Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    3 - பாவத்தூண்டலும் விழுகையும்

    பரலோகத்தில் இனி கலகத்தை தூண்டக்கூடாத நிலையில் இருந்த சாத்தானின் பகை, மனித இனத்தை அழிக்கும் திட்டத்தில் தேவனுக்கு எதிராக புதிய இடத்தைக் கண்டது. ஏதேனிலிருந்த பரி சுத்த தம்பதியரின் சந்தோஷத்திலும் சமாதானத்திலும், சாத்தானைப் பொறுத்தமட்டில் அவன் என்றைக்குமாக இழந்துபோன ஆனந்தத்தை அவன் கண்டான். பொறாமையினால் உந்தப்பட்டு, கீழ்ப் படியாமைக்கு அவர்களைத் தூண்டி, அவர்கள் மீது குற்றத்தையும் பாவத்தின் தண்டனையையும் கொண்டுவரத் தீர்மானித்தான். அவர்கள் அன்பை அவநம்பிக்கையாகவும், அவர்களுடைய துதியின் கீதங்களை தங்களை உண்டாக்கினவருக்கு எதிரான நிந்தனைகளாகவும் மாற்றுவான். இவ்வாறாக, குற்றமில்லாத அவர்களை தான் அனுபவித்துக்கொண்டிருக்கிற அதே துயரத்திற்குள் மூழ்கடிப்பதோடு மாத்திரமல்லாது, தேவன் மீது அவமரியாதையைக் கொண்டுவந்து, பரலோகத்தில் வருத்தத்தையும் உண்டாக்குவான்.PPTam 35.1

    நம்முடைய முதல் பெற்றோர் அவர்களை பயமுறுத்தின ஆபத்தைக் குறித்த எச்சரிப்பின்றி விட்டு விடப்படவில்லை. சாத் தானுடைய விழுகையின் சரித்திரத்தையும், அவர்களை அழிக்க அவன் செய்த சதிகளையும் பரலோக தூதர்கள் அவர்களுக்குத் திறந்து, தீமையின் அதிபதி கவிழ்க்க முற்பட்ட தெய்வீக அரசாங்கத்தின் இயல்பையும் அதிக முழுமையாகக் காண்பித்தார்கள். தேவனுடைய நீதியான கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் போனதி னாலே, சாத்தானும் அவனுடைய சேனையும் விழுந்தது. அப்படியானால், அதனால் மாத்திரம் ஒழுங்கையும் நியாயத்தையும் தொடர்ந்து பராமரிக்க முடியுமோ, அந்த கட்டளைகளை ஆதாமும் ஏவாளும் கனப்படுத்துவது எவ்வளவு முக்கியம்!PPTam 35.2

    தேவனைப்போலவே தேவனுடைய கற்பனையும் பரிசுத்த மானது. அது அவருடைய சித்தத்தின் வெளிப்படுத்தலாக, அவருடைய குணத்தைப்பற்றிய கையெழுத்தாக, தெய்வீக அன்பு மற்றும் ஞானத்தினுடைய வெளிப்பாடாக இருக்கிறது. சிருஷ்டிப் பின் இணக்கம், உயிருள்ள உயிரில்லாத அனைத்தும் சிருஷ்டிகருடைய பிரமாணங்களுக்குப் பூரணமாக ஒத்துப்போவதைச் சார்ந்து இருக்கிறது. தேவன் தமது அரசாங்கத்தில் உயிருள்ளவைகளுக்கு மாத்திரமல்ல, இயற்கையின் செயல்பாடுகள் அனைத்திற்கும் சட்டங்களை நியமித்திருக்கிறார். அலட்சியப்படுத்த முடியாத நிலையான சட்டங்களின் கீழ்தான் அனைத்தும் இருக்கின்றன. இயற்கையிலுள்ள அனைத்தும் இயற்கைச் சட்டங்களால் ஆட்சி செய்யப் படும் போது, மனிதன் மாத்திரம் பூமியில் வசிக்கும் அனைத்திலும் தேவனுடைய சன்மார்க்க சட்டங்களுக்கு இணங்கி நடக்க வேண்டியவனாயிருக்கிறான். சிருஷ்டிப்பின் கிரீடமான மனிதனுக்கு தமது வேண்டுகோள்களைப் புரிந்து கொள்ளவும், தமது சட்டங்களின் நியாயத்தையும் நன்மைகளையும் அவைகள் அவன் மேல் கொண்டிருக்கும் பரிசுத்தமான உரிமைகளையும் அறிந்து கொள்ளவும், தேவன் வல்லமையைக் கொடுத்திருக்கிறார். மனிதனிடம் அசை யாத கீழ்ப்படிதல் எதிர்பார்க்கப்படுகிறது.PPTam 36.1

    தூதர்களைப்போலவே ஏதேனின் வாசிகளும் கிருபையின் காலத்தில் வைக்கப்பட்டார்கள். சிருஷ்டிகருடைய சட்டங்களுக்கு மெய்யான பற்றோடு இருப்பதன் நிபந்தனையிலேயே அவர்களுடைய மகிழ்ச்சியான நிலை தக்கவைக்கப்படும். கீழ்ப்படிந்து பிழைக்கலாம் அல்லது கீழ்ப்படியாதிருந்துPPTam 36.2

    அழியலாம். தேவன் அதிகமான ஆசீர்வாதங்களை அவர் களுக்குக் கொடுத்தார். என்றாலும் அவர்கள் அவருடைய சித் தத்தை அலட்சியப் படுத்துவார்களானால், பாவஞ்செய்த தூதர்களைத் தப்பவிடாத தேவன், அவர்களையும் தப்பவிடார். மீறுதல் அவரது ஈவுகளைத் திரும்ப எடுத்துக்கொண்டு, அவர்கள் மீது துயரத்தையும் அழிவையும் கொண்டுவரும். PPTam 36.3

    சாத்தான் அவர்களைப் பிடிக்க எடுக்கும் முயற்சிகளில் தள ராது இருப்பான் என்ற காரணத்தால், அவனுடைய திட்டங்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி தூதர்கள் அவர்களை எச் சரித்தனர். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் போது, தீயவன் அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. ஏனெனில், அவசிய மானால், பரலோகத்திலுள்ள ஒவ்வாரு தூதனும் அவர்களுடைய உதவிக்காக அனுப்பப்படுவான். அவனுடைய முதல் ஆலோசனைகளை உறுதியாக தடுத்துவிடுவார்களானால், பரலோகத் தூதர்களைப்போலவே பாதுகாப்பாயிருப்பார்கள். ஆனால் ஒரு முறை சோதனைக்கு ஒப்புக்கொடுப்பார்களானால், அவர்களுடைய தன்மை மிக இழிவாகிவிடும். அவர்களில் சாத்தானை எதிர்க்கும் வல்லமையும் மனநிலையும் இருக்காது.PPTam 37.1

    அவர்களுடைய கீழ்ப்படிதலையும் தேவன்மேல் கொண்டிருக் கும் அன்பையும் சோதிப்பதாக நன்மை தீமை அறியத்தக்க விருட் சம் உண்டாக்கப்பட்டிருந்தது. தோட்டத்தில் இருக்கும் அனைத்தையும் உபயோகிப்பதில் தேவன் அவர்கள் மேல் ஒரே ஒரு சோதனையின் காலத்தை வைப்பது சரி என்று கண்டார். ஆனால் அவர்கள் இந்த ஒரு காரியத்தில் அவருடைய சித்தத்தை அலட்சியப்படுத்து வார்களானால், மீறுதலின் குற்றத்தை அடைவார்கள். சாத்தான் தொடர்ச்சியான சோதனைகளோடு அவர்களைப் பின்தொடரக் கூடாது. தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து மாத்திரமே அவன் அவர்களை அணுக முடியும். அதனுடைய இயல்பை ஆராய அவர்கள் முயலுவார்களென்றால், அவனுடைய தந்திரங்களுக்குக் கொண்டுவரப்படுவார்கள். தேவன் அவர்களுக்கு அனுப்பின் எச் சரிப்புகளுக்கு மிகுந்த கவனம் தரும்படியும், கொடுக்கத் தேவையானது என்று தேவன் கண்ட போதனைகளுடன் திருப்தியடையும் படியும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.PPTam 37.2

    எந்தவித உணர்வையும் தராமலே தன் வேலையைச் செய்வதற்காக சாத்தான் தனது ஊடகமாக சர்ப்பத்தை தனது ஏமாற்றும் நோக் கங்களோடு நன்கு ஒத்துப்போகக்கூடிய சர்ப்பத்தை மாறுவேடமாக உபயோகிக்கத் தெரிந்து கொண்டான். சர்ப்பமானது பூமியின் மேல் மிக ஞானமுள்ளதும் அழகுள்ளதுமான சிருஷ்டிகளில் ஒன்றாக இருந்தது. அதற்கு செட்டைகள் இருந்தன. ஆகாயத்தில் பறந்து போகும் போது, மிகவும் பிரகாசமாக, துலக்கப்பட்ட பொன்னின் நிறத்தையும் பிரகாசத்தையும் காட்டியது. தடை செய்யப்பட்ட மரத் தின் கனி நிறைந்த கிளைகள் மீது அமர்ந்து சுவையான கனிகளால் தனக்கு விருந்தளித்துக் கொண்டிருக்க, அது கவனத்தைக் கவரும் பொருளாகவும், பார்க்கிறவர் கண்களுக்கு மகிழ்ச்சியளிப்பதா கவும் இருந்தது. இவ்வாறாக, சமாதானமாயிருந்த அந்த தோட்டத்தில் தன் இரைக்காக காத்திருந்த அழிம்பன் பதுங்கியிருந்தான்.PPTam 37.3

    தோட்டத்தில் அன்றாட வேலைகள் செய்யும் போது, தன் கணவனை விட்டுப் பிரிந்துசெல்லுவதைக் குறித்து ஜாக்கிரதையாயிருக்கும்படி தூதர்கள் ஏவாளை எச்சரித்திருந்தனர். தனிமையில் இருப்பதைவிடவும், அவனோடு இருந்தால், சோதனையின் போது அவள் குறைவான ஆபத்தில் இருப்பாள். ஆனால் இன்பமான வேலையால் ஆட்கொள்ளப்பட்டு, அவள் அவன் பக்கத்தைவிட்டு சுயநினைவின்றி அலைந்தாள். தான் தனியாக இருப்பதை உணர்ந்த போது ஆபத்தைக்குறித்த ஒரு அச்சத்தை உணர்ந்தாள். ஆனால் தீமையை அடையாளங்கண்டு கொள்ளவும் எதிர்கொள்ளவும் தனக்குப் போதுமான ஞானமும் அறிவும் இருப்பதாக தீர்மானித்து தன் அச்சத்தை அகற்றினாள். தூதர்களின் எச்சரிப்பை கவனத்தில் கொள்ளாதவளாக, விரைவில் தடை செய்யப்பட்ட மரத்தை ஆர்வத் துடனும் வியப்புடனும் தான் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண் டாள். அதன் கனி மிக அழகாயிருந்தது. ஏன் தேவன் இதை தடை செய்தார் என்று அவள் தன்னிடம் கேட்டுக்கொண்டாள். இதுதான் சோதனைக்காரனின் சந்தர்ப்பம். அவளுடைய மனதின் எண்ண ஓட்டங்களை தன்னால் பகுத்தறியமுடியும் என்பதைப்போல் அவளை நோக்கி, நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ ? என்றான். இவ்வாறு தன் நினைவுகளின் எதிரொலியைக் கேட்பது போலத் தோன்றவே, ஏவாள் ஆச்சரியப்பட்டு, திடுக்கிட்டாள். ஆனால் அவளுடைய மிஞ்சின் அழகைத் தந்திரமாக புகழ்ந்து கொண்டே, சர்ப்பம் தொடர்ந்தது. அவனுடைய வார்த்தைகள் பிரியமில்லாதவைகளாக இருக்கவில்லை. அந்த இடத்தைவிட்டு ஓடுவதற்குப் பதிலாக, அவள் சர்ப்பம் பேசுவதைக் கேட்க வியப் போடு தாமதித்தாள். தூதனைப் போன்ற ஒருவனால் அழைக்கப் பட்டிருந்தால், அவளுடைய பயம் கிளரப்பட்டிருக்கும். கண்களைக் கவரும் சர்ப்பம், விழுந்து போன எதிராளியின் ஊடகமாக இருக் கும் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை.PPTam 38.1

    சோதனைக்காரனின் கண்ணியில் அகப்படுத்தும் கேள்விக்கு அவள்: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம், ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத் தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை, நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.PPTam 38.2

    அந்த மரத்தில் பங்கெடுத்தால், அவர்கள் இன்னமும் உயர்ந்த நிலையை அடைந்து, அறிவின் விசாலமான தளத்தில் நுழையலாம் என்று அவன் அறிவித்தான். அவன்தானே விலக்கப்பட்ட கனியை புசித்ததாகவும் அதன் விளைவாக பேசும் வல்லமையை பெற்றிருப் பதாகவும் சொன்னான். தமக்கு நிகராக உயர்ந்துவிடக்கூடாதென்று தேவன் பொறாமையினால் அதை அவர்களிடமிருந்து பிடித்து வைத்திருப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டான். ஞானத்தையும் வல்லமையையும் கொடுக்கிற அதனுடைய ஆச்சரியமான தன்மையினால் தான், அதைப் புசிக்கவும் தொடவுங்கூட கூடாது என்று அவர் அவர்களை தடுத்திருப்பதாகக் கூறினான். தெய்வீக எச் சரிப்பு நிறைவேற்றப்படுவதற்காக அல்ல, அவர்களை மிரட்டுவதற்காகவே திட்டமிடப்பட்டிருக்கிறது என்று சோதனைக்காரன் அறி வித்தான். அவர்களால் எவ்வாறு மரிக்க முடியும்? அவர்கள் ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்திருக்கவில்லையா? மேன்மையான வளர்ச்சியை அடைவதிலும் அதிக சந்தோஷத்தைக் கண்டடைவதிலு மிருந்து தேவன் அவர்களை தடுக்கப்பார்க்கிறார் என்றான்.PPTam 39.1

    ஆதாமின் நாட்களிலிருந்து இன்று வரை சாத்தானின் கிரி யைகள் இப்படிப்பட்டதாகவே இருந்து கொண்டிருக்கின்றன. அவன் அதை மிக அதிக வெற்றியோடு தொடர்ந்திருக்கிறான். தேவனுடைய அன்பை நம்பாது, அவருடைய ஞானத்தை சந் தேகிக்க அவன் மனிதர்களை சோதிக்கிறான். பக்தியில்லாத தெரிந்து கொள்ளும் ஆசையையும், அமைதியில்லாத தெய்வீக ஞானம் மற்றும் வல்லமையின் இரகசியங்களை ஊடுறுவுகின்ற கேள்வி கேட்கும் வாஞ்சையையும் எழுப்பிவிட அவன் தொடர்ச்சி யாகத் தேடுகிறான். நிறுத்திவைக்கும்படி தேவன் விருப்பங்கொண்ட வைகளை ஆராயும் முயற்சியில், அவர் வெளிப்படுத்தியிருக்கிற சத்தியங்களை இரட்சிப்புக்கு அத்தியாவசியமான சத்தியங்களை திரளானவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். அறிவின் ஆச்சரியமான களத்திற்குள் நுழைந்து கொண்டிருப்பதாக நம்பும்படி அவர்களை நடத்துவதன் மூலம், சாத்தான் அவர்களை கீழ்ப்படி யாமைக்குள் நடத்துகிறான். ஆனால் இவைகளெல்லாம் வஞ்ச கமே . முன்னேற்ற கருத்துக்களினால் ஊக்கமடைந்து, இவர்கள் தேவனுடைய எதிர்பார்ப்புகளை காலின் கீழ் போட்டு மிதித்து, கீழான நிலைக்கும் மரணத்திற்கும் நடத்துகிற பாதையில் தங்கள் பாதங்களை வைக்கிறார்கள்.PPTam 39.2

    தேவனுடைய பிரமாணங்களை மீறுவதினால் அவர்கள் அனு கூலமடைவார்கள் என்று அந்த பரிசுத்த தம்பதியினருக்கு சாத்தான் எடுத்துக்காட்டினான். அதேபோன்ற நியாயங்களை இன்று நாம் கேட்பதில்லையா? தாங்கள் பரந்த கருத்துக்களைக் கொண்டிருப் பதாகவும் அதிக சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருப்பதாகவும் கூறி, தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களின் குறுகிய மனதைக்குறித்து அநேகர் பேசுகிறார்கள். இதை நீங்கள் புசிக்கும் நாளிலே - தெய்வீகக் கட்டளையை மீறுங்கள் நீங்கள் தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்று ஏதேனில் ஒலித்த குரலி னுடைய எதிரொலியேயன்றி இது வேறு என்னவாக இருக்கும்? விலக்கப்பட்ட கனியை புசித்ததினால் தான் அதிக நன்மையை அடைந்ததாக சாத்தான் கூறினான். ஆனால் மீறுதலினாலே அவன் பரலோகத்திலிருந்து துரத்தப்பட்டதை காண்பிக்கவில்லை. பாவம் நித்தியமான இழப்பில் முடியும் என்பதை அவன் கண்டிருந்தும், மற்றவர்களை அதே நிலைக்குக் கொண்டுவரும்படி தனது சொந்த துயரத்தை மறைத்துவிட்டான். அதைப்போன்றே இப்போதும், மீறுகிற ஒருவன் தனது உண்மையான குணத்த மறைக்க முயற்சிக்கிறான். பரிசுத்தமாயிருப்பதாக அவன் உரிமை பாராட்டலாம். ஆனால் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்வது அவனை வஞ்ச கனாக, மிக ஆபத்தானவனாக ஆக்குகிறது. தேவனுடைய பிர மாணங்களை மிதிப்பதால் அவன் சாத்தானின் பக்கம் இருந்து, நித்திய அழிவிற்கேதுவாக மற்றவர்களையும் அப்படியே செய்ய நடத்துகிறான்.PPTam 40.1

    சாத்தானின் வார்த்தைகளை ஏவாள் மெய்யாகவே நம்பினாள். ஆனால் அவளுடைய நம்பிக்கை பாவத்தின் தண்டனையிலிருந்து அவளை காப்பாற்றவில்லை. அவள் தேவனுடைய வார்த்தைகளை நம்பவில்லை. அதுவே அவளுடைய விழுகைக்கு நடத்தியது. நேர்மையாக பொய்யை நம்பினதால் அல்ல, சத்தியத்தை நம்பாததாலும், சத்தியம் என்பது என்ன என்கிறதை கற்றுக்கொள்ள வந்த சந்தர்ப்பங்களை நெகிழ்ந்ததாலுமே மனிதர்கள் நியாயத்தீர்ப்பில் கடிந்துகொள்ளப்படுவார்கள். சாத்தானுடைய ஏமாற்றுவாதங்கள் ஒருபுறமிருக்க, தேவனுக்குக் கீழ்ப்படியாமலிருப்பது எப்போதுமே பேரழிவுதான். சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி நம்முடைய இருதயத்தை அமர்த்தவேண்டும். தமது வார்த்தையில் பதிக்கும்படியாக தேவன் நியமித்த அனைத்து பாடங்களும் நம்மை எச்சரிக்கவும் நமக்கு புத்தி புகட்டவுமே . வஞ்சகத்திலிருந்து நம்மை காப்பாற்றும் படியாகவே அவைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை நெகிழுவது நமக்கு அழிவைக் கொண்டு வரும். தேவனுடைய வார்த்தைக்கு முரண்படுகிற அனைத்தும் சாத்தானிடமிருந்து வருகிறதென்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.PPTam 40.2

    சர்ப்பம் விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் பறித்து, பாதி தயக் கத்துடனிருந்த ஏவாளின் கரங்களில் வைத்தது. பின்னர், சாகாத படிக்கு அதைத் தொடவும் வேண்டாம் என்ற அவளுடைய சொந்த வார்த்தைகளையே அவளுக்கு நினைவுப்படுத்தினான் சாத்தான். அந்தக் கனியைத் தொட்டதினால் ஆபத்து வராததைப்போலவே அதைச் சாப்பிட்டாலும் பாதிப்பு ஏற்படாது என்று அறிவித்தான். தான் செய்ததற்கான எவ்வித பலனையும் உணராததால் ஏவாள் தைரியம் அடைந்தாள். அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார் வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத் தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்தாள். அது சுவையாக இருந்தது. அவள் அதைப் புசித்தபோது, உற்சாகப்படுத்துகின்ற ஒரு வல்லமையை உணரு வதைப் போலத் தோன்றியது. ஏதோ தான் ஒரு உயர்ந்த நிலையில் பிரவேசிப்பதாக கற்பனை செய்து கொண்டாள். பயமின்றி அவள் பறித்து உண்டாள். இப்போது தான் மீறினதோடு, தனது கணவனின் அழிவை நடப்பிக்கும்படி சாத்தானுடைய முகவராக மாறினாள். விசித்திரமான, இயற்கைக்கு மாறான உந்துதலோடு கைகளில் விலக்கப்பட்ட கனி நிறைந்திருக்க, அவனைத் தேடி சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்குத் தெரிவித்தாள்.PPTam 41.1

    ஒரு துக்கத்தின் வெளிப்பாடு ஆதாமின் முகத்தில் வந்தது. அவன் அதிர்ச்சியடைந்தவனாகவும் எச்சரிப்படைந்தவனாகவும் காணப்பட்டான். ஏவாளின் வார்த்தைகளுக்கு, தாங்கள் எச்சரிக்கப் பட்ட சத்துரு இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று பதிலளித் தான். தெய்வீக ஆணையின்படி அவள் சாகவேண்டும். அவர்கள் நிச்சயமாகவே சாவதில்லை என்கிற சர்ப்பத்தின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அவனுக்குப் பதிலாகக் கூறி, சாப்பிடும்படியாக அவள் அவனை நிர்பந்தித்தாள். தேவனுடைய அதிருப்தியின் எந்த வித சான்றையும் தான் உணராது, அதற்கு மாறாக, பரலோக தூதர்களை ஏவுகிற ஒன்றாக தான் கற்பனை பண்ணியிருந்த சுவைநய மிக்க களிப்பூட்டக்கூடிய தனது ஒவ்வொரு அவயவத்தையும் புதிய ஜீவனால் கிளர்ச்சியடையப்பண்ணுகிற ஒரு செல்வாக்கை உணருவதால், அவன் கூறியது சரியாகவே இருக்கவேண்டும் என்று காரணப்படுத்தினாள்.PPTam 41.2

    தனது தோழி, தேவனுடைய கட்டளையை மீறி, அவர்களுடைய விசுவாசத்திற்கும் அன்பிற்கும் சோதனையாக அவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த ஒரே தடையை அலட்சியப்படுத்தியிருப்பதை ஆதாம் புரிந்து கொண்டான். அவன் மனதில் பயங்கரமான ஒரு போராட்டம் இருந்தது. தன் பக்கத்திலிருந்து விலகும்படி ஏவாளை தான் அனுமதித்ததற்காகப் புலம்பினான். ஆனால் இப்போது அவள் மீறிவிட்டாள். யாருடைய துணை தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததோ, அவளிடமிருந்து அவன் பிரிக்கப்பட வேண்டும். அது அவனுக்கு எப்படி முயும்? ஆதாம் தேவனுடைய தோழமையிலும் பரிசுத்த தூதர்களுடைய தோழமையிலும் மகிழ்ந்திருந்தான். அவன் சிருஷ்டிகருடைய மகிமையைக் கண்டிருந்தான். தேவனுக்கு உண்மையாயிருக்கும் பட்சத்தில் மனித இனத்திற்குத் திறந்திருந்த உயர்ந்த வாழ்க்கையை அவன் புரிந்திருந்தான். இருந்தபோதும், இவையெல்லாவற்றையும் விட அவன் பார்வையில் மதிப்பாயிருந்த அந்த ஒரு ஈவை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் இந்த அனைத்து ஆசீர்வாதங்களும் காணாமற்போனது. சிருஷ்டிகரின் மேலிருந்த அன்பும், நன்றியுணர்வும், விசுவாசமும் அனைத்தும் ஏவாளின் மேல் இருந்த அன்பினால் மேற்கொள்ளப்பட்டது. அவள் அவனில் ஒரு பகுதியாக இருந்தாள். பிரிவு என்கிற நினைவைக் கூட அவனால் தாங்க முடியவில்லை. மண்ணிலிருந்து உயிருள்ள அழகிய உருவங்கொண்ட தன்னை உண்டாக்கி, அன்பினால் தனக்கு ஒரு துணையையும் கொடுத்த அதே நித்திய வல்லமை அவளுடைய இடத்தை நிரப்பும் என்கிறதை அவன் உணரவில்லை. அவள் மரிக்க வேண்டியதிருந்தால், தானும் அவளோடு மரிக்கும்படியாக அவளுடைய தண்டனையை பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்தான். சர்ப்பத்தினுடைய வார்த்தைகள் உண்மையாயிருக்கக்கூடாதோ? என்று காரணம் சொன்னான். ஏவாள் இந்த கீழ்ப்படியாமைக்கு முன் இருந்ததைப்போலவே அழகாகவும் கபடமற்றவளாகவும் அவன் முன் இருக்கிறாள். முன்னிருந்ததைக் காட்டிலும் இப்போது அவன் மேல் அவள் அதிக அதிக அன்பை வெளிக்காட்டுகிறாள். மரணத் தின் எந்த அடையாளமும் அவள் மேல் காணப்படவில்லை. தைரிய மாக விளைவுகளைச் சந்திக்க அவன் தீர்மானித்தான். பழத்தைப் பிடுங்கி உடனடியாக சாப்பிட்டான்.PPTam 42.1

    மீறுதலுக்குப்பின்பு, ஆதாம் தான் முதலில் ஒரு உயர்ந்த நிலைக்குள் பிரவேசிப்பதாக கற்பனை பண்ணிக்கொண்டான். இதற்கு முன் நிலையிலுமிருந்த வெப்பநிலை, குற்ற உணர்விலிருந்த தம்பதியினருக்குக் குளிராக இருப்பது போலத் தோன்றியது. அவர்களுடையதாக இருந்த அன்பும் சமாதானமும் போய்விட்டது. அந்த இடத்தில் பாவத்தின் உணர்வையும், எதிர்காலத்தைக்குறித்த பயத்தையும் ஆத்தும் நிர்வாணத்தையும் உணர்ந்தார்கள். அவர்களைச் சூழ்ந்திருந்த ஒளியின் ஆடை இப்போது காணாமற்போனது. அதன் இடத்தில் தங்களுக்கு ஒரு ஆடையை உண்டாக்க அவர்கள் முயற்சித்தார்கள். ஏனெனில் தேவனுடைய பார்வையையும் பரி சுத்த தூதர்களுடைய பார்வையையும் ஆடையில்லாமல் அவர் களால் சந்திக்க முடியாது.PPTam 42.2

    இப்போது, பாவத்தினுடைய மெய்யான குணத்தைக் காணத் துவங்கினார்கள். தன் பக்கத்தைவிட்டு விலகி, சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படும்படி தன்னை அனுமதித்ததற்காக ஆதாம் தன் தோழியை நிந்தித்தான். ஆனாலும் தம்முடைய அன்பைக் குறித்த இத்தனை சான்றுகளைக் கொடுத்தவர் இந்த ஒரு மீறுதலையும் மன்னிப்பார் என்று அல்லது தாங்கள் பயப்பட்டதைப்போன்ற இப்படிப்பட்ட கொடிய ஒரு தண்டனைக்கு தாங்கள் உட்படுத்தப்படமாட்டோம் என்று அவர்கள் இருவரும் தங்களை ஏமாற்றிக்கொண்டனர்.PPTam 43.1

    சாத்தான் தனது வெற்றியில் குதூகலித்தான். தேவனுடைய அன்பை நம்பாமல், அவருடைய ஞானத்தை சந்தேகித்து, அவருடைய கற்பனையை மீறும்படி அவன் மனுஷியைச் சோதித்தான். பின்னர் அவள் மூலமாக, ஆதாமின் விழுகையை நடப்பித்தான்.PPTam 43.2

    ஆனால் கட்டளையைக் கொடுத்த மகா பெரியவரோ, அவர் களுடைய மீறுதலின் விளைவுகளை அவர்களுக்குத் தெரியப்படுத் துவதற்கு இருந்தார். தெய்வீகப் பிரசன்னம் தோட்டத்தில் காணப்பட்டது. குற்றமற்ற நிலையிலும், பரிசுத்தத்திலும் இருந்தபோது, சிருஷ்டிகரின் வரவை அவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். ஆனால் இப்போது பயத்தினால், தோட்டத்தின் மிகவும் உள்ளான (இருண்ட) இடத்திலே தங்களை மறைத்துக்கொள்ளத் தேடினார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு நீ எங்கே இருக் கிறாய் என்றார். அதற்கு அவன் நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.PPTam 43.3

    ஆதாமினால் தன் பாவத்தை மறுக்கவும் முடியவில்லை ; கார ணப்படுத்தவும் முடியவில்லை. மனவருத்தத்தை காண்பிப்பதற்குப் பதிலாக, பழியை தன் மனைவியின் மேல் போடுவதன் மூலம் தேவன் மேலேயே வைக்க அவன் முயற்சித்தான். அதற்கு ஆதாம். என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட் சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள் நான் புசித்தேன் என்றான். ஏவாளின் மேல் இருந்த அன்பினிமித்தமாக . தேவனுடைய அங்கீ கரிப்பையும் பரலோக வீட்டையும் ஆனந்தமான நித்திய வாழ்க்கை யையும் துறப்பதற்குத்தானாக தெரிந்து கொண்ட அவன் இப்போது, தனது விழுகைக்குப்பின் தன் தோழியை, சிருஷ்டிகரைத்தாமே மீறு தலுக்காக காரணமாகக் காட்ட முயற்சித்தான். பாவத்தின் வல்லமை அத்தனை கோரமானது.PPTam 43.4

    ஸ்திரீயிடம் : நீ இப்படிச் செய்தது என்ன என்று கேட்கப்பட்ட போது, அவள் : சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்று பதிலளித்தாள். நீர் ஏன் சர்ப்பத்தை உண்டாக்கினீர்? ஏதே னுக்குள் வர அதை ஏன் நீர் அனுமதித்தீர்? இவைகளே பாவத்திற்கான அவளுடைய காரணங்களிலிருந்த கேள்விகளாக இருந்தன. இப்படியாக, ஆதாமைப்போலவே, தங்களுடைய விழுகைக்கான பொறுப்பாளி தேவன்தான் என்றாள். சுயநீதியின் ஆவி, பொய் களின் பிதாவினிடத்திலிருந்து துவங்கியது. சாத்தானுடைய செல் வாக்கிற்குத் தங்களைக் கொடுத்ததும் நம் முதல் பெற்றோரால் அது திளைக்கப்பட்டது. அது ஆதாமுடைய அனைத்து குமாரராலும் குமாரத்திகளாலும் வெளிக்காட்டப்படுகிறது. தாழ்மையாகத் தங்களுடைய பாவங்களை அறிக்கையிடுவதற்குப்பதிலாக, மற்றவர்கள் மேலும், சூழ்நிலைகள் மேலும், அல்லது தேவனுடைய ஆசீர்வாதங்களையே அவருக்கு எதிராக முறு முறுக்கும் சந்தர்ப்பமாக மாற்றி அவர்மேலேயே பழியைப் போட்டு தங்களை மறைத்துக்கொள்ள முயலுகிறார்கள்.PPTam 44.1

    ஆண்டவர் பின்னர்: நீ இதைச் செய்தபடியால் சகல் நாட்டு மிரு கங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண் ணைத் தின்பாய் என்று சர்ப்பத்தின் மேல் தண்டனையை அறிவித் தார். சாத்தானின் ஊடகமாக அது உபயோகப்படுத்தப்பட்டதால், தெய்வீக நியாயத்தீர்ப்பை அது பகிர்ந்து கொள்ளவேண்டியதிருந்தது. அனைத்து சிருஷ்டிகளிலும் மிக அழகானதும் மிகப் போற்றப்பட்டதுமாயிருந்ததிலிருந்து, ஊர்ந்து செல்லக்கூடியதும் மிகவும் வெறுக்கப்படக்கூடியதும் மனிதராலும் மிருகங்களாலும் பயப்பட்டு வெறுக்கப்படக்கூடியதாகவும் ஆகவேண்டியதாயிற்று. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன், அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதியாகமம் 3:15) என்ற சர்ப்பத்திற்குச் சொல்லப்பட்ட வார்த்தைகள் சாத்தானுக்கு அவனுடைய இறுதி தோல்வியையும் அழிவையும் குறிப்பிட்டுக்காட்டி, அவனுக்குத் தானே நேரடியாகப் பொருந்தியது.PPTam 44.2

    இனிமேல் ஏவாளுடைய பங்காக இருக்கப்போகிற வருத்த மும் வேதனையும் அவளுக்குச் சொல்லப்பட்டது. ஆண்டவர்: உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்று கூறினார். சிருஷ்டிப்பிலே தேவன் அவளை ஆதாமுக்கு இணையாக உண்டாக்கியிருந்தார். அவருடைய மாபெரும் அன்பின் பிரமாணத்துக்கு இசைவாக தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்களானால், அவர்கள் இருவரும் என்றென்றும் ஒருவரோடொருவர் இசைந்து இருந்திருப்பார்கள். ஆனால் பாவம் அவர்களிடம் ஒரு வேற்றுமையைக் கொண்டுவந்துவிட்டது. இப் போது, அவர்களில் ஒருவர் மற்றவருக்கு சரணடைந்து போவதில் தான் அவர்களுடைய இணைப்பும் இசைவும் பராமரிக்கப்படமுடியும். ஏவாள் முதலாவது மீறினாள். அவள் தெய்வீக நடத்துதலுக்கு எதிராக தன் துணையை விட்டுப் பிரிந்து சென்று சோதனையில் விழுந்தாள். அவளுடைய அழைப்பின் பேரில் ஆதாம் பாவம் செய்தான். எனவே, அவள் தன் கணவனுக்குக் கீழானவைக்கப்பட் டாள். விழுந்து போன இனத்தால், தேவனுடைய பிரமாணத்தின் கொள்கைகள் போற்றப்பட்டிருக்குமானால் பாவத்தின் விளை வினால் வந்திருந்தபோதும் இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு அசீர்வாத மாகவே இருந்திருக்கும். ஆனால் இவ்வாறு கொடுக்கப்பட்ட இந்த மேலாண்மையை அவன் தவறாக உபயோகித்தது, பெண்களுடைய நிலையைக் கசப்பானதாக்கி, அவளுடைய வாழ்க்கையை பார மாக்கிவிட்டது.PPTam 45.1

    ஏதேன் வீட்டிலே தன் கணவனுக்குப் பக்கத்தில் ஏவாள் பூரண மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் இன்றைய நாகரீக ஏவாள்களைப் போலவே தேவன் தனக்கு நியமித்திருக்கிறதைக்காட்டிலும் உன் னத எல்லைக்குள் நுழையும் நம்பிக்யைால் அவள் வஞ்சிக்கப்பட் டாள். தனது மெய்யான நிலையிலிருந்து உயர எழும்ப அவள் செய்த முயற்சியால் அதற்கு மிகக்கீழாக விழுந்து போனாள். தேவ னுடைய திட்டத்திற்கு இசைவாக தங்களுடைய வாழ்க்கையின் கடமைகளை மகிழ்ச்சியோடு ஏற்று நடத்த விருப்பமற்றிருக்கிற அனைவராலும் இதைப்போன்ற நிலையை எட்டப்படும். அவர் தங்களை பொருத்தியிருக்காத தகுதிகளை அடைய எடுக்கும் முயற்சிகளில் தாங்கள் ஆசீர்வாதமாக இருக்கக்கூடிய இடங்களை அநேகர் வெறுமையாக்கியிருக்கிறார்கள். மேல் வட்டத்தை அடையும் வாஞ்சையில் அநேகர் மெய்யான பெண்மையின் கௌரவத்தையும் குணத்தின் நேர்மையையும் பலிகொடுத்து, பரலோகம் அவர் களுக்கு நியமித்திருந்த வேலையைச் செய்யாமல் தவிர்த்துவிட்டிருக் கிறார்கள்.PPTam 45.2

    ஆதாமை நோக்கி ஆண்டவர்: நீ உன் மனைவியின் வார்த்தைக் குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும், நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய் . அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும், வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.PPTam 46.1

    பாவமில்லாத அந்தத் தம்பதியினர் தீமையை அறிந்துகொள்ள வேண்டும் என்பது தேவனுடைய சித்தமல்ல. அவர் அவர்களுக்கு நன்மையை தாராளமாக கொடுத்து, தீமையை கொடுக்காதிருந்தார். ஆனால் அவருடைய கட்டளைக்கு முரணாக அவர்கள் விலக்கப் பட்ட மரத்திலிருந்து புசித்தார்கள். இப்போது அதைத் தொடர்ந்து புசிப்பார்கள் தங்களுடைய வாழ்நாளெல்லாம் தீமையைக் குறித்த அறிவைப் பெற்றிருப்பார்கள். அந்த நேரத்திலிருந்து மனித இனம் சாத்தானுடைய சோதனைகளால் துன்புறும். இதற்கு முன் அவர் களுக்கு நியமிக்கப்பட்டிருந்த இன்பமான வேலைக்குப்பதிலாக, கவலையும், உழைப்பும் அவர்கள் பங்காயிருக்கும். ஏமாற்றங்களுக்கும் துன்பத்துக்கும் வலிக்கும் முடிவாக மரணத்திற்கும் உட்படுத்தப்படுவார்கள்.PPTam 46.2

    தேவனுக்கு எதிராக கலகம் செய்வதின் விளைவுகளையும் அதன் குணத்தையும், பாவத்தின் சாபத்தின் கீழ் அனைத்து இயற்கையும் மனிதனுக்கு சாட்சி பகர வேண்டும். தேவன் மனிதனைப் படைத்தபோது, அவனை பூமியின் மீதும் ஜீவனுள்ள அனைத்தின் மேலும் அதிகாரியாக உண்டாக்கினார். ஆதாம் பரலோகத்திற்கு விசுவாசமாக இருந்தவரையிலும் இயற்கை அனைத்தும் அவனுக்கு அடங்கியிருந்தது. ஆனால் அவன் தெய்வீக சட்டத்துக்கு எதிராக கலகம் செய்தபோது, அவனுக்குக் கீழாக இருந்த ஜீவராசிகள் அவனுடைய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தன. இவ்வாறாக, தேவன் தமது மிகுந்த கிருபையினால் தமது பிரமாணங்களின் புனிதத்தை மனிதனுக்குக் காண்பித்து, அதை, மிகக்குறைவாகப் புறக்கணித்தாலும் வருகின்ற ஆபத்தை அவர்களுடைய சொந்த அனுபவத்தின் வழியாகவே காணும்படி அவனை நடத்துகிறார்.PPTam 46.3

    இது முதல் மனிதனுடைய பங்காக இருக்கப்போகிற கடின உழைப்பும் கவலையும் கொண்ட வாழ்க்கை, அவனுக்கு அன்பினால் நியமிக்கப்பட்டது. பசியிலும் உணர்ச்சியிலும் திளைத்துவிடாமலும் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளவும் அவனுடைய பாவத்தினிமித்தம் அவனுக்கு தேவையான ஒழுங்காக இது இருந்தது. பாவத்தின் அழிவிலிருந்தும் சீரழிவிலிருந்தும் மனிதனை மீட்கவருவதற்கான தேவனுடைய பெரும் திட்டத்தின் ஒரு பகுதி யாக இது இருந்தது.PPTam 47.1

    அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் (ஆதி 2:17) என்று நம்முடைய முதல் பெற்றோருக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்பு, அவர்கள் விலக்கப்பட்ட கனியை புசிக்கும் அதே நாளில் சாவார்கள் என்று குறித்துக்காட்டவில்லை. மாறாக, திரும்ப பெறக்கூடாத தீர்ப்பு அன்றைய தினம் அவர்கள் மேல் அறிவிக்கப்படும். கீழ்ப் படிதலின் நிபந்தனையில் அழியாமை அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்டிருந்தது. மீறுதலினால் நித்திய ஜீவனை அவர்கள் இழப் பார்கள். அதே நாளில் மரணத்துக்கென்று சபிக்கப்படுவார்கள்.PPTam 47.2

    முடிவில்லாத ஜீவனைப் பெற வேண்டுமானால், மனிதன் தொடர்ந்து ஜீவவிருட்சத்தில் பங்கெடுக்கவேண்டும். அது இல்லாத போது, ஜீவன் இல்லாமற்போகும் வரையிலும் அவனுடைய சத்து அனைத்தும் படிப்படியாக குறைந்துவிடும். ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையினால் தேவனுடைய அதிருப்தியை சம்பாதிக்க வேண்டும் என்பது சாத்தானுடைய திட்டமாயிருந்தது. அதன்பின் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கவில்லையெனில் அவர்கள் ஜீவவிருட்சத்தின் கனியை புசிப்பார்கள் என்றும், இவ்வாறாக, பாவத்தையும் துயரத்தையும் தொடர்ந்து நிலைக்கப்பண்ணுவார் களென்றும் சாத்தான் நம்பியிருந்தான். ஆனால் மனிதனுடைய விழுகைக்குப்பின்னர் ஜீவவிருட்சத்தை காவல் காக்க பரிசுத்த தூதர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டார்கள். இந்த தூதர்களைச் சுற்றிலும் பிரகாசிக்கிற பட்டயத்தைப்போன்று தோன்றக்கூடிய ஒளிக் கதிர்கள் பளிச்சிட்டன. ஆதாமின் குடும்பத்தார் எவரும் இந்த தடுப்பைத் தாண்டி ஜீவன் தரும் கனியைப் புசிக்க அனுமதிக் கப்படவில்லை . எனவே அழியக்கூடியாதபடியாக ஒருவரும் இல்லை .PPTam 47.3

    நம்முடைய முதல் பெற்றோரின் மீறுதலினால் பாய்ந்து வந்த துன்பத்தின் அலைகள் மிகச்சிறிய ஒரு பாவத்திற்கு வந்த மிகப்பயங்கரமான விளைவாக அநேகரால் கருதப்படுகிறது. மனிதனை நடத்தினதில் தேவனுடைய ஞானத்தையும் நீதியையும் அவர்கள் குற்றப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் இந்த கேள்வியை சற்று ஆழமாக கவனித்தார்களானால், தங்களுடைய தவறை அறிந்து கொள்ள முடியும். தேவன் மனிதனை பாவமற்றவனாக தமது சொந்த சாயலில் சிருஷ்டித்தார். தூதர்களைவிட சற்றே சிறியவர் களான மக்களால் இந்த உலகம் நிறைக்கப்படவிருந்தது. ஆனால் அவர்களுடைய கீழ்ப்படிதல் சோதிக்கப்பட வேண்டும். ஏனெனில் தமது பிரமாணங்களை கருத்தில் கொள்ளாதவர்களால் இந்த உலகம் நிரப்பப்பட தேவன் அனுமதிக்க மாட்டார். தமது கிருபையினால் அவர் ஆதாமுக்கு கடினமான சோதனையை நியமிக்கவில்லை. கொடுக்கப்பட்ட மிக எளிய சோதனை, பாவத்தை மிகமிகப் பெரிய தாக ஆக்கியது. மிகச் சிறிய சோதனையிலேயே ஆதாம் நிலைக்க வில்லையென்றால், உயர்ந்த பொறுப்புகளைக் கொடுத்திருந்து, பெரிய சோதனையைக் கொடுத்திருந்தால் அவன் நிலைத்திருக்கவே மாட்டான்.PPTam 47.4

    ஆதாமுக்கு பெரிய சோதனை கொடுக்கப்பட்டிருந்தால், தீமையை நோக்கி சாய்ந்திருந்த இதயம் கொண்டவர்கள் : இது சாதா ரண காரியம். தேவன் சிறிய காரியங்களில் மிகக் குறிப்பாக இருப்பதில்லை என்று தங்களுக்கு சாக்குக் கொடுத்திருப்பார்கள். அப்போது சிறியவைகளாகப் பார்க்கப்பட்டு மனிதரிடையே கண்டிக்கப்படாமல் இருக்கிறவைகளை தொடர்ந்து மீறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பாவம் எந்த அளவிலிருந்தாலும் தேவ னுக்கு எதிரானது என்கிறதை ஆண்டவர் காண்பித்தார்.PPTam 48.1

    விலக்கப்பட்ட கனியை ருசித்து தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போவதும் மீறும்படி தன் கணவனையும் சோதிப்பதும் ஏவாளுக்குச் சிறிய காரியமாகத் தெரிந்தது. ஆனால் அவர்களுடைய பாவம் உலகத்தின் மேல் துன்பவெள்ளத்தின் கதவுகளைத் திறந்துவிட்டது. ஒரு தவறான அடியினால் விளையும் பயங்கரமான பலன்களை சோதனையின் வேளையில் எவரால் தேவனுடைய பிரமாணங்கள் மனிதனை கட்டியிருக்கவில்லை என்று போதிக்கிற அநேகர், அதன் நியமங்களுக்குக் கீழ்ப்படிவது கூடாதகாரியம் என்று சாதிக்கிறார்கள். அது உண்மையாக இருக்குமானால், ஏன் ஆதாம் மீறுதலின் தண்டனையைப் பெற்றான்? நமது முதல் பெற்றோரின் பாவம் பூமியின் மேல் குற்ற உணர்வையும் துயரத்தையும் கொண்டுவந்தது. தேவனுடைய கிருபையும் நன்மையும் இல்லாதிருந்தால், அது மனித இனத்தை நம்பிக்கையில்லாத நிச்சயமின்மைக்குள் மூழ்கடித் திருக்கும். எவரும் தன்னை வஞ்சித்துக்கொள்ள வேண்டாம். பாவத்தின் சம்பளம் மரணம் . ரோமர் 6:23. மனித இனத்தின் தகப் பன் மீது தீர்ப்பு சொல்லப்பட்ட அன்று மீறப்பட்டதைக்காட்டிலும் குறைவான தண்டனையோடு இப்போது தேவனுடைய பிரமாணம் மீறப்படமுடியாது.PPTam 48.2

    தங்களுடைய பாவத்திற்குப்பின்பு ஆதாமும் ஏவாளும் ஏதே னில் வசிக்க முடியாது. மகிழ்ச்சியிலும் குற்றமின்மையிலும் அவர்கள் பெற்றிருந்த அதே இல்லத்திலேயே தங்கியிருக்க அனுமதி வேண்டி ஊக்கமாக மன்றாடினார்கள். அந்த சந்தோஷமான வீட்டில் வசிக்கும் அனைத்து உரிமைகளையும் அவர்கள் இழந்துவிட்டதாக அறிக்கை செய்து, எதிர்காலத்தில் மிகவும் கண்டிப்பாக தேவனுக்கு கீழ்ப்படிவோம் என்று அவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் அவர்களுடைய இயல்பு சீரழிந்துவிட்டது. தீமையை எதிர்க்கும் பலத்தைக் குறைத்து, சாத்தான் அவர்களை மிக எளிதாக அணுகும் படியான வழிகளை அவர்கள் திறந்துவிட்டார்கள். தங்களுடைய குற்றமின்மையில் அவர்கள் சோதனைக்கு ஒப்புக் கொடுத்துவிட்டார்கள். இப்போது, குற்றமனசாட்சியோடு தங்களுடைய உண்மையைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு குறைந்த வல்லமையே இருக்கும்.PPTam 49.1

    தாழ்மையோடும் சொல்லக்கூடாத வருத்தத்தோடும் தங்களுடைய அழகான இல்லத்திற்கு பிரிவு வார்த்தைகளைச் சொல்லி, பாவத்தின் சாபம் தங்கியிருந்த பூமியின் மேல் வசிக்கச் சென்றார்கள். ஒரு காலத்தில் மென்மையான சீரான வெட்ப நிலை கொண்டிருந்த ஆகாயவிரிவு இப்போது குறிப்பிட்ட மாற்றங்களுக்கு உட்பட்டது . மிஞ்சிய வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாக்க ஆண்டவர் கிருபையாக அவர்களுக்கு தோல் உடைகளை உண்டு பண்ணினார்.PPTam 49.2

    அழிவின் முதல் அடையாளமாக, வலிமையிழந்த பூக்களையும் விழுகின்ற இலைகளையும் கண்டபோது, இன்றைக்கு மனிதர்கள் மரித்த தங்களுடையவர்களுக்காக புலம்புவதைக் காட்டிலும் மிக ஆழமாக ஆதாமும் அவனது துணைவியும் புலம்பினார்கள். வலிமையற்ற நுண்ணிய பூக்களின் மரணம் உண்மையாகவே அவர் களுடைய வருத்தத்திற்கான காரணமாக இருந்தது. ஆனால் நேர்த்தியான மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்தபோது அந்தக் காட்சி, மரணம் என்பது ஜீவிக்கிற ஒவ்வொரு ஜீவனின் பங்காகவும் இருக் கிறது என்ற உறுதியான உண்மையை அவர்கள் மனதிற்குக் கொண்டுவந்தது.PPTam 49.3

    ஏதேன் தோட்டம், அதன் இன்பமான பாதைகளிலிருந்து மனிதன் துரத்தப்பட்டு வெகு நாட்களான பின்பும், பூமியின் மீதே இருந்தது. குற்றமின்மையில் தங்கியிருந்த வீட்டைக் காணும் படி விழுந்து போன இனம் அதிக காலம் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன் நுழைவு காவல் தூதர்களால் தடுக்கப்பட்டிருந்தது. கேரு பீன்கள் காவல் செய்திருந்த அந்த பரதீசின் வாசலில் தெய்வீக மகிமை வெளிப்பட்டிருந்தது. இங்கே ஆதாமும் அவனது குமா ரர்களும் தேவனைத் தொழுது கொள்ள வந்தார்கள். எந்த பிர மாணத்தை மீறியதால் அவர்கள் ஏதேனிலிருந்து துரத்தப்பட்டார் களோ, அந்தப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவோம் என்ற தங்களுடைய வாக்குறுதியை இங்கேதான் அவர்கள் புதுப்பித்துக்கொண் டார்கள். அக்கிரமத்தின் அலை உலகம் முழுவதும் பரவின்போது, மனிதருடைய துன்மார்க்கம் ஜலப்பிரளயத்தினால் அவர்கள் அழி வைத் தீர்மானித்தபோது, ஏதேனை நாட்டின் கரம், அதை பூமியிலிருந்து எடுத்துக்கொண்டது. ஆனால் கடைசியாக சீரமைக்கப்படும் போது, புதிய வானமும் புதிய பூமியும் (வெளி 21:1) உண்டாகும் போது, துவக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் மிகவும் மகிமையாக அலங்கரிக்கப்பட்டதாக அது மீண்டும் நிறுத்தப்படும்.PPTam 50.1

    அங்கே, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்ட வர்கள், ஜீவ விருட்சத்தின் கீழே அழியாத வீரியத்தை சுவாசிப்பார்கள். முடிவில்லாத யுகங்களாக, பாவமில்லாத உலகத்தின் வாசிகள், மகிழ்ச்சியான அந்தத் தோட்டத்தில், பாவத்தால் தொடப்படாத தேவனுடைய சிருஷ்டிப்பின் பூரணமான கிரியையை சிருஷ்டிகருடைய மகிமையான திட்டத்தை மனிதன் நிறைவேற்றியிருந்தால், இந்த முழு உலகமும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதற்கான மாதிரியைக் காண்பார்கள்.PPTam 50.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents