Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    9 - முத்து

    நம் மீட்பருடைய மீட்கும் அன்பின் ஆசீர்வாதங்கள் விலையுயர்ந்த ஒரு முத்துக்கு ஒப்பிடப்பட்டுள்ளன. நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரி பற்றின உவமையின் மூலம் அவர் இந்தப்பாடத்தை எடுத்துக்கூறுகிறார். அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.” விலையுயர்ந்த அந்த முத்து கிறிஸ்துவே . பிதாவின் மகிமை முழுவதும், தேவத்துவத்தின் பரிபூரணமும் அவரில் அடங்கியிருக்கிறது. அவர் பிதாவினுடைய மகிமையின் பிரகாசமாகவும் அவருடைய தன்மையின் சொரூபமாகவும் இருக்கிறார். தேவனுடைய சாற்றுப்பண்புகளின் மகிமை அவருடைய குணத்தில் வெளிப்படுகிறது. பரிசுத்த வேதாகமத்தின் ஒவ்வொரு பக்கமும் அவருடைய ஒளியில் பிரகாசிக்கிறது. கிறிஸ்துவினுடைய நீதியானது, தூய்மையும் வெண்மையுமான முத்தைப்போல எவ்வித பழுதற்றதும், கறையற்றதுமாக இருக்கிறது. தேவனுடைய மகத்தான, விலையேறப்பெற்ற இந்த ஈவை மேம்படுத்த எந்த மனிதனாலு முடியாது. அது பிழை யற்றது. கிறிஸ்துவிற்குள் ‘ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” கொலோ 2:3; அவரே “தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்பு மானார்” 1கொரிந்தியர் 1:31. இவ்வுலகிலும் இனி வரும் உலகிலும் மனித ஆத்துமாவின் தேவைகளையும் ஏக்கங்களையும் திருப்தி செய்யக்கூடிய அனைத்தும் கிறிஸ்துவில் காணப் படுகிறது. நம்முடைய மீட்பர்தாம் விலையேறப்பெற்ற முத்து; அதோடு ஒப்பிடும் போது மற்ற அனைத்தும் நஷ்டமே.COLTam 113.1

    கிறிஸ்து “தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” யோவான் 1:11. தேவனுடைய வெளிச்சம் உலகத்தின் இருளில் பிரகாசித்தது, “இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை .” யோவான் 1:5. ஆனால் பரலோகத்தின் ஈவு குறித்து எல்லாருமே அலட்சியமாக இருந்துவிடவில்லை. ஆத்துமாவின் பொக்கிஷமாக தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றை இலக்கியங்களிலும் அறிவியலிலும் அஞ்ஞான மார்க்கங்களிலும் ஊக்கத்தோடும் தீவிரமாகவும் தேடினவர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்தார்கள். யூதர்கள் மத்தியிலும் தாங்கள் பெற்றிராததைத் தேடினவர்கள் இருந்தார்கள். பாரம்பரிய மதம் அவர்களுக்குத் திருப்தியளிக்க வில்லை ; ஆவிக்குரிய, அதன் தரத்தை உயர்த்துகிற ஒன்றுக்காக ஏங்கினார்கள். கிறிஸ்து தெரிந்து கொண்ட சீடர்கள் யூதர்கள் மத்தியில் இருந்தவர்கள், கொர்நேலியுவும் எத்தியோப்பிய மந்திரியும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள். பரலோக வெளிச்சத்திற்காக அவர்கள் ஏக்கத் தோடு ஜெபித்துவந்தார்கள். கிறிஸ்து அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டபோது, சந்தோஷமாக அவரை ஏற்றுக் கொண்டார்கள்.COLTam 114.1

    முத்தானது ஓர் ஈவு என்று உவமை சொல்லவில்லை. அந்த வியாபாரி தன்னிடமிருந்த்தை எல்லாம் விற்று அதை வாங்கினான். கிறிஸ்து ஓர் ஈவாகக் கொடுக்கப்பட்டதாக வேதாகமம் சொல்வதால், இதன் அர்த்தம் என்னவென்று அநேகர் சிந்திக்கிறார்கள். அவர் ஈவுதான்; ஆனால் முழுஆவியோடும், முழு ஆத்துமா வோடும், முழுசரீரத்தோடும் தங்களை அவரிடம் அர்ப்பணிப் பவர்களுக்கே அவர் ஈவாக இருக்கிறார். அவருடைய அனைத்து நிபந்தனைகளுக்கும் விருப்பத்தோடு கீழ்ப்படிகிறவர்களாக வாழ்ந்து, நம்மை கிறிஸ்துவிடம் அர்ப்பணிக்க வேண்டும். நாமும், நாம் பெற்றுள்ள அனைத்து தாலந்துகளும், திறமைகளும் ஆண்டவருடைய சொத்து; அவருடைய பணிக்காக அர்ப்பணிக்கவேண்டும். இவ்விதமாக, நம்மை நாம் முற்றிலுமாக கிறிஸ்துவிடம் அர்ப்பணிக்கும்போது, அவர் பரலோகத். அப்பொழுது, விலையுயர்ந்த முத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.COLTam 114.2

    இரட்சிப்பு ஓர் இலவச ஈவு ; ஆனாலும் அதை வாங்கவும் விற்கவும் வேண்டும். தேவனுடைய இரக்கம் நிர்வாகம் செய்கிற சந்தையில், விலையுமின்றி பணமுமின்றி வாங்கப்பட்டதாக அந்த விலையுயர்ந்த முத்து சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தச் சந்தையில் அனைவரும் பரலோகப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். சத்தியம் எனும் ஆபரண பொக்கிஷசாலை அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது. ‘இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான் என்று கர்த்தர் சொல்லுகிறார். எந்தப் பட்டய மும் அதன் வாசலைக் காக்கிறதில்லை. அதன் உள்ளேயிருந்தும், வாசலிலிருந்தும் ‘வாருங்கள்’ என்று சொல்லப்படுகிறது. “நீ ஐசுவரியவானாகும் படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை ... வாங்கிக்கொள்” என்று இரட்சகரின் குரல் ஆவலோடும் அன்போடும் நம்மை அழைக்கிறது. வெளி 3:8,18.COLTam 115.1

    கிறிஸ்துவின் சுவிசேஷம் அனைவரும் பெறவேண்டிய ஓர் ஆசீர்வாதம். ஐசுவரியவான்களைப்போல ஏழைகளும் இரட் சிப்பை வாங்க முடியும்; ஏனென்றால் அது உலக செல்வத்தால் பெறக்கூடியதல்ல. அது மனமார்ந்த கீழ்ப்படிதலாலும், கிறிஸ்து விலைகொடுத்து வாங்கின பொருளாக நம்மை முற்றிலும் அவரிடம் அர்ப்பணிப்பதாலும் பெறக் கூடியது. உயர்ந்த பட்ச கல்வியாலும் கூட, ஒரு மனிதனை தேவனண்டை கொண்டுவர இயலாது. அனைத்து வகை இம்மைக்குரிய, ஆவிக்குரிய அனுகூலங்களை பரிசேயர்கள் அனுபவித்து வந்தார்கள். அவர்கள் சுய நிறைவோடும் பெருமையோடும் தங்களை “ஐசுவரியாவன்களென்றும், திரவியசம் பன்னர்களென்றும் எங்களுக்கு ஒரு குறையும் இல்லையென்றும் ” சொன்னார்கள். ஆனால் நிர்ப்பாக்கியமுள்ளவர்களாகவும், பரிதபிக்கப்படத் தக்கவர்களும், தரித்திரர்களாகவும், குருடர்களாகவும், நிர்வாணிகளாகவும் இருந்தார்கள். வெளி 3:17. விலையுயர்ந்த முத்தை கிறிஸ்து அவர்களுக்கு வழங்கியபோது, அதை அலட்சியமாக வாங்க மறுத்தனர்; அதனால் அவர்களைப் பார்த்து, “ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்” என்று சொன்னார். மத்தேயு 21:31.COLTam 115.2

    இரட்சிப்பை நாம் சம்பாதிக்க முடியாது. ஆனால், அதைப் பெறுவதற்காக இவ்வுலகத்தில் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு தேடுவது போல ஆவலோடும் விடாமுயற்சியோடும் தேட வேண்டும்.COLTam 116.1

    விலையுயர்ந்த இந்த முத்தை நாம் தேடவேண்டும்; ஆனால், உலகச் சந்தைகளிலோ, உலகப்பிரகாரமான வழிகளிலோ அல்ல. இது தேவனுக்கு சொந்தமானது, எனவே பொன்னையோ வெள்ளியையோ விலையாகக் கொடுக்கவேண்டியதில்லை. முழுமனதுடன் கீழ்ப்படிய தேவன் அழைக்கிறார். உங்கள் பாவங்களை விட்டுவிடும் படி கேட்கிறார். “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோட கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும் படிக்கு அருள் செய்வேன் என்று கிறிஸ்து சொல்கிறார். வெளி. 3:21.COLTam 116.2

    எப்போதும் பரலோக முத்தைத் தேடுவதுபோல் காணப்படுகிற சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள், தங்கள் தவறான பழக்கவழக்கங்களை முற்றிலுமாக விட்டுவிடுவதில்லை. கிறிஸ்து அவர்களில் ஜீவிக்கும்படி சுயத்திற்கு மரிப்பதில்லை. ஆகையால், விலையுயர்ந்த முத்தை கண்டடைகிறதில்லை! பரிசுத்தமற்ற குறிக்கோளையும், உலக ஈர்ப்புகளின் மேலான நாட்டத்தையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. சிலுவையைச் சுமந்து, சுயமறுப்போடும் தியாகத்தோடும் கிறிஸ்துவைப் பின்பற்றிச் செல்வதில்லை. முழுக்கிறிஸ்தவர்களாக அல்லா மல், ஏறக்குறைய கிறிஸ்தவர்களாயிருந்து, பரலோக ராஜ்யத்தை சமீபித்து விட்டது போலக் காணப்படுகிறார்கள். ஆனால் அதற்குள் பிரவேசி க்க முடியாது. முற்றிலும் இரட்சிக்கப்படாமல், ஏறக்குறைய இரட்சிக்கப்படுவதென்பது, ஏறக் குறைய அல்ல, முற்றிலும் தொலைந்துபோன நிலையாகும்.COLTam 116.3

    நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியின் உவமை இரண்டு முக்கிய விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. அதாவது, பரலோக ராஜ்யத்தை மனிதர்கள் தேடுவதையும், அதேசமயம் இழந்து போன தம் சுதந்தரத்தை கிறிஸ்து தேடுவதையும் சுட்டிக்காட்டுகிறது. நல்ல முத்துக்களைத் தேடுகிற பரலோக வியாபாரியான கிறிஸ்து, இழந்து போன மனுகுலத்தை விலையுயர்ந்த முத்தாகக் கண்டார். பாவத்தால் தீட்டுப்பட்டு, விழுந்துபோன மனிதனில் மீட்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டார். ஒருபோதும் விழுந்து போகாதவர்களைவிட, சாத்தானுடன் போராடி போராட்டக்களமாகத் திழ்ந்து, அன்பின் வல்லமை யால் மீட்கப்பட்டவர்களே மீட்பரின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள். மனுக்குலத்தை தேவன் துஷ்டர்களாக, தகுதியற்றவர்களாகப் பார்க்கவில்லை; கிறிஸ்துவுக்குள்ளாக அதைப் பார்த்தார்; மீட்பின் வல்லமையால் அவர்கள் அவர்கள் எவ்விதம் மாறக்கூடுமெனப் பார்த்தார். அந்த முத்தை வாங்கு வதற்காக சர்வலோகத்தின் ஐசுவரியங்களை எல்லாம் திரட்டிக் கொடுத்தார். அந்த முத்தைக் கண்டுபிடித்த இயேசு, அதை தமது கிரீடத்திலேயே வைத்துக்கொண்டார். “அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.’‘சகரியா 9:16; “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள். ‘‘ மல்கியா 3:17)COLTam 116.4

    கிறிஸ்துவே விலையேறப்பெற்ற முத்து, அந்தப் பொக்கிஷத் தைப் பெறுவது நம் மிகப்பெரிய சிலாக்கியம்; நாம் அதிகம் தியானிக்க வேண்டிய கருத்தும் கூட. அந்த நல்ல முத்தின் மகத் துவத்தை பரிசுத்த ஆவியானவரே மனிதருக்கு வெளிப்படுத்து கிறார். விசேஷமாக, பரிசுத்த ஆவியானவரின் வல்லமை வெளிப்படும் சமயம்தான் அந்தப் பரலோக ஈவைத் தேடி, கண்டுபிடிப்பதற்கான சமயமாகும். கிறிஸ்துவின் நாட்களில் அநேகர் சுவிசேஷத்தைக் கேட்டார்கள்; ஆனால் தவறான போதனைகளால் சிந்தைகள் இருளடைந்திருந்தன. எனவே, கலிலேயாவின் அந்த எளிய ஆசிரியரை தேவன் அனுப்பினார் என்பதை உணரவில்லை. ஆனால், கிறிஸ்து பரலோகம் சென்ற பிறகு, தாம் மத்தியஸ்தராக ஊழியம் செய்யவிருந்த ராஜ்யத்தில் முடி சூட்டப்பட்டதை, பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட சம்பவம் காட்டியது. பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவி யானவர் ஊற்றப்பட்டார். உயிர்த்தெழுந்த இரட்சகரின் வல்லமையை கிறிஸ்துவின் சாட்சிகள் அறிவித்தார்கள். கிறிஸ்து வின் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டு இருளடைந்திருந்த உள்ளங்களை பரலோக ஒளி ஊடுருவிச் சென்றது. அவர் “இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும், அருளுகிறதற்காக, .... அதிபதியாகவும் இரட்சகராகவும் ... உயர்த்தப்பட்டதை ” கண்டார்கள். அப்5:31. பரலோக மகிமை அவரைச் சூழந்திருந்ததையும், கலகத்தை விட்டு திரும்புகிறவர்களுக்கு அருளும்படி அளவில்லா ஐசுவரியங்களை தம் கரங்களில் வைத்திருந்ததையும் கண்டார்கள். பிதாவினுடைய ஒரேபேறானவரின் மகிமையை அப்போஸ்தலர்கள் எடுத்துரைத்த போது, மூவாயிரம் ஆத்துமாக்கள் மனமாற்றமடைந்தார்கள். தாங்கள் பாவநிலையில், கறைபடிந்து இருந்ததைக் காணவும், கிறிஸ்து தங்கள் சிநேகிதராகவும் மீட்பராகவும் இருந்த்தைக் காணவும் வழி நடத்தப்பட்டார்கள். பரிசுத்த ஆவியானவரின் வல்லமை மனிதர்கள் மேல் அமர்ந்தபோது கிறிஸ்து உயர்த்தப் பட்டு, மகிமையடைந்தார். தாங்கள் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரே நிந்தையும், வேதனையும், மரணத்தையும் சந்தித்தாரென விசுவாசத்தார்கள். ஆவியானவர் கிறிஸ்துவை வெளிப்படுத்தியதால், அவருடைய வல்லமை, மகத்துவம் பற்றி உணர்ந்தார்கள்; விசு வாசத்தோடு தங்கள் இரு கரங்களையும் அவருக்கு நேராக நீட்டி, “விசுவாசிக்கிறேன்” என்றார்கள். COLTam 117.1

    பின்பு, உயிர்த்தெழுந்த இரட்சகர் குறித்த நற்செய்தியானது மனிதர்கள் குடியிருந்த உலகத்தின் கடையாந்திர பகுதிகள் மட்டும் கொண்டு செல்லப்பட்டது. மனமாறினவர்கள் எல்லா இடங்களிலிருந்தும் திரள் திரளாக சபையில் சேர்ந்தார்கள். விசு வாசிககள் மறுமனமாற்றமடைந்தனர். விலையேறப்பெற்ற முத்தைத் தேடுவதில் கிறிஸ்தவர்களோடு பாவிகளும் சேர்ந்து கொண்டார்கள். பெலவீனன் தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாகத் தேவனைப் போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியது. சகரியா 12:8. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் சகோதரனை தேவ அன்போடும், தயாளத் தோடும் நோக்கினான். ஒரே நோக்கம்தாம் மேலோங்கியிருந்தது. எல்லாவற்றையும் விட ஒரே குறிக்கோள்தான் காணப்பட்டது. அனைவரும் ஏகசிந்தை யோடு காணப்பட்டார்கள். கிறிஸ்துவின் குணத்தை வெளிப்படுத்தவேண்டும், அவருடைய இராஜ்யத்தின் வளர்ச்சி க்காகப் பிரயாசப்படவேண்டும் என்பதே விசுவாசிகளின் ஒரே இலட்சியமாக இருந்தது. எண்ணமுடையவர்களாகவும் பேராவல் கொண்டவர்களாகவும் இருந்தனர். ‘விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களா யிருந்தார்கள் ... கர்த்தராகிய இயேசுவின் உயிர்த் தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத் தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது” அப்4:32, 33; ‘இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டுவந்தார் அப் 2:47. ஒட்டுமொத்த சபை யையும் கிறிஸ்துவின் ஆவியானவர் இயக்கினார்; ஏனென்றால், விலையேறப்பெற்ற முத்தை அவர்கள் கண்டுகொண்டார்கள்.COLTam 118.1

    இதே நிகழ்வுகள், மிகுந்த வல்லமையோடு மீண்டும் நிகழ விருக்கின்றன. பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது முன்மாரியாகும். பின்மாரியானது அதைக்காட் டிலும் மிகுதியாயிருக்கும். நாம் கேட்டு, பெறும்படி ஆவியானவர் காத்துக்கொண்டிருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமை யால் கிறிஸ்துவானவர் மீண்டும் பூரணமாக வெளிப்படயிருக்கிறார். விலையுயர்ந்த முத்தின் மதிப்பை மனிதர்கள் கண்டுகொண்டு, அப்போஸ்தலனாகிய பவுலைப்போல, ” ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக்கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லுவார்கள். பிலிப்பியர் 3:8.COLTam 119.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents