Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    58 - விடுதலைநாயகர் வருகை

    நம் முதல் பெற்றோர் தங்கள் ஏதேன் வீட்டை இழந்த நாள் முதல், தேவகுமாரன் பாவிகளின் இரட்சகராக தோன்றின காலம் வரையிலும் உள்ள மனித வரலாற்றின் இக்கட்டும் அந்தகாரமும் இடுக்கத்தால் இருளும்’ நிறைந்த நீண்ட காலக்கட்டங்கள் நெடு கிலும், அந்த இரட்சகரின் வருகைதான் விழுந்து போன இனத்திற்கு ஒரே நம்பிக்கையாக இருந்தது. அவர் பாவத்தின் அடிமைத்தனத்தி லிருந்தும் மரணத்திலிருந்தும் ஆண் - பெண்களை விடுவிக்க வர விருந்தார்.தீஇவ 681.1

    ஏதேனில்வலுசர்ப்பத்திற்குத்தண்டனை வழங்கப்பட்டபோது தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அத்தகைய நம்பிக்கை குறித்த முதல் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதாவது, அவர்கள் விசார ணைக்காக நிற்கையில், சாத்தானிடம், ‘’உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’‘ என்று சொன்னார் தேவன். ஆதி 3:15.தீஇவ 681.2

    குற்றம் புரிந்த அந்தத் தம்பதியர் அவ்வார்த்தைகளைக் கேட்ட போது, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது சாத்தானின் வல்லமை முறிக்கப்படுவது குறித்த அந்தத் தீர்க்கதரிசனத்தில், மீறுதலால் உண்டான அழிவிலிருந்து விடுதலைதரும் ஒரு வாக்குத்தத்தத்தை அவர்கள் கண்டறிந்தார்கள்.தீஇவ 682.1

    சத்துருவின் மருட்சியான தாக்கத்தால் விழுந்து, யேகோவா வின் தெளிவான கட்டளையை மீற முடிவு செய்ததால், அவனுடைய வல்லமைக்கு உட்பட்டு அவர்கள் உபத்திரவப்படவேண்டியிருந் தது. ஆனாலும், அவர்கள் முற்றிலும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படவில்லை. அவர்களின் மீறுதலை நிவிர்த்தி செய்ய தேவ குமாரன்தாமே தம் சொந்த இரத்தத்தைச் சிந்த, தம்மை அர்ப்பணித் திருந்தார். அவர்களுக்கு ஒரு தவணையின் காலம் வழங்கப்பட இருந்தது. அக்காலக்கட்டத்தில், இரட்சகரான கிறிஸ்துவின் வல் லமையை விசுவாசிப்பதன் மூலம், அவர்கள் மீண்டும் தேவனுடைய பிள்ளைகளாக மாறவிருந்தார்கள்.தீஇவ 682.2

    கீழ்ப்படிதலின் பாதையிலிருந்து மனிதனை விலக்கியதில் கிடைத்த வெற்றியின் மூலம் சாத்தான் இப்பிரபஞ்சத்தின் தேவன் ஆனான்’. 2 கொரிந்தியர் 4:4. ஒரு சமயத்தில் ஆதாமிடமிருந்த ஆளுகை இப்போது அந்த நயவஞ்சகனிடம் சென்றது. ஆனால், பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொள்ளவும், அதினால் மனி தனை மீட்பது மாத்திரமல்ல, இழந்த ஆளுகையை மீண்டும் பெற் றுத்தரவும் இந்தப் பூமிக்கு வரச் சித்தங்கொண்டார் தேவகுமாரன். இந்தப் புதுப்பித்தலைக் குறித்துத்தான் மீகா தீர்க்கதரிசி தீர்க்கதரிச னம் உரைத்தார்: ‘’மந்தையின் துருக்கமே , சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்.’’மீகா 4:8.’ ‘அவ ருக்குச் சொந்தமானவர்கள் மீட்கப்படுவார்கள்” என்று இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டார். எபேசியர் 1:14. மனி தனின் பூர்வீகச் சுதந்தரம் கடைசியில் மீண்டும் கிடைக்கப் போவதை மனதில் வைத்துதான், நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதிலேவாசமாயிருப்பார்கள்” என்று சங்கீதக்காரன் சொன்னார். சங்கீதம் 37:29.தீஇவ 682.3

    தேவகுமாரன் இரட்சகரும் ராஜாவுமாக வருவதால் கிடைக்க இருந்த மீட்பைக்குறித்த இந்த நம்பிக்கையானது, மனிதரின் இரு தயங்களிலிருந்து ஒருபோதும் அகலவில்லை . தற்கால நிகழ்வு களைத்தாண்டி, விசுவாசத்தோடு எதிர்கால நிஜங்களை எதிர்நோக்கி யிருந்த சிலர் ஆரம்பம் முதலே இருந்துவந்தார்கள். ஆதாம், சேத், ஏனோக்கு, மெத்தூசலா, நோவா, சேம், ஆபிரகாம், ஈசாக்கு, யாக் கோபு போன்ற இவர்கள் மூலமாகவும், முக்கியமானவர்களான மற்றவர்கள் மூலமாகவும், தம்முடைய சித்தத்தின் மகத்தான வெளிப் பாடுகளைத் தேவன் பாதுகாத்து வந்தான். இதனால்தான், வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட மேசியாயார் மூலமாக உலகிற்குக் கொடுக்கப் பட இருந்தாரோ, அந்த இஸ்ரவேல் புத்திரருக்கு, தம் பிரமாணத்தின் நிபந்தனைகள் குறித்தும், தம் பிரிய குமாரனின் பாவ நிவாரண பலி யின்மூலம் கிடைக்கவிருந்த இரட்சிப்பு குறித்ததுமான ஓர் அறிவை அவர்களுக்குக் கொடுத்தார்.தீஇவ 682.4

    ஆபிரகாம் அழைக்கப்பட்டபோது கொடுக்கப்பட்டதும், பிறகு அவருடைய சந்ததியாருக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது மான, ‘’பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப் படும்” எனும் வாக்குத்தத்தத்தில்தான், இஸ்ரவேலின் நம்பிக்கை புதைந்திருந்தது. ஆதியாகமம் 12:3. மனித இனத்தின் மீட்பிற்கான தேவநோக்கம் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தப்பட்டபோது, நீதி யின் சூரியன் அவருடைய உள்ளத்தில் உதித்தார்; அவருடைய இருள் நீங்கியது. இறுதியில், இரட்சகர்தாமே மனுபுத்திரர் மத்தியில் உரை யாடி, சுற்றித்திரிந்தபோது, ஒரு மீட்பரின் வருகையால் உண்டாகும் மீட்பைக் குறித்த அக்கோத்திரப் பிதாவின் நம்பிக்கையை யூதருக்கு அவன் சாட்சியாக அறிவித்தான். ‘’உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந் தான்’‘ என்றார் கிறிஸ்து. யோவான் 8:56.தீஇவ 683.1

    கோத்திரப்பிதாவான யாக்கோபு தான் மரிக்கும் தருவாயில் தன் குமாரனான யூதாவுக்கு வழங்கின ஆசீர்வாதத்திலும் இதே பாக்கிய நம்பிக்கை முன்னுரைக்கப்பட்டது:தீஇவ 683.2

    யூதாவே, சகோதரரால் புகழப்படுவன் நீயே;
    உன்கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்;
    உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.
    சமாதான கர்த்தர் வருமளவும்
    செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதுமில்லை,
    நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களைவிட்டுஒழிவதுமில்லை;
    ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
    தீஇவ 683.3

    ஆதியாகமம் 49:8-10.

    மீண்டும், வாக்குத்தத்தத் தேசத்தின் எல்லைகளில், பிலேயா மால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்திலும், உலக மீட்பரின் வருகை குறித்து முன்னுரைக்கப்பட்டது.தீஇவ 684.1

    அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன்,
    சமீபமாய் அல்ல;
    ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்,
    ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்;
    அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி,
    சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும்”
    தீஇவ 684.2

    எண்ணாகமம் 24:17.

    விழுந்துபோன இனத்தின் மீட்பராகத் தம் குமாரனை அனுப் பும் தேவநோக்கமானது மோசேயின் மூலம் இஸ்ரவேலுக்குத் தெரி விக்கப்பட்டது. தான் மரிப்பதற்குச் சில நாட்களுக்கு முன் ஒருசம் யம், ‘’உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசி யை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண் ணுவார்; அவருக்குக் செவிகொடுப்பீர்களாக’‘ என்றார் மோசே . வரவிருந்த மேசியாவின் பணி குறித்து இஸ்ரவேலுக்கு அறிவிக்கும் படி மோசேயிடம் தேவன் தெளிவாகச் சொல்லியிருந்தான். ‘உன் னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவன் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பித்ததையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்’‘ என்பதே தம் ஊ ழியனுக்கு யேகோவா சொன்ன வார்த்தை . உபாகமம் 18:15, 18.தீஇவ 684.3

    கோத்திரப்பிதாக்களின் நாட்களில், தேவ தொழுகையோடு சம்பந்தப்பட்டிருந்த பலிகள், வரவிருந்த ஓர் இரட்சகரை எப்போ தும் நினைவூட்டுவதாக இருந்தன. இஸ்ரவேல் வரலாறு முழுவதி லும், பரிசுத்த ஸ்தல ஆராதனைச் சடங்குகள் அனைத்தும் அத னையே சுட்டிக்காட்டின் . ராஜாவும் ஆசாரியரும் மீட்பருமாக, கிறிஸ்து வரவிருந்ததுகுறித்த மாபெரும் சத்தியங்கள், முன்மாதிரி களாலும் சாயல்களாலும் ஆசரிப்புக் கூடார ஊழியத்திலும், அதற் குப் பதிலாக அதன்பிறகு ஏற்படுத்தப்பட்ட ஆலய ஆராதனை களிலும் அனுதினமும் மக்களுக்குப் போதிக்கப்பட்டன. கிறிஸ்து வுக்கும் சாத்தானுக்கும் இடையேயான மாபெரும் போராட்டத்தின் முடிவில், இப்பிரபஞ்சத்திலிருந்து பாவிகளும் பாவமும் சுத்திகரிக் கப்படக்கூடிய இறுதி நிகழ்வுகளுக்கு நேராக வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் சிந்தைகள் திருப்பப் பட்டன. மோசே ஏற்படுத் தின சடங்காச்சாரப் பலிகளும் காணிக்கைகளும் ஒரு மேலான பர லோக ஆராதனையையே சுட்டிக்காட்டின. பூலோக ஆசரிப்புக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது’’. அதில் பலிகளும் காணிக்கைகளும் செலுத்தப்பட்டன. அதன் இரண்டு பரிசுத்த ஸ்தலங்களும், ‘பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகளாய் இருந்தன. ஏனெனில், கிறிஸ்துதாமே இன்று, ‘’பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப் பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிற” நம் பிரதான ஆசாரியராய் இருக்கிறார். எபிரெயர் 9:9, 23; 8:2.தீஇவ 684.4

    ஏதேனில், ‘’உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்’‘ என்று வலுசர்ப்பத்திடம் தேவன் சொன்ன நாள் முதற்கொண்டு, தான் இந்தப் பூமியின் குடி கள்மேல் முழு அதிகாரம் காட்டமுடியாதென்பதைச் சாத்தான் அறிந் திருக்கிறான். ஆதியாகமம் 3:15. மீட்பரின் வருகைக்கு ஓர் முன் மாதிரியாக தேவன் ஏற்படுத்தின சடங்காச்சார பலிகளை ஆதாமின் குமாரர் செலுத்த ஆரம்பித்தபோது, பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையேயான உறவின் ஓர் அடையாளத்தைச் சாத்தான் கண்டு கொண்டான். அதன்பிறகான காலங்கள் முழுவதிலும், அந்த உற வில் தலையிடுவதே அவனுடைய ஓயாத முயற்சியாயிருந்தது. தேவனைத் திரித்துக் காட்டவும் இட்சகரைச் சுட்டிக்காட்டின் சமயச் சடங்குகளைத் திரித்துக் காட்டவும் ஓய்வின்றி முயன்றான்; மனித குடும்பத்தின் பெரும்பாலானவர்களிடையே அவனுக்கு அதில் வெற்றியும் கிடைத்தது.தீஇவ 685.1

    மனிதர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கும் ஈவானது தம் அன்பி னால் உண்டானது என்பதைத் தேவன் அவர்களுக்குப் போதிக்க விரும்பினார். அதேவேளையில், மனிதரின் அழிவில் மகிழ்கிற ஒருவராக தேவனைத் திரித்துக்காட்டப் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறான் மனித இனத்தின் முதல் சத்துரு. ஆகவே, தேவ அன்பை வெளிப்படுத்த, பரலோகத்தால் நியமிக்கப்பட்ட நிய மனங்களுக்கும் பலிகளுக்கும் தவறாக அர்த்தம் காண்பிக்கிறான். அதாவது, கோபங்கொண்ட ஒரு தேவனின் கோபத்தைப் பலி களாலும் நற்கிரியைகளாலும் தணிக்காலாமென பாவிகள் வீணான நம்பிக்கை கொள்ளும்படி அவர்களை வழிநடத்துகிறான். அதே நேரத்தில், மனிதர் மீண்டும் மீண்டும் அக்கிரமம் செய்யவும், திரளா னவர்கள் நம்பிக்கையின்றி பாவவிலங்குகளால் கட்டப்பட்டு தேவ னைவிட்டு அதிகதிகமாக வழிவிலகவும், அவர்களின் தீய உணர்வு களை எழுப்பி, அவற்றைப் பெலப்படுபடுத்தவும் முயல்கிறான் சாத்தான்.தீஇவ 685.2

    எழுதப்பட்ட தேவவார்த்தையானது, எபிரெய தீர்க்கதரிசி களின் மூலமாகக் கொடுக்கப்பட்டபோது, அதில் மேசியாகுறித்த செய்திகளைக் கவனத்தோடு படித்தான் சாத்தான் . ஜெயங்கொள்ளும் ராஜாவாகவும் பாடனுபவித்து பலியாகுகிறவராகவும் மனிதர் மத் தியில் கிறிஸ்து ஆற்றவிருந்த பணி பற்றி தெளிவாக எடுத்துரைத்த வார்த்தைகளைக் கவனத்தோடு அவன் ஆராய்ந்தான். பூமிக்கு வர விருந்த அவர்தீஇவ 686.1

    ’’அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல”தீஇவ 686.2

    இருக்கவிருந்ததையும்

    ‘மனுஷனைப் பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப் பார்க்கிலும் அவருடைய ரூபமும் அந்தக் கேடு’தீஇவ 686.3

    அடையவிருந்ததையும்

    பழைய ஏற்பாட்டு வேதாகமத் தோற்சுருள்களிலிருந்து வாசித் தான். ஏசாயா 53:7; 52:14. மனித இனத்திற்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இரட்சகர், ‘’அசட்டைபண்ணப்படவும், மனுஷரால் புறக்கணிக்கப்படவும், துக்கம் நிறைந்து பாடு அனுபவிக்கவேண் டிய வருமாயிருந்தார். தேவனால் அடிபட்டு வாதிக்கப்படவுமிருந் தார். ஆனாலும், ‘ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை நியாயம் விசாரிக்க” அவர்தம் மகத்தான அதிகாரத்தைப் பயன்படுத்த இருந் தார். ஏசாயா 53:3, 4; சங்கீதம் 72:4. இந்தத் தீர்க்கதரிசனங்களைப் படித்த சாத்தான் பயந்து நடுங்கினான். ஆனாலும், தொலைந்துபோன இனத்தின் மீட்பிற்கான யேகோவாவின் கிருபையான திட்டங்களை அழிக்கும் தன் நோக்கத்திலிருந்து அவன் பின்வாங்கவில்லை. கிறிஸ்துவின் முதலாம் வருகையில் மனிதர் அவரை மறுதலிப்பதற் கான வழியை ஆயத்தம் பண்ணும்படி, மேசியாவைக் குறித்த தீர்க்க தரிசனங்களின் முக்கியத்துவத்தை முடிந்த அளவிற்கு அவர்கள் காணக்கூடாமற் செய்ய, முடிந்தளவிற்கு அவர்களுடைய கண்களைக் குருடாக்க அவன் உறுதிகொண்டான்.தீஇவ 686.4

    ஜலப்பிரளயத்தைத் தொடர்ந்த காலக்கட்டங்களில், தேவ னுக்கு எதிரான கலகத்தை உலகம் முழுவதிலும் பரப்ப விரும்பின சாத்தானின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. ஜலப்பிரளயம் தந்த பாடங்களைக் கூட சீக்கிரத்தில் மறந்துபோனார்கள். தந்திரமிக்க நயவஞ்சகங்களால் மனுபுத்திரரைக் கலகத்திற்குள்ளாகக் கொஞ் சம் கொஞ்சமாய் மீண்டும் வழிநடத்தினான் சாத்தான். மறுபடியும் அவன் ஜெயங்கொள்வதுபோல் தெரிந்தது;தீஇவ 687.1

    ஆனால், விழுந்து போன மனித இனத்திற்கான தேவநோக்கம் அப்படியாக ஒழிந்துபோகவில்லை. சேமின் வம்சத்தில் வந்த விசு வாசமிக்க ஆபிரகாமின் சந்ததி மூலமாக, யேகோவாவின் நன்மை யான திட்டங்கள் குறித்த அறிவானது பிற்காலச் சந்ததியாரின் நல னுக்காகப் பாதுகாக்கப்படவிருந்தது. பலிமுறைகளின் அர்த்தத்தை யும், விசேஷமாக, சகல பலிமுறைகளும் சுட்டிக்காட்டின் ஒருவரின் வருகை குறித்த யேகோவாவின் வாக்குத்தத்தத்தையும் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர, தேவனால் நியமிக்கப்பட்ட சத்தியத் தின் ஊழியர்கள் அவ்வப்போது எழுப்பப்பட இருந்தார்கள். அவ் வாறாக, உலகளாவிய அவபக்தியிலிருந்து உலகம் பாதுகாக்கப்பட இருந்தது.தீஇவ 687.2

    அதிதீவிர எதிர்ப்பைச் சந்திக்காமல் தேவநோக்கம் நிறைவேறி விடவில்லை . ஆபிரகாமின் சந்ததியார் உச்சிதமும் பரிசுத்தமுமான தங்கள் அழைப்பை மறந்து போகவும், பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளத் திரும்பும்படியாகவும் நீதிக்கும் சத்தியத்திற்கும் சத்துருவானவன் ஒவ்வொரு வழியிலும் முயன்றான். அவனுடைய முயற்சிகளுக்குப் பெரும்பாலும் வெற்றி கிடைத்தது. கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னான காலக்கட்டங்களில் பூமியானது இருளால் நிறைந்திருந்தது; அந்தகாரம் மக்களை இருளடையச் செய்திருந்தது. தேவனைக் குறித்தும் வருங்கால உலகைக் குறித்தும் மனிதர் அறிந்துகொள்வதைத் தடுக்கும்படி, அவர்களின் பாதை யின் ஊடே கொடிய இருளை நிரப்பிக்கொண்டிருந்தான் சாத்தான். ஏராளமானவர்கள் மரண இருளில் அகப்பட்டுவந்தார்கள். தேவன் வெளிப்படும்படியாக, இந்த இருள் அகற்றப்படுவதே அவர்களின் ஒரே நம்பிக்கையாயிருந்தது.தீஇவ 687.3

    கிறிஸ்துவின் வருகையானது “காலையில் மந்தாரமில்லாமல் உதிக்கும் சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருக் கும்’‘ என்று தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது, தீர்க்க தரிசனக் கண்ணோட்டத்தில் கண்டார். 2சாமுவேல் 23:4. ‘அவரு டைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது’‘ என்று சாட்சி கூறினார் ஓசியா. ஓசியா 6:3. அமைதியும் மென்மையும் மாகப் பூமியின்மேல் உதிக்கும் சூரிய வெளிச்சம், இருளின் நிழலை அகற்றி, பூமியின் ஜீவன்களைவிழிக்கச் செய்கிறது. அதுபோலவே, தம் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் ‘ உடையவராக நீதியின் சூரியன் உதிக்க இருந்தார். மல்கியா 4:2. ” ‘மரண இருளின் தேசத் தில் குடியிருக்கும் திரளானவர்கள் பெரிய வெளிச்சத்தைக் காணவிருந்தார்கள். ஏசாயா 9:2.தீஇவ 688.1

    இந்த மகிமையான இரட்சிப்பைப் பெருமகிழ்ச்சியோடு நோக் கின ஏசாயா தீர்க்கதரிசி , இப்படியாக ஆனந்தித்தான்:தீஇவ 688.2

    “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்;
    நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்,
    கர்த்தத்துவம் அவன் தோளின் மேல் இருக்கும்;
    அவன் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன்,
    நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
    தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவன் திடப்படுத்தி,
    அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும்
    நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு,
    அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும்,
    அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை;
    சேனைகளின் கர்த்தருடையவைராக்கியம் இதைச் செய்யும்.”
    தீஇவ 688.3

    வசனங்கள் 6, 7.

    ’’யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத்தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என் னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வும் வைப்பேன். ஏசாயா 49:6. இந்தத் தீர்க்கதரிசனத்தில் மேசியா வின் வருகை குறித்தே சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக முதலாம் வருகைக்கு முன்னான இஸ்ரவேல் வரலாற்றின் பிற்பகுதிகளில் பொதுவாக நம்பப்பட்டது. ‘’கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க்காணும்’‘ என்று தீர்க்கதரிசி முன்னுரைத்தான். ஏசாயா 49:10. மனிதருக்கான இந்த ஒளியைப் பற்றித்தான் பின்னர் யோவான் ஸ்நானன் ‘கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசிசொன்னபடியே, நான்வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்’‘ என்று தைரியமாகச் சாட்சி கூறினான். யோவான் 1:23.தீஇவ 688.4

    தீர்க்கதரிசன வாக்குத்தத்தமானது கிறிஸ்துவுக்கும் கொடுக்கப் பட்டது; இஸ்ரவேலரின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த் தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அரு வருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரருமாயிக்கிற வரை நோக்கி, ‘நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க் கிடக்கிற இடங் களைச் சுதந்தரிக்கப்பண்ணவும், கட்டுண்டவர்களை நோக்கி; ‘’புறப்பட்டுப் போங்கள்’‘ என்றும் இருளில் இருக்கிறவர்களை நோக்கி: ‘’வெளிப்படுங்கள்” என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்து வேன்: அவர்கள் பசியாயிருப்பதுமில்லை , தாகமாயிருப்பது மில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவது மில்லை : அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர் களை நீருற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய் விடுவார்’ என்று சொல் லுகிறார். ஏசாயா 49:7-10.தீஇவ 689.1

    தேவனைப் பற்றிய அறிவு யார் மூலமாகப் பாதுகாக்கப்பட இருந்ததோ அந்தப் பரிசுத்த வம்சத்தின் சந்ததியார், அதாவது, யூத தேசத்தின் விசுவாச வீரர்கள், இதுபோன்ற வசனங்களில் நிலைத்து துதான் தங்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்தினார்கள். ‘சிறுமைப் பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கவும் இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்ட வர்களுக்கு விடுதலையைக் கூறவும்’ ‘கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைக்’ கூறவும் ஒருவரைத் தேவன் அபிஷேகம் பண்ணி யிருந்ததை மிகுந்த சந்தோஷத்தோடு அவர்கள் வாசித்தார்கள். ஏன் ாயா 61:1,2தீஇவ 689.2

    ஆனாலும், தேவநோக்கத்தை நிறைவேற்றும்படி அவர் பட வேண்டிய பாடுகளை எண்ணினபோது, அவர்களுடைய இருதயங் கள் துக்கத்தால் நிறைந்தன. தங்கள் ஆத்துமாவை மிகவும் தாழ்த்தி, தீர்க்கதரிசனச் சுருளிலிருந்த வார்த்தைகளை வாசித்தார்கள்:தீஇவ 690.1

    “எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?
    கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

    “இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற
    வேரைப்போலவும்
    அவனுக்கு முன்பாக எழும்புகிறார்;
    அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது,
    நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

    “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்,
    துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்,
    அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்;
    அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனாம்.
    “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு,
    நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,
    நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு,
    சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

    “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,
    நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;
    நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது;
    அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து,
    அவனவன் தன் தன் வழியிலே போனோம்;
    கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

    “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார்,
    ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை;
    அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும்,
    தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும்,
    அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். “இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்,
    அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும்;
    ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்;
    என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவன் வாதிக்கப்பட்டார்.

    “துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்;
    ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்;
    அவர் கொடுமை செய்யவில்லை;
    அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை’
    தீஇவ 690.2

    ஏசாயா 53:1-9

    அந்த உபத்திரவம் குறித்து இரட்சகராகிய யேகோவாதாமே சகரியா மூலம் அறிவித்தான். ‘’பட்டயமே, என் மேய்ப்பன் மேலும் தன் தோழனாகிய புருஷன் மேலும் எழும்பு.’‘ சகரியா 13:7. பாவ மனிதனின் பதிலாளியாகவும், பிணையாளியாகவும் தேவ நீதியின் கீழ் கிறிஸ்து பாடுபடவேண்டியிருந்தது. நீதியின் அர்த்தத்தை அவன் அறியவேண்டியிருந்தது. பரிந்து பேசும் ஒருவர் இல்லாமல் தேவ னுக்கு முன்பாகப் பாவிகள் நின்றால் என்ன ஆகும் என்பதை அவன் விளங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.தீஇவ 691.1

    தம்மைக்குறித்துச் சங்கீதக்காரன் மூலம் தீர்க்கதரிசனமாகச் சொன் னார் மீட்பர்:தீஇவ 691.2

    “நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது;
    நான் மிகவும் வேதனைப்படுகிறேன்;
    எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன்,
    ஒருவனும் இல்லை ;
    தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன்,
    ஒருவனையும் காணேன்.
    என் ஆகாரத்தில் கசப்புக் கலந்துகொடுத்தார்கள்,
    என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்”
    தீஇவ 691.3

    சங்கீ தம் 69:20,21

    . தாம் நடத்தப்பட இருந்த விதம் குறித்து இப்படியாகத் தீர்க்கதரி சனம் உரைத்தார். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாத வர்களின் கூட்டம் என்னை வளைந்து கொண்டது; என் கைகளை யும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த் துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.’‘ சங் கீதம் 22:16-18.தீஇவ 691.4

    வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவரின் மிகுந்த பாடுகள் குறித் தும், கொடிய மரணம் குறித்தும் சொல்லப்பட்டவைகள், வருத்தத் திற்கு உரியவைகளாக இருந்தபோதிலும், வாக்குத்தத்தம் நிறைந்த வைகளாய் இருந்தன; ஏனெனில், யாரைக் ‘கர்த்தர் நொறுக்கச் சித் தமாகி” அவர் ‘ ‘குற்றநிவாரண பலியாகும்படி” அவரைப் பாடு களுக்கு உட்படுத்தினாரோ, அவரைக் குறித்து யேகோவா இப்படி யாகச் சொல்கிறார்:தீஇவ 692.1

    “அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், br/> கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். br/> அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்;
    “என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால்
    அநேகரை நீதிமான்களாக்குவார்,
    அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
    அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, br/> அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, br/> அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, br/> அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதின் நிமித்தம்
    அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்;
    பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக் கொள்வார்.”
    தீஇவ 692.2

    ஏசாயா 53:10-12.

    பாவிகள்மேல் வைத்திருந்த அன்பால்தான், பாவத்திற்கான விலையைச் செலுத்த கிறிஸ்து தீர்மானித்தார்.’’ஒருவரும் இல்லை யென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச் சரியப்பட்டார். ‘‘ சத்துருவின் வல்லமையிலிருந்து ஆண்களையும் பெண்களையும் வேறு எவராலும் மீட்கக்கூடாதிருந்தது. ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.’’ஏசாயா 59:16.தீஇவ 692.3

    ’இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன்,
    நான் தெரிந்து கொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே;
    என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்;
    அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.”
    தீஇவ 693.1

    ஏசாயா 42:1.

    சுயத்தை நம்பாதவராக அவன் வாழவேண்டியிருந்தது. பத விக்கும் பணத்திற்கும் திறமைக்கும் உலகம் தரும் மரியாதையானது தேவகுமாரனுக்கு மறுக்கப்பட்டது. மெய்ப்பற்று அல்லது மரியாதை பெற மனிதன் உபயோகிக்கும் எந்த வழியையும் மேசியா பயன் படுத்தக்கூடாதிருந்தது. அவர் தம் சுயத்தை முற்றிலும் மறுத்துவிட வேண்டியிருந்த நிலையில் இருந்தார். பின்வரும் வார்த்தைகளில் முன்னுரைக்கப்பட்டுள்ளது:தீஇவ 693.2

    “அவர் கூக்குரலிடவுமாட்டார்,
    தம்முடைய சத்தத்தை உயர்த்தவும்
    அதை வீதியிலே கேட்கப்பண்ணவும் மாட்டார்.
    அவர் நெரிந்த நாணலை முறியாமலும்,
    மங்கியெரிகிற திரியை அணையாமலும் இருப்பார்’
    தீஇவ 693.3

    வசனங்க ள் 2,3.

    தம்முடைய காலத்திலிருந்த போதகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இரட்சகர் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆர வாரமான விவாதம், ஆடம்பரமான தொழுகை, பாராட்டைப் பெறு வதற்கான செயல் போன்ற எதுவும் அவருடைய வாழ்வில் காணப் படவே கூடாதிருந்தது. மேசியாவானவர் தேவனில் மறைந்திருக்க வேண்டியிருந்தார்; தம் குமாரனின் குணலட்சணத்தில் தேவன் வெளிப்பட வேண்டியிருந்தது. தேவனைக் குறித்த அறிவு இல்லா விடில், மனித இனம் நித்தியமாக அழிந்துபோகும். தேவ உதவி இல்லாவிட்டால், ஆண்களும் பெண்களும் படுபாதாளத்தில் ஆழ்ந்து போவார்கள். உலகைச் சிருஷ்டித்தவரால்தான் ஜீவனையும் வல்லமையையும் தரமுடியும். வேறு எந்த வழியிலும், மனிதனின் தேவைகளைச் சந்திக்க இயலாது.தீஇவ 693.4

    ’’அவன் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக் கரிப்பதுமில்லை , பதறுவதுமில்லை ; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்” என்று மேசியாவைக் குறித்து மேலும் தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டது. தேவகுமாரன் வேதத்தை முக்கியப் படுத்தி அதை மகிமையுள்ளதாக்க” வேண்டியிருந்தது. வசனங்கள் 4, 2. அதனுடைய முக்கியத்துவத்தையும் நிலையான கோரிக்கை களையும் குறைப்பதல்ல; மாறாக, அதனை மேன்மைப்படுத்துவதே அவருடைய பணியாயிருந்தது. அதே நேரத்தில், தேவ கட்டளை களின் மேல் மனிதன் சுமத்தியிருந்த அநீதியான சுமைகளை அவன் அவற்றிலிருந்து விலக்கவேண்டியிருந்தது. ஏனெனில், அதனால் அநேகர் மனதார தேவனைச் சேவிக்க முடியாமல், அதைரியம் அடைந்தனர்.தீஇவ 693.5

    இரட்சகரின் ஊழியப்பணி குறித்த யேகோவாவின் வார்த்தை இதுவே: ‘’நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர் களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சா லையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய நான் நீதியின் படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற் காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக் கும் கொடேன். பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.” ஏசாயா 42:6-9.தீஇவ 694.1

    வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி மூலமாக இஸ்ரவேலின் தேவன் சீயோனுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட இருந்தார்: ‘’ஈசா யென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களி லிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.’‘ ‘இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானு வேல் என்று பேரிடுவாள். தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்து கொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனை யும் சாப்பிடுவார். “ஏசாயா 11:1; 7:14, 15.தீஇவ 695.1

    “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோச னையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்த ருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தரு டைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச் செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த் தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச் செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத் தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும். அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காகஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயி ருக்கும்.“ஏசாயா 11:2-5,10. தீஇவ 695.2

    “இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப் படும்;
    அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்,
    அவர் மகிமை பொருந்தினவராய்,
    தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து
    ஆளுகை செய்வார்;
    தம்முடைய சிங்காசனத்தின்மேல்
    ஆசாரியராயும் இருப்பார்.”
    தீஇவ 696.1

    சகரியா 6:12,13.

    ’’பாவத்தையும் அழுக்கையும் நீக்க” ஓர் ஊற்று திறக்கப்பட வேண்டியிருந்தது. சகரியா 13:1. பின்னால் வருகின்ற பாக்கிய அழைப்பை மனுபுத்திரர் கேட்கவேண்டியிருந்தது:தீஇவ 696.2

    ஒ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு
    வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்,
    நீங்கள் வந்து பணமுமின்றி விலையுமின்றி
    திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
    நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும்,
    திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?
    நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்,
    அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
    உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்;
    கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்,
    தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை
    உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.”
    தீஇவ 696.3

    ஏசாயா 55:1-3

    இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் இதுவே : ‘’இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்க ளுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவன் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்.“ஏசாயா 55:4, 5.தீஇவ 696.4

    ’’என் நீதியைச் சமீபிக்கப் பண்ணுகிறேன், அது தூரமாயிருப்ப தில்லை; என் இரட்சிப்பு தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட் சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடு வேன்.’’ஏசாயா 46:13.தீஇவ 696.5

    மேசியாதம் பூலோக ஊழிய நாட்களில், பிதாவாகிய தேவனு டைய மகிமையை, தம் வார்த்தையாலும் செய்கையாலும் மனித இனத்திற்கு வெளிப்படுத்த வேண்டியிருந்தது. அவருடைய வாழ் வின் ஒவ்வொரு செயலும், அவன் பேசின் ஒவ்வொரு வார்த்தை யும், அவர் செய்த ஒவ்வொரு அற்புதமும் தேவனுடைய அளவற்ற அன்பைவிழுந்துபோன மனித இனத்திற்கு வெளிப்படுத்த வேண்டி யிருந்தது.தீஇவ 697.1

    ’’சீயோன் என்னும் சுவிசேஷகியே,
    நீ உயர்ந்த பர்வத்தில் ஏறு;
    எருசலேம் என்னும் சுவிசேஷகியே,
    நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு,
    யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.

    “இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வரு வார்;
    அவர் தமது புயத்தினால் அரசாளுவார், இதோ,
    அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது;
    அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
    மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்,
    ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து,
    தமது மடியிலே சுமந்து,
    கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”
    தீஇவ 697.2

    ஏசாயா 40:9-11.

    “அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்;
    குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப்பார்வையடையும்
    சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து,
    மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக் குள் களிகூருவார் கள்.”

    “வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள்
    உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.”
    தீஇவ 697.3

    ஏசாயா 29:18,19, 24.

    எனவே, பாவத்திலிருந்து இரட்சிக்கும் ஒருவரின் வருகை குறித்துக் கோத்திரப் பிதாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மூலமாகவும், அடையாளங்கள் மற்றும் மாதிரிகள் மூலமாகவும் தேவன் உலகத் தாரிடம் பேசினார். தேவனால் ஏவப்பட்டு, கொடுக்கப்பட்ட தரி சனங்கள் சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவரையே ” சுட்டிக் காட்டின. ஆகாய் 2:7. அவர் பிறக்கவிருந்த இடம் குறித்தும், காலம் குறித்தும் கூட துல்லியமாகச் சொல்லப்பட்டது.தீஇவ 697.4

    தாவீதின் குமாரன் தாவீதின் நகரத்தில் பிறக்கவிருந்தான். பெத்லகேமிலிருந்து இஸ்ரவேலை ஆளப்போகிறவர் புறப்பட்டு வருவார். அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத் தினுடையது’‘ என்றார் தீர்க்கதரிசி. மீகா 5:2.தீஇவ 698.1

    “யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,
    யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல;
    என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு
    உன்னிடத்திலிருந்து புறப்படுவார்”.
    தீஇவ 698.2

    மத்தேயு 2:6.

    முதலாம் வருகையின் காலம் குறித்தும், இரட்சகரின் ஊழியப் பணியோடு தொடர்பிருந்த சில முக்கிய நிகழ்வுகள் குறித்தும் காபிரி யேல் தூதன் தானியேலுக்குத் தெரியப்படுத்தினான். “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிர மத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற் கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத் தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின் மேலும் எழுபது வாரங் கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது’‘ என்றான் தூதன். தானி யேல் 9:24. தீர்க்கதரிசனத்தில், ஒரு நாள் என்பது ஒருவருடத்தைக் குறிக்கும். பார்க்க: எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6. எழு பது வாரங்கள் அல்லது நானூற்று தொன்னூறு நாட்களானது, நானூற்று தொன்னூறு வருடங்களைச் சுட்டிக்காட்டின. இந்தக் காலக்கட்டத்தின் ஆரம்பமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப் போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டியது என்னவென் றால், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட் டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும். அதாவது, அறு பத்தொன்பது வாரங்கள் அல்லது நானூற்று எண்பத்தி மூன்று வரு டங்கள் செல்லும். தானியேல் 9:25. கி.மு. 457 இன் இலையுதிர்க் காலத்தில் அர்தசஷ்டா லாங்கி மன்ஸ் போட்ட கட்டளையின்படி தான், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான வேலை நடைபெற்று முடிந்தது. பார்க்க: எஸ்றா 6:14:7;1,9. அதிலிருந்து நானூற்று எண்பத்திமூன்று வருடங்களுக்குப் பிறகான காலம் கி.பி. 27. தீர்க்கதரிசனத்தின்படி, அந்தக் காலமானது அபிஷேகம்பண் ணப்பட்டவரான மேசியாவை வந்தடைகிறது. கி.பி 27 இல் தான், இயேசு தம் ஞானஸ்நானத்தின் போது பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம்பண்ணப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய ஊழியம் ஆரம்பமானது. பிறகுதான், காலம் நிறைவேறிற்று’ என்ற செய்தி அறிவிக்கப்பட்டது. மாற்கு 1:15.தீஇவ 698.3

    அதன்பிறகு, அவர் ஒரு வாரமளவும் ஏழு வருடங்கள் அநே கருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்துவார்’‘ என்றான் தூதன். இரட்சகர் தம் ஊழியத்தை ஆரம்பித்ததிலிருந்து ஏழு வருடங்கள், அதாவது முதல் மூன்றரை வருடங்கள் கிறிஸ்துவாலும் அதன்பிறகு அப்போஸ்தலராலும் சுவிசேஷமானது விசேஷமாக யூதருக்குப் பிரசங்கிக்கப்பட வேண்டியிருந்தது. ‘’அந்த வாரம் பாதி சென்ற போது, பலியையும் காணிக்கையையும் ஒழியப் பண்ணுவார்.’‘ தானியேல் 9:27. கி.பி31 இல், மெய்யான பலியாகிய கிறிஸ்து கல் வாரியில் பலியானார். அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. பலி ஆராதனையின் முக்கியத்துவமும் புனி தத்தன்மையும் எடுபட்டுபோனதை அது சுட்டிக்காட்டியது. பூலோ கப் பலியும் காணிக்கைகளும் ஒழிந்துபோகும் காலம் வந்தது.தீஇவ 699.1

    அந்த ஒரு வாரம், அதாவது, ஏழு வருடங்கள் கி.பி. 34 இல் முடிவடைந்தன. பிறகு, ஸ்தேவானைக் கல்லெறிந்து கொன்றதில், தாங்கள் இறுதியாகச் சுவிசேஷத்தைப் புறக்கணித்ததை யூதர்கள் உறுதி பண்ணினார்கள்; உபத்திரவத்தால் எங்கும் சிதறிப்போன சீடர்கள் ‘’எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார் கள்.’’அப்போஸ்தலர்8:4; அதனைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்தி வந்த சவுல் புறஜாதியாரின் அப்போஸ்தலனாக அதாவது, பவுலாக மனம் மாறினார்.தீஇவ 700.1

    இரட்சகரின் வருகை குறித்த அநேக தீர்க்கதரிசனங்கள், எப் போதும் எதிர் பார்ப்போடே வாழும் ஒரு மனநிலையை எபிரெயர் களில் ஏற்படுத்தியிருந்தன. அந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறி னதைக் காணாமல் அநேகர் விசுவாசத்தில் மரித்தார்கள். ஆனால் அவைகளைத் தூரத்தில் கண்டு, பூமியில் தாங்கள் அந்நியரும் பர தேசிகளுமாய் இருந்ததை அறிக்கை செய்தார்கள். ஏனோக்கின் நாட்கள் முதல், கோத்திரப்பிதாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளாலும் மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் அவருடைய வருகையின் நம்பிக்கையைப் புதுப்பித்து வந்தன.தீஇவ 700.2

    முதலாம் வருகையின் துல்லியமான காலத்தை ஆதியிலேயே தேவன் வெளிப்படுத்தவில்லை; தானியேலின் தீர்க்கதரிசனத்தில் இது வெளிப்படுத்தப்பட்டபோதும், அனைவராலும் அந்தச் செய் தியைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை.தீஇவ 700.3

    ஒவ்வொரு நூற்றாண்டாகக் கடந்தது; இறுதியில், தீர்க்கதரிசி களின் குரல்கள் ஓய்ந்தன. இஸ்ரவேலர் ரோமர்களால் அதிக கொடுமைக்குள்ளானார்கள். யூதர்கள் தேவனைவிட்டு விலகிய தால் விசுவாசம் மங்கியது, எதிர்காலத்தில் எந்தவொரு நம்பிக்கைக் கும் இடமில்லாமலானது. தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை அநே கர் தவறாகப் புரிந்துகொண்டார்கள்; உறுதிமிக்க விசுவாசத்தோடு இருந்திருக்க வேண்டியவர்கள், ‘’நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல் லாம் அவமாகும்” என்று புலம்பும் நிலைக்குள்ளானார்கள். எசேக் கியேல் 12:22. ஆனால், கிறிஸ்துவின் வருகைக்கான நேரம், பர லோகச் சபையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது; ‘’நாம் புத்திர சுவிகா ரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக , காலம் நிறைவேறினபோது, தம்மு டைய குமாரனை தேவன் அனுப்பினார்.” கலாத்தியர் 4:4, 5.தீஇவ 700.4

    மனிதரின் பாஷையில் மனிதருக்குப் படிப்பினைகள் கொடுக் கப்படவேண்டும். உடன்படிக்கையின் தூதுவர் பேசவேண்டும். அவருடைய சத்தம் அவருடைய ஆலயத்தில் கேட்கப்படவேண் டும். சத்தியத்தைப் பயனற்றுப்போகச் செய்திருந்த மனித வார்த்தை யெனும் பதரிலிருந்து, சத்தியத்தின் அதிகாரியானவர் அதனைப் பிரித்தெடுக்க வேண்டும். தேவ ஆளுகையின் நியதிகளும், மீட்பின் திட்டமும் தெளிவாக விளக்கப்படவேண்டும். பழைய ஏற்பாட்டின் படிப்பினைகள் முற்றிலும் மனிதருக்கு முன்பாக விவரிக்கப்பட வேண்டும்.தீஇவ 701.1

    இரட்சகர் ‘மனுஷர் சாயலாக” வந்து, தம் கிருபையின் ஊழி யத்தை ஆரம்பித்தபோது, ஒவ்வொரு விதத்திலும் அவரை இழிவு படுத்தி அல்லது உபத்திரவப்படுத்திச் சாத்தான் அவருடைய குதிங் காலை நசுக்கினான்; கிறிஸ்துவோ தன் எதிரியின் தலையை நசுக் கினார். பாவத்தால் உண்டான வியாகுலமானது பாவமற்றவரின் மடியில் ஊற்றப்பட்டது; ஆனாலும், தமக்கு எதிரான பாவிகளின் கொடுஞ்செயல்களைக் கிறிஸ்து சகித்த வேளையில், பாவ மனி தனுக்கான கடனை அவர் செலுத்தினார்; மனித இனம் அகப்பட் டிருந்த அடிமைத்தனத்தை உடைத்தார். அவருக்கு உண்டான ஒவ் வொரு வேதனையும், ஒவ்வொரு அவமதிப்பும், மனித இனத்தின் இரட்சிப்பிற்கு ஏதுவாகப் பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தன.தீஇவ 701.2

    கிறிஸ்துவை ஒரே ஒரு சோதனைக்குள் சாத்தான் சிக்கவைத் திருப்பானானால், ஒரு செயலாலோ ஓர் எண்ணத்தாலோ தம் பூரண பரிசுத்தத்தைக் கறைப்படுத்த அவரை வழிநடத்தியிருப்பானானால், மனிதனின் பிணையாளியாகிய அவர்மேல் அந்தகாரத்தின் அதி பதி ஜெயம் பெற்றிருந்திருப்பான்; மொத்த மனித குடும்பத்தையும் தனக்கு ஆதாயப்படுத்தியிருப்பான். ஆனால் சாத்தானால் வேதனை கொடுக்க முடிந்ததே தவிர, அவரைக் களங்கப்படுத்த முடிய வில்லை . அவனால் உபத்திரவம் கொடுக்க முடிந்ததே தவிர, அவ ரைத் தீட்டுப்படுத்த முடியவில்லை. கிறிஸ்துவின் வாழ்க்கைமுழுவ தையும் போராட்டமும் உபத்திரவமும் கொண்டதாக மாற்றினான். ஆனாலும், ஒவ்வொரு தாக்குதலின் போதும், மனித இனத்தின் மேலுள்ள தன் பிடியை இழந்துகொண்டிருந்தான்.தீஇவ 701.3

    வனாந்தரச் சோதனையிலும், கெத்செமனே தோட்டத்திலும், சிலுவையிலும் நம் இரட்சகர் அந்தகாரத்தின் அதிபதியோடு யுத்தத் தில் ஈடுபட்டிருந்தார். அவருடைய காயங்களே மனித இனத்தின் சார்பில் அவருடைய வெற்றிக் கோப்பைகளாக மாறின. கிறிஸ்து வேதனையோடு சிலுவையில் தொங்கினபோது, தீய ஆவிகள் மகிழ்ந்து, தீய மனிதர் பழித்துரைத்தபோது, அவருடைய குதிகால் சாத்தானால் நசுக்கப்பட்டது மெய்தான். ஆனால், அதே செயல், வலுசர்ப்பத்தின் தலையை நசுக்கிக்கொண்டிருந்தது. மரணத்தி னாலே, ‘’மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை ‘‘ அழித் தார். எபிரெயர் 2:14. இந்தச் செயலானது, கலகக்காரத் தலைவனின் எதிர்காலத்தைத் தீர்மானித்தது; இரட்சிப்பின் திட்டத்தை என்றென் றும் நிலை நிறுத்தியது. தம் மரணத்தினால் அதன் வல்லமையின் மேல் அவன் வெற்றிகொண்டார்; அதிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்த தினால், தம் பின்னடியார்கள் அனைவருக்கும் கல்லறையின் வாசல் களைத் திறந்துவிட்டார். அந்த இறுதி யுத்தத்தில்தான், அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’‘ எனும் வாக்குத்தத்தம் நிறைவேறினதை நாம் காண்கிறோம். ஆதியாகமம் 3:15.தீஇவ 702.1

    ’’பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளை களாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவன் வெளிப்படும்போது அவன் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவ ருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். ‘’1யோவான் 3:2. பிரதான பாவியும், மிகமிக எளியவனும், அதிகமாக நொறுக் கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டவனும் கூட பிதாவைச் சென்றடை யும் படி நம் மீட்பர் பாதையைத் திறந்துள்ளார்.தீஇவ 702.2

    கர்த்தாவே, நீரே என் தேவன்;
    உம்மை உயர்த்தி,
    உமது நாமத்தைத் துதிப்பேன்;
    நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்;
    உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும்
    உறுதியுமானவைகள்.
    தீஇவ 702.3

    ஏசாயா 25:1.

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents