Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    32 - நியாயப்பிரமாணமும் உடன்படிக்கைகளும்

    ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்ட போது, தேவனுடைய பிரமாணத்தைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தார்கள். அது அவர்கள் மேல் வைத்திருந்த உரிமைகளோடு அவர்கள் அறிமுகமாகியிருந்தனர். அதன் நியமங்கள் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருந்தது. மீறுதலால் மனிதன் விழுந்த போது பிரமாணம் மாற்றப்படவில்லை. மாறாக, அவர்களை மீண்டும் கீழ்ப்படிதலுக்குக் கொண்டு வரும் படியாக பரிகார அமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு இரட்சகரைக்குறித்த வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டு, கிறிஸ்துவின் மரணம் மாபெரும் பாவபலி என்பதை முன்கூட்டிக்காட்ட பலி காணிக்கைகள் ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் தேவனுடைய பிரமாணம் ஒரு போதும் மீறப்படாதிருந்திருக்குமானால் மரணம் இருந்திருக்காது; ஒரு இரட்சகரும் அவசியப்பட்டிருக்கமாட்டார்; விளைவாக பலிகளும் அவசியப்பட்டிருக்காது.PPTam 453.1

    ஆதாம் தேவனுடைய பிரமாணங்களை தன் பின் சந்ததியாருக்குப் போதித்தான். அது தகப்பன்களிடமிருந்து மகன்களுக்கென்று பின் தொடர்ந்த தலை முறைகளில் வழிவழியாகக்கையளிக்கப்பட்டிருந்தது. மனிதனுடைய மீட்பிற்கு கிருபையான ஏற்பாடு இருந்தபோதும் ஒரு சிலரே அதை ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்தனர். மீறுதலினால் இந்த உலகம் மிகவும் கேடுள்ளதாக, ஜலப்பிரளயத்தினால் அதன் சீர்கேட்டிலிருந்து அதைச் சுத்தம் செய்வது அவசியமாயிற்று. பிரமாணம் நோவாவினாலும் அவன் குடும்பத்தினாலும் பாதுகாக்கப்பட்டது. நோவா தன் பின் சந்ததியாருக்கு பத்துக் கட்டளைகளைப் போதித்தான். மனிதர் மீண்டும் தேவனிடமிருந்து விலகி சென்ற போது, தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு, அவனைக்குறித்து ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால் (ஆதி. 26:4) என்று அறிவித்தார். விருத்தசேதனம் என்ற ஒரு சடங்கு அவனுக்குக்PPTam 453.2

    கொடுக்கப்பட்டது. அது, அதைப் பெற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவும், விக்கிரகாராதனையிலிருந்து விலகி பிரிந்து தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவார்கள் என்பதன் உறுதிமொழியாகவும் இருந்தது. புறஜாதிகளோடு திருமண உறவு கொள்ளும் இயல்பிலும், அவர்களுடைய பழக்கங்களை பின்பற்றும் இயல்பிலும் வெளிக்காட்டப்பட்ட ஆபிரகாமின் பின் சந்ததியார் இந்த உறுதிமொழியை கைக்கொள்ளத் தவறினார்கள் என்பதுதான் அவர்களுடைய எகிப்தின் பரதேச வாழ்க்கைக்கும் அடிமைத்தனத்திற்கும் காரணமாயிற்று. எனினும் விக்கிரகாரா தனைக்காரரோடு அவர்கள் வைத்திருந்த உறவினிமித்தமும், எகிப்தியர்களுக்கு ஒப்புக்கொடுக்கும் கட்டாயத்தினிமித்தமும் தெய்வீகக் கட்டளைகள் அஞ்ஞான மார்க்கத்தின் தீமையும் கொடுமையுமான போதனைகளினால் மேலும் சீர்கெட்டுப் போயிற்று. எனவே ஆண்டவர் அவர்களை எகிப்திலிருந்து கொண்டுவந்து, பின்னா, தம்முடைய மகிமையினால் மூடப்பட்டு, தூதர்களால் சூழப்பட்டவராக சீனாயின் மேல் இறங்கி வந்து அனைத்து ஜனங்களுடைய காதுகளும் கேட்க பயங்கரமான மகத்துவத்தோடு தமது பிரமாணங்களை அறிவித்தார்.PPTam 454.1

    அப்படியிருந்தும், அவருடைய கோரிக்கைகளை மறக்கும் இயல்புடைய மக்களின் ஞாபகத்தில் வைத்திருக்கக் கொடுக்காமல், அவர் தமது கட்டளைகளை கற்பலகைகளில் எழுதினார். புறஜாதியாரின் பாரம்பரியங்களை தம்முடைய பரிசுத்த கட்டளைகளோடு கலப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் அல்லது மனித நியமங்கள் பழக்கங்களோடு தம்முடைய கோரிக்கைகளை குழப்புவதற்கான அனைத்து சாதகங்களையும் இஸ்ரவேலிடமிருந்து அகற்றினார். பத்துப் பிரமாணங்களின் கட்டளைகளை கொடுத்ததோடு அவர் நிறுத்தவில்லை. ஜனங்கள் தாங்கள் வெகு இலகுவாக வழிவிலகிப் போவார்கள் என்பதைக் காண்பித்திருந்ததினால், சோதனையின் எந்த கதவையும் அவர் காவலின்றி விட்டுவைக்கவில்லை. தேவன் சொல்லுவதைப் போலவே என்ன கோரப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்த போதனைகளடங்கிய நியாயத்தீர்ப்புகளையும் சட்டங்களையும் எழுதும்படியாக மோசேக்கு அவர் கட்டளையிட்டார். எவரும் தவறு செய்ய அவசியமில்லாதபடிக்கு பெரிது படுத்தப்பட்டு குறிப்பிட்ட விதத்தில் கொடுக்கப்பட்ட பத்துக் கற்பனைகளின் கொள்கைகளே, தேவனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும், மனிதர் ஒருவருக்கொருவரும் அந்நியருக்கும் செய்யவேண்டிய கடமைகளையும் கட்டுப்படுத்தின் இந்தக் கட்டளைகள். கற்பலகைகளில் பொறிக்கப்பட்டிருந்த பத்துக் கற்பனைகளின் பரிசுத்தத்தை பாதுகாக்கும் படியே அவைகள் திட்டமிடப்பட்டிருந்தன. விழுகைக்குப்பின் ஆதாமிடம் கொடுக்கப்பட்டு, நோவாவினால் பாதுகாக்கப்பட்டு, ஆபிரகாமினால் கைக்கொள்ளப்பட்டிருந்த பிரமாணத்தை மனிதன் கைக்கொண்டிருப்பானாகில், விருத்தசேதனத்திற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. விருத்த சேதனத்தை அடையாளமாகக் கொண்டிருந்த உடன்படிக்கையை ஆபிரகாமின் பின் சந்ததியினர் கடைபிடித்திருப்பார்களெனில் விக்கிரகாராதனைக்குள் வஞ்சிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். எகிப்தின் அடிமைத்தன் வாழ்க்கையில் துன்பப்படவும் அவசியம் ஏற்பட்டிருக்காது. தேவனுடைய பிரமாணங்களை தங்கள் மனதில் வைத்திருந்திருப்பார்கள். சீனாயில் அவைகள் அறிவிக்கப்படவோ அல்லது கற்பலகைகளில் பொறிக்கப்படவோ அவசியம் இருந்திருக்காது. பத்துப் பிரமாணங்களின் கொள்கைகளை ஜனங்கள் கைக்கொண்டிருப் பார்களெனில், மோசேயிடம் கொடுக்கப்பட்டிருந்த கூடுதலான கட்டளைகளின் அவசியம் இருந்திருக்காது.PPTam 454.2

    ஆதாமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பலிமுறைகளின் அமைப்பு அவனுடைய பின் சந்ததியினரால் சீர்குலைக்கப்பட்டது. மூட நம்பிக்கைகளும் விக்கிரகாராதனையும் கொடுமையும் விபசாரமும், எளிமையான குறிப்பிடத்தகுந்த சேவையை சீர்குலைத்திருந்தது. விக்கிரகாராதனைக்காரரோடு நீண்ட நாட்கள் உறவு வைத்திருந்ததினால், இஸ்ரவேலர் அநேக புறஜாதி பழக்கங்களை தங்கள் ஆராதனையோடு கலந்திருந்தனர். எனவே பலிமுறைகளைக்குறித்த குறிப்பான போதனைகளை ஆண்டவர் சீனாயில் கொடுத்தார், கூடாரத்தை அமைத்து முடித்தபின் கிருபாசனத்தின் மேலிருந்த மகிமையின் மேகத்திலிருந்து அவர் மோசேயோடு பேசி, ஆசரிப்புக் கூடாரத்தில் பராமரிக்கப்பட வேண்டிய காணிக்கை முறைகளையும் ஆராதனை முறைமையையும் குறித்த முழுமையான நடத்துதல்களைக் கொடுத்தார். இவ்வாறாக, சடங்குப்பிரமாணம் மோசேயிடம் கொடுக்கப்பட்டு, அவனால் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டது. ஆனால் தேவனால் கூறப்பட்ட பத்துப்பிரமாணம் . சீனாயிலிருந்து பேசப்பட்ட பத்து கற்பனைகளின் பிரமாணம் தேவனால் தாமே கற்பலகைகளில் எழுதப்பட்டு, உடன்படிக்கைப்பெட்டிக்குள் பரிசுத்தமாக பாதுகாக்கப்பட்டது.PPTam 455.1

    சடங்குப்பிரமாணத்தைக் குறித்து பேசுகிற வசனங்களை சன்மார்க்கப் பிரமாணம் கொடுக்கப்பட்டதை நிரூபிப்பதற்காக உபயோகப்படுத்தி, இந்த இரண்டு அமைப்புகளையும் கலக்க முயற்சிக்கிற அநேகர் இருக்கிறார்கள். இது வேதவாக்கியங்களை புரட்டுவதாகும். இந்த இரண்டு அமைப்புகளினிடையே இருக்கிற வேறுபாடுகள் மிக விரிந்ததும் தெளிவானதுமாக இருக்கின்றன. சடங்கு பிரமாணம் கிறிஸ்துவையும் அவருடைய தியாகபலியையும் அவருடைய ஆசாரியத்துவத்தையும்PPTam 456.1

    சுட்டிக்காட்டுகிற அடையாளங்களால் ஆக்கப்பட்டிருந்தது. இந்தச் சடங்குப் பிரமாணம் அதன் பலிகளோடும் நியமங்களோடும் அடையாளம் நிஜமாகிய தேவ ஆட்டுக்குட்டி உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் வரை கிறிஸ்துவின் மரணம் வரை நடத்தப்பட வேண்டியதிருந்தது, பின்னர் அனைத்து பலி காணிக்கைகளும் முடிவிற்கு வரவேண்டும். இந்தப் பிரமாணத்தைத்தான் கிறிஸ்து நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின் மேல் ஆணியடித்தார் (கொலோ. 2:14). ஆனால் பத்துக் கற்பனைகளின் பிரமாணத்தைக்குறித்து சங்கீதக்காரன் : கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது (சங். 11981) என்று அறிவிக்கிறான். கிறிஸ்து தாமும் : நியாயப்பிரமாணத் தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 5:17, 18) என்று எவ்வளவு அழுத்திக் கூற முடியுமோ அவ்வளவு அழுத்தமாகக் கூறினார். இந்த பிரமாணங்கள் எதைக் கோரிக்கொண்டிருந்தன அல்லது அப்போது என்ன கோரின் என்பதை மாத்திரம் போதியாமல், வானங்களும் பூமியும் நிற்கும் வரை அதன் கோரிக்கைகள் இருக்கும் என்பதை கிறிஸ்து போதிக்கிறார். தேவனுடைய பிரமாணம் அவருடைய சிங்காச னத்தைப்போலவே அசைக்கக்கூடாத ஒன்று. அது அனைத்து யுகங்களிலும் மனித இனத்தின் மேல் அதன் உரிமைகளை பராமரித்து வருகிறது.PPTam 456.2

    சீனாவில் அறிவிக்கப்பட்ட பிரமாணங்களைக் குறித்து நெகேமியா : நீர் சீனாய்மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதி நியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர் (நெகே. 913) என்று கூறுகிறான். புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் : நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளது தான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது (ரோமர் 7:11) என்கிறான். இது, பத்துப் பிரமாணங்களை விடுத்து வேறு எதுவாகவும் இருக்கக்கூடாது. ஏனெனில் பத்துப் பிரமாணமே இச்சியாதிருப்பாயாக என்று சொல்லுகிறது.PPTam 457.1

    இரட்சகரின் மரணம் அடையாளங்கள் மற்றும் நிழல்களின் சட்டத்திற்கு முடிவு கொண்டுவந்தபோது, சன்மார்க்கப்பிரமாணத்தின் கடமைகளை சிறிதும் குறைக்க வில்லை . மாறாக, அந்தப் பிரமாணத்தை மீறினதின் பரிகாரத்திற்காக கிறிஸ்து மரிக்க வேண்டும் என்ற உண்மை, அது மாறக்கூடாதது என்று போதிக்கிறது.PPTam 457.2

    தேவனுடைய பிரமாணத்தை இல்லாமற்போகச் செய்யவே கிறிஸ்து வந்தார் என்று உரிமை பாராட்டி, பழைய ஏற்பாட்டை அப்புறப்படுத்துகிறவர்கள் யூதர்களின் காலத்தை இருண்ட காலம் என்று பேசி, எபிரெயர்களின் மதத்தை வெறும் சடங்குகளும் மாதிரிகளும் மாத்திரமே கொண்டது என்று எடுத்துக்காட்டுகிறார்கள், ஆனால் இது தவறு. தேவன் தெரிந்து கொள்ளப்பட்ட தம்முடைய ஜனங்களோடு இடைப்பட்டிருக்கிற விதங்களை பதிவு பண்ணியிருக்கிற பரிசுத்த சரித்திரத்தின் பக்கங்கள் முழுவதிலும் மாபெரும் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்கிறவருடைய ஒளிரும் தடயங்கள் இருக்கின்றன. அவர் மாத்திரம் இஸ்ரவேலின் அதிபதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமது ஜனங்களுக்கு பிரமாணங்களைக் கொடுத்த நேரத்தைத்தவிர வேறு எங்கும் மனிதர்களுக்கு தமது வல்லமையையும் மகிமையையும் குறித்த மிக அதிக வெளிப்பாடுகளை அவர் கொடுத்ததில்லை. இங்கே மனிதக்கரங்களால் அசைக்கப்படாத செங்கோல் ஒன்று இருந்தது. இஸ்ரவேலின் காணக் கூடாத அரசனின் புறப்படுதல், சொல்ல முடியாத அளவு பிரமாண்டமும் பயங்கரமுமாக இருந்தது. தெய்வீக சமூகத்தின் இந்த அனைத்து வெளிப்படுத்துதல்களிலும் கிறிஸ்துவின் வழியாக தேவனுடைய மகிமை வெளிக்காட்டப்பட்டது. இரட்சகரின் வருகையில் மாத்திரமல்ல, விழுகைக்குப் பின்னும் மீட்பின் வாக்குத்தத்தத்திற்குப் பின்னும் அனைத்து யுகங்களிலும் தேவன் ...... கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார் -1 கொரி. 5:19 முற்பிதாக்களின் காலத்திலும் யூதர்களின் காலத்திலும் கிறிஸ்து தாமே பலிமுறைகளின் அஸ்திபாரமும் மையமுமாக இருந்தார். நம்முடைய முதற்பெற்றோரின் பாவத்திலிருந்து தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. கிறிஸ்துவினுடைய மத்தியஸ்த ஊழியத்தின் வழியாக மனிதனை மீட்கவும், தேவனுடைய பிரமாணங்களின் அதிகாரத்தையும் பரிசுத்தத்தை நிலைநாட்டவும், பிதாவானவர் உலகத்தை கிறிஸ்துவின் கரங்களின் கொடுத்திருக்கிறார். பரலோகத்திற்கும் விழுந்து போன இனத்திற்குமிடையே இருக்கிற அனைத்துத் தொடர்பும் கிறிஸ்துவின் வழியாகவே . தேவனுடைய குமாரனே நம்முடைய முதல் பெற்றோருக்கு மீட்பின் வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். அவர் தாமே முற்பிதாக்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார். ஆதாம், நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே அனைவரும் சுவிசேஷத்தைப் புரிந்து கொண்டிருந்தனர். மனிதனுடைய மாற்றாக இருந்து அவனுக்கு பிணையாளியானவர் வழியாக அவர்கள் இரட்சிப்பை எதிர்பார்த்திருந்தனர். இந்தப் பழைய காலத்து பரிசுத்த மனிதர்கள் மாமிசத்தில் நம்முடைய உலகத்திற்கு வரவிருந்த இரட்சகரோடு உறவு கொண்டிருந்து,PPTam 457.3

    அவர்களில் சிலர் கிறிஸ்துவோடும் பரலோகத்தூதர்களோடும் முகமுகமாகப் பேசியிருந்தனர். கிறிஸ்து வனாந்தரத்தில் எபிரெயர்களின் தலைவராக மாத்திரம் இருக்கவில்லை, யெகோவா என்கிற நாமம் எந்த தூதனிடம் இருந்ததோ, யார் மேகஸ்தம்பத்தில் மறைந்திருந்து அந்த சேனைக்கு முன் சென்றாரோ, அவரே இஸ்ரவேலுக்கு பிரமாணத்தையும் கொடுத்தவர். சீனாயின் பயங்கரமான மகிமைக்கு மத்தியில் கிறிஸ்து அவருடைய பிதாவின் பிரமாணத்தினுடைய பத்துக் கட்டளைகளை ஜனங்களின் காதுகள் கேட்க அறிவித்தார். அவரேகற்பலகையில் பொறிக்கப்பட்டிருந்த பிரமாணத்தை மோசேயிடம் கொடுத்தார். கிறிஸ்துதான் தீர்க்கதரிசிகளின் வழியாக தமது ஜனங்களிடம் பேசியிருந்தார். அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதும் போது : தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள், தங்களிலுள்ள கிறிஸ்து வின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசே ஷம் இன்னதென்பதையும் கருத்தாய் ஆராய்ந்தார்கள் (1 பேதுரு 1:10, 11) என்று கூறுகிறான். பழைய ஏற்பாட்டின் வழியாக நம்மோடு பேசுவது கிறிஸ்துவின் குரலே. இயேசுவைப்பற்றின் ச காட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது. வெளி. 19:10PPTam 458.1

    மனிதர்களுக்கு இடையேயிருந்து போதித்தபோது இயேசு மக்களின் மனதை பழைய ஏற்பாட்டிற்குத் திருப்பினார். அவர் யூதர்களிடம் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே (யோவான் 5:39) என்று கூறினார். இந்த நேரத்தில் வேதாகமத்தில் பழைய ஏற்பாடு மாத்திரமே இருந்தது, மீண்டும் தேவனுடைய குமாரன் : அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசி களும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்று அறிவித்து, அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும், நம்பமாட்டார்கள் (லூக்கா 16:29,31) என்று சேர்த்துக் கூறினார்.PPTam 459.1

    சடங்குப் பிரமாணம் கிறிஸ்துவால் கொடுக்கப்பட்டது. அதைக் கடைபிடிக்கவேண்டிய அவசியம் இல்லாது போன போதும் அதனுடைய உண்மையான இடத்தையும் மதிப்பையும் பவுல் யூதர்கள் முன் எடுத்துக் காட்டினான். மீட்பின் திட்டத்தில் அதன் இடத்தையும்கிறிஸ்துவின் ஊழியத்தில் அது கொண்டிருக்கிற தொடர்பையும் யூதர்கள் முன்பு பவுல் எடுத்துக் காண்பித்தான். அந்த மாபெரும் அப்போஸ்தலன் இந்தப் பிரமாணத்தை மகிமையானதென்றும் தெய்வீக நபரால் துவங்கப்படத் தகுதியுள்ள தென்றும் அறிவிக்கிறான். பின் தொடர்ந்த தலைமுறைகளில் வெளிப்படுத்தப்படவிருந்த மாபெரும் சத்தியங்களை இந்த பரிசுத்தமான ஆசரிப்புக் கூடார ஊழியம் அடையாளப்படுத்தியிருந்தது. இஸ்ரவேலர்களின் ஜெபங்களோடு மேலெழுந்த தூப்மேகம் பாவியின் ஜெபத்தை தேவன் அங்கீகரிக்கச் செய்கிற அவருடைய நீதியை எடுத்துக்காட்டியது. பலிபீடத்தின் மேல் இரத்தஞ்சிந்திக்கொண்டிருந்த மிருகம் வரவிருக்கிற மீட்பரை சாட்சி பகர்ந்தது. மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து தெய்வீக பிரசன்னத்தின் காணக்கூடிய அடையாளம் பிரகாசித்தது. இவ்வாறாக மருள விழுந்திருந்து யுகத்திற்குப்பின் யுகமாக வாக்குப்பண்ணப் பட்டிருந்த மேசியாவின் வருகைவரையிலான காலங்களில் மனி தரின் இருதயங்களில் விசுவாசம் உயிருள்ளதாக காட்டப்பட்டிருந்தது.PPTam 459.2

    இயேசு மனித சாயலில் பூமிக்கு வரும் முன்னதாக அவர்தாமே உலகத்தின் ஒளியாக தமது ஜனங்களின் ஒளியாக இருந்தார். இந்த உலகத்தை மூடியிருந்த பாவத்தின் இருட்டை முதலில் துளைத்திருந்த ஒளிக்கீற்று கிறிஸ்துவிடமிருந்து வந்தது. பூமியின் குடிகள் மேல் விழுந்த பரலோக பிரகாசத்தின் ஒவ்வொரு கதிரும் அவரிடமிருந்து தான் வந்திருக்கிறது. மீட்பின் திட்டத்தில் கிறிஸ்துதாமே அல்பாவும் ஒமேகாவும் - ஆதியும் அந்தமுமாக இருக்கிறார்.PPTam 460.1

    பாவங்களை மன்னிப்பதற்கு இரட்சகர் தமது இரத்தத்தைச் சிந்தி, நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும் படி (எபி. 9:24) பரலோகத்திற்கு எழுந்தருளியிருப்பதினால், கல்வாரியின் சிலுவையிலிருந்தும் மேலே இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலங்களிலிருந்தும் ஒளி பாய்ந்து கொண்டிருக்கிறது. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற தெளிவான வெளிச்சம், வரப்போகிற இரட்சகரைச் சுட்டிக்காட்டிய மாதிரிகளின் வழியாக ஆதிகாலங்கள் பெற்றிருந்த வெளிச்சத்தை ஒதுக்கும் படியாக நடத்தக்கூடாது. கிறிஸ்துவின் சுவிசேஷம் யூதர்களுடைய பொருளாதாரத்தின் மேல் வெளிச்சம் வீசி, சடங்குப் பிரமாணங்களைக் குறிப்பிடத்தகுந்ததாக்குகிறது. புதிய சாத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டு, ஆதியிலிருந்து அறிந்திருந்தவைகள் தெளிவான வெளிச்சத்திற்குள் கொண்டுவரப் படும் போது, தாம் தெரிந்து கொண்டவர்களோடு தேவன் நடந்து கொண்ட விதங்களில் அவருடைய குணமும் நோக்கங்களும் வெளியாக்கப்படுகின்றன. மனிதனின் மீட்பில் தெய்வீகத்தின் செயல்பாடான மீட்பின் திட்டத்தைக் குறித்த தெளிவான புரிந்து கொள்ளுதலை, ஒவ்வொரு கூடுதலான வெளிச்சத்தினாலும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம். ஆவியானவரால் ஏவப்பட்ட வாக்கியங்களில் புதிய அழகையும் வல்லமையையும் நாம் கண்டு, அதன் பக்கங்களை ஆழமான இன்னும் அதிகமான ஆர்வத்தோடு ஆராய்கிறோம்.PPTam 460.2

    எபிரெயர்களுக்கும் வெளி உலகத்திற்குமிடையே பிரிவினையின் சுவரை தேவன் வைத்திருந்தார் என்கிற மனித குலத்தின் மற்றவர் களிடமிருந்து அதிக அளவு பின்வாங்கப்பட்ட அவருடையகவனமும் அன்பும் இஸ்ரவேலர்கள் மேல்மையங்கொண்டிருந்தது என்கிற ஒரு கருத்தை அநேகர் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமது ஜனங்கள் தங்களுக்கும் தங்கள் சக மனிதருக்குமிடையே ஒரு பிரிவினையின் சுவரைக் கட்டவேண்டுமென்பது தேவனுடைய திட்டமல்ல . நித்திய அன்பானவரின் இருதயம் பூமியில் குடியிருக்கிற அனைவரையும் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவர்கள் அவரை நிராகரித்தபோதும், தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தவும், தம்முடைய அன்பிலும் கிருபையிலும் அவர்களைப் பங்கு பெறச் செய்யவும் அவர் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தார். மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்கென்றே அவருடைய ஆசீர்வாதங்கள் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களுக்கு வழங்கப்பட்டது.PPTam 461.1

    தேவன் ஆபிரகாமை அழைத்து அவனை செழிப்பாக்கி கனப்படுத்தினார். அவனுடைய விசுவாசம் அவன் கடந்து சென்ற அனைத்து தேசங்களிலுமிருந்த மக்களுக்கு ஒரு வெளிச்சமாயிருந்தது. ஆபிரகாம் தன்னைச் சுற்றிலுமிருந்த மக்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. தன்னைச் சுற்றியிருந்த தேசங்களின் இராஜாக்களோடு ஒரு தோழமையை அவன் பராமரித்திருந்தான். அவர்களில் சிலரால் அவன் மிகவும் கனப்படுத்தப்பட்டிருந்தான். அவனுடைய உண்மையும் சுயநலமின்மையும், அவனுடைய வீரமும் தயவும், தேவனுடைய குணத்தை எடுத்துக்காட்டின. மெசபத்தோமியாவிலும் கானானிலும் எகிப்திலும் சோதோமின் வாசல்களிலுங்கூட தமது பிரதிநிதியின் வழியாக பரலோகத்தின் தேவன் வெளிப்படுத்தப் பட்டிருந்தார்.PPTam 461.2

    எகிப்தின் மக்களுக்கும் அதோடு தொடர்பு கொண்டிருந்த மற்ற அனைத்து வல்லமையான இராஜ்யங்களுக்கும் தேவன் யோசேப்பின் வழியாக தம்மை வெளிக்காட்டியிருந்தார். எதற்காக எகிப்தியர்களின் நடுவே யோசேப்பை அவ்வளவு உயரமாக உயர்த்த ஆண்டவர் தெரிந்து கொண்டார்? யாக்கோபின் பிள்ளைகளிடம் தமது நோக்கத்தை நிறைவேற்றும்படி அவர் வேறு ஏதாவது வழியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் யோசேப்பை வெளிச்சமாக்க விரும்பி, அரசனின் அரண்மனையில் அவனை நிலை நாட்டி, பரலோகத்தின் பிரகாசம் தூரத்திலும் சமீபத்திலும் சென்றடையச் செய்தார். அவனுடையஞானத்தினாலும் நீதியினாலும் அன்றாட வாழ்க்கையின் தூய்மையினாலும் தயவினாலும் ஜனங்களின் விக்கிரகாராதனைக்காரரான அந்த ஜனங்களின் நன்மைக்கான அர்ப்பணிப்பினாலும் யோசேப்பு கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருந்தான். எகிப்து முழுவதும் நன்றியோடும் புகழ்ச்சியோடும் நோக்கிய அவர்களுக்கு நன்மை செய்தவனில், அந்த புறஜாதி மக்கள் தங்களை சிருஷ்டித்தவரின் அன்பையும் மீட்டவரின் அன்பையும் காணவேண்டியதிருந்தனர். அதைப்போலவே, விரும்பும் அனைவரும் மெய்யான ஜீவனுள்ள தேவனைக் குறித்து கற்றுக்கொள்ளுவதற்கேதுவாக, பூமியின் மாபெரும் இராஜ்யத்தின் சிங்காசனத்தருகில் மோசே என்கிற மனிதன் வழியாக தேவன் ஒரு வெளிச்சத்தை வைத்தார். தேவனுடைய கரம் நியாயத்தீர்ப்பு கொடுக்கும்படியாக அவர்கள் மேல் நீட்டப்படும் முன்பாகவே இந்த அனைத்து வெளிச்சமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.PPTam 461.3

    எகிப்திலிருந்து இஸ்ரவேலை விடுவித்ததில் தேவனுடைய வல்லமையைக் குறித்த அறிவு வெகுதூரத்திற்குப் பரவியிருந்தது. பலமான கோட்டையான எரிகோவின் யுத்த மனிதர்கள் நடுங்கினார்கள். கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்து போயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று. உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர் (யோசுவா 211) என்று ராகாப் கூறினாள். யாத்திரை முடிந்து நூற்றாண்டுகள் கழிந்த பிறகு பெலிஸ்தியர்களின் ஆசாரியர்கள் எகிப்தின் வாதைகளை தங்கள் ஜனங்களுக்கு நினைவூட்டி, இஸ்ரவேலின் தேவனை தடுப்பதற்கெதிராக அவர்களை எச்சரித்திருந்தனர்.PPTam 462.1

    தமது பிரமாணங்களுக்கு கீழ்ப்படிவதினால் அவருடைய தயவைப் பெற்று அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிற விசே ஷமான ஜனமாக்குவதற்காக அல்ல, அவர்கள் வழியாக தம்மை பூமியின் குடிகளுக்கு அறிவிக்கவே தேவன் இஸ்ரவேலை அழைத்து அவர்களை ஆசீர்வதித்து உயர்த்தினார். இதே நோக் கத்தை நிறைவேற்றும் படிக்கே அவர்கள் சுற்றிலுமிருக்கிற விக்கிரகாராதனைக்காரரிடமிருந்து தங்களைத் தனித்து வைக்கவேண்டுமென்று அவர் கட்டளையிட்டிருந்தார். PPTam 462.2

    விக்கிரகாராதனையும் அதைத் தொடர்ந்து வந்த அனைத்து பாவங்களும் தேவனுக்கு அருவருப்பாயிருந்தது. மற்ற தேசங்களோடு கலக்காதிருக்கவும் அவர்களுடைய செய்கைகளின்படி செய்யாமலும் தேவனை மறக்காமலுமிருக்கவும் தம்முடைய ஜனங்களுக்கு அவர் கட்டளையிட்டார். அன்று இருந்ததைப் போலவே இன்றும் தேவனுடைய ஜனங்கள் தூய்மையாக, உலகத்தால் கறைபடாதவர்களாயிருப்பது அவசியம். அதனுடைய ஆவி சத்தியத்திற்கும் நீதிக்கும் எதிராக இருக்கிறதினால் அவர்கள் தங்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் தம்முடைய ஜனங்கள் உலகத்தின் மேல் எந்த செல்வாக்கையும் ஏற்படுத்தாதபடி விசேஷமான சுயநீதியோடு தங்களை உலகத் திலிருந்து மறைத்துக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமல்ல.PPTam 463.1

    தங்களுடைய எஜமானைப்போலவே கிறிஸ்துவின் பின்னடி யார்களும் ஒவ்வொரு காலத்திலும் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கவேண்டும். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் (அதாவது உலகத்திலிருக்கிற வர்களுக்கு) வெளிச்சம் கொடுக்கும். என்று இரட்சகர் கூறினார். கூடவே இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத் 5:14) என்றார். இதைத்தான் ஏனோக்கும், நோவா, ஆபிரகாம், யோசேப்பு மற்றும் மோசேயும் செய்தார்கள். இதைத்தான் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலும் செய்யவேண்டுமென்று தேவன் திட்டமிட்டிருந்தார்.PPTam 463.2

    அவர்களுடைய அவிசுவாசமுள்ள சொந்த தீய இருதயமே சாத்தானால் கட்டுப்படுத்தப்பட்டு தங்களைச் சுற்றிலும் இருந்த ஜனங்கள் மேல் தங்கள் வெளிச்சத்தை வீசுவதற்குப்பதிலாக அதை மறைத்து வைக்க அவர்களை நடத்தியது. அதே அந்த மதவெறி கொண்ட ஆவிதானே புறஜாதிகளின் அநீதியான பழக்கங்களைப் பின்பற்ற அல்லது தேவனுடைய அன்பும் கவனிப்பும் தங்கள் மேல் மாத்திரம் இருக்கிறது என்கிற பெருமையில் தங்களை அடைத்துக்கொள்ள நடத்தியது.PPTam 463.3

    வேதாகமம் மாறாததும் நித்தியமானதும் மற்றும் தற்காலிகமானதும் ஏற்பாடு செய்யப்பட்டதுமான இரண்டு பிரமாணங்களை கொடுக்கிறது. அதேபோல் இரண்டு உடன்படிக்கைகளும் இருக்கின்றன . ஏதேனில் விழுகைக்குப்பின்பு ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவதைக் குறித்த தெய்வீக வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டபோது கிருபையின் உடன்படிக்கை முதலாவது உண்டாக்கப்பட்டது. அனைத்து மனிதருக்கும் இந்த உடன்படிக்கை மன்னிப்பையும், கிறிஸ்துவின் மேலிருக்கிற விசுவாசத்தினால் எதிர்கால கீழ்ப்படிதலுக்கான ஒத்தாசை செய்யும் கிருபையையும் கொடுத்தது. தேவனுடைய பிரமாணங்களில் பற்று கொண்டிருக்கும் நிபந்தனையின் அடிப்படையில், நித்திய ஜீவனையும் அது அவர்களுக்கு வாக்குப்பண்ணியது. இவ்விதமாகவே முற்பிதாக்கள் இரட்சிப்பின் நம்பிக்கையைப் பெற்றிருந்தனர்.PPTam 463.4

    இதே உடன்படிக்கை ஆபிரகாமுக்கு உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் (ஆதி. 22:18) என்ற வாக்குத்தத்தத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த வாக்குத்தத்தம் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டியது. ஆபிரகாம் அவ்வாறாக அதைப் புரிந்து கொண்டிருந்து (கலா. 38,1), பாவங்களின் மன்னிப்பிற்காக கிறிஸ்துவை நம்பியிருந்தான். இந்த விசுவாசமே அவனுக்கு நீ தியாக எண்ணப்பட்டது. ஆபிரகாமோடு பண்ணின் உடன்படிக்கை தேவனுடைய பிரமாணங்களின் அதிகாரத்தையும் பராமரித்திருந்தது. ஆண்டவர் ஆபிரகாமுக்குக் காணப்பட்டு நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு (ஆதி. 17:1) என்று கூறினார். தம்முடைய விசு வாசமுள்ள ஊழியக்காரனைக் குறித்த தேவனுடைய சாட்சி. ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால் (ஆதி. 26:4) என்று இருந்தது. ஆண்டவர் அவனிடம், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும் படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் (ஆதி. 17:7) என்று அறிவித்தார்.PPTam 464.1

    கிறிஸ்துவின் மரணம் வரையிலும் இது உறுதிப்படுத்தப்பட வில்லை . மீட்பின் முதல் பிரதிபலிப்பிலிருந்து தேவனுடைய வாக்குத்தத்தத்தினால் இது உண்டாயிருந்தது. இது விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. என்றாலும் கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்டபோது புது உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டது. தெய்வீக சித்தத்தோடுள்ள இணக்கத்திற்கு மனிதனை மீண்டும் கொண்டு வரவும், தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படியக்கூடிய இடத்தில் அவர்களை வைக்கவும் ஏற்படுத்தப் பட்ட ஏற்பாடான தேவனுடைய பிரமாணமே இந்த உடன்படிக் கையின் அடித்தளமாயிருந்தது.PPTam 464.2

    வேதாகமத்தில் பழைய உடன்படிக்கை என்று அழைக்கப் படுவது, தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் நடுவே சீனாயில் உண்டாக்கப்பட்டு, பலியின் இரத்தத்தினால் உறுதிபண்ணப்பட்டது. பின்னர் ஆபிரகாமிய உடன்படிக்கை கிறிஸ்துவின் இரத்தத்தினால் உறுதி பண்ணப்பட்டு, இரண்டாவது அல்லது புதிய உடன்படிக்கை என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் எந்த இரத்தத்தினால் இது முத்திரிக்கப்பட்டதோ, அது முதல் உடன்படிக்கையின் இரத்தத் திற்குப் பிறகு சிந்தப்பட்டது. புதிய உடன்படிக்கை ஆபிரகாமின் நாட்களிலேயே முறையாக அமைந்திருந்து, பின்னர் அது வாக்குறு தியினாலும் தேவனுடைய ஆணையினாலும் உறுதியாக்கப்பட்டது என்கிற உண்மை சான்று பகருகிறது.PPTam 465.1

    இரண்டு மாறாத விசேஷங்களினால் எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். எபி. 6:18.PPTam 465.2

    ஆபிரகாமிய உடன்படிக்கை மீட்பின் வாக்குத்தத்தத்தைக் கொண்டிருக்குமானால் ஏன் மற்றொரு உடன்படிக்கை சீனாயில் உண்டு பண்ணப்பட்டது? அடிமைத்தனத்தினால் ஜனங்கள் மிக அதிக அளவு தேவனையும் ஆபிரகாமிய உடன்படிக்கையின் கொள்கைகளையும் குறித்த அறிவை இழந்திருந்தனர். அவர்களை எகிப்திலிருந்து விடுவித்ததில் அவர்கள் தம்மை நேசிக்கவும் நம்பவும் தக்கதாக, தமது வல்லமையையும் கிருபையையும் வெளிப்படுத்த தேவன் தேடியிருந்தார். தங்களுடைய உதவியற்ற நிலையையும் தெய்வீக உதவியின் அவசியத்தையும் உணருவதற்கேதுவாக அவர் அவர்களை சிவந்த சமுத்திரத்திற்கு எகிப்தியர் பின்தொடர் தாங்கள் தப்பிப்பது சாத்தியமில்லை என்று தோன்றிய இடத்திற்குக் கொண்டுவந்தார். பின்னர் அவர்களுக்கான விடுதலையை நடப்பித்தார். இவ்வாறு அவர்கள் தேவன் மேலிருக்கும் நன்றியினாலும் அன்பினாலும், தங்களுக்கு உதவி செய்யும் அவருடைய வல்லமையின் மேலிருக்கும் நம் பிக்கையினாலும் நிரப்பப்பட்டனர். தற்காலிக அடிமைத்தனத் திலிருந்து அவர்களை விடுவித்தவரைப்போல் அவர் அவர்களை தம்மோடு கட்டியிருந்தார்.PPTam 465.3

    எனினும் இன்னும் அதிகமான சாத்தியங்கள் அவர்கள் மனங்களில் பதிக்கப்பட வேண்டும். விக்கிரகாராதனைக்காரரும் சீர்கேடுமான ஜனங்களின் நடுவே பிழைத்திருந்ததால், தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்தும் தங்களுடைய சொந்த இருதயத்தின் பாவ நிலையைக் குறித்தும் தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய தங்களில் இருக்கும் இயலாமையைக் குறித்தும் ஒரு இரட்சகரின் அவசியம் தங்களுக்கு இருப்பதைக் குறித்தும் சரியான எண்ணம் அவர்களுக்கு இல்லாதிருந்தது. இவை அனைத்தும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.PPTam 465.4

    தேவன் அவர்களை சீனாய்க்குக் கொண்டுவந்தார். தமது மகிமையை அவர்களுக்கு வெளிக்காட்டினார். இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் (யாத். 195, 6) என்கிற கீழ்ப் படிதலின் நிபந்தனையின் பேரில் மாபெரும் ஆசீர்வாதங்களைக்குறித்த வாக்குத்தத்தங்களோடு தமது பிரமாணத்தை அவர்களுக்குக் கொடுத்தார். ஜனங்கள் தங்கள் சொந்த இருதயத்தின் பாவ நிலையையும், கிறிஸ்து இல்லாதபோது தேவனுடைய பிரமாணத்தைக் கைக்கொள்ளுவது இயலாத காரியம் என்பதையும் உணராதவர்களாக, தேவனுடனான உடன்படிக்கையில் உடனடியாக நுழைந்தனர். தங்களுடைய நீ தியை ஸ்தாபிக்க முடியும் என்ற உணர்வில் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் (யாத். 24:7) என்று அவர்கள் அறிவித்தனர். பிரமாணம் பயங்கரமான மாட்சி மையோடு அறிவிக்கப்படுகிறதை அவர்கள் கண்டு, மலையின் முன்பு பயத்தினால் நடுங்கினர். எனினும் தேவனுடனான தங்கள் உடன்படிக்கையை முறித்து வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை வணங்கும்படியாக தாழவிழுந்தபோது, சில வாரங்கள் மாத்திரமே கடந்திருந்தது. தாங்கள் உடைத்துப்போட்ட உடன்படிக்கையின் வழியாக தேவனுடைய தயவை அவர்கள் எதிர்பார்க்கக் கூடாதிருந்தனர். தங்களுடைய பாவ நிலையையும் மன்னிப்பின் அவசியத்தையும் கண்ட அவர்கள், ஆபிரகாமிய உடன்படிக்கையில் வெளிப்படுத்தப்பட்டு, பலியின் காணிக்கைகளினால் நிழலிடப் பட்டிருந்த ஒரு இரட்சகரின் அவசியத்தை உணரும்படியாக கொண்டு வரப்பட்டனர். இப்போது விசுவாசத்தினாலும் அன்பினாலும் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவிக்கிற தேவனோடு கட்டப்பட்டனர். இப்போது புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் போற்ற அவர்கள் ஆயத்தமாயினர்.PPTam 466.1

    பழைய உடன்படிக்கையின் நிபந்தனை : கீழ்ப்படிந்து பிழைத்திரு என்று இருந்தது. அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான் (எசே . 20:11; லேவி. 18:5). ஆனால், இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன். (உபா. 27. 26). புதிய உடன்படிக்கை மேலான வாக்குத்தத்தங்களின் மேல் பாவங்களை மன்னித்து, இருதயத்தைப் புதுப்பித்து, தேவனுடைய பிரமாணத்தின் கொள்கைகளுக்கு இசைவாக அதைக் கொண்டு வரும் தேவ கிருபையைக் குறித்த வாக்குத்தத்தங்களின் மேல் ஸ்தாபிக் கப்பட்டிருந்தது. அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது, நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி,... நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன். எரே. 31:33, 34.PPTam 467.1

    கற்பலகையின் மேல் பொறிக்கப்பட்டிருந்த அதே பிரமாணம் இருதயப்பலகையின் மேல் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டது. நம்முடைய சொந்த நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக கிறிஸ்துவின் நீதியை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம். அவருடைய இரத்தம் நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிறது. அவருடைய கீழ்ப்படிதல் நமக்காக ஏற்றுக்கொள்ளப் படுகிறது. பின்னர் பரிசுத்த ஆவியினால் புதுப்பிக்கப்பட்ட இருதயம் ஆவியின் கனிகளை பிறப்பிக்கும். கிறிஸ்துவின் கிருபையினால் நம்முடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிற தேவனுடைய பிரமாணங்களுக்கு நாம் கீழ்ப்படிந்து பிழைக்கலாம். கிறிஸ்துவின் ஆவியை பெற்றவர்களாக அவர் நடந்தபடியே நாமும் நடக்கலாம். தீர்க்கதரிசியின் வழியாக அவர் தம்மைக் குறித்து, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது (சங். 40:8) என்று அறிவித்தார். மனிதர்களுக்கு நடுவே இருந்தபோது அவர்: பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால், அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை (யோவான் 8:29) என்று கூறினார்.PPTam 467.2

    பரிசுத்த உடன்படிக்கையின் கீழ் விசுவாசத்திற்கும் பிரமாணத்திற்கும் இருக்கிற உறவை அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாகக் கூறுகிறான். விசுவாசத்தினாலே நீதிமான்களாக் கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப் பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலை நிறுத்துகிறோமே . அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை - அது மனிதனை நீதிமானாக்கக்கூடாது. ஏனெனில் அவனுடைய பாவ இயல்பில் அவனால் பிரமாணத்தைக் கைக்கொள்ளக் கூடாது. தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறை வேறும் படிக்கே அப்படிச் செய்தார் (ரோமர் 5:1;3:31; 8:3, 4) என்று கூறுகிறார்.PPTam 467.3

    வெவ்வேறு காலங்களில் மனிதரின் தேவைகளைச் சந்திக்கும்படி வெவ்வேறு விதமான வளர்ச்சியும் அவருடைய வல்லமையின் வெளிக்காட்டல் களும் இருந்தபோதும், தேவனுடைய கிரியை அனைத்துக் காலத்திலும் ஒன்றாகவே இருக்கிறது. முதல் சுவிசேஷ வாக்குத்தத்தத்தில் துவங்கி, முற்பிதாக்கள் யூதர்களின் காலங்களைத் தாண்டி. இப்போதிருக்கிற நேரம் வரையிலும் மீட்பின் திட்டத்தில் தேவனுடைய நோக்கங்கள் படிப்படியாக திறக்கப்பட்டிருக்கின்றன. யூதர்களுடைய சட்டங்களின் சடங்குகளிலும்PPTam 468.1

    ஆராதனைகளிலும் அடையாளப்படுத்தப்பட்டிருந்த அடையாளப்படுத்தப்பட்டிருந்த இரட்சகரே சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறவர். அவருடைய தெய்வீக வடிவத்தை மூடியிருந்த மேகங்கள் பின்சுருள், பனிகளும் நிழல்களும் மறைந்து போக, உலகத்தின் மீட்பரான இயேசு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்.PPTam 468.2

    சீனாயிலிருந்து பிரமாணத்தை அறிவித்து, சடங்குகளைக் குறித்த கட்டளைகளை மோசேயிடம் கொடுத்தவரே, மலைப்பிரசங்கத்தில் பேசினவர். தேவனுடைய அன்பைக் குறித்த மாபெரும் கொள்கைகள், நியாயப்பிரமாணத்திற்கும் தீர்க்கதரிசனங்களுக்கும் அஸ்திபாரமாக அவர் வைத்திருந்த தேவன் மேலிருக்கும் அன்பின் மாபெரும் கொள்கைகள், இஸ்ரவேலே, கேள் : நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக (உபா 6:4:5) உன்னில் நீ அன்பு கூருவது போல் பிறனிலும் அன்புகூருவாயாக (லேவி. 1918) என்று எபிரெய மக்களுக்கு மோசேயின் வழியாக அவர் பேசினவைகளின் வலியுறுத்தலே. தெய்வத்தின் இரண்டு ஆட்சி முறையிலும் ஆசிரியர் ஒருவரே. தேவனுடைய கோரிக்கைகளும் ஒன்றே. அவருடைய அரச ரங்கத்தின் கொள்கைகளும் அதுவே . அனைத்தும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து புறப்படுகின்றன. அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை . யாக். 1:17.PPTam 468.3