Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    20 - எகிப்தில் யோசேப்பு

    இந்த நேரத்தில் யோசேப்பு தன்னை சிறைபிடித்தவர்களோடு எகிப்துக்குப் போகும் வழியில் இருந்தான். அந்த வண்டிகள் கானா னின் எல்லைகளை நோக்கித் தென்புறமாக பிரயாணப்பட்டபோது, தன் தகப்பனுடைய கூடாரங்கள் அமைந்திருந்த குன்றுகளை தூரத்தில் அந்தப்பையனால் அடையாளம் காணமுடிந்தது. தனிமையிலும் வேதனையிலும் இருக்கப்போகிற அந்த அன்பான தகப்பனை நினைத்த போது அவன் மனங்கசந்து அழுதான். மீண்டும் தோத்தானின் காட்சிகள் அவன் முன் வந்தன. கோபமான தன்னுடைய சகோதரர்களைக் கண்டான்; அவர்களுடைய மூர்க்க மான பார்வைகள் தன்மேல் பதிக்கப்பட்டதை உணர்ந்தான். அவனுடைய வேதனையான மன்றாட்டுகளைச் சந்தித்த காயப் படுத்தி அவமதிக்கிற வார்த்தைகள் அவனுடைய காதுகளில் தொனித்தன. நடுங்கின இருதயத்தோடு எதிர்காலத்தை நோக்கி னான். சூழ்நிலையில் எப்படிப்பட்ட ஒரு மாற்றம் மிகவும் மென்மை யாக நேசத்துக்குரிய மகனிலிருந்து தள்ளிவிடப்பட்ட உதவியற்ற ஒரு அடிமையாக! தனிமையானவனும் நண்பர்களற்றவனுமாக, அவன் போய்க் கொண்டிருக்கிற அந்நிய நாட்டிலே அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? சற்று நேரம் கட்டுப்படுத்த முடியாத துக்கத்திற்கும் பயத்திற்கும் ஆப்பட்டான்.PPTam 251.1

    ஆனால் தேவனுடைய ஏற்பாட்டில் இந்த அனுபவமும் கூட அவனுக்கு ஒரு ஆசீர்வாதமாகவிருந்தது. வருடங்கள் கற்றுக் கொடுத்திருக்கக் கூடாதிருந்ததை இந்த சில மணி நேரங்களில் அவன் கற்றுக்கொண்டான். காண்பித்த அன்பைப்போலவே பல மும்மென்மையுமான அவனுடைய தகப்பன், அதிகமாகதிளைத்தது பட்சபாதம் காட்டினதினால் அவனுக்குத் தவறு இழைத்திருந்தார். இந்த ஞானமற்ற முன்னுரிமை அவனுடைய சகோதரர்களை கோபப்படுத்தி, அவனுடைய வீட்டிலிருந்து அவனைப் பிரித்த இந்தக் கொடுமையான செயலுக்குத் தூண்டியது. அதனுடைய விளைவுகள் அவனுடைய சொந்த குணத்திலும் கூட வெளிக்காட்டப்பட்டிருந்தன. இப்போது சரிசெய்யப்பட வேண்டிய திருந்த தவறுகள் உற்சாகப்படுத்தப்பட்டிருந்தன. அவன் சுயதிருப் தியும் கடினமுள்ளவனுமாக ஆகிக்கொண்டிருந்தான். தகப்பனுடைய கவனிப்பின் மென்மையில் பழகியிருந்த அவன், தனக்கு முன்பிருந்த கசப்பானதும் கவனிப்பாரற்றதுமான ஒரு அந்நியன் மற்றும் அடிமையின் வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்களோடு இணைந்து போக ஆயத்தமற்றவனாயிருந்ததை உணர்ந்தான்.PPTam 252.1

    பின்னர் அவனுடைய நினைவுகள் அவனுடைய தகப்பனுடைய தேவனிடத்திற்குத் திரும்பியது. குழந்தைப் பருவத்தில் அவரை நேசித்து அவருக்குப் பயப்பட அவன் கற்பிக்கப்பட்டிருந் தான். வீட்டைவிட்டு உயிர்தப்பிப் பிழைக்க ஓடியபோது யாக்கோபு கண்ட தரிசனத்தைக் குறித்த கதையை தன் தகப்பனின் கூடாரத் திலிருந்து அவன் பல வேளைகளில் கேட்டிருந்தான். யாக்கோபுக்கு ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தங்களையும் அவைகள் எவ்வாறு நிறைவேறின என்பதையும் எவ்வாறு தேவைப்பட்ட மணி நேரத்திலே தேவனுடைய தூதர்கள் போதிக்கவும் காப்பாற்றவும் ஆறுதல் படுத்தவும் வந்தார்கள் என்பதையுங்குறித்து அவனுக்குச் சொல்லப்பட்டிருந்தது. மனிதனுக்கு ஒரு மீட்பரை ஏற்படுத்தினதில் தேவனுடைய அன்பைக் குறித்து அவன் கற்றிருந்தான். இப்போது இந்த அனைத்து விலையுயர்ந்த பாடங்களும் அவன் முன் தெளிவாக வந்தது. தன் பிதாக்களுடைய தேவன் தன்னுடைய தேவனாகவும் இருப்பார் என்று யோசேப்பு நம்பினான். அவன் அவ்வப்போது தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, கடத்தப்பட்ட தேசத்திலே இஸ்ரவேலைக் காப்பவர் தன்னோடு இருக்க வேண்டும் என்று ஜெபித்தான்.PPTam 252.2

    தேவனுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த தீர்மானத்தினால் எல்லா சூழ்நிலைகளிலும் பரலோக இராஜாவினுடைய பிரஜையாக தேவனுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த தீர்மானத்தினால் அவனுடைய ஆத்துமா சிலிர்த்தது. ஒருமுகமான இருதயத்தோடு அவன் ஆண்டவரைச் சேவிப்பான். அவனுடைய சோதனைகளை மனபலத்தோடு சந்தித்து, ஒவ்வாரு கடமையையும் நம்பிக்கையோடு செய்வான். அந்த ஒரு நாளின் அனுபவம் யோசேப்பின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. அதன் பயங்கரமான பேராபத்து நேசிக்கப்பட்ட ஒரு குழந்தையிலிருந்து, சிந்திக்கக்கூடிய சுயகட்டுப்பாடுள்ள தைரியமான மனிதனாக அவனை மாற்றினது. எகிப்திற்கு வந்தபோது, யோசேப்பு இராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாக இருந்த போத்தி யாரிடம் விற்கப்பட்டான்.PPTam 252.3

    அவனுக்கு சேவை செய்வதில் அவன் பத்து வருடங்கள் இருந் தான். இங்கே அவன் சாதாரணமான சோதனைகளுக்கு வெளிப் படுத்தப்படவில்லை. விக்கிரக ஆராதனைக்கு மத்தியில் அவன் இருந்தான். பொய் தேவர்களின் ஆராதனை இராஜாங்கத்தின் எல்லா ஆடம்பரத்தாலும் சூழப்பட்டிருந்து, அப்போது இருந்த மிகவும் நாகரீகமான தேசத்தின் செல்வத்தாலும் கலாச்சாரத்தாலும் ஆதரிக்கப்பட்டிருந்தது. எனினும் யோசேப்பு தன்னுடைய கபட மின்மையையும் தேவனுக்குக் கீழ்ப்படிவதையும் காத்து வந்தான். அவனைச் சுற்றிலும் தீமையின் காட்சிகளும் சத்தங்களும் நிறைந் திருந்தன ஆனால் அதைக் காணாதவனைப் போலவும் கேட்காத வனைப் போலவும் அவன் இருந்தான். விலக்கப்பட்ட காரியங்களில் ஈடுபட அவனுடைய நினைவுகள் அனுமதிக்கப்படவில்லை எகிப்தியரின் தயவை பெற்றுக்கொள்ளும் வாஞ்சை, தன்னுடைய கொள்கைகளை மறைக்க அவனை நடத்த முடியாது. அப்படிச் செய்ய முயற்சித்திருப்பானானால், அவன் சோதனைகளால் மேற்கொள்ளப்பட்டிருந்திருப்பான். ஆனால் தன் பிதாக்களுடைய மதத்தைக்குறித்து அவன் வெட்கப்படாதிருந்து, தான் யெகோவா தேவனை தொழுகிறவன் என்கிற உண்மையை மறைக்க எந்த முயற்சியும் செய்யாதிருந்தான்.PPTam 253.1

    கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரிய சித்தியுள்ள வனானான்; ... கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டான். யாக்கோபின் மேலிருந்த போத்தி பாரின் நம்பிக்கை தினமும் அதிகரித்தது. முடிவாக, தன் உடைமைகள் அனைத்தின் மேலும் அவனுக்கு அதிகாரம் கொடுத்து, தனக்கு உக்கிராணக்காரனாயிருக்கும்படி அவனை உயர்த்தினான். ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக் குறித்தும் விசாரியாதிருந்தான்.PPTam 253.2

    யோசேப்பின் கவனத்தின்கீழ் வைக்கப்பட்ட அனைத்திலு மிருந்த குறிப்பிட்ட செழிப்பு நேரடியான அற்புதத்தின் விளைவு அல்ல. மாறாக, அவனுடைய உழைப்பும் கவனமும் பெலமும் தெய்வீக ஆசீர்வாதத்தினால் முடிசூட்டப்பட்டிருந்தன. யோசேப்பு தன்னுடைய வெற்றிக்கு தேவ தயவை காரணம் காட்டினான். விக்கிரக ஆராதனை செய்த அவனுடைய எஜமான் கூட இதை, இணையற்ற செழிப்பின் இரகசியமாக ஏற்றுக்கொண்டான். என்ற போதும், நிலையான நேர்த்தியான முயற்சி இல்லாது ஒருபோதும் வெற்றி அடைந்திருக்க முடியாது . தமது ஊழியக்காரனின் உண்மையினால் தேவன் மகிமைப்பட்டார். தேவனை நம்புகிறவன், தூய்மையிலும் நேர்மையிலும் விக்கிரக ஆராதனை செய்கிறவர் களுக்கு குறிப்பிடும்படியாக முரண்பட்டு காணப்பட வேண்டும் இவ்வாறாக, பரலோக கிருபையின் ஒளி புறஜாதிகளின் இருளுக்கு மத்தியில் பிரகாசிக்கும் என்பது அவருடைய நோக்கம்.PPTam 254.1

    யோசேப்பினுடைய கனிவான மரியாதையும் கீழ்ப்படிதலும் பிரதான அதிபதியினுடைய இருதயத்தை வெற்றிகொள்ள, அவனை ஒரு அடிமையாக இல்லாமல், தன் குமாரனாக அவன் கருதினான். உயர்ந்த நிலையும் கல்வியறிவும் கொண்ட மனிதர் களோடு தொடர்பு கொள்ள இந்த வாலிபன் கொண்டுவரப்பட்டான். அவன் அறிவியலையும் மொழிகளையும் விவகாரங்களையுங் குறித்த அறிவை எகிப்தின் வருங்கால பிரதம மந்திரிக்கு அவசிய மாயிருந்த கல்வியைப் பெற்றான்.PPTam 254.2

    ஆனால் யோசேப்பின் விசுவாசமும் நாணயமும் மிகக் கொடிய சோதனைகளால் சோதிக்கப்படவேண்டியதிருந்தது. அவன் எஜமானுடைய மனைவி, தேவனுடைய பிரமாணங்களை மீறும்படியாக இந்த வாலிபனுக்கு நயங்காட்ட முயற்சித்தாள். அந்த அஞ்ஞான நாட்டிலே பெருகிக்கொண்டிருந்த சீர்கேடுகளால் அவன் இதுவரையிலும் கறைபடாதிருந்தான். ஆனால் அதிக ச டிதியாகவும் அதிக பலமாகவும் அதிகம் மயக்கும் விதத்திலும் வந்த இந்த சோதனை எவ்வாறு சந்திக்கப்பட வேண்டும்? எதிர்ப்பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை யோசேப்பு நன்கு அறிந்திருந்தான். ஒருபுறம் மறைத்துவைப்பதும் தயவும் பிரதி பலன்களும், மறுபுறம் அவமானமும் சிறையிருப்பும் பெரும்பாலும் மரணமும்! அவனுடைய முழு எதிர்காலமும் அந்த நொடியின் தீர்மானத்தைச் சார்ந்திருந்தது. அவனுடைய கொள்கை வெற்றி பெறுமா? யோசேப்பு இன்னமும் தேவனுக்கு உண்மையாக இருப்பானா? விவரிக்கக்கூடாத எதிர்பார்ப்போடு தூதர்கள் அந்தக் காட்சியை கண்ணோக்கினர்.PPTam 254.3

    யோசேப்பின் பதில், சமயக் கொள்கையின் வல்லமையை வெளிக்காட்டுகிறது. பூமியில் அவனுடைய எஜமானின் நம்பிக்கைக்கு அவன் துரோகம் செய்யமாட்டான், விளைவுகள் என்னவாக இருந்தாலும் பரலோக எஜமானுக்கு அவன் உண் மையாக இருப்பான். தேவனுடைய மற்றும் பரிசுத்த தூதர்களுடைய ஆராயும் பார்வையின் கீழ், சக மனிதர்கள் முன் குற்றமாக காணப்படாதவைகளை அநேகர் சுதந்திரமாகச் செய்கின்றனர். ஆனால் யோசேப்பின் முதல் எண்ணம் தேவனைக் குறித்ததாயிருந்தது. நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான் அவன்.PPTam 255.1

    நாம் செய்கிற, சொல்லுகிற அனைத்தையும் தேவன் பார்த் துக்கொண்டும் கேட்டு கொண்டும் இருக்கிறார் என்பதையும், நம்முடைய வார்த்தைகளையும் செய்கைகளையுங் குறித்த உண்மையான பதிவை வைத்திருக்கிறார் என்பதையும், நாம் அவைகள் அனைத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையுங் குறித்த இயல்பான எண்ணப்பதிவை நாம் நேசித்திருப்போமானால், பாவம் செய்ய பயப்படுவோம். தாங்கள் எங்கு இருந்தாலும் எதைச் செய்தாலும் தேவனுடைய சமூகத்தில் இருக்கிறோம் என்கிறதை வாலிபர்கள் எப்போதும் நினைவுகூரட்டும். நம்முடைய நடக்கையின் எந்த பகுதியும் கண்காணிப்பிலிருந்து தப்புவதில்லை . நாம் நம் முடைய வழிகளை உன்னதமானவரிடமிருந்து மறைக்க முடியாது. மனித சட்டங்கள் சில வேளைகளில் கடுமையாயிருந்தபோதும், கண்டுபிடிக்கப்படாமல் பலவேளைகளில் மீறப்படுகின்றன. எனவே அதற்கான தண்டனையும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் தேவனுடைய பிரமாணங்களோடு அப்படி நடப்பதில்லை. மிக ஆழ்ந்த நடு இரவும் குற்றவாளிக்கு மறைவாயிருக்காது. தான் தனியாக இருப்பதாக அவன் நினைக்கலாம், ஆனால் ஒவ்வொரு செய்கைக்கும் காணக்கூடாத ஒரு சாட்சி அங்கே இருக்கிறது. அவனுடைய இருதயத்தின் நோக்கங்கள் கூட தெய்வீக ஆய்விற்கு திறந்திருக்கிறது. உலகத்திலே ஒரே ஒரு நபர்தான் இருக்கிறார் என்பதுபோல் ஒவ்வொரு செய்கையும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு நினைவும் மிகக் குறிப்பாக குறிக்கப்பட்டு, பரலோகத்தின் கவனம் அவனில் மையங்கொண்டிருக்கிறது.PPTam 255.2

    யோசேப்பை சோதித்தவள் இழிவான குற்றத்தினால் அவனைக் குற்றப்படுத்தி அவனைச் சிறைச்சாலையில் போடச் செய் ததினால் யோசேப்பு தன்னுடைய உண்மையினிமித்தம் துன்பப் பட்டான். யோசேப்பிற்கு விரோதமாக சொல்லப்பட்ட தன் மனை வியின் குற்றச்சாட்டை போத்திபார் நம்பியிருந்திருப்பானெனில், அந்த எபிரெய வாலிபன் தன் ஜீவனை இழந்திருப்பான். ஆனால் அவனுடைய நடத்தையை ஒரேவிதமாகக் காட்டின அவனுடைய பணிவும் நேர்மையும் அவனுடைய குற்றமின்மைக்கு சாட்சியாயிருந்தன. எனினும், அவனுடைய எஜமானுடைய வீட்டின் நற்பெயரைக் காப்பாற்றும்படியாக, அவன் அவமானத்திற்கும் அடிமைத் தனத்திற்கும் விடப்பட்டான்.PPTam 256.1

    சிறை அதிகாரிகளினால் முதலில் யோசேப்பு மிகக் கடுமையாக நடத்தப்பட்டான். அவன் கால்களை விலங்கு போட்டு ஒடுக்கி னார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது (சங். 105:18. 19) என்று சங்கீதக்காரன் சொல்லு கிறான். ஆனால் யோசேப்பின் உண்மையான குணம் அந்த கிடங் கின் இருட்டிலும் பிரகாசிக்கிறது. அவன் தன்னுடைய விசுவாசத்தையும் பொறுமையையும் உறுதியாக பிடித்திருந்தான். உண் மையாக சேவை செய்திருந்த காலங்கள் மிகக் கொடுமையாக திரும் பச் செலுத்தப்பட்டது. எனினும் அது அவனை கோபமானவனா கவோ அல்லது நம்பிக்கையற்றவனாகவோ விட்டுவிடவில்லை. குற்றமில்லாத மனசாட்சியிலிருந்து வரும் சமாதானத்தை அவன் கொண்டிருந்து, தன்னுடைய வழக்கை தேவனிடம் கொடுத்திருந் தான். தனக்கு இழைக்கப்பட்ட தவறுகளின் மேல் அவன் அடை காத்திருக்கவில்லை. மாறாக, மற்றவர்களுடைய துயரங்களை இலகுவாக்க முயற்சிப்பதின் வழியாக தன்னுடைய துயரங்களை மறந்திருந்தான். சிறைச்சாலையிலும் செய்யும் படியான ஒரு வேலையைக் கண்டான். மிக அதிக பிரயோஜனத்திற்காக உபத் திரவம் என்னும் பள்ளியில் தேவன் அவனை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். தேவைப்பட்டிருந்த ஒழுங்கை அவன் மறுத் திருக்கவில்லை. சிறைச்சாலையில் ஒடுக்கம் மற்றும் கொடுமையின் விளைவுகளையும் குற்றத்தின் பலன்களையும் கண்டு, நீதி பரிதாபம் இரக்கம் ஆகியவைகளின் பாடங்களை அவன் கற்றுக்கொண்டான். அது, வல்லமையை ஞனத்தோடும் இரக்கத்தோடும் செயல்படுத்த அவனை ஆயத்தப்படுத்தினது.PPTam 256.2

    யோசேப்பு சிறைக்காவலாளனின் நம்பிக்கையை படிப்படியாக பெற்றான். முடிவில் அனைத்து சிறைக்கைதிகளின் பொறுப்பும் கொடுக்கப்பட்டான். சிறையில் அவன் செயல்பட்ட விதம், அவனுடைய அன்றாட வாழ்க்கையின் நேர்மையும், பிரச்சனையிலும் துய ரத்திலும் இருந்தவர்கள் மேல் அவன் காண்பித்த பரிவும் அவனுடைய எதிர்கால செழிப்பிற்கும் கனத்திற்கும் வழி திறந்தது. மற்ற வர்கள் மேல் நாம் காண்பிக்கும் ஒவ்வொரு ஒளிக்கதிரும் நம்மீதே பிரதிபலிக்கப்படுகிறது. துக்கத்தில் இருக்கிறவர்களுக்கு சொல் லப்படும் ஒவ்வொரு தயவான மற்றும் பரிவான வார்த்தையும், ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்கும் ஒவ்வொரு செயலும் தேவைப்படுவோருக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு பரிசும் சரியான நோக்கத்தோடு செய்யப்படுமானால், கொடுக்கிறவர்களுக்கு ஆசீர்வாதமாக முடியும்.PPTam 257.1

    பானபாத்திரக்கார தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஏதோ குற்றத்திற்காக சிறையில் போடப்பட்டு, யோசேப்பினுடைய பொறுப்பில் வந்தார்கள். ஒருநாள் காலையில், அவர்கள் துக்கமாக இருப்பதைக் கவனித்து, அவன் தயவாக அதன் காரணத்தை விசாரிக்க, ஒவ்வொருவரும் குறிப்பிடத்தக்க சொப்பனம் கண்டதாகவும் அதன் குறிப்படையாளத்தை அறிந்துகொள்ள மிக எதிர்பார்ப் போடு இருப்பதாகவும் கூறினார்கள். சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்று யோசேப்பு கூறினான். ஒவ்வொருவனும் தன் சொப்பனத்தை யோசேப்புக்கு அறிவித்தபோது, அவன் அதன் அர்த்தத்தை தெரியப்படுத்தினான். மூன்று நாட்களில் பானபாத் திரக்காரன் மீண்டும் அவனுடைய தகுதியில் வைக்கப்பட்டு முன்போல் பார்வோனுக்கு பாத்திரத்தைக் கொடுக்கவேண்டும். ஆனால் சுயம்பாகிகளின் தலைவனோ இராஜாவின் கட்டளையினால் கொலை செய்யப்படுவான். இரண்டு வழக்கிலும் முன் சொல் லப்பட்டபடியே சம்பவித்தது.PPTam 257.2

    இராஜாவின் பானபாத்திரக்காரன் தன் சொப்பனத்திற்கு மகிழ்ச்சியான அர்த்தம் கொடுத்ததற்காகவும், தயவான கவனிப்பின் அநேக செயல்களுக்காகவும் யோசேப்பிற்கு மிக ஆழ்ந்த நன்றியை தெரிவித்தான். யோசேப்பு அதற்குப் பதிலாக தன்னுடைய அநியா யமான சிறையிருப்பை மிகவும் தொடக்கூடிய விதத்தில் சுட்டிக் காட்டி, தன்னுடைய வழக்கு இராஜாவின் முன் கொண்டுவரப் படும்படி மன்றாடினான். நீ வாழ்வடைந்திருக்கும் போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்க வேண்டும். நான் எபிரெயருடைய தேசத்திலிருந்துகள்வாய்க் கொண்டுவரப்பட்டேன், என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக் கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னான். சொப்பனம் ஒவ்வொரு குறிப்பிலும் நிறைவேறியதை தலைமை பானபாத்திரக்காரன் கண்டான். ஆனாலும் இராஜாங்க தயவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டபோது, தனக்கு நன்மை செய்தவனை அதற்குப்பின் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. மேலும் இரண்டு வருடங்கள் யோசேப்பு கைதியாகவே இருந்தான். அவன் மனதில் தூண்டிவிடப்பட்ட நம்பிக்கை படிப்படியாக மரித்துப்போக, மற்ற அனைத்து சோதனைகளோடும் கூட நன்றியறியாத இந்த கசப்பான அடியும் சேர்ந்து கொண்டது.PPTam 257.3

    ஆனால் ஒரு தெய்வீக கரம் சிறைச்சாலையின் கதவுகளைத் திறக்கவிருந்தது. எகிப்தின் இராஜா ஒரு இரவிலே, ஒரே சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்டின, சில மாபெரும் பேராபத்தை முன்காட்டுவதைப்போன்று தோன்றிய இரண்டு சொப்பனங்களைக் கண்டான். அவைகளின் குறிப்பை அவனால் தீர்மானிக்க முடிய வில்லை. எனினும் அவைகள் அவன் மனதை தொடர்ந்து தொந்தரவு செய்தன. அவனுடைய ஆட்சிக்குட்பட்டிருந்த மந்திரவாதி களும் ஞானிகளும் எந்த விளக்கத்தையும் தரக்கூடாதிருந்தார்கள். இராஜாவின் குழப்பமும் துயரமும் அதிகரித்தது; அரண்மனை எங்கும் திகில் பரவியது. இந்த பொதுவான கிளர்ச்சி, பானபாத் திரக்காரரின் தலைவனுடைய மனதில் அவனுடைய சொந்த சொப் பனத்தின் சூழ்நிலைகளைத்திரும்ப கொண்டுவந்தது. அதோடு கூட யோசேப்பைக்குறித்த நினைவும், தன்னுடைய மறதியையும் நன்றியின்மையையுங்குறித்த வருத்தத்தின் வேதனையும் வந்தது. தன்னுடைய சொந்த சொப்பனமும் சுயம்பாகிகளின் தலைவனுடைய சொப்பனமும் ஒரு எபிரெய கைதியினால் எவ்வாறு அர்த்தப் படுத்தப்பட்டது என்பதையும், அவன் கூறினவைகள் எவ்வாறு நிறைவேறின என்பதையும் உடனே அவன் இராஜாவிற்கு அறி வித்தான்.PPTam 258.1

    தன்னுடைய இராஜாங்கத்தின் மந்திரவாதிகள் மற்றும் ஞானி களிடமிருந்து திரும்பி, அந்நியனும் அடிமையுமாயிருக்கும் ஒரு வனோடு ஆலோசிப்பது பார்வோனுக்கு சிறுமையாயிருந்தது. எனி னும் அவனுடைய குழம்பின் மனம் விடுதலையைப் பெறக் கூடுமானால், இந்த கீழான சேவையையும் ஏற்றுக்கொள்ள அவன் ஆயத்தமாயிருந்தான். யோசேப்பு உடனே அழைக்கப்பட்டான். அவமானமும் சிறையிருப்புமான காலத்தில் அவனுடைய முடி நீண்டு வளர்ந்திருந்ததால், அவன் சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றி சவரம் பண்ணிக்கொண்டான். பின்னர் அவன் இராஜாவின் சமூகத்திற்கு நடத்தப்பட்டான்.PPTam 258.2

    பார்வோன் யோசேப்பை நோக்கி : ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை, நீ சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக் குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார் என்றான். யோசேப்பு இராஜாவுக்கு அளித்த பதில், அவனுடைய தாழ்மையையும் தேவன் மேல் அவனுக்கிருக்கும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறது. அவன் உயர்ந்த ஞானத்தை தன்னில் கொண்டிருப்பதற்கான கனத்தை பணிவோடு மறுத்தான். நான் அல்ல என்றான் . தேவன் மாத்திரமே இப்படிப்பட்ட இரகசியங்களை விளக்கமுடியும்.PPTam 259.1

    பின்னர் பார்வோன் தன்னுடைய சொப்பனத்தை அறிவித்தான். நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன் . அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து புல் மேய்ந்தது. அவை களின் பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறி வந்தது; இவைகளைப் போல, அவலட் சணமான பசுக்களை எகிப்துதேசமெங்கும் நான் கண்டதில்லை. கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின் ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றா மல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன். பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறை மேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே நாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். பின்பு சாவியானவைகளும் கீழ்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழுகதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான்.PPTam 259.2

    பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப் போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார் என்றான் யோசேப்பு . ஏழுவருடங்கள் மாபெரும் ஏராளம் உண்டாயிருக்கும். வயல்களும் தோட்டங்களும் இதற்கு முன் இல்லாத விதத்தில் மிக அதிகமாக பலனைக் கொடுக்கும். இந்தக் காலத்தை பஞ்சமான ஏழு வருடங்கள் பின்தொடர வேண்டும். வரப்போகிற மகா கொடு மையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். சொப்பனம் மீண்டும் வந்தது, அதன் நிச்சயத்திற்கும் சமீபத்திலிருக்கும் அதன் நிறைவேறுதலுக்கும் சான்றாக இருக் கிறது. ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக. இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின் மேல் விசாரணைக்காரரைவைத்து, பரிபூரணமுள்ள ஏழுவருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக. அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்து வைப்பார்களாக. தேசம் பஞ்சத்தினால் அழிந்துபோகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்து தேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு வைப்பாயிருப்பதாக என்றான்.PPTam 259.3

    இந்த விளக்கம் மிகவும் நியாயமானதும் முரணற்றதுமாக இருந்ததினாலும், அது பரிந்துரை செய்த கொள்கை அறிவும் விவேகமுமானதாக இருந்ததாலும், அதனுடைய சரியான தன்மை சந்தேகிக்கப்படக்கூடாததாயிருந்தது. ஆனால் யாரிடம் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை கொடுக்க வேண்டும் ? நாட்டின் பாது காப்பு தெரிந்தெடுக்கப்படப் போகிறவனின் ஞானத்தைச் சார்ந்து இருந்தது. இராஜா கலங்கினான். சில காலம் இந்த நியமனம் கருத்தில் இருந்தது. பானபாத்திரக்காரரின் தலைவன் வழியாக, சி றைச்சா லையை நிர்வகிப்பதில் யோசேப்பினால் காட்டப்பட்ட ஞானத்தையும் ஜாக்கிரதையுமைPPTam 260.1

    குறித்து மன்னன் அறிந்து கொண்டான். அவன் ஒப்புயர்வற்ற நிலையில் நிர்வாகத் திறமையைக் கொண்டிருந்தான் என்பது காணப்பட்டது. இந்த பானபாத்திரக்காரன் இப்போது சுய நிந்தை யால் நிறைந்து, தனக்கு நன்மை செய்தவனை இனிமையாக புகழு வதின் வழியாக தன்னுடைய முந்தைய நன்றியின்மையை நிவிர்த்தி செய்துகொள்ள முயற்சித்தான். இராஜாவின் கூடுதல் விசாரணை அவனுடைய அறிக்கையை உண்மையென்று நிரூபித்தது. இராஜ் யத்தை பயமுறுத்தின் ஆபத்தைச் சுட்டிக்காட்டவும், அதை சந்திக் கத் தேவையான ஆயத்தங்களைச் செய்யவும் அவனுடைய இராஜாங்கம் முழுவதிலும் யோசேப்பு மாத்திரமே ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரே மனிதனாக இருந்தான். அவன் ஆலோசனை கூறியிருந்த திட்டங்களை செயல்படுத்தக்கூடிய ஒரே மிகச் சிறந்த தகுதியுள்ள நபர் அவன் மாத்திரமே என்பதில் இராஜா நம்பிக்கை கொண்டான். அவனோடு தெய்வீக வல்லமை இருந்தது என்பதும், இந்த நெருக்கடியான நிலையில் நாட்டின் விவகாரங்களை நடத்த மிகவும் தகுதியுடைய நபர் இராஜாவின் அதிகாரிகளில் வேறு ஒருவரும் இல்லை என்பதும் தெளிவாக இருந்தது. காணப்பட்ட அவனுடைய ஞானத்திற்கும் விவேகமான நிதானிப்பிற்கும் எதிராக, அவன் எபிரெயனும் அடிமையுமாக இருந்தான் என்ற உண்மை காணப்படாமல் போயிற்று. தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல் வேறொருவன் உண்டோ என்று இராஜா தன் ஆலோசகர்களிடம் கூறினான்.PPTam 260.2

    இந்த நியமனம் தீர்மானிக்கப்பட்டு, தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல் விவேகமும் ஞானமுமுள்ளவன்வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்கிற மலைப்பூட்டுகிற அறிவிப்பு யோசேப்பிற்குக் கொடுக்கப்பட்டது. இராஜா தன்னுடைய உயர்ந்த அதிகாரத்தின் முத்திரையை யோசேப்பின் மேல் வைக்கத் தொடர்ந்தான். பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவ னுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரத்தின் மேல் அவனை ஏற்றி, தெண்ட னிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்தான்.PPTam 261.1

    தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும், அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான். சங். 105:21,22. எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாயிருக்கும்படி காவற்கிடங் கிலிருந்து யோசேப்பு உயர்த்தப்பட்டான். அது மிகவும் கனத்திற்குரிய ஒரு தகுதி என்றாலும் கஷ்டங்களும் ஆபத்துகளும் சூழ்ந் திருந்த ஒன்றாக இருந்தது. எந்த ஒருவனும் ஆபத்து இல்லாது அப் படிப்பட்ட உயரத்தில் நிற்க முடியாது. புயல் காற்று பள்ளத்தாக்கில் தாழ்வாக இருக்கிற மலர்களை பாதிக்காது இருக்கிற அதே நேரம், மலையின் உச்சியிலிருக்கிற கம்பீரமான மரங்களை வேரோடு சாய்க்கிறது. அவ்வாறே, தாழ்மையான வாழ்க்கையில் தங்களுடைய உண்மையை பராமரிக்கிறவர்கள், உலகவெற்றிகளும்கனங்களும் தாக்குகிற சோதனைகளால் குழிக்கு இழுக்கப்படலாம். ஆனால் யோசேப்பின் குணம் கஷ்டகாலத்திலும் வளமான காலத்திலும் ஒரேவிதமாக சோதனையைத் தாங்கியது. சிறை அறைக்குள் இருந்தபோது தேவனுக்கு அவனால் காணப்பட்ட அதேவிதமான கீழ்ப்படிதல், பார்வோனுடைய அரண்மனையில் நின்றிருந்த போதும் வெளிக்காட்டப்பட்டது. தேவனை தொழுது கொள்ளுகிற தன் சொந்த இனத்தைவிட்டு பிரிக்கப்பட்ட அந்நியனாகவே அவன் இன்னமும் அந்நிய தேசத்தில் இருந்தான். ஆனாலும் தெய்வீககரம் தன்னுடைய அடிகளை நடத்தியது என்று அவன் முழுமையாக நம்பியிருந்து, தேவன் மேல் நிலையாக சார்ந்தவனாக தன்னுடைய பதவியின் கடமைகளை உண்மையாகச் செய்தான். யோசேப்பின் வழியாக எகிப்தின் இராஜாவுடைய மற்றும் பெரிய மனிதர்களுடைய கவனங்கள் தேவனிடத்திற்கு நடத்தப்பட்டன. அவர்கள் விக்கிரக ஆராதனையை பின்பற்றின் போதும், யெகோவாவைத் தொழுது கொண்டிருந்தவனுடைய வாழ்க்கையிலும் குணத்திலும் வெளிப் படுத்தப்பட்டிருந்த கொள்கைகளை மதிக்கக் கற்றிருந்தனர்.PPTam 261.2

    எப்படி அப்படிப்பட்ட உறுதியான குணத்தையும் நேர்மையையும் ஞானத்தையும் குறித்த பதிவை யோசேப்பால் உண்டாக்க முடிந்தது? - அவன் தன்னுடைய இளமைக்காலத்தில் தன்னுடைய நாட்டங்களைக் காட்டிலும் கடமைகளை முக்கியப்படுத்தியிருந் தான். வாலிபனுடைய உண்மையும் எளிமையான விசுவாசமும் நேர்மையான இயல்பும் மனிதனுடைய செயல்களில் கனிகொடுத்தது. தூய்மையும் எளிமையுமான வாழ்க்கை, சரீர மற்றும் அறிவு சார்ந்த வல்லமைகளின் தீவிரமான வளர்ச்சியை ஆதரித்தது. தன் னுடைய வேலைகளின் வழியாக தேவனுடன் கொண்ட தொடர்பும், விசுவாசத்தை சுதந்தரித்துக் கொண்டவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான சத்தியங்களைப் புரிந்து கொண்டதும் அவனுடைய ஆவிக்குரிய இயல்பை உயர்த்தி தகுதிப்படுத்தி, வேறு எந்த ஆராய்ச்சியும் செய்யக்கூடாத அளவு அவன் மனதை விசாலமாக்கி பலப்படுத்தினது. மிகக் கீழானதிலிருந்து மிக அதிகம் உயர்ந்திருந்த ஒவ்வொரு நிலையிலும் கடமைகளுக்கு அவன் கொடுத்த உண்மையான கவனம், அதனுடைய மிக உயர்ந்த சேவைக்கு ஒவ்வொரு வல்லமையையும் பயிற்றுவித்துக்கொண்டிருந்தது. தன் சிருஷ்டிகரின் சித்தத்திற்கு ஏற்றாற்போல வாழ் கிறவன், மிகவும் உண்மையான நேர்மையான குணவிருத்தியை தனக்கு பெற்றுக்கொள்ளுகிறான். ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம், பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி . யோபு 28:23PPTam 262.1

    குண விருத்தியின் மேல் இருக்கும் சிறிய சிறிய காரியங்களின் செல்வாக்கை ஒருசிலரே உணருகிறார்கள். நாம் செய்யவேண்டிய திருக்கிற எதுவும் உண்மையில் சிறியதல்ல. ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கிற வெவ்வேறு விதமான சூழ்நிலைகள், நம் உண் மையை சோதிக்கும்படியாகவும் இன்னும் அதிகமான நம்பிக்கைக்கு நம்மைதகுதிப்படுத்தும்படியாகவும் வடிவமைக்கப்பட்டவைகளே. சாதாரண வாழ்க்கையின் பரிவர்த்தனைகளில் கொள்கைகளைப் பின்பற்றும் போது, நம்முடைய நாட்டங்களுக்கும் இன்பங்களுக்கும் மேலாக நம்முடைய கடமைகளை பிடித்துக்கொள்ளும்படி நம் மனது பழக்கப்படுகிறது. இவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட்ட மனங்கள் காற்றில் அசையும் நாணலைப்போல் சரியானதற்கும் தவறானதற்கும் இடையே சந்தேகங்கொள்ளாது. அவைகள் கீழ்ப்படிதலும் சத்தியமுமான பழக்கங்களில் பயின்றிருப்பதால், தங்கள் கடமைகளில் உண்மையாக இருக்கும்.PPTam 263.1

    கொஞ்சக் காரியத்தில் உண்மையாயிருப்பதன் வழியாக, பெரிய காரியங்களில் உண்மையாயிருக்க அவர்கள் பலமடை கின்ற னர்.PPTam 263.2

    நேர்மையான குணம் ஓப்பீரின் தங்கத்தைப் பார்க்கிலும் அதிக மதிப்பு வாய்ந்தது. அது இல்லாது எவரும் கனத்துக்குரிய மாண்பிற்கு உயரமுடியாது. ஆனால் குணம் சுதந்தரித்துக்கொள்ளும் ஒன்றல்ல. அதை வாங்கவும் முடியாது. சன்மார்க்க சிறப்பும் நேர்த்தியான மன திறமைகளும் விபத்தின் விளைவுகள் அல்ல. மேம்படுத்தப்படாத பட்சத்தில், மிக விலைமதிப்பான பரிசுகளும் மதிப்புள்ளவைகள் அல்ல. உன்னதமான குணத்தை உருவாக்குவது வாழ்நாள் முழுவதும் செய்கிற வேலை. அது ஜாக்கிரதையான விடாமுயற்சியின் விளைவுகளாகவே இருக்கவேண்டும். தேவன் சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறார். வெற்றி அவைகளை உப யோகப்படுத்துவதைச் சார்ந்தே இருக்கிறது.PPTam 263.3