Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    கர்த்தருடைய திராட்சத்தோட்டம்

    பரலோகத்தின் சிறந்த ஈவுகளை மனிதர் அனைவருக்கும் கொடுக்க வேண்டுமென்பதே தேவனுடைய ஆசை. அதற்காகவே, சிலைவழி பாட்டு உறவினர்களோடு வாழ்ந்துவந்த ஆபிரகாமை, கானான் தேசத் திற்கு வரும்படி அழைத்தார் தேவன். நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர் வாதமாய் இருப்பாய் என்று ஆபிரகாமிடம் சொன்னார் தேவன். ஆதியா கமம் 12:2. உலகிற்கு தேவன் தந்துள்ள சத்தியத்தைப் பத்திரமாகப் பாது காக்கவேண்டியதும், வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் வருகையால் சகல தேசங்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கவேண்டியதும் இஸ்ரவேலின் வேலையாக இருந்தது. ஆபிரகாம் அந்த இஸ்ரவேல் மக்களின் தேசப்பிதா வாக ஆனது தேவன் அவருக்குத் தந்த மதிப்பு ஆகும்.தீஇவ 15.1

    மெய்த் தேவனைப் பற்றிய அறிவு மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. சிலைவழிபாட்டால் அவர்கள் மனது இருள் டைந்துவிட்டது. தேவனுடைய நியமங்கள் நியாயமாயும் பரிசுத்தமாயும் நன்மையாயும் இருந்தபடியால், மனிதர் தங்களுடைய கொடுமையான சுயநல நோக்கங்களுக்கு ஏற்ற சட்டங்களை உருவாக்க முயன்றனர். ஆனா லும், தேவன் இரக்கமுள்ளவராய் இருந்தபடியால், அவர்களை அழித்துப் போடவில்லை. தம்மை அவர்கள் அறிந்துகொள்வதற்காக, தம்முடைய சபையின்மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கத் தீர்மானித்தார். தம் முடைய மக்கள் மூலம் தேவன் வெளிப்படுத்துகிற நியதிகளே, மனிதரில் தேவஒழுக்கத்தின் சாயலை உருவாக்குவதற்கான கருவியாக அமைய வேண்டுமென்று தேவன் திட்டமிட்டார்.தீஇவ 15.2

    தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மேன்மைப்படுத்த வேண்டும்; அவருடைய அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும்; மதிப்பான இந்த உன் னத வேலையை இஸ்ரவேல் வீட்டாரிடம் கொடுத்தார் தேவன். அவர்களி டம் இந்தப் பரிசுத்தமான பொறுப்பைக் கொடுப்பதற்காக, அவர்களை உலகிலிருந்து பிரித்தெடுத்தார். தமது நியாயப்பிரமாணத்துக்கு அவர்களைக் காவலாக வைத்தார். தேவனை அறிகிற அறிவு இஸ்ரவேலர் மூலம் மனி தருக்குள் எப்போதும் இருக்கவேண்டுமென்பது தேவனுடைய திட்டம். இருள் சூழ்ந்திருந்த உலகில் இவ்வாறு பரலோக வெளிச்சம் பிரகாசிக்க வேண்டியிருந்தது. சிலைவழிபாட்டை விட்டுவிலகி, ஜீவனுள்ள தேவனைச் சேவிக்குமாறு மனிதரை அழைக்க ஒரு குரல் தேவையாக இருந்தது.தீஇவ 15.3

    தாம் தெரிந்து கொண்ட ஜனத்தை ‘மகா பலத்தினாலும் வல்லமை யுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். யாத் திராகமம் 32:11. ‘தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்து கொண்ட ஆரோனையும் அனுப்பினார். இவர்கள் அவர்களுக்குள் அவரு டைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய் தார்கள். ‘’அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறது போல அவர்களை ஆழங்களில் நடந்து போகப்பண்ணினார். ‘ சங்கீதம் 105:26, 27; 106:9. நல்லதொரு தேசத்திற்குக் கொண்டுவருவதற்காக, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து தேவன் விடுவித்தார். அவர்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிவாழ்வதற்கான புகலிடமாக அத்தேசம் இருக்கவேண்டுமென்பதே தேவதிட்டம். தம்மிடம் அழைத்து, தமது நித்திய கரங்களால் அவர்களை அரவணைத்துக் கொள்ள அவர் ஆசைப்பட்டார். அவர் காட்டுகிற இரக்கத்திற்கும் செய்கிற நன் மைக்கும் பதிலாக, அவர்கள் அவர் நாமத்தை உயர்த்தி, உலகில் அதை மகிமைப்படுத்த வேண்டியிருந்தது.தீஇவ 16.1

    ’கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தர வீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத் தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைக ளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்த தில்லை . உபாகமம் 32:912. உன்னதமானவருடைய நிழலில் இஸ்ரவேலர் வாழ்வதற்காக, தேவன் அவர்களைத் தம்மிடம் அழைத்துவந்தார். வனாந் தர அலைச்சல்களின் ஆபத்துகளிலிருந்து அற்புதமாக அவர்களைப் பாது காத்தார். வாக்குத்தத்த நாட்டில் தேவ தயவுபெற்ற தேசமாக அவர்களை நிலைப்படுத்தினார்.தீஇவ 16.2

    இஸ்ரவேலரின் அழைப்பையும், அவர்கள் யேகோவாவுக்குப் பிரதி நிதிகளாக இருந்து, நற்செயல் செய்வதற்குத் தேவன் அவர்களுக்குக் கொடுத்த பயிற்சியையும் மனதைத் தொடும் ஓர் உவமை மூலம் வெளிப்படுத்துகிறார் ஏசாயா.தீஇவ 17.1

    ’இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட் டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேச ருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. ‘ஏசாயா 5:1,2.தீஇவ 17.2

    தாம் தெரிந்து கொண்ட இந்தத் தேசத்தின்மூலம் மனித இனம் முழு வதற்கும் ஆசீர்வாதம்தரத் தீர்மானித்திருந்தார் தேவன். சேனைகளின் கர்த் தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மன மகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந் தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு என்று அறிவிக்கிறார் தீர்க்கதரிசி. ஏசாயா 5:7.தீஇவ 17.3

    வேத வாக்கியங்கள் இந்த மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தமது நியாயப்பிரமாணத்தின் கற்பனைகளால் அவர்களைச் சுற்றி வேலி அமைத் தார். சத்தியம், நியாயம், தூய்மை பற்றிய நித்திய நியதிகள் அவை. தாங்கள் பத்திரமாக இருப்பதற்காகவே அவர்கள் இந்த நியமங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. ஏனெனில், பாவச்செயல்களால் அவர்கள் தங்களை அழித்துக்கொள்ளாதபடி அவை அவர்களைப் பாதுகாக்கின்றன. அவர்கள் மத்தியில் அவர் தமது பரிசுத்த ஆலயத்தை வைத்தார்; அது அந்தத் திராட்சத் தோட்டத்தில் கோபுரமாக இருந்தது.தீஇவ 17.4

    கிறிஸ்துவே அவர்களுடைய பயிற்சியாளர். வனாந்தரத்தில் அவர் களோடு அவர் இருந்ததுபோல, பின்னரும் அவரே அவர்களுடைய போத கராகவும் வழிகாட்டியாகவும் இருந்துவந்தார். கிருபாசனத்திற்கு மேலே ஷெக்கைனாவில் தேவனுடைய மகிமை தங்கியிருந்தது. அவர்கள்மேல் தேவன் தமது அன்பையும் பொறுமையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.தீஇவ 18.1

    தேவன் தமது திட்டங்களை மோசே மூலமாக விளக்கினார். அவர்கள் வளமாக வாழ்வதற்கான நிபந்தனைகளையும் வெளிப்படுத்தினார். ‘நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங் களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும் படி தெரிந்துகொண்டார்.’ உபாகமம் 7:6.தீஇவ 18.2

    ’கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியா யங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக் கொடுத்தாய். கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி, நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த் தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்று அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார். ‘உபாக மம் 26:17-19.தீஇவ 18.3

    இஸ்ரவேல் புத்திரருக்கென்று தேவன் ஒதுக்கியிருந்த எல்லைகள் முழுவதையும் அவர்கள் முதலில் பிடிக்கவேண்டியிருந்தது. மெய்த் தேவ வழிபாட்டையும் சேவையையும் புறக்கணித்த தேசங்கள் அழிய வேண்டி யிருந்தது. ஆனால், இஸ்ரவேலின் மூலம் தேவனுடைய குணம் வெளிப் பட்டு, மனிதர் அவர்பால் ஓடிவரவேண்டுமென்பதே முக்கிய நோக்கம். உலகம் முழுவதிற்கும் நற்செய்தி அழைப்பைக் கொடுத்தாக வேண்டும். பலிமுறை ஆராதனைகள் மூலமாக, தேசங்களுக்கு முன்பாக, கிறிஸ்து உயர்த்தப்படவேண்டும்; அப்போது அவரை நோக்கிப் பார்ப்பவர்கள் வாழ் வடைவார்கள். கானானியப் பெண் ராகாப் , மோவாபியப் பெண் ரூத் போன்று சிலைவழிபாட்டிலிருந்து மெய்த்தேவ வழிபாட்டுக்கு மனந் திரும்பியவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். இஸ்ரவேலரின் எண்ணிக்கை இவ்வாறு பெருகும் போது, அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தரித்து, பூமிமுழுவதையும் தங்கள் அரசாங்கத்தால் நிரப்ப வேண்டும். இதுதான் நம் தேவனுடைய திட்டம்.தீஇவ 19.1

    ஆனால், தேவனுடைய இந்த நோக்கத்தை ஆதி இஸ்ரவேலர் நிறை வேற்றவில்லை. நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட் சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச் செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?’ ‘இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது.’ ‘’எருசலேமின் குடிகளே, யூதா வின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங் கள். நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்து போடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம். அதைப் பாழாக்கி விடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப் படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின் மேல் மழைபெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன்’‘ என் கிறார். சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.’‘ எரேமியா 2:21; ஓசியா 10:1; ஏசாயா 5:37.தீஇவ 19.2

    தேவனுக்கு உண்மையாக நடக்காவிட்டால், மனிதருக்கு ஏற்படக் கூடிய விளைவுகளை மோசே மூலம் தேவன் தம்முடைய மக்களுக்குத் தெரிவித்திருந்தார். தேவனோடு செய்துள்ள உடன்படிக்கையை மீறி நடந் தால், தேவனிடமிருந்து நாம் நம்மைப் பிரித்துக்கொள்கிறோம். அப்போது அவருடைய ஆசீர்வாதம் நம்மிடம் வரமுடியாது. இந்த எச்சரிப்புகளுக்கு யூத தேசம் செவிகொடுத்த போதெல்லாம், நிறைவான ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றார்கள்; அதனால், சுற்றியிருந்த மக்களுக்கும் அவர்கள் மூலம் ஆசீர்வாதம் கிடைத்தது. ஆனால், தாங்கள் தேவனுடைய பிரதிநிதிகளாக வாழ்வதின் பாக்கியங்களைப் பலசமயங்களில் அவர்கள் மறந்துபோனார் கள்; அத்தோடு தேவனையும் இஸ்ரவேலர் மறந்துபோனார்கள். தேவனுக் குச் செய்யவேண்டிய சேவையை அவர்கள் செய்யவில்லை; உடன்மனி தருக்கு அவர்கள் தந்திருக்கவேண்டிய வழிகாட்டலையும் அவர்கள் தர வில்லை. நிர்வகிப்பதற்காகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திராட்சத் தோட் டத்தைத் தங்களுக்கே உடமையாக்கிக் கொள்ளப்பார்த்தார்கள். அவர்களு டைய பேராசையைப் பார்த்த அஞ்ஞானிகளும் அவர்களை இழிவாய்ப் பார்த்தார்கள். இவ்வாறு, தேவனுடைய நல்ல குணத்தையும் அவருடைய ராஜ்யத்தின் நல்ல சட்டதிட்டங்களையும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.தீஇவ 20.1

    ஒரு தகப்பனைப்போல், அவர்கள் தவறுகளை தேவன் பொறுத்துக் கொண்டார். திருந்துமாறு அவர்களிடம் தேவன் கெஞ்சினார்; இரக்கத்தைக் கொடுத்துக் கெஞ்சினார்; இரக்கத்தை எடுத்துக் கெஞ்சினார். பொறுமையாய் அவர்கள் பாவங்களை அவர்கள் கண்முன் நிறுத்தி, அவற்றை அவர்கள் ஒத்துக்கொள்வதற்காக அவர் பொறுத்திருந்தார். தீர்க்கதரிசிகளையும் தூது வர்களையும் தோட்டக்காரரிடம் அனுப்பினார். ஆன்மிகப் பகுத்தறிவுடைய இவர்களைத் தோட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளாமல், எதிரிகளைப்போல நடத்தினார்கள்; அவர்களை உபத்திரவப்படுத்தி, கொலை செய்தார்கள். மீண் டும் தேவன் தமது தூதுவர்களை அனுப்பினார். தோட்டக்காரர்கள் அவர்க ளையும் அவ்வாறே நடத்தி, இன்னமும் அதிகமான வெறுப்பை அவர்கள் மேலும் உமிழ்ந்தார்கள்.தீஇவ 20.2

    சிறையிருப்பின்போது, தேவதயவு எடுத்துக்கொள்ளப்பட்டதால் பலர் மனந்திரும்பினார்கள். ஆனாலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு இவர்கள் திரும்பி வந்தபோது, முந்தைய தலைமுறை செய்த அதே தவறு களை இவர்களும் செய்தார்கள்; சுற்றியிருந்த தேசங்களோடு சச்சரவுகளைத் தேடிக்கொண்டார்கள். மக்களில் நிலவிய தீமைகளைச் சுட்டிக்காட்ட அவர் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பின்போது, முன்பு முற்பிதாக்கள் செய்தபடியே இவர்களும் செய்தார்கள்; சந்தேகத்தோடு பார்த்து, தீர்க்கதரிசிகளை அவ மதித்தார்கள். இவ்வாறு, தோட்டக்காரர் தங்கள்மேல் குற்றங்களை அதிகரித் துக்கொண்டார்கள்.தீஇவ 21.1

    பலஸ்தீனாவின் மலைகள்மீது தெய்வீக தோட்டக்காரர் நாட்டிய நற் குலத் திராட்சச்செடியை இஸ்ரவேலர் இழிவாய் நினைத்தார்கள்; வேலிக்கு வெளியே எறிந்தார்கள்; கசக்கி, தங்கள் கால்களின் கீழே போட்டு மிதித் தார்கள். அது இனி ஒருபோதும் இராதபடி அழித்துவிட்டதாக நினைத்தார் கள். தெய்வீக தோட்டக்காரரோ அந்தச் செடியை எடுத்து, ஒளித்துவைத்தார். சுவருக்கு அடுத்த பக்கம் அதை நாட்டினார். அதன் அடித்தண்டு வெளியே தெரியாதபடி பார்த்துக்கொண்டார். மதிலைத் தாண்டி கிளைகள் வந்தன; அதனோடு வேறே கிளைகளை ஒட்டவைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், மனிதர் எவரும் அதன் அடித்தண்டைத் தொடமுடியாது; அழிக்கமுடியாது.தீஇவ 21.2

    திராட்சத்தோட்டத்தைப் பராமரிக்கிற வேலையை இன்று தேவசபையே செய்துவருகிறது. தீர்க்கதரிசிகள் மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோச னைகளும் கடிந்துரைகளும் தேவசபைக்கு மிகவும் முக்கியமானவை. ஏனெ னில், மனித இனத்திற்கான தேவதிட்டத்தை தீர்க்கதரிசிகள் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். பாவ மனிதர்மேல் தேவனுக்குள்ள அன்பையும், அவர் களுக்கான இரட்சிப்பின் திட்டத்தையும் தீர்க்கதரிசிகளின் போதனைகள் வெளிப்படுத்துகின்றன. இஸ்ரவேலுக்குத் தேவ அழைப்பு, அவர்களுடைய வெற்றி தோல்விகள், தேவதயவை அவர்கள் திரும்பப்பெறுதல், திராட்சத் தோட்டத்தின் சொந்தக்காரரை அவர்கள் புறக்கணித்தல், ஆதியில் போடப் பட்ட திட்டத்தை மீதமான ஒரு கூட்டம் நிறைவேற்றிவைத்தல், உடன்படிக் கையின் வாக்குத்தத்தங்கள் அந்த மீதமானவர்களுக்கு நிறைவேறுதல் ஆகிய வையே தீர்க்கதரிசிகளின் செய்தியாக இருந்தது; கடந்த காலம் முழுவதும் இவற்றைத்தாம் அறிவித்துவந்தார்கள்.தீஇவ 22.1

    முற்காலத் தீர்க்கதரிசி ஒருவர் சொல்லியிருக்கிற செய்திதான் இப் போது தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் உண்மையுள்ள ஊழியக்காரர் களாகப் பணிபுரிகிற அவருடைய சபைக்கு தேவன் தருகிற செய்தியாக இருக்கிறது.தீஇவ 22.2

    அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள். கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப் படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும் காத்துக்கொள்வேன். ஏசாயா 27:2,3.தீஇவ 22.3

    இஸ்ரவேல் தன் தேவனை நம்பட்டும். திராட்சத்தோட்டத்தின் சொந் தக்காரர் அருமையான கனிகளுக்காக வெகுகாலம் காத்திருக்கிறார். எல் லாத் தேசங்களிலும் உள்ள மக்கள் மத்தியிலிருந்து அந்தக் கனிகளைச் சேக ரித்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் அவர்தமக்குச் சொந்தமானவர்களிடம் வருவார்; இஸ்ரவேல் வீட்டாருக்காக தேவன் வைத்திருக்கிற நித்திய திட் டங்கள் அந்த மகிழ்ச்சியான நாளில் நிறைவேறும். “கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமான வைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியும் மானவைகள்.” வசனம் 6.தீஇவ 22.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents