17 - “இது இந்த வருஷமும் இருக்கட்டும்”
நியாயத்தீர்ப்பு குறித்து எச்சரித்தபோது, இரக்கத்தோடு கொடுக்கப்படும் அழைப்பையும் சேர்த்தே கிறிஸ்து போதித்தார். “மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார்” என்று சொன்னார். லூக்கா 9:56. “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.” யோவான் 3:17. தேவன் நீதியும், நியாயமுமுள்ளவர் என்பதின் அடிப்படையில் தான் அவருடைய அன்பின் பணி அமைந்திருந்தது என்பதை கனிதராத அத்திரம் குறித்த உவமை எடுத்துக் கூறுகிறது.COLTam 212.1
தேவனுடைய இராஜ்யத்தின் வருகை குறித்து கிறிஸ்து மக்களை எச்சரித்து வந்தார். அவர்களுடைய அறியாமையையும் அலட்சியத்தையும் வன்மையாகக் கண்டித்தார். ஆகாயத்தின் அடையாளங்களைப் பார்த்து, சீதோஷண நிலையை உடனடியாகக் கணிக்க முடிந்தது; ஆனால் அவருடைய ஊழியப்பணியை தெளிவாகச் சுட்டிக்காட்டின காலங்களின் அடையாளங்களை பகுத்தறிய முடியவில்லை COLTam 212.2
பரலோகத்தில் எங்களுக்கு இடமுண்டு, கடிந்து கொள்ளுதலின் செய்தியெல்லாம் மற்றவர்களுக்குத்தான் என்று அக்காலத்தவரும் நினைத்தார்கள்; இக்காலத்தினரும் நினைக்கிறார்கள். இயேசுவின் பேச்சைக் கேட்க வந்திருந்தவர்கள் மிகுந்த பரபரப்பை ஏற் படுத்தியிருந்த ஒரு சம்பவத்தை இயேசுவிடம் கூறினார்கள். யூதேயாவின் ஆளுனரான பொந்தியு பிலாத்துவின் நடவடிக்கைகள் சில ஜனங்களைப் புண்படுத்தியிருந்தன. எருசலேமில் மக்கள் கலகத்தில் ஈடுபட்டார்கள்; அதை வன்முறையால் பிலாத்து அடக்க முயன்றான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனுடைய போர்ச் சேவகர்கள் தேவாலயப்பிராகாரங்களுக்குள் நுழைந்து, அங்கே பலிமிருகங்களைப் பலியிட்டுக்கொண்டிருந்த சில கலிலேய யாத்திரிகளை வெட்டிச் சாய்த்தனர். கொலையுண்டவர்கள் பாவிகளாக இருந்ததால் தான் அவர்களுக்கு அது நேரிட்ட தாக யூதர்கள் கருதினார்கள். இந்த வன்முறை செயலை மற்றவர்களிடம் சொன்னவர்களுக்கு, தாங்கள் நல்லவர்கள் என்கிற எண்ணம் மனதிற்குள் மறைந்திருந்தது. தாங்கள் நல்ல நிலையில் இருந்ததால், தங்களை சிறந்தவர்களென்றும், அந்தக் கலிலேயர்களைவிட தேவதயவுக்கு பாத்திரரென்றும் நினைத்தார்கள். அவர்களுக்கு தண்டனை தேவைதான் என்று உறுதியாக நம்பியதால், அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து இயேசு பேசுவதைக் கேட்க ஆவலோடிருந்தார்கள்.COLTam 212.3
தங்களுடைய எஜமானின் கருத்தைக் கேட்பதற்கு முன்னர், தங்களுடைய கருத்து எதையும் தெரிவிக்க கிறிஸ்துவின் சீடர்கள் துணியவில்லை. மற்றவர்களின் குணங்களை நியாயந்தீர்ப்பது பற்றியும், இந்தத் தண்டனைதான் ஒருவருக்கு சரியானதென தங்கள் குறைவான அறிவால் அளவிடுவது குறித்தும் தெளிவான பாடங்களை சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்திருந்தார். ஆனாலும், மற்றவர்களைவிட அந்தக் கலிலேயரை பாவிகளென்று கிறிஸ்து பழித்துரைக்க ஆவலோடிருந்தார்கள். ஆனால் அவர் சொன்ன பதில் அவர்களைத் திகைக்கவைத்தது.COLTam 213.1
அங்கிருந்த பெருங்கூட்டத்தாரை நோக்கி, “அந்தக் கலிலே யருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப்பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களா? அப்படியல்லவென்று உங்களுக் குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” என்று இரட்சகர் சொன்னார். அவர்கள் தங்கள் இருதயங்களைத் தாழ்த்தவும், பாவங்களிலிருந்து மனந்திரும்பவும் அதிர்ச்சியூட்டும் அச்சம்பவங்கள் அனுமதிக்கப்பட்டன. பழி வாங்கும் எண்ணம் உப்பிக்கொண்டிருந்தது; கிறிஸ்துவில் அடைக்கலம் புகாத ஒவ்வொருவருக்குள்ளும் அது வெடித்துச்சிதறயிருந்தது.COLTam 213.2
சீடர்களோடும் திரளானவர்களோடும் பேசிக்கொண்டிருந்த இயேசு, எருசலேம் சேனைகளால் சூழப்படுவதைதம் தீர்க்கதரிசன கண்களால் கண்டார். தெரிந்து கொள்ளப்பட்ட பட்டணத்தை நோக்கி அந்நியர்கள் அணிவகுக்கிற சத்தம் அவருக்குக் கேட்டது; அந்த முற்றுகையில் ஆயிரமாயிரமாக மக்கள் மடிவது அவருக்குத் தெரிந்தது. அந்தக் கலிலேயர்கள் போல யூதர்கள் பலர் தாங்கள் பலியிடுகிறபோதே தேவால யப்பிரகாரங்களில் கொல்லப்படு கிறார்கள். தனிநபர்களுக்கு ஏற்பட்டிருந்த பேரழிவுகள், அதேபோல் பாவத்தில் நிறைந்திருந்த ஒரு தேசத்திற்கு தேவன் கொடுத்த எச்சரிப்களாக இருந்தன. ‘நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்” என்று இயேசு சொன்னார். தவணையின் காலம் சற்று கூடுதலாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. தங்கள் சமாதானத்திற்கடுத்த விஷயங்களை அறிந்துகொள்ள இன்னமும் அவர்களுக்கு காலம் இருந்தது.COLTam 214.1
“ஒருவன் தன் திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி : இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்தி மரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையும் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது” என்று அவர்களிடம் சொன்னார்.COLTam 214.2
கிறிஸ்துவினுடைய வார்த்தைகளின் பொருளை அங்கிருந்தவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பே இல்லை. எகிப்தி லிருந்து கொண்டுவரப்பட்ட திராட்சச்செடி என்று இஸ்ர வேலைக் குறித்து தாவீது பாடியிருக்கிறான். “சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே” என்று ஏசாயா எழுதியிருந்தார். ஏசாயா 5:7. கர்த்தருடைய திராட்சத் தோட்டத்திலிருந்த அத்திமரமானது இரட்சகர் வந்திருந்தபோது இருந்த தலைமுறையினரைச் சுட்டிக்காட்டியது; அவர்கள் அவருடைய விசேஷித்த கவனிப்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருந்தார்கள்.COLTam 214.3
தமது மக்களைக் குறித்த தேவனுடைய நோக்கமும் அவர்களுக்கு முன்னிருந்த மகிமையான வாய்ப்புகளும், பின்வரும் வார்த்தை களில் அழகாகச் சொல்லப்படுகின்றனச அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின் நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.’” ஏசாயா 51:3. மரணத்தருவாயிலிருந்த யாக்கோபு, ஆவியானவருடைய ஏவுதலினால், தான் மிகவும் நேசி த்த குமாரனைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: ‘யோசேப்பு கனிதரும் செடி ; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின் மேல் படரும்.” மேலும் அவர், உன் தகப்பனுடைய தேவன்” உனக்குத் துணையாயிருப்பார். ச ர்வவல்ல வர், “உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங் களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும் ... உன்னை ஆசீர்வதிப்பார்” என்று சொன்னார். ஆதி 49:22, 25. தேவன் இஸ்ரவேலை ஜீவ ஊற்றண்டையில் நற்குல திராட்சச்செடியாக நட்டார். அவர் தமது திராட்சத்தோட்டத்தை ‘மகா செ ழிப்பான மேட்டிலே’ உருவாக்கினார். “அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டார்.’” ஏசாயா 5:1,2COLTam 215.1
“அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.” ஏசா 5:2. கிறிஸ்துவின் நாட்களில் இருந்தவர்கள் ஆரம்பக்கால யூதர்களைவிடதங்களை மிகுந்த பக்திமான்களாக்க் காட்டிக்கொண்டார்கள்; ஆனால் அவர்களைவிட இவர்கள் தேவனுடைய ஆவியானவரின் இனிய கிருபைகள் இல்லாதவர்களாகக் காணப்பட்டார்கள். யோசேப் வாழ்க்கையில் மணம் வீசின கனிகளான நற்குணங்கள், அந்த யூத தேசத்தாரிடம் காணப்படவில்லை.COLTam 215.2
தேவன் தமது குமாரன் மூலமாக கனிகளைத் தேடினார். அவர் அதைக் காணமுடியவில்லை. நிலத்தைக் கெடுக்கும் விருட்சம் போல இஸ்ரவேல் இருந்தது. தோட்டத்தல் கனிதரும் விருட்சத்தின் இடத்தை ஆக்கிரமித்து நின்றதால், அது உயிரோடிருந்ததே ச பமாகக் காணப்பட்டது. தேவன் வழங்கத் திட்டமிட்டிருந்த ஆசீர்வாதங்களை உலகத்திற்கு அது கொடுக்கவில்லை. மற்ற தேசத்தார் மத்தியில் இஸ்ரவேலர்கள் தேவனை தவறாகச் சி த்தரித்தார்கள். பயனற்றவர்களாக இருந்தது மட்டுமல்ல, பெரிய தடையாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மார்க்கம் பெருமள விற்கு அவர்களை தவறாக வழிநடத்தியது, இரட்சிப்பிற்குப் பதிலாக அழிவைத் தேடித்தந்தது.COLTam 215.3
அந்த உவமையில், மரம் கனிகொடாவிட்டல் அதை வெட்டிப் போடவேண்டும் என்று மரத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தோட்டக்காரன் கேள்வி கேட்கவில்லை. ஆனால் கனிகொடாத மரத்தின் மீது எஜமானுக்கிருந்த அக்கறையை அறிந்து தானும் அக்கறை காட்டினான். அந்த மரம் வளர்ந்து கனிகொடுதாலொழிய எஜமானனுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுப்பது ஒன்றுமிராது. எஜமானனின் விருப்பத்தைப் புரிந்து கொண்டவன்: ‘இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன். கனிகொடுத்தால் சரி” என்று சொல்கிறான்.COLTam 216.1
உத்தரவாதமற்ற ஒரு மரத்திற்கு தேவையானதைச் செய்ய தோட்டக்காரன் தயங்கவில்லை . அதை அதிகமாகப் பராமரிப் பதற்கு ஆயத்தமாகிறான்.COLTam 216.2
அதன் வளர்ச்சிக்கு சாதகமாக சுற்றுப்புறங்களை மாற்றவும், அனைத்துவித பராமரிப்பை வழங்கவும் விரும்புகிறான்.COLTam 216.3
தோட்டத்தின் எஜமானும், தோட்டக்காரனும் அந்த அத்தி மரத்தின்மே ஒரேவித அக்கறை காட்டினார்கள். அது போல பிதாவும், குமாரனும் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் மேல் ஒரேவிதமாக அன்புகூர்ந்தார்கள். அவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்படுமென அங்கிருந்தவர்களிடம் கிறிஸ்து சொல்கிறார். அவர்கள் நீதியின் விருட்சங்களாக மாறி, உலகிற்கு ஆசீர்வாதமாகக் கனி கொடுப்பதற்காக தேவன் தம் அன்பால் வகுத்த அனைத்து வழிகளும் பிரயோகப்படுத்தப்பட யிருந்தன.COLTam 216.4
தோட்டக்காரனின் முயற்சிக்கு என்ன பலன் கிடைத்ததென்று அந்த உவமையில் இயேசு சொல்லவில்லை. அதைச் சொல்லா மலேயே உவமையை முடிக்கிறார். அன்று உவமையைக் கேட்டுக்கொண்டிருந்த தலைமுறையினரின் கையில் தான் முடிவு இருந்தது. இந்த முக்கியமான எச்சரிப்பு அவர்களுக்குக் கொடுக் கப்பட்டது. “கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம்.” இறுதியான அந்த வார்த்தைகளின் படி சம்பவிப்பது அவர்களுடைய கையில்தான் இருந்தது. ஏற்கனவே இஸ்ரவேலில் ஏற்பட்டிருந்த பேரழிவுகளைச் சுட்டிக் காட்டி, கனிகொடாத மரத்திற்கும் அத்தகைய அழிவு நேரிட வேண்டாமென்று தோட்டத்தின் எஜமான் இரக்கத்தோடு முன்னரே எச்சரிக்கிறார்.COLTam 216.5
இதே எச்சரிப்பானது தலை முறை தோறும் இன்று மட்டும் கொடுக்கப்படுகிறது. ஆ! அக்கறையற்ற இதயமுடையவர்களே, கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தில் கனியற்ற மரமாக இருக்கிறீர்களா? இந்த அழிவின் தீர்ப்பு சீக்கிரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படயிருக்கிறதா? எவ்வளவு காலமாக அவருடைய ஈவுகளைப் பெற்றிருக்கிறீர்கள்? உங்களிடம் அன்பை எதிர்பார்த்து எவ்வளவு காலம் அவர் காத்து இருந்திருப்பார்? அவருடைய திராட்சத்தோட்டத்தில் நாட்டப்பட்டு, தோட்டக்காரனுடைய சி றப்பான கவனிப்பல், எப்படிப்பட்ட சிலாக்கியங்களைப் பெற்றுள் ளீர்கள் ! அன்பின் சுவிசேஷச் செய்தியானது எத்தனை முறை உங்களுடைய இருதயத்தைத் தொட்டுள்ளது! கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துள்ளீர்கள், அவருடைய சரீரமான திருச்சபையில் வெளிப்பிரகாரமாக ஓர் அங்கத்தினராக இருக்கிறீர்கள். ஆனாலும், மகத்தான அன்புள்ளம் படைத்தவரோடு உயிருள்ள உறவு இருக்கிறதாவென் பதையே அறியாதிருக்கிறீர்கள். அவருடைய வாழ்க்கை எனும் அலை உங்கள் மூலமாகப் பாய்ந்து செல்வதில்லை. அவருடைய குணத்தின் இனியகிருபைகளான’ ஆவியின் கனிகள்” உங்களுடைய வாழ்க்கையில் காணப்படுவதில்லை.COLTam 217.1
கனிகொடாத மரமானது மழையையும், சூரிய ஒளியையும், தோட்டக்காரனுடைய கவனிப்பையும் பெறுகிறது. நிலத்திலிருந்து ஊட்டச்சத்தைப் பெறுகிறது. ஆனால் கனிகொடாத அதின் கிளைகள் நிலத்தின் மேல் நிழல்களைப் படரவிடுகிறது, அதனால் கனிகொடுக்கிற செடிகள் அதன் நிழலில் தழைக்க முடிவதில்லை. அதுபோல, உங்கள் மேல் அருளப்படுகிற தேவ ஈவுகளும், உலகத்திற்கு எந்த ஆசீர்வாதத் தையும் கொடுப்பதில்லை. மற்றவர்களுடைய சிலாக்கியங்களையும் கொள்ளையிடுகிறீர்கள்; உங்களுக்கு அவை கொடுக்கப்படா திருந்தால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.COLTam 217.2
நிலத்தை ஆக்கிரமித்திருக்கிற விருட்சமாக நீங்கள் இருப்பதை, இன்னும் அதிகமாக உணராமல் இருக்கலாம். ஆனாலும் தேவன் தம்முடைய மிகுந்த இரக்கத்தினால் உங்களை இன்னமும் வெட்டிப்போடவில்லை. உங்களை வெறுப்புடன் நோக்குவதுமில்லை. அவர் உங்களைக் கண்டுகொள்ளாமலும் இருப்பதில்லை அல்லது அழிந்து போகவும் விடுவதில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இஸ்ரவேலைக் குறித்து அவர் புலம்பியதை போல, உங்களைப் பார்த்தும் புலம்புகிறார்: ‘எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ர வேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்?... என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும் படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக் கிறேன்” ஓசியா 11:8, 9. மனதுருகுகிற இரட்சகர் உங்களைப் பார்த்து “இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்” என்று சொல்கிறார்.COLTam 217.3
இஸ்ரவேலுக்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட தவணையின் காலத்தில், சோர்ந்துபோகாத அன்புடன் கிறிஸ்து ஊழியம் செய் தார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.’‘லூக்கா 23:34. அவர் பரலோகம் சென்ற பிறகு, சுவிசேஷமானது முதலாவதாக எருச லேமில் பிரசங்கிக்கப்படட்டது. அங்கே பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார். உயிர்த்தெழுந்த இரட்சகரின் வல்லமையை முதல் சுவிசேஷ சபை வெளிப்படுத்தியது. அங்கே ஸ்தேவான் சாட் சியைக்கூறி, தன்ஜீவனை ஒப்புக்கொடுத்தான். தேவதூதன் முகம் போலிருந்த ” ஸ்தேவான், அங்கே தன் சாட்சியைப் பகிர்ந்து கொண்டு, அதினிமித்தம் இரத்தசாட்சியாக மரித் தார். அப் 6:15. கொடுக்க முடிந்த்தை எல்லாம் பரலோகம் கொடுத்தது. “நான் என் திராட்சத் தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்?” என்று கிறிஸ்து கேட்டார். ஏசாயா 5:4. உங்கள் மீது அவருக்கிருக்கும் அக்கறையும், பராமரிப்பும் அதிகரிக்கிறதே தவிர குறைய வில்லை . இன்னமும் அவர், “நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர் பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத் தாதடிக்கு அதை இரவும் பகலும் காத்துக்கொள்வேன்” என்று சொல்கிறார். ஏசாயா 27:3.COLTam 218.1
“கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால்? தெய்வீக ஏதுகரங்களுக்குச் செவிகொடாத இருதயம் கடினமாகிறது; அன்பிறகு பரிசுத்த ஆவியானவரின் தாக்கங்களை உணரமுடியாத நிலைக்குச் செல்கிறது. அப்போதுதான், ‘இதை வெட்டிப் போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது” என்று சொல்லப்படும்.COLTam 218.2
இன்று அவர் உங்களை அழைக்கிறார்: ‘இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு... நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன். நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப் பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப் போல் மலருவான்; லீபனோனைப்போல வேரூன்றி நிற்பான். அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப் போலச் செழித்து திராட்சச்செடிகளைப்போலபடருவார்கள் .... என்னாலே உன்கனியுண்டாயிற்று. ஓசியா 14:1-8.COLTam 219.1