Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    52 - நல்வாய்ப்பு பெற்ற மனிதர்

    எபிரெயச் சிறைக்கைதிகளில் ஒருவனான நெகேமியா, பெர் சிய அரசவையில் செல்வாக்கும் கனமும் வாய்ந்த ஒரு பதவிவகித் தான். ராஜாவுக்குப் பான பாத்திரக்காரனாக, ராஜசமுகத்தில் நிற்கும் உரிமையைப் பெற்றிருந்தான். தன் பதவியாலும், தன் நம் பகத்தன்மையாலும் திறமைகளாலும், ராஜாவுக்கு நண்பனாகவும் ஆலோசகனாகவும் மாறினான். ராஜாவின் தயவைப்பெற்று, பகட் டும் ஆடம்பரமும் சூழ இருந்தபோதிலும் தன் தேவனையோ மக்க ளையோமறக்கவில்லை. அவன் உள்ளத்தில் எருசலேமைக்குறித்து மிகுந்த அக்கறை இருந்தது. அதன் சுகவாழ்வை எண்ணிச் சந்தோ ஷமும் நம்பிக்கைகளும் பொங்கி வழிந்தன. பெர்சிய அரசவை யில் அவர் இருந்த காலக்கட்டத்தில், தான் அழைக்கப்பட இருந்த பணிக்காக ஆயத்தம் பண்ணப்பட்டான். அவன் மூலமாக, தம் மக் களுக்கு அவர்களுடைய பிதாக்களின் தேசத்தில் ஆசீர்வாதத்தைக் கொண்டுவர தேவன் நோக்கங்கொண்டார்.தீஇவ 628.1

    தெரிந்துகொள்ளப்பட்ட நகரான எருசலேமிற்குச் சோதனை யின் நாட்கள் வந்ததை, யூதேயாவிலிருந்து வந்த தூதுவர்கள் மூலம் அந்த எபிரெய விசுவாச வீரன் அறிந்தான். அங்குத் திரும்பிச்சென் றிருந்த சிறைக்கைதிகள் வேதனையையும் அவமதிப்பையும் அனு பவித்து வந்தனர். ஆலயமும், நகரத்தின் சில பாகங்களும் மீண்டும் கட்டப்பட்டிருந்தன; ஆனால், புதுப்பிக்கும் பணி முடங்கிக்கிடந்தது. ஆலய ஆராதனைகள் தடைப்பட்டு இருந்தன. நகரத்தின் மதில் களில் பெரும்பாலான பகுதி இன்னமும் இடிந்து கிடந்தது குறித்து, மக்கள் தொடர்ந்து பயத்தில் இருந்தார்கள்.தீஇவ 628.2

    துக்கத்தால் நிறைந்திருந்தான் நெகேமியா. அவனால் புசிக் கவோ குடிக்கவோ முடியவில்லை; அவன் அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்தான். ‘’நான் பரலோகத்தின் தேவனை நோக்கிப் பிரார்த்தித்தேன்’ என்கிறான். தன் பாவங்களையும் தன் ஜனங்களின் பாவங்களையும் உண்மையோடு அறிக்கை செய்தான். இஸ்ரவேலுக் காக தேவன் வைத்திருந்த நோக்கத்தைக் காக்கவேண்டுமென்றும், தங்களுக்கு மீண்டும் தைரியத்தையும் பெலத்தையும் தரவேண்டும் மென்றும், யூதாவின் பாழ்நிலங்களைக் கட்டி எழுப்ப உதவவேண்டு மென்றும் வேண்டினான்.தீஇவ 629.1

    நெகேமியா ஜெபித்தபோது, அவன் விசுவாசமும் துணிவும் பெலனடைந்தன. தேவனோடு அவன் செய்த வாதங்கள் பரிசுத்த மானவை. தேவமக்கள் இப்போது தேவனிடம் திரும்பியிருந்த நிலை யில், அவர்கள் பெலவீனத்திற்கும் கொடுமைக்கும் ஆளானால் தேவன்மேல் சுமத்தப்படக்கூடிய இலச்சை குறித்தும் அவன் சுட்டிக் காட்டினான். நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தா லும் நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங் கும்படி நான் தெரிந்துகொண்டஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டு வருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்” எனும் வாக்குத் தத்தத்தை நிறைவேற்றுமாறு தேவனிடம் வலியுறுத்தினான். பார்க்க: உபாகமம் 4:29-31. இஸ்ரவேலர் கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக மோசேயின் மூலம் இந்த வாக்குத்தத்தம் கொடுக்கப் பட்டது. பின்னான நூற்றாண்டுகளிலும் அதில் மாற்றம் ஏற்பட வில்லை. தேவமக்கள் பாவத்திற்கு வருந்தி, விசுவாசத்தோடு இப் பொழுது அவரிடத்தில் திரும்பியிருந்தார்கள். அவருடைய வாக் குத்தத்தம் தோற்றுப்போகாது.தீஇவ 629.2

    தன் ஜனங்களின் நிமித்தம் எப்போதும் ஆத்தும் பாரம் கொண் டிருந்தான் நெகேமியா. இப்போதும், அவன் ஜெபித்தபோது அவ னுடைய மனதில் ஒரு பரிசுத்த நோக்கம் உருவானது. ராஜாவின் சம்மதமும், பணிமுட்டுச் சாமான்களையும் மற்ற பொருட்களையும் பெறுவதில் தேவையான உதவியும் கிடைத்தால், எருசலேமின் மதில் களைத் திரும்ப எடுப்பித்துக் கட்டும் பணியையும் இஸ்ரவேல் தேசத் தின் பெலனை மீண்டும் நிலைநாட்டும் பணியையும் தானே மேற் கொள்ள அவன் தீர்மானித்தான். இத்திட்டம் நிறைவேறும்படிக்கு, ராஜாவின் பார்வையில் தனக்குத் தயவுகிடைக்கச் செய்ய வேண்டு மென்று தேவனிடம் வேண்டினான். ‘இன்றைக்கு உமது அடியானுக் குக்காரியத்தைக்கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும்’ என்று வேண்டினான்.தீஇவ 630.1

    இராஜாவிடம் தன் வேண்டுகோளை ஏறெடுக்க ஒரு சிறந்த தருணத்திற்காக நான்கு மாதங்கள் காத்துக்கொண்டிருந்தான் நெகே மியா. அக்காலக்கட்டத்தில், அவன் உள்ளம் துக்கத்தால் நிறைந் திருந்தாலும் ராஜாவின் முன்னிலையில் தன்னை மகிழ்ச்சியுடன் காட்ட அவன் பெரிதும் முயன்றான். ஆடம்பரமும் சொகுசும் கூடிய அந்த அறைகளில், அனைவருமே மன இளக்கத்தோடும் சந்தோ ஷத்தோடும் தான் காணப்பட வேண்டும். அரண்மனை ஊழியர் எவ ருடைய முகத்திலும் துக்கத்தின் சாயல் தெரியவே கூடாது. ஆனால் பணிமுடிந்து, உறங்கச் சென்ற நேரங்களில் எல்லாம் நெகேமியாவின் ஜெபங்களும், பாவ அறிக்கைகளும், கண்ணீரும் அநேகமாயிருந் தன். அது மனித பார்வைக்கு மறைவாக இருந்தாலும் தேவனும், தேவதூதர்களும் அதனைக் கண்டனர்; கேட்டனர்.தீஇவ 630.2

    அந்த விசுவாச வீரரின் உள்ளத்தை அழுத்திக்கொண்டிருந்த பாரத்தை வெகுநாட்களுக்கு அவனால் மறைக்க முடியவில்லை. தூக்கமற்ற இரவுகளும், சிரத்தை நிறைந்த பகல்களும் அவனு டைய முகத்தில் தங்கள் சாயலைவீசிக்கொண்டிருந்தன. தன் சொந்தப் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ராஜா, முகபாவனைகளைப் பகுத்தறிவதையும், பொய்க்கோலங்களை ஊடுருவி அறிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான். தன்பான பாத்திரக்காரனில் ஏதோ இனம்புரியாத கவலை தென்பட்டதை அவன் அறிந்தான். நீதுக்க முகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மன தின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல’‘ என்று கேட்டான்.தீஇவ 630.3

    அந்தக் கேள்வி நெகேமியாவைப் பயங்கொள்ளச் செய்தது. தன் அரசவை ஊழியன், பார்வைக்குச் சேவை செய்ததாகவும் அவன் எண்ணமெல்லாம் வெகுதொலைவிலிருந்த அவனுடைய மக்கள்மேல் இருந்ததாகவும் ராஜா நினைத்துவிட்டால் கோபங் கொள்ள மாட்டாரா? அக்குற்றத்திற்காக அவன் தன் ஜீவனை இழக்க நேரிடுமே? எருசலேமின் பெலனை மீண்டும் நிலைநாட்ட வேண்டு மென்ற அவரின் நீண்டநாள் திட்டம், இப்பொழுது தவிடு பொடி ஆகிவிடுமோ? ‘அப்பொழுது நான் மிகவும் பயந்தேன்’ என்று அவன் எழுதுகிறான். உதடுகள் நடுங்க, கண்ணீர் சொரிய, தன் துக்கத்திற் கான காரணத்தை அவன் தெரிவித்தான். ‘’ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நக ரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட் டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி?’‘ என்று பதிலளித்தான்.தீஇவ 631.1

    எருசலேமின் நிலை விபரமாகச் சொல்லப்பட்டதும், ராஜாதவ றான அபிப்பிராயம் கொள்ளாமல், பரிவுகாட்டினான். ‘’நீ கேட் கிற காரியம் என்ன” என்று கேட்டான். அக்கேள்விதான் அவன் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த தருணத்தைக் கொடுத்தது. ஆனால் அர்தசஷ்டாவைவிட உன்னதமான ஒருவரிடம் உதவி கோரும் வரையிலும், ராஜாவுக்குப் பதில் சொல்ல அந்தத் தேவ மனிதன் முயலவில்லை. ஒரு புனிதமான கடமையை அவன் நிறை வேற்ற வேண்டியிருந்தது. அதற்கு ராஜாவின் உதவி தேவைப்பட் டது. அவனுடைய அனுமதியையும் உதவியையும் பெறுவது, அந் தக் காரியத்தை அவனிடம் எடுத்துரைக்கும் விதத்தையே அதிக மாகச் சார்ந்திருந்ததை அவன் உணர்ந்தான். ‘’பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணினேன்’‘ என்கிறான். சுருக்கமான அந்த ஜெபத்தில், ராஜாதி ராஜாவின் பிரசன்னத்திற்குள் அவன் தன்னைக் கொண்டு சென்றான்; ஆற்றின் தண்ணீரைப்போல் இருதயங்களைத் திருப்பிவிடும் ஒரு வல்லமையைத் தனக்கு ஆதரவாக்கிக் கொண் டான்.தீஇவ 631.2

    வேறு விதங்களில் ஜெபிப்பது இயலாமல் போகும் சூழ்நிலை களில், தனக்கு உதவி தேவைப்பட்டபோது நெகேமியா ஜெபித்தது போல் ஜெபிப்பது, கிறிஸ்தவனின் கைக்கு எட்டிய ஓர் உதவி வாய்ப் பாகும். வாழ்வில் பரபரப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் கடும் உழைப்பாளிகள் குழப்பத்தால் நிறைந்து, மேற்கொள்ளப்பட இருக்கும்போது, தேவ உதவிக்காக தேவனிடம் வேண்டுதல் செய் யலாம். கடலிலோ, நிலத்திலோ பயணம் செய்கிறவர்கள், பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும்போது பரலோகப் பாதுகாப்பிற்கு இப் படியாகத் தங்களை ஒப்படைக்கலாம். தம்மில் உண்மையும் விசு வாசமும் உள்ளவர்கள் தம்மை நோக்கிக் கூப்பிடும் நேரங்களிலெல் லாம், அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தவரை நோக்கி, எதிர் பாராத ஆபத்தின்போதும், கஷ்டத்தின்போதும் இருதயம் ஒரு வேண்டுகோளை ஏறெடுக்கலாம். துக்கத்தாலும் கவலையாலும் ஆத்துமா சோர்ந்தோ சோதனையால் அதிக தாக்குதலுக்குள்ளா கியோ போகிற ஒவ்வொரு சூழ்நிலையிலும், உடன்படிக்கையைக் காக்கும் தேவனுடைய வல்லமையிலும் கைவிடா அன்பிலும் நம்பிக் கையையும் ஆதரவையும் உதவியையும் பெற்றுக் கொள்ளலாம்.தீஇவ 631.3

    தன்னுடைய அரசவையின் பொறுப்புகளிலிருந்து சில காலம் தனக்கு விடுப்பு அளிக்கவேண்டுமென்றும், எருசலேமை மீண்டும் ஒரு பெலமிக்க, பாதுகாப்புமிக்க நகரமாக மாற்றும்படி, அதன் பாழ்நிலங்களை எடுத்துக்கட்ட , தனக்கு அதிகாரம் வழங்கவேண்டும் மென்றும் அர்தசஷ்டாவிடம் தெரிவிக்கும் தைரியத்தை, ராஜாதி ராஜா விடம் ஏறெடுத்த அந்தச் சிறு ஜெபத்திலிருந்து பெற்றுக்கொண்டான் நெகேமியா. யூத தேசத்திற்கான மேன்மையான விளைவுகள் அந்த வேண்டுகோளில்தான் அடங்கியிருந்தன. ‘’தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்ட ளையிட்டார்’ என்கிறான் நெகேமியா.தீஇவ 632.1

    தான் வேண்டிய உதவியைப் பெற்றதும், அந்த முயற்சியை வெற்றியாக முடியப்பண்ணத் தேவையான ஏற்பாடுகளை விவே கத்தோடும், முன்யோசனையோடும் செய்தான் நெகேமியா. அப் பணியை நிறைவேற்ற ஏதுவாயிருக்கும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவர் எடுக்காமல் இருக்கவில்லை. தன்னு டைய நோக்கத்தைத் தன் சொந்த தேசத்தாருக்குக்கூட அவன் தெரி விக்கவில்லை. தன்னுடைய வெற்றியால் அநேகர் மகிழக்கூடும் என்றாலும், சிலர் தங்களுடைய விவேகமற்ற செயலால் தங்கள் சத் துருக்களின் பொறாமையைக் கிளறிவிடக்கூடும்’ என்றும், ‘அத னால் அந்த முயற்சிக்குத் தோல்வி ஏற்படுத்தக்கூடும்’ என்றும் அவன் பயந்தான்.தீஇவ 633.1

    நெகேமியாவின் வேண்டுகோளை மிகவும் தயவுடன் ஏற்றுக் கொண்டான் ராஜா. எனவே, மேலும் உதவி கேட்க அவன் தைரியம் கொண்டான். தன்னுடைய பணிக்கு நன்மதிப்பும் அதிகாரமும் கிடைக்கும்படியும், அந்தப் பயணத்திற்குப் பாதுகாப்பு வேண்டியும், படைவீரர்களை அவன் கேட்டுப் பெற்றுக்கொண்டான். ஐப்பிராத் திற்கு அப்பாலுள்ள பகுதிகளின் தேசாதிபதிகளிடம் காட்ட, ராஜா விடமிருந்து கடிதங்கள் பெற்றுக்கொண்டான். ஏனெனில், அப் பகுதிகளின் வழியாகத்தான் யூதேயாவிற்கு அவன் செல்லவேண்டி யிருந்தது. மேலும், தேவையான அளவு மரங்களைத் தரும்படி, லீபனோனின் மலைகளிலிருந்த ராஜாவின் வனக்காவலனுக்கு ஒரு கடிதத்தையும் வாங்கிச் சென்றான். தான் மேற்கொண்ட பணியில் தான் வரம்புமீறினதாக எவ்விதத்திலும் குற்றச்சாட்டு எழாதபடி, தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திலும் சிலாக்கியங்களிலும் மிகக் கவனம்வைத்து அதனைத் தெளிவாக எழுதி, வாங்கிச் சென்றான் நெகேமியா.தீஇவ 633.2

    ஞானமிக்க முன்யோசனையையும் உறுதிமிக்க செயலையும் கொண்ட இந்த முன்மாதிரி, சகல கிறிஸ்தவர்களுக்கும் ஒரு பாட மாக இருக்கவேண்டும். தேவ பிள்ளைகள் விசுவாசத்தோடு ஜெபிப் பது மாத்திரமல்ல, விழிப்போடும், முன்யோசனையுள்ள அக்கறை யோடும் பிரயாசப்படவும் வேண்டும். விவேகத்தோடும் அதிக பிர யாசத்தோடும் உழைத்தால், அது விசுவாசம் இல்லை என்று கிறிஸ் தவர்கள் பலர் நினைப்பதால்தான் அவர்கள் அநேகக் கஷ்டங் களைச் சந்திக்க நேரிடுகிறது. தங்கள் சார்பில் தேவன் செயல்படு வதையும் அவர்கள் தடை செய்கிறார்கள். தேவனுக்கு முன்பாக அழுது, ஜெபித்ததோடு தன் வேலை முடிந்துவிட்டதாக நெகேமியா நினைக்கவில்லை. தன்னுடைய வேண்டுதல்களோடு அதிக முயற் சிகளும் எடுத்துக்கொண்டான்; தான் ஈடுபட்டிருந்த பணியின் வெற் றிக்காக மும்முரமாகவும் ஜெபத்துடனும் பிரயாசப்பட்டான். எருச லேமின் மதில்களைத் திரும்பக் கட்டின காலத்தைப் போலவே இன் றும், பரிசுத்தமான காரியங்களை மேற்கொள்ளும்போது, கவன மிக்க அக்கறையும், நன்கு வகுக்கப்பட்டதிட்டங்களும் அவசியமா யிருக்கின்றன.தீஇவ 634.1

    நெகேமியா நிச்சயமற்றவனாக இருக்கவில்லை. தனக்குத் தேவையாயிருந்த உதவிகளை அவற்றை வழங்கத் திராணியுள்ள வர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டான். பூமியின் செல்வங்கள் தேவனுக்கு உரியவை. அவற்றைப் பெற்றுள்ளவர்கள் சத்தியத்தின் நோக்கத்திற்காக உதவும்படி அவர்களுடைய உள்ளங்களில் அசை வாட இன்றும் தேவன் சித்தமாயிருக்கிறார். தேவனுக்காக உழைக் கிறீர்களா? தேவன் பிற மனிதர்களிடம் பேசி, அவர்கள் மூலம் உங் களுக்கு அருளும் உதவிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருளில் கிடக்கும் அநேக தேசங்களுக்குச் சத்தியத் தின் ஒளி கிடைக்க அந்த வெகுமதிகள் வழிகளை ஏற்படுத்தலாம். அப்படிக் கொடுப்பவர்கள் கிறிஸ்துவில் விசுவாசம் அற்றவர்களா கவோ, அவருடைய வார்த்தையில் பழக்கமில்லாதவர்களாகவோ இருக்கலாம். ஆனால், இதனைக் காரணமாகக் கொண்டு, அவர்கள் ளுடைய வெகுமதிகளைப் புறக்கணிக்கக்கூடாது.தீஇவ 634.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents