Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    29 - நியாயப்பிரமாணத்திற்கு எதிரான சாத்தானின் கோபம்

    தேனுடைய பிரமாணத்தை அகற்றும்படியாக சாத்தான் எடுத்த - பாவமில்லாத பரலோகவாசிகளின் நடுவில் எடுத்த முதல் முயற்சி கொஞ்ச காலம் வெற்றியினால் முடி சூட்டப்பட்டது போலத் தோன்றியது. மிக அதிக எண்ணிக்கையிலான தூதர்கள் வஞ்சிக் கப்பட்டனர். ஆனால் அவனுடைய வெற்றி போல் தோன்றியது தோலிவியிலும் இழப்பிலும் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டதிலும் பரலோகத்திலிருந்து துரத்தப்பட்டதிலும் முடிவடைந்தது.PPTam 408.1

    போராட்டம் பூமியிலே புதுப்பிக்கப்பட்டபோது, சாதகமாகத் தோன்றின் சூழ்நிலையை சாத்தான் கண்டான். மீறுதலினால் மனிதன் அவனுக்கு அடிமையாக மனிதனுடைய இராஜ்யமும் கலகக்காரனுடைய கரங்களுக்குள்ளாக கொடுக்கப்பட்டது. இப்போது தன்னுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கவும் தேவனுடைய அதிகாரத்தையும் அவருடைய குமாரனுடைய அதிகாரத்தையும் அவமதிக்கவும் வழி திறக்கப்பட்டது போல் இப்போது காணப்பட்டது; ஆனால் தேவனோடுள்ள இசைவிற்குள் மனிதனை மீண்டும் கொண்டுவருவதையும், அவருடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவதையும் மனிதனும் பூமியும் முடிவாக துன்மார்க்கனுடைய வல்லமையிலிருந்து மீட்கப்படுவதையும் இரட்சிப்பின் திட்டம் சாதகமாக்கிற்று.PPTam 408.2

    மீண்டும் சாத்தான் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் தன்னுடைய தோல்வியை ஜெயமாக மாற்றும் நம்பிக்கையில் அவன் வஞ்சிக்க வகைதேடினான். விழுந்து போன இனத்தில் கலகத்தைத் தூண்டி விட அவருடைய பிரமாணங்களை மீற மனிதனை அனுமதித்ததால் தேவனை அந்தியானவர் என்று இப்போது எடுத்துக்காட்டினான். இதுதான் விடிவு என்று தேவன் அறிந்திருந்த போது சோதனையில் ஏன் வைக்க வேண்டும்? பாவம் செய்யவும் துன்பத்தையும் மரணத் தையும் கொண்டுவரவும் மனிதனை சோதனைக்குள்ளாக ஏன் வைக்கவேண்டும் என்று தந்திரமாக சோதனைக்காரன் வின வினான். ஆதாமின் பிள்ளைகள் மற்றொரு சோதனையை வழங் கினகிருபையானவரின் நீண்ட பொறுமையை மறந்து தன்னுடைய மீறுதலுக்கு விலையான பரலோகத்தின் இராஜாவினுடைய வியக்கக்கூடிய பயங்கரமான தியாகத்தை கருத்தில் கொள்ளாமல், சோதனைக்காரனுக்கு செவிகொடுத்து, சாத்தானுடைய அழிக்கும் வல்லமையிலிருந்து அவனைக் காப்பாற்றக்கூடிய ஒரே ஒருவருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.PPTam 409.1

    இன்றும் ஆயிரக்கணக்கானோர் அதே போன்ற தேவனுக்கு எதிரான கலகம் கொண்ட குற்றச்சாட்டுகளை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றனர். மனிதனுடைய தெரிந்தெடுக்கும் சுதந்தரத்தை அவனிடமிருந்து எடுத்துவிடுவது, அவனை புத்தியுள்ள ஒருவனாக இருப்பதிலிருந்து திருடுவது போலவும், வெறும் இயந்திரமாக அவனை மாற்றுவது போலவும் இருக்கும் என்கிறதை அவர்கள் காண்பதில்லை. மனிதனுடைய விருப்பத்தை கட்டுப் படுத்துவது தேவனுடைய நோக்கமல்ல. மனிதன் சுதந்தரமான சன்மார்க்க முகவனாக உண்டாக்கப்பட்டான். தானே தீர்மானிக் கக்கூடிய சுதந்தர வாளியாக உண்டாக்கப்பட்டான். மற்ற உலகவாசிகளைப்போல கீழ்ப்படிதலின் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனாலும் தீமைக்கு தன்னை ஒப்புக்கொடுப்பது அத்தியாவசியம் என்கிற ஒரு நிலைக்கு அவன் ஒருபோதும் கொண்டுவரப்படக்கூடாது. எதிர்க்கக்கூடாத எந்த சோதனையும் போராட்டமும் அவனுக்கு அனுமதிக்கப்படவில்லை. சாத்தானுட னான போராட்டத்தில் மனிதன் தோற்கடிக்கப்பட வேண்டிய அவசியமே ஏற்படாத அளவு ஏராளமான ஏற்பாடுகளை தேவன் செய்திருந்தார்.PPTam 409.2

    மனிதர்கள் பூமியில் பெருகினபோது ஏறக்குறைய முழு உலகமும் கலகத்தின் வரிசையில் சேர்ந்தது. மீண்டும் ஒருமுறை சாத்தான் வெற்றிகண்டதைப் போலக் காணப்பட்டது. என்றாலும் நித்திய வல்லமையுள்ளவர் மீண்டும் அக்கிரமத்தின் கிரியைகளை நொருக்கினார். பூமி அதனுடைய சன்மார்க்கக் கேட்டிலிருந்து ஜலப்பிரளயத்தினால் சுத்திகரிக்கப்பட்டது.PPTam 410.1

    தீர்க்கதரிசி. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன், உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும் போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள் வார்கள். துன்மார்க்கனுக்குத் தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான், நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான் (ஏசாயா 269, 10) என்று சொல்லுகிறான். அவ்வாறே ஜலப்பிரளயத் திற்குப்பின்பும். அவருடைய நியாயத்தீர்ப்புகளிலிருந்து விடு விக்கப்பட்டவர்களாக பூலோகவாசிகள் மீண்டும் ஆண்டவருக்கு விரோதமாக கலகம் செய்தனர். இரண்டு முறை தேவனுடைய உடன்படிக்கையும் அவருடைய நியமங்களும் உலகத்தால் நிராகரிக்கப்பட்டது. வெள்ளத்திற்கு முன்பான ஜனங்களும் நோவாவின் பின் சந்ததியாரும் தெய்வீக அதிகாரத்தை வீசி எறிந்தனர். அவருடைய பிரமாணங்களை பாதுகாக்கிற ஒரு ஜனத்தை தமக்குத் தெரிந்து கொள்ளும்படி தேவன் பின்னர் ஆபிரகாமோடு உடன்படிக்கைக்குள் பிரவேசித்தார். இந்த ஜனங்களை வஞ்சித்து அழிக்கும்படியாக சாத்தான் தன்னுடைய கண்ணிகளை உடனடியாக வைக்கத் துவங்கினான். யாக்கோபின் பிள்ளைகள் அவர்களுடைய புறஜாதியாரோடு திருமண உறவு கொள்ளவும், அவர்களுடைய விக்கிரகங்களை தொழுது கொள்ளவும் சோதிக்கப்பட்டனர். ஆனால் யோசேப்பு தேவனுக்கு உண்மையாக இருந்தான். அவனுடைய உறுதி மெய்யான விசுவாசத்திற்கு நிலையான சாட்சியாக இருந்தது. இந்த விசுவாசத்தை அவித்துப்போடும்படியாக சகோதரர்களின் பொறாமையின் மூலம் யோசேப்பை புறஜாதி தேசத்தில் ஒரு அடிமையாக விற்றுவிட ச ராத்தான் வேலை செய்தான். எனினும் எகிப்தின் ஜனங்களுக்கு தம்மைக்குறித்த அறிவு கொடுக்கப்படும் படியாக தேவன் சம்பவங்களை மேற்போட்டுக்கொண்டார். போத்தி பாரின் வீட்டிலும் சிறைச்சாலையிலும் தேசத்தின் பிரதம மந்திரி என்கிற உயர்ந்த தகுதிக்கு ஆயத்தப்படுத்தும்படியாக தேவபயத்தோடு கூடிய கல்வியையும் பயிற்சியையும் யோசேப்பு பெற்றுக்கொண்டான். பார்வோனின் அரண்மனையிலிருந்து அவனுடைய செல் வாக்கு தேசமெங்கும் உணரப்பட்டது. தேவனைப்பற்றிய அறிவு வெகு தூரத்திற்குப் பரவியது. எகிப்தில் இஸ்ரவேலர்கள் செழிப்பாகவும் செல்வந்தர்களாகவும் மாறினர். தேவனுக்கு உண் மையாக இருந்தவர்கள் மிகப் பரந்த செல்வாக்கை ஏற்படுத்தினர். புது மதம் பிரபலமாகி வருவதைக் கண்ட விக்கிரக ஆசாரியர்கள் எச்சரிக்கை அடைந்தனர். பரலோக தேவனுக்கு எதிரான சாத் தானுடைய பகையினால் ஏவப்பட்டவர்களாக, வெளிச்சத்தை அணைத்துப்போட அவர்கள் தங்களை நிறுத்தினர். சிங்காசனத்தில் அமரவிருப்பவரின் கல்வி ஆசாரியர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தேவனை எதிர்க்கும் தீர்மானமுள்ள இந்த ஆவியும், விக்கிரகாராதனையின் மேல் இருக்கிற பக்தி வைராக்கியமும் எதிர்கால அரசனின் குணங்களை வடிவமைத்து, எபிரெயர்களுக்கு நேரான கொடுமைக்கும் ஒடுக்குதலுக்கும் அவனை நடத்தியது.PPTam 410.2

    எகிப்திலிருந்து மோசே ஓடிச்சென்ற நாற்பது வருடங்களில் விக்கிரக ஆராதனை வெற்றி கொண்டதைப் போல தோன்றியது. ஒவ்வொரு வருடமாக இஸ்ரவேலின் நம்பிக்கைகள் மறைந்து கொண்டிருந்தன. அரசனும் மக்களும் தங்களுடைய வல்லமையில் மேன்மைபாராட்டி, இஸ்ரவேலின்PPTam 411.1

    தேவனை பரிகசித்தனர். இது மோசேயினால் எதிர்க்கப்பட்ட பார்வோனில் உச்சகட்டத்தை அடையும் வரை தொடர்ந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவிடமிருந்த செய்தியோடு எபிரெய தலைவன் அரசன் முன்பு வந்தபோது, மெய்யான தெய்வத்தைக் குறித்த அறியாமையல்ல, மாறாக அவருடைய வல்லமையை எதிர்க்கும் குணமே. நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார் ? நான் கர்த்தரை அறியேன் என்ற பதிலை கொண்டுவந்தது ; முதலிலிருந்து கடைசி வரை தெய்விக கட்டளையை பார்வோன் எதிர்த்தது, அறியாமையின் விளைவு அல்ல; மாறாக, வெறுப்பினாலும் எதிர்ப்பினாலுமே விளைந்தது.PPTam 411.2

    எகிப்தியர்கள் நீண்ட காலமாக தேவனைக் குறித்த அறிவை நிராகரித்திருந்தபோதும் மனந்திரும்பும் படியான சந்தர்ப்பங்களை ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்தார். மோசேயின் நாட்களில் எகிப்து இஸ்ரவேலுக்கு அடைக்கலமாயிருந்தது. தமது ஜனங்களுக்கு காண்பிக்கப்பட்ட தயவினால் தேவன் கனப்படுத் தப்பட்டிருந்தார். இப்போது நீடிய சாந்தமுள்ள கோபிக்கிறதற்கு தாமதமான இரக்கத்தில் நிறைவான அவர், ஒவ்வொரு நியாயத்தீர்ப் பிற்கும் அது தன் வேலையைச் செய்வதற்கான நேரத்தைக் கொடுத் தார். எகிப்தியர்கள் தாங்கள் ஆராதித்திருந்த அதேபொருட்களினால் சபிக்கப்பட்டிருந்து, யெகோவாவின் வல்லமையைக் குறித்த சான்றுகளைப் பெற்றிருந்தார்கள். மேலும், தேவனுக்கு யாரெல்லாம் ஒப்புக்கொடுக்க விரும்புகிறார்களோ அவர்கள் அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்குத் தப்பித்துக் கொள்ளலாம். இராஜாவி னுடைய ஒப்புக்கொள்ளாத தன்மையும் பிடிவாதமும் தேவனைக் குறித்த அறிவைப் பரவச் செய்து, அநேக எகிப்தியர்களை அவருடைய சேவைக்கு கொண்டுவந்தது.PPTam 411.3

    புறஜாதிகளோடு தங்களை இணைத்துக்கொண்டு, அவர்களுடைய விக்கிரக ஆராதனைகளைப் பின்பற்ற இஸ்ரவேலர்கள் விருப்பமாயிருந்ததினிமித்தம், யோசேப்பின் செல்வாக்கு மிகப் பரவலாக உணரப்பட்டு, அவர்கள் தனிப்பட்ட ஜனமாக தங்கியிருப்பதற்கான சாதகமான சூழ்நிலைகளைக் கொண்டிருந்த எகிப்திற்குச் செல்லும்படி தேவன் அவர்களை அனுமதித்தார். இங்கேயிருந்த எகிப்தியர்களின் விக்கிர ஆராதனையும், எபிரெயர்கள் அங்கே தங்கியிருந்த பின்காலங்களில் அவர்கள் காண்பித்த கொடுமையும் ஒடுக்குதலும், விக்கிரக ஆராதனையின் மேல் ஒரு அருவருப்பை உண்டாக்கி, அடைக்கலம் தேடி தங்கள் பிதாக்களின் தேவனிடத்தில் ஓடும்படியாக அவர்களை நடத்தியிருக்கவேண்டும். இதே ஏற்பாட்டை சாத்தான் தன்னுடைய நோக்கத்தை செயல்படுத்த உபயோகித்தான்.PPTam 412.1

    இஸ்ரவேலர்களின் மனங்களைக்குருடாக்கி, அவர்களுடைய அஞ்ஞான அதிபதிகளின் பழக்கங்களைப் பிரதிபலிக்க அவர்களை நடத்தினான். எகிப்தியர்களால் கண்மூடித்தனமாக மிருகங்கள் மதிக்கப்பட்டிருந்ததால், எபிரெயர்கள் தங்கள் அடிமைத்தனத்தில் பலிகாணிக்கைகளைக் கொடுக்க அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறாக, அவர்களுடைய மனங்கள் இந்த சேவையினால் மாபெரும் தியாகத்திற்கு திருப்பப்படாது போக, அவர்களுடைய விசுவாசமும் பெலவீனமடைந்தது. இஸ்ரவேலர்களின் விடுதலைக்கான காலம் வந்தபோது, தேவனுடைய நோக்கங்களைத் தடுக்க சாத்தான் தன்னை நிறுத்தினான். இந்த மாபெரும் ஜனங்கள் இருபது இலட்சத்திற்கும் அதிகமான ஆத்துமாக்கள், அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது அவனது தீர்மானமாயிருந்தது. ஆசீர்வதித்து பெருக்கவும், பூமியின் மேல் ஒரு வல்லமையாக்கவும், அவர்கள் வழியாக தம்முடைய சித்தத்தைக் குறித்த அறிவை வெளிப்படுத் தவும், யாரைத் தம்முடைய பிரமாணங்களின் காவலாளர்களாக தேவன் வைக்கவிருந்தாரோ அதே ஜனங்களின் மனங்களிலிருந்து தேவனைக் குறித்த அறிவை அழித்துப் போடுவதற்கேதுவாக அவர்களை இருளிலும் அடிமைத்தனத்திலும் வைத்திருக்க சாத் தான் தேடிக்கொண்டிருந்தான்.PPTam 412.2

    இராஜாவின் முன்பு அற்புதங்கள் நடப்பிக்கப்பட்டபோது, பார்வோன் தேவனுடைய மேலாண்மையை ஒப்புக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமலுமிருக்க அவர்களுடைய செல்வாக்குகளை எதிர்க்கும்படி சாத்தான் அங்கே இருந்தான். தேவனுடைய கிரியைகளுக்குப் போலியை உண் டாக்கி, அவருடைய சித்தத்தை தடுக்கும்படியாக சாத்தான் தன் முழு வல்லமையோடும் செயல்பட்டுக்கொண்டிருந்தான். அதனுடைய ஒரே விளைவு, தெய்வீக வல்லமையையும் மகிமையையும் மாபெரும் விதத்தில் வெளிக்காட்ட வழியை ஆயத்தப்படுத்துவதும், மெய்யான ஜீவனுள்ள தேவனையும் அவருடைய வல்லமையையும் இஸ்ரவேலர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் மேலும் அதிகத் தெளிவாக்குவதுமாக இருந்தது.PPTam 413.1

    தம்முடைய வல்லமையின் மாபெரும் வெளிக்காட்டுதல் களோடும் எகிப்தியர்களின் அனைத்து தெய்வங்களின் மேலும் கொடுக்கப்பட்ட நியாயத்தீர்ப்புகளோடும் தேவன் இஸ்ரவேலை விடுவித்தார். தம்முடைய ஜனத்தைக்களிப்போடும், தாம் தெரிந்து கொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி, தமது கட்டளைகளைக் காத்து நடக்கும் படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும் படிக்கும் ...... சங். 105:43-45. அவர்களை ஒரு நல்ல தேசத்திற்கு அவருடைய செட் டைகளின் நிழலில் தங்கக்கூடிய தேசத்திற்கு, அவர்களுடைய சத் துருக்களிலிருந்து அவர்களுக்கு அடைக்கலம் தருவதற்காக அவருடைய ஏற்பாடு ஆயத்தப்படுத்தியிருந்த தேசத்திற்குக் கொண்டு வரும்படியாக அவர்களுடைய அடிமைத்தனத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றினார். அவர் அவர்களை தமக்குக் கொண்டுவந்து, தம்முடைய நித்திய புயங்களினால் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவார். அவர்கள் அவருடைய நன்மைக்காகவும் கிருபைக்காகவும், ஜீவனுள்ள தேவனாகிய அவர் முன்பு வேறு தேவர்களை வைக்காதிருக்கவும், அவருடைய நாமத்தை உயர்த்தி பூமியில் அதை மகிமைப்படுத்தவும் கோரப்பட்டிருந்தனர்.PPTam 413.2

    எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்தபோது அநேக இஸ்ர வேலர்கள் தேவனுடைய பிரமாணங்களைக்குறித்த அறிவை மிக அதிகமாக இழந்திருந்து, புறஜாதிகளின் வழக்கங்களோடும் அதன் பாரம்பரியங்களோடும் அவைகளைக் கலந்திருந்தனர். தேவன் அவர்களை சீனாய்க்குக் கொண்டுவந்து, அங்கே தமது பிரமா ணங்களை அறிவித்தார்.PPTam 414.1

    சாத்தானும் தீய தூதர்களும் அங்கே இருந்தனர். தேவன் தமது பிரமாணங்களை தம்முடைய ஜனங்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது, பாவம் செய்ய அவர்களை சோதிக்க சாத்தான் திட்டமிட்டுக்கொண்டிருந்தான். தேவன் தெரிந்து கொண்ட இந்த ஜனங்களை அவன் வானத்தின் கீழ் இராதபடி நெறித்துப் போடு வான். அவர்களை விக்கிரகாராதனைக்குள் நடத்துவதின் வழியாக அனைத்து ஆராதனைகளுக்கான பலாபலன்களையும் அவன் அழித்துப் போடுவான். தன்னுடைய சொந்த கைவேலையினால் அடையாளப்படுத்தப்பட்ட, தன்னைவிடவும் எவ்விதத்திலும் மேலாக இல்லாத ஒன்றை ஆராதிப்பதன் வழியாக, மனிதன் எவ் வாறு உயர்த்தப்பட முடியும்? வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தாலோ அல்லது மிருகம் அல்லது ஊர்வனவற்றாலோ காட்டும் படியாக, நித்திய தேவனுடைய மாட்சிமைக்கும் வல்லமைக்கும் மகிமைக்கும் மனிதன் இவ்விதம் குருடாவானானால் உணர்வில்லாத இந்தப் பொருட்களின் முன் பணிவதற்கேதுவாக தன்னை உண்டாக்கின வரின் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர் தங்களுடைய சொந்த தெய்வீக உறவை மறக்க முடியுமானால் அப்போது அருவருப்பான உரிமத்திற்கான வழி திறந்திருக்கும். இருதயத்தின் தீய உணர்வுகள் கட்டுப்படுத்தக்கூடாது போக, சாத்தான் தன் முழுகட்டுப்பாட்டையும் கொண்டிருப்பான்.PPTam 414.2

    சீனாயின் அடிவாரத்தில் தேவனுடைய பிரமாணத்தை கவிழ்க் கும்படியான தன்னுடைய திட்டங்களை சாத்தான் செயல்படுத்த துவங்கினான். இவ்வாறு பரலோகத்தில் தான் துவங்கின அதே வேலையை கொண்டு சென்றான். மோசே தேவனுடைய மலையின் மேலிருந்தநாற்பது நாட்களிலும் சந்தேகத்தையும் மருள்விழுகையையும் கலகத்தையும் தூண்டிவிடுவதில் சாத்தான் மிக சுறுசுறுப்பாயிருந் தான். தம்முடைய உடன்படிக்கையின் மக்களுக்குக் கொடுக்கப் படும்படி தேவன் தமது பிரமாணங்களை எழுதிக்கொண்டிருந்த போது இஸ்ரவேலர்கள் யெகோவாவிற்கு உண்மையாயிருப்பதை மறுதலித்து பொன்னாலான தெய்வங்களுக்காக உரிமை பாராட்டிக்கொண்டிருந்தனர், கீழ்ப்படிவோம் என்று வாக்குறுதியளித்த பிரமாணங்களோடு மோசே தெய்வீக மகிமையின் பயபக்தியான சமூகத்திலிருந்து வந்தபோது, அவர்கள் பொன் உருவத்தின் முன்பு வணங்கும்படி பணிந்து, ஆண்டவருடைய கட்டளைகளுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்ததை அவன் கண்டான்.PPTam 414.3

    இப்படிப்பட்ட துணிகரமான நிந்தைக்கும் யெகோவாவை தூஷிப்பதற்கும் இஸ்ரவேலை நடத்தினதின் வழியாக அவர்களின் அழிவைக் கொண்டுவர சாத்தான் திட்டமிட்டிருந்தான். அவர்கள் தங்களை முழுமையாக தரந்தாழ்ந்தவர்களென்று நிரூபித்ததினால், தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்த சந்தர்ப்பங்கள் மற்றும் ஆசீர்வாதங்களைக் குறித்த அனைத்து உணர்வுகளையும் இழந்து - தங்களுடைய பவித்திரமான, திரும்பக் கூறப்பட்ட, உண்மை யாயிருப்பதற்கான வாக்குறுதியை இழந்திருந்ததினால் தேவன் தம்மிடமிருந்து அவர்களை விலக்கி அழிவிற்கு ஒப்புக்கொடுப்பார் என்று அவன் நம்பினான். ஆபிரகாமின் வித்தை, ஜீவனுள்ள தேவனைக் குறித்த அறிவை, பாதுகாத்து வைக்கவேண்டிய அந்த வாக்குத்தத்தத்தின் வித்தை, சாத்தானை அழிக்கப்போகிற மெய்யான வித்துவரவேண்டியிருந்த அந்த சந்ததியை இவ்விதமாக முற்றும் அழித்துவிட முடியும். மாபெரும் கலகக்காரன் இஸ்ர வேலை அழித்து, இவ்விதமாக தேவனுடைய நோக்கத்தை தடுக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் மீண்டும் அவன் தோற்கடிக்கப் பட்டான். பாவிகளாக இருந்தபோதும் இஸ்ரவேல் ஜனங்கள் அழிக்கப்படவில்லை. சாத்தானின் பக்கம் தங்களை பிடிவாதமாக வைத்தவர்கள் அழிக்கப்பட்டபோது, தாழ்மையோடு மனந்திரும் பின மக்கள் கிருபையாக மன்னிக்கப்பட்டனர், விக்கிரகாராதனையின் குற்றத்திற்கும் தண்டனைக்கும், கிருபையுள்ள தேவனின் நீடிய பொறுமைக்கும் நீதிக்கும் என்றென்றைக்குமான சாட்சியாக இந்தப் பாவத்தைக்குறித்த சரித்திரம் இருக்கவேண்டும்.PPTam 415.1

    சீனாயின் காட்சிகளுக்கு அண்ட சராசரமும் சாட்சியாக இருந்தது. இரண்டு நிர்வாகங்களின் செயல்பாடுகளில் தேவனுடைய அரசாங்கத்திற்கும் சாத்தானுடைய அரசாங்கத்திற்கும் இருந்த முரண்பாடு காணப்பட்டது. சாத்தானுடைய கலகத்தின் விளைவுகளையும், அனுமதிக்கப்பட்டிருந்தால் பரலோகத்தில் அவன் ஸ்தாபித்திருக்கக்கூடிய அரசாங்கத்தையும், மற்ற உலகங்களின் பாவமில்லாத குடிகள் மீண்டும் கண்டனர்.PPTam 415.2

    இரண்டாவது கற்பனையை மீறும்படியாக மனிதனை நடத் தின்தின் வழியாக தெய்வீக நபரைக்குறித்த அவர்களுடைய புரிந்து கொள்ளுதலை தரந்தாழ்த்த சாத்தான் எண்ணியிருந்தான். நான்காம் கற்பனையை தள்ளிவைப்பதன் வழியாக தேவனை முற்றிலும் மறக்கச் செய்வான். அவர்தான் சிருஷ்டிகர் என்கிற உண்மையின் மேலும், அனைத்து ஜீவன்களும் தாங்கள் இருப்பதற்காக அவருக்கே கடமைப்பட்டிருக்கிறார்கள் என்கிற உண்மையின் மேலும் தான், மற்ற புறஜாதி தேவர்களுக்கு மேலாக தம்மை பயபக்தியோடு ஆராதிக்க வேண்டும் என்கிற தேவனுடைய உரிமைகளின் அடித்தளம் இடப்பட்டிருக்கிறது. இதுவேதாகமத்தில் இவ்வாறு எடுத்துக்காட்டப்படுகிறது. எரேமியா தீர்க்கதரிசி : கர்த்தரோ மெய்யான தெய்வம், அவர்ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும், அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின் கீழும் இராதபடிக்கு அழிந்து போகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக்குணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுருபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும் . யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம் (எரே. 10:10-12, 14-16) என்று சொல்லுகிறான். தேவனுடைய சிருஷ்டிக்கும் வல்லமைக்கு நினைவுச் சின்னமாக இருக்கிற ஓய்வுநாள் வானங்களையும் பூமியையும் உண்டாக்கினவராக அவரைச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறாக, அவர் இருப்பதற்கான சாட்சியும், அவருடைய மேன்மையையும் அவருடைய ஞானத்தையும் அவருடைய அன்பையும் நினை வூட்டும் நிலையான காரியமாகவும் அது இருக்கிறது. ஓய்வுநாள் எப்போதும் பரிசுத்தமாக ஆசரிக்கப்பட்டிருக்குமானால், அங்கே ஒரு நாத்திகனோ விக்கிரகாராதனைக்காரனோ இருந்திருக்க மாட்டான்.PPTam 415.3

    ஏதேனில் ஆரம்பித்த ஓய்வுநாள் அமைப்பு உலகத்தைப் போலவேமிகப்பழமையானது. அது அனைத்து முற்பிதாக்களாலும் சிருஷ்டிப்பிலிருந்து இதுவரையிலும் கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. எகிப்தில் அடிமையாயிருந்த காலங்களில் ஓய்வு நாளை மீறும் படியாக இஸ்ரவேலர்கள் அவர்களுடைய ஆளோட்டிகளால் கட்டாயப்படுத்தப்பட்டிருந்து, அதன் பரிசுத்தத்தைக் குறித்த அறிவை மிக அதிக அளவு இழந்திருந்தனர். கற்பனை சீனாயில் அறிவிக்கப்பட்டபோது, நான்காம் கற்பனையின் முதல் வார்த்தைகளான : ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப் பாயாக என்பது ஓய்வு நாள் அப்போது ஸ்தாபிக்கப்படவில்லை என்பதைக் காட்டியது. அதனுடைய துவக்கமாக சிருஷ்டிப்பை நாம் சுட்டிக்காட்டப்படுகிறோம் மனிதர்களின் மனங்களிலிருந்து தேவனைத் துடைத்துப்போடும் படியாக இந்த மாபெரும் நினைவுச்சின்னத்தை சிதைத்துப்போட சாத்தான் நோக்கங்கொண்டிருந்தான். தங்களுடைய சிருஷ்டிகரை மறக்கும்படி மனிதர்கள் நடத்தப்படக்கூடுமானால், தீமையின் வல்லமையை எதிர்க்க அவர்கள் எவ்வித முயற்சியும் எடுக்க மாட்டார்கள். சாத்தான் தன்னுடைய இரையைக்குறித்து நிச்சயமாயிருப்பான்.PPTam 416.1

    தேவனுடைய பிரமாணங்களுக்கு எதிரான சாத்தானின் பகை, பத்துப் பிரமாணங்களின் ஒவ்வொரு நியமங்களுக்கெதிராகவும் யுத்தஞ் செய்ய அவனை நடத்தியது. அனைவருக்கும் தகப்பனாயிருக்கிற தேவனுக்கு உண்மையாயிருந்து அவரை நேசிக்கிற மாபெரும் கொள்கையுடன், பெற்றோர்களிடம் காண்பிக்கும் அன்பையும் கீழ்ப்படிதலையுங்குறித்த கொள்கை நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. பெற்றோரின் அதிகாரத்திற்கு காண்பிக்கும் அவமதிப்பு, தேவனுடைய அதிகாரத்திற்கு அவமதிப்பைக் காட்ட விரைவில் வழிநடத்தும். இவ்வாறாக, ஐந்தாவது கற்பனையின் கடமைகளைக் குறைக்க சாத்தான் முயற்சிக்கிறான். புறஜாதி மக்களின் நடுவே இந்தப் பிரமாணத்தினால் கட்டளையிடப்பட்டிருக்கிற கொள்கை கவனிக்கப்படவில்லை. அநேக தேசங்களில், தங்களுக்காக சம்பாதிக்கும் பெலம் இழந்துவிட்டதாக அவர்களுடைய வயது அறிவித்தவுடனே, பெற்றோர்கள் கைவிடப்பட்டிருக்கிறார்கள் அல்லது கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். குடும்பத்தில் தாய் சற்று கனப்படுத்தப்பட்டு, அவளுடைய கணவனின் இறப்பிற்குப்பின்பு மூத்த குமாரனின் அதிகாரத்திற்கு ஒப்புக்கொடுக்கும்படியாக விடப்பட்டிருக்கிறாள். பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிவது மோசேயினால் கட்டளையிடப்பட்டது. ஆனால் இஸ்ரவேலர்கள் ஆண்டவரிடமிருந்து விலகிச்சென்ற போது மற்ற கற்பனைகளோடு ஐந்தாவது கற்பனையும் கைக்கொள்ளப்படாமற்போயிற்று.PPTam 417.1

    சாத்தான் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக் கிறான் யோவான் 8:44. சாத்தான் மனித இனத்தின் மேல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவுடனேயே, ஒருவரையொருவர் வெறுத்து கொலை செய்ய மாத்திரம் அவர்களைத் தூண்டாது, தேவனுடைய அதிகாரத்தை அதிகத் துணிவோடு நிந்திப்பதற்காக ஆறாம் கற்பனையை மீறுவதை அவர்களுடைய மதத்தின் ஒரு பகுதியாக்கினான்.PPTam 418.1

    தெய்வீகப் பண்புகளை தவறாக புரிந்து கொள்ளுவதன் வழியாக தங்களுடைய தெய்வங்களின் தயவை சம்பாதிக்க மனிதர்களை பலிகொடுக்கவேண்டும் என்று நம்பும்படி புறஜாதி தேசங்கள் நடத்தப்பட்டன. மிகப் பயங்கரமான கொடுமைகள் விக்கிரகாராதனையின் வெவ்வேறுவடிவங்களில் நடத்தப்பட்டன. அவைகளில், தங்கள் குழந்தைகளை தங்கள் விக்கிரகங்களின் முன்பு அக்கினியின் வழியாக கடந்து வரச் செய்யும் பழக்கம் இருந்தது. அவர்களில் ஒருவர் இந்த கடுமையான சோதனையின் வழியாக பாதிக்கப்படாது வரும்போது, அவர்களுடைய காணிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டதென்று ஜனங்கள் நம்பினார்கள். இவ்விதம் விடுவிக்கப்பட்ட நபர், தேவர்களிடமிருந்து விசேஷதயவு பெற்றவராக நன்மைகளால் முடிசூட்டப்பட்டவராக கருதப்பட்டு, அதன் பின் எப்போதும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தார். அவனுடைய குற்றங்கள் எவ்வளவு கேடானதாக இருந்தாலும் அவன் ஒருபோதும் தண்டிக்கப் படவில்லை . ஆனால் அக்கினியின் வழியாக கடந்துவரும் போது ஒருவன் தகிக்கப்பட்டால் அவன் முடிவு முத்திரிக்கப்பட்டிருந்தது. அந்த நபரைக் கொல்லுவதின் மூலந்தான் தேவர்களுடைய கோபம் தணிக்கப்படமுடியும் என்று நம்பப்பட்டிருந்தது, அவ்விதமாகவே அவன் பலியாக கொடுக்கப்பட்டிருந்தான். மாபெரும் மருள்விழுகையின் காலங்களில் இப்படிப்பட்ட அருவருப்புகள் இஸ்ரவேலர்களின் மத்தியிலும் குறிப்பிட்ட அளவு நிலவியிருந்தது.PPTam 418.2

    மதத்தின் பெயரில் ஏழாம் கற்பனையை மீறுவதும் ஆதிகாலத்தில் பழக்கப்பட்டிருந்தது. மிகவும் அடங்காத பாலுணர்வுக்கடுத்த கொள்கையற்ற அருவருப்பான சடங்குகள் புறஜாதி ஆராதனை களில் ஒரு பகுதியாக்கப்பட்டன, தேவர்கள் தாமும் அசுத்த மானவர்களாக எடுத்துக்காட்டப்பட்டு, அவர்களை தொழுதுகொள்ளுவது கீழான உணர்ச்சிகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருந்தது. இயற்கைக்கு மாறான தீமைகள் நிலவியிருந்து, மத கொண்டாட்டங்கள் உலகந்தழுவிய வெளிப்படையான தூய்மையற்ற காரியங்களால் குறிக்கப்பட்டிருந்தன.PPTam 418.3

    பலதாரமணம் ஆதிகாலத்திலேயே பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. வெள்ளத்திற்கு முற்பட்ட உலகத்தின் மேல் தேவனுடைய உக்கிரத்தைக் கொண்டுவந்த பாவங்களில் இது ஒன்றாக இருந்தது, எனினும் ஜலப்பிரளயத்திற்குப்பின் இது எங்கும் பரவியது. திருமண நியமனத்தை முறைகேடு ஆக்குவதும், அதன் கடமைகளை பலவீனப்படுத்தி அதன் புனிதத்தைக் குறைத்துவிடுவதும் சாத்தா னுடைய ஆராய்ச்சியின் விளைவுகளாக இருந்தது . மனிதனிலிருந்து தேவனுடைய சாயலை குலைத்து, துன்பத்திற்கும் தீமைக்கும் கதவை திறந்துவிடுவதை வேறு எந்த வழியாலும் அவன் நிச்சய மாக செய்ய முடியாது.PPTam 419.1

    மாபெரும் போராட்டத்தின் துவக்கத்திலிருந்து தேவனுடைய குணத்தைத் தவறாக எடுத்துக்காட்டி, அவருடைய பிரமாணங்களுக்கு எதிராக கலகத்தைத் தூண்டி விடுவது சாத்தானுடைய நோக்கமாக இருந்தது. இந்த வேலை வெற்றியினால் முடிசூட்டப்படுவதைப்போல தோன்றியது. திரளானவர்கள் சாத்தானுடைய வஞ்சகங்களுக்கு செவிகொடுத்து, தேவனுக்கு எதிராக தங்களை நிறுத்தினார்கள். ஆனாலும் தீமையின் செயல்பாடுகளுக்கு நடுவே தேவனுடைய நோக்கங்கள் நிலையாக அதன் நிறைவேறுதலை நோக்கி முன்னேறுகிறது. அனைத்து ஞானமான சிருஷ்டிகளுக்கும் அவர் தம்முடைய நீதியையும் நன்மையையும் வெளிக்காட்டுகிறார். சாத்தானுடைய சோதனைகளினால் மனித இனம் முழுவதும் தேவனுடைய பிரமாணங்களை மீறினது. ஆனால் அவருடைய குமாரனின் தியாகபலியின் வழியாக அவர்கள் தேவனிடம் திரும்புவதற்கான ஒரு பாதை திறந்திருக்கிறது. கிறிஸ்துவின் கிருபையின் வழியாக பிதாவினுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிய அவர்கள் தகுதிப்படுத்தப்படலாம். இவ்வாறாக, மருள விழுகை மற்றும் கலகத்தின் நடுவிலிருந்தே ஒவ்வொரு காலத்திலும் தேவன் தமக்கு உண்மையாக இருக்கிற ஒரு ஜனத்தை வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களை கூட்டிச் சேர்க்கிறார்.PPTam 419.2

    வஞ்சகத்தினால் சாத்தான் தூதர்களை தவறான வழியில் செல்லத் தூண்டினான். இவ்விதமாகவே அனைத்துக் காலத்திலும் மனிதர்கள் நடுவே அவன் தன் வேலையை கொண்டு சென்றிருக்கிறான். இதே கொள்கையை இறுதி வரையிலும் அவன் தொடருவான். தேவனுக்கு விரோதமாகவும், அவருடைய பிரமாணத்திற்கு விரோதமாகவும் யுத்தஞ்செய்வதை வெளிப்படையாக கூறுவானானால் மனிதர்கள் எச்சரிப்படைவார்கள். அவன் மாறுவேடம் பூண்டு, சத்தியத்தை பொய்யோடு கலக்கிறான். சத்தியத்தோடு கலக்கப்பட்ட பொய்களே மிக அதிக ஆபத்தான வைகள். இவ்விதமாகவே அடிமைப்படுத்தி ஆத்துமாவை அழிக்கிறதவறுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த விதத்தில் சாத்தான் உலகத்தை தன்னோடு கொண்டு செல்லுகிறான். ஆனால் அவனுடைய வெற்றி என்றுமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுகிற ஒருநாள் வருகிறது.PPTam 419.3

    கலகத்தோடு தேவன் நடந்துகொள்ளுவது, ஒரு மூடலின் கீழ் அதிக காலம் செய்யப்பட்ட வேலையை வெளியே கொண்டுவரும். சாத்தானுடைய ஆட்சியின் விளைவுகள் தேவனுடைய நியமங்களை புறந்தள்ளுவதின் கனிகள் அனைத்து சிருஷ்டிகளின் கண்களுக்கு முன்பாகவும் திறந்துவைக்கப்படும். தேவனுடைய பிரமாணம் முழுமையாக நிலைநாட்டப்படும். தேவன் நடந்து கொண்ட விதம் ஒவ்வொன்றும் அவருடைய ஜனத்தின் நித்திய நன்மையையும் அவர் உண்டாக்கின் அனைத்து உலகங்களின் நன்மையையும் கருத்தில் கொண்டே செயல்படுத்தப்பட்டது என்பது காணப்படும். சாத்தான் தானும் சாட்சி பகர்ந்து கொண்டிருக்கிற பிரபஞ்சத்தின் முன் தேவனுடைய அரசாங்கத்தின் நீதியையும் அவருடைய பிரமாணத்தின் நியாயத்தையும் அறிக்கையிடுவான்.PPTam 420.1

    அவமதிக்கப்பட்ட தமது அதிகாரத்தை நிலைநாட்ட தேவன் எழும்பும் நேரம் வெகு தூரத்தில் இல்லை . பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும் படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருவார் ஏசாயா 2621; அவர் வரும் நாளைக் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? மல். 3:2. தேவன் தமது பிரமாணங்களை அறிவிக்க இறங்கவிருந்தபோது, அவருடைய சமூகத்தின் சுட் டெரிக்கும் மகிமையினால் பட்சிக்கப்படாதபடியிருக்க இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களுடைய பாவங்களினிமித்தம் மலையை நெருங்க தடை செய்யப்பட்டிருந்தனர். தேவனுடைய பிரமாணங்களை அறிவிக்க தெரிந்துகொள்ளப்பட்ட இடத்தை அப்படிப்பட்ட வல்லமையின் வெளிக்காட்டுதல் குறித்திருக்கு மானால், தமது பரிசுத்த நியமங்களின்படி தண்டனை கொடுக்க அவர் வரும்போது அவருடைய நீதிமன்றம் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும். அவருடைய அதிகாரத்தை மிதித்தவர்கள் அந்தக் கடைசி மாபெரும் தண்டனையின் நாளில் எவ்வாறு அவருடைய மகிமையைச் சகிப்பார்கள்? சீனாயின் பயங்கரங்கள் நியாயத்தீர்ப்பின் காட்சிகளை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியதிருந்தது. எக்காளத்தின் தொனி தேவனை சந்திக்கும்படியாக இஸ்ரவேலை அழைத்தது. பிரதான தூதனுடைய சத்தமும் தேவனுடைய எக்காளமும் பூமி முழுவதிலுமிருந்து உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் தங்களுடைய நியாயாதிபதியின் சமூகத்திற்கு அழைக்கும். பிதாவும் குமாரனும் தூதர்களின் திரள் கூட்டம் சூழ மலையின் மேல் இருந்தனர். மாபெரும் நியாயத்தீர்ப்பு நாளில் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட (மத். 1627) கிறிஸ்து வருவார். அப்போது அவர் தமது மகிமையின் சிங்காச னத்தில் உட்காருவார். அவர் முன்பாக அனைத்து ஜாதிகளும் கூட்டப்படும்.PPTam 420.2

    தெய்வீக பிரசன்னம் சீனாயின் மேல் வெளிக்காட்டப்பட்ட போது, ஆண்டவருடைய மகிமை அனைத்து இஸ்ரவேலின் கண்களுக்கும் பட்சிக்கும் அக்கினியாக இருந்தது. ஆனால் கிறிஸ்து தமது மகிமையில் தமது பரிசுத்த தூதர்களோடு வரும்போது, அவருடைய சமூகத்தின் பயங்கரமான ஒளியினால் முழு உலகமும் பற்றியெறியும். நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்கு முன் அக்கினி பட்சிக்கும், அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர் இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். சங். 503,4. ஒரு அக்கினி நதி அவர் முன்னின்று புறப்பட்டு வரும், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்து போகும். தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதி யுள்ள ஆக்கினையைச் செலுத்தும் படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படுவார் - 2 தெச. 17,8PPTam 421.1

    சீனாயில் கற்பனை அறிவிக்கப்பட்டபோது வெளிப்படுத்தப் பட்ட தெய்வீக வல்லமை போன்ற ஒன்று மனிதன் உண்டாக் கப்பட்டதிலிருந்து ஒருபோதும் காணப்படவில்லை. பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது. சங். 683. இயற்கை முழுவதும் பயங்கரமாக தள்ளாட, தேவனுடைய சத்தம் எக்காளத்தைப்போல மேகத்திலிருந்து கேட்கப்பட்டது. மலை அதன் அடிவாரத்திலிருந்து சிகரம் வரையிலும் அசைக்கப்பட்டது. இஸ்ரவேலின் சேனைகள் வெளுத்து பயத்தினால் வெளிறி நடுங்கினவர்களாக முகங்குப்புற விழுந்தனர். அப்போது பூமியை அசைத்த அவருடைய சத்தம், இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் (எபி. 12:26) என்று அறிவித்தது. வேதவாக்கியம் : கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, வானமும் பூமியும் அதிரும், (எரே. 25.30, யோவேல் 3:16) என்று சொல் லுகிறது. வரப்போகிற அந்த மாபெரும் நாளில் பரலோகந்தானும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி (வெளி. 6:14) அகன்று போகும். ஒவ்வொரு மலையும் தீவும் தன் இடத்தைவிட்டு நகர்த்தப்படும். வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப் போலப் பெயர்த்துப் போடப்படும், அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோம், இனி எழுந்திராது ஏசாயா 24:20PPTam 421.2

    ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்து போம். அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும், பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள், ஒருவரையொரு வர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும் பாவத்தினிமித்தம் உலகத்தையும், தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன். ஏசாயா 137, 8, 11; எரே. 306.PPTam 422.1

    சாட்சியின் பலகைகளை வாங்கின் மலையில் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து மோசே வந்தபோது, அவனுடைய முகத்தை மகிமைப்படுத்தின ஒளியை குற்றத்தோடிருந்த இஸ்ரவேலர்கள் ச கிக்கக்கூடாதிருந்தார்கள். தேவனுடைய குமாரன் தமது பிதாவின் மகிமையோடு பரலோக சேனை சூழ தமது பிரமாணங்களை மீறினவர்கள் மேலும் தமது உடன்படிக்கைகளை நிராகரித்தவர்கள் மேலும் நியாயத்தீர்ப்பை செலுத்தும்படி வரும்போது, அக்கிரமக் காரர்கள் அவருடைய முகத்தை எவ்வாறு காணக்கூடும். தேவ னுடைய பிரமாணத்தை கருத்தில் கொள்ளாது கிறிஸ்துவின் இரத்தத்தை காலின் கீழ் மிதித்தவர்கள் பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர் வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள், அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள் (வெளி1517) என்று சொல்லுவார்கள். பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்து கொள்ளும் படிக்கு, மனுஷன் பணிந்து கொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன்வெள்ளி விக்கிரகங்களையும், தன்பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான். ஏசாயா 2:20, 21.PPTam 422.2

    தேவனுக்கு எதிரான சாத்தானுடைய கலகம், அவனுடைய அழிவையும், அவனுக்குக் கீழிருக்கத் தெரிந்து கொண்ட அனைவருடைய அழிவையும் கொண்டு வந்தது அப்போது காணப்படும். மீறுதலின் வழியாக மாபெரும் நன்மை உண்டாகும் என்று அவன் காட்டியிருந்தான்.PPTam 423.1

    ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம் என்பது காணப்படும். இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள், வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும், அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் மல். 4:1. அனைத்துப் பாவத்திற்கும் வேரான சாத்தானும் அவனுடைய கிளைகளாயிருந்த அனைத்து தீமையின் ஊழியர்களும் மொத்தமாக அறுப்புண்டு போவார்கள். பாவம் கொண்டு வந்த அனைத்து ஆபத்துகளோடும் அழிவுகளோடுங்கூட பாவத்திற்கு முடிவு உண்டாக்கப்படும். சங்கீதக்காரன்: ஜாதிகளைக் கடிந்து கொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர். சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள், அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடே கூட ஒழிந்து போயிற்று (சங்.95, 6) என்று கூறு கிறான்.PPTam 423.2

    ஆனால் தெய்வீக நியாயத்தீர்ப்புகளின் கொந்தளிப்பிற்கு நடுவில் தேவனுடைய பிள்ளைகள் பயப்படுவதற்கான எந்தக் காரணமும் இல்லாதிருப்பார்கள். கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையு மாயிருப்பார். - யோவேல் 3:16. தேவனுடைய பிரமாணத்தை மீறினவர்களுக்கு பயங்கரத்தையும் அழிவையும் கொண்டுவருகிற அந்த நாள், கீழ்ப்படிந்தவர்களுக்கு சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற களிகூருதலாயிருக்கும். பலியினாலே என்னோடே உடன்படிக்கைபண்ணின் என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.PPTam 423.3

    அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ் செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள். மல். 3:18 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவி கொடுங்கள் இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் ஏசா. 51:7,22, 12, மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார் ஏசா. 54:10.PPTam 424.1

    இந்த உலகத்தை தேவனுடைய தயவிற்குள்ளாக முழுமையாக கொண்டுவருவதுதான் மாபெரும் மீட்பின் திட்டத்தின் பலன். பாவத்தினால் இழந்து போன அனைத்தும் மீட்கப்பட்டது. மனிதன் மாத்திரமல்ல, கீழ்ப்படிந்தவர்களின் நித்திய உறைவிடமாக இருக்கும் படி பூமியுங்கூட மீட்கப்பட்டது. பூமியை தனக்குச் செ ராந்தமாக வைத்துக்கொள்ள சாத்தான் ஆறாயிரம் வருடங்களாக போராடினான். இப்போது சிருஷ்டிப்பில் தேவனுடைய மெய்யான நோக்கம் நிறைவேற்றப்பட்டது, உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள ச தாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் தானி . 7:18.PPTam 424.2

    சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக சங். 1133, அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார் - சக. 14:9, கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களுக்கும் உறுதியானவைகள் (சங். 11989, 111:7, 8) என்று வேதவாக்கியம் சொல்லுகிறது. சாத்தான் வெறுத்து அழிக்கத் தேடிய பரிசுத்தமான நியமங்கள், பாவம் இல்லாத பிரபஞ்சம் முழுவதிலும் கனப்படுத்தப்படும். பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்ட வைகளை முளைவிப்பது போலவும், கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக் கப்பண்ணுவார். ஏசாயா 61:11.PPTam 424.3