Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    24 - கலியாண வஸ்திரம் இல்லாமல்

    கலியாண வஸ்திரம் குறித்த உவமையானது ஒரு மாபெரும் பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறது. கலியாணம் என்பது தேவ னுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஐக்கியத்தைச் சுட்டிக்காட்டுகிறது. கலியாண வஸ்திரமானது திருமண விருந்தில் கலந்துகொள்ள தகுதியாக எண்ணப்படுவதற்கு பெற்றிருக்கவேண்டிய குணத்தைச் சுட்டிக்காட்டுகிறது.COLTam 311.1

    பெரிய விருந்து பற்றிய உவமைபோல இந்த உவமையிலும், சுவிசேஷ அழைப்பும், யூதஜனங்கள் அதைப் புறக்கணித்ததும், புறஜாதியாருக்கு அந்த இரக்கத்தின் அழைப்பு கொடுக்கப்படு வதும் எடுத்துக்காட்டப்படுகிறது. மேலும், அழைப்பைப் புறக் கணிக்கிறவர்கள் மிகுந்த அவமானத்திற்கும் மிகக்கொடிய தண்டனைக்கும் ஆளாகப்போவதையும் இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது. விருந்தில் கலந்துகொள்ள அழைப்பு கொடுப்பவர் ராஜா; கட்டளை கொடுக்கிற அதிகாரம் படைத்தவர். அதனால் அது மிகுந்த கனத்திற்குரிய அழைப்பு. ஆனாலும் மக்கள் அதை மதிக்க வில்லை. அதாவது, ராஜாவின் அதிகாரத்தை மதிக்கவில்லை. அந்த உவமையில் வீட்டெஜமானின் அழைப்பை அலட்சியம் செய்தார்கள்; இங்கு ராஜாவின் அழைப்பை அவமதித்ததோடு, அழைக்கச் சென்றவர்களையும் கொல்லுகிறார்கள். அவருடைய ஊழியக்காரர்களை அவமானப்படுத்தி, கொடுமைப்படுத்தி, கொலை செய்கிறார்கள்COLTam 311.2

    தனது அழைப்பு அவமதிக்கப்பட்டதைக் கண்ட அந்த வீட் டெஜமான், அழைக்கப்பட்டவர்களில் ஒருவனும் தனது விருந்தை ருசிப்பதில்லையென்று ஆணையிட்டான். ஆனால், ராஜாவின் அழைப்பைப் புறக்கணித்தவர்கள் தன்னுடைய சமுகத்திலும் விருந்திலும் பிரவேசிப்பதில்லையெனகட்டளையிட்டதோடு அதிகமாகச் செய்கிறான். அவன் தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலை பாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.COLTam 312.1

    இரண்டு உவமைகளிலுமே விருந்தினர்களுக்கு விருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால் இரண்டாவது உவமையோ, விருந்தில் கலந்து கொள்கிற ஒவ்வொருவரும் செய்யவேண்டிய ஆயத்தம் ஒன்றிருப்பதைக் காட்டுகிறது. இந்த ஆயத்தத்தை அலட்சியம் செய்பவர்கள் வெளியே துரத்தப்படுகிறார்கள். “விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு : சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி : இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம் பான இருளிலே போடுங்கள்” என்றான்.COLTam 312.2

    கிறிஸ்துவின் சீடர்கள் விருந்திற்கான அழைப்பைக் கொடுத் தார்கள். தேவனுடைய இராஜ்யம் சமீபித்திருக்கிறதென்று அறி வித்து, மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசிக்குமாறு மக்களை அழைக்க பன்னிருவரையும், பிறகு எழுபது பேரையும் நமது ஆண்ட வர் அனுப்பியிருந்தார். ஆனால் அழைப்பிற்கு மக்கள் செவி கொடுக்கவில்லை. விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களோ வர வில்லை . பிறகு, “என் விருந்தை ஆயத்தம் பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, கலியாணத்திற்கு வாருங்கள்” என்று அழைக்கும் படி ஊழியர்களை அனுப்பிவைத்தார். கிறிஸ்து சிலுவையிலறையப்பட்ட பிறகு இந்த அழைப்பு யூத தேசத்தாருக் குக் கொடுக்கப்பட்டது. ஆனால் தேவனுடைய விசேஷித்த ஜனங் களெனச் சொல்லிக்கொண்ட அந்தத் தேசத்தார், பரிசுத்த ஆவியின் வல்லமையோடு அறிவிக்கப்பட்ட சுவிசேஷத்தைப் புறக்கணித்தார்கள். மிகவும் ஏளனத்தோடு அதைப் புறக்கணித்தவர்கள் பலர். மற்றவர்களோ இரட்சிப்பின் செய்தியையும், மகிமையின் கர்த்தரை புறக்கணிப்பவர்களுக்கு மன்னிப்பு உண்டு என்கிற செய்தியையும் கேட்டு கடும் எரிச்சலடைந்து, செய்தியை அறிவித்தவர்களுக்கு எதிராகத் திரும்பினார்கள். அப்பொழுது மிகுந்த துன்பம் உண்டா யிற்று.” அப் 8:1. ஆண்களிலும் பெண்களிலும் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஸ்தேவான், யாக்கோபு உட்பகர்த்தருடைய ஊழியர்கள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள்.COLTam 312.3

    இப்படியாக யூதஜனங்கள் தேவனுடைய இரக்கத்தை இறுதி யாகப் புறக்கணித்தார்கள். அதன் விளைவு என்னவென்று உவமை யில் கிறிஸ்து முன்னறிவித்தார். ‘ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலை பாத கரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். யூதர்களுக்கு எதிரான தீர்ப்பினால் தான் எருசலேம் நகரம் அழிந்தது; அத்தேசத்தார் சிதறடிக்கப்பட்டார்கள்.COLTam 313.1

    விருந்தில் கலந்து கொள்ள கொடுக்கப்பட்ட மூன்றாவது அழைப்பு, புறஜாதிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது. ராஜாதன் ஊழியக்காரரை நோக்கி, “கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரமாய்ப் போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச் சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.”COLTam 313.2

    ராஜாவின் ஊழியக்காரர் புறப்பட்டு, ‘வழிச்சந்திகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.” வந்தவர்களில் நல்லோரும் தீயோரும் இருந்தார்கள். அழைப்பைப் புறக்கணித்தவர்கள் போலவே வந்திருந்தவர்களில் சிலரும் விருந்து கொடுத்தவர் மேல் உண்மையில் மரியாதை இல்லாதிருந்தார்கள். அழைப்பை மறுதலித்த முதல் கூட்டத்தார், உலக ஆதாயங்களை விலைகொடுத்து ராஜாவின் விருந்தில் கலந்து கொள்ள முடியாதென நினைத்தார்கள். ஆனால் அழைப்பை ஏற்று வந்தவர்களில் சிலர், தங்களுடைய நலனை எண்ணிதான் வந்திருந்தார்கள். விருந்தை அனுபவிப்பதுதான் எண்ணமே தவிர, ராஜாவைக்கனப்படுத்துகிற விருப்பம் எதுவுமில்லை.COLTam 313.3

    விருந்தினரைப் பார்க்க ராஜா வந்தபோது, அனைவருடைய உண்மையான குணமும் வெளிப்பட்டது. விருந்திற்கு வந்த ஒவ்வொரு விருந்தினருக்கும் கல்யாணவஸ்திரம் ஒன்று வழங்கப்பட்டது. அந்த வஸ்திரத்தை ராஜா பரிசாகக் கொடுத்திருந்தார். அதை அணிந்து, அதன்மூலம் விருந்து கொடுத்தவர் மேலான மரியா தையை விருந்தினர்கள் தெரிவித்தார்கள். ஆனால் ஒருவன் மட்டும் சாதாரண குடிமகனின் ஆடையோடு வந்திருந்தான். ராஜா எதிர் பார்த்த ஆயத்தத்தைத் செய்ய மறுத்திருந்தான். தனக்கு வழங்கப் பட்ட விலைமதிப்புமிக்க ஆடையை அணியாமல் அலட்சியம் செய் தான். அவ்வாறு தன்னுடைய ஆண்டவனை அவமதித்தான். “நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் ” என்று ராஜா கேட்டபோது, பதிலேதும் சொல்லமுடியவில்லை. தான் குற்ற வாளியென அவனே தீர்த்துக்கொண்டான். அப்போது ராஜா, “இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய் .... புறம்பான இருளிலே போடுங்கள் என்று சொன்னான்.”COLTam 313.4

    விருந்துக்கு வந்த விருந்தினர்களை ராஜா ஆராய்ந்தது, நியா யத்தீர்ப்பின் பணியைச் சுட்டிக்காட்டுகிறது. சுவிசேஷ விருந்தில் பங்கெடுக்கும் விருந்தினர்கள் தேவனுக்குச் சேவை செய்பவர் களெனச் சொல்பவர்கள்; ஜீவபுஸ்தகத்தில் தங்கள் பெயர் எழுதப் பட்டவர்கள். ஆனால் தங்களை கிறிஸ்தவர்களெனச் சொல்லும் அனைவருமே மெய்யான சீடர்கள் அல்ல. இறுதி பிரதிபலன் வழங் கப்படுவதற்கு முன், நீதிமான்களின் சுதந்திரத்தில் பங்கெடுக்க தகுதியுள்ளவர்கள் யாரென்பதைத் தீர்மானிக்கவேண்டும். மேகங்களின் மேல் கிறிஸ்து இரண்டாம் முறை வருவதற்கு முன்னர் இந்தத் தீர்மான த்தைச் செய்தாக வேண்டும். ஏனெனில் அவர் வரும்போது “அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு (அவர்) அளிக்கும் பலன்” அவருடனே கூட வருகிறது. வெளி 22:12. எனவே அவர் வருவதற்கு முன்னர், ஒவ்வொரு மனிதனுடைய கிரியையின் தன்மையும் தீர்மானிக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவனுக்கும் அவனுடைய கிரியைகளுக் கேற்ற பலன் வழங்கப்பட்டிருக்கும்.COLTam 314.1

