Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    2 - விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்

    விதையும் விதைப்பவனும்

    விதை விதைக்கிற உவமையின் மூலம் பரலோக இராஜ்யத்திற் குரிய வைகளயும், தோட்டக்காரராகிய தேவன் தம் மக்களுக்காகச் செய்பவற்றையும் கிறிஸ்து விளக்குகிறார். வயலிலே விதைக்கிற ஒருவனைப்போல, பரலோகத்தின் சத்தியவிதையை விதைப்பதற்கு அவர் வந்தார். அவர் சொன்ன அந்த உவமையே விதைதான்; தம் கிருபையின் விலையேறப்பெற்ற சத்தியங்கள் அடங்கிய அந்த விதையை விதைத்தார். விதைப்பது ஒரு சாதாரண செயல் என்பதால், அந்த உவமையின் மதிப்பு தெரிவதில்லை. நிலத்தில் விதைக்கப்பட்ட விதையானது சத்திய விதை குறித்து நம்மை சிந்திக்கைவக்கவும், அது விதைக்கப்படுவதால் மனிதன் மீண்டும் தேவன் மேல் பற்றுக் கொள்ள திரும்பவும் கிறிஸ்து விரும்புகிறார். பரலோக அரசர்தாமே விதைவிதைக்கிற உவமையைச் சொன்னார். வயலில் விதைப்பு சம்பந்தப்பட்ட அதே நியதிகள் சத்திய விதைகளை விதைப்பதற்கும் பொருந்தும்.COLTam 32.1

    இயேசுவைப் பார்க்கவும் அவர் பேசுவதைக் கேட்கவும் கலிலேயாக் கடலருகே மக்கள் கூடியிருந்தார்கள். ஓர் ஆவல், எதிர்பார்ப்பு காணப்ட்டது. பாய்களில் படுத்திருந்த பிணியாளிகள் அங்கிருந்தார்கள்; தங்கள் கஷ்டநிலையை அவரிடம் சொல்வதற் கான நேரத்தை எதிர்பார்த்திருந்தார்கள். பாவ மனுக்குலத்தின் வேதனைகளைக் குணமாக்க, தேவனிடம் கிறிஸ்து உரிமை பெற்றிருந்தார். வியாதிகளைக் கடிந்துகொண்டு போக்கி, தம்மைச் சுற்றிலும் ஜீவனும் சுகமும் சமாதானமும் வியாபித்திருக்கச் செய்தார்.COLTam 32.2

    மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. யாருமே கிறிஸ்துவை நெருங்க முடியாத அளவுக்கு கிறிஸ்துவைச் சுற்றிலும் நெருக்கி யடித்து நின்றனர். மீன்பிடி படகுகளில் இருந்தவர்களிடம் கிறிஸ்து பேசவிட்டு, அவரை கடலின் அக்கறைக்கு அழைத்துச் செல்ல காத்திருந்த சீடர்களிருந்த படகில் ஏறி, கரையிலிருந்து சற்று தள்ளி படகை ஓட்டச்சொல்லி, கரையில் நின்றிருந்த பெருந்திரளான மக்களை நோக்கிப் பேசினார்.COLTam 33.1

    கடலுக்கு அருகில் அழகான கெனெசரேத் சமவெளி படர்ந்திருந்தது. அதற்கப்பால் உயரமான குன்றுகள். மலைவெளிகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் விதைப்பவர்கள் விதைப்பதிலும், அறுப்பவர்கள் விளைச்சலை அறுப்பதிலும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக்காட்சியை நோக்கியவராக கிறிஸ்து பின்வருமாறு கூறினார்: “கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் . அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட் டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண்ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறின போதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று . சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது” (மத்தேயு 13:3-8).COLTam 33.2

    கிறிஸ்துவின் காலத்திலிருந்தவர்கள் அவருடைய ஊழியப் பணி பற்றிப் புரிந்திருக்கவில்லை . பூமிக்கு அவர் வந்த விதம், அவர்களுடைய எதிர்பார்ப்புகளின்படி இல்லை . யூதர்களுடைய வாழ்வாதாரத்தின் அஸ்திபாரேம் கர்த்தராகிய இயேசுதாம். அவர்களுடைய மகிமைபொருந்திய ஆராதனைகளை நியமித்தவர் தேவன். சடங்காச்சாரங்கள் சுட்டிக்காட்டின நபர், குறித்த காலத்தில் வருவார் என்பதை மக்களுக்குப் போதிக்க அவற்றை நியமித்திருந்தார். ஆனால், சடங்குகளையும் சடங்காச்சாரங்களையும் முக்கியப்படுத்தின யூதர்கள், அவை சுட்டிக்காட்டினவரைக்காணத் தவறினர். தேவன் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்பின பாடங்களை பாரம்பரியங்களும் கோட்பாடுகளும் மனிதர்களின் சட்டதிட்டங்களும் அவர்களிடமிருந்து மறைத்துவிட்டன. மெய் மார்க்கத்தைப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்க முடியாத படி இந்தக்க் கோட்பாடுகளும் பாரம்பரியங்களும் தடுத்தன. நிஜமான அந்த நபரே கிறிஸ்துவாக வந்தபோது, அடையாளமாகக் கொடுக்கப்பட்ட அனைத்தும், நிழல் சுட்டிக்காட்டிய நிஜமும் அவரில் நிறைவேறியதைக் உணரவில்லை . நிஜத்தைப் புறக் கணித்துவிட்டு, அடையாளங்களையும் பயனற்ற சடங்குகளையும் பிடித்துக்கொண்டனர். தேவகுமாரன் வந்திருந்தார்; ஆனால் அவர்கள் அடையாளத்தைக் கேட்டு வந்தனர். மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்ற சொன்னபோது, ஒரு அற்புதத்தை நிகழ்த்துமாறு கோரிக்கை வைத்தனர். மத்தேயு 3:2. இரட்சகருக்குப் பதிலாக, அடையாளங்களைக் கேட்டதால், கிறிஸ்துவின் சுவிசேஷமானது அவர்களுக்குதடைக்கல்லாயிருந்தது. வெற்றிகரமாக படையெடுப்புகள் நடத்தி, பூமியின் ராஜ்யங்களைக் கவிழ்த்து, தம்முடைய ராஜ்யத்தை நிறுவி, தாம் மேசியாவென அவர் நிரூபிக்க விரும்பினார்கள். இந்த எதிர்பார்ப்புக்கான பதிலைத்தான் விதைக்கிறவனுடைய உவமையில் கிறிஸ்து சொன்னார். படைபலத்தாலோ வன்முறையாலோ அல்ல, மனிதரின் இருதயங்களில் ஒரு புதிய நியதியை வேரூன்றுவதாலேயே தேவனுடைய இராஜ்யத்தை நிலைப்படுத்தி மேலோங்கச் செய்யமுடியும்.COLTam 33.3

    ‘நல்ல விதையை விதைக்கிறவர் மனுஷகுமாரன்’ மத்தேயு 13:37. கிறிஸ்து ராஜாவாக அல்ல, விதை விதைப்பவராக வந்தார்; இராஜ்யங்களைக் கவிழ்ப்பவராக அல்ல, விதையைத் தூவுகிற வராகவந்தார்; உலக வெற்றிகளையும் மேன்மைகளையும் தம்மைப் பின்பற்றுவர்களுக்கு சுட்டிக்காட்டுவதற்காக அல்ல, இழப்புகள் ஏமாற்றங்களுக்கு மத்தியில் பொறுமையோடு வேலை செய்து, அறுவடையைக் கூட்டிச் சேர்க்கும்படி வந்தார்.COLTam 34.1

    கிறிஸ்து சொன்ன உவமையின் அர்த்தம் பரிசேயர்களுக்குப் புரிந்தது; உவைம்சொன்ன பாடங்கள் பிடிக்கவில்லை. புரியாதவர்கள் போல நடித்தார்கள். அந்தப் புதிய ஆசிரியரின் வார்த்தைகள் பெருந்திரளான மக்களின் இருதயங்களை அவர்களுக்கே தெரியாமல் அசைத்தபோதிலும், அவருடைய நோக்கம் அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது. சீடர்களும் அந்த உவமையை விளங்கிக்கொள்ளவில்லை. இருப்பினும், ஆர்வத்தை அது தூண்டியது. இயேசுவினிடத்தில் தனியாக வந்து, விளக்கம் கேட்டார்கள்.COLTam 34.2

    இவ்வாறு ஆர்வத்தைத் தூண்டி, திட்டமான போதனையை அதிகமாக அவர்களுக்குப் போதிக்கவேண்டும் என்றே கிறிஸ்து விரும்பினார். உண்மையுள்ள இதயத்தோடு தம்மைத் தேடுகிற அனைவருக்கும் தமது வார்த்தையை எப்படித் தெளிவாக விளக்கிக் கூறுவாரோ அதேபோன்று அவர்களுக்கும் அந்த உவமையை அவர் விளக்கிக் கூறினார். பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்திற்காக இருதயங்களைத் திறந்து, தேவர்த்தையை ஆராய்கிறவர்கள் அதின் அர்த்தத்தை விளங்க முடியாத இருளில் விடப்படமாட்டார்கள். அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டா யிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்து கொள் வான்) என்று இயேசு சொன்னார். யோவான் 7:17. சத்தியத்தை தெளிவாக அறியும்படி கிறிஸ்துவிடம் வருகின்ற அனைவரும் அதைப் பெற்றுக்கொள்வர். பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை அவர்களுக்கு அவர் வெளிப்படுத்துவார். சாத் தியத்தை அறிய ஏங்குகிற இருதயமானது, இந்த மறைபொருள்களைப் புரிந்து கொள்ளும். தேவாலயமாகிய ஆத்துமாவில் பரலோக ஒளி பிரகாசிக்கும்; இருளான பாதையில் பிரகாசிக்கின்ற விளக்கைப்போன்று மற்றவர்களுக்கும் அது வெளிச்சம் கொடுக் கும்.COLTam 35.1

    ‘விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் ‘ மத்தேயு 13:3. கிழக்கு நாடுகளிலே மிகவும் அமைதியற்ற சூழ்நிலை நிலவியது. கலவரங்கள் உண்டாகி பெரும் ஆபத்து நேரிடும், எனவே தோட்டக்காரர்கள் தினமும் மதில்களுக்கு வெளியே செ ன்று வேலை செய்தனர். அதைப்போன்று பரலோகவிதைப்பாளரான கிறிஸ்து விதைக்கச் சென்றார். பாதுகாப்பும் சமாதானமும் நிறைந்த தமது வீட்டை விட்டுவிட்டு, உலகத் தோற்றத்திற்கு முன்னரே பிதாவோடு கூட தாம் பெற்றிருந்த மகிமையை விட்டு, சர்வலோகத்தின் ராஜாவாக தாம் வீற்றிருந்த சிங்காசனத்தைவிட்டு வந்தார். தொலைந்துபோன உலகத்திற்கு ஜீவ்விதையை கண்ணீரோட விதைத்து, தமது இரத்தத்தை நீராகப் பாய்ச்சும்படி உபத்திரவப் பட்டவராக, சோதிக்கப்பட்டவராக, தனியாளாகப் புறப்பட்டுச் சென்றார்.COLTam 35.2

    அவர் செய்தபடியே அவருடைய ஊழியர்களும் விதைக்கச் செல்லவேண்டும். சத்தியத்தின் விதையை விதைக்கும் படி அழைத்தப்போது ஆபிரகாமிடம், “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என்று கட்டளை யிட்டார். ஆதியாகமம் 12:1. “தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான் எபிரெயர் 11:6. அதுபோல எரு சலேமின் தேவாலயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்த அப்போஸ்தல னாகிய பவுலிற்கும் ‘நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத் திலே அனுப்புவேன்” என்று தேவனிடமிருந்து தூது வந்தது. அப்போஸ்தலர் 22:21. ஆகவே, கிறிஸ்துவோடு சேர அழைக்கப்பட்டவர்கள், அவரைப் பின்பற்றும்படி எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். முன்பு கட்டப்பட்டவைகளிலிருந்து விடுபடவேண்டும். வாழ்க்கை திட்டங்களைக் கைவிடவேண்டும். பூமிக்கடுத்தவைகளில் நம்பிக்கை வைப்பதை அகற்ற வேண்டும். கடும் பிரயாசத்தோடும், கண்ணீரோடும், தனிமை நேரிட்டாலும் தியாகத்தோடும் விதை விதைக்க வேண்டும்.COLTam 36.1

    “விதைக்கிறவன் வேதவசனத்தை விதைக்கிறான்.” இவ்வுல கிலே சத்தியத்தை விதைக்க கிறிஸ்து வந்தார். மனிதன் பாவத்தில் விழுந்தது முதல் பொய்யின் விதைகளை சாத்தான் விதைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு பொய்யைச் சொல்லி, முதலாவது மனிதனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்; பூமியிலே தேவனுடைய இராஜ்யத்தைத் தோற்கடித்து, தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் மனிதரைக் கொண்டுவர இன்றும் அவ்வாறே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். மேலுலக விதைப்பாளரான கிறிஸ்து, சத்திய விதைகளை விதைக்கும்படி வந்தார். தேவனுடைய ஆலோசனை மன்றங்களில் பங்குபெற்றவர், நித்தியமானவரின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாசஞ்செய்தவர், சத்தியத்தின் தூய்மையான நியதிகளை மனிதருக்கு அவர் தெரியப்படுத்த வல்லவர். மனிதனின் விழுகை யின் நாளிலிருந்து கிறிஸ்து இந்த உலகத்திற்கு சத்தியத்தை வெளிப் படுத்தி வந்திருக்கிறார். அழிவில்லாத வித்தை, அதாவது ” என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தை’ மனிதருக்கு அறிவிக்கிறார். 1பேதுரு 1:23. ஏதேனில் விழுந்து போனவர்களுக்குக் கொடுத்த முதல் வாக்குத்தத் தத்திலே கிறிஸ்து சுவிசேஷ விதையை விதைத்தார். ஆனாலும் மனிதர் மத்தியிலே அவர் செய்த தனிப்பட்ட ஊழியத்திற்கும் அவ் வாறு அவர் ஏற்படுத்திய சுவிசேஷப் பணிக்கும் குறிப்பாக விதைக் கிறவனின் உவமை பொருந்தும்.COLTam 36.2

    தேவனுடைய வார்த்தைதான் விதை . முளைவிடுவதற்கான நியதியை ஒவ்வொரு விதையும் தன்னிலே பெற்றுள்ளது. அதற்குள்தான் ஒரு தாவரத்தின் உயிர் அடைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, தேவனுடைய வார்த்தையிலே ஜீவன் இருக்கிறது. கிறிஸ்து சொல்கிறார். நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது யோவான் 6:63; “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு யோவான். 5:24. தேவ வார்த்தையின ஒவ்வொரு கட்டளையிலும் வாக்குத்தத்தத் திலும் வல்லமையும், தேவனுடைய ஜீவனும் உள்ளது. அது கட்டளைகளின்படி வாழ வும், வாக்குத்தத்தத்தைச் சுதந்தரிக்கவும் உதவுகிறது. விசுவாசத்தினாலே வார்த்தையை ஏற்றுக்கொள்கிறவன் தேவனுடைய குணத்தையும் அவருடைய ஜீவனையும் பெற்றுக்கொள்ளுகிறான்.COLTam 37.1

    ஒவ்வொரு விதையும் தன் இனத்திற்கேற்ற கனியைக் கொடுக்கிறது. சூழ்நிலைகளை அறிந்து விதையை விதையுங்கள், அதற்கேற்ற தாவரத்தை அது வளரச்செய்யும். அழிவில்லாத வித்தாகிய வேதவசனத்தை விசுவாசத்தினாலே ஆத்துமாவில் ஏற்றுக் கொள்ளுங்கள். தேவனுடைய ஜீவனுக்கும் குணத்திற்கு ஒத்த ஜீவனையும் குணத்தையும் அது கொண்டுவரும்.COLTam 37.2

    இஸ்ரவேலிலிருந்த போதகர்கள் தேவவார்த்தையாகிய விதையை விதைத்துக்கொண்டிருக்கவில்லை. கிறிஸ்து வார்த்தை யைப் போதித்தார்; ஆனால் ரபிமார்கள் அதற்கு நேர்மாறாக நடந்தார்கள். பாரம்பரியங்களும், மானிட கொள்கைகளும், யூகங்களும் அவர்களுடைய சிந்தைகளில் ஓடிக்கொண்டிருந்தன. தேவவார்த்தை பற்றி மனிதன் எழுதியவற்றையும், போதித்தவற் றையும் தேவவார்த்தை யாகவே பார்த்தார்கள். அவர்களுடைய உபதேசத்திலே ஆத்துமாவை உயிர்ப்பிக்கக்கூடிய வல்லமை யில்லை. தேவ்வார்த் தையைமையமாக வைத்தே கிறிஸ்து போதித்தார்; பிரசங்கித்தார். தம்மிடம் கேள்வி கேட்டவர்களிடம், “என்று எழுதியிருக்கிறதே’ ‘நீங்கள் வேத்த்தில் ஒருகாலும் வாசி க்கவில்லையா?’ ‘நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று ஆணித்தர மாகக் கேட்டார். நண்பரோ விரோதியோ அவரிடமிருந்து அறிந்து கொள்ள விரும்பின சந்தர்ப்பங்களிளெல்லாம் விதையாகிய தேவவசனத்தை விதைத்தார். வழியும், சத்தியமும், ஜீவனும், ஜீவவார்த்தையுமாகிய அவர்தாமே, வேதவாக்கியங்களைச் சுட்டிக்காட்டி “என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்று கூறுகிறார். யோவான் 5:39;’மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லா வற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். ” லூக்கா 24:27.COLTam 37.3

    கிறிஸ்துவின் ஊழியர்களும் அதே வேலையைச் செய்ய வேண்டும். முந்தைய நாட்களைப்போல் நம் நாட்களிலும் தேவவார்த்தையின் முக்கிய சாத்தியங்களை மனித வாதங்களும், யூகங்களும் புறம்பே தள்ளி வருகின்றன. சுவிசேஷ ஊழியர்களாகக் கூறிக்கொள்ளும் பலர், முழு வேதாகமும் தேவ ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறதென்று ஏற்றுக்கொள்கிறதில்லை. ஒரு ஞானி ஒரு பகுதியை வேண்டாமென்கிறார், மற்றொன்றில் கேள்வி எழுப்புகிறார். தேவ வார்த்தையை விட தங்கள் பகுத்தறிவை உயர்த்துகிறார்கள். வேதாகமத்திலிருந்து தாங்கள் போதிக்கும் பகுதிக்கு அவர்களே விளக்கம் கொடுப்பார்கள். அதன் தெய்வீக மெய்தன்மையை அழித்துவிடுவார்கள். இவ்விதமாக விதைக்கப்படும் அவநம்பிக்கையின் விதைகள் பரவுகின்றன, மக்கள் எதை நம்புவதென்று தெரியாமல் குழப்ப மடைகின்றனர். சிந்தித்தாலும் பயனில்லாத விசுவாசக் கொள்கைகள் பல இருக்கின்றன ; கிறிஸ்து வின் நாட்களிலிருந்த ரபிமார்கள் வேதப்பகுதிகள் பலவற்றிற்கு புரிய முடியாத உள்ளர்த்தங்களைப் புகுத்தினார்கள். அவர்களுடைய பழக்கவழக்கங்களை தேவவசனத்தின் தெளிவான போதனைகள் கண்டித்ததால், அவற்றை வலுவிழக்கச் செய்ய முயன்றனர். இதுதான் இன்றும் செய்யப்படு கின்றது. தேவ பிரமாணத்தை மீறுவதற்காகு காரணங்காட்டும்படி தேவவசனத்தை புதிரான, விளங்க முடியாத ஒன்றாகக் காட்டுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளை கிறிஸ்து தம் நாட்களில் கண்டித்தார். தேவவார்த்தையை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டுமெனப் போதித்தார். வேதவாக்கியங்கள் கேள்விக்கப் பாற்பட்ட அதிகாரமுடையவை என்று சுட்டிக்காட்டி னார், நாமும் அவ்வாறே செய்யவேண்டும். வேதாகமத்தை சகல விசுவாசத்தின் அஸ்திவாரமாகவும், சகல சர்ச்சைகளுக்கும் தீர்வாகவும், நித்திய தேவனுடைய வார்த்தையாகவும் அறிவிக்கவேண்டும்.COLTam 38.1

    வேதாகமத்தின் வல்லமை கொள்ளையிடப்பட்ட நிலையில் இருப்பதால், ஆவிக்குரிய ஜீவியத்தின் தன்மையில் தாழ்ச்சி ஏற்பட்டிருப்பதின் விளைவுகளைக் காணலாம். இன்றைய நாட்களில் அநேக மேடைகளிலே செய்யப்படும் பிரசங்கங்களில் மனச்சாட்சியை விழிப்படையச்செய்து, ஆத்து மாவிற்கு ஜீவனைக் கொண்டுவரும் தெய்வீக வெளிப்படுத்தல்கள் இல்லை. பிரச ங்கத்தை கேட்பவர்கள் ‘வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக் கியங்களை நமக்கு விளக்கிக்காட்டின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா? (லூக்கா 24:32) என்று கூற முடியாது. அநேகர் ஜீவனுள்ள தேவனுடைய தெய்வீக பிரசங்கத்திற்காக ஏக்கத்தோடு கதறுகின்றனர். தத்துவ கோட்பாடுகளும், இலக்கியக் கோட்பாடுகளும், எவ்வளவுதான் இருந்தாலும், இதயத்தை திருப்திப்படுத்த இயலாது. மனிதக் கண்டுபிடிப்புகளாலும் வலிறுத்தல்களாலும் ஆவிக்குரியஜீவியத்திற்கு எந்த பொழிவுடன் பயனுமில்லை. தேவனுடைய வார்த்தை மக்களிடத்தில் பேசட்டும். பாரம்பரியங்கள், மானிடக் கொள்கைகள், பழ மொழிகள் ஆகியவைகளை மட்டுமே கேட்டுக்கொண்டு இருப்பவர்கள், ஆத்துமா நித்திய ஜீவனைப் பெறும்படியாக அதை புதிதாக்கவல்ல வார்த்தைகளையுடைய அவரது குரலைக் கேட்க்கட்டும்.COLTam 39.1

    தேவன் கனிவு மிக்க தந்தை, அவருடைய கிருபை அளவிடமுடியாதது என்பதை முக்கியக் கருத்தாக கிறிஸ்து விரும்பிப் போதித்தார். அவருடைய குணமும் அவருடைய பிரமாணமும் பரிசுத்தமானைவ என்று அதிகமாகப் பேசினார். நானே வழியும் சாத்தியமும் ஜீவனுமா யிருக்கிறேன் என்று தம்மைப்பற்றி மக்களிடம் சொன்னார். கிறிஸ்துவின் ஊழியர்களும் இவற்றையே முக்கியக் கருத்துகளாகப் போதிக்க வேண்டும். இயேசுவில் காணப்படுவது போலவேசத்தியத்தைப் போதியுங்கள். பிரமாணம் மற்றும் சுவிசேஷத்தின் கோரிக்கைகளை மக்களுக்கு தெளிவாக்குங்கள். கிறிஸ்து சுயத்தை வெறுத்து தியாக பலியாக ஒப்புக்கொடுத்து வாழ்ந்தார், நிந்தையடைந்து மரித்தார், உயிர்த்தெழுந்து பரமேறிச்சென்றார், தேவனுடைய பரலோக மன்றங்களிலே நமக்காகப் பரிந்து பேசுகிறார். ‘நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” என்று வாக்குரைத்திருக்கிறார்” என்று மக்களுக்கு எடுத்துச்சொல்லுங் கள்.COLTam 39.2

    தவறான கோட்பாடுகளைக்குறித்த தர்க்கம் பண்ணுவதையும், சுவிசேஷத்தை எதிர்ப்பவர்களை எதிர்க்க வகைதேடுவதையும் விட்டுவிட்டு, கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். தேவனுடைய பொக்கிஷ அறையிலிருந்து புதிய சாத்தியங்கள் வாழ்க் கையில் பளிச்சிடட்டும். “திருவசனத்தைப் பிரச ங்கம்பண்ணு. நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதை . ” சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதை யாய்த் திருவசனத்தை பிரசங்கம் பண்ணு. “என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்கு முன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.” தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள். அவருடைய வசனங்களோடு ஒன்றையுங்கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய் 2 தீமோ 4:2; ஏசாயா 32:20; எரேமியா 23:28; நீதி. 30:5,6.COLTam 40.1

    “விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.” அனைத்து வகை கல்வி பணிகளுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டிய மாபெரும் நியதி இங்கு முன்வைக்கப்படுகிறது. “விதை தேவனுடைய வசனம்.” இன்றைய அநேக கல்வி நிறுவனங்களில் தேவவார்த்தை புறம்பே தள்ளப்பட்டுள்ளது. வேறு விஷயங்களை பாடமாக சிந்தையில் புதுக்குகிறார்கள். நாத்தீக ஆசிரியர்களின் படைப்புகள் நம் கல்வி முறையிலே அதிகம் இடம்பெறுகின்றன. பள்ளிப் புத்தகங்களிலே, நாத்தீக உணர்வுகள் கலந்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன. அறிவியல் ஆராய்ச்சி தவறான பாதைக்கு வழி நடத்துகிறது; ஏனெனில், அதின் கண்டுபிடிப்புகளுக்கு தவறான விளக்கம் கொடுக்கப்பட்டு, திரித்துக் கூறப்படுகின்றன. அறிவியலின் உத்தேசமான போதனைகளோடு, தேவவார்த்தையை ஒப்பிடுவதால், பயன்ற்றதாக, நம்பத்தகாததாக அது காட்டப்படுகிறது. இவ்விதமாக, வாலிபர் மனதிலே சந்தேகத்தின் விதைகள் நாட்டப்படுகின்றன, சோதனை வேளைகளிலே முளைத்து எழும்புகின்றன. தேவவார்த்தையின் மேலுள்ள விசுவாசம் தொலையும் போது, ஆத்துமாவிற்கு எந்த வழிகாட்டியும் பாதுகாப் பும் இல்லாமற் போகிறது. வாலிபர் தேவனைவிட்டும், நித்திய ஜீவனைவிட்டும் விலகிச்செல்கிற பாதைகளுக்கு வாலிபர்கள் இழுக்கப்படுகின்றனர்.COLTam 40.2

    இன்றைய நம் உலகில் அக்கிரமம் பெருமளவில் பெருகியிருப் பதற்கு இதுதான் காரணம். தேவவார்த்தையைப் புறந்தள்ளும்போது, சுபாவ இதயத்தின் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அதன் ஆற்றல் மறுக்கிறது. மனிதர் மாம்சத்திற்கென்று விதைத்து, மாம்சத்தினாலே தீமையை அறுவடை செய்கிறார்கள்.COLTam 41.1

    சிந்தை வலுவிழந்து, செயலற்றுப்போவதற்குப் இதுவும் மிகப்பெரிய காரணம். ஆவியில் ஏவப்பட்டிராதோரின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பதற்காக தேவனுடைய வசனத்தைவிட்டு விலகுவதினால், மனம் குறுகலாகி, அற்பத்தனமுள்ளதாகிறது. நித்திய சத்தியத்தின் ஆழமும் அகலமுமான நியதிகளோடு தொடர்பு கொள்ள வழியில்லாமல் போகிறது. புத்திக்கு பரிச்சயமான விஷயங்களைப் புரிந்து கொள்வதிலேயே அது நிலைத்துவிடுகிறது. இவ்வாறு இவ்வுலகக் காரியங்களில் பற்றுவைத்து பெலவீனமடைகிறது, அதன் ஆற்றல் குன்றுகிறது, விசாலமடை யமுடியாத நிலைக்கு சிறிது காலத்திற்குள்ளாகச் சென்றுவிடுகிறது.COLTam 41.2

    இவையனைத்தும் தவறான கல்வி முறையாகும். ஆவியான வரால் ஏவப்பட்டு எழுதப்பட்ட தேவவார்த்தையின் மகத்தான சாத் தியங்களின் மேல் வாலிபர்களின் சிந்தையை நிலைத்திருக்கச் செய்வதே ஒவ்வோர் ஆசிரியரின் பணியாகும். இந்த வாழ்க் கைக்கும் இனிவரும் வாழ்க்கைக்கும் இந்தக் கல்வி இன்றியமை யாததாகும்.COLTam 41.3

    அதற்காக, இது அறிவியல் படிப்பைத் தடை செய்துவிடும் அல்லது கல்வித் தரத்தைக் குறைத்து விடும் என்கிற எண்ணம் எழக்கூடாது. தேவனுடைய அறிவு வானபரியந்தம் உயர்ந்தது, இப்பிரபஞ்சம் பரியந்தம் அகலமானது. நமது நித்திய வாழ்க்கை சம்பந்தப்பட்ட மகத்தான கருத்துகளைப் படிப்பதால் நம் தரம் உயர்த்தப்படுவதையும், நம் ஆற்றல் பெருகுவதையும் போல வேறு எதுவும் செய்யமுடியாது . தேவன் கொடுத்துள்ள இந்த சத்தியங்களை இறுகப் பற்றிக்கொள்ள வாலிபர் வகைதேடட்டும். அதற்காக முயலும் போது, அவர்களுடைய சிந்தைகள் விசாலப்பட்டு, வலுவடையும். தேவ வார்த்தையின்படிச் செய்கிற ஒவ்வொரு மாணவனையும் விசாலமான சிந்தனைக்களத்திற்குள் இது உட்படுத்தி, அழிந்துபோகாத அறிவு செல்வத்தை அவன் பெற்றுக்கொள்ளச் செய்யும்.COLTam 41.4

    வேத வாக்கியங்களை ஆராய்ந்து பெற்றுக்கொள்கிற கல்வியானது இரட்சிப்பின் திட்டம் குறித்த அனுபவ அறிவைக் கொடுக்கிறது.COLTam 42.1

    இத்தகைய கல்வியானது தேவசாயலை ஆத்துமா மீண்டும் பெற்றுக் கொள்ள உதவும். இது சோதனையிலிருந்து மனதைப் பலப்படுத்துகிற, அரணாக விளங்கும், மேலும் அந்த மாணவைர உலகத்திற்கு கிறிஸ்துவினுடைய இரட்சிப்பின் ஊழியத்தைச் செய்வதில் அவருடைய உடன் ஊழியராக மாற்றும். அவரை பரலோகக் குடும்பத்தின் அங்கத்தினராகச் செய்து, ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் சுதந்திரத்திலே பங்கடைய ஆயத்தஞ்செய்யும்.COLTam 42.2

    பரிசுத்த சத்தியத்தைப் போதிக்கிறவர், அனுபவரீதியாக தான் அறிந்தவைகளையே மட்டுமே போதிக்க இயலும். “விதைக்கிறவன் தன் விதையை விதைக்கிறான்.”கிறிஸ்து சத்தியத்தை உபதேசி த்தார்; ஏனெனில், அவரே சாத்தியமாயிருந்தார். அவருடைய சிந்தனையும், அவருடைய குணமும், அவருடைய வாழ்க்கை அனுபவங்களும், அவருடைய உபதேசத்தில் கலந்திருந்தன. அதுபோலவே, அவருடைய ஊழியர்களிலும் இருக்க வேண்டும். அதாவது, வார்த்தையைப் போதிக்கிறவர் அதை தன்னுடைய சொந்த அனுபவமாக்கியிருக்கவேண்டும். கிறிஸ்து தங்களுக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமாம், மீட்புமாக மாறுவதென்றால் என்னவென்று அறிந்திருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை பிறருக்குப் போதிக்கும் போது, அப்படி இருக்கலாம் என்றோ, அப்படி நினைக்கிறேன் என்றோ சொல்லக்கூடாது. பேதுரு அப்போஸ்தலன் போல் அவர்களும், “நாங்கள் தந்தி ரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்த ராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம் என்று கூறவேண்டும். 2 பேதுரு 1:16. கிறிஸ்துவின் ஒவ்வொரு ஊழியக்காரரும் ஒவ்வொரு போதகரும் பிரியமான யோவானைப் போல, ” அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதா வினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக் கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று கூற வேண்டும். யோவான் 1:2.COLTam 42.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents