தீஇவ 528.2

    பயத்தால் பீடிக்கப்பட்டிருந்த கூட்டத்தினருக்குமுன், ராஜா வாக்களித்த சன்மானத்தால் தானியேல் அசையவில்லை. உன்னத மானவரின் ஊழியன் எனும் அடக்கமான மதிப்புடன், மழுப்பலான வார்த்தைகளைப் பேசுவதற்கல்ல, அழிவின் செய்தியை விளக் கிக்கூற அங்கு அவன் நின்றிருந்தான். ‘’உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவ னுக்குக் கொடும், இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன்’‘ என்றான்.தீஇவ 529.1

    பெல்ஷாத்சாருக்கு மிகவும் பரிச்சயமான காரியங்களை முத லில் அவனுக்கு நினைவூட்டினான் தீர்க்கதரிசி. ஆனால், தன்னை இரட்சிப்புக்கேதுவாக வழிநடத்தியிருக்கக்கூடிய தாழ்மை எனும் பாடத்தை அவற்றிலிருந்து அவன் கற்றிருக்கவில்லை. நேபுகாத் நேச்சாரின் பாவம் மற்றும் விழுகை குறித்தும், அவனிடம் தேவன் அணுகிய முறைகள் குறித்தும் சொன்னான். அதாவது, அவனுக்கு அருளப்பட்டிருந்த ஆளுகை, மகிமை , அவன் அகந்தையால் உண் டான தேவ நியாயத்தீர்ப்பு, இறுதியில் இஸ்ரவேலின் தேவனுடைய இரக்கத்தையும் வல்லமையையும் அவன் ஒத்துக்கொண்டது ஆகிய வற்றைக் கூறினான். அதன்பிறகு, பெல்ஷாத்சாரின் மிகுந்த துன் மார்க்கத்திற்காக அழுத்தம் திருத்தமான வார்த்தைகளால் அவ னைக் கடிந்துகொண்டான். இராஜாவின் பாவங்களை அவன் முன் நிறுத்தி, அவன் கற்றிருக்கவேண்டியதும், ஆனால் கல்லாது போனது மான பாடங்களைச் சுட்டிக்காட்டினான். தன் பாட்டனின் அனுப் வத்தைப் பெல்ஷாத்சார் சரிவரப் படித்திருக்கவில்லை; முக்கியம் வாய்ந்த அந்நிகழ்வுகளின் எச்சரிப்புகளுக்கு அவன் செவிகொடுக் கவும் இல்லை. மெய்தேவனை அறியவும் அவருக்குக் கீழ்ப்படிய வும் அவனுக்குத் தருணம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதனை அவன் யோசித்துப் பார்க்கவில்லை; தன் கலகத்திற்கான பலனைச் சம்பாதிக்க இருந்தான்.தீஇவ 529.2

    ’’பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார் கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர் கள்; இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத் திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உண ராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும் பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர். அப்பொழுது அந்தக்கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப் பட்டது’‘ என்றான் தீர்க்கதரிசி.தீஇவ 529.3

    பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டு, சுவரின் மேல் எழுதப் பட்டிருந்த செய்தியை, “மெனெ, மெனெ, தெக்கேல், உப்பார்சின்’‘ என்று வாசித்தான். அந்த வார்த்தைகளை எழுதினகரம் மறைந்துவிட் டது; ஆனால் அந்த நான்கு வார்த்தைகளும் இன்னமும் மிகத் தெளிவு டன் ஜொலித்துக்கொண்டிருந்தன. பின்வரும் செய்தியைத் தீர்க்க தரிசி சொல்லச் சொல்ல, மூச்சற்றவர்கள்போலக் கேட்டுக்கொண்டி ருந்தார்கள் மக்கள்.தீஇவ 530.1

    ’’இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே’ என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினான் என்றும், ‘தெக்கேல்’ என்பதற்கு, நீதராசிலே நிறுக்கப்பட்டு, குறையக்காணப் பட்டாய் என்றும், ‘பெரேஸ்’ என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்த மாம்’‘ என்றான்.தீஇவ 530.2

    மிகவும் மூடத்தனமான அந்தக் கடைசி இரவிலே, தங்கள் பாவ அளவையும், கல்தேய ராஜ்யத்தின் பாவ அளவையும் பெல்ஷாத்சா ரும் அவனுடைய பிரபுக்களும் நிரம்பப்பண்ணினார்கள். அங்கு நேரிடவிருந்த தீமையை தேவனுடைய தாமதிக்கும் கரங்களால், அதற்கு மேலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தம்முடைய பிர மாணத்தின் மேல் பயபக்தி கொள்வது குறித்து, ஏராளமான தேவ செயல்கள் மூலம் அவர்களுக்குப் போதிக்க முயன்றார் தேவன். எந்த மக்களுடைய வழக்கு இப்போது பரலோகத்திற்கு எட்டியிருந் ததோ, அவர்களைப்பற்றி, ‘’பாபிலோனைக் குணமாக்கும் படிப் பார்த்தோம். அது குணமாகவில்லை’‘ என்று சொன்னான். எரே 51:9. மனித இருதயத்தின் விநோதமான மாறுபாட்டின் நிமித்தம் இறுதியில், மாற்ற இயலாத தண்டனை வழங்குவது தேவையான தென்று தேவன் கண்டார். பெல்ஷாத்சார் விழுந்துபோக இருந்தான்; அவனுடைய ராஜ்யம் மற்றவர்களிடம் கைமாற இருந்தது.தீஇவ 530.3

    தீர்க்கதரிசி பேசி முடிந்ததும், தான் சொல்லியிருந்தபடியே சன் மானங்களை வழங்கராஜா கட்டளையிட்டான். அதன்படி, ‘தானி யேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற் சரப் பணியையும் தரிப்பித்து, ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரி யாயிருப்பவன் என்று அவனைக் குறித்துப் பறைசாற்றினார்கள்.’தீஇவ 531.1

    தேவனுக்கு எதிரான தூஷணம்பேசராஜாவும் ஆலோசகரும் ஒருவருக்கு ஒருவர் முந்திகொண்டு பேசும் இன்பந்தரும் இரவா னது’ திடீரென பயமும் பயங்கரமும் கொண்ட நாளாக மாறுமென்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே வேதாகமம் முன்னுரைத்திருந் தது. இப்பொழுதும், இச்சம்பவத்தின் கதாபாத்திரங்கள் பிறக்கும் முன்னரேயே, வேதாகமத்தின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது போல, நிகழ்ச்சிக்குப்பின் நிகழ்ச்சியாக முக்கிய நிகழ்வுகள் மிகச் சரியாக நிகழ்ந்த ன.தீஇவ 531.2

    ஏற்கனவே அழிவு தீர்மானிக்கப்பட்ட நிலையில், தன்னைச் சுற்றிலும் இருந்தவர்களோடு விருந்தறையில் அவன் இருந்த போதே, ஒரு தூதுவன் வந்து, தான் யாருடைய போராயுதங்களுக்கு எதிராகப் பத்திரமாக இருப்பதாக ராஜா நினைத்திருந்தானோ, அந்த எதிரியால், ‘’பட்டணம் பிடிபட்டது என்றும் துறைவழிகள் அகப்பட் டுப்போய், யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள்’‘ என்றும் அவ னிடம் அறிவித்தான். அவனும் அவனுடைய பிரபுக்களும், யேகோ வாவிற்குப் பரிசுத்தம் பண்ணப்பட்ட பாத்திரங்களில் குடித்து, பொன்னாலும் வெள்ளியாலும் ஆன தங்கள் தெய்வங்களைப் போற்றிக் கொண்டிருந்தபோது, மேதியரும் பெர்சியரும், ஐப்பிராத் தின் வாய்க்காலைத் திருப்பிவிட்டு, பாதுகாவலற்ற அந்நகரின் மையப்பகுதி நோக்கி அணிவகுத்துக் கொண்டிருந்தனர். இப்போது அரண்மனையின் மதில்களின் அருகே கோரேஸின் படைகள் நின் றன; எதிர்நாட்டு வீரர்கள் ‘பச்சைக்கிளிகளைப் போல்’ நகரத்தில் நிறைந்திருந்தார்கள். வச 14. திகைத்து நின்ற கேளிக்கையாளரின் சோகக்குரல்களுக்கும் மேலாக அவர்களின் வெற்றி ஆரவாரம் கேட் டது.தீஇவ 531.3

    ’அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத் சார் கொலை செய்யப்பட்டான்’ ஓர் அந்நிய மன்னன் சிங்காசனம் ஏறினான். தீஇவ 531.4

    பாபிலோன் விழுந்து போகும் விதம் குறித்து எபிரெய தீர்க்க தரிசிகள் மிகச் சரியாகச் சொல்லியிருந்தனர். எதிர்கால நிகழ்வுகள் குறித்து தேவன் அவர்களுக்கு தரிசனத்தில் வெளிப்படுத்தியிருந் தார். ‘சேசாக்கு பிடியுண்டு, பூமி முழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட் டது எப்படி? ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் பிரமிப்பானது எப் படி?’ ‘சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று!’ ‘பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும் , அதின் கூப் பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்’.தீஇவ 532.1

    ’பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது.’ ‘பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலி கள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக் கட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார். அதின் பிரபுக்களையும் அதின்ஞானிகளையும் அதின் தலைவரை யும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப் பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக் கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனை களின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.’‘தீஇவ 532.2

    ’பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டு போனாய்; நீ அகப்பட்டும் பிடிபட் டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே. கர்த்தர் தம்மு டைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திரா யுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.’தீஇவ 532.3

    ’சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் ; இஸ்ர வேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர் களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய மீட்பரோ வெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவரு டைய நாமம்; தேசத்தை இளைப்பாறப்பண்ணுவதற்கும், பாபி லோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்’ என்று அவர்கள் ஆச்சரியக் குரல் எழுப்பினார்கள். எரேமியா 51:41; 50:23, 46; 51:8, 56, 57; 50:24, 25, 33, 34.தீஇவ 532.4

    இப்படியாக, ‘பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றி லும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன. இப்படியாக, சேனைகளின் யேகோவாவா னவர் ‘அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, ‘கொடியரின் இடும்பைத் தாழ்த்திப்போட்டார்’. இப்படியாக, ‘ராஜ்யங்களுக்குள் அலங்காரமும் கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோ னானது என்றென்றும் சபிக்கப்பட்ட நிலமான சோதோம் கொமோரா போல் ஆனது. ‘இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவது மில்லை; தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித்தரிப்பது மில்லை; அங்கே அரபியன் கூடாரம் போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை. காட்டு மிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும் ; கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும் காட்டாடு அங்கே துள்ளும். அவர்கள் பாழான மாளிகைகளில் ஓரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் செல்விக்கையான அரமனைகளில் ஏக மாய்க் கூடும். அதை முள்ளம் பன்றிகளுக்குச் சுதந்திரமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதைச் சங்காரம் என்னும் துடைப்பத் தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லு கிறார்’ என்கிறது வேதாகமம். எரேமியா 51:58; ஏசாயா 13:11,19-22; 14:23.தீஇவ 533.1

    தெய்வீக காவலாளியால் பாபிலோனின் முதலாம் மன்னனுக் குக்கொடுக்கப்பட்ட தீர்ப்பைப் போலவே அதன் கடைசி மன்னனுக் கும் கொடுக்கப்பட்டது. ‘ராஜாவே, ராஜ்யபாரம் உன்னை விட்டு நீங் கிற்று’ என்று உனக்குச் சொல்லப்படுகிறது. தானி 4:31.தீஇவ 533.2

    ’பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே,
    நீ இறங்கி மண்ணிலே உட்காரு;
    தரையிலே உட்காரு;
    உனக்குச் சிங்காசனமில்லை;
    கல்தேயரின் குமாரத்தியே,
    நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து
    மவுனமாய் உட்காரு;
    இனி நீராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.

    ’நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபம் அடைந்து,
    என் சுதந்தரத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கி,
    அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்;
    நீ அவர்கள் மேல் இரக்கம் வையாமல்,

    என்றென்றனக்கும் நாயகியாயிருப்பேன் என்று சொல்லி, தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு
    இந்தக் காரியங்களை
    இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும்,
    அதின் முடிவை நினையாமலும் போனாய்.

    ‘இப்பொழுதும் சுகசெல்வியே,
    விசாரமில்லாமல் வாழ்கிறவளே. நான்தான்,
    என்னைத் தவிர ஒருவரும் இல்லை;
    நான் விதவையாவதில்லை,
    நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று
    உன் இருதயத்திலே சொல்லுகிறவளே,
    நான் சொல்லுகிறதைக் கேள்.

    ’சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும்
    உனக்குச் சடிதியாக ஒரே நாளில் வரும்;
    உன் திரளான சூனியங்களினிமித்தமும்,
    உன் வெகுவானஸ்தம்பன வித்தைகளினிமித்தமும்
    அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.
    உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து:
    என்னைப்பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய்

    ’உன் ஞானமும் உன் அறிவுமே உன்னை கெடுத்தது;
    நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று
    உன் இருதயத்தில் எண்ணினாய்’
    ஆகையால் தீங்கு உன்மேல் வரும்,
    அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்;
    விக்கினம் உன்மேல் வரும்,
    நீ அதை நிவிர்த்தியாக்க மாட்டாய்,
    நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.

    ’நீ உன் சிறுவயது முதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன
    வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும்
    நீ அநுசரித்து நில்;
    அவைகளால் உனக்கு பிரயோஜனம் உண்டோ , பலன் உண்டோ , பார்ப்போம்.

    ’உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்
    இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும்,
    அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி,
    உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
    இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், அவர்கள் தங்கள் பிராணனை அக்கினி ஜுவாலையினின்று
    விடுவிப்பதில்லை.
    உன்னை இரட்சிப்பார் இல்லை.’
    தீஇவ 533.3

    ஏசாயா 47:1-15

    . உலகை ஆளதருணம் கொடுக்கப்பட்ட ஒவ்வொருராஜ்யமும், அது ‘பரிசுத்தரும், கண்காணிப்பாளருமாகிய அவருடைய நோக் கங்களை நிறைவேற்றுமா?’ எனும் கேள்விக்குப் பதில் தீர்மானிக்கப் படும்படி, தங்களுக்கென ராஜ்யத்தை ஸ்தாபிக்க அவற்றிற்கு அனு மதியளிக்கப்பட்டது. பாபிலோன், மேதிய - பெர்சியா, கிரேக்கம், ரோம் போன்ற பெரும்ராஜ்யங்களின் எழுச்சி, வீழ்ச்சி குறித்துத் தீர்க்க தரிசனம் பதிவுசெய்துள்ளது. இந்த ராஜ்யங்களானாலும் சரி, பெலம் குன்றிய தேசங்களானாலும் சரி, ஒரேவிதமான வரலாற்றைத் தான் நாம் காணமுடிகிறது. அதாவது, ஒவ்வொரு தேசத்திற்கும் சோத னைக் காலம் கொடுக்கப்பட்டது; ஆனால், ஒவ்வொன்றும் தோல்வி யையே சந்தித்தது; அவற்றின் மகிமை மங்கி, அதிகாரம் இல்லாமற் போயிற்று.தீஇவ 535.1

    காலங்கள் நெடுகிலும் மேன்மையான, தெய்வீக நோக்கம் வெளிப்படையாகக் கிரியை செய்து வருகிறபோதிலும், நன்னெறி களைத் தேசங்கள் புறக்கணித்தபோது, அந்தப் புறக்கணிப்பில் அவர்கள் தங்களுக்கு அழிவை ஏற்படுத்திக் கொண்டார்கள். நாடு கடத்தப்பட்ட நிலையில் கல்தேய தேசத்தில் இருந்தபோது, தனக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அற்புதக் காட்சியில் இதுபற்றிக்கண்டான் எசேக் கியேல். அப்போது, பூமியை அரசாளுகிறவர்களின் காரியங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு மேன்மையான வல்லமையைச் சித்தரித்துக் காட் டின அடையாளங்களை, தனக்கு முன்பாகக் காட்டப்பட்டதரிசனத்தில் திகைப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.தீஇவ 535.2

    கேபார் நதியண்டையிலே இருந்தபோது, ‘வடக்கேயிருந்து புசல் காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் அதைச் சுற்றிலும் பிரகாசமும் வரக்கண்டான். அதின் நடுவில் அக்கி னிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறம் உண்டாயிருந்தது.’ சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் அமைந்த ஏராளமான சக் கரங்களை நான்கு ஜீவிகள் இழுத்துச் சென்றன. அவை எல்லாவற் றிற்கும் மேலாக, ‘மண்டலத்தின் மீதில் நீலரத்தினம் போல விளங் கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின் மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. ‘கேருபீன்களு டையசெட்டைகளின்கீழ்மனுஷர்கையின் சாயலானது காணப்பட்டது.’ எசே 1:4, 26; 10:8. அந்தச் சக்கரங்கள் மிகவும் சிக்கலான முறையில் அமைந்திருந்தன. முதலில் பார்த்ததுமே, குழப்பத்தை ஏற்படுத்துவது போல் தோன்றினாலும், பூரண இசைவோடு அவை ஓடின. கேருபீன் களின் செட்டைகளின் கீழிருந்த கரத்தால் தாங்கி, வழிநடத்தப்பட்ட பரலோக ஜீவிகள் அந்தச் சக்கரங்களை ஓட்டிச்சென்றன; அவர் களுக்கு மேலாக, நீலரத்தின் சிங்காசனத்தில் நித்தியமானவர் வீற் றிருந்தார்; தேவ கிருபையின் அடையாளச் சின்னமாக அந்தச் சிங் காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் காணப்பட்டது.தீஇவ 535.3

    கேருபீன்களுடைய செட்டைகளின் கீழிருந்த கரத்தின் வழி நடத்துதலில் சக்கரம் போன்ற சிக்கல்கள் இருந்தது போல, தேவ னுடைய கட்டுப்பாட்டின் கீழ்தான் மனித காரியங்களின் சிக்கலான நிகழ்வுகளும் அடங்கியிருக்கின்றன. கேரூபின்களுக்கு மேலாய் வீற்றிருப்பவர்தாமே, தேசங்களின் குழப்பத்திற்கும் அமளிக்கும் மத்தியில், பூமியின் காரியங்களைக் கட்டுப்படுத்துகிறார்.தீஇவ 536.1

    தேசங்களின் வரலாறு இன்று நம்மோடு பேசுகிறது. மகத்தான தம்முடைய திட்டத்தில், ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேவன் ஒரு இடத்தை நியமித்துள்ளார். தவறே இழைக்காதவரின் கரத்திலிருக்கும் தூக்கு நூலால் இன்றைய மனி தரும் தேசங்களும் சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒவ் வொருவரும் தங்கள் சுயதீர்மானத்தின்படிதான் தங்கள் எதிர்காலத் தைத் தீர்மானிக்கிறார்கள். தேவனோதம் நோக்கங்களை நிறைவேற் றும்படி ஒவ்வொருவர் மேலும் ஆட்சிசெய்து வருகிறார்.தீஇவ 536.2

    ’நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்று சொல்லும் மகத்துவமானவர் கடந்தகால நித்தியம் முதல் வருங்கால நித்தியம் மட்டுமுள்ள சங்கிலி போன்ற தொடர் நிகழ்வுகளை ஒவ்வொரு கண்ணியாக இணைத்து, தம் வார்த்தையின் தீர்க்கதரிசனங்களில் கொடுத்துள்ளார், காலங்களின் ஓட்டத்தில் இன்று நாம் எக்கட்டத் தில் இருக்கிறோம் என்பதையும் வருங்காலத்தில் எத்தகைய எதிர் பார்ப்பைக் கொண்டிருக்கலாம் என்பதையும் அவை நமக்குச் சொல் கின்றன. இன்றைய காலம் மட்டும் என்னவெல்லாம் நிகழ இருந்ததாக தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருந்ததோ, அவை நிறைவேறியுள் எதை வரலாற்றுப் பக்கங்களில் காணலாம். அதுபோல, இனி நிறை வேறப்போவதாகச் சொல்லப்பட்டுள்ள காரியங்களும் முறையே நிறைவேறும்.தீஇவ 536.3

    மகத்துவமும் முக்கியத்துவமுமான காரியங்களுடைய நிகழ் வின் விளிம்பில் நாம் நின்று கொண்டிருப்பதை இன்றைய கால அடை யாளங்கள் தெரிவிக்கின்றன. இன்று நம் உலகின் ஒவ்வொரு காரி யத்திலும் குழப்பமே நிலவுகிறது. தம் வருகைக்கு முன் நிகழுமென்று இரட்சகர் உரைத்த தரிசனம் இன்று நம் கண்களுக்கு முன்பாக நிறை வேறிக்கொண்டிருக்கிறது: ‘’யுத்தங்களையும் யுத்தங்களின் செய்தி களையும் கேள்விப்படுவீர்கள்; ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண் டாகும்’. மத்தேயு 24:6,7.தீஇவ 537.1

    ஜீவனுள்ள யாவரின் கவனத்தையும் இன்றைய காலக்கட்டம் தான் மிக அதிகமாக ஈர்ந்துள்ளது. நாடாளுபவர்களும் அரசியல் பிரமுகர்களும், நம்பிக்கைக்குப் பாத்திரமான, அதிகாரமிக்க பதவி வகிப்போரும் ஆண்களிலும் பெண்களிலும் சிந்திப்போரும், நம் மைச் சுற்றிலும் நிகழும் நிகழ்ச்சிகளில் தங்கள் கவனத்தைச் செலுத்தி யுள்ளார்கள்; நாடுகளுக்கிடையே நிலவும் உறவுகளை உற்றுநோக்கு கிறார்கள். பூமியின் ஒவ்வொரு காரியத்திலும் காணப்படுகிறதான தீவிரத்தை அவர்கள் கவனித்து, ஏதோ பெரிதாக, இறுதியில் நிகழப் போகிறது என்பதை உணர்கிறார்கள். அதாவது, மிகப் பெரிய திருப்புக் கட்டத்தின் விளிம்பில் பூமி இருக்கிறதை உணர்கிறார்கள்.தீஇவ 537.2

    இக்காரியங்கள் பற்றின் ஒரு சரியான கண்ணோட்டத்தை வேதாகமம், வேதாகமம்மாத்திரமே கொடுக்கிறது. இங்கு நம் உலக வரலாற்றின் இறுதிக்கட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்நிகழ்வுகள் ஏற்கனவே தங்கள் சாயலைத் தோன்றச் செய்து வருகின்றன. தங்கள் வருகையால் பூமியை நடுங்கச் செய்து, மனி தரின் இருதயங்களைப் பயத்தால் திடனற்றுப்போகச் செய்கின்றன.தீஇவ 537.3

    ’இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின்குடிகளைச்சிதறடிப்பார். அவர்கள் நியாயப்பிரமா ணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக் கையை முறித்தார்கள். இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்து, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார் கள், சிலர் மாத்திரம் மீந்திருக்கிறார்கள். ‘ஏசாயா 24:1-6.தீஇவ 537.4

    ’அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமா யிருக்கிறது; அது சங்காரம் போலச் சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது. விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று; பயிர்தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக்களஞ்சியங் கள் இடிந்து போயின. மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்கு கிறது; ஆட்டுமந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.’ ‘திராட்சச் செடி வதங்கி, அத்தி மரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச் சலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோ ஷம் மனுபுத்திரைவிட்டு ஒழிந்துபோயிற்று.’யோவேல் 1:15-18,12.தீஇவ 537.5

    ’என் உள்ளம் வேதனைப்படுகிறது. நான் பேசாமல் அமர்ந் திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே. நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது. ‘’எரே 4:19, 20.தீஇவ 538.1

    ’ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாள் இல்லை, அது யாக்கோபுக்கு
    இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.’
    தீஇவ 538.2

    எரேமியா 30:7.

    எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை
    உனக்குத் தாபரமாக் கொண்டாய்.
    ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது,
    வாதை உன் கூடாரத்தை அணுகாது.
    தீஇவ 538.3

    சங்கீ தம் 91:9, 10

    ‘சீயோன் குமாரத்தியே, கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோச னையை உணராமலும் இருக்கிறார்கள். ‘மீகா 4:10-12. மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் தம் சபையை தேவன் கைவிடமாட் டார். விடுதலை கொடுப்பதாக வாக்குரைத்திருக்கிறார். ‘’நான் யாக் கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாச ஸ்தலங்களுக்கு இரக்கஞ் செய்வேன்’‘ என்று சொன்னார். எரே 30:18.தீஇவ 538.4

    அப்போது தேவனுடைய நோக்கம் நிறைவேறும்; அவருடைய ராஜ்யத்தின் நியதிகள் சூரியனுக்குக் கீழுள்ள யாவராலும் கனப்படுத் தப்படும்.தீஇவ 538.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents