Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    46 - திடன்சொல்ல தீர்க்கதரிசிகள்

    ஆலயத்தைத் திரும்பக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ர வேலருக்கு அருகாமையிலேயே சமாரியர்கள் வசித்தார்கள். அசீரி யப் பகுதிகளைச் சேர்ந்த யூதரற்ற குடிமக்களுக்கும், சமாரியா மற் றும் கலிலேயாவில் எஞ்சியிருந்த பத்துக் கோத்திரத்தாரின் மீத மானவர்களுக்கும் இடையேயான கலப்புத் திருமணத்தால் உரு வான கலப்பின மக்கள் அவர்கள். பின்னான நாட்களில், தாங்கள் மெய்தேவனைத் தொழுவதாகச் சமாரியர் சொல்லிக்கொண்டனர்; ஆனால் இருதயத்திலும் செய்கையிலும் அவர்கள் சிலை வழிபாட் டுக்காரராயிருந்தனர். சர்வலோகத்தின் மன்னரான ஜீவனுள்ள தேவனைத் தங்களுக்கு நினைவுபடுத்தவே சிலைகளை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் சுரூபங்கள் மேல் மக்கள் பயபக்திக் கொள்ள அது வழிவகுத்தது.தீஇவ 567.1

    இஸ்ரவேலர் சிறையிருப்பிலிருந்து வந்த சமயத்தில், இந்தச் சமாரியர் ‘யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள்’ என்றழைக்கப்பட்டனர். ‘சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார் கள்’ என்று கேள்விப்பட்டபோது, ‘அவர்கள் செருபாபேலிடத்துக் கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து அதனைக் கட்டும் பணியில் தாங்களும் உதவ விரும்புவதாகக் கூறினார்கள். ‘’உங்க ளோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப் பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற் கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டு வருகிறோம்’‘ என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் வேண்டிய சிலாக்கியம் அவர் களுக்கு மறுக்கப்பட்டது. ‘’எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டு கிறதற்கு உங்களுக்கும் எங் களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியா வின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்ட படி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம்’‘ என்று இஸ்ரவேலின் தலைவர்கள் கூறினார்கள். எஸ்றா 4:1-3.தீஇவ 567.2

    பாபிலோனிலிருந்து திரும்பிவரக் கொஞ்சப்பேர் மாத்திரமே தெரிந்துகொண்டனர். இப்பொழுதும், தங்கள் திராணிக்கும் மேலா னதாகத் தோன்றின ஒரு பணியை அவர்கள் மேற்கொண்டபோது, அவர்களுக்கு வெகு அருகாமையில் இருந்தவர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். மெய்யான தேவனையே தாங்களும் தொழு வதைச் சுட்டிக்காட்டின் சமாரியர்கள், ஆலய ஆராதனையில் தொடர்புடைய ஆசீர்வாதங்களிலும் சிலாக்கியங்களிலும் பங்கு கொள்ள தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். ‘’உங்களோடு கூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங் கள் தேவனை நாடுவோம்” என்றனர். ஆனால், தங்களுக்கு வந்த உதவியை யூதத்தலைவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், சிலைவழி பாடு உள்ளே நுழைய அவர்கள் ஒரு கதவைத் திறந்து விட்டிருக்கக் கூடும். சமாரியரின் வஞ்சகத்தை அவர்கள் அறிந்து கொண்டனர். யேகோவாவின் தெளிவான கட்டளைகளைப் பின்பற்றுவதால் தங் களுக்குக் கிடைக்குமென அவர்கள் எதிர்பார்த்த ஆசீர்வாதங் களோடு ஒப்பிடும்போது, ‘அந்த மனிதரோடு உறவுவைத்து, அதன் மூலம் கிடைக்கும் உதவியால் விளையக்கூடியது ஒன்றுமில்லை’ என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.தீஇவ 568.1

    இஸ்ரவேலர் தங்கள் சுற்றுப்புறத்தாரோடு வைத்திருக்கவேண் டிய உறவுகுறித்து இப்படியாக தேவன் மோசே மூலம் அறிவித்தார்: ‘அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங் கவும் வேண்டாம். அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; என் னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர் கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்த ருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்க ளையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண் டார். ‘உபா 7:2-4; 14:2.தீஇவ 568.2

    சுற்றிலுமிருந்த தேசத்தாரோடு உடன்படிக்கை உறவை ஏற் படுத்துவதால் உண்டாகும் விளைவு பற்றி தெளிவாக முன்னுரைக் கப்பட்டிருந்தது. ‘கர்த்தர் உன்னைப் பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய். அந்த ஜாதிகளுக் குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித்தரிக்க இடம் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்து போகிற கண்களையும், மனச்சஞ்சலத் தையும் கொடுப்பார். உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலா டும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில் கொண்டிருப்பாய். நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினா லும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என் றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என் றும் சொல்லுவாய்.’ உபா28:64-67. ‘’அப் பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத்தேடுவாய்; உன்ழுமு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்” என்றார் மோசே. உபா 4:29.தீஇவ 569.1

    இவ்வசனங்கள் உட்பட இதுபோன்ற வேதவாக்கியங்களை செருபாபேலும் அவருடைய கூட்டாளிகளும் நன்கு அறிந்திருந்த னர்; இவை நிறைவேறியதற்கான போதுமான ஆதாரங்களைத் தங் கள் சமீபித்திய சிறையிருப்பில் அவர்கள் கண்டிருந்தனர். இப்போ ழுதும், மோசேயால் தெளிவாக முன்னுரைக்கப்பட்டிருந்த நியா யத்தீர்ப்புகளைத் தங்கள் மேலும், தங்கள் முற்பிதாக்கள் மேலும் கொண்டுவந்த பாவங்களைவிட்டு மனந்திரும்பியதாலும், தங்கள் முழு இருதயத்தோடும் தேவனிடத்தில் திரும்பி, அவரோடு தங்கள் உடன்படிக்கை உறவைப் புதுப்பித்துக் கொண்டதாலும், அவர்கள் அழிந்து கிடந்ததை மீண்டும் கட்டும் படியாக யூதேயாவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்பொழுதுதான் அப்பணியை அவர்கள் மேற்கொண்டிருக்க, சிலைவழிபாட்டுக்காரரோடு அவர் கள் உடன்படிக்கை பண்ண வேண்டுமா?தீஇவ 569.2

    ’’அவர்களோடு உடன்படிக்கைபண்ண வேண்டாம்” என்றார் தேவன். தேவாலயத்தின் இடிபாடுகளுக்கு முன்பு ஒரு பலிபீடத் தைக் கட்டி, சமீபத்தில்தான் தங்களைத் தேவனுக்கு மறு பிரதிஷ்டை செய்திருந்தவர்கள், ‘அவருடைய மக்களுக்கும் உலகத் தாருக்கும் இடையேயான வித்தியாசம் எப்பொழுதும் தெள்ளத்தெளிவாக விளங்கவேண்டும்’ என்பதை அறிந்திருந்தனர். எனவேதான், தேவ பிரமாணத்தின் நிபந்தனைகளைத் தெளிவாக அறிந்திருந்தும், அதன் நிபந்தனைகளுக்கு இணங்க மறுத்தவர்களோடு உறவு ஏற் படுத்திக் கொள்ள அவர்கள் மறுத்தனர்.தீஇவ 570.1

    உபாகமத்தில் இஸ்ரவேலருக்குப் போதனையாகக் கொடுக்கப் பட்டுள்ள நியதிகள், காலத்தின் முடிவிலுள்ள தேவமக்களாலும் கைக்கொள்ளப்பட வேண்டியவையாகும். தேவனோடான உடன் படிக்கை உறவில் தொடர்ந்து நிலைத்திருப்பதில்தான், மெய்யான சுகவாழ்வும் செழிப்பும் உள்ளது. அவருக்குப் பயப்படாதவர் களோடு உறவு ஏற்படுத்திக்கொண்டு, மெய் நியதியில் சமரசமாக நாம் ஒருபோதும் உடன்படக்கூடாது.தீஇவ 570.2

    ’உலகியல் வாழ்வில் செல்வாக்குக்கொள்ள, தாங்கள் கொஞ் சமாவது உலகத்தோடு ஒத்துப்போகவேண்டும்’ என்று வெளிப் படையாகக் கிறிஸ்தவர்கள் கருதும் ஆபத்து தொடர்ந்து இருந்து வருகிறது. அத்தகைய போக்கு அதிக ஆதாயங்களைத் தருவது போலத் தோன்றினாலும், அது என்றுமே ஆவிக்குரிய அழிவில்தான் முடிவடையும். சத்தியத்தின் சத்துருக்களிடமிருந்து வரும் வஞ்சகத் தூண்டுதல்களின் மூலமாக நுழைய முயலும் ஒவ்வொரு தந்திரமான செல்வாக்கிற்கும் எதிராக தேவமக்கள் அதிக விழிப்போடிருக்க வேண்டும். இவர்கள், இவ்வுலகில் அந்நியரும் பரதேசிகளுமாய் இருக்கிறார்கள்; இடுக்கண் நிறைந்த ஒரு பாதையில் பயணிக்கிறார் கள். மெய்ப் பற்றிலிருந்து விலகச் செய்யத் தொடுக்கப்படும் நுட்ப மான சூழ்ச்சிகளுக்கும், கவர்ச்சியானதூண்டல்களுக்கும் அவர்கள் செவிசாய்க்கக்கூடாது.தீஇவ 570.3

    தேவ நோக்கத்திற்கு வெளிப்படையாக எதிர்த்து நிற்பவர் களைப்பார்த்துப் பயப்படத் தேவை இல்லை. பென்யமீனுக்கும் யூதா வுக்கும் இருந்த சத்துருக்கள் போல, மிருதுவான வார்த்தைகளோ டும் நயமான பேச்சோடும் வந்து, தேவ பிள்ளைகளிடம் நட்புறவு கொள்ள முயல்கிறவர்கள்தாம் வஞ்சிக்கத்தக்க அதிக வல்லமை யுடையவர்களாய் இருக்கின்றனர். மிக சாதுரியமாகத் திட்டமிடப் பட்டு, விரிக்கப்பட்ட வலையில் எதிர்பாராமல் அகப்படாதிருக்க, அத்தகைய காரியங்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆத்துமாவும் விழிப் புடன் இருக்கவேண்டும். குறிப்பாக, பூமியின் வரலாறு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், ஓயாத ஜாக்கிர தையைத் தம் பிள்ளைகளிடம் தேவன் எதிர்பார்க்கிறார். இந்தப் போராட்டம் முடிவற்றது என்றாலும், தனியே போராடும்படி எவரும் விட்டுவிடப்படவில்லை. தேவனுக்கு முன்பாகத் தாழ்மையோடு நடக்கிறவர்களுக்குத் தேவதூதர்கள் உதவி செய்து பாதுகாக்கிறார் கள். தம்மில் நம்பிக்கை கொள்ளும் ஒருவரையும் தேவன் புறக் கணிக்கமாட்டார். தீமையிலிருந்து பாதுகாப்பு வேண்டி தம் பிள்ளை கள் தம்மிடம் வரும் போது, அவர்கள்மேல் அன்பும் இரக்கமும் கொண்டு அவர்கள் நிமித்தம் சத்துருவுக்கு எதிராக ஒரு கொடியை ஏற்றுவார். அவர்களைத் தொடாதே, அவர்கள் என்னுடையவர்கள்; என் உள்ளங்கைகளில் நான் அவர்களை வரைந்துள்ளேன்’ என்று சொல்லுவார்.தீஇவ 570.4

    சமாரியர்கள் தங்களுடைய ஓயாத எதிர்ப்பினால், ‘யூதா ஜனத் தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங் கடப்படுத்தி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலம் முழு வதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோ தமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலிகட்டினார்கள். எஸ்றா 4:4, 5. பொய்யான அறிக்கைகளால், உள்ளங்களில் அவநம்பிக் கையை எழுப்பவும், எளிதில் சந்தேகங்கொள்ளவும் செய்தார்கள். ஆனால், அநேக வருடங்களாக அந்தகார வல்லமைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன ; யூதேயா மக்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்ய சுதந்தரம் இருந்தது.தீஇவ 571.1

    தேவ மக்களுக்குத் தயவு காட்டாதவாறு, மேதிய - பெர்சியா ராஜ்யத்திலிருந்த உயர் அதிகாரிகளிடத்தில் ஒரு மாற்றத்தை உரு வாக்க சாத்தான் முயன்று கொண்டிருந்தபோது, சிறைப்பட்டிருந் தோரின் சார்பாக தேவதூதர்கள் கிரியை செய்து கொண்டிருந்தனர். பரலோகம் முழுவதுமே அக்கறை கொள்ளத்தக்க ஒரு போராட்ட மாக அது இருந்தது. நன்மையின் சக்திகளுக்கும் தீமையின் சக்திகள் ளுக்கும் இடையேயான ஒரு வல்லமையான போராட்டம் பற்றின ஒரு காட்சி, தானியேல் தீர்க்கதரிசிமூலம் நமக்குக் கொடுக்கப்பட் டிருக்கிறது. கோரேஸின் மனதில் செயல்பட்ட செல்வாக்குகளைத் தடுக்கும் முயற்சியில், மூன்று வாரங்கள் அந்தகாரவல்லமைகளோடு போராடினான்காபிரியேல்; அந்தப் போராட்டம் முடிவதற்கு முன்பே, காபிரியேலுக்கு உதவும்படி கிறிஸ்துதாமே வந்தார். ‘’பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள் மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்” என்றான் காபிரியேல். தானி 10:13. தேவ மக்களுக்காக பரலோகம் செய்யக்கூடிய யாவும் செய் யப்பட்டது; இறுதியில் வெற்றி கிடைத்தது. கோரேஸின் நாட்களில் லும் அவருடைய குமாரனாகிய கேம்பிஸ்ஸின் நாட்களிலும் சத்துரு வின் சேனைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. ஏழரை ஆண்டுகள் ஆட்சிசெய்தான் கேம்பிஸஸ்.தீஇவ 571.2

    யூதருக்கு அது ஓர் அற்புத வாய்ப்பாக இருந்தது. பரலோகத்தின் மேன்மையான வல்லமைகள் ராஜாக்களின் உள்ளங்களில் கிரியை செய்து கொண்டிருந்தன; கோரேஸின் கட்டளையை முழு வீச்சில் நிறைவேற்றப் பிரயாசப்பட வேண்டியதுதான் தேவமக்களின் வேலையாயிருந்தது. ஆலயத்தைத் திரும்பக்கட்டி, அதன் ஆராதனை களை மீண்டும் நடை பெறச் செய்யவும், யூதேயாவில் தங்கள் வீடு களில் மீண்டும் குடியேறவும் அவர்கள் எல்லா முயற்சியும் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அந்நாளில் தேவ வல்லமையில் அநே கர் விருப்பமிழந்து காணப்பட்டனர். தங்கள் எதிரிகளின் எதிர்ப்பு உறுதியாகவும் பெலமாகவும் இருந்ததால், கட்டடம் கட்டினவர்கள் தங்கள் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். மூலைக்கல் நாட்டப்பட்ட வேளையில், அப்பணியில் அநேகர் தங் கள் அவிசுவாசத்தை வெளிப்படுத்தின காட்சியைச் சிலரால் மறக்க முடியவில்லை . சமாரியர்கள் அதிகதிகமாக எதிர்த்தபோது, ‘ஆல யத்தை மீண்டும் கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதா, இல்லையா?’ என்று யூதர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். விரைவிலேயே அந்த உணர்வு எப்பக்கமும் பரவியது. கட்டுமானக்காரர் அநேகர், மனச்சோர்வும் அதைரியமும் அடைந்தவர்களாய்த் தங்கள் அன் றாட அலுவல்களில் ஈடுபட தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.தீஇவ 572.1

    கேம்பிஸ்ஸின் ஆட்சிக்காலத்தில் ஆலயப்பணி மெதுவாகவே நடைபெற்றது. போலிஸ்மர்தீஸின் காலத்தில் (எஸ்றா 4:7 இல், இவன் அர்தசஷ்டா என்றழைக்கப்படுகிறான்). யூதர்கள் ஆலயத்தை யும் நகரத்தையும் கட்டாதவாறு தடை செய்ய ஒரு கட்டளை போடும் படி, மனச் சாட்சியற்ற அந்த வஞ்சகனைச் சமாரியர்கள் தூண்டி விட்டனர்.தீஇவ 572.2

    ஆலயம் ஒரு வருட காலம் புறக்கணிக்கப் பட்டும், கைவிடப் பட்டும் கிடந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் குடியிருந்து, உலகப் பிரகாரமான செழிப்பைப் பெற, பெரிதும் பிரயாசப்பட்டுக் கொண் டிருந்தனர். ஆனால் அவர்களின் நிலையோ வருத்தகரமாயிருந்தது. அவர்கள் என்னதான் பிரயாசப்பட்டாலும், செழிக்கவில்லை. இயற் கையின் காரியங்கள்தாமே அவர்களுக்கு எதிராகச் சதி செய்வதுபோல் இருந்தது. தேவாலயத்தை அவர்கள் பாழ்நிலமாக விட்டுவிட்டதின் நிமித்தம், அவர்களுடைய பொருட்கள் வீணாகக் கழிந்துபோக தேவன் அனுமதித்தார். தேவன் தம்முடைய தயவின் அடையாள மாக, வயல்கள் மற்றும் தோட்டங்களின் கனிகளையும், தானியங் களையும், திராட்சரத்தையும், எண்ணெயையும் அவர்கள்மேல் பொழிந்தருளியிருந்தார்; ஆனால் ஏராளமான இந்த ஈவுகளை அவர்கள் சுய நலத்துடன் பயன்படுத்தியதின் நிமித்தம், இந்த ஆசீர் வாதங்கள் அகற்றப்பட்டன.தீஇவ 573.1

    தரியு ஹிஸ்டாஸ்பெஸின் ஆளுகையின் ஆரம்பக்கட்டத்திலும் நிலைமை இப்படியே இருந்தது. ஆவிக்குரிய நிலையிலும் லெளகீக நிலையிலும் பரிதாபமாக இருந்தனர் இஸ்ரவேலர் . வெகு நாட்கள் ளாக அவர்கள் முறுமுறுத்து, சந்தேகித்து இருந்தார்கள்; தேவாலயம் இடிந்து கிடந்ததில் அக்கறையற்றவர்களாய்த் தங்கள் சுயநலன் களை முன்னிறுத்தவே அநேக நாட்கள் அவர்கள் தெரிந்துகொண்ட னர். எனவே, தங்களை யூதேயாவுக்கு மீண்டும் அழைத்துவந்ததில், தேவநோக்கத்தை அவர்கள் மறந்தார்கள். அவர்கள், ‘’கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்ற காலம் இன்னும் வரவில்லை ” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆகாய் 1:2.தீஇவ 573.2

    ஆனால், அந்த அந்தகார வேளையிலும் கூட, தேவன்மேல் நம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போக வில்லை. அந்த நெருக்கடி நிலையை எதிர்கொள்ள ஆகாய், சகரியா போன்ற தீர்க்கதரிசிகள் எழுப்பப்பட்டனர். தேவனால் நியமிக்கப் பட்ட இந்தத் தூதுவர்கள் மக்களுக்கு அவர்களுடைய துன்பத்திற் கான காரணத்தைவல்லமையான சாட்சியங்களோடு வெளிப்படுத்தி னார்கள். ‘தேவனுடைய நோக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக் காததே இவ்வுலக ஆசீர்வாதத்தை இழந்து போனதற்கான காரணம்’ என்று தீர்க்கதரிசிகள் அறிவித்தனர். தேவவீட்டைக் கட்ட முன் னுரிமை கொடுத் திருப்பதின் மூலம், தேவனை அவர்கள் கனப் படுத்தி, அவருக்கு மதிப்பும் மரியாதையும் ஏறெடுத்திருந்தால், அவர்கள் மீண்டும் அவர் பிரசன்னத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்திருப்பார்கள்.தீஇவ 573.3

    அதைரியப்பட்டுக் கிடந்தவர்கள் தங்களை ஆராயும் விதத் தில், இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப் பாவப் பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழி களைச் சிந்தித்துப் பாருங்கள்” என்று கேள்வி எழுப்பினான் ஆகாய். நீங்கள் மிகக் கொஞ்சமே செய்தது என்ன? நீங்கள் உங்கள் வீடுகளைக் கட்டுவதில் அக்கறையும் தேவாலயத்தைக் கட்டுவதில் அக்கறை யின்மையும் கொண்டதென்ன? கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டுவதில் முதலில் உங்களிடம் காணப்பட்ட ஆர்வம் எங்கே? சுயத்தைச் சேவிப் பதால் நீங்கள் பெற்றுக்கொண்டது என்ன? வறு மையிலிருந்து நீங்கள் தப்பிக்க நினைத்ததே, தேவாலயத்தை நீங் கள் புறக்கணிக்க வழிநடத்தியது. ஆனால், இந்தப் புறக்கணிப்பு நீங்கள் பயந்த காரியத்தை உங்கள்மேல் வரச் செய்தது. ‘நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை ; குடித்தும் பரிபூரணமடைய வில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விட வில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்’. வச 4-6.தீஇவ 574.1

    அதன்பிறகு, அவர்களுக்கு வந்த வறுமைக்கான காரணத்தை அவர்களுக்குத் தெள்ளத்தெளிவாக விளங்கும் வார்த்தைகளினால் வெளிப்படுத்தினார் தேவன். ‘அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர் பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆத லால், உங்கள் மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும்; பூமி பலனைக் கொடாமலும் போயிற்று. நான் நிலத்தின் மேலும், மலைகளின் மேலும், தானியத்தின் மேலும், புது திராட்சரசத்தின் மேலும், எண்ணெயின் மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின் மேலும், மனுஷரின் மேலும், மிருகங்களின்மேலும் கைப்பாடு அனைத்தின் மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்“. வச9-11.தீஇவ 574.2

    ’’உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் மலையின் மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத் திடன் சொல்ல தீர்க்கதரிசிகள் தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதி னால் என் மகிமை விளங்கும்’‘ என்றார் தேவன். வச 7, 8.தீஇவ 574.3

    கடிந்துகொள்ளும் விதத்திலும், ஆலோசனையாகவும் ஆகாய் மூலம் கொடுக்கப்பட்ட செய்தியை இஸ்ரவேலின் மக்களும் தலை வர்களும் மனமார ஏற்றுக்கொண்டனர். தேவன் தங் கள்மேல் அக் கறை கொண்டிருந்ததை அறிந்தனர். தங்களுடைய ஆவிக்குரிய மற்றும் உலக ஆசீர்வாதமானது, தேவனுடைய கட்டளைகளுக்கு உண்மையாகக் கீழ்ப்படிவதைச் சார்ந்தே இருந்ததால், மீண்டும் மீண்டும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட போதனையைப் புறக் கணிக்க அவர்கள்துணியவில்லை. தீர்க்கதரிசியின் வார்த்தைகளால் விழித்துக் கொண்ட செருபாபேலும், யோசுவாவும், ‘ஜனத்தில் மீதி யான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக் கும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள். ‘வச 12.தீஇவ 575.1

    இஸ்ரவேலர் கீழ்ப்படிய தீர்மானித்ததுமே, கடிந்துகொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டிருந்த வார்த்தைகளைத் தொடர்ந்து ஊக்க மூட்டும் வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. அப்பொழுது ஆகாய், ஜனங்களை நோக்கி, நான் உங்களோடே இருக்கிறேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் ; பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும் யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவி யையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப் பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே வேலை செய்தார்கள்.’ வச 13, 14.தீஇவ 575.2

    தேவாலயப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற் குள்ளாகவே, கட்டடப்பணியாளர்களுக்கு இன்னொரு ஆறுதலான செய்தி கொடுக்கப்பட்டது. ‘செருபாபேலே, நீ திடன்கொள். யோசுவாவே நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள்.’ ‘நான் உங்களு டனே இருக்கிறேன்’ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’ என்று தேவன்தாமே தம் தீர்க்கதரிசி மூலமாகக் கூறினார். ஆகாய் 2:4.தீஇவ 575.3

    சீனாய் மலைமுன் முகாமிட்டிருந்த இஸ்ரவேலரிடம், ‘’இஸ்ர வேல் புத்திரரின் நடுவிலே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன். தங்கள் நடுவிலே நான் வாசம் பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங் கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்” என்றார் தேவன். யாத் 29:45, 46. இப்பொழுதும், அவர்கள் மீண்டும் மீண்டும் ‘கலகம் பண்ணி, பரி சுத்த ஆவியை விசனப்படுத்தின ‘போதிலும், தம்முடைய தீர்க்க தரிசியின் செய்திகளின் மூலமாக, அவர்களை இரட்சிக்க மீண்டும் ஒருமுறை தம் கரத்தை நீட்டினார் தேவன். தம் நோக்கத்தோடு அவர்கள் ஒத்துழைத்ததில், அவர்களை அங்கீகரிக்கும்வண்ணம் தம்முடைய ஆவியானவர் அவர்கள் மத்தியில் இருக்கும்படி, தம் உடன்படிக்கையை அவர்களோடு அவர் புதுப்பித்தார்; ‘பயப் படாதிருங்கள்’ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.தீஇவ 575.4

    ’’திடன்கொள்ளுங்கள். வேலையை நடத்துங்கள். நான் உங்களுடனே இருக்கிறேன்” என்று இன்றைய தம் பிள்ளைகளிட மும் தேவன் சொல்கிறார். ஒரு மகத்தான உதவியாளர் கிறிஸ்த வர்களுக்கு எப்பொழுதுமே உண்டு. தேவன் உதவும் விதத்தை நாம் அறியாதிருக்கலாம்; ஆனால், ‘தேவன் மேல் நம்பிக்கை வைப்பவர்களை தேவன் ஒருபோதும் கைவிடமாட்டார்’ என்பது நிச்சயம். தங்களைக்குறித்துச் சத்துரு போடுகிற திட்டங்கள் நிறை வேறக் கூடாதபடி, தேவன் எத்தனை முறை தங்கள் பாதையை ஒழுங்கமைத்தார் என்பதைக் கிறிஸ்தவர்கள் உணரக்கூடுமானால், வழிநெடுக தாங்கள் குறைகூறிக்கொண்டும், தடுமாறிக்கொண்டும் இருப்பதை நிறுத்திவிடுவார்கள். அவர்களுடைய விசுவாசம் தேவ னில் நிலைகொண்டிருக்கும்; அவர்களை அசைக்கத் தக்கதான வல் லமை எந்தச் சோதனைக்கும் இராது. அவரையே தங்கள் ஞான மாகவும் திறனாகவும் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மூலமாக தாம் செய்ய விரும்புவதை அவர் நிறைவேற்றி முடிப்பார்.தீஇவ 576.1

    ஆகாய் மூலமாகக் கொடுக்கப்பட்ட ஊக்கமான வேண்டு கோள்களையும் ஆறுதல்களையும் சகரியாவும் வலியுறுத்திச் சொன் னான். எழுந்து கட்டுமாறும், தாம் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கட்ட ளையை நிறைவேற்றுமாறும் தம் சார்பாக அவர்களுக்கு வலியுறுத் தும்படி அவனை எழுப்பினார்தேவன். ‘தேவவார்த்தை ஒருபோதும் தோற்காது’ என்கிற நிச்சயத்தையும், தீர்க்கதரிசனத்தின் நிச்சய வார்த்தைக்குச் செவிகொடுப்போருக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் பற்றின ஒரு வாக்குத்தத்தத்தையும் அறிவித்ததே சகரியாவின் முதல் செய்தியாகும்.தீஇவ 576.2

    வயல்கள் பாழாகக் கிடந்தன; கொஞ்சமிருந்த உணவுப் பொருட்கள் வேகமாகக் குறைந்து வந்தன. அவர்களைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் நட்பு இல்லை. ஆயினும், தேவ தூதுவர்களின் அழைப்பிற்கிணங்கி, விசுவாசத்தோடு முன்சென்று, இடிந்துகிடந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டுகிற வேலையை அவர்கள் விழிப் போடுவேலை செய்தார்கள். தேவனை உறுதியுடன் சார்ந்திருப்பதே அப்பணிக்குத் தேவையான முக்கியத்தன்மையாக இருந்தது. தங்கள் கடமையைச் செய்ய மக்கள் அதிக முயற்சி எடுத்தார்கள்; தங்கள் இரு தயத்திலும் வாழ்விலும் தேவகிருபை புதுப்பிக்கப்பட நாடினார்கள். ‘அவர்களுடைய விசுவாசத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்’ என்றும், ‘எந்த ஆலயத்தின் மதில்களை அப்போது அவர்கள் கட்டி வந்தார் களோ, அதன் எதிர்கால மகிமை குறித்த தேவவார்த்தை பொய்யா காது’ என்றும் தேவனிடமிருந்து ஆகாய் மற்றும் சகரியா மூலம் நிச் சயமான செய்திகள் அவர்களுக்கு வந்து கொண்டேயிருந்தன. சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வர இருந்தார். காலம் நிறை வேறும்போது, போதகராகவும் மனித இனத்தின் இரட்சகராகவும் அதே கட்டடத்தில்தான் பிரவேசிக்க இருந்தார்.தீஇவ 577.1

    இப்படியாக, கட்டடம் கட்டினவர்கள் தனியாட்களாய்ப் பிர யாசப்படுமாறு தேவன் விட்டுவிடவில்லை; அவர்களுக்குத் திடன் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.’ ‘’திடன் கொள்ளுங்கள். வேலையை நடத்துங்கள்; நான் உங்களுடனே இருக் கிறேன்” என்று சேனைகளின் கர்த்தர்தாமே அவர்களுக்கு அறிவித் தார். எஸ்றா 5:2; ஆகாய் 2:4.தீஇவ 577.2

    மனம் உணர்ந்து மனந்திரும்பினார்கள்; தேவனை நம்பி முன் னேறிச் செல்ல விரும்பினார்கள். அத்தோடு, லெளகீகச் செழிப்பிற் கான வாக்குத்தத்தமும் வந்தது. ‘’நான் இன்று முதல் உங்களை ஆசீர் வதிப்பேன்” என்றார் தேவன். வச 19.தீஇவ 577.3

    பாபிலோனிலிருந்து திரும்பி வந்தது முதல், சகல நாட்களிலும் மிகவும் பிரயாசப்பட்டு வந்த அவர்களுடைய தலைவனான செரு பாபேலுக்கு மிக முக்கியமான ஒரு செய்தி கொடுக்கப்பட்டது. தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குச் சத்துருக்களாக உள்ள யாவரும் விழுந்து போகும் நாள் வருகிறதென்று தேவன் அறிவித் தார். செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன். நான் உன்னைத் தெரிந்து கொண்டேன்’‘ என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். வச 23. ஏமாற்றத்திற்கும் குழப்பத்திற்கும் ஊடே தன்னை வழிநடத்தின தேவநடத்துலின் நோக்கத்தை இஸ்ரவேலின் தேசாதிபதியான செருபாபேலால் இப்போது காணமுடிந்தது; அவை அனைத்திலும் தேவனுக்கு ஒரு நோக்கம் இருந்ததை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.தீஇவ 577.4

    செருபாபேலுக்கு ஊக்கம் கொடுப்பதற்காக தனிப்பட்ட விதத் தில் கொடுக்கப்பட்ட வார்த்தையானது, ஒவ்வொரு காலத்திலும் தேவபிள்ளைகளை ஊக்கப்படுத்தும்படி வேதாகமத்தில் எழுதப் பட்டுள்ளது. தேவன் தமது பிள்ளைகளுக்குச் சோதனை தந்தால், அதிலும் ஒரு நோக்கம் இருக்கும். ஆரம்ப முதல் முடிவு வரை ஒருவ னால் பார்க்க முடிந்து, தன் செயல் மூலம் தான் நிறைவேற்றிவருகிற நோக்கத்தின் மகிமையை முன்னரே அவன் உணரக்கூடுமானால், எந்த வழியை அவன் தெரிந்துகொள்வானோ, அந்த வழியைத்தவிர வேறு எந்த வழியிலும் தேவன் அவனை நடத்துவதில்லை. நாம் தேவனுக்காக வேலை செய்யவேண்டும்; பாடுபட வேண்டும். அதற்கு நம்மைப் பெலப்படுத்தவே, நமக்குச் சோதனையும் வேத னையும் தருகிறார்.தீஇவ 578.1

    ஆலயத்தைத் திரும்பக்கட்டுவதற்கு, தங்களால் முடிந்த அனைத்தையும் மக்கள் செய்யவேண்டி இருந்தது. அவ்வாறு செய லாற்றுமாறு, ஆகாயும் சகரியாவும் கொடுத்த செய்திகள் அவர் களைத் தூண்டின. ஆனால், அவர்கள் வேலை செய்தபோது, சமாரி யர்களும் பிற எதிரிகளும் பல தடைகளை ஏற்படுத்தி, தொல்லை கொடுத்தார்கள். ஒருசமயம், மேதிய பெர்சிய ராஜ்யத்தின் மாகாண அதிபதிகள் எருசலேமுக்கு வந்து, ‘’இந்தக் கட்டடத்தை மீண்டும் கட்ட, உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?’ என்று விசாரித் தார்கள். அச்சமயத்தில், அவர்கள் தேவநடத்துதலை நம்பாதிருந் திருப்பார்களானால், அந்த விசாரணை அவர்களுக்குப் பேரழிவாக அமைந்திருக்கும். ‘ஆனாலும், இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின்வேலை யைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள் மேல் வைக்கப் பட்டிருந்தது’ எஸ்றா 5:5. யூதர் மிகவும் ஞானமாக அந்த அதிகாரிகளுக்குப் பதிலளித்ததால், அவர்கள் மோதிய - பெர்சி யாவின் மன்னனான இரண்டாம் தரியு ஹிஸ்டாஸ்பஸிற்கு ஒரு கடி தம் எழுதினார்கள். அதன் விளைவாக, எருசலேமில் தேவனுடைய வீட்டை மீண்டும் கட்டவும், அதற்கு அரசகருவூத்திலிருந்து உதவி செய்யவும் கோரேஸ் போட்ட கட்டளை இந்த மன்னனின் கவனத் திற்கு வந்தது.தீஇவ 578.2

    அந்த ஆணை எங்கே இருக்கிறதென்று தேடிப் பார்த்த தரியு, அதனைக் கண்டுபிடித்தான்; தேவாலயத்தை மீண்டும் கட்ட அனு மதிக்கலாமா?’‘ என்று கேட்டு எழுதியிருந்தவர்களுக்குப் பதில் எழுதினான். ‘தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும். யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனு டைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்’‘ என்று கட்டளையிட்டான்.தீஇவ 579.1

    ’’தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத் தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாத படிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகியராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும். பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகன பலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முத லானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது. எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பர லோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையானபலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவன் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும் படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக” என்று எழுதினான். எஸ்றா 6:8-10.தீஇவ 579.2

    அக்கட்டளையை எவ்விதத்திலாவது மாற்றுகிறவர்கள் கடு மையான தண்டனையைச் சந்திக்க நேரிடுமென்றும் ராஜா ஆணை யிட்டிருந்தான். இதை மாற்றவும், எருசலேமிலுள்ளதேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப் போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியு வாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக் கிரதையாய்ச் செய்யப்படக்கடவது’ என்ற விசேஷ அறிவிப்போடு அவன் தன் கட்டளையை முடித்திருந்தான். வச 12. இப்படியாக, ஆலயம் கட்டிமுடிக்கப்படுவதற்கான வழியை ஆயத்தம் பண்ணி னார் தேவன்.தீஇவ 579.3

    இந்தக்கட்டளை பிறப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பிருந்தே இஸ்ரவேலர் விசுவாசத்தோடு பிரயாசப்பட்டுவந்தனர்; காலத்திற் கேற்ற செய்திகளைத் தந்ததன் மூலம் தேவனுடைய தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு உதவியாயிருந்தனர். அதன்மூலம், இஸ்ரவேலுக் கான தேவ நோக்கத்தைக் கட்டடப் பணியாட்களுக்கு முன்பாக எப் போதும் அந்தத் தீர்க்கதரிசிகள் நிறுத்தியிருந்தனர். ஆகாய் மூலம் தேவன் கொடுத்த கடைசிச் செய்தியிலிருந்து இரண்டு மாதங்களுக் குப்பிறகு, பூமியில் தமக்கான ஊழியம் பற்றிய தொடர்த்தரிசனங் களைச் சகரியாவுக்குத் தந்தார் தேவன். உவமை வடிவிலும் அடை யாளங்கள் வடிவிலும் அத்தரிசனங்கள் அமைந்திருந்தன. எந்த நிச்சயமும் இல்லாதிருந்த மக்கள் மனதில் கவலை நிரம்பியிருந்த காலம் அது. இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் பிரயாசப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்தோருக்கு அவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவைாய் இருந்தன. ஆலயத்தைத் திரும்ப எடுப்பித்துக்கட்ட யூதருக்கு வழங்கியிருந்த அனுமதியை, அரசு நிராகரித்துவிடும் என்று தலைவர்கள் நினைத்தனர்; எதிர்காலம் மிக இருண்டதாகத் தோன்றியது. தேவன் தம்முடைய அளவற்ற மனதுருக்கம், அன்பு ஆகியவை பற்றிய ஒரு வெளிப்பாட்டால், தம்முடைய மக்களைத் தாங்கி, அவர்களுக்கு ஊக்கம் தரவேண்டியது அவசியம் என்று கண் டார்.தீஇவ 579.4

    சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின் மேலும் யூதா பட்டணங்க ளின் மேலும் எந்த மட்டும் இரங்காதிருப்பீர்?” என்று தரிசனத்தில் கர்த்தருடைய தூதன் கேட்டதைக் கேட்டான் சகரியா. ‘’அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்ல வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்” என் கிறான் சகரியா.தீஇவ 580.1

    அதன்பிறகு சகரியா சொல்வதையும் பார்ப்போம்: அப்பொ ழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி, சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், ‘’நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள் பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன். ஆகையால் மன உருக்கத் தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன்” என்று கர்த்தர் சொல் லுகிறார். ‘’என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல்பிடிக்கப்படும்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். சகரியா1:12-16.தீஇவ 580.2

    “இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக் கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவுபண்ணுவார்; இன் னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறாரென்று முன்னுரைக்கும்படி வழிநடத்தப்பட் டான் தீர்க்க தரிசி. வச 17.தீஇவ 580.3

    பிறகு, ‘யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதற டித்த ‘வல்லமைகளை அடையாளப்படுத்தின நான்கு கொம்பு களைக் கண்டான் சகரியா. அதன்பின் உடனேயே, தம்முடைய ஜனங்களைத் திரும்பக் கொண்டுவந்து, தம் ஜெபவீட்டை எடுப் பித்துக் கட்டுவதற்கு தேவன் பயன்படுத்தின பிரதிநிதிகளின் அடை யாளமான நான்கு கொல்லர்களைக் கண்டான். சகரியா 1:18-21 வரை பார்க்கவும்.தீஇவ 581.1

    ’’நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன். நீர் எவ்விடத்துக்குப் போகிறீர்?” என்று கேட்டேன்; அதற்கு அவர், ‘’எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும், அதின் நீளம் இவ் வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன்’‘ என்றார். இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டு வந்தான். இவனை அவர் நோக்கி, “நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்ல வேண்டியது என்ன வென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின்திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில் லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும். நான் அதற்குச் சுற்றி லும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப் பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’‘ என்றான் சகரியா. சகரியா 2:1-5.தீஇவ 581.2

    எருசலேமை மீண்டும் கட்டும்படி தேவன் கட்டளையிட்டார்; நகரத்தை அளவிட்டது குறித்த தரிசனத்தின் மூலம், தேவன் தம் மக் களுக்கு ஆறுதலும் பெலமும் கொடுத்தார். தம் நித்திய உடன்படிக் கையின் வாக்குத்தத்தங்களை அவர் நிறைவேற்றுவாரெனும் நிச் சயத்தை அது தந்தது. பாதுகாக்கும் தம் கிருபை அவர்களைச் சுற்றி லும் அக்கினி மதிலாயிருக்குமென்றும், அவர்கள் மூலம் மனுபுத்திரர் அனைவருக்கும் தம்முடைய மகிமை வெளிப்படுமென்றும் அவர் கூறினார். தம் மக்களுக்காக அவர் நிறைவேற்றிக் கொண்டிருந்த காரியங்கள் பூமி எங்கும் அறியப்பட இருந்தது. ‘சீயோனில் வாச மாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத் தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்’ என்கிறது ஏசாயா 12:6.தீஇவ 581.3