Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    34 - பன்னிரெண்டு ஒற்றர்கள்

    மலையை விட்டுப் புறப்பட்ட பதினோரு நாட்களுக்குப்பின்பு எபிரெய சேனை வாக்குத்தத்த நாட்டின் எல்லைகளுக்குச் சமீபமாயிருந்த பாரான் வனாந்தரத்தின் காதேசில் பாளயமிறங்கியிருந்தது. இங்கே தேசத்தைக் குறித்த விவரம் சேகரிப்பதற்காக வேவுகாரர்கள் அனுப்பப்படும் படியாக ஜனங்கள் முன்மொழிந்தார்கள். இந்தக் காரியம் மோசேயினால் ஆண்டவர் முன்வைக்கப்பட, இந்த நோக்கத்திற்காக ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவர்களிலும் ஒருவர் தெரிந்துகொள்ளப்பட வேண்டும் என்னும் கட்டளையின்படி அனுமதி வழங்கப்பட்டது. நடத்தப்பட்டபடி மனிதர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். தேசம் எப்படிப்பட்டதென்றும் அதன் அமைப்பும் இயற்கை ச ராத்தியங்களும் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம் பேரோ அநேகம்பேரோ என்றும் பார்க்கவும், அந்த தேசத்தின் நிலம் எப்படிப்பட்டது என்பதையும் அதன் வளப்பையும் கவனித்து, அந்த தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவரும்படியும் மோசே அவர்களை அனுப்பினான். அவர்கள் சென்று முழு தேசத்தையும் ஆராய்ந்தனர். தென் எல்லையில் துவங்கி வட எல்லை வரையிலும் முன்னேறி முழு தேசத்தையும் சோதித்தனர். நாற்பதுPPTam 489.1

    நாட்கள் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர். இஸ்ரவேல் மக்கள் உயர்ந்த நம்பிக்கைகளை போற்றியிருந்து, மிகவும் ஆர்வமான எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். வேவுகாரர்களின் வருகை கோத்திரத்திலிருந்து கோத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டு, களிப்போடு அறிவிக்கப்பட்டது. மேற்கொண்ட பயப்படத்தக்க பயணத்தின் ஆபத்துகளுக்கு தப்பி பத்திரமாக வந்த தூதுவர்களை சந்திக்கும்படி ஜனங்கள் விரைந்தனர். வேவுகாரர்கள் நிலத்தின் செழிப்பைக் காண்பிக்கும்படி பழ மாதிரிகளை கொண்டு வந்தனர். அது திராட்சைப்பழ அறுப்பின் காலமாயிருந்தது. அவர்கள் திராட்சைக்குலை ஒன்றை கொண்டுவந்தனர். அது மிகப் பெரியதாக இருந்ததினால் இரண்டு நபர்களுக்கு நடுவே சுமக்கப்பட வேண்டியதிருந்தது.PPTam 490.1

    அங்கு ஏராளமாக விளைந்த அத்திப்பழங்களையும் மாதுளம் பழங்களையும் கொண்டுவந்திருந்தனர்.PPTam 490.2

    அந்த நல்ல தேசத்தை சுதந்தரிக்கப்போகிறதினால் ஜனங்கள் களிகூர்ந்து, மோசேயிடம் அறிக்கை கொண்டுவரப்பட்ட போது ஒரு வார்த்தையும் தங்களிடமிருந்து தப்பக்கூடாதென்று மிகவும் உன்னிப்பாக கவனித்தனர். நீர் எங்களை அனுப்பின் தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம் அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான், இது அதினுடைய கனி என்று வேவுகாரர்கள் கூறினார்கள். ஜனங்கள் மிகவும் உற்சாகமாயிருந்தனர். தேவனுடைய சத்தத்திற்கு உடனடியாகக் கீழ்ப்படிந்து அந்த தேசத்தை சுதந்தரிக்க மக்கள் ஆர்வத்தோடிருந்தனர். ஆனால் தேசத்தின் அழகையும் செழிப்பையும் விவரித்த பின், இஸ்ரவேலர்கள் கானானை வெற்றிகொள்ளும்படி செல்வார்களானால் அவர்கள் முன் இருக்கப்போகிற கஷ்டங்களையும் ஆபத்துகளையும் இரண்டு பேரைத் தவிர மீதி பத்து பேரும் பெரிதுபடுத்திக் கூறினார்கள். அவர்கள் அந்த நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்த வல்லமையான ஜாதிகளைக் கணக்கிட்டு, பட்டணங்கள் மிகப் பெரியதும் சுவர்களைக் கொண்டதாகவும், அங்கே வசித்திருந்த ஜனங்கள் பலசாலிகள் எனவும், அதை வெற்றிகொள்ளுவது கூடாதகாரியம் எனவும் கூறினார்கள். அங்கே ஆனாக்கின் புத்திரராகிய இராட்சதர்களைக் கண்டதாகவும், அந்த தேசத்தை சுதந்தரிப்பதைக் குறித்து சிந்திப்பது பயனற்றது என்றும் அறிவித்தார்கள்.PPTam 490.3

    இப்போது காட்சி மாறியது. வேவுகாரர், சாத்தானால் உந்தப்பட்டு அதைரியத்தினால் நிறைந்திருந்த அவிசுவாசமுள்ள இருதயத்தின் உணர்வுகளை விவரித்தபோது, நம்பிக்கையும் தைரியமும் கோழைத்தனத்திற்கும் விரக்திக்கும் இடங்கொடுத்தது. அவர்களுடைய அவிசுவாசம் சபையார் மேல் ஒரு இருண்ட நிழலை வருவித்தது. தெரிந்கொள்ளப்பட்ட ஜனத்திற்காக பல வேளைகளில் வெளிக்காட்டப்பட்டிருந்த தேவனுடைய வல்லமை மறக்கப்பட்டது. ஜனங்கள் சிந்திக்கக் காத்திருக்கவில்லை. தங்களை இவ்வளவு தூரம் நடத்தி வந்தவர் நிச்சயமாக தங்களுக்கு தேசத்தைக் கொடுப்பார் என்று அவர்கள் சிந்திக்கவில்லை ஒடுக்குகிறவர்களிடமிருந்து தேவன் அவர்களை எவ்வளவு அதிசயமாக விடுவித்தார் என்பதையும், பின்தொடர்ந்து வந்த பார்வோனின் சேனைகளை சமுத்திரத்தின் வழியாக பாதையை ஏற்படுத்தி அழித்தார் என்பதையும் அவர்கள் தங்கள் மனதிற்குக் கொண்டு வரவில்லை. தேவனை தங்கள் கேள்வியிலிருந்து அப்புறப்படுத்தி, தங்கள் புயபலத்தையே முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும் என்பது போல நடந்து கொண்டார்கள்.PPTam 490.4

    தங்கள் அவிசுவாசத்தில் தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்தி, அவர்களை இதுவரை பத்திரமாக நடத்திவந்த கரத்தை நம்பாது போனார்கள். மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முன்னர் செய்த முறு முறுக்கும் தவறை மீண்டும் செய்தார்கள். இதுதான் எங்களுடைய நம்பிக்கையின் முடிவு ; சுதந்தரிக்கும்படி எகிப்திலிருந்து நாங்கள் இவ்வளவு தூரம் பிரயாணப்பட்டுவந்த தேசம் இதுதான் என்று கூறினார்கள். மக்களை வஞ்சித்து, இஸ்ரவேலின் மேல் பிரச்சனையைக் கொண்டுவந்ததாக தங்கள் தலைவர்களை அவர்கள் குற்றப்படுத் தினார்கள்.PPTam 491.1

    தங்களுடைய ஏமாற்றத்திலும் விரக்தியிலும் ஜனங்கள் ஆற்றக்கூடாதவர்களானார்கள். வேதனையின் புலம்பல் எழும்பி குழம்பியிருந்த முறுமுறுக்கும் தொனிகளோடு கலந்தது. காலேப் சூழ்நிலையை சிந்தித்தவனாக தேவனுடைய வார்த்தைகளுக்கு ஆதரவாக நிற்கும் தைரியங்கொண்டு, விசுவாசமில்லாத தனது தோழர்களின் செல்வாக்கை மாற்றும்படி தன்வல்லமைக்குள்ளிருந்த அனைத்தையும் செய்தான். ஒரு நொடி ஜனங்கள் நல்ல தேசத்தைக்குறித்த தைரியமான வார்த்தைகளைக் கவனிக்கும்படி மெளனமாயினர். கானானியர்கள் உயரமும் வல்லவர்களு மாயிருந்தார்கள் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தற்கு முரணாக அவன் பேசவில்லை. தேவன் தேசத்தை இஸ்ரவேலுக்கு வாக்குப் பண்ணியிருக்கிறார். நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம், நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்று துரிதப்படுத்தினான்.PPTam 491.2

    ஆனால் அவனை இடைமறித்த பத்து பேரும் முன்பு கூறியதைக் காட்டிலும் தடங்கல்களை இன்னமும் பெரிதுபடுத்திக் காண்பித்தனர். நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது, அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள்; .... நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று அறிவித்தனர்.PPTam 492.1

    இந்த மனிதர்கள் தவறான பாதையில் நுழைந்து, காலேப், யோசுவா மோசேக்கு எதிராகவும் தேவனுக்கு எதிராகவும் பிடிவாதமாக தங்களை நிறுத்தினர். ஒவ்வொரு முன்னேற்றப்படியும் அவர்களை இன்னும் பிடிவாதமுள்ளவர்களாக்கிற்று. கானானை சுதந்தரிக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சியையும் அதைரியப்படுத்த அவர்கள் தீர்மானித்திருந்தனர். தங்களுடைய அழிவான செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கென்று உண்மையை திரித்து அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் என்றனர். அது ஒரு தீய அறிக்கை மாத்திரமல்ல, பொய்யாகவும் இருந்தது. அது தனக்குத்தானே முரண்பட்டிருந்தது. அந்த தேசம் பயனுள்ளதும் செழிப்பானது மென்றும் ஜனங்கள் இராட்சதர்களைப்போல் இருந்தார்களென்றும் அறிவித்திருந்தனர், ஒருவேளை அதனுடைய தட்பவெப்பம் ஆரோக்கியமற்றதும் அந்த தேசம் அதன் குடிகளைத் தின்று போடுகிறது மாயிருந்தால், இவைகளெல்லாம் கூடாத காரியங்களாயிருக்கும். ஆனால் மனிதர் தங்கள் இருதயங்களை அவிசுவாசத்திற்கு ஒப்புக்கொடுத்து சாத்தானுடைய கட்டுப் பாட்டின் கீழ் வைக்கும் போது, அவன் எவ்வளவு தூரம் அவர்களை நடத்துவான் என்பதை எவரும் சொல்லக்கூடாது.PPTam 492.2

    அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம் பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுது கொண்டிருந்தார்கள். கிளர்ச்சியும் வெளிப்படையான கலகமும் விரைவாகத் தொடர்ந்தது. சாத்தான் முழு கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தான். ஜனங்கள் அடிப்படை அறிவை இழந்தவர்களைப் போலக் காணப்பட்டனர். தேவன் தங்களுடைய துன்மார்க்கப் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதையும், மேக ஸ்தம்பத்தினால் சூழப்பட்டு, அவர்களுடைய உக்கிரத்தின் பயங்கரமான வெளிப்பாட்டை சமூகத்தின் தூதனானவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் மறந்து அவர்கள் மோசேயையும் ஆரோனையும் சபித்தார்கள். தங்களுடைய கசப்பில் : எகிப்து தேசத்திலே செத்துப்போனோ மானால் நலமாயிருக்கும், இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம் என்று அழுதார்கள். பின்னர் அவர்களுடைய உணர்வுகள் தேவனுக்கெதிராக எழும்பியது. நாங்கள் பட்டயத்தால் மடியும் படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும், பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். பின்பு அவர்கள் : நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப் போவோம் வாருங்கள் என்றார்கள். இவ்விதமாக அவர்கள் மோசேயை மாத்திரமல்ல, தேவனையும் சுதந்தரிக்கக்கூடாத இடத்தை அவர்களுக்கு வாக்குப்பண்ணின் வஞ்சகத்திற்காக குற்றப்படுத்தினர். சர்வவல்லவரின் வல்லமையான கரத்தினால் எங்கேயிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்களோ அந்த அவர்கள் துன்பப்பட்டு அடிமையாயிருந்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பி நடத்திச் செல்லும் ஒரு தலைவனை நியமிக்கும் தூரத்திற்குச் சென்ற னர்.PPTam 492.3

    ஜனங்களை அவர்களுடைய வெறித்தனமான உணர்ச்சி மிகுந்த நோக்கத்திலிருந்து திருப்ப என்ன செய்வது என்பதை அறியாதவர்களாக தாழ்மையிலும் துயரத்திலும் மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்கு முன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். கலகத்தை அமைதிப்படுத்தும்படி காலேபும் யோசுவாவும் முயற்சித்தார்கள், துக்கம் மற்றும் கோபத்தின் அடையாளமாக தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு அவர்கள் ஜனங்கள் நடுவே ஓடினார்கள், அவர்களுடைய குரல்கள் புலம்பலின் புயலுக்கும் கலகத்தின் துயரத்திற்கும் மேலாக கேட்கப்பட்டது. நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டு போய், பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள், அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை என்றார்கள்.PPTam 493.1

    கானானியர்கள் தங்கள் அக்கிரமத்தின் அளவை நிரப்பியிருந்தனர். ஆண்டவர் அவர்களை இனி ஒருபோதும் பொறுத்திருக்க மாட்டார். அவர்களுடைய பாதுகாப்பு அப்புறப்படுத்தப்பட்டிருக்க, அவர்கள் இலகுவான இரையாவார்கள். தேவனுடைய உடன்படிக்கையினால் தேசம் இஸ்ரவேலுக்கு ஒப்புக்கொடுக் கப்பட்டிருந்தது. ஆனால் அவிசுவாசமுள்ள வேவுகாரர்களின் பொய் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் வழியாக முழு சபையும் ஏமாற்றப்பட்டது. துரோகிகள் தங்களுடைய வேலையை முடித்திருந்தார்கள். ஒருவேளை இரண்டு மனிதர்கள் மாத்திரம் தீய அறிக்கையை கொண்டுவந்திருந்து, பத்துப் பேர் தேவனுடைய நாமத்தினாலே அந்த தேசத்தை சுதந்தரித்துக்கொள்ள அவர்களை தைரியப்படுத்தியிருந்தாலும் அவர்களுடைய துன்மார்க்க அவிசு வாசத்தினால் பத்து பேரைக் காட்டிலும் அந்த இருவருடைய ஆலோசனைக்குத்தான் முன்னுரிமை கொடுத்திருப்பார்கள். ஆனால் பத்துப் பேர் கலகத்தின் பக்கம் நின்றிருக்க, இருவர் மாத்திரமே சரியானதற்காக வாதாடிக்கொண்டிருந்தார்கள்.PPTam 494.1

    உண்மையற்ற வேவுகாரர்கள் காலேபிற்கும் யோசுவாவிற்கும் பலமாக கண்டனம் தெரிவித்தனர். அவர்களைக் கல்லெறியும் படியாக கூக்குரல் உயர்ந்தது. பைத்தியம் பிடித்திருந்த அந்தக் கூட்டம் உண்மையான மனிதர்களைக் கொல்லும் படியாக ஆயுதங்களை எடுத்துக்கொண்டது. அவர்கள் பயித்தியக்காரரின் கூக்குரலோடு முன்விரைந்தனர். சடிதியாக அவர்கள் கைகளிலிருந்த கற்கள் கீழேவிழ, ஒரு அமைதி அவர்கள் மேல் தங்க, அவர்கள் பயத்தினால் நடுங்கினார். அவர்களுடைய கொலைத்PPTam 494.2

    திட்டங்களை நிறுத்தும் படி தேவன் இடைப்பட்டிருந்தார். அவருடைய சமூகத்தின் மகிமை எரியும் வெளிச்சத்தைப்போல் கூடாரத்தை பிரகாசிப்பித்தது. ஆண்டவருடைய அடையாளத்தை அனைத்து மக்களும் பார்த்தனர். அவர்களைக் காட்டிலும் வல்லமையான ஒருவர் தம்மை வெளிப்படுத்தினார். தங்களுடைய எதிர்ப்பை தொடர் எவருக்கும் தைரியமில்லாது போயிற்று. தவறான செய்தி கொண்டு வந்த வேவுகாரர்கள் திகிலடைந்த வர்களாக பதுங்கி, மூச்சிரைக்க தங்கள் கூடாரங்களுக்கு ஓடினர்.PPTam 494.3

    மோசே எழுந்து இப்போது கூடாரத்திற்குள் பிரவேசித்தான். ஆண்டவர் அவனிடம் : நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்று அறிவித்தார். ஆனால் மோசே மீண்டும் ஜனங்களுக்காக மன்றாடினான். அவர்களை அழித்துப்போட்டு அவனை வல்லமையான ஜாதியாக்குவதை மோசேயினால் ஒப்புக்கொள்ள முடியாது. தேவனுடைய கிருபையிடம் முறையிட்டு கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர்....... என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக . உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டது முதல் இந்நாள் வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித் தருளும் என்று கூறினான்.PPTam 494.4

    உடனடி அழிவிலிருந்து இஸ்ரவேலை தப்பவிடுவதாக தேவன் வாக்குக் கொடுத்தார். ஆனால் அவர்களுடைய அவிசு வாசத்தினாலும் கோழைத்தனத்தினாலும் அவர்களுடைய சத் துருக்களை கீழ்ப்படுத்த அவர் தமது வல்லமையை வெளிக்காட்ட முடியாது. எனவே ஒரே பாதுகாப்பான வழியாக, சிவந்த சமுத்திரத்தை நோக்கித் திரும்பும்படி தம்முடைய கிருபையினால் அவர்களுக்குக் கூறினார்.PPTam 495.1

    தங்கள் கலகத்தில் ஜனங்கள்: இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம் என்று அறிவித்திருந்தனர். இப்போது அவர்களும் ஜெபம் பதிலளிக்கப்பட்டது. ஆண்டவர்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும், உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்;நீங்கள் அசட்டைபண்ணின் தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள் என்று கூறினார். காலேபைக் குறித்து : என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றி வந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றார். வேவுகாரர்கள் தங்கள் பிரயாணத்தில் நாற்பது நாட்கள் செலவளித்தது போல இஸ்ரவேலின் சேனை வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் அலைய வேண்டும்.PPTam 495.2

    தெய்வீக தீர்மானத்தை மோசே ஜனங்களுக்குத் தெரியப் படுத்தின போது அவர்களுடைய மூர்க்கம் துக்கமாக மாறியது. தங்களுக்கு வந்த தண்டனை நியாயமானது என்று அறிந்தனர். உண்மையற்ற பத்து வேவுகாரர்களும் தெய்வீகமாக வாதையினால் அடிக்கப்பட, அனைத்து இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாகவும் அழிந்து போனார்கள். அவர்களுடைய முடிவில் ஜனங்கள் தங்கள் சொந்த அழிவைப் பார்த்தார்கள்.PPTam 496.1

    இப்போது தங்களுடைய பாவ நடக்கையைக் குறித்து மெய்யாகவே மனந்திரும்புவது போல் காணப்பட்டார்கள். ஆனால் தங்களுடைய நன்றியின்மையையும் கீழ்ப்படியாமையை யுங்குறித்த உணர்வினால் வருத்தப்படாது, தங்களுடைய தீமையான வழியின் விளைவிற்காக வருந்தினார்கள். ஆண்டவர் தம்முடைய கட்டளையில் இறங்கிவராததைக் கண்டபோது, அவர் களுடைய சுயசித்தம் மீண்டும் எழும்ப, தாங்கள் வனாந்தரத்திற்கு திரும்பிப் போகமாட்டோம் என்று அறிவித்தார்கள். தங்களுடைய சத்துருக்களின் தேசத்திலிருந்து திரும்பிச் செல்ல கொடுத்த கட்டளையில், அவர்களுடைய ஒப்படைப்பை தேவன் சோதித்து, அது உண்மையானது அல்ல என்று நிரூபித்தார். தங்களுடைய அவசரமான உணர்வுகள் தங்களைக் கட்டுப்படுத்த அனுமதித் ததிலும், தேவனுக்கு கீழ்ப்படியும் படி நெருக்கினவர்களை கொலை செய்யத் தேடினதிலும் ஆழமாக பாவம் செய்திருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் பயங்கரமான தவறு செய்ததையும் அதனுடைய விளைவு தங்களுக்கு பேரழிவாக இருக்கும் என் பதையும் கண்டதினால் தான் பயப்பட்டனர். அவர்களுடைய இருதயம் மாறியிருக்கவில்லை . இப்படிப்பட்ட கலகம் ஏற்பட்ட தற்கு ஒரு சாக்குப்போக்கு மாத்திரமே அவர்களுக்குத் தேவையாயிருந்தது. தேவனுடைய அதிகாரத்தினால் மோசே திரும்பி வனாந்தரத்திற்குச் செல்லும்படி கட்டளையிட்டபோது இது தன்னைக் காண்பித்தது.PPTam 496.2

    இஸ்ரவேல் நாற்பது வருடங்களுக்கு கானானிற்குள் நுழையக் கூடாது என்ற ஆணை மோசேக்கும் ஆரோனுக்கும் காலேபிற்கும் யோசுவாவிற்கும் கசப்பான ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் எந்த ஒரு முறுமுறுப்புமின்றி தெய்வீக தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் தேவன் தங்களோடு நடந்து கொண்ட தைக்குறித்து குற்றப்படுத்தி நாங்கள் எகிப்திற்குத் திரும்புவோம் என்று அறிவித்தவர்கள், தாங்கள் தள்ளியிருந்த ஆசீர்வாதங்கள் தங்களைவிட்டு எடுக்கப்பட்டபோது, அழுது அதிகமாக துக்கித்தார்கள். அவர்கள் காரணமே இல்லாதபோது குற்றப்படுத்தினார்கள். இப்போது தேவன் அவர்களுக்கு அழுவதற்கு காரணம் கொடுத்தார். தங்களுடைய பாவங்கள் தங்கள் முன் உண்மையாக வைக்கப்பட்டபோது அதற்காக துக்கித்திருப்பார்களானால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்காது. ஆனால் அவர்கள் தண்டனைக் காக துக்கித்தார்கள். அவர்களுடைய துக்கம் மனவருத்தத்தினால் உண்டானதல்ல, தங்கள் தீர்ப்பைத் திருப்ப அவர்களால் கூடாது.PPTam 496.3

    அந்த இரவு புலம்பலில் செலவிடப்பட்டது. ஆனால் காலையில் ஒரு நம்பிக்கை வந்தது. தங்களுடைய கோழைத்தனத்திலிருந்து தங்களை மீட்க அவர்கள் தீர்மானித்தனர். முன்சென்று தேசத்தை எடுத்துக்கொள்ளும்படி ஆண்டவர் அவர்களை அழைத்தபோது, அதை மறுத்தனர். இப்போது திரும்பிச் செல்லும்படியாக அவர் கட்டளையிட்டபோது, அதே போன்று கலகம் செய்தனர். தேசத்தைப் பிடித்து சுதந்தரித்துக்கொள்ள அவர்கள் தீர்மானித்தனர். ஒருவேளை தேவன் அவர்களுடைய வேலையை ஏற்றுக்கொண்டு, அவர்களைக்குறித்த தம்முடைய நோக்கத்தை மாற்றிக்கொள்ளுவார்.PPTam 497.1

    தாம் நியமித்திருந்த நேரத்தில் தேசத்திற்குள் நுழைவதை அவர்களுடைய வாய்ப்பாகவும் கடமையாகவும் தேவன் வைத்திருந்தார். ஆனால் மனதார நெகிழ்ந்ததினிமித்தம் அந்த அனுமதி திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது . கானானிற்குள் நுழைய அவர்களைத் தடுத்ததின் வழியாக சாத்தான் தன் நோக்கத்தை அடைந்தான். தேவன் கோரியிருந்தபோது செய்ய மறுத்திருந்த அதே காரியத்தை, தெய்வீகம் தடுத்திருந்தபோது செய்யும் படியாக அவன் அவர்களை நெருக்கினான், இவ்வாறாக, இரண்டாம் முறையும் அவர்களை கலகத்திற்குள் நடத்தினதின் வழியாக இந்த மாபெரும் வஞ்சகன் வெற்றியடைந்தான். தேசத்தை சுதந்தரிப்பதில் தங்களுடைய முயற்சிகளோடு தேவனுடைய வல்லமை செயல்படுவதை அவர்கள் நம்பாதிருந்தனர். இப்போதோ, தெய்வீக உதவி இல்லாமல் தங்களுடைய சொந்த பலத்தினாலேயே அந்த வேலையைச் செய்யத் துணிந்தனர். கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ் செய்தோம், நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம் பண்ணுவோம் (உபா. 1:41) என்று அழுதனர்.PPTam 497.2

    மீறுதலினால் அவர்கள் பயங்கரமாக குருடாகியிருந்தனர். முன்சென்று யுத்தம் செய்யுங்கள் என்று ஆண்டவர் அவர்களுக்கு ஒருபோதும் கட்டளையிடவில்லை. தமது கட்டளைகளுக்கு கண்டிப்பாக கீழ்ப்படிவதின் வழியாகவே அன்றி, யுத்தத்தினால் அந்த தேசத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவருடைய நோக்கமுமல்ல.PPTam 497.3

    அவர்களுடைய இருதயங்கள் மாறாதிருந்த போதும் வேவுகாரர்களின் அறிவிப்பினால் உண்டான தங்களுடைய பாவத்தையும் மதியீனத்தையும் அறிக்கை செய்யும்படியாக ஜனங்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர். தாங்கள் அவசரமாக வீசி யெறிந்திருந்த ஆசீர்வாதங்களின் மதிப்பை இப்போது கண்டனர். தங்களுடைய சொந்த அவிசுவாசமே கானானிலிருந்து தங்களை வெளியே அடைத்தது என்று அறிக்கை செய்தனர். தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார் என்று மிகத் தீமையாக தாங்கள் குற்றப்படுத்தின தேவனிடமல்ல, தங்கள் மேலேயே குற்றம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு, நாங்கள் பாவஞ் செய்தோம் என்று கூறினார்கள். உண்மையான மன வருத்தத்தினால் இந்த பாவ அறிக்கை வராதிருந்தபோதும், அவர்களோடு இடைப்பட்டதிலிருந்த தேவனுடைய நீதியை அது எடுத்துக்காட்டியது.PPTam 498.1

    அவருடைய நீதியை ஒப்புக்கொள்ளும்படி மனிதர்களை கொண்டுவந்ததின் வழியாக தம்முடைய நாமத்தை மகிமைப் படுத்தின் அதே முறையில் ஆண்டவர் இன்னமும் கிரியை செய்கிறார், அவரை நேசிக்கிறதாக அறிக்கை செய்கிறவர்கள் அவருடைய ஏற்பாடுகளைக் குறித்து முறையிட்டு, அவருடைய வாக்குத்தத்தங்களை பின்தள்ளிசோதனைகளுக்கு ஒப்புக்கொடுத்து தேவனுடைய நோக்கத்தை தோற்கடிக்க தீய தூதர்களோடு இணைந்துக்கொள்ளும் போது, அவர்கள் மெய்யாக மனந்திரும்பா திருந்தபோதும், பாவத்தைக்குறித்து உணர்த்தப்பட்டு, தங்களுடைய வழியின் துன்மார்க்கத்தை ஒப்புக்கொள்ள நெருக்கப்பட்டு, தங்களோடு இடைப்பட்டதில் தேவனுடைய நீதியையும் நன் மையையும் ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படக்கூடிய இடங்களில் அவர்களை கொண்டுவர ஆண்டவர் சூழ்நிலைகளை தம் கைகளில் எடுத்துக்கொள்ளுகிறார் இவ்வாறாகவே, இருளின் கிரியைகளை வெளிக்காட்டும்படியாக மாற்று முகவர்களை தேவன் நிறுத்துகிறார். தீமையான வழிக்கு உந்தின் ஆவி முழுமையாக மாறாதிருந்தபோதும் தேவனுடைய கனத்தை நிரூபித்து, எதிர்க்கப்பட்டு தவறாக எடுத்துக்காட்டப்பட்ட தம்முடைய கடிந்து கொண்டவர்களை நியாயப்படுத்தும் அறிக்கைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறே தேவனுடைய உக்கிரம் கடைசியாக ஊற்றப்படும் போதும் இருக்கும்.PPTam 498.2

    எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும்,...... ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வரும்போது (யூதா 14, 15 ) அப்படியே செய்வார். அவருடைய கடிந்துகொள்ளுதலின் நீதியை பார்த்து ஒப்புக்கொள்ளும்படி ஒவ்வொரு பாவியும் கொண்டுவரப்படுவான்.PPTam 499.1

    தெய்வீக தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் இஸ்ரவேலர் கானானை வெற்றி கொள்ளச் சென்றனர். போராயுதங்களை அணிந்தவர்களாக தங்களுடைய சொந்த கணிப்பில் போராட்டத் திற்கு முழுதும் ஆயத்தப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் தேவனுடைய பார்வையிலும் துக்கத்திலிருந்த அவருடைய ஊழியக்காரர்களின் பார்வையிலும் வருத்தப்படக் கூடிய குறைவோடு இருந்தனர். நாற்பது வருடங்களுக்குப்பின்னர் எரிகோவை எடுத்துக்கொள்ளும்படி ஆண்டவர் நடத்தின் போது அவர்களோடு செல்லுவதாக வாக்குக் கொடுத்தார். அவருடைய பிரமாணத்தைக் கொண்டிருந்த உடன்படிக்கைப் பெட்டி, படைகளின் முன்பு எடுத்துச்செல்லப்பட்டது. அவருடைய நியமிக் கப்பட்ட தலைவர்கள் அவர்களுடைய அசைவுகளை தெய்வீக மேற்பார்வையின் கீழ் செய்யவேண்டும். அப்படிப்பட்ட நடத்துதலில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இப்போது தேவனுடைய கட்டளைக்கும், அவர்கள் தலைவர்களுடைய பவித்திரமான தடைக்கும் முரணாக, உடன்படிக்கைப் பெட்டி இல்லாது மோசே இல்லாது சத்துருக்களின் படைகளைச் சந்திக்கும்படியாக அவர்கள் சென்றனர்.PPTam 499.2

    எக்காளம் எச்சரிப்பின் சத்தமிட்டது. மோசே நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள், கர்த்தர் உங்கள் நடுவில் இரார். அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்கு முன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள் என்ற எச்சரிப்போடு அவர்கள் பின் தீவிரித்தான்.PPTam 499.3

    இந்த ஜனங்களை பாதுகாப்பதாகத் தோன்றிய இரகசியமான வல்லமையைக் குறித்தும் அவர்கள் சார்பாக நடத்தப்பட்ட அதிசயங்களைக் குறித்தும் கானானியர்கள் கேள்விப்பட்டிருந்து, படையெடுக்கிறவர்களை எதிர்க்கும்படி வல்லமையான படையை அழைத்திருந்தனர். தாக்கும் இந்தப் படைக்கு தலைவர் இல்லை. தேவன் அவர்களுக்கு வெற்றி கொடுக்கும் படி ஜெபம் ஏறெடுக்கப்படவில்லை. தங்களுடைய முடிவைத் திருப்பவோ அல்லது யுத்தத்தில் சாகவோ துணிச்சலான நோக்கத்தோடு அவர்கள் முன் சென்றனர். யுத்தத்திற்குப் பழக்கப்படாதிருந்த போதும் அவர்கள் ஆயுதந்தரித்த திரளான கூட்டமாக இருந்து, சடி தியாக கொடூரமாகத் தாக்குவதினால் எதிர்ப்பை அடக்க நம்பியிருந்தனர். அவர்களைத் தாக்கPPTam 499.4

    தாங்கள் தைரியத்தோடிருப்பதாக துணிகரமாக தங்கள் சாத் துருக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.PPTam 500.1

    கானானியர்கள் பாறையான இடத்தில், கடினமான பாதையின் வழியாகவும் செங்குத்தான் ஆபத்து நிறைந்த பாதைகளின் வழியாகவும் மாத்திரமே அடையக்கூடிய மலையின் மேல் தங்களை நிறுத்தியிருந்தனர், எபிரெயர்களின் மிக அதிக அளவான எண்ணிக்கை அவர்களுடைய தோல்வியை இன்னும் மோசமாக்கதான் முடியும். மேலே இருந்த சத்துருக்களின் சாவுக்கேதுவான ஆயுதங்களுக்கு தங்களை வெளிப்படுத்தியிருந்த மலையின் பாதையில் மெதுவாக அவர்கள் நகர்ந்தனர். அவர்களுடைய பாதையை கொலையுண்டவர்களின் இரத்தத்தால் அடையாளப்படுத்தின மிகப் பெரிய கற்கள் மிகுந்த ஓசையோடு கீழே விழுந்தன. சிகரத்தைச் சென்றடைந்தவர்கள் ஏறினதினால் பலமிழந்திருக்க, கொடுமையாக திருப்பப்பட்டு மாபெரும் நஷ்டத்தோடு துரத்தப்பட்டனர். படுகொலையின் களத்தில் மரித்தவர்களின் சரீரம் பரவியிருந்தது . இஸ்ரவேலரின் படை முற்றிலும் தோற்கடிக்கப்பட்டிருந்தது. கலகத்தின் பரிசோ தனையில் அழிவும் மரணமுமே விளைவாக இருந்தது.PPTam 500.2

    முடிவாக ஒப்புக்கொடுக்கும்படியாக நிர்பந்திக்கப்பட, உயிரோடிந்த வர்கள் திரும்பி வந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதார்கள் உபா. 1:45. தங்களுடைய குறிப்பான வெற்றியினால் வல்லமையான சேனை நெருங்கி வருவதைக் குறித்து முன்னர் நடுக்கத்தோடு காத்திருந்த இஸ்ரவேலர்களின் சத்துருக்கள் அவர்களைத் தடுக்கும் நம்பிக்கையை அடைந்தனர், ஆண்டவர் அவர்களுக்காக நடப்பித்த ஆச்சரியமான காரியங்களைக்குறித்து தாங்கள் கேட்டிருந்த அனைத்து அறிக்கைகளையும் பொய்யாக நினைத்து, பயப்படுவதற்கான எந்தக் காரணமும் இல்லை என்று உணர்ந்தனர். இஸ்ரவேலரின் அந்த முதல் தோல்வி கானானியர்களுக்கு தைரியத்தையும் தீர்மானத்தையும் கொடுத்ததினால், வெற்றி பெறுவதற்கான கஷ்டங்களை மிக அதிகமாகப் பெருக்கிற்று. அங்கேதான் அந்த முழுதலைமுறையின் கல்லறையும் இருக்கிறது என்று அறிந்து, வெற்றிகொண்ட சத்துருக் களின் முகத்திலிருந்து பின்னிட்டு வனாந்தரத்திற்கு ஓடுவதைத் தவிர வேறு ஒன்றும் இஸ்ரவேலர்களுக்கு மீதியாயிருக்கவில்லை.PPTam 500.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents