Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    1 - உவமைகள் மூலம் கற்பித்தல்

    உலகத்தில் தாம் செய்த ஊழியப்பணியின் நியதிகளையே கிறிஸ்து தம் உவமைகள் மூலமும் கற்பித்தார். அவருடைய தெய் வீக குணத்தையும் செயல்களையும் நாம் புரிந்து கொள்வதற்காக, அவர் மனிதசாயலைத் தரித்து, நம் மத்தியில் வாசம் செய்தார். மனித இயல்பில் தேவ இயல்பு வெளிப்பட்டது. காணக்கூடிய மனித உரு வத்தில், காணக்கூடாத தேவமகிமை வெளிப்பட்டது. தெரிந்தவற்றி லிருந்து தெரியாதவற்றை மக்கள் கற்றுக்கொள்ளும் படி, பூமிக் கடுத்த தகவல்கள் மூலமாக, பரலோகத்திற்குரியவை வெளிப்படும் படி, மனித சாயலில் தேவன் வெளிப்பட்டார். கிறிஸ்துவின் போதனையிலும் அதைக் காணலாம். தெரிந்தவற்றை வைத்து, தெரியாதவற்றைவிளக்கினார். மக்களுக்குப் பழக்கமானவை மூலம் தெய்வீக சத்தியங்களை விளக்கினார்.COLTam 23.1

    “இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமை களாகப் பேசினார்; என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்ற முதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்து வேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இப்படி நடந்தது” என்று மத்தேயு 13:34, 35கூறுகின்றது. ஆவிக்குரிய வற்றை எடுத்துக்காட்டும் ஊடகமாக இயற்கை உள்ளது; இயற்கைப் பொருட்களும், அவர் போதகத்தைக் கேட்டவர்களின் அனுபவங்களும் வேத சத்தியங்களோடு தொடர்புள்ளவை. இயற்கை உலகிலிருந்து ஆவிக்குரிய ராஜ்யத்திற்குள் வழிநடத்தி, மனிதனை தேவ னோடும், பூலோகத்தைப் பரலோகத்தோடும் இணைக்கிற சத்தியச் சங்கிலியின் கண்ணிகளாக கிறிஸ்துவின் உவமைகள் உள்ளன.COLTam 23.2

    இயற்கையை உதாரணமாகவைத்து கிறிஸ்து பேசினார். தம் சொந்தக் கரங்களால் தாம் சிருஷ்டித்திருந்தவற்றைப் பற்றிதான் பேசினார். அவர்தாமே கொடுத்திருந்த ஆற்றல்களும் இயல்புகளும் அவற்றில் இருந்தன. ஆதாமும் ஏவாளும் தங்கள் ஏதேன் வீட்டில் எங்கும் தேவனுடைய அறிவையும் தெய்வீகப் போதனை யையும் கண்டார்கள். ஞானத்தைக் கண்ணாரக்கண்டு, இருதயத்தில் உணர்ந்தார்கள். ஏனெனில், தேவனுடைய சிருஷ்டிப்புகள் மூலம் அவரோடு உரையாடி மகிழ்ந்தார்கள். இந்தப் பரிசுத்த தம்பதிகள் உன்னதமானவருடைய பிரமாணத்தை மீறினவுடனே, தேவ முகத்தின் பிரகாசம் இயற்கையிலிருந்து விலகிவிட்டது. பாவத்தினால் பூமி கெட்டு, தீட்டுப்பட்டது. கேடடைந்த நிலையிலும் கூட, அழகு மிக்கவிஷயங்கள் பலமிஞ்சியிருக்கின்றன . விளக்கப்பாடங்களாக தேவன்வைத்திருப்பவை இன்னும் முற்றிலும் அழிந்துவிடவில்லை. இயற்கை தனது சிருஷ்டிகரைக்குறித்து பேசுகிறது; அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.COLTam 24.1

    கிறிஸ்துவின் நாட்களில், மக்கள் இந்தப் பாடங்களை மறந்து போயிருந்தார்கள். தேவனுடைய கிரியைகளிலிருந்து அவரை அறிவது கிட்டத்தட்ட இல்லாமல் போயிருந்தது. மனுக்குலத்தின் பாவத்தன்மையானது சிருஷ்டிப்பின் சௌந்தர்யத்தை வெறுப்பால் மூடியிருந்தது; தேவனை வெளிப்படுத்தவேண்டிய அவரது கிரியைகள், அவரை மறைக்கும் திரைகளாயின. மக்கள் சிருஷ்டிகரைத் தொழுதுசேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள். இவ் வாறு அஞ்ஞானிகள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரா னார்கள்.’ ரோமர் 1:25, 21. எனவே இஸ்ரேவலில், தேவனுடைய போதனைகளுக்குப் பதிலாக, மனித போதனைகள் புகுந்தன. இயற்கை மட்டுமல்ல; பலிமுறைகள், வேத வாக்கியங்கள் என்று தம்மை வெளிப்படுத்த அவர் கொடுத்திருந்த அனைத்துமே புரட் டப்பட்டு, அவரை மறைப்பதற்கான வழிகளாயின.COLTam 24.2

    சத்தியத்தை மறைத்திருந்த திரையை அகற்ற கிறிஸ்து முயன் றார். இயற்கையின் மீது பாவம் விரித்திருந்த திரையை விலக்கி, சிருஷ்டி ஒவ்வொன்றும் வெளிப்படுத்தவேண்டிய ஆவிக்குரிய மகிமையைத் திறந்து காட்ட அவர் வந்தார். இயற்கையின் போ தனைகளையும், வேதாகமப் போதனைகளையும் அவருடைய வார்த்தைகள் ஒரு புதிய கண்ணோட்டத்தில் காட்டின. அவற்றை ஒரு புதிய வெளிப்பாடாகக் காட்டினார்.COLTam 24.3

    இயேசு அழகான லீலி மலரைப் பறித்து, அதை அங்குள்ள குழந்தைகள் மற்றும் குழுமியிருந்த வாலிபர் கையிலே கொடுத்தார். சூரிய வெளிச்சம் போல ஒளிர்ந்த தம் பிதாவின் முகசாயலைப் பெற்றிருந்த அவரது இளமைததும்பும் முகத்தை அவர்கள் நோக்கிப்பார்த்த போது, பின்வரும் பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். ‘காட்டுப்புஷ்பங்கள் (மிக எளிமையான இயற்கை அழகோடு) எப் படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முத லாய்த்தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை’ என்று சொன்னார். அதைத் தொடர்ந்து ஓர் இனிமையான நிச்சயமும் முக்கியமான பாடமும் தந்தார்: அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித் தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?’COLTam 25.1

    சிறு குழந்தைகள், வாலிபர்கள் தவிர மற்றவர்களுக்கும் இவற்றை மலைப்பிரசங்கத்தின்போது சொன்னார். அவர் பேசி னதைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தாரில் கவலையும் குழப்பங்களும் ஏமாற்றமும் துக்கமும் நிறைந்து, மனதில் புண்ணாகிப் போயிருந்த ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். பின்னும் இயேசு : “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என் னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவை களெல்லாம் உங்களுக்கு வேண்டிய வைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார் ” என்றார். பிறகு, கூடியிருந்த திரளான வர்களை நோக்கி தம் கரத்தை விரித்தவராக, “முதலாவது தேவ னுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப் பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” என்றார். மத்தேயு 6:28-33.COLTam 25.2

    காட்டுபுஷ்பங்களுக்கும், வயல்வெளிக்கும் கிறிஸ்து கொடுத் திருந்த பாடத்தை அவர்தாமே விளக்கிக் கூறினார். ஒவ்வொரு காட்டு மலரிலும் புல்லரும்பிலும் இந்தப் பாடத்தை நாம் படிப்பதை அவர் விரும்புகிறார். அவரது வார்த்தைகள் நம்பிக்கை நிறைந்தவையும், தேவனில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துபவையுமாக இருக்கின்றன.COLTam 25.3

    சத்தியத்தை விளக்கிக்கூற இயற்கையின் ஒவ்வோர் அம்சத் தையும் கிறிஸ்து பயன்படுத்தினார். அவர் சத்தியம் குறித்து அள வில்லாத அறிவுடையவர்; அவர் போதனைகள் ஆழமிக்கவை. தினமும் கண்ணில் படுகிற காட்சிகள் எல்லாமே ஏதாவது ஆவிக் குரிய சத்தியத்தோடு சம்பந்தப்பட்டவை; அதனால் தான் இயற்கை யிலிருந்து ஆண்டவர் தம் உவமைகளை எடுத்தார்.COLTam 26.1

    தம் போதனைகளைக் கேட்டவர்கள் சாத்தியத்தைப் புரிந்து கொண்டு, இரட்சிப்பிற்கேற்ற ஞானமுள்ளவர்களாகும்படி, இயேசு தமது ஆரம்பகால ஊழியத்தின் போது, எளிய வார்த்தைகளில் பேசினார். ஆனாலும், பலரது இதயங்களில் சத்தியம் வேரூன்றாமல் விரைவில் அகன்று போயிற்று. எனவே, இயேசு : அவர்கள் கண்டும் காணதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால் நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள்” என்றார். மத்தேயு 13:13-15.COLTam 26.2

    அறிகிற ஆவலை எழுப்ப இயேசுவிரும்பினார். அக்கறையற்ற மக்களை ஏவி எழுப்பி, அவர்கள் இதயத்தில் சத்தியத்தைப் பதிக்க வகைதேடினார். உவமை மூலம் போதிப்பது அன்று பிரபலமாயிருந்தது. யூதர் மட்டுமல்ல, பிறதேசத்தாரும் கூட உவமைகளை மதித்துக் கவனித்தார்கள். போதிப்பதற்கு அதைவிட சிறந்த முறை எதையும் கிறிஸ்து பயன்படுத்தியிருக்க முடியாது. தெய்வீக விஷயங்களை அறிகிற ஆவலுடன் அவருடைய போதனைகளைக் கேட்க வந்தி ருப்பார்களானால், அவர் பேசியவை புரிந்திருக்கும். ஏனெனில், உண்மையிலேயே அறிய விரும்பினவர்களுக்கு விளக்கிச் சொல்ல அவர் எப்போதும் ஆயத்தமாயிருந்தார்.COLTam 26.3

    கிறிஸ்து சொன்ன சத்தியங்களை ஏற்றுக்கொள்ளவோ விளங் கிக்கொள்ளவோ மக்கள் ஆயத்தமாக இல்லை. அதனாலும் அவர் உவமைகளால் அவர்களுக்கு உபதேசித்தார். வாழ்க்கை சம்பவங்களோடும் அனுபவங்களோடும் இயற்கையோடும் சம்பந்தப்படுத் திப் பேசியபோது, மக்கள் கவனித்தார்கள். இருதயங்களில் தாக்க மடைந்தார்கள். விளக்கப்பாடமாக இயேசு பயன்படுத்தியவற்றை பிறகு பார்த்தபோதெல்லாம், தெய்வீக ஆசிரியர் சொன்னவை நினைவிற்கு வந்தன. பரிசுத்த ஆவியானவருக்கு மனதைத் திறந்து கொடுத்தவர்கள், இரட்சகருடைய உபதேசத்தின் முக்கியத்துவத்தை அதிகமாகப் புரிந்துகொண்டார்கள். மறைபொருட்கள் தெளிவா யின ; புரியக் கடினமானவை தெளிவாயின.COLTam 26.4

    ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் நுழைவதற்கான ஒரு வழியை இயேசு தேடினார். பலதரப்பட்ட எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி, பலதரப்பட்ட மக்களைக் கவரும் விதத்தில் சத்தியத்தின் பல்வேறு அம்சங்களை இயேசு கூறினார். அவர்களது அன் றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சம்பந்தப்படுத்திப் பேசியது, அவர்களது ஆவலைத் தூண்டியது. இரட்சிகரின் பேச்சைக் கேட்ட அனைவரும் தாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லது மறக்கப்பட்டவர்கள் என்கிற உணர்விலிருந்து விடுபட் டார்கள். மிகவும் இழிவான, கொடிய பாவிகள், பரிவோடும் கனி வோடும் பேசுகிற குரலை அவரது போதனையில் கேட்டார்கள்.COLTam 27.1

    உவமைகளால் அவர் போதித்ததற்கு மற்றுமொரு காரணம் இருந்தது. அவரைச் சுற்றிலும் மக்கள் பெருந்திரளாக இருந்தார்கள். அவர்களில் ஆசாரியர்களும், ரபிமார்களும், வேதபாரகர்களும், மூப்பர்களும், ஏரோதியர்களும், அதிபதிகளும், உலகப்பற்றுள்ள வர்களும், மதவெறியர்களும், பேராசையுள்ளவர்களும் காணப் பட்டார்கள். அவரிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கவேண்டு மென்று அதிகமாக விரும்பினார்கள். அவரைக் குற்றங்காணும்படி அவர் ஏதாவது பேசுகிறாரா என்று கேட்கவும், உலகத்தையே தம் பின்னால் திருப்பிவிடுவதுபோலத் தெரிந்த அவரை ஒரேயடியாக வாயடைக்கவும், அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் அந்த ஒற்றர் கூட்டமும் பின்தொடர்ந்தது. அவர்களுடைய குணத்தை இரட்சகர் நன்கு அறிந்திருந்தார். சனகரீம் சங்கத்தில் வழக்குத் தொடுக்க ஏதுவான எந்தக் குற்றத்தையும் அவர்கள் கண்டுபிடிக்க முடியாத வகையில் சத்தியத்தைக் கூறினார். உயர்பதவியில் இருந்தவர்களின் துன்மார்க்க செயல்களையும்மாய்மாலத்தையும் உவமைகளின் மூலம் கண்டித்தார். கூரான சாத்தியங்களை உருவகமாகச் சொன்னார்; அப்படியல்லாமல் நேரடியாகச் சொல்லிக் கண்டித் திருந்தால், அவருடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்த்திருக்க மாட்டார்கள். மேலும், சீக்கிரமே அவருடைய ஊழியத்திற்கு முடிவுகட்டியிருப்பார்கள். ஒற்றர்களைத் தவிர்த்த அதே நேரத்தில், தவறை அடையாளங்காட்டின சத்தியத்தை தெளிவாகச் சொன்னார். இதயத்தில் உண்மையுள்ளவர்கள் அவருடைய உபதேச ங்களால் நன்மையடைந்தார்கள். தேவனுடைய சிருஷ்டிப்புகள் அவருடைய ஞானத்தையும், முடிவில்லா கிருபையையும் தெளிவாக எடுத்துக் காட்டின. இயற்கையின் மூலமாகவும் வாழ்க்கையின் அனுபவங்கள் தேவனைக் குறித்து மக்களுக்குப் போதித்தார். எப்படியென்றால், காணப்படாத வைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற் கொண்டு, தெளிவாய்க் காணப்படும்... ரோமர் 1:20.COLTam 27.2

    இரட்சகர் உவமைகளின் மூலமாகக் கொடுத்திருந்த போதனைகளில் உண்மையான உயர்நிலைக்கல்வியை அமைத்து உருவாக்குகிறது எது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்து விஞ்ஞானத்தின் (அறிவியலின்) ஆழமான உண்மைகளை மனிதருக்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கலாம். அதினால் பல நூற்றாண்டுகளின் உழைப்பையும் ஆராய்ச்சியையும் ஊடுருவக் கூடிய விஞ்ஞான இரகசியங்களை எளிதில் வெளிப்படுத்தியிருக் கலாம். சிந்தனைக்கு உணவளித்து, கடைசிக்கால புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்க மளிக்கும் வண்ணம் அறிவியல் வழி முறைப்படி ஆலோசனை வழங்கியிருக் கலாம்; ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. உலக மேன்மைக்காகக் கதவுகளைத் திறந்துவைப்பதின்மூலம் ஆவலைப் பூர்த்தி செய்யவோ அல்லது மனிதனின் பேராவலை திருப்திப்படுத்தவோ அவர் ஒன்றும் கூறவில்லை . தமது அனைத்துப் போதனைகளிலும், கிறிஸ்து மனிதனுடைய மனதை எல்லையற்ற பரம்பொருளாகிய தேவனுடைய மனதோடு தொடர்பு கொள்ளச் செய்தார். தேவனைக்குறித்தும், தமது வார்த்தையைக் குறித்தும், தமது கிரியைகளைக் குறித்தும் மனிதர்கள் வெளியிட்டுள்ள கோட்பாடுகளை மக்கள் படிக்கும் படியாக அவர் வழி நடத்தவில்லை . அவரது கிரியைகளிலும், அவரது வார்த்தைகளிலும் அவரது அருட்செயல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தப் பட்டவைகளிலே அவரை நோக் கிப்பார்க்கும்படியாக மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.COLTam 28.1

    கருத்தியல்பான கொள்கைகள் பற்றி கிறிஸ்து பேசவில்லை. மாறாக, குணவளர்ச்சிக்கு அவசியமான, மனிதர்கள் தேவனை அறிந்துகொள் வதற்கான திறனை அதிகரிக்கிற, நன்மை செய்யும் திறனைப் பெருக்குகிற விஷயங்கள் பற்றிப் பேசினார். நன்னடத் தையுடன் சம்பந்தப்பட்ட, நித்திய வாழ்க்கையில் பற்றை உண்டாக் குகிற சத்தியங்களை மக்களுக்குச் சொன்னார்.COLTam 28.2

    கிறிஸ்துவே இஸ்ரவேலரின் வளர்ச்சிக்கான வழியைச் சொன் னார். ஆண்டவருடைய நியமங்கள், கட்டளைகள் பற்றி இப்படி யாகக் கட்டளையிட்டார்: நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கையின் மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுது வாயாக என்றார். உபா 6:7-9. இந்தக் கட்டளையை எவ்வாறு நிறை வேற்ற வேண்டும், தேவராஜ்யத்தின் பிரமாணங்கள் மற்றும் நியதிகளின் அழகும் மதிப்பும் வெளிப்படும் படி அவற்றை எவ் வாறு எடுத்துக் கூற வேண்டும் என்பதை தம்முடைய போதனை யிலேயே இயேசு காண்பித்தார். தம்முடைய சிறப்பு பிரதிநிதிகளாக இஸ்ரவேலருக்குப் பயிற்சியளித்த போது, மலைகள், பள்ளத்தாக்குகள் மத்தியிலே ஆண்டவர் அவர்களைக் குடியிருக்கச் செய்திருந்தார். தங்களுடைய குடும் வாழ்விலும் சரி, வழிபாட்டு முறையிலும் சரி, இயற்கையோடும், தேவ வார்த்தை யோடும் எப்போதும் தொடர்பில் இருந்தார்கள். ஆகவேதான், கிறிஸ்து தம் சீடர்களுக்கு ஏரிக்கரைகளிலும், மலையடிவாரங் களிலும், வயல்களிலும், தோட்டங்களிலும் அமர்ந்து போதித்தார். எடுத்துக்காட்டாக அவர் பயன்படுத்தினவற்றை அங்கே அவர்கள் காணமுடிந்தது. கிறிஸ் துவைப்பற்றி கற்றுக்கொண்டது, அவருடைய பணியில் அவரோடு ஒத்துழைத்து செயல்பட அந்த அறிவு உதவியது.COLTam 29.1

    எனவே, நாமும் கூட சிருஷ்டிப்பின் மூலமாக சிருஷ்டிகரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இயற்கை என்னும் புத்தகம் ஒரு மாபெரும் பாடப்புத்தகம். அவருடைய குணத்தை மற்றவர்களுக்குப் போதிக்கவும், தொலைந்துபோன ஆடுகளை ஆண்டவருடைய மந்தைக்குத் திருப்பவும், வேதாகமத்துடன் சேர்த்து அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தவேண்டும். தேவனுடைய கிரியைகளை ஆராயும் போது, பரிசுத்த ஆவியானவர் மனதிலே உணர்வைத் தூண்டுகிறார். விவாத அடிப்படையில் எழுகின்ற உணர்வல்ல இது; தேவனை அறிய இயலாதபடி மனம் இருளடைந்தாலொழிய, அவரைக் காணக்கூடாதபடி கண்மங்கினாலொழிய, அவருடைய சத்தத்தைக் கேட்க்க்கூடாதபடி செவி மந்தமானா லொழிய, மற்றப்படி ஆழமான அர்த்தம் பதிந்துவிடும், எழுதப்பட்ட வார்த்தையின் மேலான ஆவிக்குரிய சாத்தியங்கள் இதயத்தில் உணர்த்தப்படும்.COLTam 29.2

    இயற்கையிலிருந்து பெறுகிற இந்தப் பாடங்கள், எளிமையா னவை, தூய்மையானவை, அவைதாம் இவற்றை மதிப்புமிக்கதாக்கு கின்றன. இந்த ஆதாரத்திலிருந்து கிடைக்கிற பாடம் அனைவருக்கும் தேவையானதாகும். இயற்கையின் அழகுதானை ஆத்துமாவை பாவத்திலிருந்தும், உலக ஈர்ப்புகளிலிருந்தும் விலக்கி, பரிசுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் தேவனுக்கும் நேராக வழி நடத்துகிறது.COLTam 30.1

    அறிவியல், தத்துவம் என்ற பெயர்களால் பொய்யாக அழைக் கப்படும் மனிதரின் கொள்கைகளும், ஊகங்களும்தான் பெரும் பாலும் மாணவருடைய சிந்தைகளில் நிறைந்திருக்கின்றன. இயற் கையோடு நெருங்க அவர்களைப் பழக்க வேண்டும். படைப்பின் தேவன்தாம் கிறிஸ்தவத்தின் தேவன் என்பதை அவர்கள் கற்றுக் கொள்வார்களாக. இயற்கைக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள ஒற்றுமையை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் பார்க்கிற அல்லது கையிட்டுச் செய்கிற ஒவ்வொன்றும் குணக்கட்டுமானத்திற்கான பாடமாக இருக்கவேண்டும். அவ்வாறுதான் மனத்திறன்கள் பெலப்படும், குணம் வளர்ச்சியடையும், ஒட்டுமொத்த வாழ்க் கையும் மேம்படும்.COLTam 30.2

    உவமைகள் மூலம் கிறிஸ்து போதித்த்தற்கும், ஓய்வுநாள் கொடுக்கப்பட்ட நேரடித்தொடர்பு இருந்தது. தேவனுடைய கையின் கிரியைகளில் மனிதர்கள் அவரைக் கண்டுகொள்ளும்படி, தம் சிருஷ்டிப்பு வல்லமையின் நினைவுச்சின்னமாக தேவன் கொடுத்தார். சிருஷ்டிகருடைய கிரியைகளில் அவருடைய மகிமை யைக் காணும்படி ஓய்வுநாள் நம்மை அழைக்கிறது. படைத்தவரின் மகிமையை அவரது படைப்பின் கிரியைகளில் நாம் காணும்படி ஓய்வு நாள் நம்மை அழைக்கிறது. இயேசு இதை நம்மிடம் விரும்புவதால், இயேசு தம்முடைய அருமையான உபதேசங்களை இயற்கையின் அழகுகளில் பொதிந்து வைத்துள்ளார். மற்ற நாட்களைக் காட்டிலும், பரிசுத்த ஓய்வுநாளிலே, இயற்கையிலே தேவன் நமக்காக எழுதிவைத்துள்ள செய்திகளை நாம் ஆராய வேண்டும். நம்முடைய இரட்சகரின் உவமைகளை அவர் பேசிய இடங்களாகிய வயல்கள், தோட்டங்களிலிருந்தும், திறந்தவெளியி லிருந்தும், புற்களுக்கும் மலர்களுக்கும் மத்தியிலிருந்தும் கற்றறிய வேண்டும். இயற்கையோடு ஒன்றும் போது, கிறிஸ்து நமக்குள் பிரச ன்னமாகி, தம்முடைய சமாதானத்தையும் அன்பையும் நாம் உணரும்படியாகச் செய்வார்.COLTam 30.3

    ஓய்வுநாள் சம்பந்தமாக மட்டுமல்ல, வாரத்தின் மற்ற வேலை நாட்கள் சம்பந்தமாகவும் கிறிஸ்து போதித்திருக்கிறார். உழுது, விதைக்கிறவனுக்கு தேவையானஞானம் அவரிடம் உள்ளது. நமது இருதயத்தில் அவரது கிருபை செயல்படும் விதத்தை உழுது, விதைத்து, பண்படுத்தி, அறுவடை செய்கிற வேலை மூலம் விளக்கிக் காட்டுகிறார். இவ்வாறாக, ஒவ்வொரு உபயோகமான தொழிலிலிருந்தும், வாழ்க்கையின் ஒவ்வொரு தொடர்புகளிலும் தேவனுடைய சத்தியத்தைச் சொல்லும் ஒரு பாடத்தை நாம் காண அவர் விரும்புகிறார். அப்படிச் செய்யும் போது, நம்முடைய அன்றாட உழைப்பு நம்முடைய கவனத்தை ஈர்த்து, தேவனை மறக்கும்படிச் செய்யாது ; அது எப்போதும் நம்மைப் படைத்தவரையும் மீட்டவரையும் நினைவூட்டும். நம் குடும்பக் கடமைகளிலும், பிழைப்புக்கடுத்த வேலைகளிலும் தேவனைக்குறித்த சிந்தனையா னது ஒரு தங்க இழை போன்று ஜொலித்துக்கொண்டிருக் கும். அவருடைய முகத்தின் மகிமை மீண்டும் இயற்கையின் மீது தங்கு வதை நாம் காணலாம். பரலோக சத்தியங்களின் புதிய பாடங்களை எப்போதும் கற்கிறவர்களாகவும், அவருடைய பரிசுத்த சாயலிலே வளர்கிறவர்களாகவும் காணப்படுவோம். இவ்விதமாக, நாம் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்போம். நாம் அழைக்கப்பட்ட நிலைமையில், தேவனுக்கு முன்பாக நிலைத்திருப்போம். ஏசாயா 54:13; 1கொரி. 7:24.COLTam 31.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents