நிலத்தை ஆயத்தப்படுத்துதல்
விதைப்பதற்கேற்ற பலன்கள் நிலத்தைச் சார்ந்தே இருப்பதாக விதைப்பவனின் உவமை முழுவதிலும் கிறிஸ்து எடுத்துக்காட்டு கிறார். எல்லா நிலங்களிலும் விதைத்தவனும் விதையும் ஒன்றுதான். இதன்மூலம் அவர் நமக்குப் போதிப்பது என்னவென்றால், தேவவார்த்தையானது நம் இதயங்களிலும் ஜீவியங்களிலும் அதின் வேலையைச் செய்யத் தவறினால், அதற்கான காரணத்தை நம்மிடம்தான் பார்க்க வேண்டும். ஆனால், பலன்கள் நமது கையில் இல்லை. நம்மை நாமே மாற்ற இயலாது என்பது உண்மை, ஆனாலும், தெரிந்து கொள்ளும் உரிமை நமக்குள்ளது, நாம் எப்படி மாற விரும்புகிறோம் என்பது நம் கையில் உள்ளது. வழியருகே விழுந்தாலும், கற்பாறையில் விழுந்தாலும், முள்ளுள்ள நிலத்தில் விழுந்தாலும் வார்த்தையைக் கேட்கிறவர்கள் அந்த நிலையிலேயே இருக்கவேண்டியதில்லை. உலகப்பிரகாரமான காரியங்களில் மனிதரை மயக்கிப்பிடித்திருக்கும் பிடியைத் தகர்த்து, அழியாத பொக்கிஷத்தின்மேல் ஆசையை உண்டாக் தேவ ஆவியானவர் எப்போதும் முயன்று வருகிறார். ஆவியானவருக்கு எதிர்த்து நிற்பதால் தான், தேவவார்த்தையில் கவனமில்லாதவர்களாக அல்லது அதைப் புறக்கணிக்கிறவர்களாக மனிதர்கள் மாறுகிறார்கள். நல்ல விதை வேர்விடுவதைத் தடுப்பதற்கும் தீய வளர்ச்சிகள் அதின் வளர்ச்சியைத் தடுக்கிற தீமை முளைப்பதற்கும் காரணமான இதயக்கடினத்திற்கு அவர்களே பொறுப்பாளிகள்.COLTam 56.1
இதயத்தோட்டத்தைப் பண்படுத்தப்படவேண்டும். பாவத்தி லிருந்து முற்றிலும் மனந்திரும்புவதன்மூலம் நிலத்தை நிலமானது உடைக்க வேண்டும். சாத்தானிய விஷச்செடிகளை வேரோடு பிடுங்கப்படவேண்டும். முட்செடிகள் ஆக்கிரமித்துள்ள நிலத்தைச் சீர்ப்படுத்தகடும் பிரயாசம் அவசியம். அதுபோலவே, இயேசுவின் நாமத்தினாலும் பெலத்தினாலும் ஊக்மாக முயல்வதால் மட்டுமே சுபாவ இதயத்தின் தீயத்தன்மைகளை மேற்கொள்ளப்பட முடியும். கர்த்தர் தமது தீர்க்கதரிசியின் வாயிலாக, “நீங்கள் முள்ளுகளுக் குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்” என்று நமக்குக் கட்டளையிடுகிறார். எரேமியா 4:3; ஓசியா 10:12. இந்த வேலையை நம்மிலே செய்து முடிக்க அவர் வாஞ்சையாக இருக்கிறார், அதற்காக அவரோடு ஒத்துழைக்க நம்மிடம் கேட்கிறார்.COLTam 57.1
விதைப்பவர்களுக்கு ஒரு வேலை இருக்கிறது; அதாவது, சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளும்படி இதயங்களை ஆயத்தம் பண்ணுவதாகும். ஊழியம் செய்கிறவர்கள் பிரசங்கஞ்செய்ய அதிக நேரம் செலவிடுகிறார்கள்; ஆனால், ஒருவரோடு ஒருவர் மனம்விட்டுப் பேச நேரம் செலவிடுவதில்லை. காணாமற்போன ஆத்துமாக்களுக்கு தனிப்பட்ட முறையில் ஊழியஞ்செய்ய வேண்டியது அவசியம். கிறிஸ்துவைப்போல் பரிவுள்ளவர்களாக ஒவ்வொருவரையும் அணுகி, நித்திய வாழ்க்கை சம்பந்தப்பட்ட மேலான விஷயங்களில் ஆர்வத்தைத் தூண்டவேண்டும். அவர்களுடைய இதயங்கள் இறுகிப்போன வழிதடங்கள் போல இருக்கலாம்; அவர்களுக்கு இரட்சகரை அறிவிப்பது தேவையற்ற முயற்சி போல் தோன்றலாம்; தர்க்கரீதீயாக சாதிக்கத்தவறினாலும், வாக்குவாதம் செய்து நம்பச் செய்யத் தவறினாலும், தனிப்பட்ட விதத்தில் ஊழியம் செய்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படச் செய்யும் போது, கல்லான இதயத்தை அது மிருதுவாக்கலாம், அதனால் சத்தியத்தின் விதை வேர்விடலாம்.COLTam 57.2
விதையானது முட்களால் நெருக்கப்படாமலும், ஆழமற்ற மண்ணில் வாடாமலும் இருக்க விதைப்பவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பத்திலேயே அதன் அடிப்படை நியதிகளை ஒவ்வொருவிசுவாசிக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். கிறிஸ்துவின் தியாக பலியால் இரட்சிக்கப்படுவது மட்டும் போதாது, கிறிஸ்துவைப் போல ஜீவிக்கிறவராகவும், அவருடைய குணத்தைப் பெற்றவராகவும் மாறவேண்டுமென அவருக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். சுபாவ சிந்தைகளை வெறுத்து, பாரங்களைச் சுமக்க ஒவ்வொருவருக்கும் கற்றுத்தர வேண்டும். சுயத்தை வெறுத்து, அவரைப் பின்பற்றி, நல்ல போர்ச்சேவகர்களாக கஷ்டத்தை அனுபவித்து, கிறிஸ்துவிற்காக பணிபுரிவதின் ஆசீர்வாதத்தை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்து, தங்கள் கவலைகளை யெல்லாம் அவர்மேல் வைக்க கற்றுக்கொள்ளட்டும். அவருக்காக ஆத்துமாக்களை ஆதாயஞ்செய்வதிலுள்ள ஆனந்தத்தை ருசி பார்க்கட்டும். காணாமற் போனவர்கள் மேல் அன்பும் அக்கறையும் இருந்தால், சுயம் மறைந்துபோகும். இவ்வுலகத்தின் இன்பங்கள் மக்களை மயக்குகிற தன் ஆற்றலையும், தன் பாரங்களால் நம்பிக்கையிழக்கச் செய்கிற ஆற்றலையும் இழக்கும். சத்தியமாகிய ஏர்க்கொழு தன் வேலையைச் செய்யும். தரிசு நிலத்தை அது உடைக்கும்; அது முட்களின் மேல் பகுதியை மட்டும் நறுக்காமல், அவற்றை வேரோடு பிடுங்கும்.COLTam 57.3