3 - “முன்பு முளையையும் பின்பு கதிரையும்”
விதைப்பவன் குறித்த உவமை பலக் கேள்விகளை எழுப் பிற்று. பூமியில் ராஜ்யத்தை ஸ்தாபிக்க கிறிஸ்து இவ்வுலகிற்கு வரவில்லை என்று அந்த உவமையைக் கேட்ட சிலர் புரிந்து கொண்ட னர்; புரிந்து கொள்ள முடியாத பலர் குழப்பமடைந்தனர். அவர்கள் குழப்பத்தைக் கண்ட கிறிஸ்து வேறு உதாரணங்களைச் சொன்னார்; உலக ராஜ்யத்தை குறித்த எதிர்பார்ப்பிலிருந்து அவர்கள் சிந்தை யைத் திருப்பி, ஆத்துமாவில் கிரியை செய்கிற தேவகிருபை குறித்து சிந்திக்க வைக்க வகைதேடிக்கொண்டிருந்தார்.COLTam 63.1
“பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமான து, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து: இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியென் றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும். பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். மாற்கு 4:26-29.COLTam 63.2
‘அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிற” தோட்டக்காரர் கிறிஸ்துவே . இறுதி மகா நாளில் அவரே பூமியின் அறுவடையை அறுப்பார். கிறிஸ்துவின் பிரதிநிதி களாக ஊழியம் செய்கிறவர்களையும் விதை விதைக்கிறவன் சுட்டிக் காட்டுகிறான். விதையானது ” அவனுக்குத் தெரியாத விதமாய், முளைத்துப் பயிராகிறது” என்று சொல்லப்படுகிறது. ஆனால், தேவனுடைய குமாரனைப் பொறுத்தமட்டில் இது உண்மையல்ல. கண்காணிக்கிற பணியை விட்டு கிறிஸ்து அயர்வதே இல்லை; மாறாக, இரவும் பகலும் கண்விழித்துப் பாதுகாக்கிறார். விதை எவ்வாறு முளைத்து வளர்கிறது என்பது அவருக்குத் தெரியும்.COLTam 63.3
இயற்கையில் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என் பதை விதை பற்றிய உவமை வெளிப்படுத்துகிறது. முளைப்பதற் கான நியதி விதைக்குள் உள்ளது; அந்த நியதியை உள்ளே புகுத்தியவர் தேவன்; எனினும், தானாகவே முளைக்கிற ஆற்றல் விதைக்கு கிடையாது. விதை முளைத்து வளர்வதற்கு மனிதன் தன் பங்கைச் செய்யவேண்டியுள்ளது. அவன் நிலத்தை ஆயத்தப்படுத்தி, வளமுள்ள தாக்கி, பின்னர் விதையைத் தூவவேண்டும். அவன் வயல்களைப் பண்படுத்த வேண்டும். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அவன் அங்கு எதையும் சாதிக்க முடியாது. மனிதனின் எவ்வித பலமும் ஞானமும் விதையிலிருந்து உயிருள்ள செடியை முளைக்கச் செய்ய இயலாது. எவ்வளவு தான் முயன்றாலும், தன்னால் இயன்ற மட்டும் மனிதன் முயற்சிகளை மேற்கொள்ளட்டும், ஆனால் விதைப்பையும் அறுப்பையும் தமது சர்வ்வல்லமையால் அற்புதமாக இணைத்திருப்பவரையே அவன் சார்ந்திருக்க வேண்டும்.COLTam 64.1
விதைக்குள் உயிர் உள்ளது; நிலத்திற்குள் ஆற்றல் இருக்கிறது; ஆனால், எல்லையற்ற ஒரு வல்லமை இரவுபகலாக அதில் செயல் படாவிட்டால் விதை எவ்வித பலனையும் தராது. வறண்ட வயல்களை ஈரப்படுத்த மழை பொழியவேண்டும், சூரியன் வெப்பத்தைக் கொடுக்கவேண்டும், புதைந்திருக்கிற விதைக்கு மின்சக்தி வழங்கப்பட வேண்டும். ஜீவனை உள்ளே வைத்துள்ள சிருஷ்டிகர் மட்டுமே அதனை வெளிக்கொணரமுடியும். தேவ வல்லமையினால் ஒவ்வொரு விதையும் முளைத்து, செடி வளர்கிறது.COLTam 64.2
“பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பது போலவும்,COLTam 64.3
கர்த்தராகிய ஆண்டவர் எல்லாஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.’” ஏசாயா 61:11. வயல் விதைப்பு போன்றே, ஆவிக்குரிய விதைப்பும் உள்ளது; சாத்தி யத்தைப் போதிக்கிறவர் நிலமாகிய இதயத்தை ஆயத்தப்படுத்த வேண்டும்; விதையைத் தூவவேண்டும்; ஆனால், உயிர் கொடுக்கிற வல்லமை தேவனிடமி ருந்து மட்டுமே வருகிறது. ஒரு கட்டத்திற்குமேல் மனித முயற்சி விருதாவாகி விடுகிறது. நாம் வார்த் தையைப் போதிக்க வேண்டும், ஆனால் ஆத்துமாவை உயிர்பிக்கிற, நீதையயும் துதியையும் துளிர்க்கச் செய்கிற வல்லமையை நாம் கொடுக்க முடியாது . வசனம் உபதேசிக்கப்படும் போது, மனித ச க்திக்கும் அப்பாற்பட்ட ஒரு வல்லமை செயல்படவேண்டும். தேவ ஆவியானவரால் மட்டுமே வசனம் உயிருள்ளதாகவும், நித்திய ஜீவனுக்கேதுவாக ஆத்துமாவைப் புதுப்பிக்கிற வல்லமையுள்ளதாகவும் விளங்கும். இந்த உண்மையை தம் சீடர்களுக்கு வலியுறுத்த கிறிஸ்து முயற்சித்தார். அவர்களுடைய பிரயாச ங்களை வெற்றிகரமாக்குகிற எதுவும் அவர்களிடம் இல்லை யென்றும், அற்புதங்களைச் செய்கிற தேவ வல்லமை மட்டுமே வார்த்தையைப்பயன்மிக்கதாக்குகிறது என்றும் அவர் போதித்தார்.COLTam 65.1
விதைக்கிற பணி விசுவாசத்தோடு செய்யப்படவேண்டிய தாகும். விதை எவ்வாறு முளைத்து, வளர்கிறது என்பது அவன் விளங்க முடியாது இரகசியமாகும். ஆனால் தாவரங்களை செழித்து வளரச் செய்ய தேவன் ஏதுகரங்களை வைத்துள்ளார் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருக்கும். விதையை நிலத்தில் விதைக்கும் போது, தன் குடும்பத்திற்கு உணவளிக்கக்கூடிய பயன்மிக்க தானியத்தைத் தூவுகிறான். அதிக பலன் கிடைக்கும் படியாகவே தற்சமயம் தன்னிடமுள்ள பயன்மிக்க ஒன்றை அவன் கொடுக் கிறான். மிகுதியான அறுவடையின் போது பன்மடங்கு பலன் கிடைக்குமென எதிர் பார்த்து அவன் விதையைத் தூவுகிறான். அதுபோலவே, கிறிஸ்துவின் ஊழியக்காரர்களும் தாங்கள் விதைக்கிற விதையின் அறுவடையை எதிர்பார்த்து பிரயாசப்பட வேண்டும்.COLTam 65.2
நல்ல விதையானது உணர்வற்ற, சுயநலமிக்க, உலகப்பிரகா ரமான ஓர் இதயத்திலே சிலகாலம் வெறுமனே புதைந்து கிடக்கலாம்; ஆனால் பிறகு, தேவ ஆவியானவர் ஆத்துமாவில் சுவாசத்தை ஊதும்போது, புதைந்திருக்கிற விதை முளைத்தெழும்பி, இறுதியில் தேவ மகிமைக்காகக் கனிகொடுக்கும். இதுவா அல்லது அதுவா எந்த விதை செழித்து வளரும் என்பதை நமது ஊழியத்தில் நாம் அறிய இயலாது ; இது நாம் தீர்வுகாணவேண்டிய கேள்வியும் அல்ல. நாம் நமது வேலையைச் செய்து, விளைவை தேவனிடத்தில் விட்டு விட வேண்டும். “காலையிலே என் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே பிரசங்கி 1:16. “பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும் ... ஒழிவதில்லை ” என்பது தேவனுடைய மகத்தான உடன்படிக்கையாகும். ஆதி 8:22. இந்த வாக்குறுதியை நம்பியே பயிரிடுகிறவர்கள் நிலத்தைப் பண்படுத்தியும், விதைத்தும் வருகிறார்கள். அதுபோலவே நாமும், ஆவிக்குரிய விதைப்பில் நம்பிக்கை தளராமல், அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும் படி வாய்க்கும் என்று அவர் உறுதியளித் திருப்பதை நம்ப வேண்டும். ஏசாயா 55:11. ‘அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்.”சங்கீதம் 126:6.COLTam 65.3
விதை முளைப்பது, ஆவிக்குரிய வாழ்வில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. செடி வளர்வது, கிறிஸ்தவ வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் அருமையான உருவகமாக இருக்கிறது. இயற்கையில் நிகழ்வதுபோலவேகிருபையிலும் நிகழ்கிறது; உயிர் இருந்தால் அங்கே வளர்ச்சி இருக்கும். செடி ஒன்று வளரவேண்டும் அல்லது மடியவேண்டும். செடியின் வளர்ச்சி அமைதியாக, புலப்படாத வகையில், தொடர்ச்சியாகவும் இருக்கும். அது போலவே, கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சியும் உள்ளது. வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடைய வாழ்க்கை குறைவற்றதாக இருக்கலாம்; ஆனால், தேவ நோக்கம் நம்மில் நிறைவேறுவதற்கு, தொடர்ச்சியான வளர்ச்சி அவசியம். பரிசுத்தமாக்கப்படுதல் என்பது வாழ்நாள் முழுவதும் நடை பெறுகிற ஒரு பணியாகும். வாய்ப்புகள் பெருகும்போது, நமது அனுபவம் பெருகும், நமது அறிவு விருத்தியடையும். பொறுப்புகளைச் சுமக்கும் படியாகப் பெலப்படுவோம். நாம் பெறுகிற சிலாக் கியங்களுக்கேற்ப நமது முதிர்ச்சி அமைந்திருக்கும்.COLTam 66.1
செடி பசுமையாவளர்வதற்கு தேவன் கொடுத்திருப்பவற்றைப் பெற்று, அது வளருகிறது. பூமிக்குள்ளாக அது வேர்களை விடுகிறது. சூரிய வெளிச்சத்திலும், பனித்துளியிலும், மழை நீரிலும் அருந்துகிறது. உயிர்கூறுகளின் தன்மைகளை அது காற்றிடமிருந்து பெறுகிறது; அதுபோலவே கிறிஸ்தவனும் தேவனுடைய ஏதுகரங்களோடு ஒத்துழைத்து வளரவேண்டும். நாம் உதவியற்ற நிலையில் இருப்பதை உணர்ந்து, நாம் முழுமையான அனுபவத்தைப் பெறும்படி நமக்களிக்கப்பட்டிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மேம்படுத்த வேண்டும். செடியானது நிலத்திலே வேர்விடுவதுபோல் நாமும் கிறிஸ்துவில் ஆழமாக வேரிடவேண்டும். செடியானது சூரிய வெளிச் சத்தையும் மழையையும் பனித்துளியையும் பெறுவது போல நாமும் பரிசுத்த ஆவியானவருக்கு நமது இதயங்களைத் திறந்து கொடுக்க வேண்டும். ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினா லேயே” ஊழியம் செய்யப்படவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் ” சகரியா 4:6. நம்முடைய சிந்தைகளை கிறிஸ்துவில் நிலைத்திருக்கச் செய்தால்,” அவர் மழையைப் போல வும், பூமியின் மேல் பெய்யும் முன்மாரி, பின்மாரியைப் போலவும் நம்மிடத்தில் வருவார்.” ஓசியா 6:3. அவர் “செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கிற நீதியின் சூரியனாக நம்மேல் உதிப்பார். மல்கியா 4:2. ‘நாம் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவோம்; .... தானிய விளைச்சலைப்போலச் செழிப்போம்.’” ஓசியா 14:5, 7. கிறிஸ்து நம் சொந்த இரட்சகரென அவரையே சார்ந்திருக்கும் போது, நமக்கு தலையாயிருக்கிற அவருக்குள்ளாக எல்லாவற்றிலும் வளருவோம்.COLTam 66.2
கோதுமையானது ” முன்பு முளையையும் பின்பு கதிரையும் கதிரிலே நிறைந்த தானியத்தையும் விளையச்செய்கிறது.” பயிரிடுகிறவன் தானிய விளைச்சலை எதிர்பார்த்தே விதை விதைக்கிறான், வளருகிற செடியைப் பராமரிக்கிறான். பசிதீர்க்கும் உணவையும் எதிர்கால விளைச்சலுக்கு தேவையான விதையையும் அதிலிருந்து பெற விரும்புகிறான். அதுபோலவே தோட்டக்காரரா கிய தேவனும், தம் முடைய பிரயாசத்திற்கும் தியாகப்பலிக்கும் பிரதிபலனாக அறுவடையை எதிர்பார்க்கிறார். மனிதர்களுடைய இதயங்களில் தம்மையே மீண்டும் பிறக்கச்செய்ய கிறிஸ்து முயல் கிறார்; அதைதம்மில் விசுவாசமுள்ளவர்கள் மூலமாக நிறைவேற்று கிறார். கிறிஸ்தவ வாழ்க்கையின் நோக்கம் கனிகொடுப்பதாகும். அதாவது, கிறிஸ்துவின் குணம் மற்றவர்களில் உருவாகும் படி, விசுவாசியின் உள்ளத்தில் முதலாவது அது உருவாக வேண்டும்.COLTam 67.1
செடி முளைப்பதும், வளர்வதும், கனிகொடுப்பதும் தனக்காக அல்ல, மாறாக விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிற வனுக்கு ஆகாரத்தையும் ” கொடுப்பதற்கு . ஏசாயா 55:10. அதுபோலவே, எந்த மனிதனும் தனக்காக வாழக்கூடாது. இவ் வுலகத்தில் கிறிஸ்தவன் பிற ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும்படி கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருக்கிறான்.COLTam 68.1
சுயநலத்தோடு வாழ்கிற வாழ்க்கையில் வளர்ச்சியோ கனிகொடுத்தலோ இருக்காது. கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்ச கராக நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், நீங்கள் உங்களை மறந்து, மற்றவர்களுக்கு உதவ முயலவேண்டும். கிறிஸ்துவின் அன்பைக் குறித்துப் பேசுங்கள், அவருடைய நற்குணத்தை எடுத்துக்கூறுங்கள். உங்களுக்குள்ள ஒவ்வொரு கடமையையும் செய்யுங்கள். ஆத்துமாக்கள் குறித்த பாரம் இதயத்தில் இருக்கட்டும். காணாமல் போனோரை இரட்சிக்கும்படி உங்களுடைய திரானிக்குத் தக்கதாக உங்களால் முடிந்த வழிகளிலெல்லாம் முயலுங்கள். சுயநல மற்ற அன்பின் ஆவியும், பிறருக்காகப் பிரயாசப்படுகிற ஆவியுமாகிய கிறிஸ்துவின் ஆவியை நீங்கள் பெற்றுக்கொள்ளும் போது, நீங்கள் வளர்ந்து கனிகொடுப்பீர்கள். ஆவியானவரின் கிருபைகள் குணங்களில் முதிர்ச்சியடையும். உங்கள் விசுவாசம் அதிகரிக்கும், நம்பிக்கைகள் உறுதி பெறும், உங்கள் அன்பு பூரணமடையும். கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள அனைத்திலும் கிறிஸ்துவின் சாயலை அதிகமதிகமாக பிரதிபலிப்பீர்கள்.COLTam 68.2
“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை ” கலாத்தியர் 5:22-23. இந்தக் கனி ஒருபோதும் அழியாமல், வளர்ச்சியடைந்து, நித்திய ஜீவனுக்கேதுவான அறுவடையைக் கொடுக்கும்.COLTam 68.3
“பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான்.’” தம்முடைய சபை யிலே தாம் வெளிப்படவேண்டுமென ஏக்கமிகுந்தவாஞ்சையோடு கிறிஸ்து காத்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் குணம் அவருடைய ஜனங்களில் பூரணமாக உருவாக்கப்படும் போது, அவர்களை தமக்குச் சொந்தமானவர்களெனச் சொல்லி, சேர்த் துக்கொள்ள அவர் வருவார்.COLTam 68.4
கர்த்தருடைய வருகையை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதைத் துரிதப்படுத்துவதும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கு முரிய சிலாக்கிய மாகும். 2பேதுரு 3:12. அவரது நாமத்தைத் தரித்திருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் அவருடைய மகிமைக்காகக் கனி கொடுத்திருந்தால், உலகம் முழுவதிலும் சுவிசேஷத்தின் விதை யானது எவ்வளவு துரிதமாக விதைக்கப்பட்டிருக்கும்! கடைசி மகா அறுவடை சீக்கிரத்தில் ஆயத்தமாகும், மதிப்புமிக்க தானியத்தைச் சேர்க்கும் படியாக கிறிஸ்து வருவார்.COLTam 69.1