Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    28 - சீனாயில் சிலைவழிபாடு

    மோசே இல்லாதிருந்த நேரம் இஸ்ரவேலுக்கு காத்திருக்கிற நிச்சயமற்ற நேரமாக இருந்தது. அவன் யோசுவாவோடு மலையின் மேல் ஏறினான் என்பதையும், தெய்வீக பிரசன்னத்தின் மின்னல்களினால்PPTam 387.1

    அவ்வப்போது பிரகாசிக்கப்பட்டு, மலை சிகரத்தின் மேல் தங்கியிருந்த கீழே இருந்த சமபூமியிலிருந்து பார்க்கக்கூடிய அடர்ந்த கார்மேகத்திற்குள் நுழைந்தான் என்பதையும் ஜனங்கள் அறிந்திருந்தனர். அவன் திரும்பி வருவதற்காக அவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். தெய்வத்தைப் பொருட்களால் எடுத்துக்காட்டும் எகிப்தோடு அவர்கள் பழகியிருந்ததால், காணக் கூடாத ஒருவரை நம்பியிருப்பது அவர்களுக்குக் கடினமாயிருந்தது. தங்களுடைய விசுவாசத்தை நிலைக்கப்பண்ண மோசேயை அவர்கள் சார்ந்திருந்தனர். இப்போது அவன் அவர்களை விட்டு எடுக்கப்பட்டிருந்தான். ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு வாரமாக கடந்து சென்றது ; அவன் இன்னும் திரும்பவில்லை. அந்த மேகம் பார்வையில் இருந்தபோதும், தங்களுடைய தலைவர் தங்களை விட்டுச் சென்றதாகவோ, அல்லது பட்சிக்கும் அக்கினியினால் விழுங்கப்பட்டதாகவோ அநேகருக்குத் தோன்றியது.PPTam 387.2

    காத்திருந்த இந்தக் காலத்தில் இன்னும் தங்களுக்குக் கொடுக்கப்படப்போகிற வெளிப்படுத்துதல்களை பெற்றுக் கொள்ள தங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்தி, தாங்கள் கேட்டிருந்த தேவனுடைய பிரமாணங்களைத் தியானிக்கிற காலமாக இருந்தது. இந்த வேலையைச் செய்ய அவர்களுக்குப் போதுமான நேரம் இல்லாதிருந்தது; ஒருவேளை தேவனுடைய நியமங்களை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள தேடி, தங்கள் இருதயங்களை அவர்முன் தாழ்மைப்படுத்தியிருந்தால் சே பாதனையிலிருந்து மறைக்கப்பட்டிருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இதைச் செய்யாமல், மிக விரைவில் கவனித்துக் கேளாமலும் பிரமாணமின்றியும் போயினர். விசேஷமாக, பல ஜாதியினரிடம் இந்தக் காரியம் காணப்பட்டது. பாலும் தேனும் ஓடுகிற வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு போகும் வழியில் அவர்கள் பொறுமையற்றிருந்தனர். கீழ்ப்படியும் நிபந்தனையின் பேரில் தான் அந்த நல்ல தேசம் அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்டிருந்தது. ஆனாலும் அவர்கள் அதை மறந்து போயினர். எகிப்துக்கு திரும்பிப்போவதைக்குறித்து ஆலோசனை கூறிய சிலர் அங்கே இருந்தனர். எப்படியானாலும் - கானானை நோக்கி முன்செல்லுவதானாலும் அல்லது எகிப்தை நோக்கி பின் செல்லுவதானாலும் சரி; இனி மோசேக்காக காத்திருக்கக்கூடாது என்ற தீர்மானத்தில் ஜனக்கூட்டம் இருந்தது,PPTam 388.1

    தங்களுடைய தலைவர் இல்லாத நேரத்தில் தங்களுடைய உதவியற்ற நிலையை உணர்ந்து, தங்களுடைய பழைய மூடநம்பிக்கைகளுக்கு அவர்கள் திரும்பினர். பொறுமையற்றிருந்து முறுமுறுப்பதில் திளைப்பதற்கு இந்தப் பல ஜாதியான மக்கள் முதலாவது இருந்தனர். அவர்களே பின் தொடர்ந்த மருள்விழுகைக்குத் தலைவர்களாகவும் இருந்தனர். தெய்வத்தின் அடையாளமாக எகிப்தியர்களால் கருதப்பட்டிருந்த பொருட்களில் காளை அல்லது கன்றுக்குட்டி ஒன்றாக இருந்தது. இப்படிப்பட்ட விக்கிரகாராதனையை எகிப்தில் பழக்கப்படுத்தியிருந்தவர்களின் ஆலோசனையின் பேரில் இப்போது ஒரு கன்றுக்குட்டி செய்யப்பட்டு ஆராதிக்கப்பட்டது. தேவனை எடுத்துக்காட்டவும் மோசேயின் இடத்திலிருந்து அவர்கள் முன் செல்லவும் சில உருவங்களை ஜனங்கள் விரும்பினர். தேவன் தம்மைக்குறித்த எந்த ஒப்புமையையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை. மேலும் அந்த நோக்கத்தோடு எந்தப் பொருளாலும் அவரை எடுத்துக்காட்டுவதை அவர் தடை செய்திருந்தார். எகிப்திலும் சி வந்த சமுத்திரத்தின் அருகிலும் நடத்தப்பட்ட வல்லமையான அற்புதங்கள், அவர் காணக்கூடாத, இஸ்ரவேலுக்கு சர்வ வல்லமையுள்ள உதவியாளரான ஒன்றான மெய்தேவன் என்ற ஒரு விசுவாசத்தை அவர்களில் ஸ்தாபிக்கவே திட்டமிடப்பட்டிருந்தன. அவருடைய பிரசன்னத்தைக் குறித்த காணக் கூடிய சில் வெளிப்பாடுகளின் மேலிருந்த வாஞ்சை, அவர்களுடைய சேனையை வழி நடத்தி வந்த மேக ஸ்தம்பத்திலும் அக்கினி ஸ்தம்பத்திலும் அதோடு கூட சீனாய் மலையின் மேல் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய மகிமையிலும் கொடுக்கப்பட்டிருந்தது. அவருடைய சமூகத்தின் மேகம் இன்னும் அவர்கள் முன் இருக்க, அவர்கள் தங்கள் இருதயத்தில் எகிப்தின் விக்கிரக ஆராதனைக்குத் திரும்பி, காணக்கூடாத தெய்வத்தின் மகிமையை ஒரு காளையின் உருவத்தால் எடுத்துக்காட்டினர்.PPTam 388.2

    மோசே இல்லாதபோது அவர்களை நியாயந்தீர்க்கும் அதிகாரம் ஆரோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய கூட்டம் அவனுடைய கூடாரத்தின் முன் கூடி, அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம், ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டு பண்ணும் என்று கோரியது. இதுவரையிலும் தங்களை நடத்தி வந்த மேகம் இப்போது நிரந்தரமாக மலையின் மேல் தங்கிவிட்டது; தங்களுடைய பிரயாணத்தை அது இனி நடத்தாது என்று அவர்கள் கூறினார்கள். அது இருந்த இடத்தில் அவர்களுக்கு ஒரு உருவம் வேண்டும். ஒருவேளை ஆலோசனை கூறப்பட்ட தைப்போல் அவர்கள் எகிப்திற்குத் திரும்புவார்களெனில் இந்த உருவத்தை தங்கள் முன் சுமந்து சென்று அதை தங்களுடைய தெய்வமாக ஒப்புக்கொள்ளுவதின் வழியாக எகிப்தியரிடமிருந்து தயவு பெற்றுக்கொள்ளலாம்.PPTam 389.1

    இப்படிப்பட்ட நெருக்கடிக்கு உறுதியான தீர்மானமான அசையாத தைரியம் கொண்டதன்னுடைய புகழிற்கும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் அல்லது வாழ்க்கைக்கும் மேலாகக் தேவனுடைய கனத்தை வைத்திருக்கிற ஒரு மனிதன் தேவைப்பட்டான். ஆனால் இப்போதைய இஸ்ரவேலின் தலைவன் அப்படிப்பட்ட குணம் கொண்டவனல்ல. ஆரோன் ஜனங்களோடு உறுதியில்லாது பேசி னான். ஆனால் அவனுடைய உறுதியில்லாத குணமும் பயமும் அவர்களை அந்த நெருக்கடியான நேரத்தில் இன்னும் தீர்மானமுள்ளவர்களாக்கிற்று. கலகம் அதிகமானது; குருட்டாட்டமான காரணம் சொல்லக்கூடாத ஒரு மயக்கம் திரளானவர்களை ஆட்கொண்டது போலத் தோன்றியது. தேவனுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாயிருந்த சிலர் அங்கே இருந்தனர். ஆனால் ஜனங்களில் மிக அதிகமானோர் விசுவாசத்துரோகத்தில் சேர்ந்து கொண்டனர். விக்கிரக ஆராதனைக்காக முன்மொழியப் பட்ட உருவத்தை செய்வதை மறுக்கத் துணிந்த சிலர் கரடுமுரடாக நடத்தப்பட்டனர். அவர்களுடைய குழப்பத்திலும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும், முடிவாக அவர்கள் தங்கள் உயிரை இழந்தனர்.PPTam 389.2

    ஆரோன் தன்னுடைய சொந்த பாதுகாப்பிற்காக பயந்தான். தேவனுடைய கனத்திற்காக நேர்மையாக நிற்பதற்குப் பதிலாக திரளானவர்களின் கோரிக்கைகளுக்கு அவன் ஒப்புக்கொடுத்தான். அவனுடைய முதல் செய்கைஜனங்களிடமிருந்து பொற்காதணிகள் சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்பட வேண்டும் என்றிருந்தது. அப்படிப்பட்ட தியாகம், மறுப்பதற்கு அவர்களை நடத்தும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால் அவர்கள் மனதார தங்களுடைய நகைகளை கொடுத்தனர். அவன் அவைகளிலிருந்து வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை - எகிப்திய தெய்வங்களின் போலியை உண்டாக்கினான். ஜனங்கள் : இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று அறிவித்தார்கள். ஆரோனும், யெகோவாவிற்கான இந்த அவமதிப்பை கீழ்தரமாக அனுமதித்தான். அவன் இன்னும் அதிகம் செய்தான். இந்த பொற்தெய்வம் எப்படிப்பட்ட திருப்தியோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று கண்டு, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று அறிவித்தான். இந்த அறிவிப்பு எக்காளம் ஊதுகிறவர்களால் கூட்டத்திலிருந்து கூட்டத்திற்கு பாளயம் முழுவதும் ஒலிக்கப்பட்டது. அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள். பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். தேவனுக்கு விருந்து. என்கிற வேடத்தில் அவர்கள் தங்களை மிஞ்சின் ஆகாரத்திற்கும் அடங்காத களிப்பிற்கும் ஒப்புக்கொடுத்திருந்தனர்.PPTam 390.1

    நம்முடைய நாட்களிலும் எவ்வாறு பலவேளைகளில் இன்பத்தின் மேலுள்ள அன்பு தேவபக்தியின் தோற்றமாக வேஷம் போட்டுக் காண்பிக்கப்படுகிறது. தொழுகையின் சடங்குகளை செய்து கொண்டிருக்கும் போதே சுயநலமான உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்தும்படி மனிதர்களை அனுமதிக்கிற ஒரு மதம் இஸ்ரவேலின் நாட்களில் இருந்ததைப்போலவே இப்போதும் திரளானவர்களுக்கு இன்பமாக இருக்கிறது. சபையில் அதிகார முள்ள பொறுப்புகளைப் பெற்றிருந்தபோதும், தங்களை அர்ப்பணித்திருக்காதவர்களின் விருப்பங்களுக்கு வணங்கி அவர்களை பாவங்களில் ஊக்கப்படுத்துகிறவளைந்து கொடுக்கும் ஆரோன்கள் அங்கே இன்னமும் இருக்கிறார்கள்.PPTam 390.2

    எபிரெயர்கள் அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவோம் என்று அவரோடு பவித்திரமான உடன்படிக்கை செய்து சில நாட்களே கடந்திருந்தன. அவர்கள் மலைக்கு முன்பாக என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண் டாம். என்று சொல்லுகிற ஆண்டவருடைய வார்த்தைகளைக் கவனித்தவர்களாக நடுக்கத்தோடும் பயத்தோடும் நின்று கொண்டிருந்தனர். தேவனுடைய மகிமை இன்னமும் சபையாரின் பார்வையில் சீனாயின்மேல் தங்கியிருந்தது. ஆனாலும் அவர்கள் வழி விலகி மற்ற தேவர்களுக்காக கேட்டனர். அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள். தங்கள் மகிமையைப் புல்லைத்தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள் (சங். 10619, 20). தம்மை இளகிய தகப் பனாகவும் சர்வவல்லமையுள்ள அரசனாகவும் வெளிப்படுத்தியிருந்த அவருக்கு எப்படிப்பட்ட நன்றியின்மை காண்பிக்கப்பட முடியும் அல்லது தைரியமான அவமதிப்பு கொடுக்கப்படமுடியும்?PPTam 391.1

    மலையின் மேல் பாளயத்திலிருந்த மருள விழுகையைக் குறித்து எச்சரிக்கப்பட்டு, தாமதமின்றி திரும்பிச் செல்லும் படி மோசே நடத்தப்பட்டான். நீ இறங்கிப்போ ; எகிப்து தேசத்திலிருந்து நீ நடத்திக் கொண்டு வந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்து கொண்டு என்று கூறினார். தொடக்கத்திலேயே ஆண்டவர் அவர்களுடைய அசைவுகளை நிறுத்தியிருக்கலாம். அது துவங்கிய போதே தேவன் அவர்களுடைய நடக்கையை நிறுத்தியிருக்கலாம். ஆனால் துரோகத்தையும் மருள் விழுகையையும் தண்டிப்பதில் அனைவருக்கும் ஒரு பாடம் கற்பிக்கும்படியாக அது இவ்வளவு உயரம் வளருவதற்கு அவர் அனுமதித்தார்.PPTam 391.2

    தேவன் தமது ஜனங்களோடு செய்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டிருந்தது. அவர்: என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு, உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்று அறிவித்தார். இஸ்ரவேல் ஜனங்கள் விசேஷமாக பல ஜாதியான மக்கள் தேவனுக்கு விரோதமாக தொடர்ந்து கலகம் செய்யும் குணத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய தலைவருக்கு விரோதமாக முறுமுறுக்கவும் செய்து, தங்களுடைய அவிசுவாசத்தினாலும் பிடிவாதத்தினாலும் அவனை வருத்தப்படுத்துவார்கள். வாக்குத்தத்த நாட்டிற்குள்ளாக அவர்களை நடத்திச் செல்வது பாரமானதும் ஆத்துமாவை வருத்தப்படுத்துவதுமான ஒரு வேலையாக இருக்கும். அவர்களுடைய பாவங்கள் ஏற்கனவே தேவனுடைய தயவை இழந்திருந்து, நீதி அவர்களுடைய அழிவைக் கோரியிருந்தது. எனவே அவர்களை அழித்து, மோசே யை வல்லமையான ஜாதியாக்குவதாக ஆண்டவர் முன்மொழிந் திருந்தார்.PPTam 391.3

    நான் இவர்களை அழித்துப்போட ..... நீ என்னை விட்டுவிடு என்பது ஆண்டவருடைய வார்த்தைகளாயிருந்தன. ஆண்டவர் இஸ்ரவேலை அழிக்கும் நோக்கத்தோடிருப்பாரானால், அவர்களுக்காக யார் மன்றாட முடியும்? பாவியை அழிய விட்டு விடாது அவனுக்காக மன்றாடுகிறவர்கள் எவ்வளவு குறைவான பேர்? தேவன்தாமே எளிதான மதிப்புக்குரிய இடத்தை கொடுக்கும் போது, மிகுந்த உழைப்பிற்கும் பாரத்திற்கும் தியாகத்திற்கும் பதிலாகக் கிடைக்கும் நன்றியறியாமையையும் முறுமுறுப்பையும் யார் மகிழ்வோடு மாற்றிக்கொள்ளமாட்டார்கள்?PPTam 392.1

    சோர்வும் கோபமும் மாத்திரமே தோன்றிய இடத்தில் நம்பிக்கைக்கான ஒரு தளத்தை மோசே கண்டுபிடித்தான். நீ என்னை விட்டு விடு என்ற தேவனுடைய வார்த்தைகளை விட்டுவிடும்படியாக அல்ல, அவர்களுக்காக மன்றாடுவதை ஊக்கப்படுத்துவதைப்போல அவன் புரிந்துகொண்டு, மோசேயின் ஜெபங்களைத்தவிர வேறு ஒன்றும் அவர்களைக் காப்பாற்றாது என்று எடுத்துக்கொண்டு, அவ்வாறு மன்றாடும் போது தேவன் தமது ஜனங்களைக் காப்பார் என்று எடுத்துகொண்டான். அவன் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின் உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? என்று கூறினான்.PPTam 392.2

    தேவன் தம்முடைய ஜனங்களை ஒதுக்கி விட்டதை குறிப்பிட்டுக் காட்டினார். அவர்களைக்குறித்து மோசேயிடம் : எகிப்து தேசத்திலிருந்து நீ நடத்திக் கொண்டுவந்த உன் ஜனங்கள் என்று பேசினார். ஆனால் மோசே தாழ்மையாக இஸ்ரவேலின் தலைமைப் பதவியை தள்ளிவைத்தான். அவர்கள் அவனுடைய வர்களல்ல, மாறாக தேவனுடையவர்கள் என்று நிர்பந்தித்தான். தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின் உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின் மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்கு செய்யும் பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? என்றான்.PPTam 392.3

    இஸ்ரவேல் எகிப்தை விட்டு வெளியேறின் இந்த சில மாதங்களில் அவர்களுடைய ஆச்சரியமான விடுதலையைக் குறித்த செய்தி அவர்களைச் சுற்றிலுமிருந்த நாடுகளில் பரவியிருந்து புறஜாதியாரின் மேல் பயமும் பயங்கரமான எதிர்பார்ப்புகளும் தங்கியிருந்தன. இஸ்ரவேலின் தேவன் தமது ஜனத்திற்கு என்ன செய்வார் என்று பார்க்க அவர்கள் கவனித்திருந்தனர். ஜனங்கள் இப்போது அழிக்கப்படுவார்களானால், அவர்களுடைய சத்துருக்கள் வெற்றி கொள்ள தேவன் கனவீனப்படுவார். பலி செலுத்துவதற்காக தமது ஜனங்களை வனாந்தரத்திற்கு வழி நடத்து வதற்குப்பதிலாக, அவர்களை பலியாக்கும்படி நடத்தினார் என்ற தங்களுடைய குற்றச்சாட்டுகள் மெய் என்று எகிப்தியர்களும் கூறுவார்கள். இஸ்ரவேலின் பாவங்களை அவர்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள். குறிப்பாக கனம் பண்ணின் ஜனங்களின் அழிவு அவருடைய நாமத்திற்கு நிந்தையைக் கொண்டு வரும். ஆண்டவர் யாரை அதிகம் கனம் பண்ணியிருக்கிறாரோ, அவருடைய நாமத்தை பூமியின் மேல் புகழ்ச்சியாக்கும்படியாக அவர்கள் மேல் இருக்கும் பொறுப்பு எவ்வளவு பெரியது! அவருடைய நியாயத்தீர்ப்புகளைக் கொண்டுவரவும்,PPTam 393.1

    தேவபக்தியற்றவர்கள் அவருடைய நாமத்தை நிந்திக்கவும் ஏதுவுண்டாக்குகிற பாவம் செய்வதற்கு எதிராக அவர்கள் எப்படிப்பட்ட கவனத்தோடு காத்துக்கொள்ள வேண்டும்.PPTam 393.2

    யாருக்காக இவ்வளவு அதிக காரியங்களைச் செய்யும்படி தேவனுடைய கரங்களில் கருவியாக இருந்தானோ, அவர்கள் மேலிருந்த வாஞ்சையினாலும் அன்பினாலும் அவர்களுக்காக மன்றாடினபோது அவனுடைய பயந்த சுபாவம் மறைந்துபோனது. ஆண்டவர் அவனுடைய மன்றாட்டுகளைக் கவனித்துக் கேட்டு, சுயநலமற்ற அவனுடைய வேண்டுதலை அங்கிகரித்தார். தேவன் தம்முடைய ஊழியக்காரனை சோதித்தார். அவனுடைய விசுவாசத்தையும், தவறு செய்கிற நன்றியில்லாத ஜனங்கள் மேல் அவனுக் கிருந்த அன்பையும் சோதித்தார். மோசே அந்த சோதனையில் வெற்றி கொண்டான். இஸ்ரவேலின் மேல் அவனுக்கிருந்த விருப்பம் சுயநல நோக்கத்திலிருந்து வந்ததல்ல, தன்னுடைய தனிப்பட்ட கனத்தைக் காட்டிலும், வல்லமையான ஜாதிக்கு தான் தகப்பனாகிற வாய்ப்பைக் காட்டிலும், தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களின் செழிப்பு அவனுக்குப் பிரியமாக இருந்தது. அவனுடைய உண்மையிலும் இருதயத்தின் எளிமையிலும் நேர்மையிலும் ஆண்டவர் இன்பம் கொண்டார். இஸ்ரவேலை வாக்குத்தத்த நாட்டிற்கு நடத்திச்செல்லும் மாபெரும் பொறுப்பை உண்மையுள்ள மேய்ப்பனாக அவனிடம் ஒப்புக்கொடுத்தார்.PPTam 393.3

    சாட்சிப்பலகைகளை சுமந்தவனாக மோசேயும், அவனோடு யோசுவாவும் மலையிலிருந்து இறங்கினபோது, காட்டுத்தனமான கூச்சலுக்குச் சான்று பகர்ந்த, எழுச்சியடைந்த திரளானவர்களின் ஆர்ப்பரிப்பையும் கூக்குரலையும் அவர்கள் கேட்டனர். யுத்த வீரனான யோசுவாவிற்கு சத்துருக்களின் தாக்குதல் தான் முதல் சிந்தையாக இருந்தது, பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்று அவன் கூறினான். ஆனால் இந்த குழப்பத்தின் இயல்பை மோசே இன்னும் சரியாக நிதானித்தான். அது யுத்தத்தின் சத்தமல்ல, ஆர்ப்பாட்டத்தின் சத்தம். அது ஜெயதொனியாகிய சத் தமும் அல்ல, அப்ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.PPTam 394.1

    அவர்கள் பாளயத்தை நெருங்கினபோது, தங்களுடைய விக்கிரகத்தைச் சுற்றிலும் ஜனங்கள் கத்திக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்ததை கண்டனர். அது அஞ்ஞானிகளுடைய கலகத்தின் காட்சியாகவும், எகிப்தியரின் விக்கிரக பண்டிகைகளின் பிரதிபலிப் பாகவும் இருந்தது. தேவனை பவித்திரமான பயபக்தியோடு ஆராதிப்பதற்கு எத்தனை முரண்பட்டிருந்தது அது! மோசேமிகவும் உணர்ச்சிவசப்பட்டான். அவன் இப்போதுதான் தேவனுடைய மகிமையின் சமூகத்திலிருந்து வந்திக்கிறான். நடந்து கொண்டிருப் பதைக் குறித்து அவன் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தபோதும், இஸ்ரவேலை தரந்தாழ்த்தியிருந்த பயங்கரமான அந்த காட்சிக்கு அவன் ஆயத்தப்படாதிருந்தான். அவனுடைய கோபத்தினால் வெகுண்டான். அவர்களுடைய குற்றத்திற்கான தன்னுடைய அரு வருப்பைக் காண்பிக்க கற்பலகைகளை அவன் கீழே வீச, ஜனங்களின் பார்வையில் அவை உடைந்து போயின. இவ்வாறாக, தேவனுடனான தங்கள் உடன்படிக்கையை அவர்கள் முறித்துப் போட்டதினால், தேவனும் அவர்களுடனான தமது உடன்படிக் கையை முறித்துப்போட்டார் என்று அது அடையாளப்படுத்தியது.PPTam 394.2

    மோசேபாளயத்திற்குள் நுழைந்து கலகக்காரரின் கூட்டத்திற்கு நடுவாக கடந்து சென்று, அந்த விக்கிரகத்தை எடுத்து அக்கினியில் வீசினான். பின்னர் அவன் அதை பொடியாக அரைத்து, மலையிலிருந்து வந்த நீரோடையில் தூவி, ஜனங்களைக் குடிக்கச் செய்தான். இவ்வாறாக, அவர்கள் ஆராதித்துக்கொண்டிருந்த தேவனின் தகுதியின்மை காட்டப்பட்டது.PPTam 395.1

    மாபெரும் தலைவன் குற்றவாளியான தன் சகோதரனை அழைத்து, நீ இந்த ஜனங்கள் மேல் இந்தப் பெரும் பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்று கண்டிப்போடு விசாரித்தான். அவர்களுடைய விருப்பங்களுக்கு ஒத்துப்போகாதிருந்தால் அவன் கொல்லப்பட்டிருப்பான் என்பதற்கு, ஜனங்களின் கலகத்தைச் சுட்டிக்காட்டி ஆரோன் தன்னை மறைத்துக்கொள்ள முயன்றான். என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக, இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர். இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டு பண்ணும், எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள். அப்பொழுது நான் பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித்தரக்கடவர்கள் என்றேன், அவர்கள் அப்படியே செய்தார்கள், அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்று ஒரு அற்புதம் நடந்ததாக பொன் அக்கினியில் வீசப்பட்டபோது இயற்கைக்கு மாறான வல்லமையினால் அது கன்றுக்குட்டியாக மாற்றப்பட்டது என்று மோசேயை நம்பவைக்க முயற்சித்தான். ஆனால் அவனுடைய சாக்குப்போக் குகளும் பொய்களும் எதையும் நடப்பிக்கவில்லை . அவன் தலைமை குற்றவாளியாக, நீதியாக நடத்தப்பட்டான்.PPTam 395.2

    ஆரோன்மக்களுக்கு முன்பாகமிகமேலாக ஆசீர்வதிக்கப்பட்டு கனப்படுத்தப்பட்டிருந்தான் என்ற உண்மை அவனுடைய பாவத்தை மிகவும் கொடூரமாக்கியது . கர்த்தருடைய பரிசுத்தனாகிய (சங்.10616) ஆரோன் அந்த விக்கிரகத்தை உண்டாக்கி, அதற்கு ஒரு பண்டிகையை அறிவித்திருந்தான். மோசேக்குவாயாக நியமிக்கப்பட்டிருந்த அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன் (யாத். 4:14) என்று தேவன்தாமே சாட்சிகொடுத்திருந்த அவன், விக்கிரக ஆராதனைக்காரரை பரலோகத்தை எதிர்க்கும் நோக்கத்தில் தடுக்காதிருந்தான். எகிப்தின் மேலும் அவர்களுடைய தெய்வங்கள் மேலும் யார் வழியாக தேவன் நியாயத்தீர்ப்புகளைக் கொண்டு வந்திருந்தாரோ அவன், இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தின் முன் அறிவிக்கப்பட்டதைக் கேட்டு அசைக்கப்படாதிருந்தான். ஆரோன் மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்க வேண்டும் என்றிருந்தார். உபா. 920. ஆனாலும் மோசேயினுடைய ஊக்கமான மத்தியஸ்தத்தினால் அவனுடைய வாழ்க்கை விட்டுவைக்கப்பட்டது. மன வருத்தத்தினாலும் தன்னுடைய பெரிய பாவத்தைக்குறித்த தாழ்மையினாலும் மீண்டும் அவன் தேவ தயவிற்குள் கொண்டுவரப்பட்டான்.PPTam 395.3

    விளைவுகள் என்னவாக இருப்பினும் சரியானதற்காக நிற்கும் தைரியம் ஆரோனிடம் இருந்திருந்தால், அவன் இந்த மருள்விழுகையை தடுத்திருப்பான். தேவனுடனிருந்த தன்னுடைய பற்றை விடாப்பிடியாக அசையாது காத்திருந்தால், சீனாவின் அழிவுகளை அந்த ஜனங்களுக்கு அவன் காட்டியிருந்தால், தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படிவதாக அவருடன் செய்திருந்த பக்திவிநயமான உடன்படிக்கையை அவர்களுக்கு நினைவுபடுத்தியிருந்தால், இந்தத் தீமை தடுக்கப்பட்டிருக்கும், மாறாக, மக்களுடைய விருப்பங்களை செயல்படுத்த மௌனமாக உறுதியோடு அவன் முன்னேறின் செயல், அவர்களுடைய மனங்களில் நுழைந்திருந்த பாவத்தில் வெகுதூரம் செல்லும் படி அவர்களை தைரியப்படுத்தினது.PPTam 396.1

    பாளயத்திற்குத் திரும்பி, மீறுதல்காரர்களோடு எதிர்த்து, கற்பனைகளின் பரிசுத்தமான பலகைகளை உடைத்ததில் மோசே வெளிக்காட்டின் கடுமையான கடிந்து கொள்ளுதலும் கோபமும், அவனுடைய சகோதரனின் இன்பமான பேச்சிற்கும் கௌரவமான முகத்திற்கும் முரணாக ஜனங்களுக்குத் தென்பட்டது, அவர்களுடைய பரிதாபங்கள் ஆரோன் மேல் இருந்தது. தன்னை நியாயப்படுத்துவதற்காக மக்களுடைய கோரிக்கைக்கு ஒப்புக் கொடுத்த தன்னுடைய பலவீனத்திற்கு, மக்களை காரணங்காட்ட ஆரோன் முயற்சித்தான். எனினும் அவர்கள் அவனுடைய மென்மையையும் பொறுமையையும் புகழ்ந்தனர். மனிதன் பார்க்கிறது போல தேவன் பார்க்கிறதில்லை. ஆரோனுடைய ஒப்புக்கொடுக்கும் ஆவியும் பிரியப்படுத்த கொண்டிருந்த வாஞ் சைம் அவன் ஆமோதித்திருந்த மிகப்பெரிய குற்றத்திற்கு அவன் கண்களைக் குருடாக்கியிருந்தது. இஸ்ரவேலின் பாவத்திற்குத் தன்னுடைய செல்வாக்கை விட்டுக்கொடுத்த அவனுடைய வழி, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் சாகிறதற்கு ஏதுவுண்டாக்கிற்று. தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை உண்மையாகச் செயல்படுத்தி, வாழ்க்கையின் செழிப்பையும் கனத்தையும் விட இஸ்ரவேலின் நன்மையே தனக்குப் மிகவும் பிரியமானது என்று காண்பித்த மோசேயின் வழி இதற்கு எத்தனை முரண்பட்டிருக்கிறது.PPTam 396.2

    தேவன் தண்டிக்கப்போகிற அனைத்துப் பாவங்களிலும் மற்றவர்களை தீமை செய்ய உற்சாகப்படுத்துகிறதைப்போன்று அவருடைய பார்வையில் மிகவும் வருந்தத்தக்கது வேறு எதுவும் இல்லை. எவ்வளவு வேதனை நிறைந்த செயலாக இருப்பினும் மீறுதலை உண்மையாக கடிந்து கொள்ளுவதினால் தம்முடைய ஊழியக்காரர்கள் தங்களுடைய உண்மையைக் காண்பிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தெய்வீக ஊழியத்தினால் கனப் படுத்தப்பட்டிருக்கிறவர்கள் பெலவீனமுள்ளவர்களாக காலத்திற்கேற்ப மாறுகிறவர்களாக இருக்கக்கூடாது. சுயத்தை உயர்த்து வதோ, அல்லது ஒப்புக்கொள்ளக்கூடாத கடமைகளுக்கு மறைந்து கொள்ளுவதோ அல்ல, மாறாக, அசையாத பற்றுறுதியோடு தேவனுடைய வேலையை நடப்பிப்பது அவர்களுடைய நோக்க மாயிருக்கவேண்டும்.PPTam 397.1

    இஸ்ரவேலை அழிவிலிருந்து விடுவித்ததில் தேவன் மோசேயின் ஜெபத்திற்கு பதில் கொடுத்திருந்தபோதும், அவர்களுடைய மருள் விழுகை குறிப்பிட்ட விதத்தில் தண்டிக்கப்பட வேண்டும். விழும்படி ஆரோன் அவர்களை அனுமதித்திருந்த ஒழுங்கின் மையும் கீழ்ப்படியாமையும் விரைவாக நசுக்கப்படாவிட்டால், அது துன்மார்க்கத்தின் கலகத்தை உண்டாக்கி திருப்பக்கூடாத அழிவிற்குள் தேசத்தை உட்படுத்தி விடும். பயங்கரமான கடுமையோடு தீமை அப்புறப்படுத்தப்பட வேண்டும். பாளயத்தின் வாசலில் நின்றுகொண்டு, கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்று மோசே ஜனங்களை அழைத்தான். இந்த மருள்விழுகையில் சே ராதிருந்தவர்கள் மோசேயின் வலது பக்கத்தில் தங்களுடைய இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், குற்றஞ் செய்து மனந்திரும்பினவர்கள் அவனது இடது பக்கத்தில் நிற்கவேண்டும்.PPTam 397.2

    இந்தக் கட்டளை கீழ்ப்படியப்பட்டது. லேவியின் கோத்திரம் இந்த விக்கிரகாராதனையில் பங்கெடுக்கவில்லை என்பது கண்டறி யப்பட்டது. மற்ற கோத்திரங்களில் பாவஞ் செய்திருந்தபோதும் மனந்திரும்புதலை குறிப்பிட்ட அநேகர் இருந்தனர். ஆனால் கன்றுக்குட்டியை உண்டாக்கத் தூண்டிய பல ஜாதியான மக்களைக் கொண்டிருந்த மிகப் பெரிய கூட்டம் மீறுதலில் பிடிவாதமாக நின்றிருந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நாமத்தில், மோசே தனது வலது பக்கத்தில் நிற்கிறவர்களுக்கு, விக்கிரகாராதனைக்கு விலகியிருந்த அவர்கள் தங்களுடைய பட்டயத்தை கட்டிக்கொண்டு, கலகத்தில் பிடிவாதமாயிருந்தவர்களை கொலை செய்யும்படியாக கட்டளை கொடுத்தான். அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் விழுந்தார்கள். தகுதி, இனம், நட்பு எதுவும் கருத்தில் கொள்ளப்படாமல் தீமையின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். மனந்திரும்பி தங்களைத் தாழ்த்தின் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.PPTam 397.3

    இந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பின் வேலையை நடத்தினவர்கள் தெய்வீக அதிகாரத்தினால் பரலோக அரசனின் தீர்ப்பை செயல்படுத்தினார்கள். மனிதர்கள் தங்களுடைய மனித கண்ணோட்டத்தில் எவ்விதம் சக மனிதர்களை நியாயந்தீர்த்து கடிந்து கொள்ளுகிறார்கள் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஆனால் அக்கிரமத்தின் மேல் தமது தீர்ப்பைச் செயல்படுத்தும்படி தேவன் கட்டளையிடும் போது, அவர்கள் கீழ்ப்படிய வேண்டும். இந்த வேதனையான செயலை நடத்தினவர்கள் கலகத்தின் மேலும் விக்கிரகாராதனையின் மேலும் தங்களுக் கிருந்த அருவருப்பை இவ்விதமாக வெளிக்காட்டி, தங்களை இன்னும் முழுமையாக மெய்யான தேவனுடைய சேவைக்கு அர்ப்பணித்தார்கள். லேவி கோத்திரத்தின் மேல் விசேஷமான குறிப்பை வைத்ததின் மூலம் ஆண்டவர் அவர்களுடைய உண் மையை கனம்பண்ணினார்.PPTam 398.1

    துரோகத்தைக் குறித்த குற்றத்தில், அதுவும் அவர்கள் மேல் நன்மைகளைக் குவித்திருந்த தாங்கள் கீழ்ப்படிவோம் என்று வலிய வாக்குக் கொடுத்திருந்த இராஜாவிற்கு எதிரான குற்றத்தில் அவர்கள் இருந்தார்கள். தெய்வீக அரசாங்கம் பராமரிக்கப்படு வதற்கு துரோகிகளின் மேல் தண்டனை அனுப்பப்பட வேண்டும். எனினும் இங்கேயுங்கூட தேவனுடைய இரக்கம் வெளிக்காட்டப்பட்டது. அவர் தமது பிரமாணத்தை பராமரிக்கும் போது, மனந்திரும்புவதற்காக சந்தர்ப்பத்தை தெரிந்து கொள்ளும் உரிமையை அவர்கள் அனைவருக்கும் கொடுத்திருந்தார். கலகத்தில் பிடிவாதமாக இருந்தவர்கள் மாத்திரமே அழிக்கப்பட் டார்கள்.PPTam 398.2

    சுற்றிலும் இருக்கிற தேசங்களுக்கு விக்கிரகாராதனையின் மேலிருக்கிற அதிருப்தியை சாட்சியாக அறிவிக்கும்படி பாவம் தண்டிக்கப்படுவது அவசியமாயிருந்தது. குற்றமுள்ளவன் மேல் நியாயத்தீர்ப்பை செயல்படுத்தினதால் அவர்களுடைய குற்றத்திற்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பை மோசே தேவனுடைய கருவியாக இருந்து பரிசுத்தமான பதிவுகளில் வைக்க வேண்டும். இஸ்ரவேலர்கள் இதற்குப்பின் தங்களைச் சுற்றியிருக்கும் கோத்திரங்களின் விக்கிரகாராதனையை கடிந்துகொள்ளும்போது, யெகோவாவை தங்களுடைய தெய்வமென்று உரிமை பாராட்டின் ஜனங்கள் ஒரு கன்றுக்குட்டியை ஓரேபிலே உண்டாக்கி வணங்கி னார்கள் என்று அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுவார்கள். அப்போது, அழகில்லாத சத்தியத்தை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தப்படும் போதும், அந்த மீறுதலின் பயங்கரமான முடிவை இஸ்ரவேலர்கள் சுட்டிக்காட்டி, தங்களுடைய பாவம் அங்கீகரிக்கப்படவோ, அல்லது மன்னிக்கப்படவோ இல்லை என்பதின் சான்றாக மீறினவர்களுடைய பயங்கரமான அழிவை இஸ்ரவேல் காட்ட முடியும்.PPTam 399.1

    நியாயத்தைவிட எவ்வளவும் குறையாதிருந்த அன்பு, இந்தப் பாவத்திற்கு தண்டனை அனுப்பப்பட வேண்டும் என்று கோரியது. தேவன் தமது மக்களின் காப்பாளராகவும் அரசனாகவும் இருக்கிறார். மற்றவர்களை அழிவிற்குள் நடத்தாதிருக்க, மீறுதலில் தீர்மானமாயிருக்கிறவர்களை அவர் அறுப்புண்டு போகப்பண்ணுகிறார். பாவம் தண்டிக்கப்படாமல் போவதினால் ஏற்படும் விளைவுகளை, காயீனின் வாழ்க்கையை விட்டுவைத் ததின் வழியாக தேவன் பிரபஞ்சத்திற்கு விளக்கிக் காட்டியிருக் கிறார். அவனுடைய வாழ்க்கையினாலும் போதனையினாலும் அவனுடைய பின்னடியார்கள் மேல் அவன் ஏற்படுத்தின் செல் வாக்கு, முழு உலகத்தையும் ஜலப்பிரளயத்தினால் அழிக்கும்படியான ஒரு சீர்கெட்ட நிலைக்குக் கொண்டு சென்றது. ஜலப்பிரள யத்திற்கு முன்னான சரித்திரம் பாவிக்கு நீண்ட வாழ்க்கை ஆசீர்வாத மல்ல என்பதற்கு சாட்சி பகருகிறது. தேவனுடைய நீடிய பொறுமை அவர்களுடைய அக்கிரமத்தை குறைக்கவில்லை. மனிதன் எவ் வளவு நீண்ட காலம் ஜீவித்திருந்தானோ அவ்வளவு சீர்கெட்ட வனானான். அதுபோலவே, சீனாயின் மருள்விழுகையிலும் . மீறுதலின் மேல் உடனடியாக தண்டனை அனுப்பப்படாத பட்சத்தில் அதே மாதிரியான விளைவுகள் மறுபடியும் காணப்படும். பூமி நோவாவின் நாட்களில் இருந்ததைப்போலவே சீர்கேடடைந்திருக்கும். இந்த மீறுதல்காரர்கள் விட்டுவைக்கப்பட்டிருந்தால் காயீனுடைய வாழ்க்கையை விட்டுவைத்தினால் ஏற்பட்ட விளைவுகளைக் காட்டிலும் மிகப்பெரிய தீமை பின்தொடர்ந்திருக்கும். இலட்சக்கணக்கானோர் மேல் தண்டனை வருவதை தடுப்பதற்கு ஆயிரக்கணக்கானோர் வேதனைப்படுவதும் தேவனுடைய இரக்கமே . அநேகரைக் காப்பாற்றும்படியாக கொஞ்சம் பேரை அவர் தண்டிக்க வேண்டும். மேலும் தேவனுக்குக் கீழ்ப்படியும் தங்களுடைய பற்றை ஜனங்கள் தூர எரிந்ததினால் தெய்வீக பாதுகாப்பையும் அவர்கள் இழந்திருந்தனர். இந்த பாதுகாப்பை இழந்த முழுதேசமும் அவர்களுடைய சத்துருக்களின் வல்லமைக்கு திறக்கப்பட்டிருந்தது. எண்ணிக்கைக்கு அடங்காதவல்லமையான அவர்களுடைய சத்துருக்களுக்கு அவர்கள் விரைவில் இரையாவார்கள். இஸ்ரவேலின் நன்மைக்காகவும் பின்வரும் சந்ததிகளின் பாடங்களுக்காவும் அந்தக் குற்றம் முறையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாவிகள் அவர்களுடைய தீய வழி களில் நிறுத்தப்பட வேண்டும் என்பது கிருபையைக் காட்டிலும் எவ்வளவும் குறைவானதல்ல . அவர்களுடைய வாழ்க்கை காக்கப்பட்டிருக்குமானால், தேவனுக்கு எதிராக கலகம் செய்ய அவர்களை நடத்தின் அதே ஆவி, அவர்களுக்குள்ளேயே வெறுப்பையும் சண்டையையும் வெளிக்காட்டியிருந்திருக்கும். முடிவாக அவர்கள் ஒருவரையொருவர் அழித்திருப்பார்கள். உலகத்தின் மேலிருந்த அன்பினாலும் இஸ்ரவேலின் மேலிருந்த அன்பினாலும் மீறினவர்கள் மேலிருந்த அன்பினாலுங்கூட அந்த குற்றம் உடனடியாக பயங்கர கண்டிப்போடு தண்டிக்கப்பட்டது.PPTam 399.2

    ஜனங்கள் தங்களுடைய குற்றத்தின் அளவைப் பார்க்க எழுப்பப்பட்டபோது, முழு பாளயத்திலும் பயம் நிலவியது. தவறு செய்த ஒவ்வொருவரும் அறுப்புண்டு போவோம் என்று பயப்பட்டார்கள். அவர்களுடைய துயரத்தின் மேல் பரிதாபம் கொண்டு மோசே அவர்களுக்காக தேவனிடம் மற்றொரு முறை மன்றாடுவதாக வாக்குக் கொடுத்தான்.PPTam 400.1

    நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள், உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்று அவன் கூறினான். பாவ அறிக்கையோடு அவன் சென்று ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள். ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும். இல்லாவிட்டால் நீர் எழுதின் உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி. எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவேன். இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டு போ; என் தூதனானவர் உனக்கு முன் செல்லுவார், ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்று அவனுக்கு பதில் வந்தது.PPTam 400.2

    அனைத்து மனிதர்களின் பெயர்களும் அவர்களுடைய நன்மையான மற்றும் தீமையான அனைத்து செயல்களும் உண்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கிற பரலோக ஆவணங்களுக்கு மோசேயின் ஜெபத்தின் வழியாக நம்முடைய மனங்கள் நடத்தப்படுகின்றன. ஜீவ புத்தகம் தேவனுடைய ஊழியத்தில் நுழைந்த அனைவருடைய பெயரையும் கொண்டிருக்கிறது. இவர்களில் யாராகிலும் அவரிடமிருந்து விலகிச்சென்று பாவத்தில் பிடிவாதமாயிருப்பதினால் அவருடைய பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கிற்கு கடைசியாக கடினப்படுவார்களெனில், அவர்களுடைய பெயர்கள் ஜீவப்புத்தகத்திலிருந்து நியாயத்தீர்ப்பில் அழிக் கப்படும். அவர்கள் தாமே அழிவிற்கு அர்ப்பணிக்கப்படுவார்கள். பாவியின் முடிவு எவ்வளவு பயங்கரமாயிருக்கும் என்பதை மோசே உணர்ந்தான். எனினும் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரால் புறக்கணிக்கப்படுவார்களானால், அவனுடைய பெயர் அவர் களோடு கூட அழிக்கப்படவேண்டும் என்று அவன் வாஞ்சித்தான். இவ்வளவு இரக்கமாக விடுதலை செய்யப்பட்டவர்கள் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் விழுவதை அவன் காணக்கூடா திருந்தான். இஸ்ரவேலுக்காக மோசே செய்த மத்தியஸ்தம், பாவமனிதனுக்காக கிறிஸ்து செய்த மத்தியஸ்தத்தை விளக்குகிறது. ஆனாலும் கிறிஸ்து செய்ததைப்போன்று, மீறினவர்களின் குற்றம் அனைத்தையும் சுமக்கமோசேயை ஆண்டவர் அனுமதிக்கவில்லை எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன் என்று அவர் கூறினார்.PPTam 401.1

    மிக ஆழ்ந்த துக்கத்தில், ஜனங்கள் தங்களுடைய மரித்தவர் களை அடக்கம் பண்ணினார்கள். மூவாயிரம் பேர் பட்டயத்தினால் விழுந்தார்கள். அதையடுத்து, பாளயத்தில் ஒருவாதை துவங்கியது. தெய்வீக பிரசன்னம் அவர்களுடைய பிரயாணங்களில் அவர்களுக்குத் துணையாயிருக்காது என்ற செய்தி அவர்களுக்கு வந்தது. யெகோவா : வழியிலே நான் உங்களை நிர்முலம் பண்ணாத படிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்று அறிவித்தார். மேலும், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போடுங்கள், அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்ற கட்டளை கொடுக்கப்பட்டது. இப்போது பாளயம் எங்கும் ஒரு துக்கம் உண்டானது. தாழ்மையோடும் பாவத்தைக்குறித்த மனவருத்தத்தோடும் இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.PPTam 401.2

    தெய்வீக கட்டளையின்படி தற்காலிக ஆராதனைக்கூடாரமாக இருந்தது பெயர்க்கப்பட்டு, பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே நிறுவப்பட்டது. தேவன் அவர்களிடமிருந்து தமது சமூகத்தை விலக்கிக்கொண்டார் என்பதற்கு இது கூடுதலான சான்றாக இருந்தது. அவர் தம்மை மோசேக்கு வெளிப்படுத்துவார். ஆனால் அப்படிப்பட்ட ஜனங்களுக்கு வெளிப்படுத்தமாட்டார். அந்த கடிந்து கொள்ளுதல் உன்னிப்பாக உணரப்பட்டது. மனசாட்சியில் குத்துண்ட திரளானவர்களுக்கு இன்னும் பெரிய பேரழிவைக் குறித்த முன்னெச்சரிக்கையாக இது காணப்பட்டது. அவர்களை முற்றிலும் அழிக்கும் படிதானே ஆண்டவர் மோசேயை பாளயத்திலிருந்து பிரித்திருக்கிறார். என்றாலும் அவர்கள் முற்றிலும் நம்பிக்கையின்றி விட்டுவிடப்படக்கூடாது. கூடாரம் பாளயத்திற்கு வெளியே போடப்பட்டது. மோசே அதை ஆசரிப்புக் கூடாரம் என்று அழைத்தான். மெய்யாகவே மனந்திரும்பி தேவனிடம் திரும்ப வாஞ்சித்த அனைவரும் தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து அவருடைய கிருபையைத் தேட அங்கே செல்லும்படியாக நடத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் கூடாரத்திற்கு திரும்பி வந்தபோது மோசே ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைந்தான். தங்கள் சார்பாக மோசே செய்யும் மன்றாட்டு அங்கீகரிக்கப்பட்டதற்கான சில அடையாளங்களுக்காக மக்கள் வாஞ்சையோடு காத்திருந்தனர். அவனை சந்திக்கும்படியாக தேவன் இறங்குவாரானால் அவர்கள் முற்றிலும் பட்சிக்கப்படமாட்டார்கள் என்று நம்பலாம். மேகஸ்தம்பம் இறங்கி கூடாரத்தின் வாசலில் நின்ற போது, ஜனங்கள் மகிழ்ச்சியினால் அழுது: எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.PPTam 402.1

    அவனுடைய கவனத்தின்கீழ்வைக்கப்பட்டிருந்தஜனங்களின் முறை கேட்டையும் குருட்டாட்டத்தையும் மோசே நன்கு அறிந்திருந்தான். தான் போராட வேண்டியிருந்த கஷ்டங்கள் அவ னுக்குத் தெரியும். ஆனாலும் ஜனங்களை வெற்றிகொள்ளுவதற்கு தேவனிடமிருந்து உதவி தேவை என்பதை அவன் கற்றுக்கொண்டான். தேவனுடைய சித்தத்திற்கான தெளிவான வெளிப்பாட்டிற்காகவும், அவருடைய சமூகத்தின் நிச்சயத்திற்கா கவும் அவன் மன்றாடினான். தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர், ஆகிலும், என்னோடே கூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்க வில்லை, என்றாலும், உன்னைப் பேர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே ; உம்முடைய கண் களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும், இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.PPTam 403.1

    என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அவனுக்கு பதில் வந்தது. என்றாலும் மோசே திருப்தியடையவில்லை. இஸ்ரவேலை அதனுடைய இருதயக் கடினத்திற்கும் மனந்திரும்பாமைக்கும் விட்டு விடுவாரானால், வரப்போகும் பயங்கரமான அழிவுகளைக்குறித்த உணர்வு அவனுடைய ஆத்துமாவை நெருக்கியது. தன்னுடைய சகோதரர்களிடமிருந்து தன்னுடைய பிரியம் பிரிக்கப்படுவதை அவன் தாங்கக்கூடாதிருந்தான். தேவனுடைய தயவு ஜனங்கள் மேல் திரும்பவும் அருளப்படும்படியாக அவன் ஜெபித்தான். அவருடைய சமூகத்தின் அடையாளம் அவர்களுடைய பிரயாணங்களில் அவர்களை தொடர்ந்து நடத்துவதற்காகவும் அவன் ஜெபித்தான். உம்முடைய சமுகம் என்னோடே கூடச் சொல் லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டு போகாதிரும். எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின் மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.PPTam 403.2

    ஆண்டவர்: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது, உன்னைப் பேர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்று கூறினார். இன்னமும் தீர்க்கதரிசி மன்றாட்டை நிறுத்தவில்லை. ஒவ்வொரு ஜெபமும் பதிலளிக்கப்பட தேவ தயவிற்கான அதிக அடையாளங்களுக்காக அவன் தவனத்தோடிருந்தான். எந்த மனிதனும் இதற்கு முன் ஒருபோதும் கேட்டிராத, உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்ற மன்றாட்டை வைத்தான்.PPTam 404.1

    தேவன் இந்த விண்ணப்பத்தை துணிகரமானது என்று கடிந்து கொள்ளவில்லை. மாறாக, என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணுவேன் என்ற கிருபையின் வார்த்தைகள் கூறப்பட்டது. மறைக்கப்படாத தேவனுடைய மகிமையை அழிந்துபோகும் நிலையில் எந்த மனிதனும் கண்டு உயிரோடிருக்கக்கூடாது. அவன் எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவு தேவனுடைய மகிமையை காண்பான் என்று மோசே உறுதியளிக்கப்பட்டான். மீண்டும் மலை சிகரத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டான். தேவனுடைய மகிமையும் அவருடைய நன்மையும் தாண்டிப் போன போது உலகத்தை உண்டாக்கின், பர்வதங்களைச் சடிதியாய்ப் போர்க்கிற (யோபு 9.5) அந்தக்கரம், மண்ணான இந்த சிருஷ்டியை, வல்லமையான விசுவாச மனிதனை எடுத்து, கன்மலையின் மறைவில் வைத்தது.PPTam 404.2

    இந்த அனுபவம் - தெய்வீக சமூகம் அவனோடு இருக்கும் என்ற அனைத்திற்கும் மேலான வாக்குத்தத்தம், அவன் முன் இருந்த வேலையில் அவனுக்குக் கிடைக்கும் வெற்றியின் நிச்சயமாக மோசேக்கு இருந்தது. இதை அவன் அளவில்லாத மாபெரும் தகுதியாக எண்ணினான். எகிப்தின் அனைத்துக் கல்விக்கும் மேலாக அல்லது ஒரு அதிகாரி அல்லது இராணுவ தலைவன் அடையும் அனைத்து சாதனைகளையும் விட மகாபெரிய தகுதி கொண்டதாக அவன் கருதினான். தேவனுடைய சமூகம் தங்கியிருக்கும் இடத்தை பூமிக்குரிய எப்படிப்பட்ட வல்லமையும் அல்லது திறமையும் அல்லது கல்வியும் நிரப்பமுடியாது.PPTam 404.3

    பாவிக்கு ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுவது பயங்கரமான காரியம். ஆனால் நித்தியமானவரின் சமூகத்தில் தனியாக மோசே நின்றிருந்தான். அவன் பயப்படவில்லை. ஏனெனில் அவனுடைய ஆத்துமா அவனை உண்டாக்கினவரின் சித்தத்தோடு இசைந்திருந்தது. என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார் (சங். 66:18) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். ஆனாலும் கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. சங். 25:14.PPTam 404.4

    தெய்வம் தம்மைக்குறித்து, கர்த்தர், கர்த்தர் ; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர், அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர், குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல் பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்று அறிவித்தார்.PPTam 405.1

    மோசே தீவிரமாய்த் தரைமட்டும் குனிந்து பணிந்து கொண்டான். மீண்டும் ஜனங்களின் அக்கிரமத்தை மன்னிக்கும்படியாகவும், அவருடைய சுதந்திரத்திற்கு அவர்களை கொண்டு செல்லும்படியாகவும் அவன் தேவனை மன்றாடினான். அவனுடைய ஜெபம் பதிலளிக்கப்பட்டது. ஆண்டவர் இஸ்ரவேலுக்கான தம்முடைய தயவை புதுப்பிப்பதாகவும், அவர்கள் சார்பாக பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களைச் செய்வதாகவும் கிருபையாக வாக்களித்தார்.PPTam 405.2

    நாற்பது நாட்கள் இரவும் பகலும் மோசே மலையின் மேல் தங்கியிருந்தான். இந்தக்காலம் முழுவதும் முன்னர் செய்யப்பட்டது போலவே அவன் அதிசயமாக காப்பாற்றப்பட்டான். அவனோடு செல்ல வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை. அவன் இல்லாத நேரங்களில் மலையை நெருங்கவும் எவரும் அனுமதிக்கப்பட வில்லை . தேவனுடைய கட்டளையின்படி அவன் இரண்டு கற்பலகைகளை ஆயத்தப்படுத்தி, சிகரத்திற்கு தன்னோடு எடுத்துச் சென்றான். மீண்டும் ஆண்டவர் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினார்.PPTam 405.3

    தேவனோடு தொடர்பு கொண்டு செலவு செய்யப்பட்ட நீண்ட காலத்தில் மோசேயின் முகம் தெய்வீக சமூகத்தின் மகிமையைப் பிரதிபலித்தது. பிரகாசமான வெளிச்சத்தினால் தன் முகம் பிரகாசம் அடைந்திருப்பதை மலையிலிருந்து இறங்கின் போது அவன் அறியாதிருந்தான். நீதிபதிகளின் முன்பு கொண்டுவரப்பட்டபோது அப்படிப்பட்ட வெளிச்சம் ஸ்தேவானின் முகத்தை பிரகாசிப்பித்தது. ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன் மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம் போலிருக்கக் கண்டார்கள் அப். 615. ஆரோனும் ஜனங்களும் மோசேயிடமிருந்து பின்வாங்கினர். அவன் சமீபத்தில் சேரப் பயந்தார்கள். அவர்களுடைய குழப்பத்தையும் பயத்தையும் கண்டாலும் அதன் காரணத்தை அறியாதவனாக தன் அருகில் வரும்படியாக அவன் அவர்களை அழைத்தான். தேவன் மீண்டும் ஒப்புரவானதின் உறுதிமொழியை அவர்களுக்குக் காண்பித்து, அவருடைய தயவை அவர்களுக்கு உறுதியளித்தான். அவனுடைய குரலில் அன்பையும் மன்றாட்டையுந்தவிர வேறு எதையும் அவர்கள் காணவில்லை. கடைசியாக அவனை நெருங்க ஒருவன் துணிந்தான். பேசக்கூடாத பயபக்தியோடு மோசேயின் முகத்தை காண்பித்து, பின்பு பரலோகத்திற்கு நேராக சுட்டிக்காட்டினான். இந்த மாபெரும் தலைவன் அதன் பொருளை அறிந்து கொண்டான். அவர்களுடைய குற்ற மனசாட்சியில் இன்னும் தெய்வீக அதிருப்தியின் கீழ் இருப்பதாக உணர்ந்து, கீழ்ப்படிந்திருந்தார் களானால் அவர்களை மகிழ்ச்சியினால் நிரப்பியிருக்கக்கூடிய பரலோக வெளிச்சத்தை அவர்கள் தாங்கக்கூடாதிருந்தனர். குற்றத்தில் பயமுண்டு. பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிற ஆத்துமா பரலோக ஒளியிலிருந்து மறைந்து கொள்ள விரும்பாது.PPTam 405.4

    அவர்களுக்கு சொல்லும் படி மோசேயிடம் அதிகம் இருந்தது. அவர்களுடைய பயத்தைக் குறித்த உருக்கத்தினால் தன் முகத்தின் மேல் ஒரு திரையை போட்டுக்கொண்டான். அதன்பிறகு தேவனோடு உறவு கொண்டு பாளயத்திற்குத் திரும்பிவரும்போ தெல்லாம் இவ்வாறே தொடர்ந்தான்.PPTam 406.1

    அவருடைய பிரமாணங்களின் பரிசுத்தமான உயர்ந்த குணத்தையும் கிறிஸ்துவின் வழியாக வெளியாக்கப்பட்ட சுவிசே ஷத்தின் மகிமையையும் இந்த பிரகாசத்தினால் இஸ்ரவேலின் மனங்களில் பதிக்க தேவன் திட்டமிட்டிருந்தார். மோசே மலையிலிருந்தபோது, தேவன் அவனுக்குப் பிரமாணங்களின் கற்பலகைகளை மாத்திரமல்ல, மீட்பின் திட்டத்தையும் கொடுத்திருந் தார். யூதர்களுடைய காலத்தின் அனைத்து மாதிரிகளாலும் அடையாளங்களாலும் கிறிஸ்துவின் தியாக பலி முன்காட்டப் பட்டதை அவன் கண்டான். தேவனுடைய பிரமாணத்திலிருந்து வந்த மகிமையைக் காட்டிலும் சற்றும் குறைந்திராத கல்வாரியிலிருந்து வந்த ஒளியே மோசேயின் முகத்தின் மேல் அந்தப் பிரகாசத்தை வீசியிருந்தது. அந்த தெய்வீக பிரகாசம் மெய்யான மத்தியஸ்தரை எடுத்துக்காட்டின் காணக்கூடிய மத்தியஸ்தனான மோசே ஊழியம் செய்திருந்த இறையாட்சியின் மகிமையை அடையாளப்படுத்தியது.PPTam 406.2

    மோசேயின் முகத்தில் பிரதிபலிக்கப்பட்ட மகிமை கிறிஸ்து வின் மத்தியஸ்தத்தினால் தேவனுடைய கற்பனையைக் கைக் கொள்ளுகிறவர்கள் பெற்றுக்கொள்ளப்போகிற ஆசீர்வாதங்களை விளக்குகிறது. தேவனுடனுள்ள நம்முடைய தோழமை எவ்வளவு நெருக்கமாகவும், அவருடைய கோரிக்கைகளைக் குறித்த நம்முடைய அறிவு எவ்வளவு தெளிவாகவும் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக தெய்வீக சாயலோடு நாம் ஒத்திருப்போம் என்றும், தெய்வீக இயல்பில் நாம் அதிக ஆயத்தத்தோடு பங்கு பெறுவோம் என்றும் சாட்சி பகருகிறது.PPTam 407.1

    மோசே கிறிஸ்துவின் மாதிரியாக இருந்தான். ஜனங்கள் அவன் மேல் இருந்த மகிமையை சகிக்கக்கூடாதிருந்ததினால், இஸ்ரவேலின் மத்தியஸ்தன் தன் முகத்திற்கு திரையிட்டதைப்போல், கிறிஸ்துவும் தம்முடைய தெய்வீகத்தை இந்த பூமிக்கு வந்தபோது மனுஷகத்தினால் திரையிட்டு மறைத்திருந்தார். அவர் பரலோகத் தின் பிரகாசத்தை உடுத்தினவராக வந்திருப்பாரானால், மனித னோடு அவனுடைய பாவ நிலையில் தொடர்பு கொண்டிருக்க முடியாது. அவரது சமூகத்தின் மகிமையில் அவர்கள் பங்கெடுத் திருக்கமாட்டார்கள். எனவே விழுந்து போன அவர்களை சென் றடைந்து உயர்த்துவதற்கேதுவாக அவர் தம்மைத் தாழ்த்தி, பாவமாம்சத்தின் சாயலானார். ரோமர் 8:3.PPTam 407.2