Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பயன்படுத்துவதால் விருத்தியடையும் தாலந்துகள்

    தாலந்துகளைப் பயன்படுத்தும்போது அவை விருத்தியடை கின்றன. எதேச்சையாக அல்லது தற்செயலாக வெற்றி கிடைத்து விடாது. தேவனுடைய வழிநடத்துதலாலும், விசுவாசம் மற்றும் பகுத்தறிவுக்கு பரிசாகவும், நல்லொழுக்கம் மற்றும் விடாமுயற் சியின் பிரதிபலனாகவும் வெற்றி கிடைக்கிறது. நம்மிடமுள்ள ஒவ்வொரு ஈவையும் நாம் பயன்படுத்த தேவன் விரும்புகிறார். அவ்வாறு செய்தால், இன்னும் மேலான வரங்கள் நமக்கு அருளப்படும். நம்மிடம் இல்லாத தகுதிகளை அசாதாரணமான விதத்தில் அவர் அருளுவதில்லை. மாறாக, நம்மிடமுள்ளதை நாம் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு மனத்திறனையும் பலப்படுத்தி பெருகச்செய்ய அவர் நம்மோடு செயல்படுவார். எஜமானரின் சே வைக்காக முழுமனதோடும் ஊக்கமான அர்ப்பணிப்போடும் நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் நம் ஆற்றல்களை அதிகரிக்கும். பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கின்ற கருவிகளாக நம்மை நாமே ஒப்புக்கொடுக்கும் போது, முந்தைய நாட்டங்களை விட்டு விடவும், பழைய நடவடிக்கைகளை மேற் கொண்டு புதிய பழக்கங்களை உருவாக்கவும் தேவகிருபை நம்மில் செயல்படுகிறது. ஆவியானவரின் உந்துதல்களை நாம் மதித்து, அவற்றிற்குக் கீழ்ப் படியும் போது, அவரது வல்லமையை அதிகமதிகமாக நாம் பெற்றுக்கொள்ளவும், அதிகமான நன்மைகளைச் செய்யவும் நமது மனம் விருத்தியடைகிறது. செயலற்றிருக்கும் திறன்கள் விழிப்படைகின் றன. முடங்கிப்போன மனத்திறன்கள் புத்துயிர் அடைகின்றன.COLTam 357.1

    தேவனுடைய அழைப்பிற்கு கீழ்ப்படியும் ஒரு தாழ்மையான ஊழியன் தெய்வீக உதவியை நிச்சயம் பெறுவான். அத்தகைய பெரிதும் பரிசுத்தமுமான ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்வது தானே குணத்தை மேம்படுத்த உதவும். மேலான மன - ஆவிக்குரிய திறன்களை செயல்படத் தூண்டி, மனதையும் இதயத்தையும் பெலப்படுத்தி, சுத்திகரிக்கும். தேவவல்லமையில் விசுவாசம் வைப்பதால், பெலவீன்ன் பெலவானாக மாறுவதும், தன் முயற்சி களில் திடமனதோடு விளங்குவதும், மாபெரும் பலன்களைப் பெறுவதும் அற்புத அனுபவம். முதலில் குறைந்த அறிவுள்ளவனாக இருக்கும் போது, தனக்குத் தெரிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டும், அதே சமயத்தில், அதிகமான அறிவைப் பெற்றுக்கொள்ள கருத்தோடு பிரயாசப்படுகிறவன், பரலோகப் பொக்கிஷம் முழுவதும் தனக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள் வான். எவ்வளவுக்கு அதிகமாக பிறருக்கு வெளிச்சத்தைக் காட்ட முயல்கிறானோ, அவ்வளவுக்க அதிகமாக வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வான். ஆத்துமாக்களின் மேலான அன்பால் தேவ வார்த் தையை அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயலும் போது, அதிகமாக அதைக்குறித்த தெளிவைப் பெறுவான். நாமும் அதிகமாக நம்முடைய அறிவைப் பயன்படுத்தி, நம் ஆற்றல்களை உபயோகிக்கும் போது, அதிக அறிவையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்வோம்.COLTam 357.2

    கிறிஸ்துவுக்காக நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் நமக்கே ஆசீர்வாதமாக முடியும். நம்முடைய வசதிவாய்ப்புகளை அவருடைய மகிமைக்காக நாம் பயன்படுத்தும்போது, நம்மை அதிகமாக அவர் ஆசீர்வதிப்பார். ஆத்துமாக்கள் மேலான பாரத்தால் நாம் ஜெபித்து, கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை தேவ கிருபையின் புத்துணர்வூட்டும் தாக்கமானது நம் இருதயங் களில் உயிரோட்டமாகப் பாயும்; தேவன் மேலான வைராக்கியத்தின் மிகுதியால் நம் பாசங்கள் ஜொலிக்கும்; நம்முடைய ஒட்டு மொத்த கிறிஸ்தவ வாழ்க்கையும் அதிக உண்மையுடன், அதிக ஊக்கத்துடன், அதிக ஜெபத்துடன் காணப்படும்.COLTam 358.1

    ஒருவன் தேவனைப்பற்றி அறிய எவ்வளவு மனத்திறனைப் பெற்றிருக்கிறான் என்பதை வைத்தே பரலோகம் அவனை மதிப்பிடுகிறது. இந்த அறிவே சகல வல்லமையும் பாயந்தோடுகிற ஊற்றாக இருக்கிறது. தேவ சிந்தையின் ஒவ்வோர் ஆற்றலும் மனிதனிலும் காணப்படும்படியாக மனிதனை தேவன் படைத்தார். தேவசிந்தையோடு மனிதனின் சிந்தையும் இசைந்து செல்ல அவர் எப்போதும் முயன்று வருகிறார். பரலோகக் விஷயங்களைப்பற்றி நாம் அதிகமாக அறிந்து கொள்ளும்படி, கிறிஸ்துவின் கிருபையை உலகிற்கு வெளிப்படுத்த்தும்படி, அவரோடு ஒத்துழைக்கிற சிலாக்கியத்தை அவர் நமக்கு அருளியுள்ளார்.COLTam 358.2

    கிறிஸ்துவை நோக்கிப்பார்ப்பதால், தேவனைப்பற்றி அதிக தெளிவான, ஆழமான உண்மைகளை அறிகிறோம்; அவரை நோக்கிப்பார்ப்பதால் மாற்றமடைகிறோம். தயவும் சக மனிதர்கள் மேலான அன்பும், நமது இயல்பான உள்ளுணர்வாக மாறுகிறது. தெய்வீக குணத்திற்கு ஒத்த குணத்தைப் பெறுகிறோம். அவரது ச ாயலில் வளரும் போது, தேவனை அறிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது. அதிகதிகமாக பரலோகக் குடும்பத்தில் ஐக்கியமாகிறோம். நித்தியத்தைப் பற்றிய அறிவு, ஞானம் எனும் ஐசுவரியங்களைப் பெறுவதற்கான திறன் தொடர்ந்து அதிகரிக்கிறது.COLTam 359.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents