Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    31 - நாதாபின் பாவமும் அபியூவின் பாவமும்

    கூடாரத்தை பிரதிஷ்டை செய்தபின் ஆசாரியர்கள் பரிசுத்தமான வேலைக்கு அர்ப்பணிக்கப்பட்டனர். இந்த ஊழியம் ஏழு நாட்களை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு நாளும் விசேஷமான சடங்குகளால் குறிக்கப்பட்டது. எட்டாம் நாளில் அவர்கள் தங்கள் ஊழியத்திற்குள் நுழைந்தனர். ஆரோன் தன் குமாரரின் உதவியோடு தேவன் கோரியிருந்த பலிகளைச் செலுத்தினான். பின்பு தன் கைகளை உயர்த்தி ஜனங்களை ஆசீர்வதித்தான். தேவன் கட்டளையிட்டபடி அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. அவர் பலியை அங்கீகரித்து, குறிப்பிடும் விதத்தில் தமது மகிமையை வெளிப்படுத்தினார். ஆண்டவரிடமிருந்து அக்கினி வந்து பலிபீடத்தின் மேலிருந்த காணிக்கையைப் பட்சித்துப்போட்டது. ஜனங்கள் தெய்வீக வல்லமையின் அதிசயமான வெளிப்பாட்டை பயபக்தியோடும் ஆழ்ந்த ஆர்வத்தோடும் பார்த்தனர். இதில் தேவனுடைய மகிமையையும் தயவையுங்குறித்த அடையாளத்தை அவர்கள் கண்டு, துதித்துப் புகழும் சத்தத்தை உயர்த்தி, யெகோவாவின் சமூகத்தில் தானே இருப்பதைப்போல் முகங்குப்புற விழுந்தனர்.PPTam 446.1

    ஆனால் மிக விரைவில் சடிதியும் பயங்கரமுமான ஆழிவு பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தின் மேல் விழுந்தது. ஆராதனையின் மணி நேரத்தில் ஜனங்களுடைய விண்ணப்பங்களும் துதிகளும் தேவனிடம் உயர்ந்து கொண்டிருந்தபோது, ஆண்டவருக்கு முன்பாக சுகந்த தூபத்தை எழுப்பும்படி ஆரோனின் இரண்டு குமாரர்கள் தங்களுடைய தூபகலசங்களை எடுத்து, அதில் மணம் வீசும் தூபவர்க்கத்தை எரித்தனர். ஆனால் அந்நிய அக்கினியை உபயோகப்படுத்தினதில் அவருடைய கட்டளையை அவர்கள் மீறியிருந்தனர். தூபவர்க்கத்தை எரிக்கும்படி தேவன்தாமே உண்டாக்கியிருந்ததும், இந்த நோக்கத்திற்காக உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருந்ததுமாகியPPTam 447.1

    பரிசுத்தமான அக்கினிக்குப் பதிலாக சாதாரண அக்கினியை எடுத்துக்கொண்டனர். இந்தப் பாவத்தினிமித்தம் ஆண்டவரிடத்திலிருந்து அக்கினி புறப்பட்டு ஜனங்களின் பார்வையில் அவர்களை பட்சித்துப்போட்டது.PPTam 447.2

    மோசேக்கும் ஆரோனுக்கும் அடுத்ததாக நாதாபும் அபியூவும் இஸ்ரவேலில் உயர்ந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் விசே ஷ விதமாக ஆண்டவரால் கனப்படுத்தப்பட்டு, எழுபது பேர்களோடு கூட மலையில் அவருடைய மகிமையைக் காண அனுமதிக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்களுடைய மீறுதல் மன்னிக்கப்படவோ அல்லது சாதாரணமாக கருதப்படவோ கூடாது. இவை அனைத்தும் அவர்களுடைய பாவத்தை இன்னும் வருந்தத்தக்கதாக்கிற்று. மனிதர்கள் அதிக வெளிச்சத்தை பெற்றிருப்பதினால், இஸ்ரவேலர்களின் பிரபுக்களைப் போல மலையின் மேல் ஏறி தேவனோடு தோழமை கொள்ளவும் அவருடைய மகிமையின் ஒளியில் வாசம்பண்ணவும் வாய்ப்பு பெற்றிருந்ததினால், தண்டனையில்லாமல் பாவம் செய்யலாம் என்றும், தாங்கள் இவ்விதமாக கனப்படுத்தப்பட்டபடியினால் தங்களுடைய அக்கிரமத்தை தண்டிப்பதற்கு தேவன் கண்டிப்புள்ள வராக இருக்கமாட்டார் என்றும் தங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இது ஒரு ஆபத்தான அபாயகரமானவஞ்சனை. அதிக வெளிச்சமும் வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டிருப்பது, கொடுக்கப் பட்ட வெளிச்சத்திற்கு இணையான ஒழுக்கத்தையும் பரிசுத்தத் தையும் திரும்ப எதிர்பார்க்கிறது. இதைவிட எவ்வளவு குறை வானதையும் தேவனால் ஏற்றுக்கொள்ள முடியாது. மாபெரும் ஆசீர்வாதங்களும் அல்லது வாய்ப்புகளும் பாதுகாப்பாயிருப் பதையோ அல்லது கவனமாயிருப்பதையோ ஒருபோதும் தனித்துவிடக்கூடாது. அவைகள் ஒருபோதும் பாவம் செய்வதற்கான உரிமையை கொடுத்துவிடக் கூடாது அல்லது தேவன் தங்களிடம் மிகவும் குறிப்பாக இருக்கமாட்டார் என்று உணரும்படி அதைப் பெற்றவர்களை நடத்தி விடக் கூடாது. தேவன் கொடுத்திருக்கிற அனைத்து சாதகங்களும் ஆவியில் தீவிரத்தையும், முயற்சியில் வைராக்கியத்தையும், அவருடைய பரிசுத்த சித்தத்தை செயல்படுத்துவதில் வீரியத்தையும் சேர்க்கும் அவருடைய வழிகளே .PPTam 447.3

    நாதாபும் அபியூவும் அவர்களுடைய இளமையில் சுயகட்டுப்பாட்டுப் பழக்கங்களில் பயிற்றுவிக்கப்படவில்லை. தகப்பனுடைய விட்டுக்கொடுக்கும் மனநிலையும் சரியானவற்றிற்காக உறுதியாக நிற்காத குணமும் தன்னுடைய குழந்தைகளின் ஒழுக்கத்தை நெகிழும்படி அவனை நடத்தியது. அவனுடைய குமாரர்கள் தங்களுக்கு பிரியமானதை பின்பற்ற அனுமதிக் கப்பட்டனர். நீண்டகாலம் நேசிக்கப்பட்ட சுயத்தில் திளைக்கும் பழக்கங்கள் மிகப் பரிசுத்தமான தொழிலின் பொறுப்புகூட அதை உடைக்க வல்லமையற்றதாகிப் போகுமளவு அவர்கள் மேல் ஒரு பிடிப்பை வைத்தது. தகப்பனின் அதிகாரத்தை மதிக்க அவர்கள் கற்றுத்தரப்படவில்லை . தேவனுடைய கோரிக்கைகளுக்கு மிகச்சரியான கீழ்ப்படிதலைக் காண்பிக்கும் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. ஆரோன் தன் பிள்ளைகளில் தவறாகத் திளைத்திருந்தது தெய்வீக நியாயத்தீர்ப்புகளின் கீழ் வர அவர்களை ஆயத்தப்படுத்தினது.PPTam 448.1

    தேவன் தம்மை பயபக்தியோடும் பயத்தோடும், தாம் நியமித்த விதமாக நெருங்க வேண்டும் என்று மக்களுக்குப் போதிக்க திட்டமிட்டிருந்தார். பாதிக் கீழ்ப்படிதலை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். இந்தப் பரிசுத்தமான ஆராதனைக் காலத்தில் ஏறக்குறைய அனைத்தும் அவர் கட்டளையிடப்பட்டதுபோல் செய்யப்பட்டிருக்கிறது என்பது போதாது. தமது கற்பனைகளிலிருந்து விலகி, பரிசுத்த காரியங்களுக்கும் சாதாரணமானவைகளுக்கும் வித்தியாசம் காண்பிக்காதவர்கள் மேல் தேவன் ஒரு சாபத்தை அறிவித்திருக்கிறார். தீர்க்கதரிசியின் வழியாக தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்பு மென்று ச பாதிக்கிறவர்களுக்கு ஐயோ! தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ !.... பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டு கிறவர்களுக்கு ஐயோ !.... அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வச னத்தை அசட்டைபண்ணினார்களே (ஏசாயா 520-24) என்று அவர் அறிவிக்கிறார். தேவனுடைய கற்பனைகளின் ஒரு பகுதி அவசியமற்றது என்றோ அல்லது அவர் கோரியிருப்பதற்கு ஒரு மாற்றை ஏற்றுக்கொள்ளுவார் என்றோ நம்புவதினால் ஒருவரும் தன்னை வஞ்சித்துக்கொள்ள வேண்டாம். எரேமியா தீர்க்கதரிசி : ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? (புலம்பல் 337) என்று கூறினான். மனிதன் தான் விரும்பினால் கீழ்ப்படியலாம் அல்லது கீழ்ப்படியாமலும் போகலாம் அதன் விளைவை அவன் அனுபவிக்கமாட்டான் என்பது போன்ற எந்த ஒரு கட்டளையையும் தேவன் தமது வார்த்தைகளில் வைத்திருக்கவில்லை. கண்டிப்பான கீழ்ப்படிதலை விட வேறு ஏதாவது பாதையை மனிதன் தெரிந்து கொள்வானானால், அதின் முடிவோ மரண வழிகள் (நீதி. 14:12) என்பதைக் கண்டடைவார்கள்.PPTam 448.2

    மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப் போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக, கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள் மேல் இருக்கிறதே என்றான். அந்த மாபெரும் தலைவன் தன் சகோதரனுக்கு என்னிடத்தில் சேருகிற வர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்ற தேவனுடைய வார்த்தைகளை ஞாபகப்படுத்தினான். ஆரோன் மௌனமாயிருந்தான் பயங்கரமான ஒரு பாவத்தின் தான் நிராகரித்த கடமையின் விளைவினால் எச்சரிப்பின்றி கொல்லப்பட்ட குமாரரின் மரணம், தகப்பனுடைய இருதயத்தை வேதனையினால் நெருக்கிறது. ஆனாலும் தன் உணர்வுகளை அவன் வெளிப் படுத்தவில்லை. வருத்தத்தின் எந்த வெளிக்காட்டு தலினாலும் பாவத்தின் மேல் பரிதாபப்படுவதாக அவன் காணப்படக்கூடாது. சபையார் தேவனுக்கு எதிராக முறுமுறுக்க நடத்தப்படக்கூடாது. மற்றவர்கள் பயப்படுவதற்கு ஏதுவாக, தாம் சரிசெய்ததில் இருந்த நீதியை ஒப்புக்கொள்ள ஆண்டவர் தம்முடைய ஜனங்களை நடத்துவார். ஆண்டவருடைய பொறுமையைக் குறித்து தவறாக யூகித்து இஸ்ரவேலில் இருந்த மற்றவர்கள் தங்களுடைய சொந்த விதியை தாங்களே முத்திரிக்கும் எல்லைக்குப் போய்விடாதபடி, இந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பு அவர்களைக் காப்பாற்றும். தன்னுடைய பாவத்திற்கு சாக்குப்போக்கு சொல்ல முயற்சிக்கும் பாவியின்மேல் தவறான இரக்கம் காட்டுகிறவர்கள் மேல் தெய்வீக கண்டனம் இருக்கிறது. சன்மார்க்க உணர்வுகளைச் சாகடிப்பது பாவத்தின் விளைவே. இதினால், தவறு செய்பவன் தன்னுடைய மீறுதலின் ஏராளத்தை உணராதிருந்து, பரிசுத்த ஆவியானவரின் உணர்த்தும் வல்லமை இல்லாதவனாக தன்னுடைய பாவத்தைக் குறித்த பகுதி குருட்டாட்டத்தில் இருக்கிறான். இந்த தவறானவர்களுக்கு அந்த ஆபத்தைக் காண்பிப்பது கிறிஸ்துவின் ஊழியக்காரருடைய கடமையாயிருக்கிறது. பாவத்தின் விளைவுகளுக்கும் அதன் மெய்யான குணத்திற்கும் பாவிகளை குருடாக்குவதன் வழியாக இந்த எச்சரிப்பின் விளைவுகளை அழிக்கிறவர்கள், பலவேளைகளில் தாங்கள் செய்யும் நற்செயல்களுக்கு இவ்விதம் சான்று பகருவதாக தங்களைத் தாங்களே போற்றிக்கொள்ளு கிறார்கள். ஆனால் தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் வேலையை எதிர்க்கவும் தடுக்கவும் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அழிவின் விளிம்பில் அவர்கள் பாவியை இளைப்பாறவைத் துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களையும் அவனுடைய குற்றத்தில் பங்காளிகளாக்கி, அவனுடைய மனவருத்தமின்மைக்கு பயங்கரமான பயப்படக்கூடிய பொறுப்பைPPTam 449.1

    சம்பாதிக்கிறார்கள். அநேகமநேகம் பேர் இந்தப் பொய்யான வஞ்சிக்கும் பரிவினால் அழிவிற்குச் சென்றிருக்கிறார்கள்.PPTam 450.1

    முதலில் மது பானத்தை தாராளமாக உபயோகித்து பாதி போதையேற்றாது இருந்திருந்தால், நாதாபும் அபியூவும் இந்த அபாயகரமான பாவத்தைச் செய்திருக்கமாட்டார்கள். தெய்வீக சமூகம் வெளிக்காட்டப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தில் தங்களை அர்ப்பணிக்கும் முன்பு மிகவும் கவனமான பயபக்தியான ஆயத்தம் அவசியம் என்பதை அவர்கள் புரிந்திருந்தனர். ஆனால் இச்சையடக்கமின்மையினால் பரிசுத்தமான வேலைக்கு தங்களை தகுதியற்றவர்களாக்கினர். அவர்களுடைய மனங்கள் குழம்பிப் போய் அவர்களுடைய சன்மார்க்க உணர்வுகள் மங்கிப்போக, பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் அவர்களால் வித்தியாசம் காணமுடியவில்லை. ஆரோனுக்கும் மீதியிருந்த அவன் பிள்ளைகளுக்கும் நீயும் உன்னோடே கூட உன் குமாரரும் சாகாதிருக்க வேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிற போது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்க வேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில் லாததற்கும், வித்தியாசம் பண்ணும் படிக்கும், கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும் படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளை யாயிருக்கும் என்ற எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. சாராயம் கலந்த பானங்கள் சரீரத்தை பெலவீனப்படுத்தி, மனதைக் குழப்பி, சன் மார்க்க நெறிகளை தரந்தாழ்த்துகிற விளைவுகளை உண்டுபண்ணும். பரிசுத்தமான காரியங்களின் புனிதத்தை உணருவதிலிருந்து அல்லது தேவனுடைய கோரிக்கைகளின் இணைக்கும் வல் லமையை உணருவதிலிருந்து அது மனிதனை தடை செய்கிறது. சரியானதற்கும் தவறானதற்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க அவர்கள் மனது தெளிவாயிருக்கவும், கொள்கையில் உறுதியைக் காண்பிக்கவும், நீதி செலுத்தவும் இரக்கம் காண்பிக்கவும் வேண்டிய ஞானத்தை பெற்றிருப்பதற்கேதுவாகவும், புனிதமான பொறுப்புகளைப் பெற்றிருக்கிறவர்கள் கண்டிப்பாக இச்சையடக்கமுள்ள மனிதர்களாயிருக்கவேண்டும்.PPTam 450.2

    அதே கடமை கிறிஸ்துவின் ஒவ்வொரு பின்னடியார் மேலும் தங்கியிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு . நீங்களோ ... தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் என்று அறிவிக்கிறான். நம்முடைய சிருஷ்டிகருக்கு அவர் ஏற்றுக்கொள்ளக் கூடிய சேவையைச் செய்வதற்கேதுவாக, ஒவ்வொரு வல்லமையையும் எச்சரித்தி, மனதை 2. பரிசுத்தமாக கைகளின்PPTam 451.1

    மிகச்சிறந்த நிலையில் காத்துவைக்கும்படி தேவனால் கோரப்படுகிறோம். போதைவஸ்துக்கள் உபயோகப்படுத்தப்படும் போது, இஸ்ரவேலின் ஆசாரியர்களுக்குச் சம்பவித்ததைப் போன்ற அதே விளைவுகள் பின்தொடரும். மனசாட்சி பாவத்தைக் குறித்த உணர்வை இழந்து போய், பரிசுத்தமுள்ளவைகளையும் பரிசுத்த மில்லாதவைகளையும் குறித்துக்காட்டுகிற அனைத்து வித்தியாசத் தையும் இழக்கும் வரையிலும் அக்கிரமத்திற்கு கடினப்பட்டுப் போவது நிச்சயமாக நடக்கும். பின்னர் எவ்விதம் நாம் தேவனுடைய கோரிக்கைகளின் தரத்தை சந்திக்க முடியும்? உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும், உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவை களாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் -1 கொரி. 619, 20, ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 1 கொரி. 1031. அனைத்து யுகங்களிலும் இருந்த கிறிஸ்துவின் சபைக்கு : ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம் (1 கொரி. 3:17) என்கிற பவித்திரமான பயங்கரமான எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது.PPTam 451.2