Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    36 - வனாந்தத்தில்

    வனாந்தரத்தின் மறைவில் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் பார்வையிலிருந்து மறைந்து போயிருந்தார்கள். “யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப் புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று. அவர்கள் பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டு ஒழியுமட்டும் கர்த்தரின் கை அவர்களை நிர்மூலமாக்கும்படிக்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது“ (உபா.2:14, 15) என்று மோசே கூறினான்.PPTam 518.1

    இந்த வருடங்களில் ஜனங்கள் தெய்வீககடிந்து கொள்ளுதலின் கீழ் இருக்கிறார்கள் என்று நிலையாக நினைவுப்படுத்தப்பட்டனர். காதேசில் தேவனை நிராகரித்த கலகத்தினால் தேவன் அவர்களை அப்போது நிராகரித்திருந்தார். அவர்கள் தேவனுடைய உடன்படிக்கைக்கு உண்மையற்றவர்கள் என்று காண்பித்திருந்ததினால் உடன்படிக்கையின் அடையாளமான விருத்தசேதனத்தை பெறக்கூடாது. அடிமைத்தன் தேசத்திற்கு திரும்பிச் செல்லும் வாஞ்சையினால் சுதந்தரத்திற்கு தகுதியற்றவர்களாக அவர்கள் தங்களைக் காண்பித்தனர். எனவே அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றதை நினைவு படுத்தின பஸ்கா நியமனமும் கடைபிடிக்கப்படக்கூடாது.PPTam 518.2

    எனினும் தேவன் தமது ஜனங்களை முற்றிலும் கைவிடவில்லை என்பதற்கு ஆசரிப்புக் கூடார ஆராதனையின் தொடர்ச்சி சான்று கொடுத்தது. அவருடைய ஏற்பாடு அவர்களுடைய தேவைகளை இன்னமும் சந்தித்து வந்தது. “உன் தேவனாகிய கர்த்தர் உன்கைக் கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவு படவில்லை” என்று அலைந்திருந்த அவர்களுடைய காலத்தின் சரித்திரத்தை திருப்பிப் பார்த்த மோசே கூறினான். தள்ளப்பட்டு, வெளியேற்றப்பட்டிருந்த இந்தக் காலத்திலுங்கூட இஸ்ரவேலின் மேலிருந்த தேவனுடைய கவனத்தை, ‘நீர் உம்முடைய மிகுந்த மனஉருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை, அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்க வேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை. அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர். இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை “ (நெகேமியா 9:19-21) என்று நெகேமியாவினால் பதிக்கப்பட்ட லேவியர்களின் பாடல் இஸ்ரவேலுக்கான தேவனுடைய கவனிப்பை தெளிவாகப்படம்பிடித்துக்காட்டுகிறது.PPTam 519.1

    கலகக்காரர்கள் மேலும் முறுமுறுத்தவர்களின் மேலும் நியாயத் தீர்ப்பாக மாத்திரம் வனாந்தர அலைச்சல் நியமிக்கப்பட வில்லை. கூடவே, வளர்ந்துகொண்டிருந்த தலைமுறைகளை ஒழுங்குபடுத்தவும், வாக்குத்தத்த தேசத்திற்குள் நுழைவதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் நியமிக்கப்பட்டிருந்தது. “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும் படிக்கும், தம் முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட் டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும் படிக்கும், அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல; கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையி னாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.“ ஒருவன் தன் புத்திரனைச்சிட்சிக்கிறது போல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார்” (உபா. 3:2, 3, 5) என்று மோசே அறிவித்தான்.PPTam 519.2

    பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக்காத்தருளினார்.“ அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார், அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தார்“PPTam 520.1

    எனினும் வனாந்தர வாழ்க்கையைக் குறித்த ஒரே பதிவுகளாக தேவனுக்கெதிரான அவர்களுடைய மீறுதலைக் குறித்த சம்பவங்கள்தான் இருக்கின்றன. கோராகின் கலகம் இஸ்ரவேலில் பதினாலாயிரம் பேரின் அழிவில் முடிந்தது. தெய்வீக அதிகாரத் திற்கு பகையைக் காண்பித்த அதே ஆவியைக் குறித்த சில் சம்பவங்களும் இருக்கின்றன.PPTam 520.2

    ஒரு சம்பவத்தில், எகிப்திலிருந்து இஸ்ரவேலரோடு வந்திருந்த பல ஜாதியான மக்கள் கூட்டத்திலிருந்த ஒரு இஸ்ரவேல் பெண்ணிற்கும் எகிப்தியனுக்கும் பிறந்த மகன், பாளயத்தின் தன்னுடைய பகுதியை விட்டு இஸ்ரவேலரின் பகுதியில் நுழைந்து, தன்னுடைய கூடாரத்தை அங்கே போடுவதற்கான தன்னுடைய உரிமையைக் கோரினான். இதை தெய்வீகச் சட்டம் தடை செய்திருந்தது. எகிப்தியரின் சந்ததி மூன்றாம் தலைமுறை வரைக்கும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இஸ்ரவேலருக்கும் அவனுக்குமிடையே வாக்குவாதம் எழும்பி, அது நியாயாதிபதிகளிடம் கொண்டு செல்லப்பட்டு, குற்றஞ் செய்தவனுக்கு எதிராக தீர்மானிக்கப்பட்டது.PPTam 520.3

    இந்தத் தீர்மானத்தினால் வெகுண்டவனாக அவன் நியாயாதிபதியை சபித்து, தன்னுடைய உணர்வின் கொந்தளிப்பில் தேவனுடைய நாமத்தைத் தூஷித்தான். உடனடியாக அவன் மோசேயிடம் கொண்டுவரப்பட்டான். “தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக் கடவன்” (யாத் 21:17) என்று கட்டளை கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்தக் காரியத்தைச் சந்திக்க எந்த ஏற்பாடும் இருந்திருக்க வில்லை. இந்தக் குற்றம் பயங்கரமாக இருந்ததினால் தேவனிட மிருந்து விசேஷ நடத்துதல் அவசியம் என்ற உணரப்பட்டது. தேவனுடைய சித்தம் உறுதியாகும் வரையிலும் அந்த மனிதன் அடைக்கப்பட்டான். தேவன்தாமே தண்டனையை அறிவித்தார். தெய்வீக நடத்துதலின்படி தூஷித்தவன் பாளயத்திற்குப் புறம்பே கொண்டு செல்லப்பட்டு மரணமடையும்படியாக கல்லெறியப் பட்டான். இந்தப் பாவத்திற்கு சாட்சியாக இருந்தவர்கள் தங்கள் கைகளை அவன் தலைமேல் வைத்து இவ்விதமாக அவனுக்கெதி ரான குற்றத்தில் உண்மையின் பக்கம் சாட்சி பகர்ந்தனர். பின்னர் அவர்கள் முதல் கற்களை எறிய, நின்றிருந்த மக்கள் தண்டனையை நிறைவேற்றுவதில் சேர்ந்து கொண்டனர்.PPTam 520.4

    இதைப்போன்ற குற்றங்களைச் சந்திக்கும்படியான கட்ட ளையை அறிவிப்பது இதைத் தொடர்ந்தது. ‘எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான். கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும், பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும்.“ லேவி. 24:15, 16.PPTam 521.1

    உணர்ச்சி கொந்தளிப்பில் பேசப்பட்ட வார்த்தைகளுக்கு கடுமையான தண்டனை அனுப்பப்படுவதினால் தேவனுடைய அன்பையும் நீதியையும் கேள்வி கேட்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தேவனுக்கு எதிராக வன்மத்தினால் உந்தப்படுகிற வார்த்தைகள் மாபெரும் பாவங்கள் என்று காட்டப்பட வேண்டு மென அன்பும் நீதியும் கோருகிறது. முதல் குற்றவாளியின் மேல் கொடுக்கப்படும் தண்டனை தேவனுடைய நாமம் பயபக்தியோடு பேசப்பட வேண்டும் என்பதற்கு மற்றவர்களுக்கு எச்சரிப்பாயிருக் கும். இந்த மனிதனுடைய பாவம் தண்டிக்கப்படாமல் அனுமதிக் கப்பட்டிருக்குமானால், மற்றவர்கள் தரந்தாழ்ந்து போயிருப் பார்கள். அதன் விளைவாக அநேக இஸ்ரவேலருடைய வாழ்க்கைகள் முடிவாக பலிகொடுக்கப்பட்டிருக்கும்.PPTam 521.2

    இஸ்ரவேலர்களோடு எகிப்திலிருந்து வந்திருந்த பல ஜாதியான மக்கள்தான் தொடர்ச்சியான சோதனைக்கும் பிரச்சனைக்கும் காரணமாயிருந்தார்கள். விக்கிரகாராதனையை விட்டுவிட்டதாகவும் மெய்யான தேவனை வணங்குவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் ஆரம்பகால கல்வியும் பயிற்சிகளும் அவர்களுடைய பழக்கங்களையும் குணத்தையும் அமைத்திருந்தது. அவர்கள் விக்கிரகாராதனையினாலும் தேவனுக்கு காண்பிக்கும் அவபக்தியினாலும் ஏறக்குறைய சீர்கெட்டுப்போயிருந்தனர். அவர்களே பல வேளைகளில் சண்டையைத் தூண்டிவிடுகிறவர்களாகவும் குற்றப்படுத்துவதில் முதன்மையானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தங்களுடைய விக்கிரகாராதனைப் பழக்கங்களினாலும் தேவனுக்கு எதிராக முறுமுறுக்கிறதினாலும் பாளயத்தை புளிக்கப்பண்ணினார்.PPTam 521.3

    வனாந்தரத்திற்கு திரும்பின கொங்சகாலத்தில் ஓய்வுநாளை மீறினதை குறிப்பிட்ட குற்றமாக்கின சூழ்நிலைகளின் கீழ் ஒரு சம்பவம் நடந்தது. இஸ்ரவேலை சொந்தமற்றவர்களென்று ஆண்டவர் அறிவித்தது ஒரு கலகத்தின் ஆவியை எழுப்பியிருந்தது. ஜனங்களில் ஒருவன் கானானிலிருந்து வெளியேற்றப்பட்டதினால் கோபங்கொண்டு தேவனுடைய பிரமாணத்திற்கு அவமதிப்பைக் காட்ட தீர்மானித்து ஓய்வு நாளில் வெளியே சென்று விறகு பொறுக்குவதின் வழியாக நான்காம் கற்பனையை வெளிப்படை யாக மீறத் துணிந்தான். வனாந்தரத்தில் தங்கியிருந்த காலங்களில் ஏழாம் நாளில் தீ பற்றவைப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்தத் தடை தீ பற்றவைப்பது அவசியம் என்கிற கடுமையான தட்பவெப்பத்தைக் கொண்டிருந்த கானான் தேசத்திற்குள் இல்லை. ஆனால் வனாந்தரத்தில் சூடேற்றுவதற்கு அக்கினி அவசியப்படவில்லை . இந்த மனிதனுடைய செயல் நான்காம் கற்பனையை நினைவின்றியோ அல்லது அறியாமலோ அல்ல, தீர்மானமாக வேண்டுமென்றே மீறுவதாக துணிகரமான செய்யப்பட்டதாக இருந்தது.PPTam 522.1

    அவன் தன் செய்கையில் பிடிக்கப்பட்டு, மோசேயின் முன்பு கொண்டுவரப்பட்டான். ஓய்வுநாளை மீறுவது மரணத்தினால் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் எவ்வாறு அது செயல்படுத்தப்படவேண்டும் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. இந்தச் சம்பவம் மோசேயினால் ஆண்டவர் முன் கொண்டுவரப்பட, அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலை செய்யப்பட வேண்டும், சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள்“ (எண். 1535) என்ற நடத்துதல் கொடுக்கப்பட்டது. தூஷணமான பாவமும் ஓய்வுநாளை மனதாற மீறுவதும் தேவனுடைய அதிகாரத்திற்கு எதிரான பகையை சமமாக வெளிப்படுத்தினதினால் ஒரேவிதமாக தண்டிக்கப்பட்டது.PPTam 522.2

    நம்முடைய நாட்களில் சிருஷ்டிப்பின் ஓய்வுநாளை யூதர்களின் நியமம் என்று நிராகரித்து, அது கைக்கொள்ளப்பட வேண்டுமானால் அதை மீறுவதற்கான மரணதண்டனையும் செயல்படுத்தப்படவேண்டும் என்று நிர்பந்திக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தூஷணமுங்கூட ஓய்வுநாளை மீறினதற்கான அதே தண்டனையை பெற்றிருந்ததை நாம் காணவேண்டும். இப்படியிருக்க . மூன்றாம் கற்பனையும் யூதர்களுக்கு மாத்திரந்தான் பொருந்தும் என்ற முடிவிற்கு நாம் வரலாமா? மூன்றாவது கற்பனைக்கும் ஐந்தாவது கற்பனைக்கும் உண்மையிலேயே அனைத்து பத்துப் பிரமாணங்களுக்கும் மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும் என்கிற வாதம், நாலாவது கற்பனைக்கும் சமமாகவே பொருந்துகிறது. ஒருவேளை தேவன் தமது பிரமாணங்களை மீறுகிறவர்களை தற்காலிக தண்டனையினால் இப்போது தண்டிக்காதிருக்கலாம். எனினும் பாவத்தின் சம்பளம் மரணம் என்று அவருடைய வார்த்தை அறிவிக்கிறது. முடிவாக நியாயத்தீர்ப்பை செயல்படுத்தும் போது அவருடைய பரிசுத்த பிரமாணங்களை மீறினவர்களின் பங்கு மரணமே என்று காணப்படும்.PPTam 523.1

    வனாந்தரத்தில் இருந்த நாற்பது வருடங்களிலும் ஓய்வுநாளுக் கான பரிசுத்தக் கடமைகள் மன்னாவின் அதிசயத்தினால் ஒவ்வொரு வாரமும் ஜனங்களுக்கு நினைவுப்படுத்தப்பட்டன. எனினும் இதுவுங்கூட கீழ்ப்படிதலுக்கு அவர்களை நடத்தவில்லை. அப்படி குறிப்பான தண்டனையைப் பெறும் வெளிப்படையான துணிகர மீறுதலில் அவர்கள் நுழையாதிருப்பினும், நான்காவது கற்பனையை கைக்கொள்ளுவதில் மாபெரும் அலட்சியம் இருந்தது. தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் வழியாக என் ஓய்வுநாட்களை பரிசுத்த குலைச்சலாக்கிப்போட்டார்கள்“ (எசே .20. 13 24) என்று அறிவிக்கிறார். முதல் சந்ததியை வாக்குத்தத்த தேசத்திலிருந்து வெளியே வைத்ததின் காரணங்களில் இதுவும் எண்ணப்பட்டது. எனினும் அவர்களுடைய பிள்ளைகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. நாற்பது வருட அலைச்சலின் காலத்தில் அவர்கள் ஓய்வுநாளை அவ்வாறாக நெகிழ்ந்திருந்தால், தேவன் அவர்களை கானானிற்குள் நுழைவதிலிருந்து தடுக்காதிருந்தும், அவர்கள் வாக்குத்தத்த தேசத்தில் அடைக்கப்பட்ட பின்பு புறஜாதிகளின் நடுவிலே சிதறடிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.PPTam 523.2

    காதேசிலிருந்து இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்திற்குத் திரும் பினார்கள். அவர்களுடைய பாலைவன யாத்திரை முடிவடைந் திருக்க இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன் வனாந்தரத்திலே சேர்ந்து ஜனங்கள் காதேசிலே தங்கியிருந்தார்கள்“ எண் 20:1.PPTam 524.1

    இங்கேமிரியாம்மரித்து அடக்கம் பண்ணப்பட்டாள். சிவந்த சமுத்திரத்தின் கரைகளில் யெகோவா கொடுத்த வெற்றியை ஆடலோடும் பாடலோடும் கொண்டாடின மகிழ்ச்சியின் காட்சி களிலிருந்து, வாழ்நாள் முழுவதுமான அலைச்சலை முடிவிற்குக் கொண்டு வந்த வனாந்தர கல்லறை வரையிலும் இதுவே எகிப்திலிருந்து உயர்ந்த நம்பிக்கைகளோடு வெளியே வந்திருந்த இலட்சக்கணக்கானோரின் முடிவாக இருந்தது. ஆசீர்வாதத்தின் பாத்திரத்தை பாவம் அவர்கள் உதடுகளிலிருந்து தள்ளிவிட்டிருந்தது. அடுத்த தலைமுறையாவது பாடத்தைக் கற்றுக்கொள்ளுமா?PPTam 524.2

    “இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல் ...... அவர்களை அவர் கொல்லும் போது அவரைக் குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி, தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும் நினைவுகூர்ந்தார்கள்“ - சங். 78:32-35. எனினும் அவர்கள் தேவனிடம் உண்மையான நோக்கத்தோடு திரும்பவில்லை. அவர்களுடைய சத்துருக்களால் உபத்திரவப்பட்டபோது விடுவிக்கக்கூடிய ஒரே ஒருவரிடத்தில் உதவியைத் தேடினபோதும், அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலை வரப்படவில்லை. அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை. அவரோ அவர்களை அழிக்காமல் இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார். அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார். அவர்கள் மாம்ச மென்றும் திரும்பி வராமல் அகலுகிற காற்றென்றும் நினைவு கூர்ந்தார்.” வசனம் 37-39.PPTam 524.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents