Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    28 - கிருபையாகிய பிரதிபலன்

    தேவனுடைய கிருபை இலவசமானது என்கிற சாத்தியத்தை யூதர்கள் கிட்டத்தட்ட மறந்தே போனார்கள். தேவ தயவைச் சம்பாதிக்க வேண்டுமென்று ரபிமார்கள் போதித்தார்கள். நீ திமான்களுக்கான பிரதிபலனை தங்கள் சுயகிரியைகளினால் தான் பெற முடியுமென நினைத்தார்கள். எனவே, இச்சை மற்றும் பேராசையின் ஆவியினால் தொழுது கொள்ளத் தூண்டப்பட் டார்கள். கிறிஸ்துவின் சீடர்களிடம் இருந்தும் கூட இத்தகைய ஆவி முற்றிலுமாக நீங்கியிருக்கவில்லை. அவர்களுடைய தவறை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட ஒவ்வொரு முறையும் முயன்றார். வேலையாட்கள் குறித்த உவமையைச் சொல்வதற்கு சற்று முன்பாக, ஒரு சம்பவம் நிகழ்ந்தது; சரியான நியதிகள் பற்றிச் சுட்டிக்காட்ட அது நல்ல வாய்ப்பாக அமைந்தது.COLTam 398.1

    அவர் வழியிலே நடந்து செல்கையில், ஐசுவரியவானாகிய ஒரு வாலிபன் ஓடிவந்து அவர்முன் பணிந்து, முழங்கால்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.COLTam 398.2

    அந்த வாலிபன் அவரை மதிப்புவாய்ந்த போதகராக மட்டுமே எண்ணினான்; அவர் தேவகுமாரன் என்று புரிந்துகொள்ள வில்லை. இரட்சகர் அவனிடம், “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” என்றார். எதன் அடிப்படையில் நீ என்னை நல்ல வனென்று கூறுகிறாய் ? தேவன் ஒருவரே நல்லவர். நீ என்னை நல்லவரென உணர்ந்தால், அவருடைய குமாரனாகவும் பிரதிநிதி யாகவும் நீ என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.COLTam 398.3

    “நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்” என்றார். தேவனுடைய குணம் அவரது பிரமாணத்தில் வெளிப்படுகிறது. தேவனுக்கு இசைந்தவனாகக் காணப்பட விரும்பானால், அவருடைய பிரமாணத்தின் ஒவ்வொரு நியதியும் தான் உன்னுடைய ஒவ்வொரு செயலையும் தூண்டவேண்டும்.COLTam 399.1

    பிரமாணத்தின் கோரிக்கைகளை கிறிஸ்து குறைக்கவில்லை. அதற்குக் கீழ்ப்படிவதே நித்தியஜீவனைப் பெறுவதற்கான ஒரே நிபந்தனை என்று சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகிறார்; விழுகைக்கு முன் ஆதாமும் இதே நிபந்தனைக்கு உட்பட்டவனாக இருந்தான். தேவன் பூரண கீழ்ப்படிதலையும் குறைவற்ற நீ தியையும் எவ்வாறு ஏதேனில் மனிதனிடம் எதிர்பார்த்தாரோ, அதேபோலத்தான் இன்று ஆத்துமாக்களிடம் எதிர்பார்க்கிறார். ஏதேனிலிருந்த அதே நிபந்தனைதான், கிருபையின் உடன் படிக்கையின் கீழும் உள்ளது. அதாவது பரிசுத்தமும் நீதியும் நன்மையுமாய் இருக்கிற தேவப்பிரமாணம் சொல்கிறபடியே வாழவேண்டும்.COLTam 399.2

    ” கற்பனைகளைக் கைக்கொள்” என்று சொன்னதும், “எவைகளை” என்று அந்த வாலிபன் கேட்டான். கிறிஸ்து ஏதா வது சடங்காச்சாரப் பிரமாணத்தைக் குறிப்பிடலாமென நினைத்துக் கொண்டான். ஆனால் சீனாயில் கொடுக்கப்பட்ட பிரமாணத்தை அவர் குறிப்பிட்டார். இரண்டாம் கற்பனை பலகை யிலிருந்து பல்வேறு கற்பனைகளைக் குறிப்பிட்டுவிட்டு, அவற்றை எல்லாம் ரத்தின சுருக்கமாக ‘உன்னைப்போல் பிறனையும் நேசி” என்கிற ஒரே கற்பனையில் சொன்னார்.COLTam 399.3

    அப்பொழுது அந்த வாலிபன் தயக்கமின்றி அவரிடம், “இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் கைக்கொண்டிருக் கிறேன். இன்னும் என்னிடத்தில் என்ன குறை ” என்று கேட்டான். கற்பனைகள் பற்றி மேலோட்டமாகவே அறிந்துவைத்திருந்தான். ஒரு மனிதனை அளவுகோலாக வைத்துப் பார்த்தால், ஒரு குறை யம் இல்லாதவனாக அவன் தன்னைக் காத்துக்கொண்டது தெரியும். அவனுடை வெளிப்பிரகாரமான வாழ்க்கை பெருமளவிற்கு எந்தக் குற்றமுமின்றி காணப்பட்டது; தனது கீழ்ப்படிதலில் எந்தக் குறையுமில்லையென மெய்யாகவே அவன் நினைத்திருக்கலாம். தேவனுக்கும் தன் ஆத்துமாவுக்கும் நடுவே எல்லாம் செம்மையாக இல்லை என்கிற ஓர் இரகசிய பயம் அவனுக்கிருந்தது. அதுவே “இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன” என்று கேட்ககத் தூண்டியது.COLTam 399.4

    கிறிஸ்து அவனை நோக்கி, ‘நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டா யிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்த படியால், இந்த வார்த்தையைக் கேட்ட பொழுது, துக்கமடைந்த வனாய்ப் போய்விட்டான்.”COLTam 400.1

    சுயநல ஆசையுள்ளவன் கற்பனையை மீறுகிறான். இதை அந்த வாலிபனுக்கு விளக்க விரும்பினார். அவனது இருதயத்தின் சுயநலத்தை வெளிப்படுத்திக் காட்டுகிற ஒரு பரீட்சையை வைத்தார். அவனது குணத்திலிருந்து கருப்பு புள்ளியை அவ னுக்குக் காட்டினார், இன்னும் அதிக வெளிச்சத்தைப் பெற வேண்டுமென்கிற ஆர்வம் அந்த வாலிபனிடம் இல்லை. தனது ஆத்துமாவில் ஒரு விக்கிரகத்தைப் பேணி வந்திருந்தான்; உலகம் தான் அவனுடைய கடவுளாக இருந்தது. கற்பனைகளைக் கைக் கொண்டதாகச் சொன்னானே தவிர, அவற்றின் ஆவியாகவும் ஜீவனாகவும் இருந்த நியதி அவனிடம் காணப்படவில்லை . தேவனிடத்திலோ மனிதனிடத்திலோ அவனுக்கு உண்மையான அன்பு இல்லை. எல்லாவற்றையும் விட இதுதான் தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்ல அவனைத் தகுதிப்படுத்துவதாக இருந்தது. சுயத்தையும் உலக ஆதாயத்தையும் நேசித்ததால், பரலோக நியதிகளுக்கு ஒத்துப்போக முடியவில்லை.COLTam 400.2

    தம்மிடம் வந்த இந்த ஐசுவரியவானாகிய வாலிபனின் நேர்மையும் உற்சாகம் நிறைந்த ஊக்கமும் இரட்சகரின் இருதயத்தைத் தொட்டன. “அவனைப்பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்தார். ” நீதியைப் பிரசங்கிக்கிற பணியைச் செய்யக்கூடிய ஒருவனை அந்த வாலிபனில் கண்டார். தம்மைப் பின்பற்றி வந்த ஏழை மீனவர்களை எப்படி ஏற்றுக்கொண்டாரோ அப்படியே தாலந்துகள் படைத்த, ஐசுவரியவானான இந்த வாலிபனையும் ஏற்றிருப் பார். ஆத்தும் ஆதாய ஊழியத்திற்கு இந்த வாலிபன் தன்னுடைய திறன்களை அர்ப்பணித்திருந்தால், கருத்தோடும் வெற்றியோடும்கிறிஸ்து ஊழியஞ்செய்கிறவனாக மாறியிருப்பான்.COLTam 400.3

    ஆனால் சீடத்துவ நிபந்தனைகளுக்கு முதலாவது அவன் ஒத்துப் போக வேண்டியிருந்தது. ஒளிவுமறைவின்றி முற்றிலுமாக தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. இரட்ச கர் அழைத்ததுமே, யோவானும், பேதுருவும், மத்தேயுவும் அவர்களோடு சேர்ந்தவர்களும் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து அவருக்குப்பின் சென்றார்கள்.’‘லூக்கா5:28. அதே அர்ப்பணிப்பை அந்தப் பணக்கார வாலிபனிடமும் எதிர்பார்த் தார். அவர்தாமே செய்திருந்ததை விட மேலான ஒரு தியாகத்தை அவனிடம் கேட்கவில்லை . “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான் களாகும் படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.” 2கொரி 8:9. கிறிஸ்து செ ன்றிருந்த பாதையில் மட்டுமே அந்த வாலிபன் செல்ல வேண்டியிருந்தது.COLTam 401.1

    கிறிஸ்து அந்த வாலிபனைப்பார்த்து, அவனது ஆத்துமாவிற் காக ஏங்கினார். மனிதருக்கு ஆசீர்வாதத்தை வழங்கும் ஒரு தூதுவனாக அவனை அனுப்ப வாஞ்சித்தார். அவனை தன்னிடம் அர்ப்பணிக்கச் சொல்லி, அதற்கு பதிலாக தன்னோடு தோழமை கொள்கிற சிலாக்கியத்தை அருளுவதாகச் சொன்னார். என்னைப் பின்பற்றி வா என்றார். இந்தச் சிலாக்கியத்தை பேதுருவும் யாக்கோபும் யோவானும் ஒரு சந்தோஷ அனுபவமாகக் கருதினார்கள். அந்த வாலி பனும் கிறிஸ்துவை வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் நோக்கிப் பார்த்தான். அந்த வாலிபனும் கூட கிறிஸ்துவைப் பிரமிப்போடே பார்த்தான். இரட்சகரை நோக்கி அவனுடைய இருதயம் இழுக்கப்பட்டது. ஆனால், சுயத்தியாகம் எனும் இரட்சகரின் நியதியை ஏற்றுக் கொள்வதற்கு அவன் ஆயத்தமாக இல்லை. இயேசுவை விட தன்னுடைய ஐசுவரியங்களைத் தெரிந்துகொண்டான். அவன் நித்தியஜீவனைப் பெறவிரும்பினான். ஆனால் மெய்யாகவேஜீவனாக விளங்குகின்ற தன்னலமற்ற அன்பை தனது ஆத்துமாவில் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. துக்கமுள்ள இதயத்தோடு கிறிஸ்துவைவிட்டுச் சென்றான். COLTam 401.2

    அந்த வாலிபன் சென்ற பிறகு, இயேசு தம் சீடர்களிடம், ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது என்று சொன்னார். அந்த வார்த்தைகள் சீடர்களுக்கு திகைப் பாக இருந்தன. ஐசுவரியவான்கள் பரலோகம் செல்ல அதிக வாய்ப்புள்ளதென இதுவரையிலும் கேள்விப்பட்டு வந்திருந்தார்கள்; மேசியாவின் ராஜ்யத்தில் ஐசுவரியங்களையும் உலக அதி காரங்களையும் பெறலாமென அவர்களும்தாமே எதிர்பார்த்திருந்தார்கள்; ஐசுவரியவான்களே பரலோக இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பது கூடாதென்றால், மற்றவர்களுக்கு என்ன நம்பிக்கைத்தான் உள்ளது?COLTam 401.3

    “இயேசு பின்னும் அவர்களை நோக்கி : பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊளசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அப்பொழுது சீடர்கள் மேலும் அதிகமாக ஆச்சரியப்பட்டார்கள்.’” தங்களையும் சேர்த்தே அந்த முக்கிய எச்சரிப்புக் கொடுக்கப்பட்டதை இப்போது உணர்ந்தார்கள். அவர்களுக்கு அதிகாரத்தின் மேலும் ஐசுவரியங்களின் மேலும் இருந்த ஏக்கத்தை இரட்சகரின் வார்த்தைகள் வெளிப் படுத்தின. அவர்களுக்கு தங்கள் மேலேயே சந்தேகம் எழும்ப, ‘அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும்?” என்று கேட்டார்கள்.COLTam 402.1

    ‘இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதது தான், தேவனால் இது கூடாததல்ல ; தேவனாலே எல்லாம் கூடும்” என்றார்.COLTam 402.2

    ஐசுவரியவான், அந்த நிலையிலேயே பரலோகத்திற்குள் பிர வேசிக்க முடியாது. அவனுடைய செல்வமானது ஒளியின் சு தந்தரவாளிகளுடைய சுதந்தரத்தில் அவர்களுக்கு உரிமையை வாங்கித்தராது. தகுதியற்றவர்களுக்குக் காட்டப்படும் கிறிஸ்து வின் கிருபை மட்டுமே எந்த மனிதனையும் தேவனுடைய நகரத்திற்குள் பிரவேசிக்கச் செய்யும்.COLTam 402.3

    “நீங்கள் உங்களுடையவர்களல்ல; கிரயத்திற்குக் கொள்ளப் பட்டிருக்கிறீர்கள்” என்று பரிசுத்த ஆவியானவர் பேசின வார்த் தைகள் பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, ஏழைகளுக்கும் பொருந்தும். 1கொரி 6:19,20. மனிதர் இதை விசுவாசிக்கும் போது, தொலைந்து போனோரை இரட்சிக்கவும், தரித்திரரையும் துன்பப்படுவோரையும் தேற்றவும் தேவன் தம்முடைய சி த்தத்தின்படி பயன்படுத்துவதற்காக, தங்களிடம் ஒப்படைத் துள்ளவைதாம் தங்களது ஆஸ்திகள் என்று நம்புவார்கள். மனிதனால் இது கூடாது; ஏனெனில், உலகப் பொக்கிஷத்தைத்தின்மேல் தான் இருதயம் பற்றுதலாயிருக்கும். உலகப்பொருளுக்கு ஊழியஞ்செய்ய கட்டுப்பட்ட ஆத்துமாவானாது உதவி தேவைப்படுவோரின் கூக்குரலுக்குச் செவிசாய்க்காது. ஆனால் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை . கிறிஸ்துவின் ஈடு இணையற்ற அன்பை நோக்கிப் பார்க்கும் போது, சுயநல இருதயம் மிருதுவாகி, அடிபணியும். பரிசேயனாகிய பவுல், ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்தவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னதுபோல ஐசுவரியவானும் சொல்ல வழி நடத்தப்படுவான். பிலிப்பியர் 3:7, 8. அப்போது எதையும் தங்களுக்குச் சொந்தமானதென எண்ணமாட்டார்கள். தேவனுடைய பெருக்கமான கிருபைக்கு தாங்கள் உக்கிராணக் காரர்கள் என்பதிலும், அவர் நிமித்தம் எல்லா மனிதர்களுக்கும் ஊழியக்காரர்களாக இருப்பதிலும் சந்தோஷமடைவார்கள்.COLTam 402.4

    மீட்பரின் வார்த்தைகள் பேதுருவுக்குள் இரகசியமாகக் கிரியை செய்ய, முதன்முதலாகப் பேசுகிறான். தானும் தன் சகோதரர்களும் கிறிஸ்துவிற்காக அனைத்தையும் விட்டு விட்டதை மனநிறைவோடு எண்ணிப்பார்த்தான். .நாங்கள் எல்லாவற் றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே... என்றான். அந்தப் பணக்கார வாலிபனிடம், ” பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்று இரட்சகர் சொல்லியிருந்த நிபந்தனை வாக்குறுதியை நினைவுகூர்ந்தவனாக, தானும் தன் நண்பர்களும் செய்த தியாகங்களுக்க பிரதிபலனாக என்ன கிடைக்குமென இப்போது கேட்டான்.COLTam 403.1

    அதற்கு இரட்சகர் சொன்ன பதில் அந்தக் கலிலேய மீனவர்களைப் பரவசப்படுத்தியிருக்க வேண்டும். மறுஜென்மகாலத் திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க் கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப் பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.. என்றார். மேலும், ‘என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் என்று சொன்னார்.COLTam 403.2

    ஆனால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று பேதுரு கேட்ட கேள்வியானது திருந்தவேண்டிய ஒரு மனநிலையை வெளிப் படுத்துகிறது. ஏனெனில், அது கூலிக்கு வேலை செய்கிற மன நிலையாக இருப்பதால், கிறிஸ்துவின் தூதுவர்களாக இருப்ப தற்கு சீடர்களைத் தகுதியற்றவர்களாக்கிவிடும். சீடர்கள் இயேசு வின் அன்பினால் கவரப்பட்டிருந்தாலும் கூட, பரிசேயமார்க்கத் திலிருந்து அவர்கள் முற்றிலும் விடுபட்டிருக்கவில்லை. தங்களுடைய உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கவேண்டுமென்கிற மன நிலையோடுதான் அப்போதும் ஊழியம் செய்தார்கள். சுய - மேன்மையான, சுய - நிறைவான ஒரு மனநிலையை வளர்த்து, தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுக்கொண்டார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் ஒருவர் தோற்றபோது, அவர்களை விட தாங்கள் மேலானவர்கள் என்கிற உணர்வு மற்றவர்களுக்கு உண்டானது.COLTam 404.1

    சுவிசேஷத்தின் நியதிகளைசீடர்கள் மறந்துவிடாமலிருப்பதற் காக, கிறிஸ்து அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார். தேவன் தமது ஊழியர்களை நடத்துகிற விதம் பற்றியும், எத்தகைய மனநிலையோடு அவர்கள் வேலை செய்ய விரும்புகிறார் என்பது பற்றியும் அதில் எடுத்துக்காட்டினார்.COLTam 404.2

    “பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது : அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்” என்றார். வேலை தேடுபவர்கள் சந்தைவெளிகளில் காத்திருப்பதும், வேலைக்கு ஆட்களைத் தேடி எஜமான்கள் அங்கு செல்வதும் வழக்கமாக இருந்தது. உவமையில் சொல்லப்படும் அந்த எஜமான், வேலைக்கு ஆட்களை அமர்த்த, வெவ்வேறு மணி வேளைகளில் சொல்கிறான். விடியற்காலையிலே வேலைக்கு அமர்த்தப்பட்ட வர்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு சம்மதித்து வருகிறார்கள்; நேரங்கழித்து வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் எஜமான் தன் னுடைய விருப்பத்தின்படி கூலியைத் தரட்டுமென விட்டுவிடு கிறார்கள்.COLTam 404.3

    “சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு வந்த எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முந்தி வந்தவர்கள் வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான். அப்பொழுது பதினோராம் மணி வேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிகக்கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.”COLTam 405.1

    தன்னுடைய திராட்சத்தோட்டத்தில் வேலை செய்தவர்களை வீட்டெஜமான் நடத்தின விதமானது, மனிதர்களை தேவன் நடத்துகிற விதத்தைச் சுட்டிக்காட்டுகிறது. மனிதர்கள் மத்தியில் இத்தகைய வழக்கம் கிடையாது . உலகப்பிரகாரமான வேலை களில் செய்யப்படுகிற வேலைக்குத்தக்க ஊதியம் வழங்கப்படும். வேலை செய்பவரும் தான் செய்த வேலைக்கு மட்டுமே கூலியை எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் இந்த உவமையில், தம்முடைய ராஜ்யத்தின் நியதிகளை கிறிஸ்து விளக்குகிறார். அந்த ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல. மனிதர்களுடைய அளவுகோலுக்கு அவர் கட்டுப்பட்டவரும் அல்ல. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல வென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.’” ஏசாயா 55:8,9.COLTam 405.2

    இந்த உவமையில், ஒரு குறிப்பிட்ட தொகைக்குச் சம்மதித்து, முதல் கட்ட வேலைக்காரர்கள் வந்தார்கள்; அதே தொகையைப் பெற்றார்கள்; கூடுதலாகப் பெறவில்லை. பின்னர் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள், “நியாயமானபடி உங்களுக் குக் கூலி கொடுப்பேன்” என்ற வீட்டெஜமான் கொடுத்த வாக்கை நம்பி னார்கள். சம்பளம் குறித்து கேள்வியே கேட்காமல் அவரை தாங்கள் நம்புவதைக் காட்டினார்கள். எஜமானின் நீதியிலும் நேர்மையிலும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். தாங்கள் செய்த வேலைக்குத்தக்கதாக அல்லாமல், அவருடைய நோக்கத்தின் தாராளத்தின்படி பிரதிபலனைப் பெற்றார்கள்.COLTam 405.3

    எனவே, பாவியை நீதிமானாக்குகிற தம்மிடத்தில் நாம் விசுவாசம் வைக்க தேவன் விரும்புகிறார். நம்முடைய புண்ணியத்தின்படி அல்ல, ” நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த’ தம்முடைய சொந்த நோக்கத்தின்படியே பிரதிபலனளிக்கிறார். எபே 3:9. “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே .. நம்மை இரட்சித்தார். ” தீத்து 3:5. தம்மில் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு ‘நாம் வேண்டிக்கொள்ளுகிற தற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் செய்வார்.” எபேசியர் 3:20.COLTam 406.1

    செய்யப்பட்ட வேலையின் அளவையும் அல்லது அதன் கண்கூடான விளைவுகளையும் வைத்தல்ல, காணப்படும் மன நிலையை வைத்துதான் வேலையை தேவன் மதிப்பிடுகிறார். பதினோராம் மணி வேளையில் திராட்சத்தோட்டத்திற்கு வந்தவர்கள் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். தங்களை ஏற்றுக்கொண்டவர் மேல் இருதயத்தில் நன்றி நிரம்பி வழிந்தது; நாளின் இறுதியிலே முழு நாள் சம்பளத்தை வீட்டெஜமான் கொடுத்தபோது பெரிதும் ஆச்சரியமடைந்தார்கள். அவ்வளவு சம்பளத்திற்கு தாங்கள் வேலை செய்யவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். வீட்டெஜமானின் முகத்தில் தெரிந்த அன்புணர்வைக் கண்ட போது மகிழ்ச்சியில் நிறைந்தார்கள். எஜமானின் நற்குணத் தையோ தங்களுக்கு தாராளமாக வழங்கப்பட்ட ஊதியத்தையோ அவர்கள் ஒருபோதும் மறக்கவில்லை. இதுபோலவே, தான் அபாத்திரனென்று உணர்ந்து, பதினோராம் மணிவேளையில் எஜமானின் திராட்சத் தோட்டத்திற்குச் சென்ற பாவியும் இருக்கிறான். சொற்பகாலமே தான் ஊழியம் செய்ததாகத் தெரிவதால், பிரதிபலனைப் பெற தான் தகுதியற்றவன் என்று உணர்கிறான். ஆனால் தன்னையும் கூட தேவன் ஏற்றுக்கொண்டாரே என்று சந்தோஷத்தால் நிறைகிறான். கிறிஸ்துவின் உடன் ஊழியனாகச் செயல்படக் கிடைத்த சிலாக்கியத்திற்கு நன்றியுள்ளவனாக, தாழ்மையும் நம்பிக்கையும் மிக்க மனநிலையோடு ஊழியஞ்செய்கிறான். இந்த மனைநிலையைக் கனப்படுத்துவதில் தேவனும் மகிழ்ச்சியடை கிறார்.COLTam 406.2

    எவ்வளவு பிரதிபலன் கிடைக்கும் என்கிற கேள்வியே கேட்காமல், தேவனையே நாம் சார்ந்திருக்க அவர் விரும்பு கிறார். ஆத்துமாவில் கிறிஸ்து வாசஞ்செய்தால், பிரதிபலன் குறித்த எண்ணம் மேலோங்கி நிற்காது. அதுவே நமது ஊழியத்தை இயக்குகிற நோக்கமாகவும் இருக்காது. ஒருவருக்கு கீழாக வேலை செய்யும் போது, அவர் பிரதிபலனாகக் கொடுக்கிற கூலியின் மேல் மரியாதை இருக்கவேண்டும் என்பது உண்மைதான். தாம் வாக்குரைத்துள்ள ஆசீர்வாதங்களை நாம் மதிக்க வேண்டு மென்று தேவன் விரும்புகிறார். ஆனால் நாம் பிரதிபலன்கள் மேலேயே நோக்கமாக இருப்பதையோ, ஒவ்வொரு கடமைக்கும் வெகுமதியை எதிர்பார்ப்பதையோ அவர் விரும்புவதில்லை. என்னதான் ஆதாயம் இருந்தாலும், சரியான தைச் செய்வதற்கெல்லாம் பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. தோவனையும் சகமனிதர்களையும் நேசிப்பதே நம் நோக்கமாக இருக்கவேண்டும்.COLTam 407.1

    முதலாவதாக வேலைக்கு அழைக்கப்பட்டும், ஆண்டவருடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசிக்க மறுத்தவர்கள் தவறு செய்ய வில்லையென இந்த உவமை சொல்லவில்லை. வீட்டெஜமான் பதினோராம் மணிவேளையிலே சந்தை வெளிக்குச் சென்றபோது வேலையில்லாமல் நின்றிருந்தவர்களைப் பார்த்து : “நீங்கள் பகல் முழுவதும் சும்மா நிற்கிறதென்ன” என்று கேட்டான். “ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை ” என்று பதில் சொன் னார்கள். அன்று பிந்தி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட காலையில் அங்கே நின்றிருக்கவில்லை. எனவே அழைப்பை மறுத்தவர்கள் இவர்களில்லை. முதலில் மறுத்துவிட்டு, பின்னர் மனந்திருந்துபவர்கள், மனந்திருந்துவது நல்லதுதான். ஆனால், இரக்கத்தின் முதல் அழைப்புடன் விளையாடுவது பாதுகாப்பான தல்ல .COLTam 407.2

    திராட்டத்தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஆளுக்கு ஒவ்வொரு பணம்” பெற்றபோது, விடியற்காலையிலேயே வேலை செய்யத்துவங்கினவர்களுக்கு அது விசனமாக இருந்தது. நாங்கள் பன்னிரெண்டு மணி நேரம் வேலை செய்திருக்கவில்லையா? நாளின் குளிர்ச்சியான வேளையில் ஒரு மணி நேரம் மட்டும் வேலை பார்த்தவர்களைவிட நாங்கள் அதிகம் பெறுவது தானே நியாயம்? என்று யோசித்தார்கள். “பிந்தி வந்தவர்களா கிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே” என்று முறுமுறுத்தார்கள்.COLTam 407.3

    அவர்களில் ஒருவனுக்கு வீட்டெஜமான் பிரதியுத்தரமாக, “சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை ; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்தது போலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ் டம். என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன் கண்ணனாயிருக்கலாமா” என்றான்.COLTam 408.1

    “இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தி னோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் ” என்றார்.COLTam 408.2

    தங்களுடைய ஊழியங்களின் நிமித்தம் மற்றவர்களைவிட தங்களுக்கு முன்னுரிமை வேண்டுமென்று சொல்பவர்களை உவமை யில் வரும் முதல் கட்ட வேலையாட்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். இவர்கள் தங்கள் வேலையை சுயப்பாராட்டு மனநிலையுடன் செய்கிறார்கள்; சுயமறுப்பும் அர்ப்பணிப்பும் அதில் காணப் படாது. தங்கள் வாழ்நாளெல்லாம் தேவனைச் சேவிப்பதாகச் சொல்லியிருக்கலாம்; துன்பங்களையும் தனிமையையும் பாடுகளையும் அதிகமாக அனுபவித்திருக்கலாம்; எனவே தாங்கள் மாபெரும் பிரதிபலனுக்குத் தகுதியானவர்களென நினைக்கிறார்கள். கிறிஸ்துவின் ஊழியர்களாக இருக்கின்ற சிலாக்கியத்தைவிட பிரதிபலன்பற்றியே அதிகமாக நினைக் கிறார்கள். தங்களுடைய ஊழியத்தாலும் தியாகத்தாலும் மற்றவர்களை விட அதிக மேன்மையைப் பெறுவதற்கு தங்களுக்கு தகுதி இருக்கிறது என்பது அவர்களுடைய கருத்து. இந்தக் கோரிக்கை அங்கீகரிக்கப்படாத போது, அவர்கள் விசனமடைகின்றனர். அன்பான, உறுதிமிக்க மனநிலையுடன் ஊழியத்தைச் செய்திருந்தால், தொடர்ந்து முதலிடத்தில் இருந்திருப்பார்கள். ஆனால் குறை கூறுகின்ற, குற்றஞ்சாட்டுகின்ற மனநிலை கிறிஸ்துவுக்கு மாறானதாகும்; அவர்கள் அபாத்திரர்கள் என்பதை அது நிரூபிக்கிறது. அவர்கள் சுய முன்னேற்றத்தை விரும்புவதையும், தேவனை நம்பாததையும், தங்கள் சகோதரர்கள்மேல் பொறாமையும், காழ்ப்புணர்வும் கொள்வதையும் அது வெளிப்படுத்துகிறது. தேவனுடைய நற்குணமும் தயாளமும் அவர்களை முறுமுறுக்கவே செய்கிறது. எனவே தங்களது ஆத்துமாக்களுக்கும் தேவனுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லையென காட்டுகிறார்கள். பிரதான ஊழியரோடு சேர்ந்து ஊழியம் செய்வதிலுள்ள மகிழ்ச்சியை அவர்கள் அறிவதில்லை .COLTam 408.3

    குறுகலான - சுய அக்கறைமிக்க இத்தகைய மனநிலையைக் காட்டிலும் தேவனை அதிகம் புண்படுத்துவது எதுவுமல்ல. இத்தகைய குணங்களை வெளிப்படுத்தும் எவரோடும் சேர்ந்து அவர் செயல்படமுடியாது . ஆவியானவரின் கிரியைகளுக்கு அவர்கள் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள்.COLTam 409.1

    யூதர்கள் தாம் முதன் முதலாக கர்த்தருடைய திராட்சத்தோட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்; அதனால் பெருமையும் சுயநீ தியும் அவர்களிடம் காணப்பட்டது. நீண்டகாலம் ஊழியம் செய்ததால், மற்றவர்களைவிட அதிக பிரதிபலனைப் பெற தங்களுக்கு உரிமை இருக்கிறதென நினைத்தார்கள். தேவனுக்கடுத்தவைகளில் தங்களைப் போல புறஜாதியாரையும் சம அளவு சிலாக்கியங்களைப் பெற்றவர்களாகக் கருதவேண்டும் என்கிற உண்மை அவர்களை வெகுண்டெழச் செய்தது.COLTam 409.2

    இதே பாவமானது தம்முடைய சீடர்களின் மனதிலும் குடிகொள் ளாதபடிக்கு கிறிஸ்து அவர்களை எச்சரித்தார். அவர்களும் கூட அவரைப் பின்பற்றும்படி முதலாவதாக அழைக்கப்பட்டிருந்தார்கள். சுயநீதி மனப்பான்மையே சபையின் பெலவீனமாக, சாபமாகக் காணப்படுமென்பதை அவர் அறிந்திருந்தார். பரலோக ராஜ்யத்தில் இடம்பெற தாங்கள் ஏதாவது செய்தாக வேண்டுமென்கிற எண்ணம் மனிதர்களில் உண்டாகலாம். ஆவிக்குரிய வாழ்வில் சிறிது முன்னேற்றத்தை உண்டாக்கிவிட் டால், உதவிக்கு தேவனும் வருவாரென அவர்கள் கற்பனை செய்யலாம். எனவே, அங்கு சுயம் அதிகமாகவும், இயேசு குறை வாகவும் காணப்படுகிற நிலை ஏற்படலாம். எனவே ஆவிக்குரிய வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டவர்கள் பெருமையடைந்து, மற்றவர்களைவிட தாங்கள் சிறந்தவர்களென நினைக்கலாம். பிறர் தங்களைப் புகழ விரும்பலாம், தங்களை அவர்கள் முக்கியமானவர்களாக்க் கருதாவிட்டால் கசப்படையலாம். இந்த ஆபத் திலிருந்து தம் சீடர்களைப் பாதுகாக்க கிறிஸ்து முயன்றார்.COLTam 409.3

    நம்மில் ஏதாவது புண்ணியம் இருப்பதாகப் பீற்றுவதற்கே வழி யில்லை. ‘ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத் தைக்குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்; மேன்மை பாராட்டு கிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின் மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லு கிறார்.’” எரேமியா 9:23, 24.COLTam 410.1

    எந்த மனிதனும் தன்னைப் புகழாதபடிக்கு பிரதிபலனானது கிரியைகளினால் கிடைப்பதல்ல; அது கிருபையால் கிடைப்ப தாகும். அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லு வோம்? ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டா னாகில் மேன்மை பாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மை பாராட்ட ஏதுவில்லை. வேத வாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசி த்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை யென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ண ப்படும்.” ரோமர் 4:1-5. எனவே, எவரும் மற்றவரைவிட தன்னை உயர்த்தவோ, ஒருவருக்கொரு வர் காழ்ப்புணர்வு கொள்ளவோ தேவையில்லை. எவரும் மற்றவரைவிட அதிக சிலாக்கியம் பெற்றவரல்ல, எவரும் பிரதி பலன் தன்னுடைய உரிமையென கோரிக்கை வைக்கவும் முடியாது.COLTam 410.2

    மகத்தான, நித்திய பிரதிபலனில் முந்தினோரும் பிந்தினோரும் பங்கடைவார்கள். எனவே பிந்தினோரை முந்தினோர் மகிழ்ச்சி யோடு வரவேற்க வேண்டும். பிறனுக்குக் கிடைக்கிற பிரதிபல னால் காழ்ப்புணர்வு கொள்கிறவன், தானும் கிருபையினால் தான் இரட்சிக்கப்பட்டிருப்பதை மறக்கிறான். சகல விதமான கசப்புகளையும் சந்தேகங்களையும் கடிந்துகொள்கிற உவமை தான் வேலையாட்கள் பற்றிய உவமை. அன்பு சத்தியத்தில் சந்தோஷப்படுகிறது; அது பொறாமையால் எதையும் ஒப்பிடாது. அன்பைப் பெற்றிருக்கிறவன் கிறிஸ்துவின் பூரண குண அழகோடு தன்னுடைய குறைவுள்ள குணத்தை ஒப்பிடு கிறான்.COLTam 410.3

    இந்த உவமை எல்லா ஊழியர்களுக்கும் ஓர் எச்சரிப்பாக இருக்கிறது. அதாவது, அவர்கள் எவ்வளவு காலம் ஊழியம் செய்திருந்தாலும், எவ்வளவு அதிகமாகப்பிரயாசப்பட்டிருந்தாலும், தங்கள் சகோதரர்மேல் அன்பில்லாமலும், தேவனுக்கு முன் தாழ்மையில்லாமலும் இருந்தால், அவர்கள் ஒன்றுமே இல்லை. சுயம் வீற்றிருக்கிற இடத்தில் மார்க்கம் இருக்காது. சுயமகிமையை தன் புயபலமாக்குகிறவன் கிறிஸ்தவ சேவையில் தன்னைப் பெலப் படுத்துகிற கிருபையை இழந்திருப்பான். எப்போதெல்லாம் பெருமையும் சுயநிறைவும் தலை தூக்குகிறதோ, அப்போது ஊழியம் பாழடைகிறது.COLTam 411.1

    எவ்வளவு காலம் வேலை செய்தோம் என்பதை அல்ல, எவ்வளவு விருப்பத்தோடும் உண்மையோடும் வேலை செய்தோம் என்பதையே தேவன் அங்கீகரிப்பார். நம்முடைய சேவைகளி லெல்லாம் சுயத்தை அர்ப்பணிக்க வேண்டயது அவசியம். சுயமுனைப்பால் களங்கப்பட்டுள்ள மகத்தான ஊழியத்தைக் காட்டிலும், நேர்மையோடும் சுயமறுப்போடும் செய்யப்படும் சிறு ஊழியமே தேவனுக்கு அதிக பிரியமானதாக இருக்கும். கிறிஸ்துவின் மனநிலையை நாம் எவ்வளவுக்கு பேணுகிறோம், கிறிஸ்துவின் சாயலை எவ்வளவுக்கு நம் ஊழியத்தில் வெளிப் படுத்துகிறோம் என்பதைக் காண அவர் ஆவலோடிருக்கிறார். எவ்வளவு வேலை செய்கிறோம் என்பதை அல்ல, எவ்வளவு அன்போடும் உண்மையோடும் வேலையைச் செய்கிறோம் என்பதையே அவர் முக்கியமானதாகக் கருதுகிறார்.COLTam 411.2

    சுயநலம் மரித்து, அதிகாரத்தைப் பெறுவதற்கான சண்டை ஒழிந்து, நன்றியுணர்வு இருதயத்தில் நிறைந்து, அன்பு வாழ்க்கையை நறுமணம் வீசச்செய்தால் மட்டுமே, ஆத்துமாவில் கிறிஸ்து வாசஞ்செய்தால் மட்டுமே தேவனோடு உடன் ஊழியர்களாக நாம் அங்கீகரிக்கப்படுவோம்.COLTam 411.3

    உண்மையோடு ஊழியம் செய்பவர்கள் அதில் எவ்வளவுதான் சோதனை ஏற்பட்டாலும், அதைகளைப்புமிக்க பணியாக நினைக்க மாட்டார்கள். தாங்கள் செலவழிதாலும், முற்றிலும் இழந்தாலும், சந்தோஷமான இருதயத்தோடு உற்சாகமாக வேலையைச் செய்வார்கள். தேவனுக்குள்ளான சந்தோஷம் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வெளிப்படுகிறது. “என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே” கிறிஸ்துவுக்கு முன் வைக்கப்பட்ட மகிழ்ச்சியாக இருந்தது; அதுவே இவர்களுடைய மகிழ்ச்சியாக வும் இருக்கும். யோவான் 4:34. அவர்கள் மகிமையின் கர்த்தரோடு இணைந்து வேலை செய்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களுடைய சகல பிரயாசத்தையும் இனிமையாக்குகிறது ; சித்தத்தைக் கட்டுப்படுத்துகிறது; என்ன நேரிட்டாலும் ஆவிக்கு உரமூட்டுகிறது. கிறிஸ்துவின் பாடுகளில் பங்கெடுத்து அதன் மூலம் மேலான தகுதியைப் பெற்றவர்களாக, அவருடைய பரிவு மிக்க தன்மைகளைப் பெற்றவர்களாக, அவருடைய ஊழியத்தில் அவரோடு ஒத்துழைப்பவர்களாக பணியாற்றுவதால், அவரது மகிழ்ச்சியின் அலையை பெருகச் செய்கிறார்கள், அவருடைய மேன்மையான நாமத்திற்கு கனத்தையும் துதியையும் கொண்டு வருகிறார்கள்.COLTam 411.4

    தேவனுக்காகச் செய்யப்படும் மெய்யான ஊழியங்களி லெல்லாம் இத்தகைய மனநிலை காணப்படும். இந்த மனநிலை காணப் படாத அநேகர், முந்தினோர் போலத் தெரிந்தாலும் பிந்தினோராகவும், இதைப் பெற்றிருக்கிறவர்கள் பிந்தினோராகக் கருதப்பட்டாலும் முந்தினோராகவும் இருப்பார்கள்.COLTam 412.1

    கிறிஸ்துவுக்கு தங்களை அர்ப்பணித்திருந்தும், அவருக்காக மகத்தான ஊழியத்தையோ மாபெரும் தியாகத்தையோ செய்ய வாய்ப்பைக் காணமுடியாத பலர் இருக்கிறார்கள். இவர்கள் சிந்தித்துப்பார்த்து, ஆறுதலடையக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. அதாவது தன்னையே அர்ப்பணித்து இரத்த சாட்சியாக மரிப்பவரே தேவனுக்கு மிகவும் பிரியமானவர் என்பது உண்மை யல்ல ; தினமும் ஆபத்தையும் மரணத்தையும் எதிர்கொள்கிற ஊழியப்பணியாளர் தான் பரலோகப்பதிவில் முதன்மையான வராக இருப்பார் என்பதும் உண்மையல்ல. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அனுதினமும் சுயத்தைச் சரணடையச் செய்து, நோக்கத்தில் உண்மையும் சிந்தனையில் தூய்மையும் உள்ளவனாக, கோபத்திலும் சாந்தகுணத்தைக் காத்துக்கொள்ப வனாக, சிறு காரியத்திலும் விசுவாசத்தையும் பயபக்தியையும் உண்மைத்தன்மை யையும் காட்டுபனாக, குடும்பவாழ்க்கையில் கிறிஸ்துவின் குணத்தை வெளிப்படுத்துபவனாக வாழ்கிற கிறிஸ்தவ னே உலகப்புகழ்பெற்ற ஊழியப்பணியாளையும் அல்லது இரத்த சாட்சி யையும் விட விலையேறப்பெற்றவனாக இருக்கிறான்.COLTam 412.2

    ஓ! குணத்தை அளவிடுவதில் தேவனும் மனிதனும் கையாளுகிற அளவு கோல்களில் தான் எவ்வளவு வித்தியாசம்! இருதயத்திலும் குடும்பத்திலும் உண்டான பல பாவத்தூண்டல்க ளுக்கு எதிர்த்து நின்றதை தேவன் பார்க்கிறார்; உலகத்தாருக்கும், ஏன் நெருங்கிய நண்பர்களுக்கும் கூட அது தெரியாமல் இருக்கலாம். எவ்வளவு பெலவீனமான ஆத்துமாவாக இருந்தாலும், அதில் எவ்வளவு தாழ்மை காணப்படுகிறதென்று, மோசமான சிந்தனை யிலிருந்து எவ்வளவு உண்மையாக மனந்திரும்பினதென்று பார்க்கிறார். தமது சேவையிலே முழுமனதோடு அர்ப்பணிப்பதைப் காண்கிறார். சுயத்தோடு எவ்வளவு நேரம் கடுமையாகப் போராடி வெற்றி கிடைத்ததென்று கவனிக்கிறார். இவை எல்லாமே தேவனுக்கும் தூதர்களுக்கும் தெரியும். கர்த்தருக்குப் பயந்து அவரது நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள ஞாபகப்புத்தகத் திலே அவருக்கு முன்பாக அவை எழுதப்படும்.COLTam 413.1

    வெற்றிக்கான இரகசியம் நமது கல்வியிலோ நமது பதவியிலோ நமது எண்ணிக்கையிலோ நமக்குக் கொடுக்கப் பட்டுள்ள தாலந்துகளிலோ மனித சித்தத்திலோ இல்லை. நமது தகுதியின்மையை உணர்ந்து, கிறிஸ்துவைத் தியானிக்க வேண்டும். கீழ்ப்படிதலும் வாஞ்சையும் உள்ளவர்கள், பெலவான்களுக் கெல்லாம் பெலவானும், ஞானவான்களுக்கெல்லாம் ஞானவானு மாகிய அவர் மூலமாக வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள்.COLTam 413.2

    நமது சேவை குறுகியகாலமே இருக்கலாம், அல்து நமது ஊழியம் சாதாரணமானதாக இருக்கலாம்; எளிய விசுவாசத்தோடு கிறிஸ்துவை நாம் பின்பற்றினால், பிரதிபலனைக் குறித்து ஏமாற்றமடைய மாட்டோம். முக்கியஸ்தர்களும் ஞானிகளும் பெறமுடியாததை, பெலவீனர்களும் மிகச்சாதாரணமானவர்களும் பெறலாம். சுயத்தை உயர்த்துபவர்களுக்கு பரலோகத்தின் பொற்கதவுகள் திறக்கிறதில்லை. ஆவியில் பெருமையுள்ளவர்களுக்கம் அவை திறக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு சிறு பிள்ளை மெதுவாகத் தொட்டாலே அந்த நித்தியக் கதவுகள் விரிவாகத் திறக்கும். எளிய விசுவாசத்தோடும் அன்போடும் தேவனுக்காகப் பிரயாசப்பட்டு, கிருபையைப் பிரதிபலனாகப் பெறுகிறவர்கள் பாக்கியவான்கள்!COLTam 413.3