Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    26 — சிவந்தசமுத்திரத்திலிருந்து சீனாய்க்கு

    மேகஸ்தம்பத்தின் நடத்துதலின் கீழ் இஸ்ரவேலின் சேனை சி வந்த சமுத்திரத்திலிருந்து தங்களுடைய பிரயாணத்தைத் துவங்கியது. அவர்களைச் சுற்றிலும் இருந்த காட்சிகள் பாழும் வெறுமையுமாகக் காட்சியளித்த மலைகளும், காய்ந்து போன சமபூமிகளும், வெகு தூரத்திற்கு பரவியிருந்த சமுத்திரமும், சத்துருக்களின் சவங்கள் எரியப்பட்டிருந்த கரைகளுமாக இருந்தது. என்றபோதும் விடுதலையின் உணர்வில் அவர்கள் முழுமையாக மகிழ்ந்திருந்தனர். அதிருப்தியின் ஒவ்வொரு எண்ணமும் அமைதிப்படுத்தப்பட்டிருந்தது.PPTam 352.1

    ஆனால் பிரயாணித்தபோது மூன்று நாட்களுக்கு அவர்கள் தண்ணீரைக் காணவில்லை. அவர்கள் தங்களிடம் வைத்திருந்ததும் முடிந்து போயிருந்தது. வெய்யிலினால் காய்ந்து போயிருந்த சமபூமியில்களைப்புடன் நகர்ந்து சென்ற போது, தாகத்தைத் தணிக்கக்கூடிய ஒன்றும் அங்கே இருக்கவில்லை. இந்த பகுதியோடு அறிமுகமாகியிருந்த மோசே, நீருற்றுகள் காணப்படக்கூடிய அருகிலிருந்த மாராவின் தண்ணீர்கள் உபயோகிக்கக் கூடாதவை என்று மற்றவர்கள் அறிந்திராததை அறிந்திருந்தான். ஆழ்ந்த எதிர்பார்ப்போடு நடத்திச் சென்ற மேகத்தை அவன் கவனித்தான். தண்ணீர், தண்ணீர் என்று அவர்கள் வரிசையில் எதிரொலித்த மகிழ்ச்சியான சத்தத்தை சோர்வடைந்த இருதயத்தோடு அவன் கேட்டான். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தங்கள் மகிழ்ச்சியான அவசரத்தில் ஊற்றண்டை கூடினபோது தண்ணீர் கசப்பாயிருக்கிறது என்ற வேதனையின் குரல் சேனையிடமிருந்து வெடித்தது. -PPTam 352.2

    தங்களுடைய பயத்திலும் விரக்தியிலும், அந்த இரகசியமான மேகத்திலிருந்த தெய்வீக பிரசன்னம் மோசேயையும் தங்களையும் நடத்தி வந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப்பாராது, இப்படிப்பட்ட பாதையில் நடத்தி வந்ததற்காக மோசேயை அவர்கள் நிந்தித்தனர். அவர்களுடைய துயரத்தினால் ஏற்பட்ட துக்கத்தில் அவர்கள் செய்ய மறந்ததை மோசே செய்தான். உதவிக்காக தேவனிடம் ஊக்கமாக மன்றாடினான். கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. இங்கே நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின் வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்ற வாக்குத்தத்தம் மோசேயின் வழியாக இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்டது.PPTam 353.1

    மாராவிலிருந்து மக்கள் ஏலீமுக்கு பிரயாணப்பட்டனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது, சீனாய் வனாந்தரத்திற்குள் நுழைவதற்கு முன் அநேக நாட்கள் இங்கே அவர்கள் தங்கியிருந்தனர். எகிப்திலிருந்து வெளியே வந்த ஒரு மாதம் கழித்து வனாந்தரத்தில் தங்களுடைய முதல் பாளயத்தை அவர்கள் நிறுவினர். அவர்கள் வைத்திருந்த ஆகாரம் இப்போது குறைய ஆரம்பித்தது. வனாந்தரத்தில் மிகக் குறைவான செடிகளே இருந்தன. அவர்களுடைய மந்தைகளும் குறைந்துகொண்டிருக்கின்றன. இந்த திரள் கூட்டத்திற்கு எவ்வாறு உணவு கொடுக்கப்படப்போகிறது? அவர்கள் இருதயங்களில் சந்தேகங்கள் நிரம்பியது; அவர்கள் மீண்டும் முறுமுறுத்தனர். நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை ; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அதிபதிகளும் மூப்பர்களுங்கூட தேவன் நியமித்திருந்த தலைவர்களுக்கு எதிராக குற்றப்படுத்துவதில் சேர்ந்துகொண்டனர்.PPTam 353.2

    அவர்கள் இன்னமும் பசியினால் துன்பப்படவில்லை. அவர்களுடைய அப்போதைய தேவைகள் சந்திக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் எதிர்காலத்திற்காக பயப்பட்டார்கள். இந்த வனாந்தரத்தின் வழியாக பிரயாணிப்பதில் இந்தத் திரள் கூட்டங்கள் எவ்வாறு பிழைக்கும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை. தங்களுடைய கற்பனையில் தங்கள் குழந்தைகள் அழிவதை அவர்கள் கண்டார்கள். அவர்களுடைய இருதயங்கள் இதுவரைக்கும் அவர்களை விடுவித்தவரிடம் திரும்புவதற்காகவே கஷ்டங்கள் சூழவும் அவர்களுடைய உணவு குறையவும் ஆண்டவர் அனுமதித்திருந்தார். தங்களுடைய தேவைகளில் அவரை அழைப்பார்களென்றால் தம்முடைய அன்பையும் கவனிப்பையும் குறித்த அடையாளங்களை அவர் இன்னமும் அவர்களுக்குவெளிக்காட்டுவார். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்களெனில் அவர்கள் மேல் ஒரு வியாதியும் வராது என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். தாங்களும் தங்கள் பிள்ளைகளும் பசியினால் மரித்துவிடுவோம் என்று பயத்தோடு பார்த்திருப்பது அவர்களுடைய அவிசுவாசமான பாவமே.PPTam 354.1

    அவர்களுடைய தேவனாக இருக்கவும், அவர்களை தமக்கு ஒரு ஜனமாகச் சேர்த்துக்கொண்டு பெரிய நல்ல தேசத்திற்கு கொண்டு செல்லவும் தேவன் அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தார். ஆனால் அந்த தேசத்திற்குப் போகும் வழியில் சந்தித்த ஒவ்வொரு தடங்கல்களுக்கும் சோர்ந்து போக அவர்கள் ஆயத்தமாக இருந்தனர். அவர்களை உயர்த்தி தகுதிப்படுத்தி பூமியில் புகழ்ச்சியாக்கும் படியாகவே எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து வியக்கும் விதத்தில் அவர் அவர்களை வெளியே கொண்டு வந்திருந்தார். ஆனால் கஷ்டங்களைச் சந்திப்பதும் தனிமையை சகிப்பதும் அவர்களுக்கு அவசியமாயிருந்தது. கீழான நிலையிலிருந்து தேவன் அவர்களை கொண்டுவந்து, தேசங்களில் நடுவேகனம் நிறைந்த இடத்தை அடையவும் முக்கியமான மற்றும் பரிசுத்தமான காரியங்களைப் பெற்றுக்கொள்ளவும் அவர்களை பொருத்துகிறார். அவர் அவர்களுக்காக நடப்பித்த அனைத்துக் காரியங்களின் கண்ணோட்டத்தில் அவர்கள் அவர்மேல் விசுவாசம் வைத்திருப்பார்களானால், வசதியின்மை யையும் தனிமையையும் மெய்யான துன்பத்தையுங் கூட மகிழ்ச்சியாக சுமந்திருப்பார்கள். ஆனால், அவருடைய வல்ல மையின் தொடர்ச்சியான சான்றுகளை பார்த்தால் மாத்திரமே நம்பவும், அதற்கு மேல் ஆண்டவரை நம்பாதிருக்கவும் அவர்கள் சித்தங்கொண்டிருந்தார்கள். எகிப்தில் அவர்களுடைய கசப்பான சேவையை அவர்கள் மறந்து போனார்கள். அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததில் அவர்களுக்காக தேவன் காட்டின அவருடைய நன்மையையும் வல்லமையையும் அவர்கள் மறந்து போனார்கள். எகிப்தின் முதற்பேறனைத்தையும் அழிக்கும் தூதன் சங்கரித்தபோது தங்களுடைய குழந்தைகள் எவ்விதமாக விட்டுவைக்கப்பட்டிருந்தனர் என்பதை அவர்கள் மறந்து போனார்கள். சிவந்த சமுத்திரத்தில் தெய்வீக வல்லமையின் ஆடம்பரமான வெளிக்காட்டுதலை அவர்கள் மறந்து போனார்கள். தங்கள் முன் திறந்த பாதையில் அவர்கள் பாதுகாப்பாக கடந்திருக்க, அவர்களைப் பின்தொடர்ந்த சத்துருக்களின் படைகள் சமுத்திரத்தால் மூழ்கடிக்கப்பட்டதை அவர்கள் மறந்துபோனார்கள். தங்களுடைய அப்போதைய வச தியின்மையையும் போராட்டங்களையும் மாத்திரமே அவர்கள் கண்டு உணர்ந்தார்கள். நாங்கள் அடிமைகளாயிருந்தோம், அவர் எங்களை பெரிய ஜாதியாக்குகிறார். தேவன் எங்களுக்காக பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார் என்று சொல்லுவதற்குப் பதிலாக வழியின் கடினத்தைக் குறித்துப் பேசி, தங்களுடையகளைப்பான பிரயாணம் எப்போது முடியும் என்று வியந்தனர்.PPTam 354.2

    இஸ்ரவேலர்களின் வனாந்தர வாழ்க்கையின் சரித்திரம் காலத்தின் கடைசியில் இருக்கப்போகிற தேவனுடைய இஸ்ரவேலுக்கு நன்மை செய்யும்படியாக எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய போக்கிலும் வரத்திலும், பசிக்கும் தாகத்திற்கும்களைப்பிற்கும் அவர்கள் வெளிப்படுத்தப் பட்டிருந்ததிலும், அவர்களை விடுவிக்கும்படி குறிப்பிட்ட விதமாக வெளிக்காட்டப் பட்ட அவருடைய வல்லமையிலும், வனாந்தரத்தில் அலைந்திருந்த வர்களோடு தேவன் நடந்து கொண்ட விதங்களைக் குறித்த ஆவணம், எல்லா யுகங்களிலுமுள்ள அவருடைய பிள்ளைகளுக் கான போதனைகளாலும் எச்சரிப்புகளாலும் நிறைந்திருக்கின்றது. எபிரெயர்களின் வெவ்வேறுபட்ட அனுபவங்கள், வாக்குத்தத்த கானானுக்கு அவர்களை ஆயத்தப்படுத்தும் கல்விக்கூடமாக இருந்தது. பரலோகக் கானானுக்காகச் செய்யும் ஆயத்தத்தில், போதிக்கப்படுவதற்கேதுவான தாழ்மையான இருதயத்தோடும் போதிக்கப்படக்கூடிய ஆவியோடும், முற்கால இஸ்ரவேலர்கள் கடந்து வந்த போராட்டங்களைத் தம்முடைய ஜனங்கள் இந்த நாட்களில் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார்,PPTam 355.1

    அநேகர் இஸ்ரவேலர்களைத் திரும்பிப்பார்த்து, அவர்களுடைய அவிசுவாசத்தையும் முறுமுறுப்பையுங்குறித்து ஆச்சரியப் பட்டு, தாங்கள் இவ்விதம் நன்றியறியாது இருந்திருக்கமாட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய விசுவாசம் மிகச்சிறிய போராட்டங்களால் சோதிக்கப்படும்போதே, முற்கால இஸ்ரவேலர்களைக் காட்டிலும் எவ்விதத்திலும் அதிக விசுவாசத்தையோ, பொறுமையையோ அவர்கள் காட்டுவதில்லை. நெருக்கமான இடங்களில் கொண்டு வரப்படும்போது, அவர்களைச் சுத்திகரிக்கும் படியாக தேவன் தெரிந்து கொண்ட முறை யைக்குறித்து முறுமுறுக்கிறார்கள். தங்களுடைய அப்போதைய தேவைகள் சந்திக்கப்படும் போதும் எதிர்காலத்திற்காக தேவனை நம்ப அநேகர் மனமற்றிருக்கிறார்கள். வறுமை வந்துவிடுமோ என்றும் தங்கள் பிள்ளைகள் துன்பப்பட்ட விட்டுவிடப்படுவார் களோ என்றும் தொடர்ச்சியான கவலையில் அவர்கள் இருக் கிறார்கள். சிலர் எப்போதும் தீமையையே எதிர்பார்த்து, அல்லது இருக்கக்கூடிய கஷ்டங்களை பெரிது படுத்துவதினால் நன்றியைக் கோரும் அநேக ஆசீர்வாதங்களுக்கு அவர்களுடைய கண்கள் குருடாகியிருக்கிறது. இளைப்பில்லாதவர்களாகவும், அலட்டிக் கொள்ளுகிறவர்களாகவும் இருக்கிறதினால் அவர்கள் சந்திக்கிற தடங்கல்கள் பலத்தின் ஒரே ஆதாரமான தேவனிடமிருந்து உதவி யைத் தேட அவர்களை நடத்துவதற்குப்பதிலாக, அவரிடமிருந்து பிரிக்கிறது.PPTam 356.1

    இவ்வாறு அவிசுவாசிப்பதினால் நாம் நன்றாக செய்கிறோமா? நாம் ஏன் நன்றியறியாமலும் அவநம்பிக்கையோடும் இருக்க வேண்டும். இயேசு நமது நண்பர். நமது நன்மையில் பரலோகம் முழுவதும் ஆர்வமாயிருக்கிறது. நமது வேதனையான எதிர்பார்ப் பும் பயமும் தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துகிறது. சோதனைகளைத் தாங்க உதவு வதற்குப் பதிலாக நம்மைப் பயமுறுத்தி சோர்வாக்குகிற தனிமைகளில் நாம் திளைக்கக்கூடாது. ஏதோ நம்முடைய சந்தோஷமெல்லாம் இந்த உலகக் காரியங்களிலேதான் இருக்கிறது என்பதைப்போல், வாழ்க்கையில் முதன்மையாகத் தேடுகிற எதிர்கால தேவைக்காக ஆயத்தப்பட்ட நம்மை நடத்துகிற அவநம்பிக்கைக்கு ஒரு இடமும் கொடுக்கப் படக்கூடாது. தம்முடைய ஜனங்கள் கவலையினால் பாரமடைய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமல்ல. நம்முடைய பாதையில் ஆபத்துகள் இருக்காது என்று ஆண்டவர் நம்மிடம் செ பால்லுவதில்லை. பாவமும் தீமையுமான் உலகத்திலிருந்து தமது ஜனங்களை எடுத்துக்கொள்ளுவதாக அவர் கூறுவதில்லை. மாறாக, ஒருபோதும் கைவிடாத அடைக்கலத்தைச் சுட்டிக்காட்டு கிறார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களை’ ‘நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அவர் அழைக்கிறார். உங்கள் கழுத்தின் மேல் நீங்கள் வைத்திருக்கிற வருத்தம் மற்றும் உலகக் கவலைகளின் நுகத்தை அப்புறப்படுத்தி, என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத். 11:28, 29) என்கிறார். அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைக்கும் போது, நாம் தேவனில் இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் காணுவோம். காணலாம். 1 பேதுரு 57 ஐ பார்க்கவும்.PPTam 356.2

    அப்போஸ்தலனாகிய பவுல் சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள் (எபி. 3:12) என்கிறார். நமக்காக தேவன் செய்திருக்கிற அனைத்தையும் காணும்போது நம்முடைய விசுவாசம் பலமானதும் செயல்படுகிறதும் சகிக்கக்கூடியதுமாக இருக்கவேண்டும். முறுமுறுத்து, குற்றப்படுத்துவதற்குப் பதிலாக நம்முடைய இருதயத்தின் பாஷை என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி, என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே (சங்.103:1, 2) என்பதாக இருக்கவேண்டும்.PPTam 357.1

    இஸ்ரவேலின் தேவைகளைக் குறித்து தேவன் கவனமின்றி இருக்கவில்லை. நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன் என்றார். அனுதின் தேவைக்கு சேகரிக்கும்படியும், ஓய்வுநாளை பரிசுத்தமாக கைக்கொள்ளுவதற்கேதுவாக ஆறாம் நாளில் இரண்டு மடங்கு சேகரிக்கும் படியும் ஜனங்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படும் என்று மோசேச பையாருக்கு உறுதியளித்தான். சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக்கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திர்ப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுப்பார் என்றான். மேலும் நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்று கூறினான். மீண்டுமாக: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்லும்படி ஆரோனை அழைத்தான். ஆரோன் பேசினபோது ஒருபோதும் தாங்கள் கண்டிராத அப்படிப்பட்ட ஒரு பிரகாசம் தெய்வீக பிரசன்னத்தை அடையாளப்படுத்தினது. அவர்களுடைய உணர்வுகளுக்குக் கொடுக்கப்பட்ட வெளிக்காட்டுதல்களினால் தேவனைக்குறித்த ஒரு அறிவை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய நாமத்திற்கு பயந்து, அவருடைய சத் தத்திற்குக் கீழ்ப்படியும்படியாக மோசே என்கிற மனிதன் அல்ல, உன்னதமானவரே அவர்களுடய தலைவராயிருக்கிறார் என்று அவர்கள் போதிக்கப்பட வேண்டும்.PPTam 357.2

    இரவு வந்தபோது முழு கூட்டத்திற்கும் போதுமான அளவு காடைகளின் கூட்டங்களால் அவர்களுடைய பாளயம் சூழப்பட்டது. காலையில் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின் மேல் கிடந்தது. அது கொத்துமல்லி அளவாயும் வெண்மை நிறமாயும் இருந்தது. ஜனங்கள் அதை மன்னா என்று அழைத்தனர். மோசே. இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக் கொடுத்த அப்பம் என்றான். ஜனங்கள் மன்னாவை சேர்த்து, அனைவருக்கும் ஏராளமாயிருந்ததைக் கண்டனர். அவர்கள் அதை எந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள். எண். 11:3. அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஓப்பாயிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஓமர் அளவு அனுதினமும் சேகரிக்க நடத்தப்பட்டனர். அதைக் காலை வரையிலும் மீதிவைத்திருக்கக்கூடாது. சிலர் அடுத்தநாள் வரையிலும் அதை வைக்கப் பிரயாசப்பட்டனர். ஆனால் அது புசிக்கத்தகாததாயிருந்ததைக் கண்டனர். அந்த நாளுக்கான ஆகாரம் காலையில் தான் சேகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் தரையில் மீந்திருந்த அனைத்தும் சூரிய வெப்பத்தினால் உருகிப்போகும்.PPTam 358.1

    மன்னாவை சேகரிப்பதில் கொடுக்கப்பட்டிருந்த அளவைவிட சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் பெற்றிருந்ததைக் கண்டனர். அதை ஓமரால் அளந்தார்கள் : மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை. கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை.” இந்த வேதவாக்கியத்தின் விளக்கமும் அதிலிருந்து கிடைக்கும் வாழ்க்கைப் பாடமும் கொரிந்தியர்களுக்கு எழுதின் இரண்டாம் நிருபத்தில் பவுலால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன் : மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும் படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லு கிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிக மானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானது மில்லை என்று எழுதியிருக்கிற பிரகாரம், சமநிலைப் பிரமாணத் தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும் படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக (2 கொரி. 3:13-15) என்கிறான்.PPTam 358.2

    ஆறாம் நாளிலே ஜனங்கள் தலைக்கு இரண்டு ஓமர் வீதம் சேகரித்தார்கள், செய்யப்பட்டதை மோசேக்குத் தெரிவிக்கும்படி அதிகாரிகள் விரைந்தார்கள். அவனுடைய பதில் : கர்த்தர் செ ரன்னது இதுதான், நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு, நீங்கள் சுட வேண்டியதைச்சுட்டு, வேவிக்க வேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளை மட்டும் உங்களுக்காக வைத்து வையுங்கள் என்றிருந்தது. அவர்கள் அவ்வாறே செய்து, அடுத்த நாள் மீந்திருந்தது மாறாததாயிருக்கக் கண்டார்கள். அதை இன்றைக்குப் புசியுங்கள், இன்று கர்த்தருக்குரிய ஓய்வு நாள், இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள். ஆறு நாளும் அதைச் சே ர்ப்பீர்களாக, ஏழாம் நாள் ஓய்வு நாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.PPTam 359.1

    இஸ்ரவேலர்களின் காலத்தில் ஆசரிக்கப்பட்டதைப்போலவே தமது பரிசுத்த நாள் புனிதமாக ஆசரிக்கப்பட வேண்டும் என்று ஆண்டவர் கோருகிறார். எபிரெயர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை யெகோவாவிடமிருந்து தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை என்று அனைத்து கிறிஸ்தவர்களும் கருதவேண்டும். அதன் பரிசுத்த மணித்துளிகளுக்காக எல்லாம் ஆயத்தப் பட்டிருக்கும்படியாக ஓய்வு நாளுக்கு முந்தின நாள் ஆயத்த நாளாக்கப்படவேண்டும். பரிசுத்தமான நேரத்தை ஆக்கிரமிக்க என்ன காரணத்திலும் நம்முடைய சொந்த தொழில் அனுமதிக் கப்படக்கூடாது. வியாதிப்பட்டவர்களும் துன்பப்பட்டவர்களும் கவனிக்கப்பட வேண்டும் என்று தேவன் அறிவுறுத்தினார். அவர் களுக்கு இலகுவுண்டாக்க செய்யப்படும் வேலை, தேவைப்படுகிற உழைப்பு, இரக்கத்தின் வேலையாகும். அது ஓய்வு நாளை மீறுவதாகாது . ஆனால் தேவையற்ற அனைத்து வேலைகளும் தவிர்க்கப்படவேண்டும். ஆயத்த நாளிலே செய்து முடிக்கக்கூடிய சிறிய காரியங்களை ஓய்வுநாளின் ஆரம்பம் வரைக்கும் அநேகர் கவனமின்றி தள்ளிப்போடுகின்றனர். அப்படியிருக்கக்கூடாது. ஓய்வுநாளின் துவக்கம் - வரைக்கும் நெகிழப்படுகிற வேலை, அது கடந்து செல்லும் வரைக்கும் செய்யப்படாதே இருக்க வேண்டும். இந்த முறை, சிந்தனையற்றவர்களின் நினைவுகளுக்கு உதவி செய்து, ஆறு வேலை நாட்களில் தங்களுடைய சொந்த வேலையைச் செய்ய அவர்களை கவனமுள்ளவர்களாக்கும்.PPTam 359.2

    ஓய்வு நாளின் பரிசுத்தத்தை அவர்கள் மனங்களில் பதிக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட மூன்று வித அற்புதங்களை வனாந்தரத்தில் தாங்கள் மேற்கொண்ட நீண்ட பிரயாணத்தின் ஒவ்வொரு வாரத்திலும் இஸ்ரவேலர்கள் கண்டனர். அவை : ஆறாம் நாளில் இரட்டிப்பான மன்னா விழுந்தது; ஏழாம் நாளில் மன்னா பெய்யவில்லை, மற்ற நேரங்களில் வைக்கப்பட்டிருந்த மன்னா உபயோகிக்கத் தகுதியில்லாது போனபோது, ஓய்வுநாளுக் கானது இனிமையும் தூய்மையுமாகப் பாதுகாக்கப்பட்டது.PPTam 360.1

    மன்னா கொடுக்கப்பட்டதோடு இணைக்கப்பட்ட சூழ்நிலை களில், சீனாயில் கற்பனை கொடுக்கப்பட்ட போதுதான் ஓய்வுநாள் ஸ்தாபிக்கப்பட்டது என்று அநேகர் உரிமை கோருவதைப்போல் அல்ல என்பதற்கான முடிவான சான்றுகள் நமக்கு இருக்கின்றன. சீனாய்க்கு வருமுன்பாகவே ஓய்வுநாளைக் கட்டாயமாக ஆசரிக்க வேண்டும் என்பதை இஸ்ரவேலர்கள் புரிந்து கொண்டனர். ஓய்வு நாளில் மன்னா விழாததால், ஓய்வுநாளுக்காக ஆயத்தப்படுவதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இரண்டு மடங்கு சேகரிக்க அறிவுறுத்தப்பட்டதால், இளைப்பாறும் நாளின் இயற்கையான பரிசுத்தம் அவர்கள் மேல் தொடர்ச்சியாக பதிக்கப்பட்டது. ஓய்வுநாளில் மன்னா சேகரிப்பதற்காகஜனங்களில் சிலர் வெளியே சென்ற போது ஆண்டவர்: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்த மட்டும் மனதில்லாதிருப்பீர்கள்? என்று கேட்டார்.PPTam 360.2

    இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள். இந்த அதிசயமான ஏற்பாட்டின் வழியாக தேவனுடைய தவறாத கவனத்தையும் இளகிய அன்பையுங்குறித்து அனுதினமும் நாற்பது வருடங்களாக அவர்கள் நினைவூட்டப் பட்டனர். சங்கீதக்காரனின் வார்த்தைகளில் தேவன் வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான் (சங் 78:24,25) அதாவது தூதர்களால் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கொண்டிருப்பதினால், கானானின் செழிப்பான பூமியில் அசைந்தாடும் தானியங்களின் வயல்களால் சூழப்பட்டிருப்பதைப்போன்று தேவை ஏற்படாத வண்ணம் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று வானத்தின் மன்னாவினால் போஷிக்கப்பட்டு, அவர்கள் அனுதினமும் போதிக்கப்பட்டனர்.PPTam 360.3

    இஸ்ரவேலை பிழைக்கச் செய்வதற்காக வானத்திலிருந்து விழுந்த மன்னா, உலகத்திற்காக ஜீவனைக் கொடுக்கும்படியாக தேவனிடமிருந்து வந்தவரின் அடையாளமாயிருக்கிறது, இயேசு. ஜீவ அப்பம் நானே. உங் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும் படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம், இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே (யோவான் 6:4851) என்று கூறினார். தேவனுடைய ஜனங்களின் எதிர்கால வாழ்க்கைக்கான ஆசீர்வாதங்களின் வாக்குத்தத்தங்களில், ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுத்து (வெளி. 2:17) என்று எழுதப்பட்டிருக்கிறது.PPTam 361.1

    சீனாய் வனாந்தரத்தைவிட்டு புறப்பட்டு இஸ்ரவேலர் ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள். அங்கே தண்ணீர் இல்லை. மீண்டும் அவர்கள் தேவனுடைய ஏற்பாட்டை நம்பவில்லை. தங்களுடைய குருட்டாட்டத்திலும் துணிகரத்திலும் ஜனங்கள் மோசேயிடம் வந்து : நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்று கோரினார்கள். ஆனாலும் அவன் பொறுமையிழக்கவில்லை. என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரிட்சை பார்க்கிறீர்கள் என்று கூறினான். அவர்கள் கோபத்தில் நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்று போட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள். உணவு அவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கப்பட்டபோது, தங்களுடைய அவிசுவாசத்தையும் முறுமுறுப்பையும் கேவலமாக நினைவுகூர்ந்து, எதிர்காலத்தில் ஆண்டவரை நம்புவதாக வாக்குக் கொடுத்தார்கள். ஆனால் வெகு சீக்கிரம் தங்களுடைய வாக்குறுதியை மறந்து, தங்களுடைய முதல் விசுவாச சோதனையிலேயே தோல்வி யடைந்தார்கள். அவர்களை நடத்திச் சென்ற மேகஸ்தம்பம் பயங்கரமான இரகசியத்தை மூடிவைத்திருப்பதாகத் தோன்றியது. மோசேயார் அவன்? எகிப்திலிருந்து அவர்களைக் கொண்டுவரும் அவனுடைய நோக்கம் என்ன? என்று கேள்வி கேட்டனர். சந்தேகமும் அவநம்பிக்கையும் அவர்கள் இருதயத்தை நிரப்ப, அவர்களுடைய சம்பத்துக்களால் தன்னை ஐசுவரியமாக்கும்படி, அவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் தனிமையிலும் கடின உழைப்பிலும் கொன்றுவிடும்படி அவன் திட்டமிட்டிருக்கிறான் என்று தைரியமாக அவனைக் குற்றப்படுத்தினார்கள். கோபத்திலும் சீற்றத்திலும் அவர்கள் அவனைக் கல்லெறிய விருந்தார்கள்.PPTam 361.2

    துயரத்தில் மோசே ஆண்டவரை நோக்கி: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன் என்று அழுதான். இஸ்ரவேலின் மூப்பர்களையும் எகிப்திலே அற்புதங்களைச் செய்ய அவன் உபயோகித்திருந்த கோலையும் எடுத்துக்கொண்டு ஜனங்கள் முன் போகும்படியாக அவன் நடத்தப்பட்டான். ஆண்டவர் அவனிடம் : அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின் மேல் நிற்பேன், நீ அந்தக் கன்மலையை அடி, அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்று கூறினார். அவன் கீழ்ப்படிந்தான். தண்ணீர் பாளயம் முழுவதற்கும் ஏராளமாக இருக்கும்படியாக உயிருள்ள நீரோடையாக வந்தது. எகிப்தில் செய்ததைப்போல், கோலை உயர்த்தி பயங்கரமான வாதையைக் கொண்டுவர மோசேக்குக் கட்டளையிடுவதற்குப் பதிலாக, தமது மாபெரும் இரக்கத்தினால் அவர்களுடைய விடுதலையை நடப்பிக்கும் ஆயுதமாக ஆண்டவர் அந்தக் கோலை மாற்றினார்.PPTam 362.1

    வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார். கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீ ரை நதி போல் ஓடிவரும்படி செய்தார். சங்.78:15, 16. மோசே மலையை அடித்தான். ஆனால் மேக ஸ்தம்பத்தில் தன்னை மறைத்திருந்த தேவ குமாரனே மோசேயின் அருகில் நின்று ஜீவனைக் கொடுக்கும் தண்ணீரைப் புறப்படச் செய்தார். மோசேயும் மூப்பர்களும் மாத்திரமல்ல, தூரத்தில் நின்றிருந்த சபை அனைத்தும் ஆண்டவருடைய மகிமையைக் கண்டது. அந்த மேகம் நகர்த்தப்பட்டிருக்குமானால், அங்கே தங்கியிருந்தவரின் பயங்கரமான பிரகாசத்தினால் அவர்கள் கொல்லப்பட்டிருப் பார்கள்.PPTam 362.2

    தங்களுடைய தாகத்தில் ஜனங்கள் தேவனைச் சோதித்து, தேவன் எங்களை இவ்விடத்திற்குக் கொண்டு வந்திருந்தால், அவர் ஏன் எங்களுக்கு அப்பமும் தண்ணீரும் தரவில்லை ? என்றார்கள். இவ்விதமாக வெளிக்காட்டப்பட்ட அவிசுவாசம் குற்றமாயிருந்தது. மீதமானவர்கள் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வருமோ என்று மோசே பயந்தான். அவர்களுடைய பாவத்தின் நினைவுகூரு தலாக அந்த இடத்தை மோசே மாசா சோதனை என்றும் மேரிபா முறுமுறுப்பு என்றும் அழைத்தான்.PPTam 363.1

    ஒரு புது ஆபத்து அவர்களை இப்போது பயமுறுத்தியது. அவருக்கு விரோதமாக முறுமுறுத்ததினால் அவர்களுடைய சத்துருக்களால் தாக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை அனுமதித் தார். அந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்த கொடூரமான சண்டைக் கார அமலேக்கியர்கள் அவர்களுக்கு எதிராக வந்து, தளர்ந்து இளைத்துப்போயிருந்ததால் பின்னுக்குச் சென்றிருந்தவர்களை அடித்தனர். ஜனக்கூட்டம் யுத்தத்திற்கு ஆயத்தமாக இல்லை என்பதை அறிந்த மோசே, தான் தேவனுடைய கோலை தன் கையில் பிடித்து அருகிலிருந்த மலையுச்சியில் நிற்கும்போது, வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து யுத்த வீரர்களைத் தெரிந்தெடுத்து அடுத்தநாள் காலையில் சத்துருக்களுக்கு எதிராக நடத்திச் செல்ல யோசுவாவை அழைத்தான். அதைப்போலவே மோசேயும் ஆரோனும் ஊரும் யுத்தகளத்தை மேற்பார்வை செய்தவர்களாக மலையின் மேல் நிறுத்தப்பட்டிருக்க, யோசு வாவும் அவனுடைய கூட்டமும் சத்துருக்களைத் தாக்கினர். வானத்திற்கு நேராக கைகள் விரிக்கப்பட்டிருக்க, தன்னுடைய வலதுகையில் தேவனுடைய கோலை பிடித்தவனாக இஸ்ரவேலின் படைகளின் வெற்றிக்காக மோசேஜெபித்தான். யுத்தம் முன்னேறின போது, அவனுடைய கரங்கள் மேல் நோக்கியிருந்தவரையிலும் இஸ்ரவேல் ஜெயித்தது கவனிக்கப்பட்டது. அது கீழேதாழ்ந்தபோது சத்துருக்கள் வெற்றிகொண்டார்கள். அவன் இளைப்படைந்தபோது ஆரோனும் ஊரும் சத்துருக்கள் திரும்பி ஓடச் செய்த சூரியன் அஸ்தமித்த வரையிலும் அவனுடைய கைகளை பிடித்திருந்தார்கள்.PPTam 363.2

    மோசேயின் கைகளைத் தாங்கி நின்றதில், தங்களிடம் பேசும் படியாக அவன் தேவனிடமிருந்து வார்த்தைகளை வாங்கும் போது, அவனுடைய கடினமான வேலையில் அவனைத் தாங்கும் அவர்களுடைய கடமையை ஆரோனும் ஊரும் ஜனங்களுக்குக் காண்பித்தார்கள். மோசேயின் செய்கையும், அவர்களுடைய விதியை தேவன் தமது கரங்களில் வைத்திருக்கிறார் என்றும், அவரைத் தங்களுடைய நம்பிக்கையாக அவர்கள் வைக்கும் போது அவர் அவர்களுக்காக யுத்தம் செய்து அவர்களுடைய சத்துருக்களைத் தாழ்த்துவார் என்றும், மாறாக அவர்மேல் வைத்திருக்கும் பிடியை விட்டு தங்களுடைய சொந்த வல்லமையை நம்பும் போது தேவனைப்பற்றிய அறிவில்லா தவர்களைக் காட்டிலும் இவர்கள் பெலவீனமடைய, அவர்களுடைய சத்துருக்கள் அவர்களுக்கு எதிராக வெற்றிகொள்ளுவார்கள் என்றும் குறிப்பாகக் காண்பித்தது.PPTam 363.3

    மோசே தன்னுடைய கரங்களை வானத்திற்கு நேராக நீட்டி அவர்கள் சார்பாக மன்றாடின் போது எபிரெயர்கள் வெற்றிகொண்ட தைப்போல், தன்னுடைய வல்லமையான உதவியாளரை விசுவாசத்தினால் பிடித்துக்கொள்ளும் போது தேவனுடைய இஸ்ரவேலும் வெற்றிபெறும். எனினும் தெய்வீக பலம் மனித முயற்சிகளோடு இணைக்கப்பட வேண்டும். இஸ்ரவேல் செயல்படாமல் இருக்கும் போது தேவன் அவர்களுடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார் என்று மோசே நம்பவில்லை. அந்த மாபெரும் தலைவன் ஆண்ட வரிடம் மன்றாடின் போது யோசுவாவும் அவனுடைய தைரியமான பின்னடியார்களும் தேவனுடைய சத்துருக்களையும் இஸ்ரவேலுடைய சத்துருக்களையும் திரும்பி ஓடச் செய்ய தங்களுடைய முழு முயற்சியையும் செயல்படுத்தினார்கள்.PPTam 364.1

    அமலேக்கியர்களின் தோல்விக்குப்பின்னர் இதை நினைவு கூரும் பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவி கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்று ஆண்டவர் மோசேயை நடத்தினார். தன்னுடைய மரணத்திற்குச் சற்று முன்பு அந்த மா பெரும் தலைவன் : எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து, நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின் வருகிற உன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு . உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின் கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய், இதை மறக்க வேண்டாம் (உபா. 25:17-19) என்ற பவித்திரமான கட்டளையை தன்னுடைய ஜனங்களுக்குக் கொடுத்தான். இந்தத் துன்மார்க்க ஜனத்தைக் குறித்து ஆண்டவர் : அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தது (யாத் 17:16) என்று அறிவித்தார்.PPTam 364.2

    அமலேக்கியர்கள் தேவனுடைய குணத்தையோ அல்லது அவருடைய அதிகாரத்தையோ குறித்த அறியாமையிலில்லை. அவருக்கு முன் பயப்படுவதற்குப் பதிலாக, அவருடைய வல்லமையை மறுதலிக்க அவர்கள் தங்களைக் கொடுத்தனர். எகிப்தியர்கள் முன் மோசேயினால் செய்யப்பட்ட அதிசயங்கள் இந்த அமலேக்கியர்களால் கேலிக்குரிய பொருளாக்கப்பட்டு, சுற்றியிருந்த தேசங்களின் பயங்கள் பரியாசம்பண்ணப்பட்டிருந்தன. ஒருவரும் தப்பாதபடி எபிரெயர்களை அழிப்பதாக அவர்கள் தங்களுடைய தேவர்களின் நாமத்தில் உறுதிமொழி எடுத்திருந்து, தங்களை தடுப்பதற்கு இஸ்ரவேலின் தேவன் வல்லமையற்றவர் என்று பெருமை பாராட்டியிருந்தனர். அவர்கள் இஸ்ரவேலர்களால் காயப்படுத்தப்படவோ அல்லது பயமுறுத்தப்படவோ இல்லை. அவர்களுடைய தாக்குதல் முற்றிலும் தூண்டப்படாத ஒன்றே. தேவன் மேலிருந்த வெறுப்பையும் பகையையும் வெளிக்காட்டும் படியாகவே அவருடைய ஜனங்களை அழிக்க தேடினர். அமலேக் கியர்கள் நீண்ட காலமாக மிகக் கொடிய பாவிகளாக இருந்தனர்; அவர்களுடைய குற்றங்கள் பழிவாங்கும்படியாக தேவனை எட்டியிருந்தது. எனினும் மனந்திரும்பும்படியாக அவருடைய இரக்கம் இன்னும் அவர்களை அழைத்தது. ஆனால்களைப்படைந்து எதிர்க்கக்கூடாதிருந்த இஸ்ரவேலர்கள் மேல் அமலேக்கின் மனிதர்கள் யுத்தஞ் செய்தபோது, அவர்கள் தங்களுடைய இனத்தின் அழிவை முத்தரித்தனர். தேவனுடைய கவனம் அவருடைய மிகவும் பெலவீனமான பிள்ளைகளின் மேல் இருக் கிறது. அவர்களுக்குச் செய்யப்படும் எவ்வித கொடுமையான செயலும் அல்லது ஒடுக்கத்தின் செயலும் பரலோகத்தால் குறிக்கப்படாமல் போவதில்லை . அவரை நேசித்து அவருக்குப் பயப்படுகிற அனைவர் மேலும் அவருடைய கரம் கேடயமாக நீண்டிருக்கிறது. அந்தகரத்தை அடிக்கவில்லை என்பதில் மனிதர்கள் ஜாக்கிரதையாக இருக்கட்டும். ஏனெனில் அது நீதியின் பட்டயத்தைப் பிடித் திருக்கிறது.PPTam 365.1

    இஸ்ரவேலர்கள் இப்பொழுது பாளயமிறங்கியிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில்தான் மோசேயின் மாமனாகிய எத்திரோவின் வீடு இருந்தது, எபிரெயர்களின் விடுதலையைக் குறித்து எத்திரோ கேள்விப்பட்டிருந்து, அவனைச் சந்திக்கவும், மோசேயின் மனைவியையும் அவனுடைய இரண்டு குமாரரையும் அவனிடம் திரும்ப ஒப்படைக்கவும் இப்போது வந்தான்.PPTam 365.2

    அவர்களுடைய வருகையைக் குறித்து அந்த மாபெரும் தலைவன் தூதுவர்களால் அறிவிக்கப்பட்டான். அவர்களைச் சந் திக்கும்படியாக மகிழ்ச்சியோடு அவன் சென்றான். வாழ்த்துதல்கள் முடிந்ததும், அவர்களை தன்னுடைய கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றான். இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து நடத்திவரும் ஆபத்தான பாதையில் இருந்தபோது, அவன் தன் குடும்பத்தை திருப்பி அனுப்பியிருந்தான். இப்போது அவன் மீண்டும் அவர்களுடைய துணையின் நிம்மதியையும் சௌகரியத்தையும் அனுபவிக்கலாம். இஸ்ரவேலுடனான ஆண்டவருடைய அதிசயமான நடத்துதல்களை அவன் எத்திரோவுக்கு விளக்கிக் கூறினான். அந்த முற்பிதா களிகூர்ந்து, ஆண்டவரை துதித்து, தேவனுடைய இரக்கத்தை நினைவுகூரும் விதமாக, பவித்திரமான பண்டிகையை ஆசரித்து பலியிடுவதில்PPTam 366.1

    மோசேயோடும் மூப்பர்களோடும் இணைந்துகொண்டான்.PPTam 366.2

    எத்திரோ பாளயத்தில் தங்கியிருந்தபோது மோசேயின் மேலிருந்து பாரங்கள் எவ்வளவு கனமானவை என்பதை விரைவில் கண்டான். திரளான அறியாமையுள்ள பயிற்சிக்கப்படாத கூட்டத்தின் நடுவிலே ஒழுங்கையும் முறையையும் பராமரிப்பது பிரம்மாண்டமான வேலையே ! மோசேதான் அவர்கள் அங்கீகரித்திருந்த தலைவனும் நியாயாதிபதியுமாயிருந்தான். அவர்களுடைய பொதுவான ஆர்வங்களும் கடமைகளும் மாத்திரமல்ல, அவர்கள் நடுவே எழும்பிய போராட்டங்களும் அவனிடம் கொண்டுவரப்பட்டன. நான் ....... தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்று அவன் கூறியதைப்போல், அவர்களுக்குப் போதிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அது கொடுத்ததால் அவைகளை அவன் அனுமதித்திருந்தான். ஆனால் எத்திரோ இதை மறுத்து : இது உமக்கு மிகவும் பாரமான காரியம் ; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது என்று கூறினான். முறையான நபர்களை ஆயிரம் பேருக்குத் தலைவர்களாக நியமிக்கவும், மற்றவர்களை நூறு பேருக்கு அதிபதிகளாகவும் மற்றவர்களை பத்து பேருக்கு அதிபதிகளாகவும் நியமிக்க அவன் மோசேக்கு ஆலோசனை கூறினான். அவர்கள் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ள வர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதராக இருக்க வேண்டும். அவர்கள் சிறிய காரியங்கள் அனைத்தையும் நியாயந்தீர்க்க, மிகக் கடினமான மற்றும் முக்கிய மான வழக்குகள் மோசேயிடம் கொண்டுவரப்பட வேண்டும். நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும், விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டு போய், கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி, அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும் என்று எத்திரோ குறிப்பிட்டான். இந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மோசேக்கு இளைப்பாறுதலை மாத்திரமல்ல, ஜனங்கள் நடுவே மிகப் பூரணமான ஒழுங்கையும் ஸ்தாபித்தது.PPTam 366.3

    ஆண்டவர் மோசேயை மிக அதிகமாக கனம் பண்ணியிருந்து அவன் கைகளினால் அதிசயங்களை நடப்பித்தார். ஆனால் மற்றவர்களுக்குப் போதிக்கும்படி அவன் தெரிந்து கொள்ளப் பட்டான் என்கிற உண்மை தனக்குப் போதனை அவசியமில்லை என்று முடிவெடுக்க அவனை நடத்தவில்லை. இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட தலைவன், மீதியானின் பக்தியுள்ள ஆச ரியனுடைய ஆலோசனைகளை மகிழ்ச்சியோடு கேட்டான். அவனுடைய திட்டங்களை ஞானமுள்ள ஏற்பாடாக ஏற்றுக் கொண்டான்.PPTam 367.1

    ரெவிதீமிலிருந்து மேக ஸ்தம்பத்தின் அசைவை பின்பற்றி ஐனங்கள் தங்களுடைய பிரயாணத்தைத் தொடர்ந்தனர். அவர்களுடைய பாதை வறண்ட பூமியின் வழியாகவும் செங்குத் தான மேடுகளின் வழியாகவும் மலைகளின் மறைவுகளின் வழியாகவும் நடத்திச் சென்றது. மணல் வழியாக நடந்த பல வேளைகளில் கரடுமுரடான மலைகள் மிகப்பெரிய அரண்களாக தங்களுடைய வழியில் குறுக்காக நேராக நிறுத்தி வைக்கப்பட்டு அதற்கு மேற்பட்ட அனைத்து முன்னேற்றத்தையும் தடுப்பதைப் போலக் கண்டார்கள். ஆனால் அதை நெருங்கின் போது, மலைகளின் சுவர்களில் ஆங்காங்கே திறப்புகள் காணப்பட்டு, அதற்கு அப்பால் மற்றொரு சமபூமி அவர்கள் பார்வைக்கு காணப்பட்டது. ஆழமான ஒரு மரணப் பள்ளத்தாக்கின் வழியாக அவர்கள் இப்போது நடத்தப்பட்டனர். அது பயங்கரமும் மனதில் பதியக் கூடிய காட்சியுமாயிருந்தது. இரண்டு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான அடிகள் உயர்ந்திருந்த மலைகளின் முகடு களுக்கு நடுவே, கண்களுக்கு எட்டின தூரத்திற்கு இஸ்ரவேலின் சேனைகள் தங்கள் மந்தைகளோடும் மாடுகளோடும் உயிருள்ள அலையாகக் கடந்து சென்றது. இப்போது அவர்கள் முன் பவித் திரமான கம்பீரத்துடன் சீனாய் மலை தன்னுடைய பிரம்மாண்டமான முகட்டை உயர்த்தியது. மேகஸ்தம்பம் அதன் சிகரத்தில் தங்க, ஜனங்கள் அதன் கீழே இருந்த சம்பூமியில் தங்களுடைய கூடாரங்களை விரித்தனர். இங்கேதான் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு அவர்களுடைய வீடு இருக்கவிருந்தது. இரவில் அக்கினி ஸ்தம்பம் அவர்களுக்குத் தெய்வீக பாதுகாப்பின் நிச்சயத்தை கொடுக்க, அவர்கள் தூங்கும் போது வான மன்னா பாளயத்தின் மேல் மென் மையாக இறங்கியது.PPTam 367.2

    விடியற்காலை மலைகளின் இருண்ட மலைச்சரிவுகளைப் பிரகாசிப்பித்து சூரியனின் பொற்கதிர்கள் ஆழமும் இடுக்கமான பாதைகளைத் துளைக்க, அவை, தேவனுடைய சிங்காசனத்தி லிருந்துவரும் கிருபையின் கதிர்களாக இளைத்த பிரயாணிகளுக்குத் தோன்றியது. ஒவ்வொரு பக்கமும் பிரம்மாண்டமான கரடுமுரடான உயரங்கள் தங்களுடைய தனிப்பட்ட சிறப்பில், நித்திய சகிப்புத் தன்மையையும் மகத்துவத்தையுங்குறித்துப் பேசியது போலக் காணப்பட்டது. இங்கே பவித்திரமான பயபக்தியினால் மனது உணர்த்தப்பட்டது. பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்த (ஏசாயா 40:12) வல்லவருடைய சமூகத்தில் தன்னுடைய அறியாமையையும் பலவீனத்தையும் உணர மனிதன் நடத்தப்பட்டான். இங்கே தேவனால் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட மிகவும் அதிசயமான வெளிப்படுத்து தலை இஸ்ரவேலர் பெறவேண்டியதிருந்தது. தம்முடைய பரிசுத்த கட்டளைகளை தம்முடைய சொந்த குரலினால் அறிவிப்பதன் மூலம், தம்முடைய கோரிக்கைகளின் பரிசுத்தத்தை அவர்கள் மேல் பதிக்கிறதற்காக இங்கே ஆண்டவர் தமது ஜனங்களைக் கூட்டினார். மிகப் பெரிய குறிப்பான மாற்றங்கள் அவர்களில் நடப்பிக்கப்பட வேண்டும். ஏனெனில் அடிமைத்தனத்தின் கீழாக்குகிற செல்வாக் குகளும், விக்கிரக ஆராதனையோடு அதிக காலம் தொடர்ந்திருந்த தோழமையும் பழக்கங்களின் மேலும் குணத்தின் மேலும் அவைகளுடைய அடையாளத்தை வைத்திருந்தன. தம்மைக்குறித்த அறிவை அவர்களுக்குக் கொடுப்பதின் வழியாக அவர்களை மேலான சன்மார்க்க நிலைக்கு உயர்த்த தேவன் கிரியை செய்து கொண்டிருந்தார்.PPTam 368.1