Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    திரும்பச் செலுத்தப்படும் தாலந்துகள்!

    “வெகுகாலமான பின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.” கர்த்தர் தமது ஊழியர்களிடம் கணக்குக் கேட்கும் போது, ஒவ்வொரு தாலந்தையும் அவர்கள் எவ்வாறு திருப்பிச் செலுத்துகிறார்கள் என்பது ஜாக்கிரதையாக ஆராயப்படும். செய்யப்பட்ட பணி, அதைச் செய்தவரின் குணத்தை வெளிப்படுத்துகிறது.COLTam 365.1

    ஐந்து தாலந்துகளையும் இரண்டு தாலந்தகளையும் பெற்ற வர்கள் அந்த ஈவுகளைத் தந்த ஆண்டவருக்கு அவற்றைப் பெருகச் செய்து திரும்பக் கொடுக்க வேண்டியிருந்தது.COLTam 365.2

    இவ்வாறு செய்தாலும் தங்களிடம் எந்தப் புண்ணியமும் இருப்பதாகச் சொல்லமாட்டார்கள். அந்தத் தாலந்துகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன ; வேறுதாலந்துகளையும் கூடுதலாகப் பெற்றார்கள்; ஆனால் தாலந்துகளை முதலில் அவர்களுக்குக் கொடுக்கப்படாதிருந்தால், எதையும் சம்பாதித்திருக்க முடியாது. தங்களது கடமையை மட்டுமே தாங்கள் செய்ததை அறிவார்கள். முதலீடு செய்தவர் தேவன். அதை மேம்படுத்த உதவி செய்தவர் அவர். இரட்சகர் தம் அன்பையும் கிருபையையும் அவர்களுக்குக் காட்டாதிருந்திருந்தால், நித்தியத்திற்கும் திவாலான நிலையிலேயே காணப்பட்டிருப்பார்கள்.COLTam 365.3

    தாலந்துகளை திரும்பப் பெற்றுக்கொண்ட எஜமான், புண்ணியமெல்லாம் ஊழியக்காரர்களைச் சேர்ந்தது போல அவற்றை அவர் அங்கீகரித்து, பிரதிபலன் அளிக்கிறார். அவரது முகத்தில் சந்தோஷமும் நிறைந்து காணப்படுகிறது. அவர்கள் மேல் தமது ஆசீர்வாதங்களை அருளும்படி முற்றிலும் மகிழ்ச்சி யால் நிறைகிறார். அவர்களிடம் தியாகத்தையும் சேவையையும் அவர் எதிர்பார்ப்பது, அவர்கள் தங்களுக்கு கடன்பட்டவர்கள் என்பதற்காக அல்ல, அவரது இருதயத்தில் அன்பும் கனிவும் நிறைந்து ஓடுவதால்.COLTam 365.4

    ‘நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், என் எஜமானனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று சொல்கிறார்.COLTam 366.1

    உண்மைதன்மையும், தேவன் மேலான மெய்ப்பற்றும், அன்பான சேவையும் தான் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். மனிதர்களை நன்மை செய்வதற்கும் தேவனிடத்திற்கும் வழிநடத்துகிற பரிசுத்த ஆவியானவரின் ஒவ்வொரு தூண்டலும் பரலோகப் புத்தகங்களில் பதியப்படுகின்றன; தேவன் யார் மூலமாகச் செயல்பட்டாரோ அவர்கள் தேவனுடைய நாளில் பாராட்டப்படுவார்கள்.COLTam 366.2

    தங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி, தங்கள் மூலம் மீட்கப் பட்டவர்களை தேவனுடைய ராஜ்யத்தில் காணும்போது, தேவனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பார்கள். அங்கே அவருடைய ஊழியத்தில் பங்குபெறும் சிலாக்கியத்தைப் பெறுவார்கள். ஏனெனில், இவ்வுலகத்தில் அவருடைய ஊழியத்தில் பங்குபெற்று, அதற்கான தகுதியைப் பெற்றிருப்பார்கள். இப்போது நாம் குணத்திலும் பரிசுத்த சேவையிலும் எப்படி இருக்கிறோம் என்பதுதான் பரலோகத்தில் நாம் எப்படி இருப்போம் என்பதில் பிரதிபலிக்கும். கிறிஸ்து தம்மைப்பற்றி, அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் ” என்று சொன்னார். மத்தேயு 20:29. பூமியில் அவர் செய்த ஊழியமே அவரது பரலோக ஊழியமுமாக இருக்கிறது. இந்த உலகில் நாம் கிறிஸ்துவுக்கு செய்கிற ஊழியத்தின் பிரதிபலன் என்னவென்றால், இனிவரும் உலகில் மிகுந்த வல்லமையோடும் அதிக சிலாக்கியத் தோடும் அவரோடு சேர்ந்து நாம் ஊழியம் செய்வதாகும்.COLTam 366.3

    ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து, “ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகை யால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் ; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்” என்றான்COLTam 366.4

    தேவன் தந்த தாலந்துகளை அலட்சியப்படுத்த இவ்வாறு மனி தர்கள் சாக்குப்போக்குச் சொல்கிறார்கள். தங்களை வேவு பார்த்து, தவறு கண்டுபிடிக்கிற, அதை வைத்து தங்களுக்கு தண்டனை தீர்ப்பு வழங்குகிற, கொடிய கடுமையான ஒருவராக தேவனை அவர்கள் பார்க்கிறார்கள். கொடுக்காத ஒன்றை திரும்பக் கேட்பவராகவும், விதைக்காத இடத்தில் அறுப்பவராகவும் அவரைக் குற்றஞ்ச ாட்டுகிறார்கள்.COLTam 367.1

    தங்களிடமுள்ளவற்றையும் தங்களுடைய சேவையையும் தேவன் உரிமை கோருவதால், அவர் கடினமான ஓர் எஜமானாக இருப்பதாக அநேகர் தங்கள் இருதயங்களில் அவர்மேல் பழி போடுகிறார்கள். ஆனால், அவருக்குச் சொந்தமல்லாத எதையும் அவருக்கு நாம் திரும்பக் கொடுக்க இயலாது.’‘எல்லாம் உம்மால் உண்டானது ; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்” என்று தாவீது ராஜா சொன்னார். நாளாகமம் 29:14. சிருஷ்டிப் பால் மட்டுமல்ல, மீட்பினாலும் அனைத்தும் அவருக்கே சொந்தமானது. இந்த வாழ்க்கையிலும், இனிவரும் வாழ்க்கையிலும் அனைத்து ஆசீர்வாதங்களும் கல்வாரிச்சிலுவையின் முத்திரையோடு, நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, தேவன் ஒரு கடினமான எஜமான், அவர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்கிற குற்றச்சாட்டு பொய்யானது.COLTam 367.2

    பொல்லாத அந்த ஊழியக்காரன் அநீதியாக குற்றஞ்சாட்டி யிருந்தாலும், எஜமான் அதை மறுக்கவில்லை ; ஆனால் அவன் நடந்துகொண்ட விதத்திற்கு சாக்குப்போக்குச் சொல்லமுடியாது என்பதை அவனது வார்த்தைகளை வைத்தே தீர்த்தார். அந்தத் தாலந்தைப் பயன்படுத்தி, எஜமானுக்கு இலாபம் கிடைப்பதற்கு அனைத்து வழிகளும் வாய்ப்புகளும் செய்யப்பட்டிருந்தன. ‘நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டு வைக்க வேண்டிய தாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டி யோடே வாங்கிக்கொள்வேனே” என்றார்.COLTam 367.3

    நாம் செயல்படுவதற்கு எவ்வளவு திறனை நமது பரலோகப் பிதா கொடுத்திருக்கிறாரோ அதைவிட அதிகமாகவோ குறைவா கவோ அவர் எதிர்பார்ப்பதில்லை. தம் ஊழியர்களால் தாங்க முடி யாத பாரங்களை அவர்கள் மேல் அவர் சுமத்துவதில்லை. “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” சங்கீதம் 103:14. அவர் நம்மிடம் கோருகிற எதையும், தேவனுடைய கிருபையால் நாம் கொடுக்க முடியும்.COLTam 367.4

    “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்.”லூக்கா 12:48. நம்முடைய திறமைக்கு ஓர் அணுவளவு குறைவாகச் செயல்பட்டாலும், ஒவ்வொருவரும் அதற்கு கணக்குக் கொடுக்க வேண்டும். சேவை செய்ய எவ்வள வுக்கு சாத்தியமிருக்கிறது என்பது ஆண்டவருக்கு மிகச்சரியாகத் தெரியும். பயன்படுத்தி, மேம்படுத்தின திறமைகள் போல பயன் படுத்தப்படாத திறமைகளும் கணக்கில் கொண்டுவரப்படும். நமது தாலந்துகளை நாம் சரியாக பயன்படுத்தி, அதன்மூலம் எப்படிப் பட்டவர்களாக மாறியிருக்கலாமோ அதுகுறித்து ஆண்டவர் நம் மிடம் கணக்குக் கேட்பார். நாம் செய்திருக்க வேண்டிய, ஆனால் தேவமகிமைக்கென நம் ஆற்றல்களைப் பயன் படுத்த தவறி, செய்யாமல் போன காரியம் குறித்து நியாயந்தீர்க்கப்படுவோம். நமது ஆத்துமாவை நாம் இழக்காவிட்டாலும் கூட, தாலந்துகளைப் பயன்படுத்தாமல் விட்டதின் விளைவை நித்திய வாழ்வில் உணர்ந்து கொள்வோம். நாம் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்தும் பெறாமல் போன சகல அறிவையும் திறமையையும் நித்தியமாக நாம் இழந்துபோவோம்.COLTam 368.1

    நாம் நம்மை முற்றிலும் தேவனுக்கு அர்ப்பணித்து, நமது ஊழியப்பணியில் அவருடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், அந்தப் பணியைச் செய்து முடிக்கிற பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வார். நேர்மையான நமது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்குமா என்று குழம்பிக் கொண்டிருக்க விடமாட்டார். தோல்வி குறித்து ஒரு முறை கூட நாம் யோசிக்கக் கூடாது. தோல்வி குறித்து ஒருமுறை கூட நாம் சிந்தித்துப் பார்க்கக்கூடாது. தோல்வியே அறியாதவரோடு நாம் ஒத்துழைக்க வேண்டும்.COLTam 368.2

    நம்முடைய பெலவீனம், இயலாமை குறித்துப் பேசக்கூடாது. இது தேவன் மேல் நம்பிக்கையில்லாததின் வெளிப்பாடாக, அவருடைய வார்த்தையை மறுதலிப்பதாக இருக்கிறது. நமது பாரங்களால் நாம் முறுமுறுக்கும்போது, அல்லது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் அழைத்தால் மறுக்கும் போது, அவர் ஒரு கடினமான எஜமான் என்றும், நம்மால் செய்யத் திறனற்ற ஒன்றை அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்றும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறோம்.COLTam 368.3

    சோம்பேறியான அந்த ஊழியக்காரனின் மனநிலையை தாழ்மை என்று குறிப்பிட பெரும்பாலும் விரும்புகிறோம். ஆனால் மெய்யான தாழ்மை முற்றிலும் மாறானது. அறிவுத்திறனில் குன்றியிருப்பதும், குறிக்கோளினின்றி வாழ்வதும், வெற்றியாக முடியுமோவென தெரியவில்லை என்று சொல்லி பாரங்களைச் சுமக்க மறுப்பதும் தாழ்மை அல்ல. தேவனுடைய பெலத்தைச் ச ார்ந்து, அவரது நோக்கங்களை நிறைவேற்றுவதே மெய்யான தாழ்மையாகும்.COLTam 369.1

    தமக்குச் சித்தமானவன் மூலம் தேவன் கிரியை செய்கிறார். சில சமயங்களில் மிகப்பெரிய பணிக்கு மிகச்சாதாரணமான கருவிகளைத் தெரிந்து கொள்கிற; ஏனென்றால், மனிதர்களுடைய பெலவீனங்களில் அவருடைய வல்லமை வெளிப்படுகிறது. நாம் ஏதாவது ஒன்றை அளவுகோலாகவைத்து, ஒன்றைபெரியதென்றும், இன்னொன்றை சிறியதென்றும் சொல்லுவோம். ஆனால் நம் அளவு கோலின்படி தேவன் அளப்பதில்லை. நமக்கு பெரியதாகத் தெரிவது தேவனுக்கும் பெரியதாகவும் அல்லது நமக்குச் சிறியதாக தெரிவது அவருக்கும் சிறியதாகவும் தெரியவேண்டுமென நாம் நினைக்கக்கூடாது. நமது தாலந்துகளை பற்றி தீர்ப்புச் சொல்வதும், அல்லது நமது பணியைத் தேர்ந்து நமக்கான பணியைத் தெரிந்து கொள்வதும் நம்முடைய வேலையல்ல . தேவன் நியமித்துள்ள பாரங்களை நாம் எடுத்து, அவருக்காக அவற்றைச் சுமந்து, இளைப்பாறு தலுக்காக எப்போதும் அவரிடமே செல்லவேண்டும். எந்த வேலையாக இருந்தாலும், அதை முழுமனதோடும், மகிழ்ச்சியோ டும் செய்யும்போது தேவன் கனப்படுத்தப்படுகிறார். அவரோடு சேர்ந்து பணி செய்ய நாம் பாத்திரவான்களாக எண்ணப்பட்டோம் என்றுகளிகூர்ந்தவர்களாக, நம்முடைய கடமைகளை நன்றியறிதலோடும் நாம் செய்யும் போது அவர் மகிழ்ச்சியடைகிறார்.COLTam 369.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents