Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    45 - சிறையிருப்பிலிருந்து திரும்புதல்

    கோரேஸின் படைகள் பாபிலோனின் மதில்களின் அருகே வந்திருந்தன. சிறையிருப்பிலிருந்த யூதர் விடுதலை பெறும் நேரம் சமீபித்திருந்ததற்கு அது ஒரு அடையாளமாக இருந்தது. கோரேஸ் பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அவனைப் பெயர் சொல் லிக்குறிப்பிட்டார்தேவன். மேலும், எதிர்பாராத வகையில் பாபிலோன் நகரைப் பிடித்து, சிறையிருப்பின் புத்திரரை விடுவிக்க வழியை ஆயத்தம்பண்ணுவதில் அவன் செய்யவேண்டியிருந்த பணியை யும் பதிவுசெய்து வைக்கும்படிச் செய்தார். ஏசாயாவின் மூலமாகப் பின்வருமாறு சொல்லப்பட்டது:தீஇவ 551.1

    ’கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன் பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவ னைப் பார்த்து, அவன் வலதுகையைப்பிடித்துக் கொண்டு, அவ னுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோண லானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறி யும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப் பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற புதையல்களை உனக் குக் கொடுப்பேன். ‘ஏசா 45:1-3.தீஇவ 551.2

    நதியின் தண்ணீரைத் திருப்பிவிட்டு அதன் வாய்க்கால் வழியா கவும், மெத்தனத்தால் பாதுகாவலற்றுத் திறந்தவண்ணமாகக் கிடந்த உள்வாசல்களின் வழியாகவும் பாபிலோனின் தலைநகருக்குள் பெர்சிய மன்னனுடைய படைகள் எதிர்பாராது நுழைந்தன. அப் போது, தங்களை ஒடுக்கினவர்களின் திடீர்வீழ்ச்சி பற்றி ஏசாயா சொல்லியிருந்த தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறுவதற்கான அதிக ஆதாரங்களை யூதர்கள் கண்டார்கள். தங்கள் நிமித்தமாக தேசங்களின் காரியங்களை தேவன் மாற்றியமைப்பதற்குச் சந்தே கத்திற்கு இடமற்ற ஓர் அடையாளமாக அது திகழ்ந்தது; ஏனெனில், பாபிலோன் கைப்பற்றப்பட்டு, விழுந்துபோகும் விதம் குறித்துத் தீர்க்கதரிசனத்தில் சுருக்கமாகச் சொல்லப் பட்டதோடுகூட பின் வரும் வார்த்தைகளும் சொல்லப்பட்டிருந்தன.தீஇவ 552.1

    ’கோரேசைக் குறித்து அவன் என் மேய்ப்பன் : அவன் எருச லேமை நோக்கி: நீ கட்டப்படும் என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்பாடு என்றும் சொல்லி எனக்குப் பிரியமானதையெல் லாம் நிறைவேற்றுவான். ‘’நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ‘ஏசா 44:28; 45:13.தீஇவ 552.2

    சிறைப்பட்டுப்போனவர்கள் சீக்கிரத்தில் விடுதலையடைய இருந்தது குறித்து அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்ள இந்தத் தீர்க்கதரிசனங்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. சிறைப் பட்டுப்போனவர்கள் தங்கள் விடுதலைக்கான நம்பிக்கையைப் பெற இதுதவிர வேறு தீர்க்கதரிசனங்களும் கொடுக்கப்பட்டிருந் தன். ஆனால், எரேமியாவின் வார்த்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு எளிதில் கிடைத்தது. பாபிலோனிலிருந்து இஸ்ரவேலர் திரும்பிவருவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என் பதுபற்றி அவனுடைய வார்த்தைகள் தெளிவாக அறிவித்திருந்தன. ‘எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினி டத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தி னிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரிப்பேன்’ என்று கர்த்தர் சொன்னதாக எரே 25:12 கூறுகிறது. யூதாவின் மீதமான மக் கள் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டதினிமித்தம் அவர்கள் தேவ தயவைப் பெறுவதற்கு ஏதுவானார்கள். ‘நான் உங்களுக்குக் காணப் படுவேன். நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்க ளைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப் பண்ணுவேன்’ என்று கர்த்தர் சொன்னதாக எரே 29:14 கூறுகிறது.தீஇவ 552.3

    தேவன் தம் மக்களுக்காகக் கொண்ட நோக்கம் பற்றி விவரிக் கும் இத்தீர்க்கதரிசனங்களையும், இதுபோன்ற மற்றத் தீர்க்கதரிச னங்களையும் தானியேலும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி ஆராய்வதுண்டு. இப்பொழுது, தேசங்களின் மத்தியில் தேவகரம் வல்லமையாகச் செயல்பட்டதை, மளமளவென நிகழ்ந்த நிகழ்வு கள் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்க, இஸ்ரவேலுக்குக் கொடுக்கப் பட்டிருந்த வாக்குத்தத்தங்களை விசேஷமாக எண்ணிப்பார்த்தான் தானியேல். தீர்க்கதரிசன வார்த்தையில் அவனுக்கிருந்த விசுவாச மானது, வேத எழுத்தாளர்களால் முன்னுரைக்கப்பட்டிருந்த அனு பவங்களில் பிரவேசிக்க அவனை வழிநடத்தியது. “‘பாபிலோனிலே எழுபது வருஷம் நிறைவேறின பின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும் படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன்; நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத் துக்கேதுவான நினைவுகளே . அப்பொழுது நீங்கள் கூடி வந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணு வீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இரு தயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுப்பிடிப்பீர்கள்’‘ என்றார் தேவன். வச 10 - 13.தீஇவ 553.1

    பாபிலோன் வீழ்ச்சியடைவதற்குச் சற்றுமுன், இந்தத் தீர்க்க தரிசனங்கள் குறித்து தானியேல் தியானித்து, காலங்கள் பற்றி விளக்குமாறு தேவனை வேண்டிக்கொண்டிருந்தபோது, ராஜ்யங் களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி அவனுக்குத் தொடர்ச்சியாக தரிசனங்கள் கொடுக்கப்பட்டன. தானியேலின் புத்தகம் ஏழாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோல, முதலாம் தீர்க்கதரிச னத்திற்கு அவனுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது; ஆனாலும் எல்லா காரியமும் தீர்க்கதரிசிக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ‘நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறு பட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்’ என்று அந்நேரத்தில் தன்னுடைய அனுபவம் பற்றி அவன் எழுது கிறான். தானி 7:28.தீஇவ 553.2

    இன்னொரு தரிசனம் மூலம், வருங்கால நிகழ்ச்சிகள் பற்றி அதிகமான வெளிச்சம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்தத் தரிசனத்தின் முடிவில் தான் ‘பரிசுத்தவானாகிய ஒருவன்’ பேசக் கேட்டான். ‘அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி, ‘’தரிசனம் எதுவரைக்கும் இருக்கும்?” என்று கேட்டான்.’ தானி 8:13. இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும் வரைக் கும் இருக்கும்; பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்று பதிலளிக்கப்பட்டது. வச 14. அது அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தி யது. தரிசனத்தின் அர்த்தமறிய அவன் மும்முரமாக முயன்றான். எரேமியாவால் முன்னுரைக்கப்பட்ட எழுபதுவருடச் சிறையிருப் புக்கும், தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படுவதற்கும் முன்பு இத்தனை காலம் செல்லுமென்று பரலோகத்தின் தூதன் ஒரு வனால் சொல்லப்பட்ட 2300 வருடங்களுக்கும் உள்ள தொடர்பை தானியேலால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பகுதியின் விளக் கம் காபிரியேல் தூதனால் அவனுக்குக் கொடுக்கப்பட்டது; ஆனா லும் இந்தத் தரிசனத்திற்கு இன்னும் அநேக நாள் செல்லும்’ என்ற வார்த்தைகளைக் கேட்டபோது அவர்சோர்வுற்றான். தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத் தினால் திகைத்துக் கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறிய வில்லை ‘ என்று தன் அனுபவம் பற்றி அவன் எழுதுகிறான். வச 26, 27.தீஇவ 554.1

    இஸ்ரவேலின் நிமித்தம் இன்னமும் பாரங்கொண்டவனாய், எரேமியாவின் தீர்க்கதரிசனங்களை மீண்டும் படித்தான் தானியேல். அவை தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன. அதாவது ‘எருசலே மின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித் தீர எழுபது வருஷம் செல்லும்” என்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங் களின் தொகையை வேதவாக்கிய சாட்சியங்களின் மூலமாக அவன் அறியுமளவிற்குத் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன. தானி 9:2.தீஇவ 554.2

    தீர்க்கதரிசனத்தின் நிச்சய வார்த்தையில் உறுதியான விசு வாசம் கொண்டு, அந்த வாக்குத்தத்தங்கள் சீக்கிரத்தில் நிறைவேற வேண்டுமென தேவனிடத்தில் வேண்டிக்கொண்டான் தானியேல். தேவனுடைய மேன்மை காக்கப்பட வேண்டுமென வேண்டிக் கொண்டான். தேவ நோக்கத்தைவிட்டுப் பின் வாங்கிப் போனவர் களோடு தன்னையும் முழுவதுமாகச் சேர்த்துக்கொண்டு, அவர் களுடைய பாவங்களைத் தன்னுடைய பாவங்களாக அறிக்கை செய் தான்:தீஇவ 555.1

    ’’நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினா லும்தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கை செய்தேன்” என் றான் தீர்க்கதரிசி. வச 3, 4. தேவ சேவையில் நெடுநாட்கள் பணி யாற்றியிருந்தான் தானியேல் ; ‘மிகவும் பிரியமானவன்’ என்று பர லோகத்தால் தாமே அழைக்கப்பட்டான். ஆனால் இப்பொழுது, தனக்குப் பிரியமானதன் ஜனங்களுடைய பெருந்தேவையை முன் னிறுத்தி, தேவனுக்கு முன்பாக ஒரு பாவியாக தன்னை நிறுத்தினான். ஓர் அருமையான ஜெபத்தை மிக எளிமையோடும் மிகுந்த ஊக்கத் தோடும் ஏறெடுத்தான். பின்வருமாறு அவன் வேண்டினான்:தீஇவ 555.2

    ’ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனை களைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிரு பையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நாங் கள் பாவஞ் செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம் பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்று போனோம். உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக் களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்க தரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற் போனோம்.தீஇவ 555.3

    ’’ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லாத் தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிற படியே, வெட்கம் எங்களுக்கே உரியது.தீஇவ 555.4

    ’அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம் பண்ணினோம். ஆனாலும், எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. ‘’ஆண்டவரே, உம்முடைய சர்வ நீதியின் படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர் வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும் பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங் களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.தீஇவ 555.5

    ’இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண் ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித் தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். என் தேவனே, உம்மு டைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக் கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங் களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.தீஇவ 556.1

    ’ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதி யாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக் கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே.’தானி 9:4-9, 16- 19.தீஇவ 556.2

    தீர்க்கதரிசியின் தாழ்மையான பிரார்த்தனையைக் கேட்க, பர லோகமே இறங்கி வந்தது. மன்னிப்பையும் விடுதலையையும் வேண்டி அவன் தன் பிரார்த்தனையை முடிப்பதற்கு முன்னதாகவே வல்லமை மிக்க காபிரியேல் மீண்டும் அவனுக்குத் தரிசனமாகி, பாபிலோனின் விழுகைக்கும் பெல்ஷாத்சாரின் மரணத்திற்கும் முன் னர் அவன் கண்டதரிசனத்திற்கு அவனுடைய கவனத்தைத் திருப்பி னான். அதன்பிறகு, ‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற் கான கட்டளை வெளிப்படுவது முதல் ‘ எழுபதுவார காலக்கட்டம் ஆரம்பிக்க இருந்ததாக அவனுக்கு விளக்கமாக விவரித்தான் தூதன். வச 25.தீஇவ 556.3

    மேதிய மன்னனாகிய ‘தரியு அரசாண்ட முதலாம் வருஷத்தில் தான்’ தானியேலின் ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. அந்த மன்னனின் தளபதியாகிய கோரேஸ்தான், உலக சாம்ராஜ்யமான பாபிலோனின் அதிகாரத்தைத் தகர்த்துப்போட்டான்; தட்டிப் பறித்தான். தரியுவின் ஆளுகை தேவனால் கனம் பெற்றிருந்தது. அவனைத் திடப்படுத் தவும் பலப்படுத்தவும்’ காபிரியேல் தூதன்தாமே அனுப்பப்பட் டிருந்தான். தானி 11:1. பாபிலோன் வீழ்ச்சியடைந்து இரண்டு வரும் டங்களுக்குள்ளாக அவன் மரித்தான். அவனுக்குப்பின் சிங்காச னம் ஏறினான் கோரேஸ். முதன் முதல் யூதேயா தேசத்திலிருந்து பாபிலோனிற்கு ஒரு கூட்டம் எபிரெயரை நேபுகாத்நேச்சார் சிறை பிடித்து வந்ததிலிருந்து எழுபது வருடக்காலம் கோரேசுடைய ஆட்சி யின் ஆரம்பத்தில்தான் முடிந்தது.தீஇவ 556.4

    சிங்கக்கெபியிலிருந்து தானியேல் விடுவிக்கப்பட்ட சம்பவத் தினால், மகா கோரேஸின் மனதில் நன்மையான ஒரு தாக்கம் ஏற் படும்படி செய்திருந்தார்தேவன். தொலைநோக்குப் பார்வையுடைய ஓர் அரசியல்வாதியான, தேவமனிதனாகிய தானியேலிடம் காணப் பட்ட தூய்மையான குணநலன்கள், அவன் மேல் பெர்சிய மன்னன் விசேஷித்த மரியாதை காட்டவும், அவனுடைய கருத்துகளுக்கு மதிப்பளிக்கும்படியும் வழிநடத்தியது. இப்பொழுதும், எருசலே மில் தம்முடைய ஆலயத்தைத் திரும்ப எடுப்பித்துக் கட்டப்போவ தாகதேவன் சொன்னதை நிறைவேற்ற, கோரேஸ்தம் பிரதிநிதியாகச் செயல்படவும், அவனைப் பற்றின தீர்க்கதரிசனங்களை அவன் தெளிவாக அறிந்துகொள்ளவும், யூத மக்களுக்கு விடுதலை அருள் வும் கோரேஸின் மனதில் தேவன் செயல்பட்டார். தானியேலுக்கு இந்தத் தீர்க்கதரிசனங்கள் தெளிவாகத் தெரிந்திருந்தது.தீஇவ 557.1

    பாபிலோன் எவ்விதமாகக் கைப்பற்றப்படும் என்பது பற்றி, தான் பிறப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே முன்னுரைக்கப் பட்டவார்த்தைகளை ராஜாகண்டபோது, என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர் வேறொருவர் இல்லை’ என்று சர்வலோகத்தை ஆளுபவர் தனக்கு அறிவித்திருந்த செய்தியை அவர் வாசித்தபோது, ‘நான் என் தாசனாகிய யாக்கோபி னிமித்தமும், நான் தெரிந்து கொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்’ என்று நித்திய தேவன் சொன்னதைத்தன் கண்கள் முன் கண்டபோது, ‘நான் நீதியின்படி அவனை எழுப்பி னேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான்’ என்று வேதாகமத்திலிருந்து வாசித்தபோது, அவனுடைய உள்ளம் அதிகமாக அசைக்கப்பட்டது; தேவன் தனக்கு நியமித்த பணியை நிறைவேற்றும்படி உறுதி கொள்ளச் செய்தது. ஏசா 45, 5, 6, 4, 13. யூதேய சிறைக்கைதிகளை விடுதலைபண்ணவிரும்பினான்; யேகோ வாவின் ஆலயத்தைத் திரும்ப எடுப்பித்துக்கட்ட அவர்களுக்கு உதவ விரும்பினான்.தீஇவ 557.2

    எபிரெயர்கள் திரும்பிச் செல்லவும் தங்கள் ஆலயத்தைத் திரும் பக்கட்டவும் மக்கள் கொடுத்துதவ வேண்டுமென்று தான் விரும்பு வதாக ‘தன் ராஜ்யமெங்கும் ‘கோரேஸ் எழுதியனுப்பி விளம்பரம் பண்ணுவித்தான். ‘பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருச லேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட் டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக் குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப் பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப் போய், இஸ்ரவே லின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம் பண்ணுகிற தேவனே தேவன். அந்த ஜனங் களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத் துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவி யங் களையும் மிருகஜீவன்களையும், கொடுத்து, உதவி செய்ய வேண்டும்’ என்று தன் பொது அறிக்கையில் நன்றியறிதலோடு ராஜா தெரிவித்திருந்தான். எஸ்றா 1:1-4.தீஇவ 558.1

    ’தேவாலயமானது பலி செலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்க வேண்டும். அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல் லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக. அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத் துக்கடுத்த பொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும் படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளைத் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் ‘ என்று ஆலயக்கட்ட டத்தைப் பற்றி மேலும் அவன் கட்டளையிட்டிருந்தான். எஸ்றா 6:3-5.தீஇவ 558.2

    அரசனுடைய ஆட்சியெல்லையின் கடைக்கோடிப் பகுதி மட் டும் இந்தக் கட்டளையின் செய்தி எட்டியது. புறப்படுவதற்காக ஆயத்தமான பிள்ளைகள் மத்தியில் எங்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்ட டது. தானியேலைப் போன்ற அநேகர் அதுபற்றின தீர்க்கதரிசனங் களைப் படித்து வந்திருந்தனர்; சீயோனின் நிமித்தம் தலையிடு வதாகதேவன் வாக்குரைத்திருந்ததை வேண்டி அவரிடம் வந்தனர். இப்பொழுதோ அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைத்து விட்டது. உள்ளார்ந்த மகிழ்ச்சியோடே பின்வருமாறு அவர்களால் பாடமுடிந்தது:தீஇவ 559.1

    ’சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது,
    சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
    அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும்,
    நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது;
    அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று
    புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
    கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்,
    இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.’
    தீஇவ 559.2

    சங்கீ தம் 126:1-3

    ’யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ’ அவர் கள் அனைவருமே மீதமானவர்களில் பய பக்தியுள்ளவர்களாயி ருந்தனர். சிறையிருப்பின் தேசங்களிலிருந்த யூதர்களுக்குள்ளே பெலசாலிகளான சுமார் ஐயாயிரம் பேர், ‘எருசலேமுக்குப் போய், கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட’ தங்களுக்குக் கிடைத்த அற்புத தருணத்தைச் சாதகமாக்கத் தீர்மானித்தனர். அவர்கள் வெறுங்கையு டன் போகும்படி அவர்களின் சிநேகிதர்கள் விட்டுவிடவில்லை. ‘அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மன உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணி முட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சி தமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப் படுத்தினார்கள். திரும்ப எடுப்பித்துக் கட்டப்பட இருந்த ஆலயத் தேவைக்காக, இதுபோக, இன்னும் அநேக உற்சாகக் காணிக்கை களும் கொடுக்கப்பட்டன. ‘நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த் தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளைப் பெர்சியாவின் ராஜாவா கிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகியமித்தி ரேதாத்தின்கையினால் எடுத்துக்கொடுத்தான். அவைகளின் எண்ணிக்கை ஐயாயிரத்து நானூறு. எஸ்றா 1:5-11.தீஇவ 559.3

    யூதேயாவிற்குத் திரும்பிச் சென்ற குழுவிற்கு அதிபதியாக ராஜாவாகிய தாவீதின் வம்சத்தானான செருபாபேலை நியமித்தான் கோரேஸ். இவன்சேஸ் பாத்சார் என்றும் அழைக்கப்பட்டான்; அவ னோடு பிரதான ஆசாரியனாகிய யோசுவாவும் இருந்தான். பாழாய்க் கிடந்த வனாந்தரம் வழியான நீண்ட பிரயாணமானது பத்திரமாக முடிவடைந்தது; அந்தச் சந்தோஷக் கூட்டத்தார், தேவனுடைய அநேக இரக்கங்களை எண்ணி ஸ்தோத்திரித்தவர்களாக, உடைந் தும் அழிந்தும் கிடந்ததைத் திரும்பக்கட்டும் பணியை உடனடியாகத் தொடங்கினார்கள். ஆலயத்தைத் திரும்ப எடுப்பித்துக் கட்டின செலவிற்காக ‘வம்சங்களின் தலைவர்கள் தங்கள் பொருட்களிலி ருந்து முன்மாதிரியாகக் காணிக்கை கொடுத்துதவினார்கள். அவர் களைப் பின்பற்றி மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து மனப்பூர்வ மாகக் கொடுத்தார்கள். எஸ்றா 2:64 - 70.தீஇவ 560.1

    முந்தைய ஆலயப் பிராகாரத்தில், பலிபீடம் இருந்த இடத்தி லேயே ஒரு பலிபீடம் கட்டும் பணியும் வேகமாக நடந்து முடிந்தது. அந்தப் பலிபீடத்தின் பிரதிஷ்டை சம்பந்தமான காரியங்களுக்காக ‘ஜனங்கள் ஏகோபித்துக் கூடினார்கள்.’ நேபுகாத்நேச்சரால் எருச லேமின் ஆலயம் அழிக்கப்பட்ட சமயத்தில் தடைபட்ட பரிசுத்த ஆரா தனைகளை மீண்டும் நடத்தும்படி அங்கே அவர்கள் கூடியிருந்தார் கள். அவர்கள் வீடுகளுக்குச் சென்று குடியிருக்கப் பிரிந்து செல் வதற்கு முன்பு, இவற்றையெல்லாம் புதுப்பிக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்கள். ‘அவர்கள் கூடாரப்பண்டிகையையும் ஆசரித்தார்கள்.’ எஸ்றா 3:1-6.தீஇவ 560.2

    அன்றாடதகனபலிக்கான பலிபீடத்தை ஸ்தாபித்தது, மீதமான மெய்க்கூட்டத்தாரை மிகுந்த சந்தோஷத்திற்குள்ளாக்கியது. ஆல யத்தைத் திரும்பக் கட்டுவதற்குத் தேவையான ஆயத்தங்களை மனப்பூர்வமாகச் செய்ய ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு மாதமும், அதில் காணப்பட்ட முன்னேற்றம், அவர்களைத் தைரியங் கொள்ளச் செய்தது. தேவ பிரசன்னத்தைக் கண்கூடாகக் காண்பதற்கான அடை யாளங்கள் அநேக வருடங்கள் அவர்களுக்கு இல்லாதிருந்தன. இப்பொழுதும், தங்கள் பிதாக்களின் சோரமார்க்கம் பற்றின வருத்ததீஇவ 560.3

    ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்,
    உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும்
    கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
    தீஇவ 562.1

    சங்கீதம் 86:5. கரமான நினைவுகள் பல தங்களைச் சூழ்ந்துகொண்டிருக்க, தேவ மன்னிப்பையும் தயவையும் வெளிப்படுத்தும் மெய்யான அடையா ளத்திற்காக ஏங்கினார்கள். பண்டைய சிலாக்கியங்களையும் தங் கள் தங்கள் உடைமைகளையும் மீண்டும் பெறுவதைவிட, தேவ அங்கீகாரத்தையே உயர்வாக மதித்தார்கள். அவர்கள் நிமித்தம் அவர் செய்த கிரியைகள் அற்புதமானவை; தேவபிரசன்னம் தங் களோடிருந்ததற்கான நிச்சயத்தைப் பெற்றிருந்தார்கள். இருப்பி னும், இன்னும் மேன்மையான ஆசீர்வாதங்ளை எதிர்பார்த்திருந் தனர். ஆலயம் மீண்டும் கட்டப்பட்டு, அதினுள்ளிருந்து அவருடைய மகிமை பிரகாசிப்பதைத் தாங்கள் பார்க்கும்படியான நாளுக்காக மிகுந்த எதிர்பார்ப்போடு சந்தோஷமாகக் காத்திருந்தனர்.

    கட்டுமான சாமான்களை ஆயத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்த வேலைக்காரர்கள், அந்த இடிபாடுகளுக்கு மத்தியில் ராட்சஷக் கற்களைக் கண்டுடெடுத்தார்கள். அவை சாலொமோனின் நாட் களில் ஆலயமனைக்குக் கொண்டுவரப்பட்டவை. உடனே பயன் படுத்தும் வகையிலும் அவை இருந்தன; அதுபோக இன்னும் ஏரா ளமான பொருட்கள் ஆயத்த நிலையில் இருந்தன. அஸ்திபாரக்கல் மாத்திரம் நடப்பட வேண்டியிருந்தது, அதற்கு முன் செய்யப்பட வேண்டிய ஆயத்த வேலைகள் அனைத்தும் துரிதமாக நடைபெற் றிருந்தன. அங்கு நடைபெற்று வந்த வேலையைப் பார்க்கவும், அதில் தங்களுக்கும் ஒரு பங்கிருந்ததால் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தவும் கூடியிருந்த அநேகமாயிரம் பேர்களுக்கு முன் பாக அஸ்திபாரக்கல் நாட்டப்பட்டது. மூலைக்கல்லானது அதன் இடத்தில் நாட்டப்பட்டபோது, ஆசாரியர்கள் பூரிகைகளோடும், ஆசாபின் குமாரர்தாளங்களோடும் கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின் மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து, துதிக்கையில், மாறி மாறிப் பாடினார்கள். ‘ஜனங்களும் அவர்கள் ளோடு சேர்ந்துகொண்டார்கள். வச 11.தீஇவ 563.1

    தேவன் சீயோனுக்கு அருள்விரும்பின தயவு பற்றின அநேக தீர்க்கதரிசனங்களில் மீண்டுமாகக் கட்டப்பட இருந்த அந்தத் தேவா லயம்தான் மையப்பொருளாயிருந்தது; மூலைக்கல் நடப்பட்ட விசேஷமான அத்தருணத்தின்போது, அங்கிருந்த அனைவருமே உற்சாகத்தில் திளைத்திருக்கவேண்டும். சந்தோஷமான அந்நாளில், இசைத்தொனியோடும் துதியின் ஆரவாரத்தோடும் கலந்து, அதற்கு முரணான ஒரு சத்தமும் கேட்டது. ‘முந்தின் ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங் களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண் களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு, அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந் தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்’. எஸ்றா 3:12.தீஇவ 563.2

    நீண்ட கால மனக் கடினத்தின் விளைவுகளை எண்ணிப்பார்த்த போது அந்த முதியோர்களின் இருதயங்கள் துக்கத்தால் நிறைந் திருக்கும் என்பதில் ஆச்சரியமேதுமில்லை . அவர்களும் அவர் களின் தலைமுறையினரும் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, இஸ்ரவே லுக்கான அவருடைய நோக்கத்தை நிறைவேற்றியிருந்தால், சாலொ மோன் கட்டின் ஆலயம் அழிந்திருக்காது; சிறையிருப்பும் அவசிய மற்றிருந்திருக்கும். அவர்கள் நன்றிகெட்டுப்போய், உண்மையின்றி இருந்ததால்தான், புறஜாதியார் நடுவில் சிதறுண்டார்கள்.தீஇவ 564.1

    நிலைமை இப்போது மாறியிருந்தது. கனிவான இரக்கத்தோடு தேவன் மீண்டுமாக, தம் மக்களைச் சந்தித்தார்; அவர்கள் தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்ப அனுமதித்தார். கடந்தகாலத் தவறு களின் நிமித்தம் ஏற்பட்ட வேதனை இப்போது மிகுந்த சந்தோஷ் மான அனுபவங்களுக்கு வழிவிட்டது. அவர்கள் மீண்டும் தேவா லயத்தைக் கட்ட உதவும்படி கோரேஸின் இருதயத்தில் தேவன் கிரியை செய்தார். அது அவர்கள் மனதில் ஆழமான நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் தேவ வெளிப்பாட்டின் செயல்களை அதில் காணச் சிலர் மறந்தனர். களிகூருவதற்குப் பதிலாக, அதிருப்தியும் அதைரியமுமான எண்ணங்களை வளர்த்த னர். சாலொமோன் கட்டின் ஆலயத்தின் மகிமையை அவர்கள் கண்டிருந்தனர்; இப்போது அதைவிட மிகக்குறைவான பொலி வுடன் அது கட்டப்பட இருந்ததின் நிமித்தம் புலம்பினார்கள்.தீஇவ 564.2

    முறுமுறுப்பும், குறைகூறலும், தேவையற்ற ஒப்பீடுகளும் அநேகரின் உள்ளங்களில் சோர்வான எண்ணங்களை ஏற்படுத்தி, கட்டுகிறவர்களின் கரங்களைத் தளரப் பண்ணின . ‘ஆரம்பத்தி லேயே அதிக விமர்சனத்திற்கும் அதிக புலம்பலுக்கும் காரணமான ஒரு கட்டடத்தைக் கட்டும் பணியைத் தாங்கள் இன்னமும் தொடர் வேண்டுமா?’ என்று கேட்பதற்கு அது வழிவகுத்தது.தீஇவ 564.3

    ஆனாலும், மிகுந்த விசுவாசமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டு, அந்த ஆலயத்தின் குறைவான மகிமையை அதிருப் தியுடன் நோக்காத அநேகரும் அக்கூட்டத்தில் இருந்தனர். ‘அநே கம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள். ஜனங்கள் மகாகெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகு தூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென் றும் பகுத்தறியக்கூடாதிருந்தது.’ 12, 13.தீஇவ 564.4

    ஆலயத்தின் அஸ்திபாரக்கல் நடப்படும்போது களிகூர மறந்த வர்கள், அந்நாளின் தங்கள் விசுவாசக்குறைவினால் ஏற்படவிருந்த விளைவுகளை முன்னுணர்ந்திருந்தால், நிச்சயம் திகைப்படைந் திருப்பார்கள். ஊக்கமற்ற, உடன்பாடற்ற தங்கள் வார்த்தைகளின் விளைவைக் கொஞ்சங்கூட அவர்கள் உணரவில்லை; தாங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதால், தேவனுடைய வீடு கட்டி முடிக்கப்படுவதை அச்செயல் எவ்வளவு தூரம் தாமதிக்கப் பண்ணும் என்பதைக் கொஞ்சங்கூட அவர்கள் அறியவில்லை.தீஇவ 565.1

    இஸ்ரவேலர் சிறைப்பட்டுப் போவதற்கு முன்னர், முந்தைய ஆலயத்தின் மாட்சியும், அதன் ஆராதனைச் சடங்குகளின் மாட்சி யும் அவர்களின் பெருமைக்கு ஓர் ஆதாரமாக விளங்கியது. ஆனால் தேவன் எதனை மிக முக்கியமானதாகக் கருதினாரோ, அந்தப் பண்புகள் அவர்களின் ஆராதனையில் அநேகமாகக் காணப்பட வில்லை. முந்தைய ஆலயத்தின் மகிமையும் அதன் ஆராதனைகளின் கவர்ச்சியும், அவர்களை தேவனிடம் பரிந்துரைக்கக் கூடாதிருந்தன; ஏனெனில், அவருடைய பார்வையில் முக்கியமாகத் தோன்றினதை அவர்கள் அவருக்கு ஏறெடுக்கவில்லை. தாழ்மையும் நறுங்குண்டது மான ஆவியை ஒரு பலியாக அவர்கள் அவருக்குக் கொண்டுவர வில்லை .தீஇவ 565.2

    தேவ ராஜ்யத்தின் முக்கிய நியதிகள் மறக்கப்படும்போதுதான், சமயச் சடங்குகள் கணக்கில்லாமல் அதிகரிக்கின்றன; பகட்டானதா கின்றன. குணத்தை மேம்படுத்தவும், ஆத்துமாவை அலங்கரிக் கவும், தேவபயத்தால் வரும் தாழ்மையைப் புறக்கணிக்கும் போது தான் பெருமையும் ஆடம்பர நாட்டமும் எழுகின்றன; அவை வியக் கத்தகு ஆலயக் கட்டடங்களையும் மட்டுமீறிய தோரணங்களையும் கவர்ச்சியான சமயச் சடங்குகளையும் வேண்டுகின்றன. ஆனால் இவற்றிலெல்லாம் தேவன் மகிமைப்படுவதில்லை. தேவன் தம் சபையிடம் வெளிப்படையான அனுகூலங்களை அல்ல; உலகத்தை விட்டு அதனை வேறுபடுத்திக்காட்டும் மெய்யான பக்தியையே அதிகம் எதிர்பார்க்கிறார். அதன் அங்கத்தினர்கள் கிறிஸ்துவைப் பற்றின அறிவில் வளர்வதை வைத்தும், அவர்கள் ஆவிக்குரிய அனுபவத்தில் வளர்வதை வைத்துமே அவர் அதனை மதிப்பிடு கிறார். அன்பின், கிருபையின் நியதிகளை அவர் எதிர்பார்க்கிறார். கிறிஸ்துவின் பிரதிநிதிகளிடம் வெளிப்படவேண்டிய குணத்தன்மை யின் அழகுக்கு எத்தகைய கலை அழகும் ஒப்பாகாது.தீஇவ 565.3

    தேசத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் ஒரு சபை இருக்கலாம்; வெளிப்புறக் காட்சிக்குக் கவர்ச்சியற்றதாகவும் அது தோன்றலாம். ஆனால், அதன் அங்கத்தினர்கள் கிறிஸ்துவின் குணத்தைப் பெற் றிருப்பார்களானால், அவர்களின் தொழுகையில் தேவதூதர்களும் அவர்களோடு இணைவார்கள். நன்றியுள்ள இருதயங்களிலிருந்து ஏறெடுக்கப்படும் ஸ்தோத்திரமும் துதியும் ஒரு சுகந்த பலியாகதேவ னைச் சென்றடையும்.தீஇவ 566.1

    கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்,
    அவர் கிருபை என்றுமுள்ளது.
    கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டவர்கள் ...
    அப்படிச் சொல்லக்கடவர்கள்’.

    ’அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்;
    அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப்பேசுங்கள்.
    அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்;
    கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக’.
    தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி,
    பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார்.’
    தீஇவ 566.2

    சங்கீ தம் 107:1,2; 105:2,3; 107:9.