    மனிதர்கள் பூமியில் வாழ்கிற நாட்களில் தானே பரலோக மன்றங்களில் நியாய விசாரணை நடைபெறுகிறது. அவரைப் பின்பற்றுவதாகச் சொல்கிறவர்களின் வாழ்க்கை தேவனுக்கு முன் ஆராயப்படுகிறது. பரலோகப் புத்தங்களின் பதிவின்படி அனை வரும் பரிசோதிக்கப்படுகிறார்கள்; அவனவனுடைய கிரியை களின்படி ஒவ்வொரு மனிதனின் முடிவும் நித்தியமாகத் தீர்மானிக் கப்படுகிறது.COLTam 314.2

    உவமையில் வரும் கலியாண வஸ்திரமானது கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் பெற்றிருக்கவேண்டிய தூய்மையான, கறையற்ற குணத்தைச் சுட்டிக்காட்டுகிறது. திருச்ச பையைப்பற்றி கறைதிரை முதலானவைகள் ஒன்றுமில்லாமல்” “சுத்தமும் பிரகாசமுமானமெல்லிய வஸ்திரம் ” தரித்திருக்க வேண்டு மெனச் சொல்லப்படுகிறது. எபே 5:27; வெளி 19:8. வேதவாக் கியத்தின்படி அந்த மெல்லிய வஸ்திரம், ” பரிசுத்தவான்களுடைய நீதி” என்று வேதாகமம் சொல்கிறது. வெளி 19:8. கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிற ஒவ்வொருவருக்கும் அவருடைய பழுதற்ற குணமான நீதியானது விசுவாசத்தின் மூலம் அருளப்படுகிறது.COLTam 315.1

    தேவன் நம் முதல் பெற்றோரைச் சிருஷ்டித்து, பரிசுத்த ஏதேனில் வைத்திருந்த சமயத்தில், மாசற்ற அந்த வெண்வஸ்திரத்தை அவர்கள் அணிந்திருந்தார்கள். தேவனுடைய சித்தத்திற்கு முழு வதும் இசைந்து வாழ்ந்தார்கள். தங்களுடைய முழுப்பெலத்தோடும் தங்களுடைய பரலோகப் பிதாவின் மேல் பற்றுவைத்திருந்தார்கள். தேவனுடைய வெளிச்சமான, சௌந்தர்யமிக்க ஒரு மெல்லிய வெளிச்சம் அந்தப் பரிசுத்த தம்பதியரைச் சூழ்ந்திருந்தது. அதுதான் ஒளியின் வஸ்திரம் ; பரலோகப் பரிசுத்தமாகிய ஆவிக்குரிய வஸ் திரத்திற்கு அது அடையாளமாக இருந்தது. அவர்கள் தேவனுக்கு உண்மையாக இருந்திருந்தால், எப்போதும் அவர்களைச் சூழ்ந்து காணப்பட்டிருக்கும். ஆனால் பாவம் செய்ததுமே, தேவனுடனான தங்களுடைய தொடர்பைத் துண்டித்தார்கள்; அவர்களைச் சூழ்ந்திருந்த வெளிச்சம் அவர்களை விட்டு நீங்கியது. நிர்வாணம் வெட் கத்தைக் கொடுத்தது ; பரலோக வஸ்திரமிருந்த இடத்தில் அத்தி இலைகளைத் தைத்து தங்களை மூடிக்கொள்ள முயன்றார்கள்.COLTam 315.2

    ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் போன நாள் முதல், தேவ னுடைய பிரமாணத்தை மீறுகிறவர்கள் இதைத்தான் செய்துவரு கிறார்கள். மீறுதலால் ஏற்படுகிற நிர்வாணத்தை மறைக்க அத்தி இலைகளைத் தைத்துக்கொள்கிறார்கள். தாங்களே வடிவமைத்த வஸ்திரத்தை அணிகிறார்கள்; தங்களுடைய சுயகிரியைகளால் தங்களுடைய பாவங்களை மூடி, தேவனுக்கு பிரியமுள்ளவர் களாக்க முயல்கிறார்கள்.COLTam 315.3

    ஆனால் அப்படி ஒரு போதும் நடக்காது. மனிதன் இழந்து போன பரிசுத்த வஸ்திரத்திற்கு பதிலாக அவன் எதையுமே வடிவமைக்க முடியாது. அத்தி இலை வஸ்திரத்தையோ, சாதாரண மனித வஸ்திரத்தையோ அணிந்து, ஆட்டுக்குட்டியானவரின் கலி யாண விருந்தில் கிறிஸ்துவோடும் தூதர்களோடும் உட்காரமுடியாது.COLTam 315.4

    கிறிஸ்துதாமே கொடுத்திருக்கிற வஸ்திரம் தான் தேவனுடைய பிரசன்னத்தில் நிற்பதற்கு நம்மைத் தகுதிப்படுத்துகிறது. மனந்திரும்பி, விசுவாசிக்கிற ஆத்துமாவுக்கு தம்முடைய சொந்த நீதி யாகிய இந்த வஸ்திரத்தை கிறிஸ்துதாமே தரிப்பார். ‘உன் நிர்வாண மாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும். உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்” என்று சொல்கிறார். வெளி 3:18.COLTam 316.1

    பரலோகத்தில் நெய்யப்பட்ட இந்த வஸ்திரத்தில் மனிதன் வடி வமைத்த ஒரு நூல் கூட இருக்காது. கிறிஸ்து மனிதனாக வாழ்ந்த போது பரிபூரண குணமுள்ளவராக நடந்துகொண்டார். அந்தக் குணம் நம் கணக்கில் எண்ணப்பட அவர் முன் வந்திருக்கிறார். “எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது.’” ஏசா 64:6. நாமாகவே நாம் செய்கிற எதுவும் பாவத்தால் தீட்டுப்பட்டிருக்கும். ஆனால், நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க ” மனுஷகுமாரன் வெளிப்பட்டார். “நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.’‘1யோவான் 3:5,4. ஆனால் நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு கட்டளைக்கும் கிறிஸ்து கீழ்ப்படிந்தார். தம்மைப் பற்றி அவர், “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார். சங்கீதம் 40:8. அவர் பூமி யில் வாழ்ந்தபோது, தமது சீடர்களிடம், “நான் என் பிதாவின் கற் பனைகளைக் கைக்கொண்(டேன்)” என்று சொன்னார். யோவான் 15:10. தேவனுடைய கற்பனைகளுக்கு அவர் முற்றிலுமாகக் கீழ்ப் படிந்து, ஒவ்வொரு மனிதனும் அவற்றிற்குக் கீழ்ப்படிவதைச் சாத் தியமாக்கியிருக்கிறார். நாம் கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக் கும்போது, அவருடைய இருதயத்தோடு நம் இருதயம் ஐக்கியமாகிறது; அவருடைய சித்தத்தோடு நம் சித்தம் இணைகிறது; அவருடைய சிந்தையோடு நம் சிந்தை ஒன்றாகிறது; நம்முடைய எண்ணங்கள் அவருக்குள் கட்டுப்படுகின்றன; அவர் வாழ்ந்த பிரகாரமே வாழ்கிறோம். அவருடைய நீதியின் வஸ்திரத்தைத் தரிப்பதின் அர்த்தம் இதுதான். அப்போது ஆண்டவர் நம்மைப் பார்க்கும் போது, அத்தி இலை வஸ்திரத்தை அல்ல, பாவத்தின் நிர்வாணத்தையும் சீர்கேட்டையும் அல்ல, யெகோவாவின் பிரமாணங்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிதலாகிய தம்முடைய சொந்த நீதியின் வஸ்திரத்தைப் பார்ப்பார்.COLTam 316.2

    கலியாண விருந்தில் கலந்து கொண்ட விருந்தினர்களை ராஜா பரிசோதித்தார். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, கலியாண வஸ்திரத்தை தரித்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக் கப்பட்டார்கள். சுவிசேஷ விருந்தில் கலந்துகொள்ளும் விருந்தினர் களின் நிலையும் இதுதான். இராஜாதிராஜாவின் விசாரணையில் நல்ல தீர்ப்பைப் பெற்றாக வேண்டும். கிறிஸ்துவினுடைய நீதியின் வஸ்திரத்தைத் தரித்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள்.COLTam 317.1

    நீதி என்றால் சரியானதைச் செய்வது. எனவே அனைவரும் அவரவருடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்படுவார்கள். நாம் செயல்படுகிற விதம்தான் நம் குணங்களை வெளிப்படுத்து கின்றன. விசுவாசம் மெய்யானதா என்பதை கிரியைகள் காட்டு கின்றன.COLTam 317.2

    இயேசு மோசடி செய்பவர் அல்லவென்றும், வேதாகம மார்க் கம் தந்திரமாகப் புனையப்பட்ட கட்டுக்கதை அல்லவென்றும் நம்பி னால் மட்டும் போதாது. மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு பூமியின் கீழ் இயேசுவின் நாமமே அல்லாமல் வேறே நாமம் கட்டளையிடப் படவில்லை என்று நம்பினாலும் கூட, விசுவாசத்தினால் அவரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். சாத்தி யத்தை விசுவாசித்தால் மட்டும் போதாது. கிறிஸ்துவின் மேல் விசுவாசம் இருப்பதாகச் சொல்லி, சபை பதிவேட்டில் நம் பெயர்களைப் பதிவு செய்தால் மட்டும் போதாது. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.” “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களா னால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். ‘‘ 1யோவான் 3:24; 2:3. மனமாற்றத்திற்கான மெய்யான ஆதாரம் இதுதான். நாம் எவ்வளவு பேசினாலும், நீதியின் கிரியைகளில் கிறிஸ்து வெளிப்படாவிட்டால், அதனால் பிரயோஜனம் ஒன்று மில்லை .COLTam 317.3

    சத்தியம் இருதயத்திலே ஊன்றப்படவேண்டும். அது நமது சிந்தையைக் கட்டுப்படுத்தி, உணர்வுகளை ஒழுங்குபடுத்த வேண்டும். ஒட்டுமொத்த குணம் தேவவார்த்தைகளால் முத்திரிக்கப்பட்டிருக்க வேண்டும். தேவ வார்த்தையின் சிறு எழுத்தின்படியும், எழுத்தின் உறுப்பின்படியம் நம் அனுதின வாழ்வில் வாழவேண்டும்.COLTam 318.1

    தெய்வீக சுபாவத்தில் பங்குபெறுகிறவர், உயரந்தபட்ச நீதி யாக தேவனுடைய நீதியாகிய அவருடைய பரிசுத்த பிரமாணத்திற்கு இசைந்து வாழுவார். இதை அளவு கோலாக வைத்தே மனிதர்களுடைய செயல்களை தேவன் அளவிடுகிறார். இதன் அடிப்படையில் தான் நியாயத்தீர்ப்பில் குணம் சோதித் தறியப்படும்.COLTam 318.2

    கிறிஸ்து மரணத்தால் நியாயப்பிரமாணமும் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அநேகர் சொல்கிறார்கள்; ஆனால் கிறிஸ்து சொல்லி யிருப்பவைகளுக்குதாமே இவர்கள் முரணாகப் பேசுகிறார்கள். “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் .... வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது.” மத்தேயு 5:17,18. நியாயப்பிரமாணத்தை மனிதன் மீறின பாவத்திற்குப் பரி காரம் செய்யவே கிறிஸ்து தமது ஜீவனைக் கொடுத்தார். நியாயப் பிரமாணத்தை மாற்றவோ ஒதுக்கவோ கூடுமானால், கிறிஸ்து மரித் திருக்கவேண்டிய அவசியமில்லை . கிறிஸ்து தமது ஜீவியநாட் களிலே தேவனுடைய பிரமாணத்தை கனப்படுத்தினார். தமது மர ணத்தின் மூலமாக அதை நிலைப்படுத்தினார். கிறிஸ்து தியாகப்பலி யாக தம் ஜீவனைக் கொடுத்தார். தேவனுடைய பிரமாணத்தை அழிப்பதற்கா? அதன் தரத்தைக் குறைப்பதற்கா? இல்லை. நியா யத்தை நிலைநாட்டவும், நியாயப்பிரமாணம் மாற்ற இயலாதது என் பதைக் காட்டவும், அது என்றென்றும் நிலைத்திருகக் கூடியது என் பதைக் காட்டவும் அவர் மரித்தார்.COLTam 318.3

    தேவனுடைய கற்பனைகளுக்கு மனிதன் கீழ்ப்படிவது சாத் தியமல்ல என்று சாத்தான் சொல்லிவந்தான். நம்முடைய பெலத்தால் கீழ்ப்படிய முடியாது என்பது உண்மைதான். ஆனால் கிறிஸ்து மனி தனாகவந்தார், கற்பனைகளுக்கு அவர் முற்றிலுமாகக் கீழ்ப்படிந்து, தேவனோடு மனிதன் கைதோர்த்தால் தேவனுடைய ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிய முடியும் என்பதை நிரூபித்தார்.COLTam 318.4

    “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.’” யோவான் 1:12. எந்த மனிதனும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கமுடியாது. இது தேவனுடைய அதிகாரம். ஓர் ஆத்துமாகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, கிறிஸ்துவைப் போல வாழ்வதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறது.COLTam 319.1

    தம்முடைய பிள்ளைகள் பூரணர்களாக விளங்க தேவன் எதிர் பார்க்கிறார். அவருடைய குணமானது எழுத்து வடிவில் சொல்லப் பட்டிருப்பதே அவருடைய பிரமாணம். அனைத்து குணத்திற்கும் அதுவே அளவுகோல் . தேவனுடைய ராஜ்யத்தில் பங்கடைபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் உண்டாகாதபடிக்கு, இந்தப் பூரணமான அளவு கோலை அனை வருக்கும் கொடுத்திருக்கிறார். கிறிஸ்து இப்பூமியில் ஜீவித்த நாட் களில், தேவனுடைய பிரமாணத்தை பரிபூரணமாக வெளிப்படுத்தி னார். தேவனுடைய பிள்ளைகளெனச் சொல்லிக்கொள்வோர் கிறிஸ்துவைப்போன்ற குணமுடையவர்களாக மாறும் போது, தேவ னுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவார்கள். அப்போது பர லோகக் குடும்பத்தில் ஒருவராக அவர்கள் எண்ணப்படுவதற்கு தேவன் அவர்களை நம்பமுடியும். கிறிஸ்துவின் நீதி எனும் மகிமை மயான வஸ்திரத்தைத் தரித்து, ராஜாவின் விருந்தில் கலந்துகொள் ளும் பாக்கியத்தைப் பெறுவார்கள். இரத்தத்தால் கழுவப்பட்ட கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்ளும் உரிமையைப் பெறுவார்கள்.COLTam 319.2

    கலியாண வஸ்திரமில்லாமல் விருந்துக்கு வந்த மனிதனுடைய நிலைதான் இன்று உலகத்தில் அநேகரிடம் காணப்படுகிறது. தாங்கள் கிறிஸ்தவர்களென்றும் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களும், சலுகைகளும் தங்களுக்குத்தான் உரியவை என்றும் உரிமை பாராட்டு கிறார்கள். ஆனால், குணமாற்றத்தின் அவசியத்தை அவர்கள் உணர்வதில்லை. பாவத்திலிருந்து மெய்யாக மனந்திரும்ப வேண்டியதை உணர்வதில்லை. கிறிஸ்து தங்களுக்குத் தேவை அல்லது அவரை விசுவாசிக்க வேண்டியது தேவை என்பதை உணர்வதில்லை. பரம்பரை வழியாக வந்த அல்லது தாங்களே வளர்த்துக் கொண்ட பாவச்செய்கைகளை மேற்கொள்வதில்லை. ஆனாலும் தங்களில் தாங்களே நல்லவர்களென்று நினைக்கிறார்கள், கிறிஸ் துவை நம்புவதற்கு பதிலாக தங்களுடைய சொந்த புண்ணியங்களைச் சார்ந்திருக்கிறார்கள். வார்த்தைகளைக் கேட்டு விருந்துக்கு வரு கிறார்கள்; ஆனால் கிறிஸ்துவின் நீதி எனும் வஸ்திரத்தைத் தரிக் காதிருக்கிறார்கள்.COLTam 319.3

    கிறிஸ்தவர்களெனச் சொல்லும் அநேகர் வெறுமனே மனித நன்னடத்தையாளர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவை உலகத்திற்குப் பிரதிபலித்து, அதன்மூலம் அவரைக்கனப்படுத்த உதவுகிற ஒரே ஈவை மறுதலித்து விடுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களுக்கு விசித்திரமாக இருக்கிறது. வார்த்தையின்படி செய்வதில்லை. கிறிஸ்துவோடு இசைந்திருப்பவர்களையும் உல கத்தோடு இசைந்திருப்பவர்களையும் வேறுபடுத்திக்காட்டுகிற பர லோகக் கொள்கைகள் வேறுபடுத்த முடியாத நிலைக்கு உள்ளா கின்றன. கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்வோர் அவருக் கென வாழ்கிற, விசேஷித்த மக்களாகக் காணப்படுவதில்லை. அவர்களை வேறுபடுத்திக் காட்டும் கோடு தெளிவாகத் தெரிவதில்லை. மக்கள் தங்களை உலகத்தின் நடத்தைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் சுயநலத்திற்கும் கீழ்ப்படுத்துகிறார்கள். உலகமான து பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதில் திருச்சபையைப் போல மாறுவதற்கு பதிலாக, நியாயப்பிரமாணத்தை மீறுவதில் சபை உலகத்தைப் போல மாறிவிட்டது. அனுதினமும் சபையானது உலகத்தைப் போல மாறிவருகிறது.COLTam 320.1

    கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் இரட்சிக்கப்பட விரும்புகிற வர்கள், அவரைப்போல சுயத்தை மறுத்து வாழ்வதற்கு முன்வருவதில்லை. இலவச கிருபை யின் ஐசுவரியங்களை புகழ்ந்து பேசி, தங்களை நீதிமான்கள் போலக் காட்ட முயற்சித்து, அதன்மூலம் தங்களுடைய குணக்குறைபாடுகளை மறைத்துக்கொள்ள நினைக் கிறார்கள். ஆனால் தேவனுடைய நாளில் அவர்களுடைய முயற் சிகள் அனைத்துமே வீணாயிருக்கும்.COLTam 320.2

    விருப்பத்தோடு செய்து வருகிற ஒரு பாவத்தைக்கூட கிறிஸ்து வின் நீதி மூடாது. ஒருவன் வெளிப்படையாக கட்டளைகளை மீறா மல் இருக்கலாம்; ஆனால் உள்ளத்தில் அதை மீறிக்கொண்டிருப் பான்; அவனை பெரிய உத்தமனென்று உலகம் எண்ணிக்கொண்டிருக்கும். ஆனால் தேவனுடைய பிரமாணம் இதயத்தின் இரகசியங்களை ஆராய்கிறது. ஒவ்வொரு செயலும் அதற்கு பின்னாலுள்ள நோக்கத்தை வைத்தே நியாயந்தீர்க்கப்படுகிறது. தேவனுடைய பிரமாணத்தின் நியதிகளுக்கு ஒத்துப்போகிற செயல் மட்டுமே நியாயத்தீர்ப்பில் குற்றந்தீர்க்கப்படாது.COLTam 320.3

    தேவன் அன்பாக இருக்கிறார். கிறிஸ்துவை ஈவாகக் கொடுத்து, அந்த அன்பைக் காட்டியிருக்கிறார். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” அவர் கிரயத்திற்கு வாங்கின சொத்துக்கள் நாம்; நமக்குத் தராமல் எதையும் அவர் வைக்கவில்லை . யோவான் 3:16. பரலோகம் முழு வதையுமே தந்துவிட்டார்; அதிலிருந்து நாம் பெலத்தையும் ஆற்ற லையும் பெறலாம். அப்போதுதான் சாத்தான் நம்மை முறியடிக்க அல்லது வெற்றிக்கொள்ள முடியாது. தேவன் அன்பாக இருப்ப தால், பாவத்தை அவர் கண்டுகொள்லாமல் விடுவதில்லை. சாத் தான் பாவம் செய்தபோதும் அவர் கண்டு கொள்ளாமல் விட வில்லை . ஆதாம் அல்லது காயீன் பாவம் செய்தபோதும் அப்படித் தான். மனுபுத்திரர் எவருடைய பாவத்தையும் அவர் கண்டுகொள் ளாமல் விடமாட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்கு உடந்தை யாக இருக்கமாட்டார்; அல்லது நமது குணக்குறைபாடுகளை காணாமல் விடவும் மாட்டார். அவருடைய நாமத்தால் நாம் ஜெயங் கொள்ள அவர் விரும்புகிறார்.COLTam 321.1

    கிறிஸ்துவின் நீதி எனும் ஈவைப் புறக்கணிப்பவர்கள், தங்களை தேவனுடைய குமாரரும்குமாரத்திகளுமாகவிளங்கச் செய்கிற குணப்பண்புகளைப் புறக்கணிக்கிறார்கள். கலியாண விருந்தில் கலந்து கொள்ள தங்களைத் தகுதிப்படுத்த வல்ல அந்த ஒரே ஈவை மறுதலிக்கிறார்கள்.COLTam 321.2

    அந்த உவமையில், ‘நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் ” என்று ராஜா அந்த மனிதனிடம் கேட்ட போது, அவன் பேசாமலிருந்தான். இதுபோலத்தான் மகாநியாயத் தீர்ப்பின் நாளிலும் நடைபெறும். தங்களிடம் எந்தக் குணக்குறை பாடும் இல்லையென மனிதர்கள் இப்போது சொல்லலாம்; ஆனால் அந்த நாளில் அவர்கள் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லமுடியாது.COLTam 321.3

    இன்றைய தலைமுறையின் கிறிஸ்தவ சபைகள் மிகுந்த சிலாக் கியங்களைப் பெற்றுள்ளன. கர்த்தரைக்குறித்து அதிகப்படியான வெளிச்சம் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. ஆதிகால தேவ ஜனங்கள் பெற்றிருந்த சிலாக்கியங்களைவிட நாம் அதிக அளவில் பெற்றிருக்கிறோம். இஸ்ரவேலருக்கு வழங்கப்பட்ட மாபெரும் வெளிச்சத்தை மட்டும் நாம் பெற்றிருக்கவில்லை; கிறிஸ்துமூலமாக நமக்குக் கிடைக்கும் இரட்சிப்பைக் குறித்து கூடுதலான ஆதாரத்தையும் பெற்றிருக்கிறோம். யூதர்களுக்கு நிழலாகவும் அடையாள மாகவும் கொடுக்கப்பட்டவை நமக்கு நிஜமாக வழங்கப்பட்டுள் ளன. அவர்கள் பழைய ஏற்பாட்டு வரலாற்றை மட்டுமே பெற்றிருந்தார்கள்; நமக்கு அதுவும் புதிய ஏற்பாடும் வழங்கப்பட்டுள்ளன. இந்த உலகிற்கு வந்து, சிலுவையில் அறையுண்டு, உயிர்த்தெழுந்து, திறவுண்ட யோசேப்பின் கல்லறையின் மேல் நின்று, ‘நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அறிவித்த இரட் சகரைக் குறித்த நிச்சயம் நமக்கு அருளப்பட்டுள்ளது. கிறிஸ்துவையும், அவருடைய அன்பையும் அறிவதால், தேவ இராஜ்யம் நம் மத்தியில் ஸ்தாபிக்கப்படுகிறது. பிரசங்கங்கள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் கிறிஸ்துவை அறிகிறோம். சகலமும் ஆயத்தமாக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய விருந்து நமக்கு முன்வைக் கப்பட்டுள்ளது. கணக்கிடமுடியாத விலை கொடுத்து வாங்கப்பட்ட கலியாண வஸ்திரம் இலவசமாக ஒவ்வோர் ஆத்துமாவுக்கும் அரு ளப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நீதி, விசுவாசத்தின் மூலம் நீதிமான் களாக்கப்படுதல், தேவ வார்த்தையின் மகா மேன்மையும் அருமை யான வாக்குத்தத்தங்கள், கிறிஸ்து மூலமாக பிதாவின் சமூகத்தில் பிரவேசிக்கும் சிலாக்கியம், பரிசுத்த ஆவியானவரின் ஆறுதல், தேவனுடைய ராஜ்யத்தில் நித்தியமாக வாழ்வது குறித்த ஆணித்தர ரன ஆதாரம் ஆகியவை பற்றி தேவ ஊழியர்கள் நமக்கு அறிவிக் கிறார்கள். மாபெரும் விருந்தாகிய பரலோக விருந்தில் நாம் கலந்து கொள்வதற்கு அவர் செய்திராத வேறு எதை அவர் நமக்காகச் செய்யமுடியும்?COLTam 321.4

    பரலோகத்தில் பணிவிடை தூதர்கள் பின்வருமாறு சொல்வார்கள்: நம்முடைய ஊழியக்கட்டளையை நாம் செய்து முடித்து விட் டோம். தீய தூதர்களின் சேனையை பின்வாங்கச் செய்தோம். தேவ னுடைய அன்பு இயேசு மூலமாக வெளிப்பட்டதை ஜனங்கள் புரிந்துகொள்ளும்படி, அவர்களுடைய ஆத்துமாக்களில் வெளிச் சம் வீசி, பிரகாசமடையச் செய்தோம். கிறிஸ்துவின் சிலுவையால் அவர்களுடைய கண்கள் கவரப்படச் செய்தோம். தேவ குமாரனை சிலுவையில் அறையச் செய்த பாவம் குறித்த உணர்வால் இருதயத்தில் மிகுந்த தாக்கமடைந்தார்கள். தாங்கள் குற்றவாளிகளென உணர்ந்தார்கள். மனந்திரும்புவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகளை உணர்ந்தார்கள்; சுவிசேஷத்தின் வல்லமையை உணர்ந்தார்கள்; தேவ அன்பின் இனிமையை உணர்ந்தபோது, அவர்களுடைய இதயங்கள் மென்மையாயின. கிறிஸ்துவினுடைய குணத்தின் அழ கைக் கண்டார்கள். ஆனாலும் அநேகருக்கு இவை அனைத்தும் பயனற்றதாக இருந்தன. தங்களுடைய பழக்க வழக்கங்களையும் குணங்களையும் விட்டுவிட விரும்பவில்லை. பரலோக வஸ்திரம் தங்கள் மேல் தரிக்கப்படும்படி, பூலோகவஸ்திரத்தை எறிந்து போட விரும்பவில்லை. தங்களுடைய இருதயங்களில் இச்சைக்கு இடங் கொடுத்தார்கள். தங்களுடைய தேவனை நேசிப்பதைப் பார்க்கிலும் அவர்கள் உலகத்தின் பழக்கவழக்கங்களை அதிகமாக நேசி த்தார்கள்.COLTam 322.1

    இறுதி தீர்மானத்தின் நாள் மிகப்பயங்கரமானதாக இருக்கும். தரிசனத்தில் கண்ட காட்சியை அப்போஸ்தலனாகிய யோவான் பின்வருமாறு விவரிக்கிறார்: ‘பின்பு, நான் பெரிய வெள்ளைச் சி ங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்று போயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சி றியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன ; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” வெளி. 20:11,12.COLTam 323.1

    நித்தியத்தை நேருக்கு நேராகச் சந்திக்கிற அந்த நாளில் தங்கள் கடந்தகால நினைவுகளால் மனிதர்கள் வருத்தமடைவார்கள். அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் அப்படியே காட்டப் படும். உலக சிற்றின்பங்களும், ஐசுவரியங்களும், மேன்மைகளும் அப்போது அவர்களுக்கு முக்கியமானவையாகத் தெரியாது. தாங்கள் அவமதித்த நீதி மட்டுமே முக்கியமானதெனக் கண்டு கொள் வார்கள். சாத்தானுடைய வஞ்சகமான மருட்சிகளில் சிக்குண்டு, அதற்கேற்றபடி தங்களுடைய குணங்களை வளர்த்திருப்பதைக் காண்பார்கள். தாங்கள் தெரிந்து கொண்ட வஸ்திரங்கள், முதல் பெரிய தேவதுரோகிக்கு தாங்கள் பற்றுள்ளவர்களாக இருப்பதற் கான அடையாளச்சின்னங்கள் என்பதை அறிவார்கள். தங்களுடைய தீர்மானத்தின் விளைவுகளைச் சந்திப்பார்கள். தேவனுடைய கட்டளைகளை மீறுவதின் பலன் என்னவென்பது அப்போது அவர்களுக்குப் புரியும்.COLTam 323.2

    நித்தியத்திற்கு ஆயத்தப்படுவதற்காக இனியொரு தவணை யின் காலம் கிடையாது. இந்த வாழ்க்கையில் தானே கிறிஸ்து வினுடைய நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ள வேண்டும். தம் முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களுக்கு கிறிஸ்து ஆயத் தம் செய்துள்ள வீட்டில் பிரவேசிப்பதற்கு ஏற்ற குணங்களை உரு வாக்கும் படி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒரே வாய்ப்பு இது தான்.COLTam 324.1

    தவணையின் காலம் வேகமாக முடிவை நெருங்கி வருகிறது. முடிவு சமீபமாயிருக்கிறது. உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியி னாலும் வெறியினாலும் லவுகீககவலைகளினாலும் பாரமடையாத படிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” என்று எச்சரிக்கப்படு கிறோம். லூக்கா 21:34. கலியாண வஸ்திரமில்லாதவர்களா ராஜா வின் விருந்தில் நீங்கள் காணப்படாதபடிக்கு எச்சரிக்கையா யிருங்கள்.COLTam 324.2

    ‘நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். ‘“தன்மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன்வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.” மத்தேயு 24:44; வெளி 16:15.COLTam 324.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents