Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    30 - ஆசரிப்புக்கூடாரமும் அதன் ஆராதனைகளும்

    அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக என்ற கட்டளை மோசே தேவனோடு மலையில் இருந்தபோது அவனுக்குக் கொடுக்கப் பட்டு, ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான முழுமையான அனைத்து நடத்துதல்களும் கொடுக்கப்பட்டன. தங்களுடைய விழுகையினால் இஸ்ரவேலர்கள் தெய்வீக சமூகத்தின் ஆசீர்வாதத்தை இழந்தனர். அவர்களுக்கு நடுவே தேவனுடைய ஆசரிப்புக்கூடாரத்தை எழுப்பிப்பது கூடாத காரியம் என்று அந்த நேரம் காட்டியது. ஆனால் அவர்கள் மீண்டும் தேவ தயவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்பு அந்த மாபெரும் தலைவன் தெய்வீக கட்டளையை செயல்படுத்த முன் சென்றான். தெரிந்து கொள்ளப்பட்ட மனிதர்களுக்கு பரிசுத்தமான கட்டடத்தைக் கட்டுவதற்கான திறமையும் ஞானமும் தேவனால் விசேஷமாக கொடுக்கப்பட்டது. அதனுடைய அளவு, வடிவம், கட்ட பயன்படுத்தும் பொருள்கள், அது வைத்திருக்கவேண்டிய சாமான்கள் இவை அனைத்தையுங் குறித்த குறிப்புகளை தேவன் அந்த அமைப்பின் திட்டமாக மோசேயிடம் கொடுத்தார். கைகளால் கட்டப்பட்ட பரிசுத்த ஸ்தலங்கள் மெய்யான பரிசுத்த ஸ்தலத்திற்கு அடையாளமான பரலோகத்தி லுள்ளவைகளுக்கு சாயலானவைகள் (எபி. 92423), கிறிஸ்து தமது ஜீவனை பலியாக கொடுத்த பிறகு பாவிக்காக ஆசாரிய ஊழியஞ் செய்கிற பரலோக ஆலயத்தை எடுத்துக்காட்டும் சிறிய உருவமாக இருந்தன. பரலோக ஆசரிப்புக் கூடாரத்தின் காட்சியை தேவன் மலையில் மோசேக்குக் காண்பித்து, காண்பிக்கப்பட்ட மாதிரியின் படியே அனைத்தையும் செய்யும்படியாக கட்டளை கொடுத்தார். இந்த வழி முறைகளனைத்தும் ஜனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கும் படி மோசேயினால் கவனமாகப் பதிக்கப்பட்டது.PPTam 426.1

    ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதில் பெரிய விலையுயர்ந்த ஆயத்தங்கள் அவசியமாயிருந்தன. மிகவும் விலையேறப்பெற்ற மதிப்புள்ள விலையுயர்ந்த பொருட்கள் மிக அதிக அளவில் தேவைப்பட்டன. எனினும், மனதார கொடுக்கப்பட்ட காணிக்கைகளைத்தான் ஆண்டவர் ஏற்றுக்கொண்டார். மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக என்று மோசேயின் வழியாக தெய்வீகக் கட்டளை சபையாருக்குக் கொடுக்கப்பட்டது. தேவனுக்கு அர்ப்பணிப்பதும் தியாகமான ஆவியுமே உன்னதமானவர் தங்கியிருக்கும் ஸ்தலத்தை ஆயத்தப்படுத்துவதில் முதல் கோரிக்கையாக இருந்தன.PPTam 427.1

    அனைத்து மக்களும் ஒரே மனதோடு பதில் கொடுத்தனர். மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின் ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக் கையாகச் செலுத்தினான்.PPTam 427.2

    இளநீல நூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்பு நூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத் தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலையும் தக்சுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டு வந்தார்கள். வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக்கர்த்தருக்குக்காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.PPTam 427.3

    ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீல நூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்பு நூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள். எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.PPTam 427.4

    பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும், பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகதைலத்துக்கும் சுகந்த வர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள். யாத். 35:23-28.PPTam 428.1

    ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் போதும் என்று காணும் வரையிலும், இன்னும் உபயோகிக்கப்படுவதற்கும் மிஞ்சின் அளவாகவும் வயதானவர்களும் வாலிபரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தனர். மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டு வருகிறது நிறுத்தப்பட்டது. இஸ்ரவேலர்களின் முறுமுறுப்பும் அவர்களுடைய பாவங்களுக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்புகளும் பின்வரும் சந்ததிக்கு எச்சரிப்பாக பதிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய அர்ப்பணிப்பும் வைராக்கியமும் தாராளமும் மீண்டும் பிரதிபலிப்பதற்கு தகுதியான உதாரணங்களாக இருக்கின்றன. தேவனை ஆராதிக்க விரும்பி, அவருடைய பரிசுத்த பிரசன்னத்தின் ஆசீர்வாதங்களை மதிக்கிறவர்கள், அவர் தங்களை சந்திக்கும் இடத்தை ஆயத்தப்படுத்துவதில் அதேபோன்ற தியாகமுள்ள ஆவியை வெளிக்காட்டுவார்கள். தாங்கள் வைத்திருப்பதில் மிகச் சிறந்ததை ஆண்டவருக்குக் காணிக்கையாக கொண்டுவர அவர்கள் விரும்புவார்கள். தேவனுக்கென்று கட்டப்படுகிற ஆலயம் கடனில் விட்டு விடப்படக்கூடாது. ஏனெனில் அதினால் அவர் கனவீனமடைகிறார். அந்த ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டினவர்கள் : இனி காணிக்கைகள் கொண்டு வரவேண்டாம் என்று சொன் னதைப்போலவே, இப்போதும் வேலை செய்கிறவர்கள் சொல் லுவதற்கேதுவாக வேலையை முடிக்கத் தேவையான தொகை தாராளமாக கொண்டுவரப்பட வேண்டும்.PPTam 428.2

    தனித்தனியாக பிரித்து, இஸ்ரவேலர்கள் தங்களுடைய பயணங்கள் முழுவதிலும் சுமந்து செல்லுதற்கு ஏதுவாக ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்டது. எனவே அது சிறியதாக ஐம்பத்து ஐந்து அடி நீளத்திலும் பதினெட்டு அடி அகலத்திலும் உயரத்திலும் இருந்தது. எனினும் அது ஒரு மகத்துவமான அமைப்பாக இருந்தது. அந்தக் கட்டடத்திற்காகவும் அதனுடைய பணிமூட்டுகளுக்காகவும் உபயோகப்படுத்தப்பட்ட மரம், சீனாயில் கிடைத்த மற்ற அனைத்து மரங்கைளயும் விட குறைவாக மக்கக்கூடிய வேல மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அதன் சுவர்கள் பொன்னினால் மூடப்பட்டு, தூண்களாலும் இணைக்கும் கம்பிகளாலும் உறுதியாக வெள்ளி பாதங்களின் மேல் நிறுத்தப்பட்டிருந்த பலகைகளால் உண்டாக்கப் பட்டு, அந்தக் கட்டிடத்திற்கு பொன்னின் தோற்றத்தைக் கொடுத் திருந்தன. அதன் கூரை நான்கு அடுக்கு திரைசீலைகளால் உண் டாக்கப்பட்டு, அதன் உள் அடுக்கு திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும், விநோத நெசவு வேலையாகிய கேருபீன்களுள்ளதாகவும், அடுத்த மூன்றும் ஆட்டு மயிரினாலும், தகசுத்தோலினாலும், சிவப்புத் தீர்ந்த ஆட்டுக் கடாத் தோலினாலும் முழுமையான பாதுகாப்பைத் தரும்படியாக அமைக்கப்பட்டிருந்தன. பொன்னினால் மூடப்பட்டிருந்த தூண் களிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்த செழிப்பான அழகானதிரை அல்லது திரைசீலையினால், அந்தக் கட்டடம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதேபோன்ற மற்றொரு திரைசீலை முதல் பகுதியின் நுழைவை மூடியிருந்தது. இந்த திரைசீலைகள் மேற்கூரையை மூடியிருந்தவைகளைப் போலவே, பரலோக ஆசரிப்புக் கூடாரத்தில் பங்கேற்று பூமியிலிருக்கிற தேவனுடைய பிள்ளை களுக்கு பணிவிடை ஆவிகளாயிருக்கிற தூதர் சேனையை எடுத் துக்காட்டும் - பொன் வெள்ளியினால் நெய்யப்பட்டிருந்த கேரு பீன்களோடு மிகவும் ஆடம்பரமான இளநீலநூலாலும் இரத்தாம் பரநூலாலும் சிவப்பு நூலாலும் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தன.PPTam 428.3

    இந்த பரிசுத்தமான கூடாரம் பிராகாரம் என்று அழைக்கப்பட்டிருந்த ஒரு திறந்த வெளியால் மறைக்கப்பட்டிருந்தது. அந்த பிராகாரம் தொங்கு திரைகளாலும் வெண்கலத் தூண்களிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்த திரித்த மெல்லிய நூல் திரைகளாலும் சூழப்பட்டிருந்தது. இந்த பிராகாரத்தின் நுழைவு கிழக்குப் பகுதியிலிருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வைகளை விடவும் சற்று தாழ்ந்ததாயிருப்பினும் விலையுயர்ந்த, மிக அழகாகச் செய்யப்பட்ட திரைசீலைகளால் அது மூடப்பட்டிருந்தது, பிராகாரத்தின் தொங்குதிரைகள் கூடாரத்தின் சுவர்களின் உயரத்தில் பாதி உயரத்திலிருக்க வெளியே இருக்கும் மக்களால் கட்டடம் தெளிவாக காணப்பட்டது. பிராகாரத்தின் நுழைவாயிலுக்கு மிக அருகில் வெண்கல பலிபீடம் நின்றிருந்தது. இந்த பலி பீடத்தின் மேல் ஆண்டவருக்கு அக்கினியினால் செய்யப்பட்ட அனைத்து பலிகளும் செய்யப்பட்டு, அதன் கொம்புகள் மீட்பின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருந்தது. பலிபீடத்திற்கும் கூடாரக் கதவிற்கும் இடையே தண்ணீர் தொட்டி இருந்தது. அதுவும் வெண்கலத்தால் செய்யப்பட்டு, இஸ்ரவேலின் பெண்கள் தாராளமாக கொடுத்த கண்ணாடிகளினால் செய்யப்பட்டிருந்தது. ஆசாரியர்கள் பரிசுத்தமான பகுதிகளுக்குள் சென்ற போது, அல்லது பலிபீடத்தை நெருங்கின் போது ஆண்டவருக்கு பலி செலுத்தும்படி தங்கள் கைகளையும் கால்களையும் இந்தத் தண்ணீர் தொட்டியில் கழுவ வேண்டும்.PPTam 429.1

    முதலாம் பகுதியில் அல்லது பரிசுத்த ஸ்தலத்தில் சமூகத்தப்ப மேசையும் குத்துவிளக்கும் தூப்பீடமும் இருந்தன. சமூகத்தப்ப மேசை வடபுறத்தில் இருந்தது. அலங்கரிக்கப்பட்ட பீடத்தோடு அது பொன்னினால் மூடப்பட்டிருந்து. இந்த மேசையின்மேல் ஆசாரியர்கள் ஒவ்வொரு ஓய்வுநாளிலும் பன்னிரண்டு அப்பங்களை இரண்டு அடுக்குகளாக அடுக்கிவைத்து தூபவர்க்கத்தைத் தூவவேண்டும். அகற்றப்பட்ட அப்பங்கள் பரிசுத்தமாகக் கருதப்பட்டு ஆசாரியர்களால் சாப்பிடப்பட வேண்டும். தென்புறத்தில் ஏழு கிளைகளைக் கொண்ட குத்துவிளக்கு அதன் ஏழு அகல்களோடு இருந்தது. அதன் கிளைகள் லில்லி மலரை ஒத்திருந்து, நேர்த்தியாகச் செய்யப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப் பட்டு, முழுவதும் அடிக்கப்பட்ட ஒரு பொற்தகட்டினால் செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூடாரத்திற்கு சன்னல்கள் இல்லாதிருந்தபடியினால் அந்த விளக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அணைக்கப்படாமல் பகலும் இரவும் தங்கள் வெளிச்சத்தை வீசிக்கொண்டிருந்தன. பரிசுத்த ஸ்தலத்தை தேவனுடைய சமூகமிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பிரித்த திரைச்சீலைக்கு சற்று முன்பு பொற்பீடம் இருந்தது. இந்த பீடத்தின் மேல் ஆசாரியன் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் தூபவர்க்கமிட வேண்டும். அதனுடைய கொம்புகள் பாவபலியின் இரத்தத்தினால் தொடப் பட்டு, மாபெரும் பாவ நிவாரண நாளில் இரத்தத்தால் தெளிக்கப்பட்டிருந்தது. இந்த பீடத்தின் மேலிருந்த அக்கினி தேவனால் தாமே பற்றவைக்கப்பட்டு, பரிசுத்தமாக பாதுகாக்கப் பட்டிருந்தது. பகலும் இரவும் இந்தப் பரிசுத்த தூபவர்க்கம் அதனுடைய மனத்தை அந்த பரிசுத்த பகுதி முழுவதிலும் அதற்கு வெளியிலும் கூடாரத்தைச் சுற்றி வெகுதூரத்திற்குப் பரப்பிக்கொண்டிருந்தது.PPTam 430.1

    உள்திரைச்சீலையைத் தாண்டி மகா பரிசுத்த ஸ்தலம் இருந்தது. அங்கேதான் பாவநிவாரணம் மற்றும் மத்தியஸ்த வேலையின் அடையாளமான ஆராதனை மையங்கொண்டிருந்தது. அதுவே பரலோகத்தையும் பூலோகத்தையும் இணைக்கிற இணைப்பாக இருந்தது. இந்தப் பகுதியில் வேல மரத்தினால் செய்யப்பட்டு, உள்ளும் புறமும் பொன் பதிக்கப்பட்டிருந்து அதன் மேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டிருந்த பெட்டி இருந்தது. அதனுள் தேவன்தாமே பொறித்திருந்த பத்துக் கற்பனைகளைக் கொண்ட கற்பலகைகள் இருந்தன. தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் உண்டான உடன்படிக்கையின் அடையாளமாக பத்துக்கற்பனைகள் இருந்ததினால், இந்தப் பெட்டி தேவனுடைய சாட்சிப்பெட்டி அல்லது உடன்படிக்கைப்பெட்டி என்று அழைக்கப்பட்டது.PPTam 431.1

    இந்தப் பரிசுத்தமான பெட்டியின் முடி கிருபாசனம் என்று அழைக்கப்பட்டது. அது ஒரே பொற்தகட்டினால் செய்யப்பட்டு, தன்மேல் இருபுறமும் ஒவ்வொன்றாக நின்றிருந்த கேருபீன்களைக் கொண்டிருந்தது. பயபக்தி மற்றும் தாழ்மையின் அடையாளமாக ஒவ்வொரு தூதனின் ஒரு இறகு உயர விரிந்திருந்து, மற்றது அதன் சரீரத்தின் மேல் மடக்கப்பட்டிருந்தது. (எசே. 1:11 ஐ பார்க்கவும்.)PPTam 431.2

    இவைகள் ஒன்றையொன்று நோக்கியிருந்து பயபக்தியோடு பெட்டியைப் பார்த்திருந்தது, பரலோக சேனை தேவனுடைய பிரமாணங்களை எவ்வளவு பயபக்தியோடு எண்ணியிருக்கின்றது என்பதையும் மீட்பின் திட்டத்தில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் எடுத்துக்காட்டும் வண்ண மாக இருந்தது.PPTam 431.3

    கிருபாசனத்தின் மேல் தெய்வீக சமூகத்தின் வெளிக்காட்டலான ஷெக்கினா இருந்தது. கேருபீன்களின் நடுவிலிருந்து தேவன் தமது சித்தத்தை தெரியப்படுத்தினார். சில வேளைகளில், தெய்வீகச் செய்தி பிரதான ஆசாரியனுக்கு மேகத்திலிருந்து வந்த ஒரு சத்தத்தின் வழியாக கொடுக்கப்பட்டது. சில வேளைகளில், ஏற்றுக்கொள்ளுவதை அல்லது அங்கீகரிப்பதைக் குறிக்கும் வண்ணம் வலது புறமிருந்த தூதன் மேல் ஒரு வெளிச்சம் விழுந்தது; அங்கீகரிக்காததை அல்லது நிராகரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் வண்ணம் இருளோ மேகமோ இடது புறத்து தூதன்மேல் தங்கியது.PPTam 431.4

    பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த தேவனுடைய பிரமாணம் நீதி மற்றும் நியாயத்தின் மாபெரும் சட்டமாக இருந்தது. பிரமாணம் மீறினவன் மேல் மரணத்தை அறிவித்தது, ஆனாலும் பிரமாணத்தின் மேல் தேவனுடைய பிரசன்னம் வெளிப்பட்டிருந்த கிருபாசனம் இருந்து, அங்கேயிருந்து மீட்பின் பாவ நிவாரண நன்மையினால் மனந்திரும்பின் பாவிக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இவ்விதமாக நம்முடைய மீட்பிற்கான கிறிஸ்துவின் ஊழியம் கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும் (சங். 8510) என்று ஆசரிப்புக் கூடார ஊழியத்தினால் அடையாளப்படுத்திக்காட்டப்பட்டது.PPTam 431.5

    ஆசரிப்புக் கூடாரத்தின் உள்ளிருந்த காட்சியினுடைய மகிமையை எந்த மொழியும் விவரிக்க முடியாது ! பொன் குத்து விளக்கிலிருந்து வந்த வெளிச்சத்தை பொன்னினால் மூடப்பட்ட சுவர்கள் பிரதிபலிக்க, பிரகாசிக்கும் தூதர்களின் உருவம் மிக ஆடம்பரமாக நெய்யப்பட்டிருந்த திரைசீலையின் பிரகாசமான சாயலும், பொன் மின்னின் மேசையும் தூப்பீடமும், இரண்டாம் திரைசீலையைத் தாண்டி இரகசியமான கேருபீன்களோடும் அவைகளுக்கு மேலிருந்த யெகோவாவின் பிரசன்னத்தை காணும்படியாக வெளிப்படுத்தின் பரிசுத்தமான ஷெகினாவுடன் அந்த பரிசுத்தமான உடன்படிக்கைப் பெட்டியும் - இவையனைத்தும் மனிதனை மீட்கும் வேலையின் மாபெரும் மையமாகிய தேவனுடைய பரலோக மகிமையைக் குறைவாகவே பிரதிபலித்தன.PPTam 432.1

    கூடாரத்தைக் கட்டுவதற்கு ஏறக்குறைய அரைவருட காலம் தேவைப்பட்டது. அது முடிக்கப்பட்ட போது கட்டினவர்களின் வேலையை யெல்லாம் மலையின் மேல் தேவனிடமிருந்து தான் பெற்ற மாதிரியோடு மோசே ஒப்பு நோக்கினான். கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள், மோசே அவர்களை ஆசீர்வதித்தான். ஊக்கமான ஆர்வத்தோடு இஸ்ரவேலின் திரளானவர்கள் பரிசுத்தமான அமைப்பைப் பார்ப்பதற்காக அதைச் சுற்றித் திரண்டனர். பயபக்தியான மனநிறைவோடு அந்தக் காட்சி யை சிந்தித்துக்கொண்டிருந்தபோது, மேகஸ்தம்பம் கீழிறங்கி அதை மூடியது. கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று. அங்கே தெய்வீக மாட்சிமை வெளிப்படுத்தப்பட்டு, கொஞ்ச நேரம் மோசேயினால் கூட நுழையக் கூடாதிருந்தது. மிக ஆழ்ந்த உணர்வுகளோடு தங்கள் கைகளின் கிரியைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டதின் அடையாளத்தை ஜனங்கள் கண்டனர். அங்கே களி கூருதலின் எந்தவித சத்தமான விளக்கமும் இல்லை . பவித்திரமான பயபக்தி அனைவர்மேலும் தங்கியிருந்தது. எனினும், அவர்களுடைய இருதயத்தின் மகிழ்ச்சி ஆனந்த கண்ணீரினால் நனைக்கப்பட்டிருக்க, தேவன் தங்களோடு தங்கியிருக்கும் படி இறங்கினார் என்னும் ஊக்கமான நன்றியின் வார்த்தைகளை அவர்கள் மிக மெதுவாக முணுமுணுத்தனர்.PPTam 432.2

    தெய்வீக கட்டளையின்படி லேவியின் கோத்திரம் ஆசரிப்பு ஊழியத்திற்காக பிரித்துவைக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு ஆணும் அவனுடைய சொந்த வீட்டிற்கு ஆசாரியனாயிருந்தான் . ஆபிரகாமுடைய நாட்களில் ஆசாரிய ஊழியம் முதல் குமாரனுடைய பிறப்புரிமையாக கருதப்பட்டிருந்தது. இப்போது இஸ்ரவேலின் அனைத்து முதற்பிறப்பிற்கும் பதிலாக ஆசரிப்புக்கூடார ஊழியத்திற்காக லேவியின் கோத்திரத்தை ஆண்டவர் ஏற்றுக்கொண்டார். அவருடைய ஊழியத்தில் தங்களை இணைத்துக்கொண்டதினாலும், பொற்கன்றுக்குட்டியை ஆராதித்து இஸ்ரவேல் மருள்விழுந்தபோது அவருடைய நியாயத்தீர்ப்புகளை செயல் படுத்தினதாலும், அவர்களுடைய பக்தியைக் குறித்த அங்கீகரிப்பை இந்த அடையாளத்தின் வழியாக அவர் வெளிக்காட்டினார். எனினும், ஆசாரிய ஊழியம் ஆரோனுடைய குடும்பத்திற்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆரோனும் அவன் குமாரரும் மாத்திரமே ஆண்டவர்முன் ஊழியம் செய்ய அனுமதிக்கப்பட்டு, அந்தக் கோத்திரத்தின் மற்றவர்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தையும் அதன் பணி மூட்டுகளையுங்குறித்த பொறுப்புகள் கொடுக்கப் பட்டன. ஆசாரியர்களுக்கு அவர்கள் ஊழியத்தில் உதவி செய்யவேண்டும் ஆனால் பலி செலுத்தவோ அல்லது தூபங்காட்டவோ அல்லது பரிசுத்த பொருட்கள் மூடப்படும் வரை அவைகளைப் பார்க்கவோ கூடாது.PPTam 433.1

    ஆசாரியர்களுக்கு அவர்களுடைய வேலைக்கு ஏற்றவாறு விசேஷமான ஒரு ஆடை நியமிக்கப்பட்டது. உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டு பண்ணுவாயாக என்ற தெய்வீக கட்டளை மோசேக்குக் கொடுக்கப்பட்டது. சாதாரண ஆசாரியனின் அங்கிமெல்லிய வெண் நூலால் செய்யப்பட்டு, தையலில்லாத ஒரே ஆடையாக நெய்யப்பட்டிருந்தது. அது பாதம் வரையிலும் நீண்டு, நீலம் இரத்தாம்பரம் சிவப்பு நூல்களால் தையல் வேலை செய்யப்பட்டிருந்த கச்சையால் இடுப்பில் கட்டப்பட்டிருந்தது. ச ணலினால் செய்யப்பட்ட பாகை அல்லது தலைப்பாகை அவனுடைய வெளி ஆடையை முழுமையாக்கியது. எரிகின்ற முட்செடியின் அருகே அவன் நின்றிருந்த இடம் பரிசுத்த பூமியான படியினால் தன் பாதரட்சைகளை கழற்றிப்போடும்படியாக மோசே கட்டளை பெற்றிருந்தான். எனவே ஆசாரியர்கள் தங்கள் பாதங்களில் பாதரட்சை அணிந்தவர்களாக ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழையக்கூடாது. அவைகளில் ஒட்டியிருக்கிற தூசிகள் பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்த குலைச்சலாக்கிவிடும். பரிசுத்த ஸ்தலத்தில் நுழையுமுன்பாக அவைகளை பிராகாரத்தில் விட்டுவிட்டு, தங்கள் கைகளையும் கால்களையும் பரிசுத்த கூடாரத்தின் முன்போ அல்லது பலிபீடத்தின் அருகிலோ கழுவவேண்டும். இவ்வாறாக, தேவனுடைய சமூகத்தை நெருங்கும் அனைவராலும் அனைத்து அசுத்தமும் அகற்றப்பட வேண்டும் என்கிற பாடம் நிலையாக போதிக்கப்பட்டது.PPTam 433.2

    பிரதான ஆசாரியனின் ஆடை விலையுயர்ந்ததாயும் அழகான கைவேலை கொண்டதாயும் அவனுடைய உயர்ந்த தகுதிக்குப் பொருத்தமானதாயும் இருந்தது. சாதாரண ஆசாரியனுடைய சணல் ஆடையோடுகூட தையலின்றி நெய்யப்பட்டிருந்த நீல் அங்கியை அவன் அணிந்திருந்தான். அதன் பாதங்கள் சுற்றிலும் பொன்மணிகளாலும், இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்பு நூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களாலும் அலங்கரிக் கப்பட்டிருந்தது. அதன் மேல் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் செய்யப்பட்டிருந்த ஏபோத்து என்னும் சிறிய ஆடை இருந்தது. அதே வண்ணங்களால் அழகாகச் செய்யப்பட்டிருந்த கச்சையினால் அது கட்டப்பட்டிருந்தது. ஏபோத்து கைகள் இல்லாத ஒரு ஆடையாக இருந்தது. பொன்னினால் தையல் வேலை செய்யப்பட்டிருந்த அதன் தோள் பட்டையில் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களைக் கொண்டிருந்த இரண்டு கோமேதகக்கற்கள் இருந்தன .PPTam 434.1

    ஏபோத்தின் மேல் ஆசாரியனுடைய மிகவும் பரிசுத்தமான ஆடையான மார்ப்பதக்கம் இருந்தது. இதுவும் ஏபோத்தைப்போன்ற பொருட்களாலேயே செய்யப்பட்டு, ஒரு சாண் அளவான ச துரவடிவத்தில், தோள்களிலிருந்த பொற்வளையங்களிலிருந்து நீலநிற கயிற்றினால் தொங்கவிடப்பட்டிருந்தது. அதனுடைய ஓரங்கள், தேவனுடைய நகரத்தின் அஸ்திபாரமாயிருக்கிற பன்னிரண்டு கற்களான மதிப்புள்ள விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்டிருந்தது. ஓரங்களினுள் நான்கு வரிசையாக அடுக் கப்பட்டிருந்த பொன்னில் பதிக்கப்பட்டிருந்த பன்னிரண்டு கற்கள் இருந்தன. அவைகளில், தோள்பட்டையில் இருந்ததைப்போலவே கோத்திரங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும் போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின் மேலிருக்கும் நியாய விதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக் குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன் (யாத். 28,29) என்பது ஆண்டவருடைய கட்டளையாக இருந்தது. அவ்வாறே மகா பிரதான ஆசாரியராகிய கிறிஸ்து பாவிக்காக தமது இரத்தத்தினால் பிதாவின் முன்பு மன்றாடும் போது, தம்முடைய இருதயத்தின் மேல் மனந்திரும்பி விசுவாசிக்கிற ஒவ்வொரு ஆத்துமாவின் பெயரையும் தரித்திருக்கிறார். நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என் மேல் நினைவாயிருக்கிறார் - (சங். 40.17) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான்.PPTam 434.2

    மார்ப்பதக்கத்தின் வலதுபுறத்திலும் இடது புறத்திலும் மிகவும் பிரகாசமான இரண்டு மிகப் பெரிய கற்கள் இருந்தன. அவைகள் ஊரீம் என்றும் தும்மம் என்றும் அறியப்பட்டிருந்தன. அவைகளின் வழியாக பிரதான ஆசாரியன் மூலம் தேவனுடைய சித்தம் அறியப்பட்டிருந்தது. தீர்மானிக்கப்படவேண்டிய கேள்விகள் ஆண்டவர் முன்பு கொண்டுவரப்பட்டிருந்தபோது, வலது புறத்து மதிப்புள்ள கல்லின் மேல் விழுந்த கல்லைச் சூழ்ந்த ஒளி, தெய்வீக சம்மதம் அல்லது அங்கீகரிப்பிற்கான அடையாளமாகவும், அதே நேரம் இடது கல்லின் மேல் ஒரு மேகம் தங்குவது நெகிழப்பட்ட அல்லது ஆதரிக்கப்படாததன் சான்றாகவும் கொடுக்கப்பட்டிருந்தது.PPTam 435.1

    பிரதான ஆசாரியனின் பாகை மெல்லிய சணல் பாகையாக இருந்தது. யெகோவாவிற்கு பரிசுத்தம் என்று பொறிக்கப்பட்டிருந்த பொற்தகடு அதோடு நீல சரிகையினால் இணைக்கப்பட்டிருந்தது. ஆசாரியர்களுடைய ஆடை மற்றும் நடத்தையோடு இணைக்கப்பட்டிருந்த ஒவ்வொன்றும் அதை காண்கிறவர்களில் தேவனுடைய பரிசுத்தத்தைக்குறித்த உணர்வையும் அவருடைய தொழுகையின் பரிசுத்தத்தைக் குறித்த உணர்வையும் அவருடைய சமூகத்திற்கு வருகிற அனைவரிடமும் கோரப்படுகிற தூய்மையைக் குறித்த உணர்வையும் பதிக்கிறதாக இருக்கவேண்டும்.PPTam 435.2

    ஆசரிப்புக் கூடாரம் மாத்திரமல்ல, ஆசாரியர்களின் ஊழியமும் பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் (எபி. 8:5) ஒத்திருக்கவேண்டியதிருந்தது. இவ்வாறு இது மிக முக்கியமானதாயிருந்தது. இந்த அடையாளமான ஆராதனையின் ஒவ்வொரு குறிப்பைக் குறித்தும் ஆண்டவர் மோசேயின் மூலமாக குறிப்பான மற்றும் வெளிப்படையான போதனைகளைக் கொடுத்தார். ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியம் இரண்டு பிரிவுகளாக ஒன்று அனுதின் ஆராதனையாக, மற்றொன்று வருடாந்தர ஆராதனையாக இருந்தது. அன்றாட ஆராதனை கூடாரத்தின் பிராகாரத்திலிருந்த பலிபீடத்தில் நடத்தப்பட, வருடாந்தர ஆராதனை மகா பரிசுத்த ஸ்தலத்தில் நடத்தப்பட்டது.PPTam 435.3

    பிரதான ஆசாரியனைத்தவிர மற்ற எந்த அழிந்துபோகிற கண்களும் ஆசரிப்புக் கூடாரத்தின் உள் பகுதியை பார்க்கக்கூடாது. வருடத்தில் ஒருமுறை மாத்திரமே பயபக்தியான ஆயத்தத்தோடு ஆசாரியன் அங்கே பிரவேசிக்கலாம். நடுக்கத்தோடு அவன் தேவன் முன்பு சென்றான். தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக மக்களுடைய இருதயங்கள் ஊக்கமான ஜெபத்தில் உயர்த்தப்பட்டிருக்க, அவர்கள் பயபக்தியான மெளனத்தோடு அவன் திரும்பி வருவதற்காகக் காத்திருந்தனர். கிருபாசனத்தின் முன்பு பிரதான ஆசாரியன் இஸ்ரவேலுக்காக பாவநிவிர்த்தி பண்ணினான். மகிமையின் மேகத்தில் அவனை தேவன் சந்தித்தார். வழக்கமான காலத்தைக் காட்டிலும் சற்று அதிக நேரம் அவன் தங்கியிருப்பானானால், அது, அவன் தங்களுடைய பாவங்களினிமித்தமோ அல்லது தனது சொந்தப் பாவத்தினிமித்தமோ ஆண்டவருடைய மகிமையினால் கொல்லப்பட்டான் என்கிற பயத்தினால் அவர்களை நிரப்பியது.PPTam 436.1

    அன்றாட ஆராதனை காலை மற்றும் மாலை தகனபலியையும் பொற்தூப்பீடத்தின் மேல் செலுத்தப்பட்ட சுகந்த தூபவர்க்கத்தையும் தனிப்பட்டவர்களின் பாவங்களுக்காக செலுத்தப்பட்ட விசேஷ காணிக்கைகளையும் கொண்டிருந்தது. ஓய்வுநாட்களுக்கும் அமாவாசைகளுக்கும் விசேஷ பண்டிகைகளுக்குமான காணிக்கை களும் அங்கே இருந்தன.PPTam 436.2

    ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஒரு வயதான ஆட்டுக்குட்டி ஒன்று அதற்குப் பொருத்தமான போஜனபலியோடு கூட தகனிக்கப்பட்டு, இவ்விதம் யெகோவாவிற்கான தேசத்தினுடைய அனுதின் அர்ப்பணிப்பையும் கிறிஸ்துவினுடைய நிவாரண இரத்தத்தை நிலையாக தாங்கள் சார்ந்திருப்பதையும் அடையாளப்படுத்தியது. ஆசரிப்புக் கூடார ஊழியத்தில் கொடுக் கப்பட்ட ஒவ்வொரு காணிக்கையும்PPTam 436.3

    பழுதில்லாததாக இருக்க வேண்டும். பழுதற்றதும் (யாத் 12:5) என்று தேவன் வெளிப்படையாக கட்டளையிட்டிருந்தார். பலியாக கொண்டுவரப்பட்ட அனைத்து மிருகங்களையும் ஆசாரியர்கள் ஆசரிப்புக்கூடாரமும் அதன் ஆராதனைகளும் சோதித்து, பழுது கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொன்றையும் நிரா கரிக்க வேண்டும். பழுதற்ற காணிக்கை மாத்திரமே, குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி (1பேதுரு 1:19) என்று தம்மை ஒப்புக்கொடுக்க விருக்கிறவரின் பரிசுத்த தூய்மையை அடையாளப்படுத்தக்கூடும். கிறிஸ்துவின் பின்னடியார்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கும் போது அப்போஸ்தலனாகிய பவுல் இந்த பலிகளைச் சுட்டிக்காட்டி, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் (ரோமர் 12:1) என்று கூறுகிறான். நாம் நம்மை தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுத்து, அந்தக் காணிக்கையை கூடுமானவரையிலும் பூரணமாக்கத் தேட வேண்டும். நாம் கொடுக்கிற மிகச்சிறந்தை விட குறைவான எதிலும் தேவன் விருப்பங்கொள்ளுவதில்லை. தங்கள் முழு இருதயத்தோடும் அவரை நேசிக்கிறவர்கள் தங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த ஊழியத்தை அவருக்குக் கொடுக்கவாஞ்சிப்பார்கள். மேலும் அவருடைய சித்தத்தைச் செய்யும் திறமையை மேம்படுத்த, அவருடைய பிரமாணங்களோடு இணைந்து வாழத் தேவையான தங்களுடைய அனைத்து வல்லமைகளையும் அவருடைய பிர மாணங்களுக்கு இசைவாகக் கொண்டுவர நிலையாகத் தேடு வார்கள்.PPTam 436.4

    அன்றாட ஆராதனையின் மற்ற எந்தச் செயல்களை விடவும் தூபவர்க்கமிடும்போது ஆசாரியன் தேவனுடைய சமூகத்திற்கு முன் மிக நேரடியாக கொண்டு வரப்படுகிறான். ஆசரிப்புக் கூடாரத்தின் உள்திரை கட்டடத்தின் உயரம் வரைக்கும் உயர்த் திருக்கவில்லை. இதனால் கிருபாசனத்தின் மேல் வெளிக்காட்டப்பட்டிருந்த மகிமை, முதல் பகுதியில் ஓரளவு காணப்பட்டது. ஆசாரியன் ஆண்டவர் முன்பு தூபவர்க்கமிடும் போது உடன்படிக்கைப் பெட்டிக்கு நேராக பார்ப்பான். தூபவர்க்கத்தின் புகைமேலெழும்பின் போது தெய்வீக மகிமைகிருபாசனத்தின் மேல் இறங்கி மகா பரிசுத்த ஸ்தலம் முழுவதையும் நிரப்பினது. பல வேளைகளில் அது இரண்டு பகுதிகளையும் நிரப்ப, ஆசாரியன் கூடாரத்தின் கதவிற்குச் செல்லும்படி நிர்பந்திக்கப்பட்டான். அடையாளமான ஊழியத்தில் தான் காணக்கூடாத கிருபாசனத்தை ஆசாரியன் விசுவாசத்தினால் நோக்கினது போல, தேவனுடைய ஜனங்களும் இப்போது தங்கள் ஜெபங்களை தங்களுடைய மகா பிரதான ஆசாரியரான மனித கண்களால் காணக்கூடாத, மேலே இருக்கும் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்களுக்காக மன்றாடிக்கொண்டிருக்கிற கிறிஸ்துவிற்கு நேராக எழுப்ப வேண்டும்.PPTam 437.1

    இஸ்ரவேலர்களின் விண்ணப்பங்களோடு உயர எழும்பின் தூபம், கிறிஸ்துவின் நன்மைகளையும் மத்தியஸ்த ஊழியத்தையும் விசுவாசத்தினால் அவருடைய ஜனங்கள் மேல் வைக்கப்படுகிற பாவிகளின் ஆராதனையை தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தாக்குகிற அவருடைய பரிபூரண நீதியையும் எடுத்துக்காட்டியது. மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைச்சீலைக்கு முன்பாக நிலையான மத்தியஸ்த பீடம், பரிசுத்தத்தின் முன்பாக நிலையான பாவ நிவிர்த்திபீடம் இருந்தது. பாவிகள் யார் மூலமாக யெகோவாவை நெருங்கக்கூடுமோ, மனந்திரும்பி விசுவாசிக்கிற ஆத்துமாவிற்கு யார் மூலமாக மாத்திரம் கிருபையும் இரட்சிப்பும் வழங்கப்படக் கூடுமோ அந்த மாபெரும் மத்தியஸ்தரை சுட்டிக்காட்டிய அடையாளங்களான இரத்தம் மற்றும் தூபத்தின் வழியாக தேவனை அண்டவேண்டும்.PPTam 438.1

    தூபம் செலுத்தப்படுகிற காலையிலும் மாலையிலும் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நுழைந்தபோது, வெளியே இருந்த பிராகாரத்தில் அன்றாடபலி ஏறெடுக்கப்பட ஆயத்தமாயிருந்தது. இந்த நேரம் கூடாரத்தில் கூடியிருந்த ஆராதிப்பவர்களின் ஊக்கமான ஆர்வத்தின் நேரமாயிருந்தது . ஆசாரியனுடைய ஊழியத்தின் வழியாக தேவனுடைய சமூகத்திற்குள் நுழையு முன்பாக அவர்கள் தங்கள் இருதயங்களை ஊக்கமாக ஆராய் வதிலும் பாவங்களை அறிக்கை செய்வதிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். தங்களுடைய முகங்கள் பரிசுத்த ஸ்தலத்தை நோக்கியிருக்க, அவர்கள் மௌனமான ஜெபத்தில் ஒன்றுபட்டனர். இவ்வாறாக அவர்களுடைய விண்ணப்பங்கள் தூபத்தின் புகை யோடு மேலெழும்ப, பாவ நிவாரண காணிக்கையின் வழியாக காட்டப்பட்ட வாக்குத்தத்தமான இரட்சகரின் நன்மைகளை அவர்களுடைய விசுவாசம் இறுகப் பற்றிக்கொண்டது. காலை மாலை காணிக்கைக்காக நியமிக்கப்பட்ட மணிநேரங்கள் பரிசுத்தமாக கருதப்பட்டிருந்து, பின்னர் யூத தேசம் முழுவதிலும் ஆராதனைக்கு நியமிக்கப்பட்ட நேரமாக கைக்கொள்ளப்பட்டது. பிற்காலங்களில் யூதர்கள் அடிமைகளாக தூர தேசங்களில் சி தறடிக்கப்பட்டபோது, நியமிக்கப்பட்ட அந்த மணிநேரத்தில் இன்னமும் அவர்கள் தங்கள் முகங்களை எருசலேமை நோக்கி திருப்பி, இஸ்ரவேலின் தேவனிடம் தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுத்தனர். இந்த வழக்கத்தில் காலை மாலை ஜெபங்களுக்கான உதாரணம் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. ஆராதனைக்கான ஆவி இல்லாத வெறும் சடங்குகளை, ஆராதனைச் சுற்றுகளை தேவன் கடிந்துகொள்ளும்போதும், அவரை நேசித்து காலையிலும் மாலையிலும் தாங்கள் நடப்பித்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடும் படியும் தேவையான ஆசீர்வாதங்களுக்கான விண்ணப்பங்களை தேவனிடம் வைக்கும்படியும் பணிகிறவர்களை மிகுந்த விருப் பத்தோடு அவர் கண்ணோக்குகிறார்.PPTam 438.2

    சமூகத்து அப்பம் நித்திய காணிக்கையாக எப்போதும் ஆண்டவர் முன்பு வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அது அன்றாட பலியின் ஒரு பகுதியாக இருந்தது. அது ஆண்டவருடைய முகத்திற்கு முன்பாக எப்போதும் இருந்தபடியினால், சமூகத்து அப்பம் என்று அழைக்கப்பட்டது. தன்னுடைய லௌகீக மற்றும் ஆவிக்குரிய ஆகாரத்திற்காக மனிதன் தேவனை சார்ந்திருப்ப தையும், அது கிறிஸ்துவின் மத்தியஸ்தத்தின் வழியாக மாத்திரமே பெற்றுக்கொள்ளப்படுகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளுகிற ஒன்றாக இருந்தது. தேவன் வனாந்தரத்தில் வானத்தின் மன்னாவினால் இஸ்ரவேலரை போஷித்தார். அவர்கள் இன்னமும் அவருடைய தாராளத்தை, லௌகீக மற்றும் ஆவிக்குரிய ஆசீர் வாதங்களுக்காக அவருடைய தாராளத்தையே சார்ந்திருந்தனர். மன்னாவும் சமூகத்து அப்பமும் தேவனுடைய சமூகத்தில் நமக்காக எப்போதும் இருக்கிற ஜீவ அப்பமாகிய கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டியது. அவர் தாமும் : நானே வானத்திலிருந்திறங்கின் ஜீவ அப்பம் (யோவான் 6:48-51) என்று கூறினார். அப்பங்களின் மீது தூபவர்க்கம் வைக்கப்பட்டது. ஒவ்வொருஓய்வுநாளிலும் புதியது வைக்கப்படும் படி பழையது எடுக்கப்பட்டபோது, தூபவர்க்கம் தேவனுக்கு நினைவாக பீடத்தின் மேல் தகனிக்கப்பட்டது.PPTam 439.1

    அன்றாட ஆராதனையின் மிக முக்கியமான பகுதியாக தனிப்பட்ட நபர்களுக்காக நடப்பிக்கப்பட்ட ஊழியம் இருந்தது. மனந்திரும்பின் பாவி தன்னுடைய காணிக்கையை கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டுவந்து, அதன் தலை மீது தன்கைகளை வைத்து, தன் பாவங்களை அறிக்கை செய்வான். இவ்விதம் அவைகளை தன்னிடமிருந்து குற்றமில்லாத காணிக்கையின்மேல் அடையாள மாக கடத்தினான். அவனுடைய சொந்த கைகளாலேயே அந்த மிருகம் கொல்லப்பட்டு, ஆசாரியனால் அதன் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு, பாவி மீறின் பிரமாணத்தை தன்னுள் வைத்திருந்த உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பிருந்த திரையின் முன் தெளிக்கப்பட்டது. இந்தச் சடங்கினால், பாவம் இரத்தத்தின் வழியாக அடையாளமாக ஆசரிப்பு கூடாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது. சிலவற்றில் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் அதன் மாமிசம் மோசே ஆரோனுக்குக் கட்டளையிட்டபடி அவர்களுக்காகப் பாவ நிவிர்த்தி செய்யும் பொருட்டு (லேவி. 10:17) ஆசாரியனால் சாப் பிடப்பட்டது. இரண்டு சடங்குகளுமே மனந்திரும்பினவனிட மிருந்து பாவம் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு செல்லப் பட்டதை அடையாளப்படுத்தினது.PPTam 439.2

    இப்படிப்பட்ட வேலையே வருடமுழுவதும் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறாக இஸ்ரவேலின் பாவங்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டிருக்க, பரிசுத்த ஸ்தலங்கள் தீட்டுப்பட்டு, இந்தப் பாவங்களை அகற்றும்படி விசேஷமான வேலை ஒன்று அவசியப்பட்டது. ஒவ்வொரு பரிசுத்த அறைக்கும் பலிபீடத்திற்கு செய்யப்பட்டதைப்போல ஒரு பாவ நிவிர்த்தி செய்யப்படவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். அதை இஸ்ரவேல் புத்திரரின் திட்டுக்கள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத் தப்படுத்தக்கடவன் லேவி. 16:19.PPTam 440.1

    வருடத்தில் ஒரு முறை மாபெரும் பாவ நிவாரண நாளில் ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் ஆசரிப்புக் கூடாரத்தை சுத்தம் செய்வதற்காக பிரவேசித்தான். அங்கே செய்யப்பட்டது வருடாந்தர ஊழியத்தை முழுமையாக்கிற்று.PPTam 440.2

    பாவ நிவாரண நாளில் இரண்டு வெள்ளாட்டுக்குட்டிகள் கூடார வாசலுக்குக் கொண்டுவரப்பட்டு, அவைகளின் மேல் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போடப்பட்டது. சீட்டு விழுந்த முதல் ஆடு பாவ ஜனங்களுக்கான பாவபலியாக கொல் லப்படவேண்டும் . ஆசாரியன் அதன் இரத்தத்தை திரைக்குள்ளாக கொண்டு வந்து கிருபாசனத்தின் மீது தெளிக்க வேண்டும். இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறு தல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ் செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.PPTam 440.3

    அதின் தலையின் மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிர மங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண் டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பி விடக்கடவன். அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிர மங்களையெல்லாம் தன்மேல் சுமந்து கொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக . அந்த ஆடு இவ்விதமாக அனுப்பப்படும் வரை ஜனங்கள் தங்கள் பாவங்களின் பாரத்திலிருந்து விடுபட்டதாக எண்ணவில்லை. பாவ நிவாரண நாளில் ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது, ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்துமாவை வருத்தப் படுத்தவேண்டும். அனைத்து தொழிலும் அப்புறப்படுத்தப்பட்டு, இஸ்ரவேலின் சபை முழுமையும் தேவனுக்கு முன்பாக பயபக்தியான தாழ்மையில் ஜெபத்தோடும் உபவாசத்தோடும் ஆழ்ந்த இருதய ஆராய்ச்சியோடும் காணப்பட வேண்டும்.PPTam 440.4

    பாவ நிவாரணத்தைக் குறித்த முக்கியமான சாத்தியங்கள் இந்த வருடாந்தர ஆராதனையின் வழியாக ஜனங்களுக்குப் போதிக்கப்பட்டது. பாவபலிகளில் வருடமுழுவதும் செய்யப்பட்ட பாவ காணிக்கைகளில் பாவியின் இடத்தில் ஒரு மாற்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. ஆனால் அந்த பலியின் இரத்தம் பாவத்திற்கான முழுமையான நிவாரணத்தை உண்டாக்கவில்லை. பாவம் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு செல்லப்படுவதற்கான ஒரு வழியை மாத்திரமே அது ஏற்படுத்தியிருந்தது. இரத்தத்தைச் சிந்தினதின் வழியாக பாவி பிரமாணத்தின் அதிகாரத்தை ஒப்புக்கொண்டு, தன்னுடைய மீறுதலின் குற்றத்தை அறிக்கை செய்து, உலகத்தின் பாவத்தை சுமந்து கொள்ளப்போகிறவர்மேல் இருந்த தன்னுடைய விசுவாசத்தை வெளிக்காட்டினான். ஆனால் அவன் பிரமாணங்களின் ஆக்கினையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படவில்லை . பாவ நிவாரண நாளில் பிரதான ஆசாரியன் சபையாரிடமிருந்து ஒரு காணிக்கையை எடுத்து, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தத்தோடு பிரவேசித்து, அதை தேவனுடைய பிரமாணங்கள் இருந்த கிருபாசனத்தின் மேல் தெளித்தான். இவ்விதமாக பிரமாணத்தின் கோரிக்கை திருப்தி செய்யப்பட்டது. பின்னர் மத்தியஸ்தன் என்னும் பாத்திரத்தில், ஆசாரியன் இஸ்ரவேலின் குற்ற பாரத்தை தன்மீது எடுத்துக் கொண்டவனாக ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு வெளியேறினான். தன் கைகளை போக்காட்டினுடைய தலையின் மேல் வைத்து அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கை செய்தான். இந்தப் பாவங்களை சுமந்திருந்த அந்த ஆடு தூர அனுப்பப்பட்ட போது, அவைகள் அதோடு சேர்ந்து, ஜனங்களை விட்டு என்றைக்குமாக பிரிக்கப்பட்டதாக கருதப்பட்டது. இப்படிப்பட்ட ஆராதனையே பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் (எபி. 8:5) ஆக நடத்தப்பட்டது.PPTam 441.1

    குறிப்பிட்டபடி பூமிக்குரிய ஆசரிப்புக் கூடாரம் மலையிலே காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியாக கட்டப்பட்டது. அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்ற படியே ...... காணிக்கைகளும் பலிகளும் செலுத்தப்பட்டுவந்தன. அதன் இரண்டு பரிசுத்த ஸ்தலங்களும் பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள். நமது மகா பிரதான ஆசாரியனாகிய கிறிஸ்து மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்PPTam 442.1

    செய்கிறவர் (எபி. 9:9,23; 8:2) தரிசனத்தில் அப்போஸ் தலனாகிய யோவானுக்கு பரலோகத்திலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் காட்சி கொடுக்கப்பட்டபோது, அங்கே அவன் ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்ததைக் கண்டான். ஒரு தூதன் தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான், சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தபொற்பீடத்தின் மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது (வெளி. 4:5, 8:3). இங்கே பரலோக ஆசரிப்புக் கூடாரத்தின் முதல் பகுதியைக் காணும் படியாக தீர்க்கதரிசி அனுமதிக்கப்பட்டான். அங்கே அவன் பூமியிலிருந்த ஆசரிப்புக் கூடாரத்தின் பொன் குத்து விளக்காலும் தூப்பீடத்தாலும் எடுத்துக்காட்டப்பட்டிருந்த ஏழு அக்கினிதீபங்களையும் பொற்பீடத்தையும் கண்டான். மீண்டும் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது (வெளி. 11:19) உள்திரைச்சீலைக்கு உள்ளாக மகா பரிசுத்த ஸ்தலத்தை அவன் கண்டான். அங்கே அவன் தேவனுடைய பிரமாணத்தை வைத்திருக்கும்படியாக மோசேயினால் உண்டாக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டி அடையாளப்படுத்தின் உடன்படிக்கையின் பெட்டியைக் கண்டான்.PPTam 442.2

    பூமிக்குரிய ஆசரிப்புக் கூடாரத்தை தான் பார்த்த மாதிரியின் படியே மோசே ஏற்படுத்தினான். ஆசரிப்புக் கூடாரமும் அதன் பணிமூட்டுகளும் முடிக்கப்பட்டபோது, அவைகள் பரலோகத் திலுள்ளவைகளுக்குச் சாயலான வைகள் (அப். 7:44; எபி. 9:21, 23) என்று பவுல் அறிவிக்கிறான். யோவான் பரலோகத்தில் ஆசரிப்புக் கூடாரத்தை கண்டதாக கூறுகிறான். இயேசு நமக்காக ஊழியம் செய்கிற அந்த ஆசரிப்புக் கூடாரமே மெய்யான கூடாரம். அதனுடைய நகலே மோசேயினால் கட்டப்பட்ட ஆசரிப்புக் கூடாரம்.PPTam 442.3

    பரலோக ஆலயம் இராஜாதி இராஜா தங்கும் இடமாக இருக்கிறது, ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடி பேர் அவருக்கு முன்பாக நின்றார்கள் தானி . 7:10. நித்திய சிங்காசனத்தின் மகிமையினால் நிரம்பி, பிரகாசிக்கிற காவலாளர்களான சேராபீன்கள் ஆராதிக்கும் படி தங்கள் முகங்களை மூடிக்கொண்டிருக்கிற அந்த ஆலயத்தை ஆலயத் தினுடைய அளவையும் மகிமையையும் எந்த பூமிக்குரிய அமைப்பும் எடுத்துக்காட்ட முடியாது. எனினும் பரலோக ஆசரிப்புக் கூடாரத்தையும் மனிதனுடைய மீட்பிற்காக நடத்தப்படுகிற மாபெரும் வேலையையுங்குறித்த மாபெரும் முக்கியமான சாத்தியங்கள் பூமிக்குரிய ஆசரிப்புக் கூடாரத்தின் வழியாகவும் அதன் ஊழியங்களின் வழியாகவும் போதிக்கப்படவேண்டும்.PPTam 443.1

    தாம் மேலெழுந்த பின்பு நம்முடைய இரட்சகர் பிரதான ஆசாரியனாக தம்முடைய வேலையைத் துவங்கவிருந்தார். பவுலார்: கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலே தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட் சமாகும்படி பிரவேசித்திருக்கிறார் (எபி. 924) என்று கூறுகிறான். கிறிஸ்துவின் ஊழியம் இரண்டு மாபெரும் பிரிவுகளை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்திற்கு பரலோக ஆசரிப்புக் கூடாரத்தின் குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்பட வேண்டியதாயிருக்க, அடையாளமான ஊழியமும் இரண்டு பிரிவுகளான அன்றாட மற்றும் வருடாந்தர ஊழியத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றிற்கும் கூடாரத்தின் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. கிறிஸ்து தாம் உயர எழும்பின் போது மனந்திரும்பின் விசுவாசிகளின் சார்பாக தேவனுடைய சமூகத்தில் தம்முடைய இரத்தத்தால் மன்றாடும்படி காணப்பட்டதைப்போல, ஆசாரியனும் அன்றாட ஊழியத்தில் பலியினுடைய இரத்தத்தை பாவியின் சார்பாக பரிசுத்த ஸ்தலத்தில் தெளித்தான்.PPTam 443.2

    கிறிஸ்துவின் இரத்தம் மனந்திரும்பின் பாவியை பிரமாணத்தின் ஆக்கினையிலிருந்து விடுதலை பண்ணின போதும் பாவத்தை மூடக்கூடா திருந்தது. அது முடிவான பாவ நிவாரணம் வரையிலும் ஆசரிப்புக் கூடாரத்தின் ஆவணங்களில் நிற்க வேண்டும் அதுபோலவே அடையாளமான ஊழியத்திலும் பாவ பலியின் இரத்தம் மனந்திரும்பினவனிடம் இருந்து பாவத்தை அகற்றின போதும், பாவ நிவாரணநாள் பரியந்தமும் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கியிருந்தது.PPTam 443.3

    முடிவாக பலனளிக்கப்படப்போகிற மாபெரும் நாளில் மரித்தவர்கள் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள் - வெளி. 20:12. பின்னர் கிறிஸ்துவினுடைய மீட்பின் இரத்தத்தின் நன்மையினால் மெய்யாக மனந்திரும்பின் அனைவருடைய பாவங்களும் பரலோக புத்தகங்களிலிருந்து அழிக்கப்படும். இவ்வாறாக, ஆசரிப்புக் கூடாரம் பாவத்தின் பதிவுகளிலிருந்து சுத்திகரிக்கப்படும் அல்லது விடுவிக்கப்படும். அடையாளமான ஆராதனையிலும் இந்த பாவ நிவாரண மாபெரும் வேலை அல்லது பாவங்களை அழிக்கும் வேலை பாவ நிவாரண நாளின் ஊழியத்தினால் தீட்டுப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தின் பாவங்களை பாவ பலியின் இரத்தத்தினால் அப்புறப்படுத்தி பூமிக்குரிய ஆசரிப்புக் கூடாரத்தை சுத்திகரித்த பாவ நிவாரணத்தின் ஊழியத்தினால் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது.PPTam 444.1

    முடிவான பாவநிவாரணத்தில் மெய்யாக மனந்திரும் பினவனின் பாவங்கள் பரலோகப் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டு, அதன் பின் நினைவு கூரப்படவோ அல்லது மனதிற்குக் கொண்டு வரப்படவோ கூடாதது போல், அடையாளமான ஆராதனையிலும் அவைகள் வனாந்தரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, என்றைக்குமாக சபையாரிடமிருந்து பிரிக்கப்பட வேண்டும்.PPTam 444.2

    சாத்தானே பாவத்தின் மூலகர்த்தாவாக இருப்பதினால், தேவனுடைய குமாரனின் மரணத்தைக் கொண்டு வந்த அனைத்து பாவங்களையும் நேரடியாக தூண்டியனவனாதலால், அவன் முடிவான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதி கோருகிறது. பரலோக ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து பாவங்களை அப்புறப்படுத்தி, முடிவாக தண்டனையைச் சுமக்கப்போகிற சாத்தான் மேல் வைக்கப்படும் போது, மனிதர்களை மீட்கவும் பிரபஞ்சத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்கவும் கிறிஸ்து செய்த ஊழியம் முடிவடையும். அடையாளமான ஊழியத்திலும் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுத்திகரித்து போக்காட்டின் தலையின் மேல் பாவங்களை அறிக்கையிடும் போது வருடாந்தர ஊழியம் முடிவடைந்திருந்தது.PPTam 444.3

    இவ்வாறாக, ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திலும் அதற்கடுத்து தேவாலயத்தில் நடந்த ஊழியத்திலும் கிறிஸ்துவினுடைய மரணத்தோடும் அவருடைய ஊழியத்தோடும் தொடர்புடைய மாபெரும் சாத்தியங்கள் ஒவ்வொரு நாளும் மக்களுக்குக் கற்பிக்கப்பட்டு, வருடத்தில் ஒருமுறை பாவத்திலிருந்தும் பாவிகளிலிருந்தும் பிரபஞ்சத்தை கடைசியாக சுத்திகரிக்கிற கிறிஸ்துவிற்கும் சாத்தானுக்குமிடையே இருக்கிற மாபெரும் போராட்டத்தினுடைய முடிவு சம்பவங்களுக்கு நேராக அவர் களுடைய மனங்கள் கொண்டு செல்லப்பட்டன.PPTam 445.1