25 - தாலந்துகள்
கிறிஸ்து தாம் இரண்டாம் முறை உலகத்திற்கு வரப்போவது பற்றி ஒலிவமலையில் சீடர்களிடம் சொன்னார். அவருடைய வருகை நெருங்கும் போது காணப்படக்கூடிய சில அடையாளங்களையும் சுட்டிக்காட்டி, தமது சீடர்களிடம் விழிப்போடு ஆயத்த மாக இருக்கும் படி கூறினார். “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமா யிருங்கள்” என்று மீண்டும் எச்சரித்தார். தம்முடைய வருகையை விழிப்புடன் எதிர்பார்த்திருப்பதின் அர்த்தம் பற்றிச் சொன்னார். அதாவது, சோம்பலோடு காத்திருக்காமல், கருத்தோடு பிரயாசப் படவேண்டும். தாலந்துகள் பற்றிய உவமையில் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தார்.COLTam 325.1
“அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்தது போல் இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.”COLTam 325.2
புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற மனுஷன் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறான். இந்த உவமையை அவர் சொல்லும் சமயத்தில், அவர் உலகத்தை விட்டு பரலோகத்திற்குச் செல்கிற நாள் நெருங்கியிருந்தது. உவமையில் வரும் ஊழியக்காரர்கள் அல்லது அடிமைகள் என்பது கிறிஸ்துவைப்பின்பற்றுகிறவர்களைக் குறிக்கிறது. நாம் நமக்குச் சொந்தமல்ல. “நாம் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டுள்ளோம்.” 1கொரி 6:20. “அழிவுள்ள வஸ்துக் களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல் .... கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட் டோம்.” 1 பேதுரு 1:18,19. ” பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக் கென்று பிழைத்திருக்கிறார்கள்.’‘2 கொரிந்தியர் 5:15.COLTam 325.3
மனிதர்கள் அனைவருமே ஈடு இணையற்ற விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளார்கள். பரலோகத்தின் ஒட்டுமொத்த களஞ்சியத்தையும் இந்தப் பூமியில் வருஷித்து, கிறிஸ்துவில் பரலோகம் முழுவதையும் நமக்குத் தந்து, ஒவ்வொரு மனிதனின் சி த்தத்தையும், பற்றுகளையும், சிந்தையையும், ஆத்துமாவையும், உணர்வையும் தேவன் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். விசு வாசிகளானாலும் அவிசுவாசிகளானாலும் எல்லாருமே கர்த்தருக் குச் சொந்தமானவர்கள். அனைவரும் அவருக்குச் சேவை செய்ய அழைக்கப்பட்டுள்ளார்கள். இந்த அழைப்பை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்று மகா நியாயத்தீர்ப்பின் நாளிலே அனைவரும் கணக்கு கொடுத்தாக வேண்டும்.COLTam 326.1
ஆனால் தேவன் இவ்வாறு உரிமை கோருவதை எல்லாருமே உணர்ந்து கொள்வதில்லை. கிறிஸ்துவின் சேவையை ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறவர்கள், இந்த உவமையிலே அவரது ஊழியக்காரர்களாகச் சுட்டிக்காட்டப்படுகிறார்கள்.COLTam 326.2
கிறிஸ்துவைப்பின்பற்றுகிறவர்கள் அவருக்குச் சேவை செய்ய மீட்கப்பட்டுள்ளார்கள். வாழ்க்கையின் மெய்யான நோக்கம் ஊழியம் என்று நம் ஆண்டவர் கற்றுக்கொடுக்கிறார். கிறிஸ்துதாமே ஊழியம் செய்கிறவராக இருந்தார். தம்மைப் பின்பற்றுகிற அனைவருக்கும் ஊழியக்கட்டளையைக் கொடுக்கிறார்; அதாவது தேவனுக்கும் சகமனிதர்களுக்கும் சேவை செய்வது. வாழ்க்கை குறித்து இதுவரை அறிந்திராத ஒரு மேலான கருத்தை கிறிஸ்து இங்கு சொல்லியிருக்கிறார். பிறருக்கு ஊழியம் செய்து வாழும் போது, கிறிஸ்துவோடு மனிதனுக்கு ஐக்கியம் உண்டாகிறது. தேவனோடும் மனிதனோடும் நம்மை இணைக்கற சங்கிலியாக ஊழியக்கட்டளை மாறுகிறது.COLTam 326.3
கிறிஸ்து தமது ஊழியர்களிடம் தமது ” ஆஸ்திகளை ” ஒப்பு விக்கிறார். அவருக்காக அவற்றைப் பயன்படுத்தவேண்டும். “அவனவனுக்கு தன் தன் வேலையை நியமிக்கிறார்.” பரலோகத்தின் நித்திய திட்டத்திலே அவனவனுக்கு ஓர் இடமுண்டு. ஆத்து மாக்களின் இரட்சிப்பிற்காக அவனவன்கிறிஸ்துவோடு ஒத்துழைத் துப் பணியாற்ற வேண்டும். பரலோக வாசஸ்தலங்களில் நமக்காக ஓரிடம் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது எவ்வளவு நிச்சயமோ, அது போல தேவனுக்காக ஊழியம் செய்யும்படி ஒரு விசேஷித்த இட மாக இந்தப் பூமி நியமிக்கப்பட்டுள்ளதும் நிச்சயம்.COLTam 327.1